http://i68.tinypic.com/fbc0uw.jpg
Printable View
ஆலயத்தில் மூலவருக்கு ஆராதனை செய்கிறார் திரு.சைதை துரைசாமி பக்தர்களுடன்
http://i66.tinypic.com/1qj2pg.jpg
ஒரு காலத்தில் எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் தீவிரமான ஒரு கர்ஜனை நடிகரின் ரசிகர் . மேலும் அவர் ஒரு பத்திரிகை ஆசிரியர் . கண்ணியமான வார்த்தைகள் என்னவென்று தெரியாதவர் . மற்றவர்களை மிகவும் கேவலமாக தரமின்று எழுதுவதில் கைதேர்ந்தவர் .புள்ளி விவரங்களை மனம் போன போக்கில் அச்சிட்டு ஆனந்தம் அடைந்தவர் .அவர் விரும்பிய நடிகர் பல படங்கள் வந்த வழியே காணாமல் போனது .. என்ன செய்வது அன்று தெரியாமல் அந்த காலத்தில் தான் அச்சடித்த கேவலமான நோட்டீஸ் களை அலைந்து திரிந்து கண்டு பிடித்து மீண்டும் புதுப்பித்து ஆனந்தம் அடைய சிவ பூஜை செய்கிறார் . பாவம் . கண்டம் விட்டு கண்டம் மாறினாலும் ஆனந்தம் கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் அந்த பெரியவருக்கு . என்றுமே உண்டு . மனசாந்தி கிடைக்க பிரார்த்திக்கிறோம்... இப்படி 'ஆனந்தம்' அடைந்தால் தான் உண்டு...
மாலையில் ஊர்வலம் செல்ல தயார் நிலையில் உற்சவர்.
http://i65.tinypic.com/2hr36er.jpg
22.8.2018
சென்னை தினம் ...இன்று
>
சென்னை தினமான இன்று நமக்கு எத்தனையோ இனிமையான நினைவுகளை தந்து கொண்டிருந்தாலும் மிக முக்கியமான நிகழ்வுகளாக நம் கண் முன் பசுமையாக நிற்பது பேரறிஞர் அண்ணா அவர்களும் மக்கள் திலகம் எம்ஜிஆர் நினைவலைகள் .
சென்னை நகரில் முதல் முறையாக 4 திரை அரங்கில் வெளிவந்து 100 நாட்கள் ஓடிய பெருமை ''மதுரை வீரன் '' 1956
திமுக முதல் முறையாக போட்டியிட்ட தேர்தல் களத்தில் எம்ஜிஆர் சென்னை நகரில் பிரச்சாரம் செய்தார் - 1957
22.8.1958ல் வெளிவந்த எம்ஜிஆரின் நாடோடிமன்னன் திமுக என்ற மாபெரும் இயக்கத்திற்கு அடித்தளம் அமைத்தது .சென்னை நகரம் திமுகவின் கோட்டையாக உருவெடுத்து முன்னேறியது . 1958
1962 தேர்தலில் சென்னை நகரில் பல சட்ட மன்ற தொகுதிகளை திமுக கைப்பற்றியது .எம்ஜிஆர் தன்னுடைய படங்களில் திமுக கொள்கைகளையும் உதய சூரியன் சின்னத்தையும் இடம் பெற செய்தும் மேடை பிரச்சாரங்கள் செய்தும் திமுக வை வளர்த்தார் .
1964ல் சென்னை மாநகராட்சியை முதல் முறையாக திமுக கைப்பற்றியது .
1964ல் எம்ஜிஆர் நடித்த தெய்வத்தாய் படத்தில் இடம் பெற்ற மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் என்ற பாடல் மிகவும் பிரபலம் ஆனது .
திமுக , எம்ஜிஆர் , சென்னை என்ற மூன்றெழுத்துக்களை அருமையாக பாடி வரிகளுக்கு உயிர் கொடுத்தார் . இன்று வரை அந்த பாடல் வரிகள் நிலைத்துவிட்டது .
தென்னிந்தய திரை உலகில் வசூலில் மாபெரும் சாதனைகளை நிகழ்த்திய எம்ஜிஆரின் எங்க வீட்டுப்பிள்ளை முதல் முறையாக சென்னை நகரில் மூன்று திரை அரங்குகளில் வெள்ளிவிழா ஓடி சாதனை சென்னை க்கு பெருமை - 1965
எம்ஜிஆர் தேர்தல் பிரச்சார நேரத்தில் சென்னை ராமவாரத்தில் நடந்த அசம்பாவத்திலிருந்து உயிர் பிழைத்த தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று தமிழ் நாட்டிலே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி . மேலும் சென்னை பரங்கிமலை தொகுதியில் முதல் முறையாக வெற்றி பெற்று சட்ட மன்றத்தில் நுழைந்தார் . 1967
1971 சட்ட மன்ற தேர்தலில் சென்னை நகரம் திமுக - எம்ஜிஆர் கோட்டையானது
ரிக் ஷாக்காரன் திரைப்படம் சென்னை நகரில் வசூலில் பிரமாண்ட சாதனை - 1971
எம்ஜிஆர் பாரத் பட்டம் - சென்னை நகரமே விழாக்கோலம் பூண்டது - 1972
எம்ஜிஆர் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார் சென்னை நகரமே அல்லோலப்பட்டது - 1972
எம்ஜிஆர் அதிமுக இயக்கம் உருவாக்கினார் - சென்னை -1972. புரட்சி நடிகர் ... புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஆனார் - 1972
உலகம் சுற்றும் வாலிபன் - சென்னை நகரில் பிரமிக்கத்தக்க வசூல் சாதனை - 1973
சென்னை நகரில் திமுகவின் அடக்கு முறைகளை மீறி வெற்றி கண்ட படம் நேற்றுஇன்று நாளை - 1974
22.8. 1975ல் அண்ணாவின் இதயக்கனி வசூலில் சென்னை நகரில் சாதனை - 1975
அரசியல் மற்றும் சினிமா துறைகளில் சென்னை நகரில் எம்ஜிஆர் படங்கள் தொடர் சாதனைகள் - 1976
பாராளுமன்ற தேர்தலில் அதிமுக ஆதரவு வெற்ற காங்கிரஸ் தென் சென்னை தொகுதியில் வெற்றி - 1977
1957- 1977
மக்கள் திலகம் எம்ஜிஆர் 20 ஆண்டுகளில் கட்சி சார்பாகவும் திரை துறை சார்பாகவும் சென்னை நகரில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார் .1977 சட்ட மன்ற தேர்தலில் அதிமுக கட்சி சென்னை கோட்டையை கைப்பற்றியது . புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தமிழக முதல்வரானார் . 1977.
1977- 1987
10 ஆண்டுகள் மேல் தமிழக முதல்வராக எம்ஜிஆர் சிறப்பாக ஆட்சி நடத்தினார் . குறிப்பாக சென்னை நகரம் எல்லா துறைகளிலும் முன்னேறியது .
மக்கள் திலகம் எம்ஜிஆர் வாழ்ந்த நாட்களில் சென்னை நகரம் எம்ஜிஆர் படங்களின் கோட்டையாக திகழ்ந்தது .
அரசியல் இயக்கத்திலும் எம்ஜிஆருக்கு கோட்டையாக சென்னை நகரம் விளங்கியது .
மக்கள் திலகம் எம்ஜிஆர் மறைந்து 30 வருடங்கள் ஆனாலும் தொடர்ந்து அவருடைய பிறந்த நாள் , நினைவு நாள் , நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் , எம்ஜிஆரை பற்றிய புத்தகங்கள் வெளியீட்டு விழாக்கள் . எம்ஜிஆர் மன்றங்களின் தொடர் விழாக்கள் எம்ஜிஆர் படங்களின் மறுவெளியீடுகள் என்று சென்னை நகரம் கொண்டாடி வருகிறது
சென்னை தினமான இன்று எம்ஜிஆர் சென்னை நினைவுகளை நினைவு கூர்வோம் .
மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்கள் கொடுத்து வைத்தவர்கள் .