-
Happy Birthday Madras
சென்னையின் சில சுவையான முதல்கள் இங்கே :
* இந்தியாவிலேயே நகர எல்லைக்குள் தேசிய பூங்கா இருக்கும் ஒரே ஊர் சென்னை தான். கிண்டி தேசிய பூங்கா தான் அந்த பூங்கா
*இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் ஆங்கிலேயே ரெஜிமென்ட் சென்னையில் எழுந்தது தான். இப்பொழுது இருக்கும் ராணுவத்தின் ரெஜிமென்ட்களில் மூத்த ரெஜிமென்ட் மெட்ராஸ் ரெஜிமன்ட் தான்.
* இந்தியாவின் முதல் ரேடியோ சேவை சென்னையில் எழுந்தது தான். பிரசிடன்சி ரேடியோ க்ளப் என்கிற கிருஷ்ணஸ்வாமி செட்டியால் துவங்கப்பட்ட இந்த ரேடியோ சர்வீஸ் துவங்கிய ஆறு ஆண்டுகளுக்கு பிறகு தான் அரசே ரேடியோ சேவையை துவங்கியது. இந்த வருடத்தோடு அந்த ரேடியோ சேவை ஆரம்பித்து தொன்னூறு வருடங்கள் ஆகின்றன.
* இந்தியாவின் முதல் வங்கி ஆளுனர் க்ரிபோர்ட் அவர்களால் 1682 இல் துவங்கப்பட்ட மெட்ராஸ் வங்கி தான்.
* ஆசியாவின் முதல் கண் மருத்துவமனை எழுந்ததும் சென்னையில் தான். Madras Eye Infirmary என்று பெயர்கொண்ட அது உருவான வருடம் 1819 !
* இந்தியாவின் முதல் நோக்ககம் எழுந்ததும் சென்னையில் தான். நுங்கம்பாக்கத்தில் இருநூற்றி இருபது ஆண்டுகளுக்கு முன் எழுந்தது அது. இந்தியாவின் முதல் திரிகோண அளவையியல் நடைபெற்றது பரங்கி மலையில் !
* இந்தியாவிலேயே முதன் முதலில் மதிய உணவுத்திட்டத்தை [NOT Nutritious Meal scheme] கொண்டு வந்தது மெட்ராஸ் மாநகராட்சி தான். ( கொண்டு வந்தவர் அப்போது மேயராக இருந்த ' வெள்ளுடை வேந்தர் ' வள்ளல் தியாகராயர் )
* இந்தியாவிலேயே கோயில் நிலங்களை நிர்வகிக்கும் அறநிலையத்துறை உருவானதும் விடுதலைக்கு முந்திய நீதி கட்சியின் ஆட்சி காலத்தில் தான் .
* இந்தியாவின் மிக பழமையான பொறியியல் கல்விக்கூடம் கிண்டி பொறியியல் கல்லூரி தான். இந்தியாவில் மெக்கானிகல்,எலெக்ட்ரிகல் ஆகிய துறைகளில் பொறியியல் பாடத்தை முதன் முதலில் ஆரம்பித்தது இங்கே தான்.
* இந்தியாவின் முதல் கார்பரேசன் சென்னை கார்பரேசன் தான். உலகின் இரண்டாவது பழமையான கார்பரேசன் அது தான். இது எழ காரணம் ரிப்பன். அவர் பெயரால் எழுந்தது தான் ரிப்பன் கட்டிடம்.
இன்றொடு சென்னைக்கு வயசு 375 !
- Vikatan EMagazine
Thanks to Mr. Chandran Veerasamy, FB
-
" நாடோடி மன்னன் " வெற்றிக் காவியம் !
22-08-1958 அன்று மக்கள் திலகத்தின் வெற்றிக் காவியம் "நாடோடி மன்னன்" வெளியான போது எனக்கு வயது 2. எனவே முதல் வெளியீட்டில் பார்க்க முடியாத துர்பாக்கியசாலி ஆகி விட்டேன்.
இருப்பினும், 1969-70 களில் இத்திரைக்காவியத்தை சென்னை அரங்கம் ஒன்றில், எனது வகுப்பு தோழர்கள் திரு. ரங்கராஜன், திரு. பார்த்தசாரதி, திரு. ஜெயக்குமார் ஆகியோருடன் ( இந்து உயர்நிலைப்பள்ளியில் படித்த நாங்கள் அனைவரும் மக்கள் திலகத்தின் அபிமானிகள்) ஒரு முறையும், மற்றும், சென்னை ராயபேட்டை முகம்மது உசேன் தெருவில், எனது வீட்டருகே குடியிருந்த, எனது நண்பர், நடிகர் சிவாஜி கணேசன் அபிமானி திரு. நடராஜன் ( நான் படித்து வந்த அதே வகுப்பு - ஆனால் இவர் கெல்லெட் உயர்நிலைப்பள்ளியில் படித்துக் கொண்டிருந்தவர்) என்பவருடனும், மறு முறை கண்டு களித்தேன். அதற்கு பிறகு இந்த காவியத்தை பல முறை கண்டு களித்திருந்தாலும், நானும் என் மனைவியும், எங்களுக்கு திருமணம் ஆன மறு நாளே ஆலந்தூர் விக்டோரியா அரங்கில் பார்த்தது தான் மறக்க முடியாதது. நாங்கள் இருவரும் இணைந்து பார்த்த முதல் காவியம் புண்ணியவான் மக்கள் திலகத்தின் "நாடோடி மன்னன்" என்பது நாங்கள் செய்த பாக்கியம்.
இந்த காவியத்தை பற்றிய கருத்து, மக்கள் திலகத்தின் பக்தனாகிய நான் கூறுவதை விட, அன்றைய தினம் என்னுடன் இந்த மகத்தான காவியத்தை பார்த்து ரசித்த நடிகர் சிவாஜி கணேசன் அபிமானி திரு. நடராஜன் அவர்கள் தெரிவித்த கருத்தினை பதிவிட்டால் சற்று வித்தியாசமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
இனி அவர் (நடிகர் சிவாஜி கணேசன் அபிமானி திரு. நடராஜன்) கூறுவதை பார்ப்போம் :
உங்கள் எம்.ஜி. ஆர் நாடோடியாக தோன்றும் ஆரம்பக் காட்சியே அசத்தி விட்டார். . தமிழுக்கு முக்கியத்துவமளித்து " செந்தமிழே வணக்கம் " என்ற டைட்டில் பாடல் நல்ல காட்சியமைப்பு. மன்னனாக வரும் எம். ஜி. ஆர். ஸ்டைல், வித்தியாசமாகவும், ரசிக்கும்படியாகவும் உள்ளது.
தூங்காதே தம்பி தூங்காதே, சும்மா கிடந்த நிலத்தை கொத்தி போன்ற தத்துவப் பாடல்களும், கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே என்ற காதல் பாடலும் இன்னும் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது- இசையமைப்பு அற்புதம்.
நச்சென இருந்த கவிஞர் கண்ணதாசனின் வசனங்கள் மறக்க முடியாதவை.
ஒரு புதுமுக நடிகையான சரோஜாதேவியை அறிமுகம் செய்யும் காட்சி அதுவும் தைரியாமாக வண்ணத்தில் அறிமுகம் செய்தது புதுமையாக இருந்தது .
சண்டைக்காட்சிகள் வெகு அற்புதம். அதுவும் இறுதி காட்சி சண்டை பிரமிக்கும்படி இருந்தது.
சந்திரபாபுவின் நகைச்சுவை காட்சியும் சோடை போகவில்லை.
நீண்ட கதையை நேர்த்தியாக தொய்வில்லாமல் கொண்டு போய் இருக்கிறார் உங்கள் எம். ஜி. ஆர். திரையுலக நுணுக்கங்களை முழுமையாக அறிந்து வைத்திருப்பதன் காரணமாக பல வெற்றிப்படங்களை உங்கள் எம். ஜி. யாரால் அளிக்க முடிந்தது.
1958லேயே இந்த மாதிரி பிரம்மாண்டமான படத்தை அளித்துள்ள உங்கள் எம்.ஜி. ஆர். உண்மையிலேயே, மிகவும் பாராட்டுக்குரியவர்.
உங்கள் எம். ஜி. ஆர். சாமர்த்தியமானவர் - எப்படி எடுத்தால், மக்கள் விரும்புவார்கள் என்று நன்கு தெரிந்து வைத்துள்ளார்.
திரையுலக நுணுக்கங்களை முழுமையாக அறிந்து வைத்திருப்பதன் காரணமாக பல வெற்றிப்படங்களை அளிக்க முடிந்தது.
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
" நாடோடி மன்னன் " வெற்றிக் காவியத்திலிருந்து ஒரு காட்சி !
http://i62.tinypic.com/5nt6pl.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
" நாடோடி மன்னன் " வெற்றி விழாவில் பேரறிஞர் அண்ணா அவர்கள் மக்கள் திலகத்துக்கு நினைவுப் பரிசு வழங்குகிறார்.
http://i59.tinypic.com/2v3hsic.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
22-08-1958 அன்று வெளிவந்த "நாடோடி மன்னன்" காவியத்தின் ஒரிஜினல் தியேட்டர் பாட்டு புத்தகத்தின் முன் அட்டை தோற்றம் :
http://i59.tinypic.com/2mx2vpv.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
22-08-1958 அன்று வெளிவந்த "நாடோடி மன்னன்" காவியம் - பாட்டு புத்தகத்தின் பின் அட்டை தோற்றம் :
http://i59.tinypic.com/2lu6ey1.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
புரட்சி என்றதும் பயந்து விடாதே, இது ஆளைக் தீர்க்கும் ஆயுதப்புரட்சி அல்ல. அதில் எங்களுக்கு நம்பிக்கையும் இல்லை. ஆனால் நாங்கள் தீயிடுவொம் தீமைக்கு! கொள்ளையடிப்போம் மக்களின் உள்ளங்களை! குவித்து வைத்து அனுபவிப்போம் அறிவு பொருட்களை! கத்தி எடுக்காத ரத்தம் சிந்தாத அறிவுப்புரட்சி!
-
சகோதரி இப்பொழுதாவது என்னை நம்புகிறாயா ?
அண்ணா நான் என்ன இந்த நாடே உங்களை நம்பி தான் இருக்கிறது .
-
சென்னை -375
சென்னை நகருக்கு பெருமை சேர்த்த மக்கள் திலகத்தின் சாதனைகள் .
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் ... என்ற பாடலுக்கு ஏற்ப
தமிழ்
அண்ணா
எம்ஜிஆர்
சென்னை
இந்த மூன்றெழுத்து வார்த்தைகள்- என்றென்றும் நிலைத்திருக்கும் என்பது உண்மை .
http://i47.tinypic.com/t70ayu.jpghttp://i60.tinypic.com/90yp11.jpghttp://i58.tinypic.com/ranor4.jpghttp://i58.tinypic.com/2a6v4lj.jpg
காலங்கள் பல கடந்தாலும் எதிர் காலத்திலும் மக்களால் நினைவு கொள்ளப்படுவார்கள் .
இந்த பெருமை சென்னைக்கு கிடைத்த பொக்கிஷம் .
அண்ணா சாலை
அண்ணா சிலை
அண்ணா நினைவிடம்
எம்ஜிஆர் சிலை
எம்ஜிஆர் நினைவிடம்
எம்ஜிஆர் நினைவு இல்லம்
அண்ணா நூலகம்
சென்னை பிறந்த நாளில் நம் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வோம் .
-
நீங்கள் மாளிகையில் இருந்து மக்களை பார்ககிறிர்கள் நான் மக்களோடு இருந்து மாளிகையை பார்ப்பவன் .