Dear Ragavendran sir
Your analysis about NEETHI really superb. I was wondering how it is possible. After vasantha maligai completely different subject but handled by NT to the great extent.
C.Ramachandran.
Printable View
Dear Ragavendran sir
Your analysis about NEETHI really superb. I was wondering how it is possible. After vasantha maligai completely different subject but handled by NT to the great extent.
C.Ramachandran.
Dear Gopal Sir
Sorry for the correction
C.Ramachandran
சுகா ராம்,
மற்றவர்களை குற்றம் சொல்லு முன் உங்கள் பதிவுகளையும் நீங்கள் சரி பார்ப்பது நல்லது. திடீரென்று உங்களை இந்த பக்கம் காண்பதே இல்லை?சில படங்களை குறிப்பிட்டு லிங்க் கேட்ட ஞாபகம். எங்களிடம் வர வேஷமிட வேண்டாம்.(கர்ணன் போல.)
.....
’தண்டைச் சத்தம் கலகலன்னு முன்னால் வருகுது..
வாழைத் தண்டு போலக் காலிரண்டு பின்னால் வருகுது”
என வரதப்பா பாடல் நினைவுக்கு வந்ததும் அழகாய் நடிகர் திலகம் பாட
பின்னால் நளினமாய் (தோலாடை போர்த்தாத) இடைப்பிரதேசம் காட்டி
மெல்லிய அன்ன நடை பயிலும் விஜய ஸ்ரீ வருவதும்
நினைவுக்கு வருவது போல் எதை நினைத்தால் என்ன வருகிறது..
நான் அந்தக்கால மதுரைக்காரன்.. மதுரையில் பிறந்து வளர்ந்து படித்து பின் புலம் பெயர்ந்து
இதோ பல ஆண்டுகள் ஓடிவிட்டன.. பள்ளி கல்லூரிக் காலங்களில்
எனது தமிழ் மெருகேறியதற்கான முழு முதற்காரணம் என்றால் நடிகர் திலகம் என்பேன்..
நடிகர் திலகத்தைப் பற்றி எழுத வேண்டும் என நினைத்தாலே முட்டி மோதிக் கொண்டு
தவித்த படி வருகின்றன எண்ண அலைகள்..அவற்றைக் கொஞ்சம்
கட்டிப் போட்டு- ச் சும்மா இருங்க அலைகளே..இங்கு நடிகர் திலகத்தைப் பற்றி
தீவிரமாக ரசித்து விரிவாக எழுதியிருக்கும் ஜாம்பவான்கள் அடங்கிய இடம்- எனச் சொல்லிக்
கொஞ்சூண்டு இந்தச் சின்ன ரசிகன் எழுதப் பார்க்கிறேன்..
நீதியைப் பற்றிய விவாதம் இருப்பதால் அதைப் பற்றி..
அது வந்த புதிதில் நான் வெகு சிறிய கண்ணன்.. அம்மா, அக்காக்களுடன் தங்கம் தியேட்டர் போய்க் கண்டுவந்தது
வெகு புகையாய் நினைவில்..பின்னர் ப்ளஸ்டூ படிக்கும் சமயம் கல்பனாவோ சாந்தியிலோ
மறுபடி ஓடுகையில் போய்ப் பார்த்திருக்கிறேன். ஒரு சகோதரி ஏதோ ஒரு தொடர்கதை
பைண்ட் செய்து வைத்திருக்கையில் அந்த நீதி விமர்சனத்தைப் படித்திருக்கிறேன்.
.மாப்பிள்ளையைப் பார்த்துக்கடி மைனாக்குட்டி செட் பிரமாதம் என எழுதியிருந்தது இன்றும் நினைவில்.
.அதை மறுபடி இங்கு பார்க்கையில் மனதினில் மகிழ்வு.
கொஞ்சம் சிரிப்பான விஷயம் நன்றாக அழத் தெரியும் என்பதற்காக
செளகாரைப் போட்டு விட்டார்கள் என்றால் பாவம் மனோகரை வைத்து மானபங்கப் படுத்த வைத்து
இன்னும் அவரைப் படுத்தியிருப்பார்கள்..(மனோகரையும் தான்) என் டி வந்து காப்பாற்றுவார் என்பது வேறு விஷயம்.
. மோகினியாக ஜெயலலிதா கொஞ்சம் கக் எனச் சிரிக்க வைப்பார்..அந்த மீசை எடுத்த பொழுதில் என் டியின் முகபாவம்..ஆஹா.
.
இன்னும் என்னென்ன படங்கள் பிடிக்கும் என்று பார்த்தால் பல படங்கள் நான் நீ என்று போட்டி இடுகின்றன..
வித்யாசமாய் நடித்திருந்த சில படங்களெனத் தற்சமயம் என் நினைவுக்கு வருபவை
சத்திய சுந்தரம்(, மனிதனும் தெய்வமாகலாம் (பரங்கிக்காய் ட்ரிங்க் ட்ரிங்க் என்ற காமடி என்று நினைவு),
அன்பைத் தேடி (கத்திரிப் பூவிழியில் கொஞ்சம் கற்பனை கட்டி வைத்தேன்),
அந்த நாள்,,திரும்பிப் பார், குலமகள் ராதையில் தேவிகாவுடனான ரொமான்ஸ்,,
நிறை குடத்தில் ஸோ க்யூட் மருத்துவக் கல்லூரி மாணவர்..இன்னும் பல சொல்லலாம்..
கொஞ்சம் கொஞ்சமாய்ச் சொல்கிறேனே..
கல்யாணப் பத்திரிகையின் கீழ் வாசக தோஷ சந்தவ்யஹ என எழுதியிருப்பர்.
. அப்படி ஏதேனும் தவறுதலாக எழுதியிருப்பின் மன்னிக்க.
.கொஞ்சம் நகைச்சுவையாக எழுத் முயல்வது எனது கெட்டப் பழக்கம்..!
அது சரி ஈ.. ஐட்டம் கேர்ள்ஸ் லிஸ்டில் மஞ்சுபார்கவி, உண்டா..(தீபம் என நினைவு..)
nt360 degree நண்பருக்கு நன்றி.. உங்களது மேற்கண்ட கட்டுரை மிகவும் அழகு..
எங்கள் அன்பு சின்னக்கண்ணன் சார்,
வருக. நாம் பாட்டுக்குப் பாட்டில் பழகிப் பார்த்திருந்தாலும் இவ்விடம் தாங்கள் அன்பு கொண்டு வந்ததால் ஆனந்தமாய் அலறி ஆர்ப்பாட்டமாய் அழைக்கிறேன். தூய உள்ளத்தவரின் தூய தமிழ் நடையில் எங்கள் தூயவரின் புகழ் மேலும் பரவட்டும். நீதியில் மீசை எடுத்த எங்கள் அன்புக் குழந்தையை நினைத்து மகிழும் சின்னக்கண்ணன் நீங்கள் சத்தியமாய் சுந்தரமாய் ஜொலித்த எங்கள் சுந்தர வதனனை வர்ணிக்க வந்தீர்களோ! சித்திர மண்டபத்தில் சில முத்துக்கள் கொட்டி வைத்த எங்கள் சிருங்காரத் தலைவனை, மனிதனும் தெய்வமாகலாம் என்று வாழ்ந்து காட்டியவனை அந்த நாள் முதல் இந்தநாள் வரை நினைத்து மகிழும் எங்களுடன் கலக்க வந்தீரோ! குலமகள் ராதையின் கோமகனை திரும்பிப் பார்க்கிறீரோ! நிறைகுடமாய் வாழ்ந்த நிறைமன நித்ய புருஷனை வாய் நிறைய வாழ்த்த வந்தீரோ! வருக! வருக!
கொஞ்சம் நகைச்சுவையாக எழுத முயல்வது எனது கெட்டப் பழக்கம்..!
என்றீரே! என் தமிழ் நடையை தாங்கள் படிக்க நேர்ந்தது தங்கள் கஷ்ட காலமோ!
மன்னிக்க வேண்டுகிறேன்.
தினம் தினம்
தங்கள் பதிவை வேண்டுகிறேன்.
நல்லதொரு குடும்பத்தில் "கண்ணா உன் லீலா வினோத"த்தில் மஞ்சு பார்கவி எங்கள் கண்ணனுடன் ஐ மீன் எங்கள் கர்ணனுடன் சில நொடிகள் ஜோடி சேர்ந்து ஜோராக மனத்தைக் கவர்ந்தார்.
இதோ ஐந்து ஐட்டம் கேர்ள்ஸ் உடன் எங்கள் கண்ணனின் லீலா வினோதங்கள் எங்கள் சின்னக் கண்ணனுக்காக (மஞ்சுவை பார் கவி)
https://www.youtube.com/watch?v=plmL...yer_detailpage
சின்ன கண்ணன்,
நகைச்சுவை கூடிய non -linear narration .நல்ல தமிழ். கண்பட் சாரும் நீங்களும் சேதுராமன் -பொன்னுசாமி போல எங்களை ஆனந்த வெள்ளத்தில் தள்ள போகிறீர்கள். மஞ்சு , நல்லதொரு குடும்பத்தில் நாலில் ஒருத்தியாக தள்ள பட்டதில் வருத்தமே(அதுவும் பாதி பாடல்) மீதி personification of oozing sensuality என நான் கருதும் வாணிஸ்ரீ.
சுகாராம்,
சஞ்சிகை என்ன நானே, ஒரு பொருளாதார நிபுணன்(கணக்கிட்ட முறை- அன்று நான் ஆரிய பவன் ஹோட்டல் குடித்த காபி. போன மாதம் மெம்பிஸ் நகரில் குடித்த காபி விலை. இதை வைத்து அன்றைய வசூல்(ரூபாய்) இன்றைய மதிப்பில்(vietnam currency) மிக துல்லியமாக மதிப்பிட பட்டுள்ளது)..
என் கணக்கு இதோ(A,B,C,D,E,F centres included)-
பராசக்தி வசூலின் இன்றைய கணக்கு- 90,000 கோடி.
வீரபாண்டிய கட்டபொம்மன் வசூலின் இன்றைய கணக்கு- 1,25,000 கோடி.
திருவிளையாடல் படத்தின் வசூலின் இன்றைய கணக்கு-1,50,000 கோடி.
பட்டிக்காடா பட்டணமா- 1,01,000 கோடி.
வசந்த மாளிகை - 1,75,000 கோடி.
திரிசூலம்- 2,50,000 கோடி.
#கணக்கிட்ட முறை-
உதாரணம்- திரிசூலம்- 1979- 2,80,11,398 ரூபாய் . 13பைசா (வெள்ளிவிழா நாள் வரை மட்டும் அனைத்து சென்டர்கள்) .அன்றைய டாலர் மதிப்பில்-40,01,163 U .S .D . அன்றைய காபி விலை 15 பைசா. அமெரிக்க டாலர் ஒன்றுக்கு 63 காபி. மொத்தம் காபி மதிப்பில்- மொத்தம்- 25,20,73,269 காபி.
போன முறை நான் மெம்பிஸ் நகரில் குடித்த காபி விலை- 90 U .S .D .
திரிசூலம் வசூல் மொத்த மதிப்பு டாலரில்- 25,20,73,269 காபி 90 ஆல் பெருக்கி வரும் விடை 2268,65,94,210 அமெரிக்க டாலர்கள்(இன்றைய மதிப்பில்).
அதுவரை தமிழில் 1936 இலிருந்து மொத்தம் 1972 வரை வந்த அத்தனை நடிகர்களின் படங்களின் வசூலையும் (நடிகர்திலகம் நீங்கலாக) 1972 வருடத்திய நடிகர்திலகத்தின் படங்களின் வசூல் மிஞ்சி விட்டன என்று பக்கத்து வீட்டில் குடியிருந்த ஒரு பழம் பெரும் தயாரிப்பாளர் ,எதிர் வீட்டில் குடியிருந்த ஒரு விநியோகஸ்தர் இணைந்து கூறினார்.
அது மட்டுமல்ல தொலைக்காட்சி பெட்டி அறிமுக படுத்த பட்டதில் இருந்து இதுவரை நடிகர்திலகத்தின் படங்கள் 2,38,528 முறை திரையிட பட்டுள்ளன என்று என்னுடைய கோடி வீட்டில் வசிக்கும் ஒரு தொலைக்காட்சி ஊழியர் தெரிவித்தார். இது மற்ற எல்லா நடிகர்களின் படங்களின் மொத்த திரையீட்டை போல மூன்று மடங்காம்.
போதுமா? இன்னும் பின் வீட்டு தகவல்கள், பாக்கியுள்ளன.