-
ஒரு திரைப்படத்தின் வெற்றி அல்லது சாதனை எது?
அதன் அளவுகோல் எது?
அதிக நாள் ஓடுவதா?
அதிக வசூல் பெறுவதா?
அதிக மக்கள் பார்ப்பதா?
அல்லது
அதிக நாள் ஓட்டுவதா?
அதிக வசூல் பெற்றதாக பொய் வசூல் காட்டுவதா?
அதிக நாள் ஓடியதாக பொய்யான தகவல் தெரிவிப்பதா?
அல்லது குறைந்த நாட்கள் ஓடிய படத்துடன்
கூடிய நாட்கள் ஓடிய படத்தை ஒப்பிட்டு காட்டுவதா?
இதைத்தான் அடுத்தபக்கத்து நண்பர்கள் விரும்புகிறார்கள்
எனவேதான் அந்த ஒப்பீடுகள்.
(ஒரு உதாரணம் இங்கே ரிக்ஷாகாரன் படம்18 ..02..1972ஆம் ஆண்டு
திரையிடப்பட்டது
ரிக்ஷாகாரன் திரையிட்ட அதே அரங்குகளில் 12..04..1972..ஆண்டு
தங்கைக்காக திரையிடப்பட்டது அந்த காலப்பகுதியில்
திரை உலகம் பதத்pரிகையில் ஒருவர் ரிக்ஷாகாரன் 10வது வாரத்தையும் கடந்து
ஓடிக்கொண்டிருப்பதாக எழுதியிருந்தார் தங்கைக்காக திரையிடும்பொழுது ரிக்ஷாகாரன்
முழுமையான 8 வாரங்கள் ஆகவில்லை
அப்படியிருக்க எப்படி 10 வாரத்தை தாண்டி ஓடமுடியும்
அதற்கான பதிலடியை மின்மினி
பத்திரிகைக்கு எழுதி அனுப்பியிருந்தேன் அதில் எனது கடிதம் பிரசுரிக்கப்பட்டது
அது பழைய கதை அதை விடுவோம்
புது கதையை பாருங்கள்
ரிக்ஷாகாரன்..கெப்பிட்டல் 84 நாட்களாம..;வெலிங்டன்..79.. நாட்களாம்
ஒலிக்கிறது உரிமைகுரல் மே மாதட் 2013 பிரசுரித்துள்ளார்கள.;இப்படித்தான் வெற்றி
அல்லது சாதனை காட்டுகிறார்கள)
-
-
ரவி,
உங்கள் எல்லா பதிவையும் படித்து ரசிக்கிறேன்.நீங்கள் நேர்த்தியாக திரியை கொண்டு செல்லும் பாணி பாராட்ட தக்கது.
ரவி கிரண் சூர்யா
நான் உம்மை ரசிக்க எந்த வேடமிட்டு வந்தாலும் சரியே.ஜமாயுங்கள்.
கோபு சார் ,
வருக.வருக. என் மாலையை (அல்லது பொன்னாடை)ஏற்று கொள்ளவும்.
சிவா
ஆச்சர்யம்,இன்ப அதிர்ச்சியில் உறைந்து நிற்கிறேன்.இலங்கை பம்மலாரே(மார்ச் 2013 க்கு முந்திய) மிக மிக நன்றி கலந்த சந்தோஷங்கள்.
ராகுல்,
எல்லா சிவாஜி படங்களுக்கும் ஒரு எழுத்து வடிவ ஆவணம் தரும் உன் பங்கு மெச்ச தக்கது.
-
ஆறு திரையரங்குகளில் வெளியாக போகும் பாசமலர் பிரம்மாண்ட வெற்றி காண வாழ்த்துக்கள்.(Crossing 54th Year on 27th May)
-
பாசமலர்-1961
Meisner பள்ளி Stanislavsky பள்ளியிலிருந்து உருவானதுதான் என்றாலும் முக்கியமாக வேறுபட்டது Sense Memory முறை தவிர்த்து instict மற்றும் improvisation ஆகியவற்றுக்கு முக்கிய துவம் தந்து , நடிக்கும் போது தன்னுணர்வு கொண்ட முன் நிர்ணய அடிப்படையில் அமையாமல், கூட நடிப்பவர்களின் தன்மைக்கு ஏற்ப dynamic ஆக கணங்களின் சத்தியத்துக்கு ஏற்ப தகவமைப்பது. கீழ்கண்ட விவரங்கள் இன்னும் தெளிவாக்கும்.(Meisner எங்கே Stanislavsky முறையில் வேறு பட்டு நிற்பது என்பது.
1)Sense Memory முறை அறவே தவிர்க்க படுதல்.
2)எதையும் முன்கூட்டிய தீர்மானம் செய்யாமல் Spontaneous ,Instinct &Impulse அடிப்படையில் நடிப்பு.
3)ஒரு பாத்திரத்தை முன்கூட்டி வடிவமைக்காமல் ,செய்ய ஆரம்பித்த பிறகு உடன் நடிப்பவர்,காட்சிகளின் எண்ண எழுச்சிக்கு தக்கவாறு dynamism கொண்டிருத்தல்.
4)பகல் கனவில் மிதப்பது போல , உணர்ச்சிகளின் வயப்பட்ட நடிப்பு. வசனங்களை கூட முன் கூட்டிய உணர்ச்சி தீர்மானங்களில் அமையாமல் moment to moment அடிப்படையில் தீர்மானிப்பது.
5)Improvise to access an emotional life .
பாசமலர் ராஜசேகரனாக சிவாஜி நடித்ததை மீறி இந்த பள்ளி வகை சார்ந்த நடிப்புக்கு உதாரணம் தேடுவது மிக கடினம்.ஆரம்ப சில காட்சிகள்,கடைசி மூன்று காட்சிகள் (Stanislavsky method Acting ) தவிர்த்து அவர் பணக்காரன் ஆவதிலிருந்து , மலர்ந்தும் மலராத காட்சி வரை Meisner பள்ளி நடிப்புக்கு இலக்கணம் எழுத படும்.
பாசமலரை ரசிகர்கள் எந்தளவு புரிந்து கொண்டாடினார்கள் என்பதை என்னால் அளக்க முடியாது.வெளிப்படையாக பாசத்தை அடிப்படையாக கொண்டது போல தோற்றமளிக்கும் இந்த காவியம் ,திரைக் கதை பாத்திர வார்ப்புகள் , பாத்திரங்களின் உள்ளுணர்வுகள் ,மதிப்பீடுகள் ,உறவுகள்,பிளவுகள்,பிரச்சினைகள் அனைத்துமே உருவம்,உள்ளடக்கம் முற்றிலும் மற்ற சராசரி படங்களில் இருந்து வேறு பட்டது.துன்பியல் முடிவை நோக்கி அமைக்க பட்ட இறுதி காட்சியின் வெற்றி இதை பாசக் காவியமாக்கி விட்டாலும், இதன் எல்லைகள் மிக விரிந்தவை. nerrative surprise ஏராளம்.
அண்ணன்-தங்கை தங்களை தவிர யாருமில்லாமல் ஒருவருக்காக ஒருவர் என்று எவரும் கவனிக்க விரும்பாத சராசரி ஏழ்மையில் ஆற்றொழுக்காக செல்லும் உறவு, எல்லோருடைய கவனம் ஈர்க்கும் சமூக பொருளாதார உயர் நிலை அடையும் போது மற்றவர்களுடைய உறவு,நட்பு தலையீடுகளால், முறுக்கிக்கொண்டு கெட்டு நரகமாவதை அருமையாய் சொல்லும் காவியம்.ஏனெனில் அடிப்படையில் நம்மை நாமே உணர்வதற்கு நமக்கு முக்கியமானது நம்மை சுற்றியிருக்கும் மற்றவர்களே.நம்மை பற்றி எண்ண நீட்சியில் மற்றவர் மதிப்பீடு புகுந்து ,உறவுகள் சீர்கெடுமானால்,மற்றவர்கள் சார்ந்து நம் வாழ்க்கை நரகத்தில் தள்ள பட்டு விடும்.அதிலும் நாம் வாழும் முறை ஊர் சார்ந்த முறைமையில் வேறு பட்டிருந்தால்.
கதாநாயகன் பாத்திர வார்ப்பிலும் , மற்ற கதாபாத்திரங்களுடன் இணைவு-முரண் அனைத்திலுமே deviant என்று சொல்லப் படும் தன்மை கொண்டது .ஒரே ஒரு விஷயத்தை முன்னிறுத்தியே (தங்கை ,அவள் நல்வாழ்வு) நாயகன் முடிவுகள் அமைவது போல தோற்றம் கொடுத்தாலும், அந்த முடிவுக்கு வருமுன் பலவித குழப்பங்கள், உணர்ச்சி வெளிப்பாடுகள், சுயநலங்கள், சிறு சிறு வேற்றுமைகள் என்று இந்த படத்தின் பின்னல்கள்,சிடுக்குகள் நிறைந்த ஆழம் , ரசிகர்களால் உணரப் பட சிறிதே பாதை மாறி பயணம் செய்து ,நடிப்புக்கு வருகிறேன்.
இதில் அண்ணன்-தங்கை symbiotic relationship ,ஒருவரை தவிர மற்றோருக்கு எந்த பிடிப்போ,பற்றோ அற்ற ஒரு முனை பட்ட உறவு. இது ஒரு வித brainwash போல ,ஒருவரை தவிர இன்னொருவருக்கு எதுவும் முக்கியமில்லை என்ற psychotic obsession . இதை நான் வாழ்க்கையில் சந்தித்த சில முக்கியமான மனிதர்களுடன் கண்டிருக்கிறேன். முக்கியமாக அம்மா,சகோதரி சம்பந்த பட்ட உறவுகளில். இந்த மாதிரி மனிதர்கள் எடுக்கும் ,முடிவுகள், தியாகங்கள்,மற்ற முக்கிய உறவுகளின் சிதைந்த நிலை மற்றோருக்கு illogical தோற்றம் கொடுத்தாலும்,சம்பத்த பட்டவர்களின் கண்ணுக்கு அவை நியாயமே.
ராஜசேகரனை பொறுத்த வரை அவனுக்கு மேற்பட்ட சிந்தனை எவையும் கிடையாது. உண்மையானவன்,உழைப்பாளி என்பதெல்லாம் இருந்தாலும் பொதுநலன், குழு சார்ந்த பார்வை என்பது அறவே கிடையாது. அவன் பழைய வாழ்வை மறந்து பணம் பகட்டு ,அந்தஸ்து,கெளரவம் போன்ற மாயைகளில் உழல்பவனே.நிறைய இடங்களில் தன் நலன் சார்ந்து தங்கையின் நலனுக்காக ,மற்றோரை குப்பையாக தூக்கி எறிபவன்.அவனிடம் ஒரே நல்ல தன்மை தங்கை பாசம் மட்டுமே. மூர்க்க தனமான கண்ணை மறைக்கும் பாசம், தங்கையின் சேமிப்பாலும் ,ஆலோசனையாலும் கிடைக்கும் செல்வ நிலை அவளுக்கே சொந்தம், தான் guardian /custodian மட்டுமே என்று வாழும் நிலையில் தனக்கென்று உருவான குடும்பத்தை அந்நிய படுத்துவதும் அல்லாமல் ,தங்கையின் கணவன் தன்னோடுதான் இருக்க வேண்டும் என்று மற்றோர் சுயத்தை சீண்டும் முடிவுகளையும் நடைமுறை படுத்துகிறான்.இந்த மாதிரி சிக்கலான பாத்திரம் தமிழ் திரை கண்டதில்லை.என்னிடம் பல பேர் கேட்ட கேள்வி ,ஏன் எல்லாவற்றையும் தங்கைக்கு கொடுத்து இப்படி தெருவில் அலைய வேண்டும் என்ற கேள்வி? நான் ஏற்கெனெவே சொன்னது போல அசாதரணமான உறவு, மனநிலை,ஒருமுனை பட்ட உறவின் தாக்கம்,மூர்க்கத்தனமான பாசம் இவற்றில் ராஜசேகரின் செயலுக்கு அவனாலுமே விளக்கம் சொல்ல முடியாது.நான் பலமுறை வாழ்க்கையில் பார்த்த நிலைதான் இது.
நடிகர்திலகம் பீம்சிங் படங்களில் ஏற்ற பாத்திரங்களின் range மிக அபூர்வமான ஒன்று.
படிக்காத EQ நிறைந்த வெளிப்படையான ரங்கன், பகட்டு புதுப் பணக்கார தோரணை காட்டும் ராஜசேகர்,sophisticated பணக்கார ஆனால் rawness கொண்ட படிக்காத சிறிது தாழ்மையுணர்வு கொண்ட கோபால்,பிறவி பணசெருக்கு கொண்டு மற்றவரை துச்சமாக கருதும் சிவலிங்கம் என்று அவர் காட்டும் வித்தியாசங்கள் பார்த்து உணர்ந்து ரசிக்க வேண்டிய அதிசயங்கள்.
பாசமலரை பொறுத்த வரை ,ஒரு புதுமை கொண்ட உன்னத நடிப்பு - கிழக்கையும்,மேற்கையும் இணைத்து stylised ஆன ஒரு meisner பாணி நடிப்பு -
தங்கையும் மட்டும் உலகம் என நினைப்பவன்.அவன் தன தங்கையும் தன்னைத்தவிர ஒருவன் மேல் அன்பு வைக்கமுடியும் எனும் உண்மையை முதலில் உள்மனதில் ஏற்க மறுத்து, பின்னால் அதிலுள்ள யதார்த்தத்தை அறிந்து, தன்னை மாற்றிக்கொள்பவன்.(இந்த நிலையை மகேந்திரன் நுணுக்கமாக தன "முள்ளும் மலரும் " படத்தில் விவரித்திருந்தார்.தன தங்கை சகோதரபாசத்திற்காக தன காதலையே தியாகம் செய்யும் நிலைக்கு வந்த பிறகே இருவரும் தத்தம் சகோதரிகளை அவர்கள் விரும்பியவருக்கே மணமுடிக்க சம்மதிக்கின்றனர்.)
Meisner பள்ளி சார்ந்த நடிப்பு என்பதால் ,சூழ்நிலை மற்றும் மற்ற கதாபாத்திரங்களை ஆழமாக அலசி விட்டு பிறகு நடிகர்திலகத்தின் நடிப்பை விரிவாக பார்ப்போம் .
நான் ஏற்கெனெவே கூறியபடி இந்த படத்தில் வில்லன் யாருமே கிடையாது அண்ணன் தங்கையின் அதீத பாசம்தான் ஒரே வில்லன். இந்த குருட்டு பாசமே இருவர் அழிவுக்கும் காரணமாகி defeatism நோக்கி பாத்திரங்களை தள்ளுகிறது.
ராஜசேகர் , ஆசை பட்டு பணக்காரனாகி பணக்கார வாழ்வின் அந்தஸ்து,தோரணை,வறட்டு கெளரவம் எல்லாம் சுமப்பவன்(நண்பன் புகழும் போது வெளிப்படையாய் ரசிக்கும் அளவு).நண்பனே ஆனாலும் ஆனந்தனை மாப்பிள்ளையாக ஏற்கும் பெருந்தன்மையோ,அவர்களை சுதந்திரமாக வாழவிடும் எண்ணமோ இல்லாதவனே. சில விஷயங்களில் குருட்டு பிடிவாதங்கள் உண்டு.சொத்தை பிரிப்பது என்பது அவன் பாசத்தை பிரிப்பது போல obsession கொண்டு நடப்பது, சுதந்திர மனப்பான்மை கொண்ட professional மனைவியிடம் ஒட்டாத சமூக வாழ்க்கை வாழ்ந்தாலும், அவளுக்கு அளிக்கும் சுதந்திரம் ஒரு விதத்தில் அவனை உயர் தளத்தில் வைத்தாலும் ,அவளுக்கு தன் வாழ்வில் இடமில்லை என்ற அளவில் by default நடப்பதாகவே உணர்வோம்.தன்னுடைய சக நண்பர்கள் காட்டும் வாஞ்சையை அவர்களுடன் திருப்புகிறானா என்பதே கேள்விகுறி. தங்கை அவள் சார்ந்த obsessions இதை தவிர வேறு சிந்தனையோ ஒட்டுதலோ இல்லாதவன்.மற்றவர் மாறி வளரும் போது emotional வளர்ச்சி காணாது ,மனதில் செல்வந்தனாய் மட்டும் உணர்ந்து விடுகிறான்.
ராதா தன் அண்ணனின் நல்ல நண்பன் (அங்கீகரிக்கப்பட்ட)என்ற சுவாதீனத்தில் காதலில் விழுந்தாலும் ராஜசேகரன் மனதளவில் பணக்காரனாகி விட்டது போல, சில செல்வ வளங்களை அனுபவித்தாலும் மனதளவில் பழைய ராதாவாகவே தொடர்வது பின்னால் பல சிக்கல்களை விளைவிக்கும் முரணாகிறது. பாசம் பழைய படியே தொடர்ந்தாலும் நிஜமான பணக்கார அண்ணனுடன் , செல்வ சுகங்களை அனுபவிக்கும் ஏழை ராதாவாகவே தொடர்வது பெரிய முரண்.பிறகு தான் தன் கணவன் என்ற பெண்ணுக்குரிய அனுசரணை சார்ந்த சுய நலம் எட்டி பார்ப்பது ராஜசேகர் மனநிலைக்கு ஒத்ததாக இல்லாதது அடுத்த நிலைக்கு சிக்கலை வளர்க்கிறது.
ஆனந்தன், நடைமுறை லட்சியவாதி ஆனாலும்,ராஜசேகரன் உயர்நிலையை ஒப்பு கொள்கிறான்.(இரு முறை அடிபடும் போதும் எதிர்க்காமல் ).இந்த தாழ்மையுணர்வு ,வீட்டோடு மாப்பிள்ளையாய் இருக்க நேர்கையில் இன்னும் அவனை ஏற்கெனெவே சிறிது சீர்கெட்ட நண்பனுடன் ஆன உறவை சந்தேக கண் கொண்டே அளக்க,செயல்பட வைத்து விடுகிறது . அவன் ஏழை ராதாவை விரும்பி, அவளை பணக்காரியாய் பல சிக்கல்களுடன் அடைந்தது ,அவன் குணத்திலும் சிறிது குழப்பத்தை விளைவிக்கிறது.
விதவை ஏழை ,மீனாக்ஷி அம்மாளோ ,தனது ஒரே மூலதனமான மருமகனை வைத்து தன்னுடைய நிலையை உயர்த்த விடாமல் இடையூறாய் ஒரு ஒட்டு வாழ்வு. அவளுக்கு அண்ணன் தங்கை பிரிந்து பாகமும் பிரிந்தால் மட்டுமே அவள் ஒரு வீட்டில் தலைமை ஏற்று அவள் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும்.இதற்கு ராதாவோ, ஆனந்தனின் நேர்குணங்களோ உதவாது என்பதால் சிறிதே தடம் மாறுகிறாள்.
மாலதி தன்னுடைய தொழில் சார்ந்த வாழ்க்கைக்கு முன்னுரிமை கொடுக்க விரும்பும் குடும்ப பின்னணியில் வந்து இந்த மூட பாச சுழல் நிறைந்த இடத்தில் பொறியில் மாட்டிய எலியாய் அவதி பட்டு, ஒட்டாத வாழ்க்கையில் சடங்கு போல வாழ்ந்து தன் கணவன் மதிப்பு,சுயமரியாதை ,பணம் எதையும் காக்க இயலாததால் அண்ணன் காட்டிய வழியில் சென்று விடுகிறாள் (பேருக்கு மறுத்து விட்டு ,பிள்ளையையும் கணவனிடம் விட்டு தப்பிக்கிறாள்)
பாஸ்கரன் ஒரு நல்ல சகோதரனாக வழிகாட்டியாய் இருக்க நினைத்தாலும் , ராஜுவின் பைத்தியகாரத்தன பாசம், தன் தங்கையை நிம்மதியாக வாழ விடாது என்பது புரிந்து, ராஜுவின் சவாலை (முடிந்தால் நீ உன் தங்கைக்கு எதாவது பண்ணு என்னை போல் )மெளனமாக professional ,நல்ல பாரம்பரிய குடும்பத்து முறையில் சிக்கலில்லாது லட்சிய போர்வையில் தங்கைக்கு தற்காலிக விடுதலை தருகிறான்.
நண்பர் ரத்தினம் , எப்போதெல்லாம் ராஜுவின் மீது அக்கறை செலு த்துகிறாரோ ,அப்போதெல்லாம் (திருமண ஏற்பாடு,முனிசிபல் சேர்மேன்,குடும்ப சொத்து தீர்வு)அப்போதெல்லாம் அண்ணன் தங்கையின் எடுத்தோம் கவிழ்த்தோம் முடிவுகளில் மூக்குடைப்பே பெறுகிறார்.
இது அழகான பாசத்தின் கதையாக அமர துவம் பெற்றாலும் , இந்த குருட்டு பாசமே வில்லனாகி அவர்களையும்,சுற்றி இருப்பவர்களையும் இந்த அளவு மன கிலேசம் கொள்ள வைப்பது ,இந்த படத்தின் வெளிப்படையான பல மாயைகளை தகர்த்து, பல வேறு பட்ட தளங்களில் சிக்கலான தளங்களில் திரைக் கதை பயணிக்கிறது.
சிவாஜி இந்த nuances உணர்ந்து நடித்ததால்தான் படம் இந்த அமரத்துவத்தை அடைந்துள்ளது.
நடிகர்திலகம் ஏற்கெனெவே சிறிது மேற்கத்திய பாணியில் திரும்பி பார்,மணமகள் தேவை,அன்னையின் ஆணை படங்களில் ,நடித்திருந்தாலும் ,இந்த படம் நம் கலாச்சார மதிப்பீடுகளை சமரசம் செய்யாமல் மேலை நாட்டு பாணியில் அமைந்த திருப்பு முனை படம்.
ஒரு பணக்கார வாழ்க்கையை முழுவதும் சுவைத்து அதனுடன் தோய விரும்பும் (ஆங்கிலம்,பியானோ ) ராஜசேகரனை ரத்தமும் சதையுமாக காணலாம்.அடர்த்தி புருவம், ஒழுங்கான சிகை அலங்காரம், உடைகள் என்று ஏழ்மையை உதறி கனவான் போர்வையை உடல்,மனம்,எண்ணம்,எல்லாவற்றிலும் சுமக்கும் ஒருவனை , அந்த உணர்வுகளையும்,எண்ணங்களையும் மற்றோர் மனநிலைக்கேற்ப வெளியிடும் அந்த மென்மையாய் உறுதி காட்டும் குரல் ஜாலம் , நடிப்பை நடைமுறையுடன் இணைக்கும் ஒரு முனை படாமல் பல செயல்களை மனநிலைக்கேற்ப இணைவாகவோ, பேதமாகவோ காட்டி meisner பாணிக்கு இலக்கணம் தருவார்.இந்த படம் அவரின் உலக அளவு தரத்தில் உயர்நடிப்பின் ஒரு சாதனை திறவுகோல் .
ஆனந்தன் வேலை கேட்டு வரும் இடம், தங்கையின் தலையில் பூ வைக்கும் நண்பனை கண்டு வரும் ஆத்திரம், தொழிற்சாலையில் ஆனந்தன் கூட்டாளிகளுடன் வாக்குவாதம்,தங்கை தோட்டத்தில் ஆனந்தனுடன் பேசி கொண்டிருப்பதை கேள்வி பட்டு ஆத்திரமுற்று பிறகு நடைமுறைக்கு வரும் காட்சி,தங்கையின் வாட்டத்தை அவள் ஆசையை நிறைவேற்றி போக்கும் காட்சி, வீட்டில் செங்கல்வரயனின் அட்டகாசங்களை கண்டிக்கும் போது ஆனந்தன் பரிந்து வருவதால் நிலைமை எல்லை மீறுவதை புரிந்து தணிவது,மீனாக்ஷியம்மாளின் சூழ்ச்சியால் மோதல் போக்கு எல்லை மீறி ஆனந்தனை வேண்டுவது,நண்பர்களுடன் தேர்தலுக்கு நிற்பதை பற்றி பேசுவது,தங்கை வீட்டிற்கு வரும் போது தன்னிலையை சொல்ல மனைவிக்கு தரும் இடம்,பாஸ்கருடனான உரசல் ,பிறகு இதமான அனுசரணை என்று அவர் புதுமை நிறைந்த நடிப்பின் கொடி கதாபாத்திர இணைவுடன்,மற்ற பாத்திரங்களுடன் எதிர்-உடன்-குழப்ப நிலைகளில் ஒரு அதிசய பயணம் நிகழ்த்தும்.
ஆனந்தன் வருகையை எதிர்பார்த்திருந்தாலும் ,வந்தவுடன் நீ ஒரு பொருட்டில்லை என்று பல பொருள்களில் கவனம் குவிக்கும் அலட்சியம், ஆத்திரம் கலந்த அகந்தை, பென்சில் சீவி கொண்டு பார்க்கும் வன்மம் குரூரம் கொண்ட பார்வை என்ற இந்த தொழிற்சாலை மோதல் காட்சி improvisation என்ற meisner பள்ளி நடிப்புக்கு ஒரு நடைமுறை உதாரணம்.
தன் விசுவாச ஊழியனின் கழுத்தை நெரித்து தள்ளி ,துப்பாக்கியுடன் கொலை வெறியுடன் சென்று தன் தங்கை தனக்காக காதலை துறக்க செல்லும் பாசத்தில் அந்த கொலை கருவியினாலேயே தன் கண்ணீரை துடைத்து, அதை தூக்கி எறியும் கவிதாபூர்வ நடிப்பு.
வாராயென் தோழி பாடலில் மலராத பெண்மை மலரும் வரிகளில் ஒரு திருமணமாகாத ஆணின் வெட்கம் (embarassment கலந்த),தன் தங்கை அடைய போகும் இன்ப வாழ்வை நினைந்த நெகிழ்ச்சி,அங்கிருந்து அகல விரும்பும் அவசரம் எல்லாவற்றையும் பத்து நொடிகளில் காட்டும் மேதைமை.
தங்கை தன் முறிந்த திருமணத்தை பேசும் போது சங்கடத்துடன் சிகரெட்டை பார்த்து (ஒருமுறை வாய் வரை சென்று தவறும்),தங்கையை குற்றம் சாட்டுவது போல அமையாமல் அவர் பேசும் விதம்.
செங்கல்வரயனை இந்த வீட்டில் இருந்து மரியாதையை குலைக்கும் விதத்தில் நடக்காதே என்று சொல்லும் போது ,ஆனந்தன் குறுக்கிட்டு இதில் தவறில்லை ,வேறு ஏதோ நோக்கத்தில் குத்துவதாக சொல்ல விருப்பமின்றி தணியும் விதம்.
தங்கையை அவள் கணவன் அடித்தவுடன் நிலைமை மறந்து ஆத்திரத்துடன் பாயும் உணர்ச்சி வேகம் ,பின் தன்னிலை உணர்ந்து ஆனந்தனை சமாதான படுத்தும் பாங்கு (பாசம்,கெளரவம் கலந்த உணர்வுடன் தனித்து பேசும் நேர்த்தி),என் கணவன் கௌரவத்தில் ,உயர்வில் எனக்கு அக்கறை உண்டு ,உங்கள் தங்கை அவள் கணவனுக்காய் பேசுவது போல எனக்கும் உரிமை உண்டு என்று கோரும் மனைவியின் நியாயம் உணர்ந்து ,பாசத்தில் துடித்தாலும் விலகி நின்று மனைவிக்கு உரிமை தரும் கண்ணியம்,தனக்கு நியாயம் சொல்லும் மனைவியின் அண்ணனை , தன் நிலை படி தங்கைக்கு உதவ சொல்லி சீறும் கட்டம்,பிறகு சற்று சோர்வாக வரும் பாஸ்கருடன் குற்ற உணர்வுடன் நியாயத்தை உணர்ந்து அவர் கோரிக்கைக்கு பணிவது, மனைவியுடன் ஓட்ட ஆரம்பிக்கும் கட்டத்தில் நடைபிணமாய் வழியனுப்பும் வேதனை .
இந்த படத்தில் அவர் நடிப்பை அணு அணுவாக கூறு போட்டு எழுத எத்தனை பக்கங்கள் கொடுத்தாலும் போதாது .ஒவ்வொரு முறை காணும் போதும் புதுமையாய் உணரும் ஒரு புத்துணர்வு கலந்த பிரமை.
இந்த படத்தின் கதாசிரியர் கொட்டாரக்கரா ,கேரளா மாநிலம் சார்ந்தவர் என்பதால் "மருமக்கள் தாயம்" என்னும் மரபை அறிந்ததால்,அதன் சாயலில் தமிழ் சூழலில் அமைத்த கதை ,அது வெளிவந்த காலத்தை விட ,அறிவெழுச்சி மிகுந்த தற்காலத்தில் புது புது பரிமாணம் தருவது ஒன்றும் அதிசயிக்க தக்கதல்லவே?
-
கோபால் - மகிழ்ச்சியான செய்தி - பாசமலர் 6 திரை அரங்குகளில் வரப்போவதை அறிந்து - உங்கள் அழகான நடை , மீண்டும் இந்த படத்தை பார்க்கவேண்டும் என்ற ஆவலை எங்கள் எல்லோருக்கும் ஏற்படுத்தியுள்ளது - நன்றி
-
அன்புள்ள CK - சௌந்தரிய லஹரியை புரிந்து கொண்டு ,தமிழில் அழகாக அர்த்தம் தருபவரா , இந்த எளிய வரிகளை புரிந்து கொள்ள வில்லை என்று சொல்பவர் - இருந்தாலும் , உங்களுக்கு தன்னடக்கம் மிகவும் அதிகம் . என் சிற்ற அறிவுக்கு எட்டியதை கீழே தருகிறேன் - ( disclaimer - நான் இயற்றியது அல்ல இந்த பாடல்)
உங்கள் நடையில் சொல்லவேண்டுமானால் - CKமுரளி பாவமன்னிபாயபவ :::
படைத்தவன் சேர்த்து தந்தான்
இறைவன் நமக்கு எல்லாமே அதிக அளவில் சேர்த்து கொடுத்துள்ளான் - ஒரே இனம் , ஒரே ஜாதி , ஒரே மதம் , ஒரே தெய்வம்
வளர்த்தவன் பிரித்து வைத்தான்
வளர்த்த விதம் நம்மை ஒரே இனம் , ஒரே ஜாதி என்ற கொள்கையிலிருந்து நம்மை பிரித்தது வைத்தன
எடுத்தவன் மறைத்து கொண்டான்
நம்மை சுரண்டுபவர்கள் ஏராளம் - அவர்கள் நம்மிடமிருந்து
மறைத்தும் ஏராளம்
கொடுத்தவன் தெருவில் நின்றான்
பறிகொடுத்த நாம் தெருவில் நிற்கிறோம்
எடுத்தவன் கொடுக்க வைப்போம்
இந்த நிலையை மாற்றி , சுரண்டியவர்களை
கொடுக்க வைப்போம்
கொடுத்தவன் எடுக்க வைப்போம்
பறி கொடுத்தவர்களை மீண்டும் பழைய
நிலைக்கு கொண்டுவருவோம்
இன்று போல் என்றும் இங்கே ஒன்றாய் கூடுவோம்
இன்று போல் என்றும் ஒன்றாய் கூடி ஒற்றுமையாய் , சந்தோஷமாய் இருப்போம்
திருப்தியான விளக்கம் என்று நினைக்கிறேன்
அன்புடன் ரவி
-
சிவா அவர்களே,
கனடாவில் நடிகர் திலகம் சிவாஜி விழா பற்றிய செய்திக்கு மிக்க நன்றி. விழா சிறப்புற நடந்தேற வாழ்த்துக்கள்.
தாங்கள் பதிவிட்ட அழைப்பிதழின் வண்ண நிழற்படம் அந்த இணைய தளத்திலிருந்து இங்கே மீண்டும் நம் பார்வைக்கு
https://tamilnaducentre.org/images/e...vaji-vizha.jpg
-
அன்புள்ள திரு சிவா
உங்கள் ஆணித்தரமான பதிவுகள் எங்கள் எல்லோரையும் வியப்பில் ஆழ்த்துகின்றன - எவ்வளவு உண்மைகள் ! எவ்வளவு பூமிக்கடியில் புதைந்து கிடக்கின்றன - சும்மாவா சொன்னார்கள் - NT ஒரு தங்க சுரங்கம் என்று - அந்த சுரங்கத்தில் எங்கு வெட்டினாலும் , தோண்டினாலும் தங்கம் மட்டுமே கிடைக்கும் - பொய் சொல்லும் கூட்டம் , மடமையை கொண்டே உருவான கூட்டம் எப்படி வேண்டுமானாலும் சொல்லிகொண்டு போகட்டும் - யாரும் பொய்யை சொன்னாலும் நாம் மெய்யை மட்டும் பேசுவோம் - வெற்றி நமக்குதான் !
உங்கள் அரிய பதிவுக்காக என் சிறிய பரிசளிப்பு இதோ ------
நடிப்புக்கு மட்டுமல்ல வசனம் உச்சரிப்புடன் கூடிய முகபாவம் இதற்கெல்லாம் இனி ஒரு நடிகன் பிறந்துதான் வரவேண்டும். அப்படி பிறந்தவன் யாரும் இல்லை , வாழ்ந்ததும் இல்லை , வரப்போவதும் இல்லை --வெற்றி என்ற வார்த்தைக்கு மறு அர்த்தம் NT தான்
http://youtu.be/ij1XPqCSVOA
-
கேட்டவைகளில் பிடித்தது -11
"செல்லகிளிகலாம் "படம் : எங்க மாமா
Theme : Expecting and Accepting are two sides of Life. Expecting can end in tears, while Accepting brings you cheers. Accept life the way it comes.
செல்லகிளிகலாம் பள்ளியிலே - செவந்தி பூக்கலாம்
பள்ளியிலே - என் கண்மணிகள் ஏன் தூங்கவில்லை
கன்றின் குரலும் , கன்னி தமிழும் சொல்லும் வார்த்தை அம்மா அம்மா - கருணை தேடி அலையும் உயிர்கள் உருகும் வார்த்தை அம்மா அம்மா ---
எந்த மனதில் பாசம் உண்டோ அந்த மனமே அம்மா அம்மா - இன்ப கனவை அள்ளி தரவே இறைவன் என்னை தந்தானம்மா
என் கண்மணிகள் ஏன் தூங்கவில்லை -- செல்லகிளிகலாம் பள்ளியிலே - செவந்தி பூக்கலாம்
பள்ளியிலே - என் கண்மணிகள் ஏன் தூங்கவில்லை
தந்தை ஒருவன் அந்த இறைவன் அவனும் அன்னை இல்லாதவன் - தன்னை தேடி ஏங்கும் பிள்ளை தன்னில் உறக்கம் கொள்வான் அவன் - பூவும் பொட்டும் பொருந்தி வாழும் மழலை கேட்டேன் தந்தான் அவன்
நாளை உலகில் நீயும் நானும் வாழும் வழிகள் செய்வான் அவன் -என் கண்மணிகள் ஏன் தூங்கவில்லை -- செல்லகிளிகலாம் பள்ளியிலே - செவந்தி பூக்கலாம்
பள்ளியிலே - என் கண்மணிகள் ஏன் தூங்கவில்லை
அநாதை என்று இந்த உலகில் யாரும் இல்லை - இறைவன் இருக்கும் வரை - நம்பிக்கையுடன் வாழுங்கள் -நாளை உலகில் நீயும் நானும் வாழும் வழிகள் செய்வான் அவன் -
http://www.youtube.com/watch?v=yglkh...48C6528F8CD802