ஓ மாமா ,முல்லை பூவை போல என்னை கிள்ளு பாட்டிலா? அது ஷோபனா என்ற ஒரு துணை நடிகை என்று வாசு சார் சொன்னார்.
விஜய சந்திரிகா ராஜாத்தி என்ற பட கதாநாயகி அல்லவா?
Printable View
கோ,
உன் சந்தேகத்தை எத்தனை முறை தீர்ப்பது?
இப்பவாவது தீர்த்துக்கோ. எனக்கு தெரிஞ்சதை சொல்றேன்.
'இருதுருவம்' படத்தில் 'ஒ...மா...மாமா' பாடலுக்கு பி.எஸ். வீரப்பாவுடன் ஆடும் நடிகை ஷப்னம் என்ற சோபனா. பம்பாயிலிருந்து வரவழைக்கப்பட்ட ஐட்டம் டான்சர். இவரே 'சொர்க்கம்' படத்தில் 'அழகு முகம்...பழகு சுகம்' பாட்டிற்கும் நடனமாடுவார். பார்ப்பதற்கு அப்படியே அச்சு அசலாக தமிழ் நடிகை விஜயசந்திரிகா மாதிரியே இருப்பார். ('மூன்று தெய்வங்கள்' படத்தில் முத்துராமன் தவறாக தன் மனைவியை சந்தேகப்பட்டு கத்தியால் குத்திக் கொலை செய்து விடுவார். அதில் முத்துராமன் மனைவியாக நடிப்பவர்தான் விஜயசந்திரிகா. இதே விஜயசந்திரிகா 'தேன் கிண்ணம்' படத்தில் சுருளிராஜனின் ஜோடியாகவும் வருவார்.) கீழே படத்தைப் பாருங்கள்.
ஷப்னம் என்ற சோபனா. (பம்பாய்) ('சொர்க்கம்')
http://i1087.photobucket.com/albums/..._002284410.jpg
விஜயசந்திரிகா ('மூன்று தெய்வங்கள்')
http://i1087.photobucket.com/albums/..._002258440.jpg
ஷப்னத்துடன் 'அழகு முகம்...பழகு சுகம்' பாட்டிற்கு ஆடும் இன்னொரு டான்சர் உஷாநந்தினி அல்ல. (உஷாநந்தினி ஏன் இங்கு வருகிறார்? அப்போதெல்லாம் அவர் ஒன்றிரண்டு துக்கடா வேடங்களில் மலையாளத்தில் பறைஞ்ன்னு கொண்டிருந்தார்) அவர் பெயர் நந்தினி. தெலுங்கு நடிகை. பத்தோடு பதினொன்று துணை நடிகை. நிறைய விட்டலாச்சார்யா படங்களில் நடனமாடுவார். இவரே தலைவர் 'டாக்டர் சிவா'வில் வித்தியாசமாக கோவை சவுந்திரராஜன் குரலில் ஆடிப் பாடி கலக்கும் 'கன்னங்கருத்த குயில் நிறத்தவளே' பாடலில் தலைவருக்குப் பக்கத்திலே ஆதிவாசிகள் உடையணிந்து ஆடுவார்.
நந்தினி ('சொர்க்கம்' படத்தில் 'அழகு முகம்...பழகு சுகம்' பாட்டிற்கு)
http://i1087.photobucket.com/albums/..._002436295.jpg
"டாக்டர் சிவா"வில் அதே நந்தினி (கன்னங்கருத்த குயில் நிறத்தவளே)
http://i1087.photobucket.com/albums/..._004543120.jpg
இன்னொருவர் பெயர் பிரபாவதி என்று நினைவு. (வலதுபுறம் இருப்பவர்). நிச்சயமாகத் தெரியாது. இவரும் தெலுங்கு நடிகையே. மற்ற நடன நடிகைகளும் ஆந்திராவை சார்ந்தவர்களே!
பிரபாவதி (not sure)
http://i1087.photobucket.com/albums/..._002442568.jpg
மற்ற இருவர்கள். (பெயர்கள் தெரியவில்லை)
http://i1087.photobucket.com/albums/..._002445771.jpg
ஸ்டில்களுடன் நிருபித்தாயிற்று. போதுமா?...சந்தேகம் தீர்ந்ததா? பரிசு எங்கே?
துளிவிஷத்தின் போது துளிவிஷம் கலந்து என்னைக் கெடுக்கும் உன்னை.......
இந்த பதிவு சமீப காலத்தில் இதை மறு வெளியீடு செய்து காசு பார்த்த சுப்பு என்ற விநியோகஸ்தருக்கு சமர்ப்பணம்.
நீதி-1972
ஒரே வருடம் இரு படங்கள் வெளியிடும் சாமர்த்தியம்,மற்றும் சிவாஜி உச்சத்திலிருந்த போது இந்த சலுகையை அனுபவித்த நண்பர் பாலாஜி ஒருவரே.
சட்டத்தினால் குற்றவாளியை தண்டிக்கலாம். ஆனால் திருத்த ,குற்றத்தால் பாதிப்படைந்த குடும்பத்திற்கு வழி பண்ண... என்று oneline . பாலாஜி சூத்திர படி வெற்றி பெற்ற துஷ்மன் தமிழானது. வசந்த மாளிகையில் சுகமாய் மிதந்து கொண்டிருந்த ரசிகர்களுக்கு,எதிர்பார்ப்பு எகிறி கிடந்தது.ஆனால் ஒரே மாதிரி படங்களை எதிர்பார்க்கும் மனோபாவம் வாங்கும் எங்களுக்கும் இல்லை ,கொடுக்கும் அவருக்கும் இருந்ததில்லை.மாறுபட்ட ...ஆனால் எப்படி மாறுபட்ட ...என்ற குழப்பம். ஒரு கல்யாணத்திற்கு சென்னை வந்த போது என் cousin ஒருவனிடன் கேட்ட போது ,மூல படத்தை பார்த்து அவன் சொன்னது....சிவாஜிக்கு நல்ல ரோல்.
தன்னுடைய குடி பழக்கத்தால் ,ஒரு பனி நிறைந்த காலையில் விவசாயி ராமுவை ,லாரி டிரைவர் ராஜா விபத்துக்குள்ளாக்கி ,அவன் மரணத்திற்கு காரணமாக , ராமுவின் குடும்ப நிலையை கருத்தில் கொண்டு ,நீதிபதி மேல் அனுமதியுடன் தண்டனை காலம் இரண்டு வருடங்களை ,அந்த குடும்பத்துடன் பணி செய்து கழிக்க தீர்ப்பளிக்கிறார் .அங்கு வரும் ராஜா முதலில் ஊர் எதிர்ப்பு, குடும்ப எதிர்ப்பை எதிர்கொண்டாலும்,தன்னை மாற்றி கொண்டு,அக்குடும்பத்திற்கு நன்மை செய்து ஊர் மக்களின் நன்மதிப்பு,மற்றும் பார்ட் டைம் காதலி பெற்று ,கடைசியில் ஒப்பு கொள்ள மறுக்கும் ராமுவின் மனைவி அன்பையும் பெற்று ,தண்டனை முடிந்த பிறகும் ஆயுள் சிறையாய்,அவர்களுடனே கழிக்க விரும்புவதுடன் நாலு கால்துண்டாய் படம் அழகாக முடியும்.
நடிகர்திலகத்தின் கொடி முதல் காட்சியிலிருந்து பட்டொளி வீசி பறக்கும்.இளமை நிறைந்த ஆண்மையின் (rugged ) செதுக்கி வடித்த முக அழகோடு சிவாஜி ரசிகர்களை கட்டி போட்டு உச்சம் தொட்ட 1972. ஆனால் கெட்டவராக வரும் காட்சிகளை விட திருந்திய காட்சிகள் அதிகம்.(என்ன செய்வது ஈயடிச்சான்.....)எனக்கு அவர் கெட்டவராக வரும் படங்களில் அவர் பாத்திரம் மறையும் போதோ ,அல்லது திருந்தும் போதோ கொஞ்சம் கடுப்படிக்கும்.
முதல் காட்சி முனியாண்டி விலாஸ் கோழி கறியோடு அத்தேரிக்க்... பண்ணும் சீன்.(வேறு யார் ,அப்போதைய ஆஸ்தான நர்த்தகி சகுந்தலாதான்.)கொஞ்சம் ஹிந்தி வாசனை அடித்தாலும் மாப்பிள்ளைய பார்த்துக்கடி பாடல் செம ரகளை.சிவாஜி அடிக்கும் லூட்டி ,அவர் grace குறையாமல் ஸ்டைலிஷ் ,ரௌடியிஷ்,ruggedness கொண்டு போடும் ஸ்டெப்ஸ் ,பண்ணும் அக்குரும்பு, அய்யோடா....படத்தை தூக்கி விடும் ஜிவ்வென்று.இந்த இடத்தில் ஒன்றை குறித்தே ஆக வேண்டும்..பாத்திரத்தோடு அவர் item டான்ஸ் அணுகும் அழகு. குடிமகனே பாட்டில் சற்று மென்மையான ,ஆனால் காமத்துடன் கூடிய ,ஒரு பணக்கார அலட்சியம்.காமத்தை கூட உதைத்து வெளியிடுவார். ஆனால் டிரைவர் ராஜா ஓசி கிராக்கி. மற்றோரை வலுகட்டாயமாக துரத்தி ,தன்னை விரும்பும் நடன காரியிடம் அத்து மீறுவதில் ஒரு கீழ் நிலை மனிதனின் அவசர இங்கிதமில்லா காமம். ப்ரைவசியாவது மண்ணாவது என்ற ஒரு மன பான்மை. ஒரு கீழ்த்தரமான அணுகுமுறை காமம். அப்பப்பா என்ன ஒரு genius நம்மிடையே. இரு பாடலையும் அடுத்தடுத்து பாருங்கள் சொல்வது புரியும்.
முதல் ஒரு மணிநேரம் சிவாஜியின் அங்கலாய்ப்பு,கோபம்,மாற நினைக்கும் அணுகு முறை என்றே போகும்.சிவாஜிக்கு இது பால் பாயாசம் சாப்பிடுவது போல அவ்வளவு இலகுவான ஸ்கோர் பண்ணும் இடங்கள்.நாளை முதல் குடிக்க மாட்டேன் (அரசை சாடல்)கண்ணதாசன்-எம்.எஸ்.வீ,டி.எம்.எஸ் -சிவாஜி இணைவு ஒரு பாடலை எவ்வளவு சுவாரஸ்ய படுத்த முடியும் என்ற சாட்சி.
பிறகு ஒரு மணி நேரம் கழித்து காதலி,அங்கலாய்க்கும் ட்ராக்டர் பொன்னம்மா என்று இரு பெண் நண்பிகள் தொட்டு கொள்ள சுவையான ஊறுகாய் போல.(ஏ.எல்.நாராயணன் கொஞ்சம் டபுள் கொடுத்து வசன விளையாட்டு)
முதலில் குழந்தைகள்,பெற்றோர்கள்(விவசாயம் செய்து), பிறகு காதலில் சொதப்பும் ராமுவின் தங்கை (கல்யாணம் செய்து வைத்து)என்று ஒவ்வொருவர் மனதையும் கவரும் இடங்கள். சிவாஜியிடம் வழக்கமாக எதிர்பார்க்கும் விஷயங்களே.
ஆனால் முடிவில் ஒரு சண்டை காட்சி வரும் பாருங்கள். அவ்வளவு நன்றாக பண்ணியிருப்பார் தலைவர். அந்த கோடவுன்,இறைச்சி காப்பு அறை இவற்றில் சண்டை காட்சி சுவையாக ,சுவாரஸ்யமாக,சுறுசுறுப்பாகவே வந்திருக்கும்.
இந்த காட்சியில் சிவாஜி ஓடும் ஸ்டைல் mahendraraj விமர்சனத்தில் படித்த பிறகு பார்த்தேன். என்னவொரு மாறுதலான ஓட்டம்.(நெஞ்சிருக்கும் வரை,சிவந்த மண்,சுமதி என் சுந்தரி படங்களில் ஓடும் விதம் கூட மாறுபடும்.மேதை மேதைதான்)
எம்.எஸ்.வீ இரண்டு பாடல்கள்(மாப்பிளைய,நாளை முதல்) ஓகே. மற்றது தெலுங்கு டப்பிங் ஸ்டைல்(ஓடுது பார்,எங்களது பூமி) ஓடுது பார் பாட்டில் கர்ம வீரர் பக்கம் நிற்கும் சிவாஜியை பட சிவாஜிக்கு இடித்தே காட்டுவார் கலை செல்வி.அவருக்கு ரொம்ப வேலை வைக்காத படம்.
மஸ்தான் கேமரா,மாதவன் சண்டை எல்லாமே வழக்கம் போல திருப்தி.
சௌகார் ஜானகி,சுப்பைய்யா,காந்திமதி என்று உணர்ச்சி குவியல் மூச்சு திணற திணற. எப்படி சுந்தரராஜன் என்றதும் ஜெயகுமாரி ஞாபகம் வருமோ ,அதே போல சௌகார் என்றதும் பொறி தட்டியிருக்க வேண்டாமோ?கற்பழிக்க கிராமத்து பெரிய மனிதர் மனோகர்.வீச்சு வீச்சு என்று கெட்ட பேச்சு பேச வாசு. சுந்தர ராஜன்.பாலாஜி,சந்திரபாபு(கொஞ்சம் சுமார் scope )எல்லாரும் அங்கங்கே. முதல் ஒரு மணி நேர சுவாரஸ்யம் அடுத்த ஒரு மணி நேரம் குறைந்து தொய்வு தெரியும் போது கலைச்செல்வி,மனோரமா காட்சிகள் கொஞ்சம் கிக் கொடுக்கும். தங்கை(ஜெய கௌசல்யா).அவர் காதல் சேர்த்து வைக்கும் எபிசொட் ஏனோதானோ.ஆனால் வீடு வரும் தங்கையை வரவேற்கும் அண்ணனாக சிவாஜி வெளிச்சம் கொடுப்பார். இறுதி காட்சி வேண்டிய அளவு பரபரப்பு.(வயல் நெருப்பு,கதாநாயகி அப்பா கொலை ,ராதா கடத்தல்,சீதா மீட்பு,கதாநாயகன் சண்டை)
இந்த படத்திற்கு சி.வீ.ஆர் ஒரு தப்பான தேர்வு. ஏ.சி.டி கொஞ்சம் நன்றாக செய்திருப்பார். ஒரே உடையில் சிவாஜி,.(ஒரே மாற்றம் ஜிப்பா அதுவும் ஒரே காட்சி)மற்றோருக்கும் ஒரே உடைதான். ரியலிசம் என்ற போர்வையில் படுக்கும் போது கூட மாற்றாமல் துவைக்காமல்,கிழிசல் தைக்காமல் ஒரு அசலூர் முழுக்கை உடை(அதுவும் வருட கணக்கிலா... பாவம் சத்யஜித்ரே பிச்சை வாங்க வேண்டும்)..சாரி...சி.வீ.ஆர் உங்களுக்கு ராங் நம்பர் போட்டு விட்டார் பாலாஜி.அதே போல உளுந்தூர் பேட்டையில் பாம்பே சிவப்பு விளக்கு விடுதி.(நானும் நண்பர்களும் உளுந்தூர் பேட்டை டிக்கெட் வாங்கி போய் பார்த்து ஏமாந்தோம்)லாரியில் அடிபட்ட குரல் கேட்டு ஓடி வருவது ராமுவின் குடும்பம் மட்டுமே.(இயக்குனர் ஓரமாக டீ குடித்து கொண்டிருந்திருப்பார் போல) குடும்பம் நமக்கு பஸ்ஸில் வரும் பிட் நோட்டிஸ் போல நொண்டி தந்தை,குருட்டு தாய்,கோரமான அழுமூஞ்சி மனைவி,அதிக பிரசங்கி பிள்ளைகள்).ஹீரோ ஒரு இட்லியாவது சுயமாக சிந்தித்து வாங்கி கொடுத்திருக்கலாம். கலர் படம் என்பதால் ஜிலேபி breakfast ஓகே.
இந்த படத்தை சுவாரஸ்யம் ஆக்குவது சிவாஜியின் கட்டி போடும் ஆளுமை,மனிதம் நிறைந்த திரைக்கதை,ரொம்ப அன்னியமாகாத (இரு துருவம்,புண்ணிய பூமி) பாத்திரங்கள்,களம் இவையே.
நன்கு வெற்றி பெற்ற குடும்ப பார்வையாளர்களை ஈர்த்த படம்.
முக ஒற்றுமையை வைத்து விஜய சந்திரிகா என எழுதி விட்டேன். தெளிவு படுத்தியமைக்கு மிக்க நன்றி வாசு சார்
ஓணாண்டி புலவர் எதில் புலமை பெற்றவர் என்று தெள்ள தெளிவர விளங்கி விட்டது. யாரங்கே தவறான விடை சொன்னவரை....(வாசகர்கள் ஊகத்திற்கு) ஓணாண்டி புலவர்க்கு பரிசு துளி விஷம்.(அவர் தயாரிப்பை அவருக்கே ஊட்டி விடலாம்)
நியாயமாய் ராஜா வெளிவந்த சூட்டோடு சச்சா ஜூட்டா திரைப்படத்தைத் தான் தயாரித்து ஜனவரி 1973ல் வெளியிடுவதாக அப்போது பரவலாக ஒரு பேச்சு இருந்தது. ஆனால் தயாரிப்பு உரிமை தொடர்பான ஒப்பந்தம் பரஸ்பரம் அமையாததாலும் வேறு காரணங்களாலும் சச்சா ஜூட்டா திரைப்படத்தைப் படமாக்கும் முயற்சி ஈடேறவில்லை. துஷ்மன் வடக்கிலும் கர்நாடகத்திலும் நல்ல வரவேற்பைப் பெற்ற படம். தமிழகத்தில் அந்த அளவு வெற்றி பெறவில்லை. பாலாஜியின் வெற்றி ரகசியங்களில் ஒன்று தமிழகத்தில் வெற்றி பெற்ற வேற்று மொழிப் படங்களை ரீமேக் செய்ய மாட்டார். அதனால் தான் அவர் ஆராதனா பாபி யாதோன் கி பாரத் போன்று தமிழகத்தில் பெரும் வெற்றி பெற்ற படங்களை ரீமேக் செய்ய முன் வரவில்லை. அவருடைய கணிப்பு பெரும்பாலும் பொய்த்ததில்லை. சச்சா ஜூட்டா உரிமையைப் பற்றி தினத்தந்தியில் ஒரு விளம்பரம் கூட வந்ததாக ஞாபகம். 1973ன் துவக்கத்தில் ஜனவரி 26 அன்று சச்சா ஜூட்டா தமிழில் நடிகர் திலகம் நடிக்க வெளிவந்திருந்தால் அது பிரம்மாண்டமான வெற்றியை, அதுவும் ராஜாவை மிஞ்சக் கூடிய அளவில் வெள்ளி விழா கொண்டாடியிருக்கும்.
அதுவும் அந்த யோகிதும் முஜ்சே பாடலைப் பார்க்கும் போதெல்லாம் அந்தப் படகில் நடிகர் திலகத்தைக் கற்பனை செய்து பார்ப்போம். கிட்டத் தட்ட இன்னொரு முல்லை மலர் மேலே பாடலின் ரேஞ்சுக்கு பிரபலமாகி யிருக்கும்.
நீதி ... முழுக்க முழுக்க ரசிகர்களுக்கென்றே உருவாக்கப் பட்ட தமிழ்த் திரை வடிவம். இதை சமீபத்தில் மகாலக்ஷ்மியில் கண் கூடாகப் பார்த்தோம். அன்று தேவி பேரடைஸில் எந்தெந்தக் காட்சிகளுக்கெல்லாம் அளப்பரை இருந்ததோ அதே போன்று சமீபத்திலும் இருந்தது. அப்போது மிகவும் பரபரப்பான கைதட்டல் பெற்ற வரிகள், "பிறந்த நாளில் போஸ்டர் போடும் தலைவர் பாருங்க, போஸ்டர் போடும் வேலை தனிலே மாஸ்டர் பாருங்க," அதுவும் நடிகர் திலகமும் காமராஜரும் தோன்றும் போது ... தியேட்டரே அதிர்ந்தது .. அன்று மட்டும் அல்ல.. இன்று இன்னும் அதிகமாய்...
சிறுவனாக நடித்த ஆதிநாராயணன் திருவல்லிக்கேணி வாசி. அப்போது அந்தப் பையனைப் பார்க்கும் போதெல்லாம் சிவாஜி ரசிகர்கள் வலியச் சென்று பாராட்டுவோம். அவனும் மிகவும் பெருமையுடன் கூறிக் கொள்வான். தற்போது அவரைப் பற்றிய விவரம் தெரியவில்லை. டிச.7 1972 அன்று காலை முதல் வேலையாக தினத்தந்தி வாங்கி அந்த முழுப்பக்க விளம்பரத்தைக் கத்தரித்து விட்டேன். இன்று வரை 42 ஆண்டுகளாக அந்த விளம்பரம் பாதுகாக்கப் பட்டு வருகிறது.
நீதி படத்திற்கு சி.வி.ஆர். சரியான தேர்வு. இந்தப் படம் ஏ.சி.டி.யிடம் போயிருந்தால் ஜாலி முற்றிலும் இழந்து சோக ரசம் அதிமாகியிருக்கும். இளைஞர்களை ஈர்க்கும் யுக்தி சி.வி.ஆரிடம் அதிகமாகவே இருக்கும்.
மாற்று உடை தரப்படாததால் தான் அவர் ஒரே உடையில் வருகிறார். சாப்பாட்டுக்கு போலீஸ் அதிகாரியிடம் சென்று முறையிடத் தெரிந்தவருக்கு, உடை விஷயத்தில் சென்று முறையிட மனம் வரவில்லை, அந்தக் குடும்பத்திடமும் கேட்க முடியாது, ஓரளவிற்கு அந்தக் குடும்பத்திடம் பழகி அதன் பிறகே மாற்று உடை தரிக்கிறார்.
இது உண்மையில் பாராட்டப் பட வேண்டிய பாத்திரப் படைப்பு என்று தான் நான் சொல்வேன்.
நீதி படத்திலிருந்து ...
http://i1087.photobucket.com/albums/...n31355/3-5.jpg
உபயம் வாசு சார்
நீதி கார்த்திக் அவர்களின் பதிவு ... மீண்டும் இங்கே..
பதிவிட்ட நாள் 7th December 2011, 02:10 PMQuote:
'நீதி' நினைவுகள்
ரீமேக் மன்னரான பாலாஜியின் சுஜாதா சினி ஆர்ட்ஸ் சார்பில் எடுக்கப்பட்ட படம் நீதி. இந்தியில் ராஜேஷ் கன்னா - மும்தாஜ் ஜோடி நடிப்பில் வெளியான 'துஷ்மன்' படத்தின் தமிழ்த்தயாரிப்பு.
1972 டிசம்பர் 7 அன்று சென்னை தேவி பாரடைஸ், பிரபாத், சரவணா திரையரங்குகளில் வெளியான நீதி, மக்களின் எகோபித்த ஆதரவுடன் தேவி பாரடைஸில் 99 நாட்களும், பிரபாத்தில் 70 நாட்களும், சரவணாவில் 77 நாட்களும் வெற்றிகரமாக ஓடி வசூலை வாரிக்குவித்தது. சென்னையில் 'எலைட் மூவீஸார்'தான் படத்தின் விநியோகஸ்தர்கள். (இவர்கள் ஏற்கெனவே எங்கிருந்தோ வந்தாள் படத்தையும், இவர்களின் சகோதரி நிறுவனமான (சிஸ்டர் கன்ஸர்ன்) கிரஸெண்ட் மூவீஸார் 'ராஜா' படத்தையும் சென்னையில் விநியோகித்தனர். மூன்றும் பெரும் வெற்றி கண்டது).
இப்படம் வெளியானபோதும் சென்னையில் முதன்முறையாக (நிலக்கரி தட்டுப்பாட்டால்) மின்சாரப் பற்றாக்குறை ஏற்பட்டு, திரையரங்குகளில் காட்சியின் எண்ணிக்கையைக்குறைக்குமாறு அரசாங்கம் அறிவுறுத்தியது. அதன்படி, படம் வெளியாவதற்கு முன் தினசரி இரண்டு காட்சிகள் மட்டுமே ஓட்டப்படும் என்று சொல்லப்பட்டு இரவுக்காட்சிகளுக்கு டிக்கட் ரிசர்வ் செய்யப்படவில்லை. ஆனால் 'நீதி' படம் வெளியாவதற்கு முன்தினம், மூன்று திரையரங்குகளிலும் ஒரு காட்சி டீஸல் ஜெனரேட்டர் மூலம் ஓட்ட ஏற்பாடு செய்யப்பட்டதால் (தேவி காம்ப்ளக்ஸில் ஏற்கெனவே ஜெனெரேட்டர் வசதியோடனேயே கட்டப்பட்ட வளாகம் அது) மூன்று தியேட்டர்களிலும் தினசரி மூன்று காட்சிகளாகவே படம் ரிலீஸானது. நாளடைவில் மின்வெட்டு சீரானதால் தடையின்றி மின்சாரத்தின் மூலமாகவே தினசரி மூன்று காட்சிகள் திரையிடப்பட்டன.
வடசென்னை பிராட்வே சாலையிலிருந்த பிரபாத் தியேட்டரில், இப்படத்துக்கு முன்பும் இப்படத்துக்குப்பின்பும் அப்படியொரு ஓப்பனிங் ஷோ கூட்டம் பார்த்ததில்லையென்று அங்கிருந்தோர் சொன்னார்கள். இன்னும் சில முதியவர்கள், ஜெமினியின் சந்திரலேகா வெளியானபோது பார்த்த கூட்டத்துக்குப்பிறகு நீதி படத்துக்குத்தான் ஓப்பனிங் கூட்டம் நெருக்கியடித்ததாகச் சொன்னார்கள். அப்போது கிரௌனில் வசந்த மாளிகை பட்டையைக் கிளப்பிக்கொண்டு ஓடிக்கொண்டிருந்த நேரம்.
நீதி படத்துக்கு வந்து டிக்கட் கிடைக்காதோர், பக்கத்தில் பிராட்வே தியேட்டரில் ஓடிக்கொண்டிருந்த ஏ.வி.எம்.ராஜனின் 'பிரார்த்தனை' படத்துக்குப்போனதால், நீதி புண்ணியத்தில் பிரார்த்தனைக்கு சிறிது கூட்டம் சேர்ந்தது. (நீதி வெளியாகி ஒரு மாதம் கழித்து 'பிரார்த்தனை' வெளியானது).
கர்ணன், கைகொடுத்த தெய்வம் படங்களுக்குப்பின், நீதி பிரபாத்தில் 100 நாட்களைப் பூர்த்தி செய்யும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தபோது, நல்ல கூட்டம் இருக்கையிலேயே பிரபாத்தில் 70 நாட்களிலும், சரவணாவில் 77 நாட்களிலும் தூக்கப்பட்டது.
பாலாஜியின் தயாரிப்புக்களில், மிகக்குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டு நல்ல லாபத்தைச் சம்பாதித்துக்கொடுத்த படம் நீதி.
முதல்நாள் மாலைக்காட்சி பிரபாத்தில் பார்த்தேன். ஆரம்பம் முதலே அலப்பறைக்குக் குறைவேயில்லை. ராஜா படத்தில் எப்படி, எங்கே எங்கே என்று ஏங்க வைத்து தரிசனம் கொடுத்தாரோ அதற்கு நேர்மாறாக முதல் காட்சியிலேயே, லாரி ஓட்டிக்கொண்டு வரும் போது படத்தின் டைட்டில்கள் ஓடும். அப்போது ஜெயலலிதாவுக்கும் சௌகாருக்கும் யார் பெயரை முதலில் போடுவது என்பதில் லடாய் ஏற்பட்டதால், நட்சத்திரங்களின் பெயர் போடாமல் டெக்னீஷியன்களின் பெயர்கள் மட்டுமே காண்பிக்கப்படும். ரசிகர்கள் அதை எங்கே பார்த்தார்கள், அவர் லாரி ஓட்டும்போது ஸ்டைலாக தலைமுடியைக்கோருவதையும், பாட்டிலைக் கவிழ்ப்பதையும், மீசையை முறுக்குவதையும் கைதட்டி ரசித்தனர். (அந்தந்தக் காட்சிகளில் படம் சில விநாடிகள் ஸ்டில்லாக நிறுத்தப்பட்டு டைட்டில் ஓடும்).
அப்புறம் சகுந்தலா வீட்டில் கே.கண்ணனோடு ஒரு மினி சண்டை, அதைத்தொடர்ந்து சகுந்தலாவுடன் 'மாப்பிள்ளைய பாத்துக்கடி மைனாக்குட்டி' பாடலில் அவர் காட்டும் அட்டகாசமான ஸ்டைல் மூவ்முண்ட்டுகளுக்கு அலப்பறை காதைத்துளைத்தன. அதுபோல கோர்ட்டில் வாதடும்போதும் கைதட்டல் பற்ந்தன. பின்னர் சௌகார் வீட்டில் கொண்டு வந்து விடப்பட்டதும் சிறிது நேரம் தியேட்டர் சைலண்ட்டாக இருக்கும். பின்னர் 'நாளை முதல் குடிக்க மாட்டேன்' பாடலில் ஆரம்பித்து கடைசிவரை ஒரே அட்டகாசம்தான். அதிலும் கிளைமாக்ஸில் லாரியை ஸ்டார்ட் செய்து, குடோன் கதவில் மோதி தகர்த்து தொடர்ந்து மனோகருடன் சண்டைக்காட்சியில் தியேட்டரே அதகளம் ஆனது.
காட்சி முடிந்து வெளியே வந்தபோது, அதற்குள் மேட்னி பார்த்தவர்கள் படத்தைப் பற்றிச் சொல்லியிருந்ததால், இரவுக்காட்சிக்கு அந்த காம்பவுண்டே கூட்ட நெரிசலில் திணறியது.
படம் வெளியானது 1972 ஆச்சே.
பதிவிற்கான இணைப்பு http://www.mayyam.com/talk/showthrea...l=1#post779660