Originally Posted by
Murali Srinivas
சிவா அவர்களுக்கு இலங்கை பம்மலார் என்ற பொருத்தமான பட்டத்தை வழங்கிய கோபாலுக்கு நன்றி. நடிகர் திலகத்தின் இலங்கை சாதனைகளையும் ஒப்பீடுகளையும் பார்க்கும் போது மகிழ்ச்சி. அதிலும் நடிகர் திலகத்தின் கருப்பு வெள்ளை படங்கள் மற்றவர்களின் கலர் படங்களையெல்லாம் பின் தள்ளி முன்னணியில் நின்று சாதனை படைத்ததை படிக்கும் போது பிரமிப்பு ஏற்படுகிறது. இது பற்றி கேள்விப்பட்டிருந்தாலும் இப்போது இலங்கையை சேர்ந்த ஒருவரே அந்த தகவல்களையெல்லாம் துல்லியமாக எழுதுவது சந்தோஷமான விஷயம். எதிரொலி எல்லாம் செம பிரமிப்பு.
ஜீவ் சார் பதிவிடும் தகவல்களும் சிவா சார் கொடுக்கும் தகவல்களும் ஒரே போலதான் இருக்கிறது. சிவாஜி ரசிகராக இருப்பினும் இலங்கை தகவல்களில் பிழை இருப்பின் அதை சுட்டிக் கட்ட ஜீவ் அவர்கள் தவறியதே இல்லை.
சிவா சார், 1972-லும் இப்போது 2013-லும் தவறான தகவல்கள் கொடுப்பதை சொல்கிறீர்களே, இப்போது ஓடிக் கொண்டிருக்கும் ஆயிரத்தில் ஒருவன் படம் சென்னை சத்யம் திரையரங்கிலும் பேபி ஆல்பட் அரங்கிலும் மட்டுமே தலா ஒரு காட்சி ஓடுகிறது. ஆனால் பத்திரிக்கை விளம்பரத்தை பார்த்தால் எஸ்கேப் திரையரங்கிலும் ஓடுவதாக கொடுக்கிறார்கள். அந்த திரையரங்கில் 13 நாட்கள் மட்டுமே ஓடியது [முதல் வாரம் இரண்டு காட்சிகள், இரண்டாவது வாரம் ஒரு காட்சி]. ஆனால் அங்கே ஓடுவதாக விளம்பரம் கொடுகிறார்கள். இன்றைய டெக்னாலஜி உலகத்தில் விரல் நுனியில் உண்மைகள் தெரியும் இந்த காலக் கட்டத்திலும் அதுவும் குக்கிராமம் கூட இல்லை தமிழகத்தின் தலைநகரிலே இல்லாத ஒன்றை இருப்பதாக தொடர்ந்து சொல்கிறார்கள் என்றால் பழைய காலத்தைப் பற்றி என்னதான் சொல்ல மாட்டார்கள்?
ஒரு Flash Back நினைவிற்கு வருகிறது. அதிக நாட்கள் முன்பல்ல. இரண்டு வருடங்களுக்கு முன்னால் நடந்தத விஷயம். 2012 மார்ச் 16 அன்று வெளியான கர்ணன் மகத்தான மக்கள் ஆதரவுடன் ஓடிக் கொண்டிருக்கும் நேரம். நாஞ்சில் நகரில் 50 நாட்களை நிறைவு செய்து ஓடிக் கொண்டிருக்கிறது. 8 வாரங்களை நிறைவு செய்து 9-வது வாரமும் ஓடும் என நினைத்திருக்கின்ற நேரத்தில் இறுதியில் 56 நாட்களோடு படம் எடுக்கப்படுகிறது. 57-வது நாள் அதாவது 9-வது வாரம் வெள்ளியன்று தினசரிகளில் வெளியான விளம்பரத்தில் நாஞ்சில் நகரின் பெயரும் சேர்ந்து இடம் பெற்று விட்டது. உடனே மாற்று முகாம் நண்பர்கள் கர்ணன் படத்தின் வெளியிட்டாளர் திரு சொக்கலிங்கம் அவர்கள் ஏதோ கிரிமினல் குற்றத்தை செய்து விட்டதைப் போல பொங்கி எழுந்தார்கள். போஸ்டர் அடித்தார்கள். ஏன் நமது ஹப்பில் கூட ஒரு புதிய id உருவாக்கி தாக்கி எழுதினார்கள்.
உண்மையில் நடந்தது என்ன? அன்றைய நாளில் வெள்ளியன்று தினத்தந்தியின் அனைத்து பதிப்புகளிலும் சினிமா விளம்பரம் வெளியாக வேண்டுமென்றால் அதற்கு முந்தைய ஞாயிறன்றே விளம்பர matter-ஐயும் இடத்தையும் reserve செய்ய வேண்டும். ஏதாவது மாறுதலுக்கு உட்படுத்த வேண்டுமென்றால் [அதுவும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு] செவ்வாய்க்கிழமைதான் இறுதி நாள். ஞாயிறன்றும் சரி, செவ்வாயன்றும் சரி படம் வெள்ளியன்று மாற்றப்படும் என்பது முடிவு செய்யப்படவில்லை. வியாழன் மாலைதான் அப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டு படம் அன்றைய இரவுக் காட்சியோடு எடுக்கப்பட்டது. சூழ்நிலை இப்படி இருக்க வெள்ளியன்று வெளி வந்த விளம்பரத்தை எப்படி மாற்றியிருக்க முடியும்? அதன் பிறகு வந்த விளம்பரங்களில் நாஞ்சில் நகரின் பெயர் இடம் பெறவில்லை. ஒரு நாள் அப்படி வந்ததற்கே துடித்தவர்கள் எல்லாம் இப்போது மூன்று வாரங்களாக தவறான தகவலோடு விளம்பரம் வரும்போது எங்கே போனார்கள்?
மற்றவர்களை விட்டு விடுவோம். என்னுடைய வருத்தம் என்னவென்றால் படம் எஸ்கேப் -ல் ஓடவில்லை என்பது தெரிந்தும் நண்பர் வினோத் போன்றவர்களும் அந்த திரியில் மிக இளையவர் [எனக்கு தெரிந்தவரை அவர் நடத்தும் இணைய தளத்தில் நடிகர் திலகத்தைப் பற்றி பலரும் விஷம் கக்கினாலும் கூட தனிப்பட்ட முறையில் சிவாஜியின் மீது காழ்ப்புணர்ச்சி கொள்ளாதவர் என நான் நம்புகின்ற] கண்ணன் என்ற ரூப்குமார் ஆகியோரும் கூட இந்த தவறான தகவலை உயர்த்திப் பிடிக்கிறார்கள் என்று நினைக்கும் போது வேறு என்ன சொல்வது?
நம்மைப் பொறுத்தவரை நாம் எப்போதும் உண்மையாகவே வாழ்வோம். நாம் சொல்லி மகிழ உண்மை சாதனைகளே ஏராளமாக இருக்கின்றன. எனவே நான் எப்போதும் சொல்வது போல்
யாரும் தீமை செய்தாலும் நீங்கள் நன்மை செய்யுங்கள்
யாரும் பொய்யை சொன்னாலும் நீங்கள் மெய்யை சொல்லுங்கள்
நேர்மையாய் வாழ்வதில் தோல்வியே இல்லையே!
அன்புடன்