http://i57.tinypic.com/33eschw.jpg
Printable View
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் ,"நான் ஏன் பிறந்தேன் "- சிறப்பு பார்வை.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
1. குடும்ப பாங்கான கதைஅமைப்பில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் தன இயல்பான, அருமையான நடிப்பு திறமைகளை நவரசத்தோடு வழங்கிய முதன்மையான காவியம்.
2. படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரையில் ,தாய்மை, மதுவின் சீர்கேடு நாட்டுப்பற்று, கணவன் மனைவி உறவுகள், குழந்தைகளுடன் பரிவு,
தங்கை பாசம், அடுத்தவருக்கு உதவும் பண்பு, படித்து வேலைக்காக
திண்டாடுவது , வேலை கிடைத்தபின் தொழிலில் நேர்மை , கடனாளி -
களிடம் நேர்மையுடன் வாதாடுவது ,துரோகம் செய்த சகோதரியை
மன்னிற்று ஏற்று கொள்வது , குடும்பத்தினர் படும் அவஸ்தைகளை
கண்டு மனம் உருகுவது , காஞ்சனாவின் நோயை தீர்க்க முற்படுவது ,
காஞ்சனாவை வில்லனிடம் இருந்து காப்பாற்றுவது ,குடும்பத்திற்கும் போதிய நேரம் செலவிட முடியாமல் தவிப்பது - காதலி வீட்டிற்கு
வரும்போது மனைவி ,பெற்ற தாய்க்கு தெரியாமல் தப்புவது
-இப்படி பல கோணங்களில் , பல பரிமாணங்களில் , தன் முகத்தில்
பல பாவங்களை காட்டி ரசிகர்களை பரவசபடுத்தினார் நமது மக்கள்
திலகம்.
3. இசை அமைப்பாளர் திரு. சங்கர் கணேஷ் தன் இசை திறமையால்
அனைத்து பாடல்களையும் இனிய கீதங்களாக வடிவமைத்தார்.
4. டைட்டில் இசை கேட்பதற்கு இனிமையாகவும் , வித்தியாசமாகவும்
இருந்தது.
5. நகைச்சுவை மன்னர்கள், நாகேஷ், தேங்காய் ஸ்ரீனிவாசன் ,
இருவரும் வயிறு குலுங்க சிரிக்கவும் சில சமயங்களில் சிந்திக்கவும்
வைத்தார்கள். நகைச்சுவை நடிகர் ஐசரிவேலன் சற்று வித்தியாசம்
குணசித்திர வேடம்.
6. மேஜர் சுந்தரராஜன் அப்பா வேடத்தில் அருமையாக நடித்தார்.
7. மேஜரிடம் நடிகர் கோபாலகிருஷ்ணன் நமது மக்கள் திலகம்
எம்.ஜி.ஆர். அவர்களை அறிமுகம் செய்யும்போது , மக்கள் திலகம்
எம்.ஜி.ஆர். பேசும் வசங்களின் போது அரங்கமே அதிரும்.
அவை.: அழுபவர்களை சிரிக்க வைக்க வேண்டும், சிரிப்பவர்களை
சிந்திக்க வைக்க வேண்டும் என்பது.
8. நடிகர் கோபாலகிருஷ்ணன் மேஜரிடம் அறிமுகம் செய்யும் போது
புரட்சி தலைவரை "நல்லவர்க்கு நல்லவர், கெட்டவர்க்கு கெட்டவர் "
என கூறும்போதும் அரங்கம் அதிரும் காட்சிகள்.
9. முதல் சண்டை காட்சியில் வில்லன் நம்பியார் , சக ஸ்டன்ட்
நடிகர்களிடம் , "அவன் ஒத்து ஆளே பத்தாளை அடிப்பான் "
ஜாக்கிரதை என்று சொல்லும் காட்சியில் கூட அரங்கம் அதிரும்.
10. முதல் பாடல் - நான் ஏன் பிறந்தேன் - பாடலில் சமுதாய சீர்கேடுகள்,
நாட்டுப்பற்று, தனி மனிதன் நாட்டுக்கு செய்ய வேண்டியது ,
குழந்தைகள் பள்ளிபருவத்தில் பெற்றோருக்கு பெருமை தேடி
தருவது , பெற்றோரூம் குழந்தைகளை பரிவுடன் அனுசரிப்பது ,
போன்றவற்றை உணர்த்தும் காட்சிகள்.
11. தம்பிக்கு ஒரு பாட்டு - கதை சொல்லும் அழகோடு , பல தத்துவ
வரிகள் மனதுக்கு இதமாக இருக்கும்.
13. உனது விழியில் எனது பார்வை - கணவன் மனைவி பாச உறவுகள்
வெளிப்படுத்தும் அருமையான காதல் பாடல்.
14. நான் பாடும் பாடல் - உடலுக்கு மன வலிமையை கொடுக்கும்
உணர்சிகரமான பாடல். -டி.எம்.எஸ். ராக பாவத்தோடு , ஏற்ற
இறக்கத்தோடு பாடிய , அடிக்கடி கேட்க தூண்டும் பாடல்.
15. என்னம்மா சின்ன பொண்ணு - புரட்சி தலைவர் தனது நடன
அசைவுகளை சற்று கவர்ச்சியாகவும், இளமை துள்ளலுடன்
அளித்துள்ள பாடல்.
16. மீண்டும் தம்பிக்கு ஒரு பாட்டு - குழந்தைகள் பாடும் தத்துவ பாடல்
இதை கேட்கும்போது புரட்சி தலைவரின் கண்களில் நீர் சுரக்கும்.
கேட்பவர்க்கும், பார்ப்பவர்க்கும் கூட.
17. தலைவாழை இலை போட்டு - ஜிக்கி .சுசீலா பாடிய மாங்கல்ய
வலிமையை பற்றிய ருசிகரமான பாடல்.
18. நான் ஏன் பிறந்தேன் 09/06/1972 அன்று வெளியாகியது.
இன்று 43 வது ஆண்டு துவக்க தினம்.
19. குளோப், ஸ்ரீகிருஷ்ணா , சரவணா, பழனியப்பா அரங்குகளில் 50நாள்
வெற்றிகரமாக கடந்த படம்.
20. ஸ்ரீ கிருஷ்ணா அரங்கில் ஏற்கனவே "ராமன் தேடிய சீதை " ஓடி
கொண்டிருந்ததால் சில நாட்களுக்கு காலை 7 மணி , 10 மணி
காட்சிகள் நடைபெற்றன.
21. முதல் நாள் காலை 10 மணி காட்சி பார்த்து ரசித்தேன். சில நாட்கள்
கழித்து தினசரி 3 காட்சிகள் திரையிடப்பட்டது.
22. முதல் நாள் பார்த்து விட்டு வெளியே வரும்போது ரசிகர்கள் அருமையான குடும்ப பாங்கான பாத்திரத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் நடிப்பு மனதுக்கு இதமாகவும், நிறைவை தருவதாகவும்
பேசி கொண்டனர்.
23. புரட்சி தலைவர் நடித்த படங்களில் எனக்கு பிடித்தமான ஒன்று,
சில இடங்களில் சங்கர் கணேஷ் பின்னணி இசை பிரமாதம்.
சமீபத்தில் உட்லண்ட்ஸ் சிம்பொனியில் பார்த்து ரசித்தேன்.
24. திரை அரங்குகளில் எப்போது திரையிட்டாலும் பார்க்க தவறுவதில்லை.
25.பொன்மன செம்மலின் நடிப்பு பரிமானங்களுக்காகவும் , பாடல்களுக்காகவும் மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டிய படம்.
ஆர். லோகநாதன்.
Courtesy - face book - director sankar
பிம்பமும் நிஜ வாழ்வும்
http://i58.tinypic.com/8w0h3t.jpg
அவர் தனது வெற்றிக்குக் காரணமான பிம்பங்களைத் தானே உருவாக்கினார். பிறகு அவற்றுக்கு இசைவான, அவற்றை நிஜம் என நம்ப வைக்கும் ஒரு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தார். சிக்கலான, சவாலான காரியம் இது. அதை நிறைவேற்றுவதற்கு அவர் படாதபாடுபட வேண்டியிருந்தது.
தனது நாற்தாண்டுகாலப் பொது வாழ்வில் சில அவமானங்களைக்கூடச் சந்திக்க வேண்டியிருந்தது, கேலிக்கிடமான சமரசங்களுக்குட்பட வேண்டியிருந்தது. ஆனால் இறுதியில் பல நம்ப முடியாத வெற்றிகளைக் குவிப்பதற்கு ஈடுஇணையற்ற அந்தத் திரைப்பட நாயகனால் முடிந்தது.
நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் இங்கு ஏழைகள் வேதனைப்பட மாட்டார் என சவுக்கைச் சுழற்றிக்கொண்டு அவர் பாடி வருவது ஒரு திரைப்படக் காட்சி மட்டுமேதான். தமிழ் மக்களின் மனதில் ஆழமாக வேரூன்றிவிட்ட அந்த பிம்பத்தை முதலமைச்சராக அவர் பெற்ற தோல்விகளால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. ஆட்சிப் பொறுப்பிலிருந்த பத்தாண்டுகளில் அவர் அசாதாரணமாக எதையாவது செய்ய முயன்றாரா? ஒரு அரசியல்வாதியாக அவர் தமிழ்ச் சமூகத்திற்கு அளித்த பங்களிப்புக்கள் எவை? இந்தக் கேள்விகள் தனியே பரிசீலிக்கப்பட வேண்டியவை. ஆனால் திரைப்படங்களின் வழி நிலைபெற்றுவிட்ட அவரது பிம்பங்கள் அவரது தோல்விகளுக்கப்பாலுங்கூட முக்கியமானவை.
நம்ப முடியாத அளவுக்கு வசீகரமான அந்த பிம்பங்கள் உருவாக்கப்பட்ட விதம் முக்கியமானது. அவரது நடிப்பில் உருவான நூற்றுக்கணக்கான திரைப்படங்களுக்கும், பாடல்களுக்கும் அதில் பெரும் பங்கு உண்டு.
பொதுக்கூட்டங்களில் பங்கேற்க காரிலிருந்து இறங்கித் திரண்டிருக்கும் மக்கள் வெள்ளத்தைக் கடந்து அவர் நடந்து வரும்போது
காலத்தை வென்றவன் நீ,
காவியமானவன் நீ,
வேதனை தீர்ப்பவன்,
விழிகளில் நிறைந்தவன்,
வெற்றித் திருமகன் நீ நீ
என முழங்கும் இசைத்தட்டுக்கு அவரை, அவரது பிம்பங்களை உருவாக்கியதில் என்ன பங்கு? இசைத்தட்டை ஒலிக்கவிடும் தருணமேகூட மிகத் துல்லியமாய் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டது போல் தோன்றும். காரிலிருந்து இறங்கி அவர் தன் பாதங்களைத் தரையில் ஊன்றி நடக்கத் தொடங்கும்போது,
நடந்தால் அதிரும் ராஜநடை,
நாற்புறம் தொடரும் உனது படை
என்னும் வரிகள் ஒலிக்கத் தொடங்கியிருக்கும். பாதுகாவலர்களும் அமைச்சர்களும் தொண்டர்களும் நிஜமாகவே நாற்புறமும் அவரைத் தொடர்வார்கள்.
இதையெல்லாம் விட முக்கியமான பாடல் ஒன்று உண்டு. 1968இல் திரைக்கு வந்த அவரது ஒளிவிளக்கு திரைப் படத்தில் கவிஞர் வாலி எழுதிய ஆண்டவனே உன் பாதங்களை நான் கண்ணீரால் நீராட்டினேன் எனத் தொடங்கும் பாடல். படத்தில் திருடனாக வேடமேற்ற எம்.ஜி.ஆர்., தீ விபத்தில் சிக்கிய ஒரு குழந்தையைக் காப்பாற்றுவதற்கான முயற்சியில் காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பார். அப்போது அவரைக் காப்பாற்றும்படி முருகனிடம் மனமுருக வேண்டி படத்தின் முக்கியப் பாத்திரங்களில் ஒன்றான சௌகார் ஜானகி பாடுவதாக அமைக்கப்பட்டது.
தெய்வமாக்கிய பாடல்
எம்.ஜி.ஆரின் வேறு பல திரைப்பாடல்களில் உள்ளதைப் போன்ற நேரடியான அரசியல் எதுவும் இல்லாத அந்தப் பாடல் எம்.ஜி.ஆரைப் பற்றிக் கட்டமைத்த பிம்பம்தான் அவரை மற்றவர்களோடு ஒப்பிடப்பட முடியாதவராக மாற்றியது. 1984இல் எம்.ஜி.ஆர்., உடல் நலம் பாதிக்கப்பட்டு அமெரிக்க மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த தருணத்தில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அவரது கட்சிக்கு மகத்தான வெற்றியைப் பெற்றுத் தந்த பாடல் அது. கடவுள் நம்பிக்கையற்ற, பகுத்தறிவுக் கொள்கையில் தீவிரமான நம்பிக்கை கொண்ட ஒரு கட்சியின் முக்கியமான தலைவர்களில் ஒருவரான எம்.ஜி.ஆரை தெய்வமாக்கியது.
உள்ளமதில் உள்ளவரை அள்ளித் தரும் நல்லவரை
விண்ணுலகம் வா என்றால் மண்ணுலகம் என்னாகும்?
உன்னுடனே வருகின்றேன் என்னுயிரைத் தருகின்றேன்
மன்னனுயிர் போகாமல் இறைவா நீ ஆணையிடு
படுக்கையில் கிடத்தப்பட்டிருக்கும் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்தில் நேர்த்தியற்ற முறையில் உருவாக்கப்பட்ட முருகனின் உருவ பொம்மை ஒன்றின் முன்னால் நின்று உள்ளம் உருகும் குரலில் சௌகார் ஜானகி பாடுவதை இப்போது கேட்டாலும் கண்கள் சுரக்கும். சௌகாரின் குளமான கண்களில் நிழலாடும் சோகத்தையும் எம்.ஜி.ஆரின் மார்பின் மீது முகம் புதைத்து அவர் பரிதவிப்பதையும் கவனியுங்கள். அது தமிழக மக்களின் சோகம், அவர்களது பரிதவிப்பு. அந்தப் பாடலில் இடம் பெற்றிருக்கும் மற்ற சில வரிகளைக் கவனியுங்கள். அவர் தெய்வமாக்கப்பட்டிருப்பது தெரியும்.
சாகாவரம் பெற்ற பாடல்
அந்த தெய்வம்தான் 1968 தேர்தலில் போட்டியிட்டது; திமுகவுக்காகப் பிரச்சாரம் செய்தது; 1972இல் அக்கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டு அதிமுகவைத் தொடங்கியது. மக்கள் எம்.ஜி.ஆர்., என்ற அந்த தெய்வத்தை தரிசிக்க முண்டியடித்தார்கள்; அதற்கு வாக்களித்தார்கள்; அதிகாரத்தைக் கொடுத்து முதலமைச்சராக்கினார்கள். 1984இல் அந்த தெய்வத்துக்கு உடல் நலம் குன்றி அமெரிக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்படட்போது மக்கள் இந்தப் பாடலை அவர் குணமடைந்து மீண்டு வருவதற்கான பிரார்த்தனைப் பாடலாகப் பயன்படுத்தினார்கள். அவர் மீண்டு வந்தார். 1987இல் மறையும்வரை தமிழகத்தின் அசைக்க முடியாத சக்தியாகத் திகழ்ந்தார். மறைந்த பிறகும் மக்கள் அவரைத் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
இன்றும்கூட அவருடன் புதைக்கப்பட்ட, இன்னும் தன் இயக்கத்தை நிறுத்திக்கொள்ளாத அவரது கைக்கடிகாரத்தின் டிக் டிக் ஒலியைக் கேட்பதற்காக கடற்கரையில் உள்ள அவரது சமாதியின் வழவழப்பான மேற்பரப்பின் மீது சாய்ந்தபடி தம் ஒரு காதை அதன் மீது வைத்துக் காத்திருக்கும் மக்களுக்கு அவர் தெய்வமாகவேதான் தென்படுகிறார். அவர் அவர்களுடைய இதய தெய்வம். கேட்கும் சத்தம் இன்னும் அடங்கியிராத அவரது இதயத்தின் துடிப்பு. அவர்களைப் பார்க்கும்போது இன்னும் பல வருடங்களுக்கு அது தன் துடிப்பை நிறுத்திக்கொள்ளப் போவதில்லை என்று தோன்றும்.
உலகம் சுற்றும் வாலிபன் உருவான கட்டுரையில் மக்கள் திலகம் எம்ஜிஆர் மற்றும் பங்கேற்ற அத்தனை பட குழுவினரும் எந்த அளவிற்கு கடினமாக உழைத்து ,ஒத்துழைப்பு தந்துள்ளார்கள் என்பதை மக்கள் திலகம் விரிவாக விளக்கியுள்ளது அருமையான தகவல்கள் .
இனிய அன்பர்கள் செல்வகுமார் , திரு லோகநாதன் இருவரின் நான் ஏன் பிறந்தேன் படம் பார்த்த அனுபவ பதிவுகள்
நன்றாக இருந்தது .புதுவை நகரில் தொழிலாளி படம் பற்றிய தகவல் தந்த இனிய நபர் திரு கலிய பெருமாள் அவர்களுக்கு நன்றி .
நான் ஏன் பிறந்தேன் ஓடிகொண்டிருந்த நேரத்தில் மக்கள் திலகத்திற்கு பாரத் பட்டம் விழாக்கள் சிறப்பாக நடை பெற்று கொண்டு வந்த நேரத்தில் தினத்தந்தியில் மக்கள் திலகத்தின் செய்திகள் இருட்டடிப்பு நிகழ்வுகள் துவங்கியது .
மக்கள் திலகத்தின் திரைப்பட செய்திகள் முற்றிலும் தவிர்க்கப்பட்டது .
நவமணி - சுதேசமித்திரன் - தினமணி போன்ற தினசரி பத்திரிகைகள் மூலம் மக்கள் திலகத்தின் பட செய்திகள் பற்றி ஓரளவு தெரிந்து கொள்ள முடிந்தது .