http://www.youtube.com/watch?v=gE51-...ature=youtu.be
NAALAI NAMATHE - 10
Printable View
http://www.youtube.com/watch?v=gE51-...ature=youtu.be
NAALAI NAMATHE - 10
http://i39.tinypic.com/2hd6vwj.gif
http://i39.tinypic.com/2eckntj.jpg
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜெய்சங்கர் சார்
மக்கள் திலகம் நடித்த 40 வண்ணப்படங்களில் 100 நாட்கள் குறைவாக தமிழ் நாட்டில் ஓடிய பட்டியல் .
பறக்கும் பாவை -1966
தேடிவந்த மாப்பிள்ளை -1970
நீரும் நெருப்பும் -1971
சங்கே முழங்கு -1972
ராமன் தேடிய சீதை -1972
நான் ஏன் பிறந்தேன் -1972
பட்டிக்காட்டு பொன்னையா -1973
நாளை நமதே -1975
உழைக்கும் கரங்கள் -1976
ஊருக்கு உழைப்பவன் -1976
நவரத்தினம் -1977
மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் -1978
பறக்கும் பாவை -1966
டைரக்டர் ராமண்ணாவின் முதல் வண்ணப்படம் .
சர்க்கஸ் கதையை மையமாக கொண்டு வந்த படம் .
மக்கள் திலகத்துடன் சரோஜாதேவி - காஞ்சனா - மனோரமா - மாதவி -தங்கவேலு - சந்திரபாபு - நாகையா - சகுந்தலா -ராஜசுலோச்சனா
அசோகன் - நம்பியார் - மனோகர் - ராமதாஸ் -ஒ .ஏ .கே .தேவர்
என்று மாபெரும் நட்சத்திர கூட்டங்கள் நடித்த படம் .
மெல்லிசை மன்னரின் இசையில் எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் .
மக்கள் திலகத்துடன் - நடராசன்
அசோகன் - மனோகர் மோதும் சண்டை காட்சிகள் சூப்பர் .
''முத்தமோ மோகமோ '' பாடல் காட்சியில் மக்கள் திலகத்தின்
அருமையான உடை அழகும் , இளமை ததும்பும் நடனமும்
இன்று பார்த்தாலும் பிரமிக்க வைக்கிறது .
கல்யாண நாள் பார்காலமா - பாடல் திருமண வீட்டில் ஒலிக்காத இடமே இல்லை .
பட்டுப்பாவாடை எங்கே - பாடலில் மக்கள் திலகம் பம்பரமாக சுழன்று ஆடி பாடும் காட்சி -கண்ணை பறிக்கும் .
சுகம் எதிலே --- மேடை பாடல் புதுமை .
உன்னைத்தானே ..... உறவென்று .....- குளியல் பாடல் .
நிலவென்னும் ஆடை ........ பாடலில் மக்கள் திலகம் சரோஜாதேவி போட்டி போட்டு கொண்டு ஆடி பாடி நடித்திருப்பார்கள் .
சுசீலாவின் தனி பாடல் ''யாரைத்தான் நம்புவதோ '' இனிமையான சோக பாடல் .
மெல்லிசை மன்னரின் பின்னணி இசை பல இடங்களில்
அருமையாக இருந்தது .
http://youtu.be/XQ5MHDgj3cs
பறக்கும் பாவை - எதிர் பார்த்த அளவு ஓடவில்லை என்றாலும்
மறு வெளியீடுகளில் பல இடங்களில் திரையிடப்பட்டு நன்கு
ஓடியது .
http://youtu.be/KWCDjctL9yw
பறக்கும் பாவை - ரசிகர்களுக்கு தித்திக்கும் விருந்து .
மதிப்பெண்
70/100
A TRIBUTE TO Sri.B.R.Banthulu on completion of 100 years
திரு.B R பந்துலு - மறக்க முடியாத பெயர் திரை உலகை பொறுத்தவரையில்.
நம் தமிழகத்தை பொறுத்தவரையில் ஒரு சாராருக்கு பந்துலு அவர்கள் தமிழ் திரைப்படம் மட்டுமே தயாரித்து இயக்கியுள்ளார் என்று இன்றளவும் நினைத்துகொண்டிருக்கின்றனர். அதற்க்கு காரணம் திரு.பந்துலு அவர்கள், தயாரித்து இயக்கிய ஸ்கூல் மாஸ்டர், கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்டபொம்மன், கர்ணன், சபாஷ்மீனா, பலேபாண்டியா, தங்கமலைரகசியம், ஆயிரத்தில் ஒருவன், ரகசிய போலீஸ், நாடோடி போன்ற திரைப்படங்கள் என்றால் அது மிகையாகாது.
ஆனால் உண்மை என்னவென்றால் தமிழ் தவிர திரு பந்துலு அவர்கள் தெலுகு, கன்னடம், மலையாளம் உட்பட சுமார் 57 திரைப்படங்களை தயாரித்து இயக்கிய மாபெரும் ஜாம்பவான்.
தமிழ் திரையுலகை பொறுத்தவரை, தென் இந்திய திரை உலகைபொருத்த வரை இவருடைய திரைப்படங்கள் அனைத்தும் காவியங்கள். தேசப்பற்றினை வலியுறுத்தும் திரைப்படங்கள் எடுப்பதில் வல்லவர்.
உதாரணம், குழந்தைகள் கண்ட குடியரசு, கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்டபொம்மன், ஸ்ரீ.கிருஷ்ணதேவராயா மற்றும் பல. இதிகாச காவியங்களை எடுத்துகொண்டால் இவருடைய இமாலய சாதனை, நடிகர் திலகம் நடிப்பில் 1964ல் வெளியான, சமீபத்தில் 2012ல் "சத்தியம்" Multiplex அரங்கில் 152 நாட்கள் ஓடி நிறைவு செய்த "கர்ணன்" திரை காவியம் .
ஜனரஞ்சக திரைப்படங்களில் திரு.MGR அவர்கள் முதன் முதலாக ஜெயலலிதாவுடன் இணைந்த "ஆயிரத்தில் ஒருவன்", ரகசிய போலீஸ் 115, மற்றும்
நடிகர் திலகம் நடித்த "தங்கமலை ரகசியம்" ஹாஸ்யம் (காமெடி) வகையில் இவருடைய திறமையில் வெளிவந்த சபாஷ் மீனா மற்றும் 15 நாட்களில் உருவான நடிகர் திலகம் 3 வேடங்களில் நடித்த "பலே பாண்டிய" ஆகியவை இவருடைய படைப்பில் உருவானது.
இவர் மறைந்த பிறகும் 1974ஆம் ஆண்டு திருமதி இந்திரா காந்தி அம்மையார் இவர் இயக்கி தயாரித்த முதல் வெளியீடில் எதிர்பார்த்த வெற்றி அடையாத ஆனால் மருவெலியீடில் இமாலய வெற்றிகண்ட கப்பலோட்டிய தமிழன் திரைப்படத்தை பார்த்து மிகவும் நெகிழ்ந்து, என்றென்றைக்கும் வரி விளக்கு அளிக்கப்பட்ட திரைப்படமாகும்.
இவருடைய CENTENERY CELEBRATIONS சென்ற ஆண்டு நடைபெற்றது...
அதன் பதிப்பு சென்னை 365 இணையத்தளம் வெளியிட்டது , அனைவர் பார்வைக்கும் .....
http://chennai365.com/news/a-tribute-to-b-r-panthulu/
இனிய நண்பர் திரு சுப்ரமணியம் ராமஜெயம் சார்
இந்தியா -பாகிஸ்தான் போர் நடந்த நேரத்தில் ''ஆயிரத்தில் ஒருவன் '' 100 வது நாள் வெற்றிவிழா பொது நலன் கருதி விழா நிறுத்தப்பட்டது .உங்களின் தகவலுக்கு நன்றி .
மக்கள் திலகம் அவர்கள் பற்றிய கடந்த காலங்களில்
அன்றைய பேப்பர் -வார -மாத இதழ்களில் வெளிவந்தபுகைப்படங்கள் - செய்திகள் - முழு பக்க விளம்பரங்கள் -வளரும் - வரவிருக்கும் படங்களின் துணுக்கு செய்திகள் - மக்கள் திலகத்தின் பேட்டிகள் -கலந்து கொண்ட விழாக்கள் பற்றிய தகவல்கள் - அரசியல் பேட்டிகள் -1957-1962
தேர்தல் பிரச்சார படங்கள் -பேச்சுக்கள் .இது வரை வராத மக்கள் திலகத்தின் அரிய படங்கள் - சினிமா செய்திகள் .
விரைவில் பிரமாண்ட புத்தக வடிவில் .......
http://i40.tinypic.com/2dkziwl.jpg
உலக திரைப்பட நடிகர்களிலே முதல் முறையாக நம் மக்கள் திலகம் அவர்களுக்கு ''புகழ் மாலை''
நமக்காக
விருந்து படைக்க வருகிறார் ''மக்கள் திலகம் ''
வரவேற்க தயாராக இருப்போம் .