http://i1170.photobucket.com/albums/...ps0b39ee11.jpg
Printable View
VERY NICE IMAGE OF MY BELOVED CINE - PAIR. THANK YOU SO MUCH FOR HAVING POSTED THIS PHOTO IN COLOUR - Mr. RAMAMOORTHY SIR.
ALSO THANKING Mr. PONDY KALIYAPERUMAL, FOR HIS POSTINGS MADE.
TIRUPUR RAVICHANDRAN SIR - YOUR UPDATING MESSAGE(S) PERTAINING TO THE RE-RELEASED MOVIES OF OUR BELOVED GOD M.G.R. IN COIMBATORE, IS APPRECIABLE.
THANK YOU YUKESH BABU SIR FOR YOUR POSTING THE RARE IMAGES OF OUR BELOVED GOD M.G.R.
THE HARD EFFORTS OF Mr. LOGANATHAN IN POSTING THE PHOTOGRAPHS TAKEN AT THE TEMPLE OF OUR BELOVED GOD M.G.R. IN NATHTHAMEDU (near TIRUNINDRAVUR) ARE ALSO APPRECIABLE. THANK YOU SO MUCH SIR.
VINODH SIR, YOU ARE REMEMBERED FOR EVER FOR THE RIGHT POSTINGS AT THE APPROPRIATE TIME.
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
22.,8.1975
மக்கள் திலகத்தின் ''இதயக்கனி '' முதல் நாள் ,முதல் காட்சியின் அனுபவம் .
வேலூர் நகரம் - கிருஷ்ணா அரங்கில் திரையிடப்பட்ட முதல் படம் மக்கள் திலகத்தின் ''நாளை நமதே''. 4.7.1975 முதல் 21.8.1975 வரை 49 நாட்கள் நல்ல வசூலுடன் ஓடிவந்தது .கடைசி நாள் அன்று மாலை காட்சியும் இரவு காட்சியும் அரங்கு நிறைந்தது .
22.8.1975 நள்ளிரவு முதல் மக்கள் திலகத்தின் ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு வந்தனர் .காஞ்சிபுரத்தில் படம் வெளியாகததால் அங்கிருந்து பெரும் ரசிகர்கள் வேலூர் -கிருஷ்ணா அரங்கிற்கு வந்த சேந்தனார் .
22.8.1975 காலை 9 மணிக்கு இதயக்கனி சிறப்பு காட்சி துவங்கும் முன்பு அன்றைய அண்ணா திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஜி .விஸ்வநாதன் , மற்றும் வேலூர் நகர எம்ஜிஆர் மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிய பின் படம் துவங்கியது .
ஆரம்ப காட்சியில் அண்ணாவின் குரலில் மக்கள் திலகம் அவரது இதயத்தில் தோன்றும் காட்சியில் அரங்கமே அதிர்ந்து போகும் அளவிற்கு கை தட்டலும் விசிலும் அமர்க்களப்பட்டது .
டைட்டில் காட்சி மிகவும் புதுமையாக மெல்லிசை மன்னரின் இசை பிரமிக்க வைத்தது . ஆரம்ப பாடல் காட்சியில் காவிரியின் பெருமைகளுடன் மக்கள் திலகத்தின் பெருமையை ஒப்பிட்டு இடம் பெற்ற பாடல் சூப்பர்.
பின்னர் காட்சிக்கு காட்சி விறுவிறுப்பும் ,மக்கள் திலகத்தின் நடிப்பு , பாடல்கள் , சண்டை காட்சிகள்
வசனங்கள் எல்லாம் ரசிகர்களுக்கு விருந்து . முதல் காட்சியிலே படத்தின் வெற்றியின் அறிகுறி
தெரிந்தது .
சத்யா மூவிசின் ''இதயக்கனி '' படத்தின் சிறப்புக்கள் .
1975 ஆண்டின் மாபெரும் வெற்றி சித்திரம் .
காவிரி ஆற்றின் சிறப்புடன் மக்கள் திலகத்தின் புகழை ஒப்பிட்டு படமாக்கப்பட்ட பிரமாண்ட பாடல் .
பாடல் காட்சியில் அதிமுக கொடியும் , இரட்டை இலை சின்னமும் இடம் பெற்றது .
எங்க வீட்டு பிள்ளை -1965 படத்திற்கு பிறகு நடிகை ரத்னா பாடல் காட்சியில் நடனமாடி நடித்தது .
அரசகட்டளை -1967 படத்திற்கு பிறகு 8 ஆண்டுகளுக்கு பிறகு பி.எஸ். வீரப்பா சிற்ப்பு தோற்றத்தில் நடித்தது .
வடநாட்டு நடிகை ராதா சலுஜா கதாநாயகியாக நடித்தது .
உஷா உதூப் ஆங்கில பாடல் பாடியது .
இயக்குனர் ஜெகநாதன் - உரையாடல் - ஜெகதீசன் -முதல் படம் .
பெங்களுர் - மெர்காரா - பிச்சாவரம் - பகுதிகளில் படமாக்கப்பட்ட படம் .
பறக்கும் பாவை -1966 படத்திற்கு பின் நடிகை ராஜசுலோச்சனா வில்லியாக நடித்த படம் .
எம்ஜிஆரின் ஆளுமையை பற்றி தேங்காய் ஸ்ரீனிவாசன் கூறும் காட்சி .
இந்த நாடே உங்கள் ரிசல்டை எதிர்பார்கிறது என்று எம்ஜிஆரை பார்த்து திருச்சி சவுந்தரராஜன் கூறும் காட்சி .
ராதாசலுஜா எம்ஜிஆரை பார்த்து நான் அவர் கட்சி என்றதும் பாண்டரிபாய் -ஐசரி வேலன் - தேங்காய் ஸ்ரீனிவாசன்
எல்லோரும் நாங்களும் அவர் கட்சி என்று கூறுமிடம் .
படம் முழுவதும் மக்கள் திலகம் இளமை தோற்றத்தில் , சிறப்பாக நடித்து , சண்டை காட்சிகளில் புதுமை புகுத்தி
ரசிகர்களுக்கு விருந்து படைத்தார் .எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் .
சத்யா நிறுவனத்தின் படங்களிலே அதிக நாட்கள் ஓடி அதிக வசூல் பெற்ற படம் .