http://i61.tinypic.com/a9og04.jpg
Printable View
ஒரு படபிடிப்பில் புரட்சி தலைவருடன் நடித்து முடிந்ததும் வீட்டிற்கு செல்ல தயாரானார் நமது அன்பிற்குரிய ஆச்சி மனோரமா அவர்கள்.
இதை கவனித்த தலைவர், 'என்ன மனோ, படபிடிப்பு முடிந்ததும் கிளம்பிட்டே, மிகவும் உருக்கமான வரிகள் கொண்ட ஒரு அருமையான பாடலுக்கு நடிக்க போறேன், இருந்து பாத்துட்டு போ' என்றதுடன், 'ஒப்பனையை (மேக்கப்) கலைக்காமல் அப்படியே போ, அப்போதான் ரசிகர்கள் அன்பை பொழிவார்கள்' என்று கூறினாராம்.
இதை ஆச்சி மனோரமா அவர்கள் ஒரு மேடை நிகழ்ச்சியில் (நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்) கூறி, 'அந்த பாட்டைப் போடுங்கய்யா' என்று கேட்டுக் கொண்டதை ஒரு YouTube' பதிவில் பார்த்து மகிழ வாய்ப்பு கிட்டியது.
அந்த திரைப்படம் வேறேதுமில்லை, புரட்சி தலைவரின் அன்பர்களின் மனதை மிகவும் கவர்ந்த, 'படகோட்டி'தான்.
இருவரின் நடிப்பு இடம் பெற்ற காட்சி, தரை மேல் பிறக்க வைத்தான்' பாடலுக்கு சற்று முன் வரும் காட்சிதான்.
அந்த காட்சியில், 'அண்ணே, சோறு கொண்டாந்திருக்கேன், சாப்பிடு' என்று ஆச்சி அவர்கள் கூற, 'அந்த தெருக்கோடியில இருக்கிற குடும்பத்திலிருக்கிறவங்க பசியால துடிக்கிறாங்க, இதை கொண்டு போய் அவங்ககிட்டெ குடும்மா' என்று தலைவர் பதிலுக்கு கேட்டுக் கொள்வார்.
வாழ்க புரட்சி தலைவர் புகழ்.
courtesy fb
நன்றி ஒலிகிறது உரிமைக்குரல் மாத இதழ்
http://i160.photobucket.com/albums/t...psrwf7pblw.jpg
Invitation dated 18-10-1985, Honorable Chief Minister Dr. MGR Opening the building of Kamadhenu Co-operative Super Market in Teynampet and laying foundation stone for the co-operative complex of Tamilnadu Co-operative union.
http://i58.tinypic.com/142au7s.jpg