நடிப்பை பொறுத்தவரை நடிகர் திலகத்தின் திறமை என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அவருடைய வேடம் புனையும் தாக்கம் தமிழ் திரை உலகு மட்டும் அல்ல மற்ற அனைத்து திரை உலகிலும் எப்போதும் இருந்துகொண்டுதான் இருக்கும் என்பதற்கு நம்முடைய அண்டை மாநிலமான ஆந்திரா மாநிலம் மிக சிறந்த உதாரணம்.
நடிகர் திலகத்தின் நடிப்பில் வெளிவந்த மதோன்னத வெற்றிபெற்ற கெளரவம் திரைப்படத்தில் வரும் பாரிஸ்டர் ரஜினிகாந்த் என்ற அனைவரும் பொறாமை படுமளவுக்கு கண்களுக்கு விருந்தளித்த ஒரு கதாபாத்திரம். தொழிலில் யாரும் தன்னை அசைக்கமுடியாது என்ற அலட்சியமும் தலைகனமும், பெருமையும் கொண்ட கதாபாத்திரத்தை நடிகர் திலகம் சும்மா வெளுத்து வாங்கியிருப்பார். எந்த ஒரு மசாலாவும் இல்லாமல் தன்னுடைய நடிப்பு ஒன்றையே மூலதனமாக வைத்து பெருவெற்றி பெற வைத்த படம் கெளரவம்.
அந்த பாரிஸ்டர் கதாபாத்திரத்தை அப்படியே உடை, நடை, பாவனை அதிர்வு அனைத்தையும் சென்ற வாரம் ஆந்திரா மாநிலத்தில் வெளியான பாரிஸ்டர் சங்கரநாராயண என்ற தெலுகு திரைப்படத்தில் அதன் நாயகன் செய்து பெரு வெற்றி பெற்றிருக்கிறார்.
நடிகர் திலகத்தின் அந்த உடையலங்காரம், உடல்மொழி, அனைத்தையும் அந்த நடிகர் அப்படியே பின்பற்றி மிக பெரிய வெற்றியை 2013இல் பெற்றிருக்கிறார்.
நடிகர் திலகத்தின் தாக்கம் ஆந்திரா மாநிலம் முழுவதும் இப்போது பேச்சு..!
கெளரவம் வெளிவந்தபோது பாரிஸ்டர் கதாபாத்திரத்தை ஒரு சில கனவான்கள் மிகைநடிப்பு என்று பாராட்டினார்கள்.
இந்த தெலுகு படம் வந்திருப்பதோ 2013. அதாவது தொழில் நுட்பம், தகவல் பெருகிய காலம், எல்லாம் NATURAL என்று அலையும் காலம். இந்த காலத்தில் இந்த திரைப்படம் அதில் நடித்த நாயகன் இந்த தலைமுறை நடிகர். அவர் ஏன் இந்த கால பாணியில், அதாவது NATURAL (அப்படி ஒரு பாணி இருக்குமேயானால்) என்று ஒரு சில கனவான்கள் உளரும் பாணியில் நடித்திருக்ககூடாது ? செய்திருக்ககூடாது ?
செய்திருந்தால் அது வெற்றிபெற்றிருக்காது..!
So ....இதிலிருந்தே புரியவில்லை...நடிகர் திலகம் அன்று வெளிக்கொண்டுவந்த நடிப்பு அந்த கதாபாத்திரத்தை பொருத்தவரை மிக மிக சரியே என்று..! வயிற்றெரிச்சல் கொண்டவர்கள் மட்டும் அவரது நடிப்பை இகழ்ந்தனர், இகழ்வார் !
இதை படிக்கும் இளைய சமுதாயத்தினர் இப்போதாவது புரிந்து கொள்ளட்டும் கடந்தகாலம், நிகழ்காலம்...வருங்காலம்...இப்படி எல்லகாலங்களையும் கடந்து நிற்பதுதான் திரை உலக சித்தரின் நடிப்பு இது தான் உண்மை என்று !
இனியாவது சில புல்லுருவிகள் புரிந்துகொண்டு தங்கள் பிதற்றலை நிறுத்துவார்கள் என்று நம்புவோம்..!
நண்பர்களுக்கு அதன் stills இங்கே பதிவிட்டுள்ளேன்...கண்டு களியுங்கள்...! திரையுலகின் ஒரே ஒரு சித்தர்..! ஒரே ஒரு நடிப்பு கடவுளாக அனைவரும் நடிகர் திலகம் அவர்களை போற்றுகின்றனர் என்றால் அது இதற்காகதான் !
Attachment 2576
Attachment 2577
Attachment 2578
Attachment 2579
Attachment 2580
TRAILER முடிவில் அவர் "THE YOUNG BULL TRIES TO KILL THE OLD BULL " என்று கூறுவது ஒரு நச் என்ற பஞ்ச்..!
https://www.youtube.com/watch?v=h_BOvNly3so