http://i57.tinypic.com/29ok950.jpg
Printable View
1968ல் வெளிவந்த சிறந்த தமிழ் படங்களில் முதலிடம் இடம் பிடித்த ''குடியிருந்த கோயில் '' வெளியான நாள் 15.3.1968.
சரவணா பிலிம்ஸ் தாரிப்பின் முதல் வண்ணப்படம் .
மக்கள் திலகம் எம்ஜிஆர் எங்க வீட்டு பிள்ளை -1965 படத்திற்கு பின் நடித்த இரட்டைவேட நடிப்பில் வந்த படம் .
நடிக பேரசரின் மாறு பட்ட இரட்டை வேடங்களில் ரசிகர்களின் உள்ளங்களை மகிழ்வித்த காவியம் .
மெல்லிசை மன்னரின் ரீ ரெக்கார்டிங் மற்றும் பாடல்கள் எல்லாமே சூப்பர் ஹிட் .
உன் விழியும் என் வாளும் - புரட்சி நடிகரின் இளமை துள்ளல் நடிப்பு அமர்க்களம் .
என்னை தெரியுமா ?- மக்கள் திலகம தன்னை பற்றி ஜாலியாக பாடும் மேடை பாடல் .
நீயேதான் எனக்கு மணவாட்டி - மக்கள் திலகம் அன்றே பாடி விட்ட காதலர் தின பாடல் .
நான் யார் நான் யார் - மக்கள் திலகத்தின் வாழ்வியல் பாடல் .உண்மையிலயே ''வாத்தியார்தான் ''.
துள்ளுவதோ இளமை - எவர் கிரீன் பாடல் .
ஆடலுடன் பாடலை கேட்டு - எம்ஜிஆரின் கால்களா அது ? நடன மேதை ..
குங்கும பொட்டின் மங்களம் - பிரம்மனே வியந்து போகும் அளவிற்கு பேரழகு மக்கள் திலகத்தின் தோற்றம் .
ரயில்வே அலுவலகத்தில் மக்கள் திலகம் போடும் ஆக்ரோஷமான சண்டை .
நடராஜனை பந்தாடும் எம்ஜிஆரின் வீரமான சண்டை காட்சி .
காவலர்களை தாக்கும் அதிரடி சண்டை காட்சி
மல்யுத்த வீரரிடம் மோதும் சூப்பர் காட்சி
இறுதியில் ஜஸ்டின் - நம்பியாரிடம் மோதும் சண்டை காட்சி
ரசிகர்களின் பேராதரவுடன் தென்னாடெங்கும் மாபெரும் வெற்றி பெற்ற காவியம் .
சென்னை நகரில் குளோப் - கிருஷ்ணா - புவனேஸ்வரி மற்றும் தமிழகமெங்கும் சேர்த்து 10 திரை அரங்கில் 100 நாட்கள் ஓடியது .
1968 பிறகு 2015 இன்று வரை 47 ஆண்டுகளில் எண்ணிலங்கா திரை அரங்குகளில் தொடர்ந்து ஓடிகொண்டிருந்த படம் .
தனியார் ஊடகங்களில் இந்த படம் - அமுத சுரபி .
எம்ஜிஆர் ரசிகர்களுக்கு குடியிருந்த கோயில் - தினமும் பூஜிக்கும் தெய்வமாக மக்கள் திலகம் எம்ஜிஆர் .
குடியிருந்த கோயில்
15.3.1968
குடியிருந்த கோயில் முதல் நாள் பார்த்த அனுபவம் .
வேலூர் - ராஜா அரங்கில் முதல் நாள் மாலை காட்சி காணும் வாய்ப்பு கிடைத்தது .
ராஜா அரங்கு முழுவதும் தோரணங்களாலும் , ஸ்டார் களாலும் அமர்க்கள பட்டு ரசிகர்கள் வெள்ளத்தில் திருவிழாவாக காட்சி அளித்தது . ஒரு வழியாக நீண்ட போராட்டத்துக்கு பின் டிக்கெட் வாங்கி உள்ளே நுழையும் போது படமும் ஆரம்பமாகி விசில் சத்தமும் ஆரவாரமும் காதைபிளந்தது .
படம் துவங்கி சில நிமிடங்கள் கழித்து மக்கள் திலகம் அறிமுகமாகும் காட்சியில் துவங்கி ஆரம்ப சண்டை காட்சியில் தூள் கிளப்பும் மக்கள் திலகம் பின்னர்
உன் விழியும் என் வாளும்
என்னை தெரியுமா ....
நீயேதான் எனக்கு மணவாட்டி
நான் யார் .. நான்யார் ..நீ யார்
துள்ளு வதோ இளமை
ஆடலுடன் பாடலை
குங்கும பொட்டின் மங்கலம்
அட்டகாசமான பாடல்களும் , மக்கள் திலகம் -ஜஸ்டின் - - நடராசன்
ஆகியோருடன் நடத்தும் சண்டை காட்சிகளும் இறுதி காட்சியில் நம்பியாருடன் போடும் சண்டைகாட்சிகளும் பிரமாதம் .
மக்கள் திலகத்தின் மாறுபட்ட இரண்டு வேடங்களில் அருமையாக நடித்து ரசிகர்களை மகிழ்வித்தார் .
ரசிகர்களுக்கும் மக்களுக்கும் ஒரு இனிய விருந்து படைத்தார் மக்கள் திலகம் .
1962-1967-1971 தமிழக பொது தேர்தல்கள்
1973 திண்டுக்கல் இடை தேர்தல்
1974 கோவை மேற்கு சட்ட மன்ற இடை தேர்தல்
1974 கோவை பாராளுமன்ற தேர்தல்
மேற்கண்ட வருடங்களில் தொடர்ந்து தேர்தல் பிரசார மேடையில் எதிரும் புதிருமாக
மக்கள் திலகமும் - நடிகர்திலகமும் அவர்கள் சார்ந்த கட்சியின் மேடையில் தீவிர பிரச்சாரம் செய்து வந்தனர் .
1977 இந்திய பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் தமிழ் நாட்டில் அண்ணா திமுக - இந்திரா காங்கிரஸ் கூட்டணி ஏற்பட்டது .
திரை உலகில் மக்கள் திலகமும் நடிகர் திலகமும் பல்வேறு நிகழ்சிகளில் ஒன்றாக கலந்து விழாக்களை சிறப்பித்து வந்தனர் .
முதல் முறையாக அரசியல் மேடையில் .....
16.3.1977 அன்று சென்னை பனகல் பார்க்கில்
தென்சென்னை பாராளுமன்ற கூட்டணி வேட்பாளரான -இந்திரா காங்கிரஸ் திரு ஆர் .வெங்கட்ராமனை ஆதரித்து நடை பெற்ற தேர்தல் பிரசாரத்தில் முதல் முறையாக அண்ணா திமுக தலைவரும் .புரட்சி தலைவருமான மக்கள் திலகமும் -காங்கிரஸ் சார்பாக நடிகர் திலகமும் ஒரே மேடையில் இணைந்து பிரச்சாரம் செய்த நாள் 16.3.1977
தினகரன்- வசந்தம் மலர் -15/03/2015
http://i57.tinypic.com/2u8xac8.jpg