http://i66.tinypic.com/be67p5.jpg
மூலக்கடை ஐயப்பா அரங்கில் வைக்கப்பட்டுள்ள ரசிகர்களின் பேனர் .
Printable View
http://i66.tinypic.com/be67p5.jpg
மூலக்கடை ஐயப்பா அரங்கில் வைக்கப்பட்டுள்ள ரசிகர்களின் பேனர் .
சென்னை மகாலட்சுமி அரங்கில் வைக்கப்பட்டுள்ள பேனர்
http://i68.tinypic.com/a0i334.jpg
மக்கள் திலகத்தின் '' நினைத்ததை முடிப்பவன் '' டிஜிட்டல் வெளியீடு பற்றிய செய்திகள் , திரை அரங்கு நிழற்படங்கள் , பற்றி விரிவான பதிவுகள் வழங்கிய நண்பர் திரு லோகநாதனுக்கு பாராட்டுக்கள் .
நினைத்ததை முடிப்பவன் '' படம் டிஜிட்டலில் மிகவும் அருமையாக இருந்ததாக படம் பார்த்த நண்பர்கள் தெரிவித்தார்கள் .தொழில் நுட்பத்தில் மக்கள் திலகத்தின் அருமையான தோற்றங்கள் புதுப்பொலிவுடன் உள்ளதாகவும் ,புத்தம் புது படம் பார்த்த உணர்வு ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்கள் .
என்றென்றும் மக்கள் திலகத்தின் சினிமா மற்றும் அரசியல் வெற்றி கோட்டையான மதுரைக்கு மண்னில் மக்கள் திலகத்தின் நூற்றாண்டு விழா இம் மாதம் அதிமுக சார்பாக நடைபெறுவதாக செய்தி வந்துள்ளது . நூற்றாண்டு விழா பிரமிக்க தக்க வகையில் நடை பெறும் என்று நம்புகிறோம் . வெற்றி பெற வாழ்த்துகிறோம் .
மறைந்த முதல்வர், ஜெயலலிதா ஒரு பேட்டியில் சொன்னது: கண்ணன் என் காதலன் படப்பிடிப்பின் போது, ஒருநாள் காலை, படப்பிடிப்பு முடிந்து, காரில் ஏறப் போன எம்.ஜி.ஆர்., 'மத்தியானம் என்ன காட்சி எடுக்கப் போறீங்க?' என்று இயக்குனரிடம் கேட்டார். 'ஜெயலலிதா மாடிப்படியில் சக்கர நாற்காலியில் இருந்து உருண்டு விழும் காட்சி...' என்றார், இயக்குனர்.
உடனே, காரை விட்டு இறங்கிய எம்.ஜி.ஆர்., 'அதை எடுக்கும் போது நானும் உடன் இருக்கிறேன்; அந்த காட்சி கொஞ்சம் ரிஸ்க்கானது. அந்த பெண் விழுந்து விட்டால் என்ன செய்வது...' என்று கூறி, எங்களுக்கு உதவ வந்து விட்டார்.
படத்தில், சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி, தற்கொலை முயற்சியில், மாடிப்படி விளிம்பு வரை வர வேண்டும்; ஓர் அங்குலம் முன்னேறினாலும் உருண்டு விடுவேன்.
அதனால், தானே, சக்கர நாற்காலியில் உட்கார்ந்து, பின்னால் கயிற்றைக் கட்டச் சொல்லி, ஒன்றுக்கு, பத்து முறை ஒத்திகை பார்த்து, அதில் அபாயம் இல்லை என்று உறுதியானதும் தான் என்னை சக்கர நாற்காலியில் உட்கார்ந்து நடிக்கச் சொன்னார், எம்.ஜி.ஆர்.,
அன்று, எனக்காக, என் பாதுகாப்புக்காக, என்னோடு இருந்து, அந்த படப்பிடிப்பை நடத்திக் கொடுத்தார்.
courtesy - dinamalar - 18.6.2017
நினைத்ததை முடித்தவன் எம்ஜிஆர் .
ஆச்சரியமாக உள்ளது இல்லயா ?
எம்ஜிஆர் தன்னுடைய இளம் வயதில் ஆங்கில திரைப்படங்களை பார்த்ததின் விளைவுதான் நாடோடி மன்னன் படம் எடுக்க தூண்டியது . ஏராளமான பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு 1958ல் திரைக்கு வந்து நாடு முழுவதும் ரசிகர்களால் மக்களால் ஏராளமான பாராட்டுக்களை பெற்று சரித்திர சாதனை புரிந்தது . எம்ஜிஆர் வெற்றி பெற்று நினைத்ததை முடித்தார் .
1967 தேர்தலில் தமிழகத்தில் பேரறிஞர் அண்ணாவின் தலைமயில் திமுக ஆட்சி அமைந்திட நினைத்தார் . அதற்க்காக உயிர் தியாகம் வரை சென்று உழைத்து தானும் வெற்றி பெற்று தன்னுடைய இயக்கத்தையும் வெற்றி பெற செய்து தன்னுடைய தலைவர் பேரறிஞர் அண்ணா தமிழக முதல்வராக பதவி அமரவைத்த எம்ஜிஆர் நினைத்ததை முடித்தார் .
1972ல் எம்ஜிஆரையே அழிக்க நினைத்த திமுகவின் கனவை 1973 திண்டுக்கல்
தேர்தல் துவங்கி 1987 வரை அரசியல் எதிரிகள் அனைவரையும் எதிர்த்து வெற்றி மேல் வெற்றி பெற்று தான் நினைத்ததை முடித்தார் .
சினிமாவில் எம்ஜிஆரின் சரித்திரம் முடிந்துவிட்டது என்று 1959, 1967, 1972 கால கட்டங்களில் நடந்த சோதனைகளை தவிடு பொடியாக்கி எம்ஜிஆர் உருவாக்கிய திரை உலக சாதனைகள் வெற்றிகள் குவித்ததின் மூலம் தான் நினைத்ததை முடித்தார் .
1977 வரை எம்ஜிஆர் திரை உலகை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்து திரை உலக வசூல் சக்ரவர்த்தியாக திகழ்ந்தார் என்று திமுக தலைவர் திரு கருணாநிதி 1987 எம்ஜிஆர் மறைவு தினத்தன்று கூறியது நினைவிற்கு வருகிறது .
நினைத்ததை முடிப்பவன் - 1975ல் வெளியானது , தலைப்பிற்கு ஏற்ப எம்ஜிஆர் தான் வாழ்ந்த காலத்திலும் நினைத்ததை முடிப்பவன் என்று சாதித்து காட்டினார்.
மறைந்த பின்னரும் 30 ஆண்டுகளாக அரசியலிலும் சினிமா மறு வெளியீடுகளில் , புது தொழில் நுட்ப மறு வெளியீடுகளிலும் எம்ஜிஆர் என்ற தனி மனிதரின் வெற்றிகள் சரித்திர சாதனையை நினைத்ததை முடிப்பவன் எம்ஜிஆர் ரசிகர்களாகிய நாங்கள் எப்போதும் பெருமை கொள்கிறோம்
கோவை டிலைட்டில் புரட்சித்தலைவரின்
நேற்று இன்று நாளை
இப்பொழுது வெற்றிகரமாக
நடைபெறுகிறது.
இந்த வருடத்தின் (2017)
ஆறுமாதத்திற்குள் மட்டும்
டிலைட்டில் 3வது முறை,
ராயலில் 1 முறை,
சண்முகாவில் 1 முறை,
வேல்முருகனில் 2 முறை
திரையிடப்பட்டுள்ளது.
வெற்றிச்சரித்திரத்தின்
சாதனை தொடர்கிறது .......
இன்று (18/06/2017) பிற்பகல் 2 மணியளவில் சென்னை காமராஜர் அரங்கில்
நடைபெற்ற இன்னிசை நிகழ்ச்சி பற்றிய சுவரொட்டி / பேனர் நண்பர்களின் பார்வைக்கு .
http://i68.tinypic.com/30age90.jpg