அன்பு நண்பர் பம்மலார் அவர்களுக்கு,
என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
Printable View
அன்பு நண்பர் பம்மலார் அவர்களுக்கு,
என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
Dear Pammalar Sir,
May your birthday be filled with many happy hours and your life with many happy birthdays. HAPPY BIRTHDAY !!
Anand
சுகாராம்,
நாங்கள் திரைப்படங்களை ஆய்வு செய்து quality பற்றி பேசி கொண்டிருக்கிறோம். மற்ற விஷயங்களை பற்றி தவிர்க்கிறோம். உங்கள் போக்கை நீங்கள் மாற்றி கொள்ளாவிட்டால் இரு திரிகளுக்கும் சிண்டு முடிக்கும் வேலையைதான் செய்வீர்கள்.
நவராத்திரி கருப்பு வெள்ளை படம் 6 திரையரங்குகளில் நூறு நாள் கண்டது. ஆனால் நீங்கள் குறிப்பிடும் உங்களது நூறு நாள் படமோ வண்ணத்தில் வெளியாகி மூன்றே திரையரங்குகளில்தான் நூறு நாள் கண்டது.(அதுவும் சென்னையில் ஒன்று கூட இல்லை) அப்புறம் ஏன் பொய்யான தகவல்களை கொடுக்கிறீர்கள்? நாங்கள் உங்களை குறிப்பிட்டு எதுவம் தவறாக எழுதாத போது,தாங்கள் இரு திரிகளின் ஒற்றுமைக்கு ,நல்லிணக்கத்திற்கு உலை வைக்கிறீர்கள். உங்களுக்கு தெரிந்தால்,ஆவணத்துடன் எழுதுங்கள்.இல்லையேல் அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று gossip பாணியில் எழுதி ,நம்பகத்தன்மைக்கு உலை வைக்காதீர்கள்.
உங்களுக்கு பொன்னியின் செல்வன் சாண்டில்யன் எழுதியாக சொன்னது யார்? விளக்குவீர்களா?
நண்பர்கள் ராகவேந்திரர் சார் அவர்களுக்கும் கோபால் சார் அவர்களுக்கும் நன்றி
நடிகர் திலகம் என்ற நடிப்பு க் கடலில் தோன்றிய அலைகள் எத்தனை எத்தனை. காதல்,ரெளத்திரம்,சோகம், உற்சாகம், இளமைத் துள்ளல், மிகச் சிறந்த நகைச்சுவை,வீரம், பாத்திரத்திற்கேற்ற வித்தியாச நடை - ஒவ்வொன்றுக்கும் நிறைய திரைப்படங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.. இழையின் ஓட்டத்தின் தொடர்ச்சியாகவே என் எண்ண ஓட்டத்தை எழுதலாம் என நினைக்கிறேன்..மன்னிக்க.. எழுதிப் பழகலாம் என நினைக்கிறேன்..என்ன சொல்கிறீர்கள்..
சுப்பு,
உனக்கு யாரையாவது திட்ட வேண்டும் என்ற அவசரம். உன் பதிவை எடுத்து விடு. overall theme என்று குறிப்பிட படுவது பொத்தாம் பொதுவாக எல்லா படத்திலும் ஒரே பல்லவி பாடுவது. ஏழை,தாய் etc . சிவாஜி படங்களில் பாத்திரங்களும், வித்யாசமான கதை போக்கும் முன்னிலை படுத்த படுவதாக சொல்லியிருக்கிறார்கள். இதில் என்ன குறை கண்டு கன்னாபின்னாவென்று எழுதுகிறாய்?
இது ஒரு நிறையாகத்தானே சொல்ல பட்டிருக்கிறது?
திட்டுவது என்று முன்தீர்மானம் கொண்டு குறை காணுவது போலுள்ளது.
(Overall theme means repeatedly insisting on only one and same theme in all the movies.)
நடிகர் திலகத்தின் நல்லிதயங்கள் அனைவருக்கும் அன்பு கலந்த வணக்கங்கள் !
http://i1110.photobucket.com/albums/...53b734ff30.jpg
ஒவ்வொருவரின் அதிவித்தியாசமான பங்களிப்புகளால் thread jet வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில், நடிகர் திலகத்தின் சிறுதொண்டனான இந்த எளியவனுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை இதயபூர்வமாக நல்கிய Intellectual Thilagam (சண்டியர்) கோ.கி. அடிகளார், இனியவர் esvee சார், சித்தூர் டு சென்னை வாசுதேவன் சார், திருச்சி ராம்ஜி, சாணக்கியர் (அசகாய சூரர்) ரசிகவேந்தர், கன்பத் சார், Action Hero சுப்பு சார், சகலகலா விற்பன்னர் (அப்பாவி & அம்ப்பயர்) நெய்வேலியார், மூத்த ரசிகர் சுப்ரமணியம் ராமஜெயம் சார், தொண்டுத் திலகம் சந்திரசேகரன் சார், ஆல்-இன்-ஆல் ஐட்டம் ரைட்டர் mr_karthik, திரு. செந்தில், கிருஷ்ணாஜி, அன்பு இளவல் ராகுல்ராம், சிவன் சார், கவிஞர் பொன். ரவிச்சந்திரன், ஜேயார் சார், ஆனந்த் (anm) சார் ஆகியோர் அனைவருக்கும் மற்றும் அலைபேசியில் வாழ்த்துக்களைத் தெரிவித்த சாந்தஸ்வரூபி (நன்முத்து) முரளி சார், திருச்சி அண்ணாதுரை சார், கோவை டாக்டர் ரமேஷ்பாபு, நடிகர் திலகத்தின் பக்தை சகோதரி கிரிஜா, புதுதில்லி சிவநாத் சார், கோவில்பட்டி சிவசுப்பிரமணி சார், நெய்வேலி வெங்கடேசன் சார், சென்னை 'சாந்தி' ராமஜெயம் சார், அம்பத்தூர் சுப்பிரமணி சார், மதுரை சந்திரசேகர் சார் ஆகியோருக்கும் எனது இதயம் நிறைந்த ஆத்மார்த்தமான நன்றிகள்..!!!
பாசப்பெருக்கில்,
பம்மலார்.
சின்னக் கண்ணன்
தங்கள் எழுத்தைப் படிக்க ஆவலாயுள்ளோம்.
வழங்குங்கள் தங்கள் பங்களிப்பை
22.09.2013 தேதியிட்ட இன்றைய தினமலர் நாளிதழுடன் வெளிவந்துள்ள வாரமலர் புத்தகத்தில் வியட்நாம் வீடு சுந்தரம் அவர்கள் நடிகர் திலகத்தைப் பற்றி எழுதியுள்ள கட்டுரை இடம் பெற்றுள்ளது. வாங்கிப் படிக்கவும்.
இதனுடைய இணையப் பக்கத்திற்கான இணைப்பும் கீழே தரப்படுகிறது
http://www.dinamalar.com/supplementa...d=17249&ncat=2
மறக்காமல் தங்களுடைய கருத்தையும் பதிவு செய்யுங்கள்
தமிழகத்தின் முன்னணி வார இதழின் தீபாவளி மலரில் நடிகர் திலகத்தைப் பற்றியும் அவருடைய படங்களைப் பற்றியும், அவரைப் பல படங்கள் இயக்கிய இயக்குநர் ஒருவர் எழுதும் கட்டுரை வெளி வர உள்ளது. விவரம் விரைவில்