http://i59.tinypic.com/155tk4z.jpg
Printable View
இனிய நண்பர் திரு சத்யா
தங்கள் பதிவிட்ட மக்கள் திலகத்தின் நிழற்படங்கள் , காமதேனு சூப்பர் மார்க்கெட் திறப்பு விழா அழைப்பிதழ் , திரைப்பட மலர்கள் மிகவும் அருமை
எம்.ஜி.ஆரின் நடிப்பு, அலட்டிக்கொள்ளாத வகையைச் சேர்ந்தது. அவருடைய ரசிகர்களுக்கு அதுதான் பிடிக்கும். கவர்ந்திழுக்கும் புன்னகை, நெருக்கமான காதல் காட்சிகள், அசத்தும் சண்டைக்காட்சிகள், நெஞ்சில் மையம் கொள்ளும் பாடல்கள், சமுதாயத்திற்கானக் கருத்துகளைக் கொண்ட வசனங்கள் இவற்றின் அடிப்படையிலானதுதான் அவரது படம். இந்த ரெடிமேட் ஃபார்முலாவுக்குள் உடன்பட முடியாத புகழ்பெற்ற இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் ஒருநேரத்தில் எம்.ஜி.ஆர் பக்கம் கவனத்தைத் திருப்பவில்லை என்றாலும் பிறகு அவர்களும் அவரை வைத்து படம் இயக்கினார்கள்.
ஏ.வி.எம் நிறுவனத்தின் முதல் வண்ணப்படமான ‘அன்பே வா’ (இயக்கம்-ஏ.சி.திருலோகச்சந்தர்), ஜெமினி நிறுவனத்தின் முதல் வண்ணப்படமான ‘ஒளிவிளக்கு’ ஆகியவை எம்.ஜி.ஆர் நடித்தவையாகும். (ஒளிவிளக்கு, எம்.ஜி.ஆரின் 100வது படம்). பத்மினி பிக்சர்ஸ் அதிபர் பி.ஆர்.பந்தலு தயாரித்து இயக்கிய ‘ஆயிரத்தில் ஒருவன்’ தமிழ்த் திரையின் முக்கியமான படங்களில் ஒன்று. நீண்டகாலம் எம்.ஜி.ஆர் பக்கம் திரும்பாமல் இருந்த இயக்குநர் ஸ்ரீதர் பின்னர் ‘உரிமைக்குரல்’, ‘மீனவநண்பன்’ ஆகிய படங்களை எம்.ஜி.ஆரை வைத்து இயக்கினார். (அண்ணா நீ என் தெய்வம் என்ற படத்தையும் அவர் இயக்கினார். எம்.ஜி.ஆர் முதல்வரானதால் படம் பாதியில் நின்றுபோய், பின்னர் எம்.ஜி.ஆரின் மறைவுக்குப்பிறகு பாக்யராஜ் இயக்கத்தில் ‘அவசர போலீஸ் 100’ என்ற தலைப்பில் எம்.ஜி.ஆர் நடித்த காட்சிகளுடன் வெளியானது). புராணப்படங்களை வெற்றிகரமாகத் தந்த இயக்குநர் ஏ.பி.நாகராஜன் எம்.ஜி.ஆரை வைத்து ’நவரத்தினம்’ என்ற படத்தை இயக்கினார். இவர்களும் எம்.ஜி.ஆர் ஃபார்முலாவுக்குட்பட்டே இப்படங்களை இயக்கினர்.
துப்பாக்கியால் சுடப்பட்டு உயிர் மீண்ட எம்.ஜி.ஆரின் குரல் பாதிக்கப்பட்டபோதும், படங்களில் அவரே சொந்தக் குரலில் பேசினார். அவரது ரசிகர்கள் அதனை ஏற்றுக்கொண்டனர். அதுபோல சண்டைக் காட்சிகளில் வாள் சுழற்றுதல், சிலம்பம், மான்கொம்பு, சுருள்கத்தி சுழற்றுதல், பூட்டுப்போட்டு தாக்குதல் எனப் பலவகைகளைக் கையாண்டு ரசிகர்களைக் கவர்ந்தார். ரிக்*ஷாக்காரன் படத்திற்காக அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது(பாரத்) கிடைத்தது. தமிழ் நடிகர்களில் முதலில் தேசிய விருது வாங்கியவர் எம்.ஜி.ஆரே. அவர் நடித்த மொத்த படங்கள் 136. கடைசியாக வெளியான படம் எம்.ஜி.ஆரின் இயக்கத்தில் உருவான ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’(1978). படவேலைகள் நிறைவடைந்து எம்.ஜி.ஆர் முதல்வரானபிறகு வெளியானது. அவரது மறைவுக்குப்பிறகு வெளியான ‘அவசர போலீஸ் 100‘, ‘நல்லதை நாடு கேட்கும்’ ஆகியவற்றில் அவர் நடித்து வெளிவராத படங்களின் காட்சிகள் இடம்பெற்றன.
தனது படங்கள் மூலம் தன்னுடைய திரையுலக-அரசியல் செல்வாக்கை நிலைநிறுத்துவதில் எம்.ஜி.ஆர் தீவிரமாகவும் திட்டமிட்டும் கவனம் செலுத்தினார். அன்று தென்னிந்திய (தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்) நடிகர்களிலேயே அதிக சம்பளம் பெற்றவர் எம்.ஜி.ஆர்தான் (6 முதல் 8 லட்ச ரூபாய் வரை). மதுரை வீரனில் தொடங்கி நாடோடி மன்னன் வழியாகப் பல படங்களிலும் ஏழைகளுக்காகவும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினருக்காகவும் அவர் பேசிய வசனங்களும், வாயசைத்த பாடல்களும் அவருடைய அரசியல் செல்வாக்கிற்கு அடிப்படையாக அமைந்தன.
‘படகோட்டி’ படம் மூலம் மீனவ சமுதாயத்திடம் அவர் ஏற்படுத்திய தாக்கம் இன்றுவரை அவருடைய கட்சிக்கான வாக்கு வங்கியாக நிலைபெற்றிருக்கிறது. தொழிலாளி, விவசாயி, எங்க வீட்டுப் பிள்ளை உள்ளிட்ட பல படங்களும் அவருடைய அரசியல் செல்வாக்கிற்குத் துணை நின்றன. . எம்.ஜி.ஆரின் தயாரிப்பு- இயக்கத்தில் அன்றைய சூழலில் பெரும்பொருட்செலவில் வெளிநாடுகளில் உருவாக்கப்பட்ட ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தின் வெளியீட்டின்போது, தி.மு.க ஆட்சி கொடுத்த நெருக்கடியால் சென்னையில் சுவரொட்டி ஒட்டமுடியாத நிலை ஏற்பட்டது. அதற்குப் பதிலாக ஸ்டிக்கர்கள் மூலம் விளம்பரம் செய்யப்பட்டது. அதனை வாகனங்களிலும் கடைகளிலும் ஒட்டும் பணியில் அவருடைய ரசிகர் மன்றத்தினர் முழுமையாக ஈடுபட்டனர்.
தனது ரசிகர்களை மன்றங்கள் என்ற அமைப்பின் கீழ் ஒன்றிணைத்து அதனை அரசியல் தளத்திற்கு நகர்த்தி வெற்றி கண்டவர் எம்.ஜி.ஆர். 1972ல் அ.தி.மு.க என்ற தனிக்கட்சியைத் தொடங்கியபிறகு, திரைப்படத்தின் சில காட்சிகளையும், பாடல்களையும் நேரடி அரசியல் பிரச்சாரமாக்கி, 5ஆண்டுகளில் ஆட்சியையும் பிடித்தவர் அவர். முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். மும்முறை தொடர்ச்சியாக அவரது கட்சி தேர்தலில் வென்றது. 11ஆண்டுகாலம்(1977ஜூன்-1987டிசம்பர்) தமிழகத்தின் முதலமைச்சராக செயல்பட்டார்.
திரைப்படங்களை தன்னுடைய பிரச்சார ஊடகமாக, அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தி வெற்றி கண்டவர் எம்.ஜி.ஆர். அவரது இந்த அணுகுமுறையைக் கடுமையாக விமர்சிப்பவர்களும் உண்டு. எனினும், திரைப்படங்களை நுட்பமாகப் பயன்படுத்தி அவர் வெற்றி பெற்றார் என்பது மறுக்கமுடியாதது. எம்.ஜி.ஆருடைய படங்கள் சில, வெளியான காலத்தில் வணிகரீதியில் தோல்வியடைந்துள்ளன. ஆனால், பின்னர் அவை திரும்பத் திரும்ப வெளியிடப்பட்டு வசூலைக் குவித்தன. அவரது படப்பாடல்கள்தான் இன்றளவும் மக்களிடம் செல்வாக்கு பெற்றிருப்பதுடன் கட்சிக்கு வாக்கு சேகரிக்கும் பிரச்சாரப் பாடல்களாகவும் நிலைத்திருக்கின்றன. தொலைக்காட்சி, இணையதளம் என நவீனத் தொழில்நுட்பங்கள் வளர்ந்த நிலையிலும் எம்.ஜி.ஆரின் புகழ் ஒளிவீசுகிறது.
எம்…ஜி….ஆர்… என்ற ஆங்கில எழுத்துகள், இங்கே தமிழுக்குரிய எழுத்துகளைப்போல ஆகிவிட்டன...
courtesy - nakkeran
-கோவி.லெனின்.
சென்னை: "நாடோடி மன்னன் படத்தில் ஏழை மக்களுக்காக பேசிய வசனங்களை தமிழக முதல்வரானதும் நிறைவேற்றியவர் எம்.ஜி.ஆர்.,' என்று நடிகை சரோஜா தேவி புகழாரம் சூட்டினார். எம்.ஜி.ஆர், சரோஜாதேவி, எம்.என்.ராஜம் நடித்த "நாடோடி மன்னன்' படம் 1958ம் ஆண்டு வெளியிடப்பட்டது. மிகப் பெரிய வரவேற்பை பெற்ற படம் கடந்த சில ஆண்டுகளாக தியேட்டர்களில் திரையிடப்படாமல் இருந்தது. தற்போது சென்னையில் நான்கு தியேட்டர்களில் "நாடோடி மன்னன்' படம் திரையிடப்பட்டு அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த படத்தின் 49ம் ஆண்டு விழா சென்னையில் உள்ள ஆல்பர்ட் தியேட்டரில் நேற்று நடந்தது. எம்.ஜி.ஆருடன் ஜோடியாக நடித்த ஏழு நாயகிகள் கலந்து கொண்டனர். விழாவில் நடிகை சரோஜாதேவி பேசும் போது, ""எம்.ஜி.ஆரைப் போல சிறந்த மனிதர் கிடையாது. மனித நேயம் உள்ள மகா மனிதன். "நாடோடி மன்னன்' படத்தில், "நாடாள வந்தால் ஏழைகளுக்காக எல்லாம் செய்வேன்' என்று எம்.ஜி.ஆர்., வசனம் பேசினார். அவர் முதல்வர் ஆனதும் படத்தில் சொல்லிய அத்தனையும் மக்களுக்கு செய்தார். ஒரு அரசியல்வாதி எளிதாக முதல்வராகிவிடலாம். ஆனால், ஒரு நடிகர் முதல்வராவது கஷ்டம். எம்.ஜி.ஆர்., தமிழகத்தை ஒரு ஆண்டு அல்ல இரண்டாண்டு அல்ல, பதினொரு ஆண்டுகள் ஆண்டார். மக்களுக்கு எவ்வளவோ உதவிகளை செய்தார். எம்.ஜி.ஆர்., இறக்கவில்லை. எல்லார் நெஞ்சத்திலும் எப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். திகழ்ந்தால் எம்.ஜி.ஆரைப் போல திகழவேண்டும், வாழ்ந்தால் எம்.ஜி.ஆரைப் போல வாழ வேண்டும். எனது கடைசி மூச்சிருக்கும் வரை எம்.ஜி.ஆரை நினைத்துக் கொண்டிருப்பேன். தமிழக மக்களை மறக்க மாட்டேன்,'' என்றார்.
அன்று எம்.ஜி.ஆருடன் கதாநாயகிகளாக நடித்த நடிகைகளான எம்.என்.ராஜம், பத்மினி, சரோஜாதேவி, ராஜசுலோசனா மற்றும் வெண்ணிற ஆடை நிர்மலா ஆகியோருடன் பாடகர் டி.எம்.சவுந்தரராஜனும் நாடோடிமன்னன் படத்தினை இரசிக்கின்றார்கள்.
நடிகை பத்மினி பேசும் போது, ""மதுரை வீரன் படத்தில் எம்.ஜி.ஆருடன் நடித்தேன். "மருதநாட்டு இளவரசி, ராஜா தேசிங்கு, அரசிளங்குமரி, ராஜ ராஜன்' என 15க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறேன். சரித்திரம் படைத்தவர் எம்.ஜி.ஆர்., அவரே ஒரு சரித்திரம்,'' என்றார். நடிகை எம்.என்.ராஜம் பேசும் போது, ""இங்கு வந்திருக்கும் கூட்டத்தை பார்க்கும் போது படம் இன்று தான் வெளியானது போல் இருக்கிறது. படம் வெளியாகி 49 ஆண்டுகள் ஆகிவிட்டன. எம்.ஜி.ஆர்., புகழ் இன்னும் நுõறாண்டுகளுக்கு மேல் இருக்கும். "நாடோடி மன்னன்' படத்தில் ஒரு சீனில் "என்னை நம்புகிறாயா சகோதரி' என்று எம்.ஜி.ஆர்., என்னிடம் வசனம் பேசுவார். அதற்கு "நான் மட்டுமல்ல நாடே நம்பும்' என்று பதில் சொல்வேன். எம்.ஜி.ஆர்., முதல்வரானதும் ஒரு முறை என்னிடம் பேசும் போது "நாடே என்னை நம்பும் என்று சொன்னாய்; முதல்வராகி விட்டேன்' என்று சந்தோஷமாக கூறினார். அதனை மறக்க முடியாது,'' என்றார்.
நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா பேசும் போது, ""நான் வாழும் வாழ்க்கையில் சிறப்பு இருக்கிறது என்றால் அதற்கு எம்.ஜி.ஆர்., தான் காரணம். உயிருள்ள வரை எம்.ஜி.ஆரின் நினைவு என்னை விட்டு போகாது,'' என்றார். நடிகை மஞ்சுளா பேசும் போது, ""இன்று எனது பேத்திக்கு பிறந்த நாள். அதில் பங்கு கொள்ளாமல் இங்கு வந்திருக்கிறேன். எம்.ஜி.ஆரின் மீது அத்தனை மரியாதை வைத்திருக்கிறேன். எம்.ஜி.ஆருடன் நடிக்க வேண்டும் என்று நினைத்த போது எங்கள் குடும்பம் நடுத்தர குடும்பம். எம்.ஜி.ஆரும் சரோஜாதேவியும் இணைந்து நடித்த படத்தில் சரோஜாதேவியின் படத்தை நீக்கிவிட்டு என் படத்தை ஒட்டி வைப்பேன். அப்படியிருந்த நான் எம்.ஜி.ஆருடன் "ரிக்ஷாக்காரன்' படத்தில் நடித்தேன். அதன்பிறகு நிறைய படங்களில் நடித்திருக்கிறேன். இன்றைக்கும் நான் சாப்பிடும் போது பெருமாளேன்னு நினைக்கும் போது எம்.ஜி.ஆரையும் நினைத்துக் கொள்வேன்,'' என்றார். நடிகை ராஜசுலோசனா பேசும் போது, ""ஏழை, எளிய மக்களின் நலனில் அக்கறை கொண்டவர் எம்.ஜி.ஆர்., அவரைப்போல இனி ஒருவரை பார்க்க முடியாது,'' என்றார்.
திரைப்பட பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் பேசும் போது, ""எம்.ஜி.ஆருக்கு ஏராளமான பாடல்களை பாடியுள்ளேன். நான் பாடியதைப் போல உலகத்தில் யாரும் பாட முடியாது. "நான் பார்த்திலே அவர் ஒருத்தரைத்தான் நல்ல அழகனென்பேன்' என்றால் அது எம்.ஜி.ஆரைத்தான் சொல்வேன். எம்.ஜி.ஆர் சரோஜாதேவி சினிமாவில் பொருத்தமான ஜோடியாக ரசிகர்கள் மனதில் இடம்பெற்றிருந்தனர். எம்.ஜி.ஆர்., படத்தில் சொன்ன நல்ல விஷயங்களை நிஜத்தில் அவர் ஆட்சியில் செய்து காட்டினார்,'' என்றார். திரைப்பட இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் பேசும் போது, ""சரித்திரம் படைத்தவர், சாதனையாளர். அவரோடு பணி புரிந்ததை பாக்கியமாக கருதுகிறேன். எம்.ஜி.ஆர்., மக்களின் மனதில் என்றென்றும் வாழ்வார்,'' என்றார். விழாவில் எஸ்.எஸ்.ராஜேந்திரன், ராஜஸ்ரீ, சச்சு உட்பட பலர் கலந்து கொண்டனர். அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து "நாடோடி மன்னன்' படம் பார்த்து மகிழ்ந்தனர்.
நன்றி: தினமலர்
ரிக்ஷாக்காரன் (1971)
கதை சுருக்கம்
1971 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். நடித்து வெளிவந்த படங்கள். குமரிக்கோட்டம், ஒரு தாய் மக்கள், நீரும் நெருப்பும் (இரட்டை வேடம்), ரிக்ஷாக்காரன் ஆகிய நான்கு படங்களாகும். இந்த நான்கு படங்களில், ரிக்ஷாக்காரன் எம்.ஜி.ஆருக்கு தேசிய விருது பெற்றுத் தந்த படம். எம்.ஜி.ஆர். தனது சொந்த நிறுவனம் போல கருதி வந்த சத்யா மூவீஸின் தயாரிப்பு.
கதை என்று சொல்ல வேண்டுமென்றால் படித்த இளைஞன் ஒருவன் ரிக்ஷாக்காரனாகி சமுதாயத் தொண்டனாக உழைப்பதுதான். அவன் வழக்கறிஞர், நீதிபதி, சோறு விற்றுப் பிழைக்கும் ஒரு பெண்மணி, ஒரு கல்லூரி மாணவி ஆகியோரைச் சந்திக்கிறான்.
அவர்களால் ஏற்பட்ட சம்பவங்கள் அவனை வெகுவாகப் பாதிக்கின்றன. பெரிய மனிதப்போர்வையில் இவர்களை அழிக்கத் துடிக்கும் கைலாசம் என்ற நயவஞ்சகனுடன் நேருக்கு நேர் மோதியதன் விளைவை கதை விவரிக்கிறது.
அறிவும் ஆற்றலும் ஒன்று சேர வேண்டும், படிப்பும் உழைப்பும் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்ற உயர்ந்த கருத்தை உலகிற்கு தெரிவிக்கவே, படித்த பட்டதாரியான கதாநாயகன் ரிக்ஷா ஓட்டும் தொழிலை மேற்கொள்கிறான். முடிவில் தர்மம் வெற்றி பெறுகிறது.
எம்.ஜி.ஆர். சொல்ல நினைத்த கருத்துக்களை வலியுறுத்த அவற்றிற்கேற்ற விதத்தில், கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொள்வதில் அவருக்கு நிகர் அவரே என்பதை ரிக்ஷாக்காரன் படத்திலும் நிரூபித்திருக்கிறார்.
அவரது நடிப்பு, ஜனரஞ்சகமாக ஏகோபித்த பாராட்டுக்களை குவித்தது. உடன் நடித்தவர்கள் தங்களின் பொறுப்பை உணர்ந்து கதாபாத்திரத்திற்கு உயிரூட்டியுள்ளார்கள். திகட்டாத அளவுக்கு கோர்வையாக கதை அமைப்பதில் வல்லவரான ஆர்.எம். வீரப்பன் திரைக்கதையை வடிவமைக்க ஆர்.கே. சண்முகம், வசனம் எழுத, எம். கிருஷ்ணன் அற்புதமாக இயக்கியிருந்தார்.
இந்தப் படத்தில் எம்.ஜி.ஆர். ஜோடியாக மஞ்சுளா நடித்துள்ளார். பத்மினி, ஜோதிலட்சுமி, ஜி. சகுந்தலா,
ஜெய்குமாரி, விஜயசந்திரிகா போன்ற அனுபவ நட்சத்திரங்களும் உண்டு.
எம்.எஸ். விஸ்வநாதன் இசைக்கு கவிஞர் வாலி எழுதிய அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும், பொன்னழகு பெண்மை சிந்தும், அழகிய தமிழ் மகள் இவள், அவினாசி மணி எழுதிய கொல்லிமலைக் காட்டுக்குள்ளே ஆகிய பாட்டுக்கள், ரசிகர்களை மகிழ்ச்சிக் கூத்தாட வைத்தன.
எம்.ஜி.ஆரின் நடிப்பும், சண்டைக் காட்சிகளும், புதுமையாகவும், விறுவிறுப்புடனும் இருந்தன. 1971ஆம் ஆண்டின், அகில இந்திய சிறந்த நடிகராக எம்.ஜி.ஆரை தேர்வு செய்து பாரத் விருதை மத்திய அரசு வழங்கியது. தமிழ்நாட்டில், தமிழ் திரை உலகில் முதன்முதலாக பாரத் விருது பெற்று தமிழ்நாட்டுக்கு பெருமை தேடித் தந்தார் எம்.ஜி.ஆர்.
தமிழ்நாட்டில் 12 தியேட்டர்களில் நூறு நாட்கள் முதல் 150 நாட்கள் வரை ஓடி வசூலைக் குவித்த படம் ரிக்ஷாக்காரன்.
courtesy - cinema express
CHANDROTHAYAM - CLASSIC SONGS
https://youtu.be/Nk2UgRSR610
1975ல் வெளிவந்த மக்கள் திலகத்தின் திரைப்படங்கள் தலைப்புகளும் ,நிகழ்வுகளும் ...
நினைத்ததை முடிப்பவன்
நாளை நமதே
இதயக்கனி
பல்லாண்டு வாழ்க
மக்கள் மனங்களில் ஒரு மனம் கவர்ந்த நடிகராக , அரசியல் தலைவராக , மனித நேயம் மிக்க பண்பாளராக ஆட்சி புரிந்த மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் ஏழைகளின் வாழ்வில் ஒளிவிளக்கேற்றவும் .அண்ணாவின் கனவுகளைமெய்ப்பிக்கவும் நினைத்தார் .அதற்காக உழைத்தார் .முன் கூட்டியே தான் '' நினைத்ததை முடிப்பவன் '' என்று தன்னுடைய படத்தின் தலைப்பிலே அறிவித்தார் .
எந்த நேரத்திலும் தேர்தல் வந்தாலும் , தன்னுடைய இயக்கமான அதிமுகவின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது என்பதையும் , ரசிகர்கள் , தொண்டர்கள் அனைவருக்கும் வருங்காலம் ''நாளை நமதே '' என்ற நம்பிக்கை வாசகத்தை தலைப்பாக வைத்தார் .
அண்ணாவின் , ஏழைகளின் , ரசிகர்களின் , தொண்டர்களின் , மக்களின் என்றென்றுமே இதயக்கனி தான்தான் என்பதை நாடே ஏற்று கொண்டது .
பல்லாண்டு வாழ்க - மக்களின் வாழ்த்துக்களும் . மக்கள் திலகத்தின் திரைப்படங்களின் வெற்றிகளும்இணைந்து மக்கள் திலகத்தின் புகழுக்கு புகழ் சேர்த்தது .
The resilience of MGR
HE IMAGE TRAP
M.G. Ramachandran in Film and Politics
M S S Pandian
Sage (reissue edition);
196 pages; Rs 548
http://www.business-standard.com/art...2601649_1.html