டி.கே. பாலச்சந்தர், சௌகார் ஜானகியின் ஜோடியாக அவள் யார் படத்தில் நடித்திருந்தார். இவர்கள் இருவருக்கும் உள்ள டூயட் பாடல் தான் ஏ.எம்.ராஜா பாடிய பட்டுப்பூச்சிப் போலும் ராஜா.
Printable View
டி.கே. பாலச்சந்தர், சௌகார் ஜானகியின் ஜோடியாக அவள் யார் படத்தில் நடித்திருந்தார். இவர்கள் இருவருக்கும் உள்ள டூயட் பாடல் தான் ஏ.எம்.ராஜா பாடிய பட்டுப்பூச்சிப் போலும் ராஜா.
வாசுதேவன் விஜயம் கஸ்தூரி விஜயத்துடன் மங்கலகரமாக வாழ்த்துக்களுடன் தொடங்கியுள்ளது. சூப்பர்... சார்...
வாசு சார், தங்களை நடிகர் திலகம் திரி ரொம்பவுமே மிஸ் பண்ணுகிறது...
ஒன்று கவனித்தீர்களா
புன்னகை அரசிக்கு லேடி எம்ஜிஆர் என்ற நினைப்பு வந்து அக்கிரமங்களைத் தட்டிக் கேட்பது, ஏழைகளுக்காகப் போராடுவது, பெண் உரிமை காப்பது என்று ஹீரோயின் சப்ஜெக்ட்டாக நடித்த படங்கள் நிறைய.
http://www.5eli.com/Lyrics/wp-conten...uriVijayam.jpg
திருடி
வாயாடி
மகராசி வாழ்க
கஸ்தூரி விஜயம்
மேயர் மீனாட்சி
ரோஷக்காரி
கியாஸ்லைட் மங்கம்மா
ஆயிரத்தில் ஒருத்தி
என்ன முதலாளி சௌக்கியமா
கண்ணம்மா
நாடகமே உலகம்
நத்தையில் முத்து
சபதம்
இதுவல்லாமல் நிறைய சாமி படங்கள் (நம்ம வீட்டு தெய்வம் மாதிரி)
'
என்று ஹீரோயின் ஓரியண்டெட் சப்ஜெக்டாகவே நடித்தார். கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், அவினாசி மணி, மதுரை திருமாறன் புண்ணியம் கட்டிக் கொண்டார்கள்.
ஆனால் எல்லாவற்றிலும் பாடல்கள் அருமையாக இருக்கும் என்பது ஒரு சிறப்பு.
கண்ணதாசன் நினைவுகள்-3
கவிஞரின் கதாநாயகர்கள் சிறந்த வர்ணனையாளர்கள். அவன் நாயககிகள் கிட்டத்தட்ட நான்கு குணங்கள் கொண்டவர்கள்தான். அவர்கள் லேசாக எட்டி பார்ப்பது தங்கள் நாயகர்களுடன் சேர்ந்து பாடும்பொழுது மட்டும்தான்.
வாயின் சிவப்பு விழியிலே மலர்கண் வெளுப்பு இதழிலே
என்று அவன் கூறும்பொழுது கொஞ்சம் வெளியில் வந்து
இரவே இரவே விடியாதே இன்பத்தின் கதையை முடிக்காதே
சேவல் குரலே கூவாதே சேர்ந்தவர் உயிரைப் பிரிக்காதே என்பார்கள்.
ஆனால் இவன் நாயகர்கள் என்ன பிரமாதமாக வருணிப்பார்கள் தெரியுமா?
எண்ணிரண்டு பதினாறு வயது அவள் கண்ணிரண்டில்
ஆடுதம்மா காதல் கொண்ட மனது
என்பதோடு நில்லாமல்
முன்னிரண்டு மலர் எடுத்தாள்
என் மீது தொடுத்தாள்
முக்கனியும் சர்க்கரையும்
சேர்த்தெடுத்துக் கொடுத்தாள் என்கிறான் ஒருவன். என்ன ஒரு ரசனை அவனுக்கு.
கம்பன் கண்ட சீதை உந்தன் தாயல்லவோ?
காளிதாசன் சகுந்தலை உன் சேயல்லவோ?
அம்பிகாபதி அணைத்த அமராவதி
சென்றபின்னர் பாவலர்க்கு நீயே கதி
என்று நாயகியை ஒருவன் தலையில் வைத்துக் கொண்டாடுகிறான்.
கட்டி தங்கம் வெட்டி எடுத்து
காதல் என்னும் சாறு பிழிந்து
தட்டி தட்டி சிற்பிகள் செய்த உருவமடா -அவள்
தளதள என்று ததும்பி நிற்கும் பருவமடா
என்று இன்னொருவன் காதல் Phd வாங்கி விடுவான் போல வருணிக்கிறான்.
இடையழகு மயக்கம் தந்தது
இசையழகு மொழியில் வந்தது
நடையழகு நடனம் ஆனது
நாலழகும் என்னை வென்றது. என்று ஒருவன் பட்டியல் போடுகிறான்.
கொடித்தேன் இனிஎங்கள் குடித்தேன்
என் ஒரு படித்தேன் பார்வையில் படித்தேன்
துளித் தேன் சிந்தாமல் களித்தேன்
கைகளில் எடுத்தேன் அழகினை ரசித்தேன்.
என்றும் தனது தேனான வர்ணனையை கொட்டித் தீர்க்கிறான் ஒருவன்.
இந்தப் பாடலும் அதன் சூழ்நிலையும் அதற்குக் கவிஞர் தனது அபாரமான கற்பனைத் திறனையும் புகுத்திய விதம் கூறினால்தான் கண்ணதாசன் ஒரு பிருமாண்டத் கவிஞன் என்பது விளங்கும்
மகாபாரத யுத்தம் முடிந்து அசுவத்தாமன் அத்தனை பாண்டவக் கொழுந்துகளையும் வெட்டி சாய்த்து விடுவான். அபிமன்யு கௌரவர்களின் சூழ்ச்சியால் முதலிலேயே இறந்து விடுவான். உத்தரை வயிற்றில் இருக்கும் பரிட்சித்து மகராஜாவின் உயிரைக் கூட அசுவத்தாமன் ப்ரும்மாஸ்திரம் மூலம் கொல்லப் பார்ப்பான். ஆனால் ஸ்ரீ கிருஷ்ணரால் அந்தக் கரு காப்பாற்றப் படும்.
கொடித்தேன் இனி எங்கள் குடித்தேன் என்ற ஒரே சொல்லான குடித்தேன் என்பதில் மகாபாரதக் கதை முழுவதையும் கவிஞர் சொல்லி முடித்து விடுவார்.
இந்தப் பாடலை கவிஞர் திக் என்று நெஞ்சு துக்கிக்கும் விதமாக முடிப்பார்.
உத்தரை பதிலுக்கு “ இனி தேன் இல்லாதபடி கதை முடித்தேன்” என்று பாடுவாள். மறுநாள் போருக்குப் போகும் அபிமன்யு மீண்டும் திரும்ப மாட்டான் என்பதற்குக் கட்டியங்கூறும் விதமாக அவள் பாடல் அமைந்திருக்கும்.கண்ணதாசன் அபாரமானப் பாடல்களில் இதுவும் ஒன்று.
இன்னொரு நாயகன் உருகும் அழகைப் பாருங்கள்
பால் என்று சொன்னாலும் பழம் என்று சொன்னாலும்
ஏன் என்று தேன் வாடுமே
நூல் கொண்ட இடை இன்னும் நூறாண்டு சென்றாலும்
தேர் கொண்ட ஊர்கோலமே.
வண்ணம் பாட ஒரு வார்த்தை நான் தேடினேன்
எங்கும் தேடி முகம் பார்த்துப் பதம் பாடினேன்.
நிஜமாகவே கண்ணதாசன் வரிகளுக்கு அபிநயம் பிடித்த நாயகர்கள் கொடுத்து வைத்தவர்கள்.
காலங்களில் அவள் வசந்தம் என்று வருணிக்கும் நாயகன் போடும் பட்டியல் மிகப் பெரிது.
கல்யாணப் பந்தலில் ஆடும் தோரணமா?- இல்லை
கச்சேரி ரசிகர்கள் கேட்கும் மோகனமா?
செண்டாடும் சேயிழைதானா? தெய்வீகக் காதலிதானா?
செந்தூரம் கொஞ்சும் முகத்தில் செவ்வாய் மின்னும் தேன்மொழிதானா?
என்ற அவனுடைய வர்ணனைபிரவாகம் மலைக்க வைக்கிறது.
இன்னும் கூறிக் கொணடே போகலாம். இவை ஒரு சில மாதிரிகள்தான். கவிஞரை ரசிக்க அவருடனே பயணித்தால் மட்டுமே முடியும்.
ஆண் மயிலுக்குத் தோகை என்பார்கள். கவிஞரின் நாயகர்களுக்குப் பந்தல் போட்டு படரும் வருணனைதான் தோகை.
இப்படி இணைத்த இருவரின் இல்லற வாழ்வினை கவிஞரின் வரிகள் மூலம் நாளை கூறுகிறேன். அப்பொழுதுதானே காதலைப் போற்றிய கவிஞரின் உண்மையான பிறந்தநாளைக் கொண்டாடியது போலாகும்?
முகலே ஆசாம் தமிழில் “அக்பர்”
இந்த பாடல் பதிவிற்கு இசையரசியும், கவிஞர் கம்பதாசனும் மும்பை சென்று அங்கே பாடல்கள் பதிவாயின
என்னை என்றுமே பிரமிக்க வைக்கும் “கனவு கண்ட காதல் கதை கண்ணீராச்சே” பாடல்
ஹிந்தியில் சபையில் இரு பெண்கள் பாடும் பாடலாக ”தேரி மெஹபில் மே” ஷம்ஷத் பேகமும் லதாவும் பாடியது
தமிழில் ஜிக்கியும் இசையரசியும் பாடும் “உந்தன் சபையில் எந்தன் விதியை சோதித்தே ராஜாவே நானும் பார்த்தேனே”
கம்பதாசன் பற்றிய என் கட்டுரை முகனூலில் எழுதியது .. இதோ
பாடலாசிரியரை அறிவோம் 11- கவிஞர் கம்பதாசன்
எனக்கு இவர் பெயரை அறிமுகம் செய்தது இலங்கை வானொலி ஆம் “கனவு கண்ட காதல் கதை கண்ணீராச்சே “ என்ற அக்பர் படப்பாடல் மூலம்.
ஆம் இவரும் 1940லிருந்தே பாடல் எழுதியுள்ளார். கண்ணதாசனுக்கு முன்னால் இருந்தவர்களில் இவர் மிக முக்கியமானவர்.
கம்பதாசன் அவர்கள் 1916’ல் திண்டிவனம் அருகே ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தார் இயற்பெயர் ராஜப்பா, கம்பன் மீது கொண்ட ஈர்ப்பு/ஆர்வத்தின் காரணமாக
தன் பெயரை கம்பதாசன் என்று வைத்துக்கொண்டார்.
படிப்பை விட நாடகங்களில் நடிப்பது அதில் பாட்டெழுதுவது என அவரது ஆர்வம் வேறு பக்கம் இருந்தது. ஆர்மோனியமும் வாசிப்பாராம்.
அதே சமயம் தொழிலாளர் கொள்கைகளிலும் நாட்டம் உடையவராக இருந்தவர் அதனால் எழுதிய பாடல்களில் முற்போக்கு கொளகைகளில் புகுத்தி எழுதுவார்.
நாடகங்களில் பாட்டு எழுதி வந்த இவரை திரைப்படத்துறையும் இழுத்துக்கொண்டது. ஆம் 1940’ல் வெளிவந்த வாமன அவதாரம் என்ற படத்திற்கு முதலில் பாட்டெழுதினார்.
அதை தொடர்ந்து வேணுகானம், பூம்பாவை படங்களுக்கு எழுதினார்.
வேணுகானம் திரையில் இவர் எழுதிய எப்ப வருவாரோ பாடலை என்.சி.வசந்தகோகிலம் பாடினார்.
1948’ல் வெளிவந்த ஞானசெளந்தரி (ராஜம்மா,மகாலிங்கம் நடித்த படம்)படத்தில் நிறைய பாடல்கள் எழுதினார். இன்றும் நம் மனதில்
இனிமையாக ஒலிக்கும் “ஆதியே இன்ப ஜோதியே” பாடல், ஜென்ம பயன் அடைந்தேனே, ஜீவிய பாக்கியமே, காதலில் காணும் இன்பம்,
குல மாமணி, மன மோகனனே என்ற பாடல்கள் எல்லாமே இனிமையானவை அழகு தமிழில் இவரது பாடல்கள்..
1949’ல் வெளிவந்த பி.யு.சின்னப்பாவின் மங்கையர்க்கரசி படத்தில் இவர் இயற்றிய பாடல்கள் மிகவும் அருமையானவை
“பார்த்தால் பசி தீரும்”,விண்ணில் பறந்து செல்லும் வெண்புறாவே, மிகவும் பிரபலமான “காதல் கனிரசமே” எல்லாமே மறக்க முடியாத பாடல்கள்.
1951’ல் வெளிவந்த வனசுந்தரி படத்தில் இடம்பெற்ற காணாத காதல் பேரின்பம்,கண்ணிலே விளையாடுது போன்ற பாடல்கள் இவரது
தமிழுக்கு எடுத்துக்காட்டு.
50’களில் நிறைய புகழ்பெற்ற ஹிந்தி படங்கள் தமிழ் மொழிமாற்றம் செய்யப்பட்டன் .. ஆம் வானரதம், அவன் போன்றவை
மிகவும் பிரபலம்
அவன் (ஆன் ஹிந்தியில்)1953’ல் வெளிவந்த ப்டத்தில் எல்லா பாடல்களையும் எழுதியது இவரே
“கல்யாண ஊர்வலம் வரும் “ ஜிக்கி குரலில் ஒலித்த பாடல் இன்றும் ஹிந்தி பாடலுக்கு இணையான பாடல்.
1956'ல் வானரதம்(ஹிந்தியில் உதான் கோட்லா), இதில் லதா மங்கேஷ்கர் தமிழில் பாடியிருப்பார்.
எந்தன் கண்ணாளன்,என்னை கண்டே ஏங்குவாய்,என் உள்ளம் விட்டு ஓடாதே, ஆசை தாரை போன்ற பாடல்கள்
இவரைத்தவிர பாலசரஸ்வதி பாடிய சுடர் தாரை சபையில், நெஞ்சின் நிலமை என்ன சொல்வேன்,
டி.ஏ.மோத்தி பாடிய பாடல்கள் என வானரதம் பாடல்கள் அனைத்தும் தமிழ் மக்களின் மனதை மயக்கிய பாடல்கள்
இவை எல்லாவற்றையும் எழுதியது கம்பதாசன் அவர்கள்.
சினிமா பாடல்கள் எழுதிக்கொண்டே கவிதைகளையும், நூல்களையும் எழுதி தள்ளினார்.
1961’ல் ஹிந்தியில் பிரபலமான முகலே ஆசாம் தமிழில் அக்பர் என்று மொழி மாற்றம் செய்யப்பட்டது. இதன் பாட்லகள்
மும்பையில் தமிழுக்காக மீண்டும் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. மும்பைக்கு கம்பதாசனும்,சுசீலாம்மாவும் சென்றனர்.
அனைத்து பாட்லகளும் அங்கே திரு நெளஷாத் அவர்கள் ஒலிப்பதிவு செய்ததை இசையரசி மனதோடு மனோவில் நினைவு கூர்ந்தார்.
லதாவின் குரலில் ஒலித்த அனைத்து பாடல்களும் இசையரசியின் குரலில் ஒலித்தது.
காதல் கொண்டாலே பயம் என்ன,ஆற்றின் கரைதனிலே கண்ணன் என்னை கேலி செய்தான்,
ஜிக்கியுடன் உந்தன் சபையில் எந்தன் விதியை என்ற பாட்லகள் அருமையாக அமைந்தது,
மைல்க்கல்லாக அமைந்த பாடல் “கனவு கண்ட காதல் கதை கண்ணீராச்சே” பாடலின் வரிகள் ஹிந்தி பாடல் என்ன சூழலில் ஒலித்ததோ
என்ன அர்த்தம் பொதிந்து வந்ததோ அதே பலத்தை தமிழில் அருமையாக கொண்டு வந்திருப்பார் கம்பதாசன்.அதை இசையரசி பாடியிருக்கும் விதம்
வார்த்தைகளில் வர்ணிக்கமுடியாது .. அருமை அருமை.
காச நோயின் காரணமாக 1973’ம் ஆண்டு இந்த தமிழ் கவி இந்த உலகத்தை விட்டு மறைந்தது.
கம்பதாசன் தமிழ் நாட்டின் முதல் தர கவிஞர்கள் வரிசையில் உள்ளவர்... இவரைப்பற்றி இன்று பலருக்கு தெரியாது.
அறிமுகம் செய்வதே இந்த தொகுப்பின் நோக்கம்..
http://www.youtube.com/watch?v=gctkrVBkpKQ
அருமை யுகேஷ் சார். நன்றிகள் பல.
/கம்பதாசன் பற்றிய என் கட்டுரை முகனூலில் எழுதியது .. இதோ/
அருமையான கட்டுரை. எனக்குப் பிடித்த பல விஷயங்கள் இருக்கின்றன. நடிகர் திலகம் திரியில் கூட சமயம் கிடைக்கும் போதெல்லாம் 'முகலே ஆசாம்' படத்தைப் பற்றி நான் குறிப்பிட மறந்ததே இல்லை. அந்த அளவிற்கு என்னை ஆட்கொண்ட படம்.
நம் திரியில் கூட 'கனவு கண்ட காதல் கதை கண்ணீராச்சே' (அக்பர்), 'எந்தன் கண்ணாளன்' (வானரதம்) பாடல்களை 'இன்றைய ஸ்பெஷலா'க தந்திருக்கிறேன்.
நன்றி ராஜேஷ் சார்.
மதுபாலாவின் மயக்கும் அந்த 'pyar kiya to darna kya' வைப் பற்றி அங்குலம் அங்குலமாக அலச ஆசை. அதை பற்றிய அபூர்வ விஷயங்களைப் பதிவிடவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
அயல்நாடுகளில் இருந்து இப்பாடலுக்காகவே தருவிக்கப்பட்ட வைர வைடூரியங்கள் வரை. ...ஆறுமாத காலம் படமாக்கப்பட்ட விந்தை வரை.
'முகலே ஆசாம்' முழுதும் டிஜிட்டல் கலர் செய்யப்பட்ட போது 'அக்பர்' படத்துக்காக தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்ட அருமையான பாடல்களை தூக்கிவிட்டு, எக்ஸ்ட்ரா பாடகர்களை வைத்து மீண்டும் பாட வைத்து பாடல்களையே கொலை செய்து விட்டார்கள் ராஜேஷ் சார். சகிக்கவே இல்லை.
கலைஞர் தொலைக்காட்சியில் ஆவலாகப் பார்க்க உட்கார்ந்து நொந்து போனேன்.
வாசு சார்
1984ல் ரேகா நடித்த படம் ''உத்சவ் ''. மிகவும் பிரபலமான படம் .
ரேகாவின் எழிலான தோற்றம் - நகை அலங்காரம் கண்ணுக்கு விருந்து ,
http://youtu.be/c4AXOmUhtUc