Dear RAVI KIRAN SURYA SIR,
Karnan records rocks congrats sir
Printable View
Dear RAVI KIRAN SURYA SIR,
Karnan records rocks congrats sir
Dear Sivaa sir,
You are record Sivaa sir, continue sir, records speak of NT stamina, your postings speak your hard work
Dear Chinnakannan sir, Murali sir
Thank you for your kind words
கேட்டவைகளில் பிடித்தது -3
ஒன்னா இருக்க கத்துக்கணும் - படம் அன்பு கரங்கள்
ஒன்னா இருக்க கத்துக்கணும் - இந்த உண்மையை சொன்னால் ஒத்துக்கணும்
காக்கா கூட்டத்தை பாருங்க - அதற்க்கு கத்து கொடுத்தது
யாருங்க ??
(ஒன்னா இருக்க கத்துக்கணும் ------)
வீட்டை விட்டு வெளியே வந்தால் நாலும் நடக்கலாம் - அந்த நாலும் தெரிந்து நடந்து கொண்டால் நல்லா இருக்கலாம்
வீட்டை விட்டு வெளியே வந்தால் நாலும் நடக்கலாம் - அந்த நாலும் தெரிந்து நடந்து கொண்டால் நல்ல இருக்கலாம் .
உன்னை கேட்டு , என்னை கேட்டு எதுவும் நடக்குமா? அந்த ஒருவன்
நடத்தும் நாடகத்தை நிறுத்த முடியுமா ??
(ஒன்னா இருக்க கத்துக்கணும் ------)
தன்னை போல பிறரை எண்ணும் தன்மை வேண்டுமே
அந்த தன்மை வர உள்ளத்திலே கருணை வேண்டுமே
தன்னை போல பிறரை எண்ணும் தன்மை வேண்டுமே
அந்த தன்மை வர உள்ளத்திலே கருணை வேண்டுமே
பொன்னை போல மனம் படைத்தால் செல்வம் வேறில்லை
இதை புரிந்துகொண்ட ஒருவனைப்போல் போல் மனிதன் வேறு இல்லை
பொன்னை போல மனம் படைத்தால் செல்வம் வேறில்லை
இதை புரிந்துகொண்ட ஒருவனைப்போல் போல் மனிதன் வேறு இல்லை
(ஒன்னா இருக்க கத்துக்கணும் ------)
கொஞ்ச நேரம் காத்தடித்து ஒய்ந்து போகலாம் - வானில்
கூடி வரும் மேகங்களும் களைந்து போகலாம்
கொஞ்ச நேரம் காத்தடித்து ஒய்ந்து போகலாம் - வானில்
கூடி வரும் மேகங்களும் களைந்து போகலாம்
நேற்று வரை நடந்தது எல்லாம் இன்று மாறலாம் - நாம்
நேர் வழியில் நடந்து சென்றால் நன்மை அடையலாம்
(ஒன்னா இருக்க கத்துக்கணும் ------)
வீட்டை விட்டு வெளியே வந்தால் நாலும் நடக்கலாம் - அந்த நாலும் தெரிந்து நடந்து கொண்டால் நல்ல இருக்கலாம் .
உன்னை கேட்டு , என்னை கேட்டு எதுவும் நடக்குமா? அந்த ஒருவன்
நடத்தும் நாடகத்தை நிறுத்த முடியுமா ??
எப்படிப்பட்ட வரிகள் - எவ்வளவு எதார்த்தமான வார்த்தைகள் - யாரை கேட்டு எது நடக்கின்றது - மேலே ஒருவன் நடத்தும் நாடகத்தில் நாம் எல்லோருமே நடிகர்கள் தானே !!!
தன்னை போல பிறரை எண்ணும் தன்மை வேண்டுமே
அந்த தன்மை வர உள்ளத்திலே கருணை வேண்டுமே
சற்றே ஒரு நிமிடம் கண்ணை மூடிக்கொண்டு நினைத்து பாருங்கள் - நாம் எல்லோரையும் நம்மை போன்று நினைக்க ஆரம்பித்தால் , இந்த உலகம் எப்படி மாறி விடும் !!! நினைத்தாலே இனிக்குமே !
பொன்னை போல மனம் படைத்தால் செல்வம் வேறில்லை
இதை புரிந்துகொண்ட ஒருவனைப்போல் போல் மனிதன் வேறு இல்லை
மனதை செல்வந்தனாக ஆக்குங்கள் - உங்களை போல மனிதர் யாருமே இருக்க முடியாது ---
நேற்று வரை நடந்தது எல்லாம் இன்று மாறலாம் - நாம்
நேர் வழியில் நடந்து சென்றால் நன்மை அடையலாம்
நன்மை அடைவதற்கு இதை விட வேறு ஏதாவது சுலபமாக வழியை சொல்ல முடியுமா ???
http://youtu.be/4fL5GLsmtSk
தொடரும்
பார்த்ததில் பிடித்தது -25
நாம் பிறந்த மண்
நடிகர் திலகம் , கமல்ஹாசன் , kr விஜயா , நாகேஷ் , ஜெமினி கணேசன் என்று மாபெரும் நட்சதிர பட்டாளம் நிறைந்த படம்
1977 ல் வந்த நடிகர் திலகத்தின் 190 வது படம் , இந்த படத்தை அலசுவோமா
கதை :
படத்தின் ஆரம்பம் சுகந்திரம் காலத்துக்கு முன்னாடி நடப்பதை போல் ஆரம்பிகிறது , மக்கள் கொடுமை படுத்த படும் பொது ஒரு உருவம் வந்து அவர்களை காபாற்றுகிறது , அந்த உருவம் யார் என்பது யாருக்கும் தெரியவில்லை , மக்கள் மத்தியில் அந்த உருவம் கருப்புசாமி , அந்த உருவத்துக்கு சந்தனத்தேவன் என்று பெயர் வைத்து விடுகிறார்கள் , சந்தனத்தேவன் போலீஸ்க்கு சிம்மசொபனம்
அந்த ஊரில் ஒரு பண்ணையார் தேவன் (சிவாஜி சார் ) அவர் மனைவி kr விஜயா, தங்கை உடன் நிம்மதியாக வாழ்ந்து வருகிறார் , அந்த வீட்டின் வேலைக்காரன் தவசு (நாகேஷ்) பட்டாளத்தில் இருந்து வந்து , தேவன் வீட்டில் வசிக்கிறார் , விசுவாசி, பண்ணயர்க்கு அரசாங்கத்தை எதிர்க்க படிக்காது , அரசாங்கத்தை எதிர்க்கும் நபர்களை கண்டால் ஒதுங்கி விடுவார் , சந்தனதேவனை பிடிக்க அரசாங்கம் பண்ணையாரின் உதவியை நாடுகிறது , அவரும் அதற்கு சம்மதிக்கிறார் . ஒரு இரவு நேரத்தில் ஆங்கிலேயர் உடன் சண்டை போடும் பொது சந்தனதேவனை சந்திக்கிறார் ஜோசப் (ஜெமினி ) ina வில் இருந்து தன் சொந்த ஊருக்கு வருகிறார் , அவரின் துணிச்சலை பார்த்து சந்தனத்தேவன் தன் கூட வைத்து கொளுகிறார்
பண்ணையாருக்கு ஒரு மகன் பிறக்கிறார் .தவசுவின் சிபார்சில் பண்ணையாரிடம் வேலைக்கு சேருகிறார் , இரவில் சந்தனதேவனிடம் பனி , அஷ் துரை கொலை செய்ய திட்டம் தீட்டி அதை நிறைவேற்றி விடுகிறார் அதனால் சந்ததேவைனின் உயிர்க்கு அரசாங்கம் பெரும் வெகுமதியை அறிவிக்கிறது , அவரை பிடிக்க முயற்சி நடக்கிறது அதில் சந்தனத்தேவன் காலில் பெரும் காயம் படுகிறது , அதில் இருந்து அவரை ஜோசப் காப்பாற்றுகிறார் , அப்போது தான் தெரிகிறது , சந்தனத்தேவன் தான் பண்ணையார் என்று , ஜோசப் போலீஸ் ல் பிடிபடுகிறார் , மறு நாள் அனைவரின் கால்களையும் போலீஸ் சோதனை செய்ய , அனைவரும் காலில் கட்டு போட்டு போலிசை எம்மாற்றி விடுகிறார்கள்
ஒரு நாள் இரவு சந்தனத்தேவன் சண்டை பொது , ஒரு போலீஸ் அதிக்கரியை காப்பாற்ற , அவரின் கண்களை நன்றாக பார்த்து விடுகிறார் அந்த அதிகாரி அதை வரைய , அது பண்ணையாரின் உருவத்துடன் ஒத்து போக , பண்ணையார் கைது செய்ய படுகிறார் , அந்த சமயத்தில் பண்ணையாரின் தங்கை மானபங்கம் படுத்த பட அவர் இறந்து விடுகிறார் , பண்ணையார் சிறை தண்டனை அனுபவிக்கிறார் , சில வருடங்கள் கழித்து நாடு சுகந்திரம் அடைந்த பிறகு தேவன் விடுதலை செய்ய படுகிறார் , அவரின் குடும்பம் வறுமையில் வாடுகிறது , மகன் (கமல் ) , அப்பாவின் தியாகத்துக்கு மதிப்பு இல்லை என்று கோபம் அடைகிறார் , அடிகடி அப்பாவுடன் கருத்து மோதல் , பசி கொடுமை , ஒரு நாள் கை நிறைய பணத்துடன் வருகிறார் , சில காலத்துக்கு பிறகு தன் தந்தையின் வீட்டை மீட்டு தன் தாய் , தந்தை , தவசுடன் குடி வருகிறார் , அப்போ தான் தெரிய வருகிறது கமல் சமுக விரோத செயல் செய்து பணம் சம்பாதித்தது , தேவன் தன் மகனை கொலை செய்ய சுடும் பொது , குண்டு kr விஜயா மீது பட்டு அவர் இறந்து போக , தேவன் தன் மகனுக்கு அறிவுரை வழங்கி தானும் இறந்து விடுகிறார்
படத்தை பற்றி :
படத்தின் ஆணிவேர் சிவாஜி அவர்கள் தான் சந்தனத்தேவன் என்ற புரட்சிக்காரன் வேடத்திலும் சரி , பண்ணையார் வேடத்திலும் கலக்கி இருப்பார் , சிவாஜியின் குடும்பம் நாட்டின் விடுதலைக்கு போராடிய குடும்பத்தில் ஒன்று , சிவாஜியின் தந்தை விடுதலை போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைக்கு சென்றவர் என்று பல பேர்க்கு தெரிந்து இருக்கும் , இந்த மாதிரி குடும்ப பின்னணியில் இருந்து வந்த காரணத்திலோ என்னமோ இந்த சுகந்திர போரட்ட கதைகளில் அவர்க்கு அதிக ஈடு பாடு
சந்தனத்தேவன் பாத்திரத்தில் கலக்கி இருப்பார் , முதலில் அவரை காட்டும் பொது வெறும் கண்களை மட்டுமே காட்டுவார்கள் , அதில் அக்னி கொழம்பு , அந்த அசாத்திய கண்களை கொண்டு , அவர் பார்ப்பதும் , கர்ஜனை செய்வதும் , அபாரம் , நம்மளுக்கும் அந்த சுகந்திர உணர்வு வருகிறது .
MASS என்றால் என்ன ? பஞ்ச் வசனம் பேசுவதா ? சண்டை போடுவதா ? ITS HOW YOU CARRY யௌர்ஸெல்ப். இந்த படத்தில் தன்னை கைது செய்ய வரும் அதிகாரி உடன் வரும் பொது , இருவரும் ஒரு குழியில் விழுந்து விட , நம்மவர் முதலில் ஏறி விட்டு , அந்த அதிககாரிக்கு கை கொடுத்து வெளியே கொண்டு வருவதாக சொல்ல அதற்கு அவர் மறுக்க , நம்மவர் ஒரு சிரிப்பை உதுத்து , நிற்கும் கமீரம் , SIMPLY OUT OF THE WORLD , சொன்ன மாதிரியே தான் கைது ஆவோம் என்று தெரிந்து நிற்கும் இடமும் மேலும் மெருகு கூடுகிறது
தன் கூடத்தில் இருக்கும் ஒரு நபர் , கல்யாணம் ஆகி 3 நாட்கள் மட்டுமே ஆகி இருந்த 22 வயது நபர் போரட்டத்துக்கு செல்லும் பொது , அவரை பார்த்து பெருமை படுவது ஆகட்டும் , அவர் இறந்த செய்தி கேட்டு உருகுவது ஆகட்டும் , சிவாஜி சார் scores
.
இது சந்தனத்தேவன் பாத்திரம் என்றால்
அந்த பண்ணையார் பாத்திரம் , வேறு ஒரு பரிமாணம்
அதிகார வர்கத்திடம் பணிந்து போகும் பாத்திரம் , ராத்திரி வேட்டைக்கு போவதாக சொல்லி விட்டு , சந்தனதேவனாக மாறுகிறார் ( கோடி பறக்குது சாயல் ) மனைவியை சீண்டுவது , தங்கைக்காக நேரம் ஒதுக்குவது , ஊருக்கு உதவி செய்வது , தன் கூட்டாளி ஜோசப் மாட்டி கொண்ட உடன் அவர் வீட்டுக்கு சென்று அவர் தாயை பார்த்து , அவர் தன் மேல் வைத்து இருக்கும் மரியாதை பார்த்து சொல்ல வந்த விபரத்தை சொல்ல முடியாமல் தவிப்பது , அந்த தாய் இறந்த செய்தி கேட்டு துடிப்பது என்று இது வேறு ஒரு dimension
அடுத்த கட்ட பரிமாணம்
சுகந்திரம் அடைந்த உடன் அந்த நாட்டின் சுகந்திரம் எப்படி misuse செய்ய படுகிறது என்பதை பார்த்து கோபம் படும் பாத்திரம் , வாழ்ந்து கேட்ட குடும்பம் , பல தியாகிகள் இப்படி இருப்பர்களோ என்று நினைக்க தோன்றுகிறது , ஜெமினி யை சிவாஜி பார்த்து , நாம் சுகந்திரம் வாங்கி கொடுத்தோம் , அதை தான் politics என்று சொல்லுகிறார்கள் , அது போலி tricks - கதை வசனம் - VIETNAM VEEDU SUNDARAM , மகன் உடன் கருத்து மோதல் , அவரின் நிலைமையில் இருந்து கிழே இறங்கி வர முடியாமல் , தற்போதைய வாழ்கை உடன் ஒத்து போக முடியமால் , தவிப்பது , மகன் தவறு செய்யும் பொது , அவரை கொலை பண்ண அலைந்து , கடைசியில் உயிரை விடுவது என்று முழு circle அடைகிறது அவர் பாத்திரம் (கடைசி கிளைமாக்ஸ் மட்டும் forced ஆக தெரிந்தது .
kr விஜயா :
நடிகர் திலகத்தின் ராசியான ஜோடிகளில் ஒருவர் , பணக்கார சீமானாக வாழ்ந்த கணவர் உடன் எப்படி வாழ்ந்தாரோ , அபப்டியே தான் கஷ்டம் படும் பொது இருக்கிறார் , முதலில் தன் கணவரின் பிறந்தநாள் பொது ஊருக்கு சாப்பாடு போடும் போதும் அதே சந்தோசம் , பிறகு , எறும்பு புற்றுக்கு சாப்பாடு பொது அதே சந்தோசம் , மகன் , புருஷன் இருவரிடம் மாட்டி கொண்டு விழிப்பதும் , இரண்டு பேரையும் விட்டு கொடுக்காமல் பேசுவதும் , மகன் தவறு செய்த விஷயம் தெரிந்து , கணவர் மகனை கொலை செய்ய புறபடும் பொது , தடுப்பதும் , உயிர் விடுவதும் நல்ல கதாபாத்திரம் , நன்றாக செய்து இருக்கிறார்
கமல் :
ITS A DREAM COME TRUE FOR A BUDDING ACTOR TO SHARE SCREEN SPACE WITH STALWARTS LIKE நடிகர் திலகம் , WHOM HE FONDLY REFERRED AS FATHER, KR VIJAYA , WHOM HE REFERRED AS MOTHER, NAGESH- HIS ALL TIME FAVOURITE COMEDIAN, GEMINI GANESAN WHO STOOD AS A PILLAR IN HIS INITIAL YEARS
தன் அப்பா நல்லவர் தான் , அதை அவர் உபயோக படுத்த மாட்டேன் என்று பிடிவாதம் பிடிப்பதை பார்க்க சகிக்காமல் சண்டை போடுவதும் , கடைசியில் திருந்துவதும் , cliched
ஜெமினி :
இயற்கை நடிப்பில் என்னை கவர்ந்த நடிகர்களில் ஒருவர் , ( நான் அவன் இல்லை படத்தை பார்த்து பிரமித்து உள்ள ரசிகர்களில் நானும் ஒருவன் - கோபால் சார் நானும் உங்க ஆளு தான் இந்த விஷியத்தில் ) முதலில் வீரத்துடன் சேர்வதும் , தன் முதலாளி தான் சந்தனதேவனாக இருப்பாரோ என்று முதலில் சந்தேகம் அடைவதும் , அவர் தன் இவர் என்று தெரிந்து தன் தலைவனை காப்பாற்ற போலீஸ் ல் மாட்டி கொள்வதும் , பிறகு கண் தெரியாமல் கஷ்ட படுவதும் , தன் தலைவனை மீண்டும் சந்திதுடன் சந்தோசம் படுவதும் , அவர் உடன் நினைவுகளை அசை போடுவதும் , பிறகு உண்மை தெரிந்த உடன் வருத்த படுவதும் , நடிகர் திலகத்துடன் அவர் நடித்த கடைசி படத்தில் நல்ல memorable பாதிரம் .
நாகேஷ் :
வழக்கம் போல் காலில் கட்டு போட தன் துண்டை எடுத்து ,chair ல் கட்டு போடுவதும் , பிறகு தன் முதலாளி கஷ்ட படும் பொது பழைய விஷயங்களை நினைப்பதும் , இன்னும் கொஞ்சம் scope கொடுத்து இருக்கலாம்
MY VIEW:
இசையை விட BGM என்னை மிகவும் கவர்ந்தது
படத்தின் முதல் பாதி மிகவும் நன்றாக இருக்க , கடைசி 20 நிமிடங்கள் மட்டும் கொஞ்சம் தொய்வு , இயக்கம் வின்சென்ட்
பொதுவாக தன் அபிமான நாயகர்களின் கண்களை அனைவரும் கண்டு பிடித்து விடுவார்கள் , சிவாஜி சாரின் கண்களை கண்டிபிடிப்பது மிகவும் எளிது , அந்த suspense element யை கொஞ்சம் build up செய்து இருக்கலாம்
இந்த படம் எத்தனை நபர்களை கவர்ந்ததோ தெரியாது , சங்கர் என்ற இளைஞன் கவர பட படத்தின் சிறு குறைகளை களைந்து , வர்ம கலை , மக்களை கவர ஊழல் ஒழிப்பு , AR ரகுமான் இசை , இரண்டு கமல் , மனிஷா , ஊர்மிளா , என்று அசத்தல் combination உடன் சேர்ந்து இந்தியன் என்ற படத்தை கொடுத்தார்
SAME TEAM OF GOURAVAM , S RANGARAJAN VIETNAM VEEDU SUNDARAM , SIVAJI , NAGESH ,MSV THOUGH IT IS NOT LIKE THE FORMER , THIS IS WORTH WATCHING