-
டியர் வாசு அவர்களே ('சார்' போடக்கூடாது என்பது மட்டும்தான் 'கோ'வின் கட்டளை).
நேற்று ஒருநாள் கணிணி இணைப்புக் கிடைக்கவில்லைஎன்று இன்றைக்கு வந்து பார்த்தால் ஏகப்பட்ட பக்கங்கள் ஓடி திரி நிரம்பிக்கிடக்கிறது. ராகவேந்தர் அவர்கள் சொன்னது போல எதைப்பாராட்டுவது என்றே தெரியவில்லை. நல்லவேளையாக சில பதிவுகள் தெலுங்கில் ஓடியிருப்பதால், அவ்வளவாக தெலுங்குப்படங்கள் பற்றித் தெரியாது என்றாலும் தெலுங்கு வீடியோக்களைப் பார்ப்பதில் ஒரு தனி இன்ட்ரஸ்ட். ஏனென்றால் ஒரே காட்சிக்கு இங்கே இழுத்துப் போர்த்திக்கொண்டு நடிப்பவர்கள், அங்கே கொஞ்சம் காற்றோட்டமாக திறந்து நடித்திருப்பார்கள்.
நமது திரியில் லதா தினம், ஜெயந்தி தினம், சேகர் தினம், ஆனந்தன் தினம் கொண்டாடப்பட்டது போல விஜயலலிதா தினம்', 'கீதாஞ்சலி தினம்' கொண்டாடப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழ்த்திரையுலகம் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளாத இன்னொரு நடிகை கீதாஞ்சலி. நன்றாக நடனம் ஆடத்தெரிந்த அவரை காமெடியன்களுக்கு ஜோடியாகப்போட்டே ஒருவழி பண்ணிவிட்டார்கள். சங்கமம் படத்திலும் நாகேஷின் ஜோடி இவர்தானே? ("ஐயோ அவனா? சாவி இல்லாமலே பூட்டைத் திறப்பானே")
'மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி' ஸ்பெஷல் பதிவின்மூலம் ஒருவர் தலையில் டன் கணக்கில் ஐஸ் வைத்து விட்டீர்கள். இப்படத்தில் ரவிச்சந்திரன் + ராமமூர்த்தி அல்லவா. அவரது கொண்டாட்டத்துக்கு கேட்கணுமா.
தங்களின் லேட்டஸ்ட் இன்றைய ஸ்பெஷலாக வந்த 'சித்தி' படத்தின் 'தண்ணீர் சுடுவதென்ன' பாடல் விவரிப்பு அருமை. இரண்டாவது இன்னிங்க்ஸ் ஆட வந்தபோது கொஞ்சம் கிளுகிளுப்புடனேயே ஆட வந்தார் பத்மினி. ஐந்தாண்டு இடைவெளியில் சற்று முதுமை கூடியிருந்தது நன்றாகவே தெரிந்தது.
1966 பொங்கலன்று 'அன்பே வா' படத்துடன் 'சித்தி' வெளியானது. நமது படம் 'மோட்டார் சுந்தரம்பிள்ளை' ஜனவரி 26 அன்று வெளியானது (நடிகர்திலகத்துக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்ட அதே நாள்) .
சித்தி படத்தில் ஜெமினியும் பத்மினியும் குளிக்கும் இந்தப்பாடல் காட்சி கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் மல்லியம் கிராமத்தில் காவேரி ஆற்றில் படமாக்கப்பட்டது (திருச்சியில் கடல்போல காட்சியளிக்கும் காவேரி கல்லணையிலிருந்து பல கிளை நதிகளாக பிரிந்து பிரிந்து மல்லியம், மாயவரம் வரும்போது ஒரு சிற்றாறு போல குறுகிவிடும்). கே.எஸ். ஜி. அப்போதைய தன்னுடைய படங்களில் ஒருசில காட்சிகளியேனும் தன்னுடைய மல்லியம் கிராமத்தில் படமாக்குவதை ஒரு செண்டிமெண்ட் ஆக வைத்திருந்தார். சித்திக்கு முந்தைய அவரது கற்பகம் முழுவதும் மல்லியத்திலேயே படமாக்கப்பட்டது. 'பக்கத்து வீட்டு பருவமச்சான்' பாடலின் இறுதியில் சாவித்திரி பாடும் மொட்டை மாடி வீடுதான் மல்லியம் கிராமத்திலுள்ள கே.எஸ்.ஜி.யின் வீடு.
(இதுபோல நமது சவாலே சமாளி படத்தின் வெளிப்புறக் காட்சிகளனைத்தும் மல்லியத்திலேயே எடுத்திருந்தார் ராஜகோபால். டி.கே.பகவதியும் வி.எஸ்.ராகவனும் நின்று பேசும் மரப்பாலம் மல்லியம் காவிரியாற்றுப் பாலம்தான்).
'சித்தி' படத்தில் பத்மினி குளிக்கும் இந்தக்காட்சிதான் அந்தப்படத்தின் விளம்பரங்கள் அனைத்திலும் இடம்பெற்றது. இப்படத்தின் ஒரிஜினல் ஹீரோ எம்.ஆர்.ராதாதான். ஜெமினியும் முத்துராமனும் துணைப்பாத்திரங்களே.
மெல்லிசை மன்னரின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஹிட். ரொம்ப ஹிட் என்றால் முத்துராமனும் 'ஞானஒளி' விஜயநிர்மலாவும் பாடும். "சந்திப்போமா இன்று சந்திப்போமா", அடுத்து பெண்களைக் கவர்ந்த "காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே" நாகேஷின் தத்துவப்பாடல் "இங்கே தெய்வம் பாதி மிருகம் பாதி மனிதன் ஆனதடா" ("கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை நான்", "கொஞ்சம் மிருகம் கொஞ்சம் கடவுள் ஒன்றாய் சேர்த்தால் எந்தன் நெஞ்சம்... சந்திரலேகா") கண்ணதாசன் சொல்லாத எதையும் யாரும் புதிதாக சொல்லிவிடவில்லை. ஜெமினி, முத்துராமன், நாகேஷுக்கு மட்டுமல்ல, குலதெய்வம் ராஜகோபாலுக்கும் பாட்டு "சைக்கிள் வண்டி மேலே" (ராஜகோபாலை யார் பார்த்தது, விஜயநிர்மலா அழகாக சைக்கிள் ஓட்டும்போது)
-
டியர் கார்த்திக் சார்,
இரண்டு நாட்கள் நீங்கள் திரியில் இல்லாமல் என்னவோ போல் சற்று வெறுமை குடி கொண்டிருந்தது நிஜம். வரவேண்டும்.வரவேண்டும்.
'சித்தி' படப் பாடலைப் பார்த்து பாராட்டியதற்கு நன்றி!
'சித்தி' பற்றிய தெரியாத தகவல்களை அழகாக வழங்கியுள்ளீர்கள். (நடுவில் மறக்காமல் நம்மவரைப் பற்றியும்) அப்படியே மல்லியம் பற்றிய பதிவும் சிறப்பு.
நீங்கள் கூறுவது உண்மைதான்.
http://www.youtube.com/watch?v=7pkV6...yer_detailpage
'தபால்காரன் தங்கை' படத்தில்
'காவிரி பெருக்கெடுத்தால்
கொள்ளுமிடம் கொள்ளிடம்
காதல் பெருக்கெடுத்தால்?
காதல் பெருக்கெடுத்தால்?
புகலிடம் பெண்ணிடம்'
என்று கல்லணையில் அப்பாடலை படமாக்கியிருப்பார் இயக்குனர் திலகம்.
அதே போல் 'நத்தையில் முத்து' (கே.ஆர்.விஜயாவின் நூறாவது படம் ) படத்தில் முத்துராமனும், விஜயாவும் ஆற்றில் குளிக்கும் காட்சி.
'அம்மம்மா! எனக்கு அதிசய நெனப்பு தோணுது'
என்ற பாடலும் 'சித்தி' போலவே ஆற்றில் படமாக்கப் பட்டிருக்கும். அனேகமாக இதுவும் நீங்கள் குறிப்பிட்டுள்ள காவேரி ஆறுதான் என்று நினைக்கிறேன். கொஞ்சம் சர்ச்சையையும் கிளப்பியது இக்காட்சி. (விஜயா குளித்துக் கொண்டிருக்கும் போதே ஆற்றில் அவர் உடுத்தியிருக்கும் துணி அடித்துக் கொண்டு போய்விட புன்னகை அரசி வெற்றுடம்பாய் நி....ய் ஆற்றில் நிற்பது போல காட்சி)
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Fa3lNljUMRA
நீங்கள் சொன்ன செய்திகளை வைத்துப் பார்க்கும் போது இயக்குனர் திலகத்தின் 'சின்னஞ்சிறு உலகம்' படத்திலும் இதே சூழல் கொண்ட காட்சிகள் உண்டு. அண்ணன் தங்கையான ஜெமினியும், கே.ஆர்.விஜயாவும் இணைந்து பாடும்
http://www.youtube.com/watch?v=kzh-0FYIwKk&feature=player_detailpage
'மனசிருக்கணும் மனசிருக்கணும்
பச்சப் புள்ளையாட்டம்
அது வெளுத்திருக்கணும் வெளுத்திருக்கணும்
மல்லியப் பூவாட்டம்'
பாடலும் மல்லியம் கிராமம், அதன் சுற்றுப் பகுதிகளில் படமாகப்பட்டிருக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் கண் கண்ட தெய்வம், அதன் கார்பன் காப்பி 'படிக்காத பண்ணையார்' இதிலெல்லாம் கூட கோபாலகிருஷ்ணன் தன் சொந்த கிராமத்தில் படப்பிடிப்பு நடத்தியிருப்பார் போல.
இதுவல்லாமல் 'செல்வம்' திரைப்படத்தில் கே.ஆர்.விஜயா ஆற்றில் குடத்தில் தண்ணீர் எடுத்துக் கொண்டு மேலை நாட்டில் படிப்பை முடித்துவிட்டு ஆகாயத்தில் பறந்து வரும் வரும் 'நம் செல்வ'த்திற்காக காத்திருக்கும் இடம், 'அவளா சொன்னாள்' பாடல் காட்சியில் வரும் ஆற்று அணைப்பகுதி (உள்ளத்தில் உள்ளது உதட்டிலே வந்ததா)
அதே போல தன்னுடன் ஒத்துழைக்காததினால் விஜயாவை கோபத்துடன் நடிகர் திலகம் ஆற்றில் பிடித்துத் தள்ளும் காட்சி என்று நினைவலைகளை ஆற்றலைகளுக்கு இழுத்துச் சென்று விட்டீர்கள் கார்த்திக் சார்.
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=7YPCHYNItqk
ஒன்று புரிகிறது.
ஆறு ,அணை, குளம், குறவர்கள் இல்லாமல் படம் எடுக்க மாட்டார் 'இயக்குனர் திலகம்'.
இதே போல தனது சொந்த மண்ணில் அடிக்கடி படப்பிடிப்பு நடத்தும் இன்னொரு இயக்குனர் தங்கர் பச்சான். பண்ருட்டிக்கு அருகே உள்ள பத்தரக் கோட்டைதான் இவரது ஊர்.
அழகி, ஒன்பது ருபாய் நோட்டு, அம்மாவின் கைபேசி போன்ற படங்களின் ஷூட்டிங்கை இங்கேதான் வைத்துக் கொண்டார் பச்சான்.
எங்கள் நெய்வேலியிலிருந்து ஒரு இருபது கிலோமீட்டர்தான் இருக்கும்.
-
டியர் கிருஷ்ணாஜி..! ('ஜி' போடுவதில் ஒரு சௌகரியம், 'சார்' போடவேண்டியதில்லை).
'ஒருதலை ராகம்' படத்திலேயே எனக்கு மிகவும் பிடித்த பாடலான 'இது குழந்தை பாடும் தாலாட்டு' பாடலைப்பதித்து மனத்தைக் கனக்க வைத்து விட்டீர்கள். அந்தப்படத்தில் அனைத்துப்பாடல்களுமே சூப்பர் என்றாலும் இது அனைத்திலும் அருமையானது. ஆனால் படம் வெளியான காலத்தில் 'வாசமில்லா மலரிது' பாடல் அநியாயத்துக்கு ஹிட்டாகித் தொலைத்தது.
உண்மையில் இப்படத்தின் ரயில்நிலையக் காட்சிகள் மட்டுமே மயிலாடுதுறையில் (அன்றைய மாயவரம்) படமாக்கப்பட்டது. மற்ற காட்சிகளனைத்தும் மாயவரம் அருகிலுள்ள மன்னம்பந்தலில் படமாக்கப்பட்டது. அதனால்தான் பார்க்க கிராமம் போல தெரிகிறது, உண்மையில் மாயவரம் பெரிய நகரம். அது படத்தில் காட்டப்படவில்லை. கடற்கரைக் காட்சிகள் மாயவரம் அருகிலுள்ள தரங்கம்பாடியில் எடுக்கப்பட்டதாக சொல்வார்கள். படத்தில் இடம்பெறும் ஏ.வி.சி.கல்லூரியும் கூட மன்னம்பந்தலில்தான் இருக்கிறது.
இந்தப்பாடலில் கடைசி பல்லவியின்போது சங்கர் கைகளைக் கட்டிக்கொண்டு நிற்கும் வீடு வடகரையிலுள்ள ஈ.எம்.இப்ராகீம் அவர்களின் வீடு என்று ஒருமுறை டி.ஆர்.சொல்லியிருந்தார்.
‘இது குழந்தை பாடும் தாலாட்டு’ மூலம் மாணவப் பருவ நினைவுகளை கொண்டுவந்துவிட்டீர்கள். நன்றி.
-
மின்னல் வேகமாய் பறந்தடிக்கும் திரியில் படித்து பதில் பதிவிட நிச்சயம் நமக்கு நேரம் தேவை தான்.
விஜயநிர்மலா மஞ்சுளா என ஆற்றங்கரையில் அளவளாவி பத்மினியில் வந்து நிற்கும் பதிவுகள் நமக்கும் ஆற்றில் நீராடச் செய்யும் உணர்வையல்லவா தருகின்றன.
ஒவ்வொருவரின் எழுத்தும் ஒவ்வொரு மகுடம். தொடருங்கள் அனைவரும்.
சித்தி திரைப்படத்தில் இடம் பெற்ற சந்திப்போமா பாடல் முன்பே கற்பகம் படத்திற்காக உருவாக்கப் பட்ட மெட்டு என ஒரு பேச்சு அக்காலத்தில் வந்ததுண்டு. அதில் முத்துராமனுக்கும் ஷீலாவுக்கும் ஒரு டூயட் வைக்கும் எண்ணமிருந்ததாகவும் கடைசியில் கைவிடப்பட்டதாகவும் அந்த மெட்டையே சைக்கிள் ஓசைகளை இணைத்து சித்தி படத்திற்கு பயன்படுத்தியதாகவும் சொல்வார்கள்.
-
கிருஷ்ணா சார்,
ஒருதலை ராகம். அன்று சோகமாய் ரசித்தது போலவே இன்றும் உங்களாலும், கார்த்திக் சாராலும் அதே சோகத்துடன் ரசிக்க முடிகிறது.
நன்றி!
-
கொடுத்து வைத்த 'குலதெய்வம்'.
ஜாலியான 'சீர்காழி'
அழகான 'ஞான ஒளி' விஜய நிர்மலா.
டீஸிங் சாங்.
மாலையும் ,இரவும் சந்திக்கும் நேரத்தில் கேட்க சுகமாய் இருக்கிறது.
http://www.youtube.com/watch?v=ystoa0-Xt_s&feature=player_detailpage
-
வாசு சார்,
சித்தி திரைப்படத்தில் இடம் பெற்ற- சைக்கிள் வண்டி
போல-பாடலைக் குறித்து தாங்கள் தெரிவித்துள்ள
கருத்துக்கள் அருமை.கொடுத்து வைத்தது-குலதெய்வம்-
மட்டுமல்ல.நாங்களும் தான்.
அன்பு கோபு
-
ராஜேஷ் சார்,
நைட் ஷிப்ட் போவதற்கு முன்னால் 'ஆசைமகன்' திரைப்படத்திலிருந்து உங்களுக்காக ஒரு பாடல்.
http://4.bp.blogspot.com/-DZrotRpU-O...+PAADALGAL.jpg
'ராஜாவே
நல்ல ரோஜாவைப் பார்.
பொன் காலை நேரம்
பூஞ்சோலை ஓரம் பூத்திருக்கு
உனக்கு காத்திருக்கு'
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=f9a2L9S2i4g
-
ஆசை மகன் பாடலுக்கு நன்றி.
சித்தி எல்லா மொழியிலும் வந்தது. தெலுங்கில் பின்னி, கன்னடத்தில் சிக்கம்மா
இதோ தண்ணீர் சுடுவதென்ன கன்னட வடிவம்
வீடியோவை தரமேற்றியவர் இசையரசி என குறிப்பிட்டுள்ளார் ஆனால் குரல் பி.வசந்தா
இசையரசி பாடியது அந்த காலவிது காலவிது பாடல் மட்டுமே கன்னடத்தில்
http://www.youtube.com/watch?v=Ht_ehBdd6WI
சைக்கிள் வண்டி பாடல்
http://www.youtube.com/watch?v=bIm45dsy20I
-
இதில் விசேஷம் என்னவென்றால் தெலுங்கு பின்னியில் பத்மினியின் வேடம் தேவிகாவிற்கு, விஜய நிர்மலா தனது வேடத்தை தெலுங்கிலும் செய்தார்.
சில ஆண்டுகளுக்கு பின், அதே விஜய நிர்மலா அதே பின்னி படத்தை தானே டைரக்ட் செய்து முக்கிய கதாப்பாத்திரமான பின்னி(சித்தி) வேடத்தில் நடித்தார்.
தன் மகன் நரேஷை அதில் நடிக்க வைத்தார். துளசி (ஒரிஜினல் விஜய நிர்மலா வேடமேற்றார்)
அதிலும் காலமிது காலமிது போல பாடலுண்டு இதோ
http://www.youtube.com/watch?v=_dDanwSQz5w
http://www.youtube.com/watch?v=TE9a2nPYCIY