கேட்டவைகளில் பிடித்தது -7
ஆண்டவன் படைச்சான் - படம் : நிச்சய தாம்பூலம்
ஆண்டவன் படைச்சான் - என்கிட்டே கொடுத்தான்
அனுபவி ராஜா என்று அனுப்பி வைத்தான் - என்னை
அனுபவி ராஜா என்று அனுப்பி வைத்தான்
உலகம் எந்தன் கைகளிலே - உருளும் பணமும் பைகளிலே
யோசிச்சு பார்த்தால் நானே ராஜா - வாலிப பருவம் கிடைப்பது லேசா ?
உல்லாசம் , சல்லாபம் இங்கே உண்டூஊஊஊஊஊ
ஆண்டவன் படைச்சான் - என்கிட்டே கொடுத்தான்
அனுபவி ராஜா என்று அனுப்பி வைத்தான் - என்னை
அனுபவி ராஜா என்று அனுப்பி வைத்தான்
நடந்ததை எண்ணி கவலை பட்டால் , அவன் மடையன் -ஆஹா
நடப்பதை எண்ணி வருத்தப்பட்டால் , அவன் மூடன் - போடா
வருவது வரட்டும் என்பவனே நல்ல ரசிகன் - அவன் இவனே
இவன் அவனே !- அட இன்று இல்லை நாளை இல்லை
இரவில்லை , பகலில்லை , இளமையும் , முதுமையும் முடிவுமில்லை - ஓஓஹோ
ஆண்டவன் படைச்சான் - என்கிட்டே கொடுத்தான்
அனுபவி ராஜா என்று அனுப்பி வைத்தான் - என்னை
அனுபவி ராஜா என்று அனுப்பி வைத்தான்
பணங்களை கேட்டு அதை பதுக்கி வைத்தால் அது மடமை -ஆஹா
பகவான் படைத்த பணமெல்லாம் பொது உடைமை - கையில்
கிடைப்பதை வீசி ரசிப்பதுதான் என் கடமை - அந்த பெருமை
எங்கள் உரிமை
நல்ல வெள்ளி துட்டு அள்ளி விட்டு , துள்ளி துள்ளி ஆட விட்டு
சிரிப்பதும் மகிழ்வதும் தனி மகிமை
ஆண்டவன் படைச்சான் - என்கிட்டே கொடுத்தான்
அனுபவி ராஜா என்று அனுப்பி வைத்தான் - என்னை
அனுபவி ராஜா என்று அனுப்பி வைத்தான்
உலகம் எந்தன் கைகளிலே - உருளும் பணமும் பைகளிலே
யோசிச்சு பார்த்தால் நானே ராஜா - வாலிப பருவம் கிடைப்பது லேசா ?
நடந்ததை எண்ணி கவலை பட்டால் , அவன் மடையன் -ஆஹா
நடப்பதை எண்ணி வருத்தப்பட்டால் , அவன் மூடன் - போடா
வருவது வரட்டும் என்பவனே நல்ல ரசிகன்
என்ன அருமையான வரிகள் - போடா வருவது வரட்டும் - என்று எவ்வளவு பேர்களால் சொல்ல முடியும் ?
நடந்ததை எண்ணி கவலை படுகிறோம் ; நடப்பதை எண்ணி வருத்தபடுகிறோம் ; மகிழ்ச்சி நம்மை தேடி வரும் போது நாம் இந்த உலகில் இருப்பதில்லை - பெரும் பாலும் மடையனாகவும் , மூடனாகவுமே நம் வாழ்க்கை ஓடி விடுகின்றது - இந்த அருமையான வரிகள் நம்மை மாற்றட்டும் !!!
http://youtu.be/CMFAK9GOv-c
தொடரும்