Thanks for sharing .Though I don't understand fully , tears rolling
Printable View
கேட்டவைகளில் பிடித்தது -4
இனியது இனியது உலகம் - படம் தங்கை
எப்பேர்பட்ட கருத்துக்கள் தரப்பட்டுள்ளது இப்போதைய காலகட்டத்தில் மிக அவசியம் சப்பென்று வாழும் வாழ்வில் என்ன பெருமை எப்போதும் தைரியம் கொள்வது ஏகாந்தம் இந்தப்பாடல் என்றும் தங்கும் இவ்வுலகில்
A lovely song giving a positive attitude He who follows this will be surely shrewd
இனியது இனியது உலகம் - புதியது புதியது இதயம்
அருமை இந்த இளமை - வாழ்வில் அனுபவம் பெறுவது பெருமை
பருவம் போகும் வழியோடு பயணம் போகும் விழியோடு
ரசிகன் என்னும் நினைவோடு நாளும் பொழுதும் நடை போடு
ராகத்தோடு , தாளத்தோடு ,பாவத்தோடு விளையாடு
நினைத்ததெல்லாம் முடிந்த பின்னே அடுத்த வாழிவில் அடிபோடு
இனியது இனியது உலகம் - புதியது புதியது இதயம்
அருமை இந்த இளமை - வாழ்வில் அனுபவம் பெறுவது பெருமை
அச்சம் கொண்டால் சுகம் இல்லை - அடிமை வாழ்வில் சுவை இல்லை - தூங்கும் கண்ணில் ஒளி இல்லை - துள்ளி நடந்தால்
வலி இல்லை
நமது வாழ்வு , நமது சொந்தம், நமது எண்ணம் உணர்வோடு - நாளை வாழ்வு யாருக் என்று கேள்வி கேட்டு பதில் தேடு
இனியது இனியது உலகம் - புதியது புதியது இதயம்
அருமை இந்த இளமை - வாழ்வில் அனுபவம் பெறுவது பெருமை
ராகத்தோடு , தாளத்தோடு ,பாவத்தோடு விளையாடு
நினைத்ததெல்லாம் முடிந்த பின்னே அடுத்த வாழிவில் அடிபோடு
உத்தமமான வரிகள் - சந்தோஷமாக இருங்கள் - பிறப்புக்கும் , இறப்புக்கும் நடுவே உள்ள நாட்கள் தான் வாழ்க்கை - எல்லோருக்கும் வாழ்க்கை ஒரே மாதிரி இருப்பதில்லை - exam centre is same - question papers are different - ஆனாலும் சந்தோஷமாக வாழ்வது நம் கையில் தான் இருக்கின்றது - மற்றவர்களை மதிக்க கற்று கொள்ளுங்கள் - அவர்களின் உணர்வுகளையும் மதியுங்கள் , மிதிக்காதீர்கள் - அடுத்த கட்டமும் உங்களுக்கு நன்றாகவே அமையும்
அச்சம் கொண்டால் சுகம் இல்லை - அடிமை வாழ்வில் சுவை இல்லை - தூங்கும் கண்ணில் ஒளி இல்லை - துள்ளி நடந்தால்
வலி இல்லை
தையிரியம் , தன்னம்பிக்கை மிகவும் தேவை - ஈகோ அல்ல - நீயே உனக்கு நிகரானவன் ! உங்களுடன் வேறு யாரையும் compare செய்துகொண்டு , மன வேதனை அடையாதீர்கள் - உங்கள் நிலைமைக்கும் கீழே வாழ்பவர்கள் ஒரு கோடிக்கும் மேலே -------- யாருக்கும் அடிமை ஆகாதீர்கள் , அன்பிற்கும் மட்டுமே அடிமை யாக வாழலாம் -----
நாளை வாழ்வு யாருக் என்று கேள்வி கேட்டு பதில் தேடு
எதையுமே ஏன் , எதற்கு , எப்படி என்று கேள்வி கேளுங்கள் - விதண்டா வாதமாக அல்ல - இன்றைய வாழ்வும் , நாளைய வாழ்வும் உங்களுக்குத்தான் !!!
http://youtu.be/XbRUcqDobU8
தொடரும்
அன்புள்ள ராகுல் உங்கள் " நாம் பிறந்த மண் " பதிவு மிகவும் நன்றாக இருந்தது - nt யின் தரமான படங்கள் ஏராளம் ஏராளம் - அதை பார்த்து பெரு மூச்சு விடும் நபர்களும் ஏராளம் ஏராளம் - தொடருங்கள்
இத்திரியில் என் வருகைக்கு வாழ்த்துரை நல்கிய அன்புள்ளங்கள்
திருவாளரகள் ராகுல்ராம்,ரவிகிரன்சூர்யா,ரவி ஆகியோருக்கு என்
நன்றிகள்
கேட்டவைகளில் பிடித்தது -5
தங்ககளே நாளை தலைவர்களே - படம் : என்னை போல் ஒருவன்
தங்ககளே நாளை தலைவர்களே - நம் தாயும் மொழியும் கண்கள்
சிங்ககளே வாழும் தெய்வங்களே - நம் தேசம் காப்பவர்கள் நீங்கள்
நம் தாத்தா காந்தியும் மாமா நேருவும் தேடிய செல்வங்கள் - பள்ளி சாலை தந்தவன் ஏழை தலைவனை தினமும் எண்ணுங்கள்
அறம் செய்ய விரும்பு என்றால் அவ்வை - தருமம் செய்யுங்கள்
அன்பே தெய்வம் என்றார் பெரியோர் அன்புடன் வாழுங்கள்
யாரும் தீமை செய்தாலும் நீங்கள் நன்மை செய்யுங்கள்
யாரும் பொய்யை சொன்னாலும் நீங்கள் மெய்யை சொல்லுங்கள்
நேர்மையாய் வாழ்வதில் தோல்வியே இல்லையே
(தங்ககளே நாளை தலைவர்களே-----)
கூடும் உறவு கூட்டுருவென்று ஒன்றாய் வாழுங்கள் - கூடிய பிறகு
குற்றம் காணும் காணும் கொள்கையை தள்ளுங்கள்
என்றும் ஒன்றே செய்யுங்கள் , ஒன்றை நன்றே செய்யுங்கள் - நன்றும் இன்றே செய்யுங்கள் - நீங்கள் எதிலும் வெல்லுங்கள்
ஈகையில் நாளுமே வெற்றி மேல் வெற்றியே
(தங்ககளே நாளை தலைவர்களே-----)
இந்த பாடல் குழந்தைகளுக்காக மட்டும் அல்ல - குழந்தைகளாக இருந்து இன்று வளர்ந்திருக்கும் நம் எல்லோருக்கும் தான்
யாரும் தீமை செய்தாலும் நீங்கள் நன்மை செய்யுங்கள்
யாரும் பொய்யை சொன்னாலும் நீங்கள் மெய்யை சொல்லுங்கள்
நேர்மையாய் வாழ்வதில் தோல்வியே இல்லையே
எவ்வளுவு முடியும் என்பது கஷ்டமான காரியம் தான் - நம்மை எல்லோரும் மட்டம் தட்டவும் வாய்ப்பு உள்ளது - பலவீனமானவர்கள் என்ற பெயரும் கிடைக்கலாம் - ஆனால் நேர்மையாக வாழ்வதில் தோல்வியே இல்லை என்பது 100% உண்மை .
கூடும் உறவு கூட்டுருவென்று ஒன்றாய் வாழுங்கள் - கூடிய பிறகு
குற்றம் காணும் காணும் கொள்கையை தள்ளுங்கள்
என்றும் ஒன்றே செய்யுங்கள் , ஒன்றை நன்றே செய்யுங்கள் - நன்றும் இன்றே செய்யுங்கள் - நீங்கள் எதிலும் வெல்லுங்கள்
எவ்வளவு உண்மை , - நம்மிடம் உள்ள குறைகளை தீர்க்கவே இந்த ஒரு ஜென்மம் போதாதே - ஏன் மற்றவர்களை குறை சொல்ல வேண்டும் - எதிலும் வெல்ல இந்த குணம் ஒரு தடை தானே ?!!
http://youtu.be/Xr4gvXXgCnU
தொடரும்
அன்புள்ள ரவி,கேட்டவைகளில் பிடித்தவை என்ற தலைப்பில் நீங்கள் தேர்வு செய்து,
வழங்கி வரும் நடிகர் திலகத்தின் பாடல்களின் வரிகளும்,இடையிடையே தங்களது
கருத்துக்களும் அருமை
கேட்டவைகளில் பிடித்தது -6
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே - படம் பாபு
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே - நான் ஒரே ஒரு புன்னைகையில் கண்டேனே !
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே - நான் ஒரே ஒரு புன்னைகையில் கண்டேனே !
பாசம் உள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான் - அவன் கருணை
உள்ள நெஞ்சினிலே கோவில் கொள்கிறான்
(இதோ எந்தன் தெய்வம் முன்னாலே----)
அவன் பூ விரியும் சோலையிலே மணப்பான் - இசை பூங்குயிலின் தேன் குரலில் இருப்பான் - குளிர் மேகமன தாகத்தையே தணிப்பான்
தளிர் கொடி விளையும் கனிகளிலே இனிப்பான்
பாசம் உள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான் - அவன் கருணை
உள்ள நெஞ்சினிலே கோவில் கொள்கிறான்
(இதோ எந்தன் தெய்வம் முன்னாலே----)
பல நூல் படித்து நீ வழங்கும் கல்வி -பொது நலம் நினைத்து நீ
வழங்கும் செல்வம் - பிறர் உயர்வினிலே உனக்கு இருக்கும் இன்பம் - இவை அனைத்திலுமே இருப்பது தான் தெய்வம்
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே - நான் ஒரே ஒரு புன்னைகையில் கண்டேனே !
தன் வியர்வையிலும் உயர்ப்பினுலும் வாழ்வை கண்டு
தொழில் புரிந்து உயிர் வளக்கும் ஏழை - அவன் இதழ் மலரும்
சிரிப்பொலியை கேட்டேன் - அந்த சிரிப்பினிலே இறைவனை
நான் பார்த்தேன்
பாசம் உள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான் - அவன் கருணை
உள்ள நெஞ்சினிலே கோவில் கொள்கிறான்
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே - நான் ஒரே ஒரு புன்னைகையில் கண்டேனே !
கடவுளை வெளியே ஏன் தேடவேண்டும்... அவன் நம் மனதில் தானே உள்ளான்...
கண்ணதாசனும், TMS உம் , NT யின் நடிப்பும் விஸ்வநாதன் வலையில் வந்து விழும்போது எழும் நாதத்துக்கும் , அருமைக்கும் ஈடு இணை இல்லை.
Wonderful song. One would get into nostalgia and emotion, after viewing the song. Such a touching one with the soothing music, lyrics and the great actor's classic act.
பல நூல் படித்து நீ அறியும் கல்வி பொது நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம் பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம் இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்
இறைவன் எங்கு இருக்கிறான் என்பதை இதை விட சுலபமாக சொல்லி விட முடியுமா ?
தன் வியர்வையிலும் உழைப்பினிலும் வாழ்வை கண்டு தொழில் புரிந்து உயிர்வளர்க்கும் ஏழை - ஆகா எப்பேற்பட்ட கருத்து சிந்தனை ஆறுதல் தைரியம் நினைக்க நினைக்க ஆனந்தம் உண்டாகின்றது
http://youtu.be/k3YN6RCZHs0
தொடரும்