-
இந்த வார சினிமா எக்ஸ்ப்ரஸ் இதழில் வெளிவந்த செய்திகள்
---------------------------------------------------------------------------------------------------------
நடிகர் பி.யு.சின்னப்பா அந்த காலத்தில் புரட்சி நடிகர் .எம்.ஜி. ஆர்.
போல சண்டை பயிற்சியில் திறமையாக நடித்தார்.
நடிகர் பி.யு.சின்னப்பா நடித்த பல படங்களின் கதைகள் மீண்டும்
படமாக்கப்பட்டன. அவற்றுள் ஒன்று கலைவேந்தன் எம்.ஜி.ஆர். நடித்த
ராணி சம்யுக்தா .
நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்த நடிகர் பி.யு.சின்னப்பா தமது 35 வது வயதில் 23/09/1951 அன்று காலமானார்.இவரது மறைவிற்கு பிறகு
மனைவியும் , மகனும் சிரமப்பட்டனர் . 1947-ல் நடிகர் சின்னப்பாவிற்கு
ராஜ பகதூர் என்கிற மகன் பிறந்திருந்தார். ராஜா பகதூர் சில காலம்
பொன்மனசெம்மல் எம்.ஜி.ஆர். ஆதரவில் , அவரது வீட்டிலேயே தங்கிப் படித்து வந்தார்.
நடிகர் பி.யு.சின்னாப்பாவுடன் நடிக பேரரசர் எம்.ஜி.ஆர். அவர்கள்
ரத்னகுமார் , ஹரிச்சந்திரா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
-
-
-
இனிய நண்பர் திரு பம்மலாரின் கண்ணை பறிக்கும் எழில்வேந்தர் எம்ஜிஆரின் வண்ணப்பட காலண்டர் -2015 விரைவில் வர உள்ளது .
மக்கள் திலகம் மலர் மாலை -2 ஆவண புத்தகம் -மக்கள் திலகம் எம்ஜிஆர் பிறந்த நாளில் வெளிவரஉள்ளது .
தர்மம் தலைகாக்கும் எம்ஜிஆர் நற்பணி சங்கம் - அமுத சுரபி டாக்டர் எம்ஜிஆர் மன்றம் இணைந்து நடத்தும் மக்கள் திலகம் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பெங்களூரில் நடை பெற உள்ளது .
-
உலகம் சுற்றும் வாலிபன் - டிஜிடல் - சினிமாஸ்கோப் வேலைகள் கிட்டத்தட்ட நிறைவு பெறும்நிலையில் உள்ளது . உலகம் சுற்றும் வாலிபன் டிரைலெர் பற்றிய அறிவிப்பு விரைவில் வருகிறது .
-
http://www.youtube.com/watch?v=boZcocgsoV4
I have one reason for posting this clipping [ persons who would have watch Lingaa - Mona Mona song starting will know].
-
திரு.ஆர்.கே.எஸ்.,
தங்கள் விரிவான விளக்கத்துக்கும் திரு.கருணாநிதியின் சூழ்ச்சிகள் பற்றிய பட்டியலுக்கும் மிக்க நன்றி. கருணாநிதியின் சூழ்ச்சிக்கு ஆளாகி திமுகவில் இருந்து வெளியேறியவர்கள் பட்டியலில் கவியரசர் கண்ணதாசன், திரு.ஈ.வெ.கி.சம்பத் போன்றோரும் உண்டு.
தங்கள் கருத்துக்கு மாற்றுக் கருத்து சொல்வதற்காக மன்னிக்கவும். முரசொலியில் திமுக- காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக திரு.சிவாஜி கணேசன் அவர்கள் விளம்பரம் கொடுத்தது பற்றி குறிப்பிட்டிருந்தேன். ஆனால், நீங்கள் அது திமுக கொடுத்த விளம்பரம் என்று கூறியுள்ளீர்கள். திரு.சிவாஜி கணேசன் அவர்களின் பெயரோடும் புகைப்படத்தோடும் அந்த விளம்பரம் வந்தது. பிறகு எப்படி திமுக கொடுத்த விளம்பரம் என்று கூறுகிறீர்கள் என்று தெரியவில்லை.
அது ஒருபுறம் இருக்கட்டும். திரியில் உங்கள் பங்களிப்பு full swing-ல் இல்லையே. இன்னும் பணி தொடர்பான சுற்றுப் பிரயாணத்தில்தான் இருக்கிறீர்களா? உங்களது வாழ்த்துக்கு நன்றி தெரிவித்து கடந்த பதிவில் நான் குறிப்பிட்டிருந்தபடி உடல் நலனை பார்த்துக் கொள்ளவும். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
திரு.கோபால்,
திரியில் இருந்து விலகப் போவதாகக் கூறி எனக்கும் நன்றி தெரிவித்திருக்கிறீர்கள். உங்கள் பண்புக்கு நன்றி. தலைவரை மோசமாக தாக்குகிறீர்களே என்ற வருத்தத்தை தவிர, உங்கள் மீது எனக்கு காழ்ப்புணர்ச்சியோ கோபமோ இல்லை. தீபாவளிக்கு முதல் நாள் இதேபோல திரியில் இருந்து விலகுகிறேன் என்று நீங்கள் கூறியபோது கூட தொடர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தேன். திரும்பி வந்ததும் எனது ஒரு பதிவில் நன்றியும் தெரிவித்தேன்.
விஷய ஞானமும் எழுத்தாற்றலும் கொண்டவர் நீங்கள். உங்கள் எழுத்துக்களை நான் ரசிப்பவன். ஆனால், நல்ல விருந்தில் கல், ரோமம் போல (உபயம் நீங்கள்தான்) உங்கள் கடுமையான வார்த்தைகள். பண்பாளர்கள் திரு.ராகவேந்திரா அவர்கள், திரு.நெய்வேலி வாசுதேவன் அவர்கள், திரு.ஜி.கிருஷ்ணா அவர்கள், திரு.ஐதராபாத் ரவி அவர்கள் போன்றோர் எப்படி யாரையும் காயப்படுத்தாமல் கருத்துக்களை தெரிவிக்கிறார்கள். திரு.ரவி கிரண் சூர்யா கூட உணர்ச்சி வசப்படுவாரே தவிர, தானாக வலிய வந்து வம்பிழுக்கவோ, புண்படும்படி பேசவோ மாட்டார். கேட்டால் எனக்கு பசப்பத் தெரியாது, பொய் சொல்லத் தெரியாது என்பீர்கள். உங்களை பசப்பவோ, பொய்யுரைக்கவோ கூறவில்லை. கடுமையான விமர்சனங்களை தவிர்க்கலாமே. திரு.சிவாஜி கணேசன் அவர்கள் உங்களுக்கு உயிர் என்றால் நாங்கள் தெய்வமாக மதிக்கும் புரட்சித் தலைவர் எங்களுக்கு உயிர் என்பதை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.
சமீபத்தில் கூட பாருங்கள், இங்கே பங்களிக்கிறார்கள் என்பதற்காக ‘ரவி’க்கை அணிந்து கொண்டு எதிரிகளிடம் சரணாகதி அடைந்து விட்டவர்கள் என்று தாக்கியிருக்கிறீர்கள். எதற்காக, நண்பர்களையும் புண்படுத்தி எங்களையும் எதிரியாக பார்க்கிறீர்கள்?கருத்து மாறுபாடு இருந்தாலும் நாங்களும் நண்பர்கள்தான். நாம் பிரிந்தே இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா?
பிறர் மனத்தை புண்படுத்தாமல், இந்த கோபால் ராஜா மீண்டும் திரிக்கு மணம் பரப்பும் ரோஜாவாகத் திரும்ப வேண்டும் ...... முட்கள் இல்லாமல்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
சகோதரர் திரு.யுகேஷ் பாபு அவர்களுக்கு,
மாற்றுத் திரியில் உங்களது கேள்விக்கு பதிலாக ஊழலுக்கு வக்காலத்து என்ற தலைப்பில் நான் எழுதிய பதிவு குறித்து நண்பர் கோபப்பட்டிருக்கிறாரே, கல், ரோமம் என்று திரு.கோபால் குறிப்பிட்டதை நீங்களாக ஏதோ கற்பனை செய்து கொண்டு குற்றம் சாட்டினால் என்ன சொல்வது? என்றும் கேட்டிருக்கிறார். ஆனால், நான் யார் பெயரையும் குறிப்பிடாமல் தெரிவித்த முந்தைய கருத்துக்கெல்லாம் கூட திரு.சிவாஜி கணேசன் அவர்களை நான் தாக்குவதாக கற்பனை செய்து கொள்வார். சரி போகட்டும்.
ஊழலுக்கு வக்காலத்து என்ற தலைப்பில் நான் தெரிவித்த சில கருத்துக்களுக்கு சால்ஜாப்பாக இதை கருணாநிதி சொன்னார் என்று கூறி நான் அற்ப சந்தோஷம் அடைவதாக தெரிவித்திருக்கிறார். உங்கள் நேர்மை குறித்தும் கேள்வி எழுப்புகிறார். நானாவது சால்ஜாப்பாக சொன்னேன் என்றே வைத்துக் கொள்வோம். ஆனால், இந்த நேர்மையின் மறுவடிவம் மற்றவர்கள் கூறியதாகக் கூட இல்லாமல் இரண்டு நாட்களுக்கு முன் புரட்சித் தலைவரை தானே நேரடியாக தாக்கி அற்பத்திலும் அற்பமான மகிழ்ச்சி அடைந்திருக்கிறாரே. 330ம் பக்கம் திரு.சிவாஜிகணேசனின் படங்கள் பற்றிய நினைவலைகள் தொடரில் , மதுரையில் நடந்த திமுக மாநாட்டில் தலைவர் பேசியதை ‘எம்.ஜி.ஆர். ஊழலுக்கு வக்காலத்து வாங்கினார்’ என்று குறிப்பிட்டுள்ளார். ‘எம்.ஜி.ஆர். பற்றி கருணாநிதிதான் சொன்னார், x,y,z சொன்னார் என்று எங்களாலும் எழுத முடியும். ஆனால், நாங்கள் அப்படி செய்ய மாட்டோம்’ என்று கூறியிருக்கிறார். நிச்சயமாக அந்த நீதி நாயகம் அவர்கள் அப்படி செய்ய மாட்டார்தான். ஏனென்றால் மற்றவர்கள் கூறினார்கள் என்று எழுதாமல் இவரே எழுதி விடுகிறாரே. அதற்கு பதிலாகத்தான் நான் ‘ஊழலுக்கு வக்காலத்து’ என்ற தலைப்பிலேயே எனது கருத்தை பதிவிட்டேன்.
ஜனநாயகத்தில் யாரையும் எழுதாதே என்று யாரும் தடுக்க கூடாது. முடியவும் முடியாது. அந்த வகையில் அவர்களை நாம் தடுக்க முடியாது. நடந்த உண்மைகளை வரலாற்று சம்பவங்களைத்தான் சொன்னேன் என்று அவர்கள் கூறினால், அதே ஜனநாயக அடிப்படையில் வரலாற்று சம்பவங்களை நடந்த உண்மைகளை சொல்லும் உரிமை நமக்கும் உண்டே.
உங்களுக்கு ஒரு உத்தரவாதம் அளிக்கிறேன். நானாக திரு.சிவாஜி கணேசன் அவர்களை விமர்சித்தது இல்லை. இனி விமர்சிக்கவும் மாட்டேன். அதே நேரம், வரலாற்று உண்மைகள் என்ற பெயரில் தலைவரின் பெயருக்கு களங்கம் கற்பிக்கப்படுமானால், நானும் வரலாற்று உண்மைகளை எழுதுவேன் என்பதை பணிவன்போடு தெரிவித்துக் கொள்கிறேன் திரு.............. யுகேஷ்பாபு. நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
-