http://i58.tinypic.com/30v0tnk.jpg
Printable View
மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு மிகவும் பெருமையும்
இனிய நினைவுகள் நிறைந்த நாள் என்றால் அது
30.6.1977 அன்று நமது இதய தெய்வம் மக்கள் திலகம்
முதல் முறையாக தமிழக முதல்வராக பதவி ஏற்ற அந்த பொன்னான நாள் .
1936ல் ஒரு சிறிய நடிகராக அறிமுகமாகி
1947 வரை கடுமையான போராட்டத்துக்கு பின் கதாநாயகனாக
உயர்ந்து 1950ல் புகழ் பெற்ற நடிகராக காங்கிரஸ் இயக்கத்தில் அங்கத்தினாராக இருந்து பின்னர் 1953ல் திமுகவில் இணைந்து
1954ல் நாடறிந்த நாயகனாக வளம் வந்து பட்டி தொட்டி எங்கும் திமுக கட்சியின் கொள்கைகளை மேடைதோறும் முழங்கியும்
தன்னுடைய படங்களில் திமுகவின் கொள்கைகளையும் ,சின்னத்தையும் இடம் பெற செய்து 1957- 1962 தேர்தல்களில் தமிழக சட்டசபைக்கு முதல் முறையாக உறுப்பினர்களை வெற்றி பெற உழைத்தவர் நடிகர் எம்ஜியார் .
1958ல் வந்த மக்கள் திலகத்தின் ''நாடோடி மன்னன்'' படம்
தமிழ் திரை உலகில் ஒரு மாபெரும் புரட்சி செய்தது .
மக்கள் திலகத்தின் அரசியல் செல்வாக்கும் , திரைப்பட புகழும்
1960ல் மேலும் உச்சத்திற்கு சென்ற நிலையில் 1967ல் துப்பாக்கி மூலம் உயிருக்கு உலை வைத்த நேரத்தில் அவரின் தர்மம் தலை காத்தது .குரலில் பாதிப்பு ஏற்பட்டாலும்
கோடிக்கணக்கான மக்கள் இதயங்களிலும் , ரசிகர்களின் உள்ளங்களிலும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை . மாறாக அவருடைய புகழும் -இளமையும் நாளுக்கு நாள் மெருகேறியது
1972ல் மக்கள் திலகத்திற்கு சத்திய சோதனை ஏற்பட்டது .
சோதனையில் மக்களின் - ரசிகர்களின் ஆதரவை பெற்று
அண்ணாதிமுக நிறுவனாராக ஒருபக்கம் திரை உலக சக்ரவர்த்தியாக மறுபக்கம் என்று இரட்டை குதிரை சவாரியில்
பிரமாண்ட வெற்றி கண்ட ஒரே உலக புகழ் நடிகர் எம்ஜியார் .
நடிகர் கட்சி
100 நாள் கட்சி
என்றெல்லாம் தரமற்ற முறையில் மிகவும் கேவலமாகவும்
மேடையிலும் , பத்திரிகைகளிலும் எம்ஜியாரை பற்றி
விமர்சித்தனர் .
உண்மையான மக்கள் திலகத்தின் ரத்தத்தின் ரத்தங்களும்
உலகமெங்கும் வாழ்ந்து வந்த மக்கள் திலகத்தின் ரசிகர்களின்
அமோக ஆதரவும் . கடுமையான உழைப்பும் , மக்களின் பேராதரவும் 30.6.1977 அன்று தமிழக முதல்வராக அமர்த்தி அழகு பார்த்த இனிய நன்னாள் மறக்க முடியுமா ?
எம்ஜியார் ரசிகர்களின் கனவு
எம்ஜியார் ரசிகர்களின் உழைப்பு
நனவான நாள் - வெற்றி திரு நாள்
எங்கும் வெற்றி ... எதிலும் வெற்றி
வெற்றி மேல் வெற்றி
மக்கள் திலகத்தின் கோடிக்கணக்கான ரசிகர்கள் இன்றும்
எண்ணி மகிழும் திரு நாள் .
1972ல் அதிமுக கட்சியினை துவங்கி 1977ல் அதிமுகஆட்சி அரியணை ஏறியது உலக வரலாற்று சாதனை .
ஒரு தனி மனிதரின் அயராத உழைப்பு - மக்களுக்கு சேவை
பொன்மனம் - ஏழைகளுக்கு அருளிய கொடைகள்
நல்ல எண்ணம் -இவை எல்லாம்தான் நம் மக்கள் திலகத்திற்கு
மக்கள் தந்த பரிசு - 1977 தமிழக முதல்வர் எம்ஜியார் .
மக்கள் திலகம் அவர்கள் தேர்தல் முடிவு வெளியான நேரத்தில் மீனவநண்பன் - மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்
படங்களில் நடித்து முடித்து வந்தார் .
மக்கள் திலகத்தின் ''இன்றுபோல் என்றும் வாழக '' திரைப்படம்
தமிழகமெங்கும் 50வது நாளை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது .
வரலாற்று உலக சாதனை நாயகனின்
ஒரு புதிய வரலாறு துவக்க நாள்
30.6.1977
மக்கள் வெள்ளத்தில் அண்ணாசாலை மட்டுமல்ல ....
தமிழகமே சென்னை நகருக்கு படை எடுத்தது போல்
எல்லா சாலைகளிலும் மக்கள் வெள்ளம்
தென்கோடி கன்னியாகுமரி ... நெல்லை .. மதுரை
ராமநாதபுரம் --
திருச்சி - தஞ்சை -நாகை
வட -தென் ஆற்காடு
கோவை - சேலம் - தர்மபுரி
செங்கை -சென்னை பகுதியினை சேர்ந்த மக்கள் -தொண்டர்கள் - ரசிகர்கள்
ஆந்திரம் - கர்நாடகம் - மகாராஷ்டிரா - டெல்லி -அந்தமான்
புதுவை -கேரளா போன்ற மாநிலங்களிலி ருந்தும்
இலங்கை - சிங்கப்பூர் - மலேசியா போன்ற வெளிநாடுகளிலிருந்தும் மக்கள் திலகத்தின் ரசிகர்கள்
சென்னை வந்திருந்து மக்கள் திலகத்தின் பதவி ஏற்பு நிகழ்ச்சியினை கண்டு களித்த திருநாள் .
''உலக திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக ஒரு நடிகரின் அரசியல் மக்கள் செல்வாக்கு எந்த அளவிற்கு இருந்தது என்று அன்றையதினம் சென்னை நகரில் திரண்ட
லட்சக்கணக்கான மக்களே சாட்சி '' என்று வெளிநாட்டு பத்திரிகைகளும் - இந்திய பத்திரிகைகளையும் பாராட்டினார்கள் .
இந்திய திரைப்பட உலக நடிக - நடிகைகள் - எல்லோரும்
மக்கள் திலகத்திற்கு வாழ்த்து தெரிவித்தார்கள் .
MGR with Prime Minister Indira Gandhi after the Emergency was lifted in 1977
Once he became Chief Minister of Tamil Nadu, he placed great emphasis on social development, especially education.
One of his most successful policies was the introduction of the "Mid-day Meal Scheme" introduced by the popular Congress Chief Minister and Kingmaker K Kamaraj to a nutritious Mid-day Meal Scheme in the Government-run and aided schools in Tamil Nadu, which encouraged underprivileged children to attend schools. This scheme was at a cost of Rs.100 crore and was imposed in 1982.
He also introduced Women's Special buses. He introduced Liquor ban in the state and Preservation of old temples and historical monuments, ultimately increasing the state's tourist income. He set up a free school for the Cinema Technicians children in Kodambakkam called MGR Primary & Higher Secondary School which provided Free Mid-Day meals in the 1950s.
He led the ADMK to victory in the 1984 assembly elections despite not taking part in the campaigning. At that time he was undergoing medical treatment in America and his images were broadcast in Tamil Nadu through cinema halls. This was an effective campaign tactic and ADMK won the elections, indicating the depth of his popular support.
He won the election in a double landslide victory in 1984.He still holds the record of being the chief minister with the highest consistent longevity of more than a decade .
Courtesy - net
சமீபத்தில் "நாடாளுமன்றத்தில் வைகோ"என்ற நூலைப் படித்தபோது,
முதலமைச்சராக இருந்தபடி எம்.ஜி.ஆர்.எடுத்த ஒரு முக்கிய நிலைப்பாட்டை நூலாசிரியர் திரு.மு.செந்திலதிபன் மிக செறிவாகப்
பதிவு செய்திருப்பதைப் பார்த்தேன்.
இராமேஸ்வரத்திலிருந்து ஈழத்திற்கு ஆயிரம் இளைஞர்களுடன் படகில்
செல்லப்போவதாய் திரு.பழ.நெடுமாறன் அறிவித்தார். அவர் புறப்படும்
இடத்தில் கைதாவார் என்றும் இராமேஸ்வரத்தில் கைதாவார் என்றும்
வதந்திகள் உலவின. இராமேஸ்வரம் கடற்கரைக்கு நெடுமாறன் குழுவினர்
சென்று நின்றபோது கரையில் ஒரு படகைக்கூட காணோம். போராட்டக்
குழுவினர் திரும்ப நேர்ந்தது.
இதுகுறித்து சட்டமன்றத்தில் விவாதம் எழுந்தபோது எம்.ஜி.ஆர் தந்த
பதில் இது: " அன்னை இந்திராகாந்திக்கு ஓர் ஆபத்து நேர்ந்தபோது,
அவர் உயிரைக் காத்தவர் மாவீரர் நெடுமாறன்.ஆனால் கடலில் போகும்
வேளையில் அவர் உயிருக்குப் பாதுகாப்பு உண்டா?எதிரிகள் வந்து சுட்டால் அவரால் தன்னை தற்காத்துக் கொள்ள முடியுமா? ஒரு நெடுமாறனை இழந்தால் இன்னொரு நெடுமாறனை உருவாக்க முடியுமா?
அதனால்தான் படகுகளை அப்புறப்படுத்தச் சொன்னேன்.
ஆனால் மக்கள் நடுவே இனவுணர்வை மேம்படுத்த அவர் செய்து வரும்
பிரச்சாரம் விலைமதிப்பில்லாதது.ஒரு முதலமைச்சராக இருப்பதால் நான்
செய்ய முடியாத பிரச்சாரத்தை அவர் செய்கிறார். எனவே அவரைக் கைது
செய்ய வேண்டாமென்று சொன்னேன்"என்றாராம் எம்.ஜி.ஆர்.
படகோட்டிகளை அப்புறப்படுத்தியதிலும் அந்தப் படகோட்டி
வித்தியாசமாகத்தான் சிந்தித்திருக்கிறார்.
தெய்வமாக்கிய பாடல்
எம்.ஜி.ஆரின் வேறு பல திரைப்பாடல்களில் உள்ளதைப் போன்ற நேரடியான அரசியல் எதுவும் இல்லாத அந்தப் பாடல் எம்.ஜி.ஆரைப் பற்றிக் கட்டமைத்த பிம்பம்தான் அவரை மற்றவர்களோடு ஒப்பிடப்பட முடியாதவராக மாற்றியது. 1984இல் எம்.ஜி.ஆர்., உடல் நலம் பாதிக்கப்பட்டு அமெரிக்க மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த தருணத்தில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அவரது கட்சிக்கு மகத்தான வெற்றியைப் பெற்றுத் தந்த பாடல் அது. கடவுள் நம்பிக்கையற்ற, பகுத்தறிவுக் கொள்கையில் தீவிரமான நம்பிக்கை கொண்ட ஒரு கட்சியின் முக்கியமான தலைவர்களில் ஒருவரான எம்.ஜி.ஆரை தெய்வமாக்கியது.
http://i62.tinypic.com/14n1hs8.jpg
உள்ளமதில் உள்ளவரை அள்ளித் தரும் நல்லவரை
விண்ணுலகம் வா என்றால் மண்ணுலகம் என்னாகும்?
உன்னுடனே வருகின்றேன் என்னுயிரைத் தருகின்றேன்
மன்னனுயிர் போகாமல் இறைவா நீ ஆணையிடு
படுக்கையில் கிடத்தப்பட்டிருக்கும் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்தில் நேர்த்தியற்ற முறையில் உருவாக்கப்பட்ட முருகனின் உருவ பொம்மை ஒன்றின் முன்னால் நின்று உள்ளம் உருகும் குரலில் சௌகார் ஜானகி பாடுவதை இப்போது கேட்டாலும் கண்கள் சுரக்கும். சௌகாரின் குளமான கண்களில் நிழலாடும் சோகத்தையும் எம்.ஜி.ஆரின் மார்பின் மீது முகம் புதைத்து அவர் பரிதவிப்பதையும் கவனியுங்கள். அது தமிழக மக்களின் சோகம், அவர்களது பரிதவிப்பு. அந்தப் பாடலில் இடம் பெற்றிருக்கும் மற்ற சில வரிகளைக் கவனியுங்கள். அவர் தெய்வமாக்கப்பட்டிருப்பது தெரியும்.
Courtesy
the hindu
http://i60.tinypic.com/ehay48.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
மக்கள் திலகத்தின் நான் ஏன் பிறந்தேன் முதல் காட்சி பார்த்த அனுபவம் .
9.6.1972
அண்ணா சாலையில் இருந்த குளோப் திரை அரங்கில் முதல் நாள் மேட்னி காட்சி பார்க்கும் வாய்ப்பு
கிடைத்தது .ரசிகர்கள் வெள்ளத்தில் ஆரவாரங்களுடன் படம் துவங்கிய முதல் காட்சி முதல் இறுதி காட்சி வரை ரசித்து பார்த்தேன் .
அறிமுக காட்சியில் தாய்குலத்திற்கு பெருமை சேர்த்த விதம்
நான் ஏன் பிறந்தேன் பாடலில் சமூக சீர்திருத்த கருத்துக்கள்
தன்னுடைய தாய் - மனைவி - உடன் பிறந்தோர் செய்யும் கடின வேலைகளை பார்த்து மக்கள் திலகம் கண் கலங்கும் காட்சிகள்
அனைவரையும் அழைத்து உரிமையுடன் பேசுமிடம்
வீட்டை விற்கும் காட்சியில் காட்டும் நேர்மை .தம்பி தங்கைகளுக்கு அறிவுரை பாடல் .
வேலை தேடி சென்னையில் அடையும் ஏமாற்றங்கள் . நண்பர் கோபால் மூலம் மேஜரை சந்திக்குமிடம் .
அழுபவர்களை சிரிக்க வைக்க வேண்டும் . சிரிப்பவர்களை சிந்திக்க வைக்க வேண்டும் என்று
மக்கள் திலகம் கூறுமிடத்தில் பலத்த கைதட்டல்கள் .
காஞ்சனா சந்திப்பில் இடம் பெற்றமக்கள் திலகத்தின் நான் படும் பாடல் ....வர்ணிக்க வார்த்தைகள் இல்லை . அத்தனை அற்புதம் .
என்னம்மா சின்ன பொண்ணு - பாடலில் மக்கள் திலகத்தின் நடன அசைவுகள் - நடிப்பு பிரமாதம் .
தன்னுடைய தம்பி தங்கைகள் சோகத்துடன் பாடும் பாடலை கேட்டு சந்தர்ப்ப சூழ் நிலையால் உடனே அவர்களை சந்திக்க முடியாத நிலையில் அவர் காட்டும் முக பாவங்கள் அருமை .
கே .ஆர் .விஜயாவுடன் படும் உனது விழியில் எனது பார்வை ......காவிய பாடல் .
படம் மக்கள் திலகத்தின் கச்சிதமான நடிப்பு ரசிகர்களுக்கு விருந்து .இரண்டு சண்டை காட்சிகள் அளவோடு இருந்தது .
மக்கள் திலகத்திற்கு சிறந்த நடிகருக்கான விருது இந்த படத்திற்கு கிடைத்திருக்க வேண்டும் .
மிகபெரிய வெற்றி அடைந்திருக்க வேண்டிய படம் .ரசிகர்களால் சுமாராக ஓடிய வெற்றி படம் .
42 ஆண்டுகள் கடந்தாலும் நான் ஏன் பிறந்தேன் படம் - இன்று பார்த்தாலும் மகிழ்ச்சி வெள்ளம் பொங்குகிறது என்றால் அது மக்கள் திலகத்தின் இயல்பான நடிப்பு - இனிமையான பாடல்கள்
என்றால் அது மிகை அல்ல .குடும்ப கதை கொண்ட படங்களிலும் மக்கள் திலகம் ஜொலித்தார் .