Originally Posted by
Gopal,S.
புதுமை இயக்குனர் ஸ்ரீதர்.
இன்று அவரின் 6 வது நினைவு நாள்.
சிவாஜியுடன், எதிர்பாராதது,அமரதீபம்,உத்தமபுத்திரன்,புனர்ஜென்மம், சித்தூர் ராணி பத்மினி,கலாட்டா கல்யாணம் படங்களில் எழுத்தாளராகவும், விடிவெள்ளி,ஊட்டி வரை உறவு,நெஞ்சிருக்கும் வரை,சிவந்தமண் ,வைரநெஞ்சம்,மோகன புன்னகை முதலிய படங்களில் இயக்குனராகவும் ,கடைசி வரை உயரிய நண்பராகவும் தொடர்ந்தவர்.
மறைவதற்கு சில நாட்கள் முன்பு,தன்னை சந்தித்த அமீர் என்ற இயக்குனரிடம்,தனக்கு மிக பிடித்த நடிகராக நடிகர்திலகத்தை குறித்துள்ளார்.
புதுமை இயக்குனர் , தமிழ் கதைகளுக்கு புதிய தளத்தை வடிவமைத்து,இயக்குனர் என்ற பதத்திற்கே புது அர்த்தம் தந்தவர்.காமிரா வழியாக கதை சொன்னவர்.
சிவாஜிக்கு இவர் கொடுத்த அமர தீபம்,உத்தமபுத்திரன்,ஊட்டி வரை உறவு,சிவந்த மண் போன்ற காவியங்கள் என்றென்றும் நெஞ்சில் நிலைத்திருக்கும்.
இவருடைய மூன்று மிக சிறந்த படங்கள் காதலிக்க நேரமில்லை,சுமைதாங்கி,நெஞ்சில் ஊர் ஆலயம். 70 களில் மிக மோசமான படங்களால் தன் தரத்தை தாழ்த்தி கொண்டாலும் ,இளைய தலைமுறையினரிடம் இணைந்து இவரளித்த இளமை ,ஊஞ்சலாடுகிறது.அழகே உன்னை ஆராதிக்கிறேன் ஆகியவை முத்திரை.
எது எப்படி இருப்பினும் இவருக்கு அமைந்த அளவு பாடல்கள், எந்த இயக்குனருக்கும் அமைந்ததில்லை என்பது சத்தியம்.
சிவாஜியை ,இவர் ஒரு பீம்சிங்,பந்துலு,ஏ.பீ.என்,ஏ.சி.டி,மாதவன் ,பாரதிராஜா அளவு பயன் படுத்தி, காவியங்களை அளிக்காதது எனக்கு வருத்தமே. ஆனாலும் பாலசந்தர் அளவு ஏமாற்றமில்லை.