இரவு நேர ஊர்வலத்திற்கு புறப்பட , ஆலயத்தில் இருந்து வெளிவரும் உற்சவ மூர்த்தி புரட்சி கடவுள் எம்.ஜி.ஆர்.பக்தர்களின் சிறப்பு மலர் அலங்காரத்துடன் காட்சி.
http://i57.tinypic.com/mmvjvk.jpg
Printable View
இரவு நேர ஊர்வலத்திற்கு புறப்பட , ஆலயத்தில் இருந்து வெளிவரும் உற்சவ மூர்த்தி புரட்சி கடவுள் எம்.ஜி.ஆர்.பக்தர்களின் சிறப்பு மலர் அலங்காரத்துடன் காட்சி.
http://i57.tinypic.com/mmvjvk.jpg
இதய தெய்வம் புரட்சி கடவுள் எம்.ஜி.ஆர். ஊர்வலத்தில்
கோவை பெரிய நாயகி , திருவாளர்கள் கலீல் பாட்சா, கா. நா. பழனி, இளங்கோ
மற்றும் பலர்.
http://i60.tinypic.com/rtqfe1.jpg
இதய தெய்வம் புரட்சி கடவுள் எம்.ஜி.ஆர். ஊர்வலத்தில் திருவாளர்கள் லோகநாதன், இளங்கோ, மின்னல் பிரியன் மற்றும் பலர்.
http://i62.tinypic.com/s6q2kk.jpg
21.8.2015 கோவை நகரில் மக்கள் திலகத்தின் ஒளி விளக்கு திரைப்படம் - நன்றி திரு ரவிச்சந்திரன் சார் .
நேற்றைய பதிவில் திரு குமார் அவர்கள் ரகசிய போலீஸ் 115 மற்றும் குடியிருந்த கோயில் படங்களில் மக்கள் திலகத்தின் சிறப்பான காட்சிகளை மிக அழகாக பதிவிட்டார் .
1968ல் மக்கள் திலகத்தின் மூன்று வண்ணப்படங்கள்
ரகசிய போலீஸ் 115
குடியிருந்த கோயில்
ஒளி விளக்கு
மேற்கண்ட மூன்று வண்ணப்படங்கள் மூலம் மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களுக்கு அவர் உருவாக்கிய தாக்கங்கள் ஏராளம் . அவருடைய சிறப்பான நடிப்பாற்றல் ,இனிமையான பாடல்கள் , புதுமையான சண்டை காட்சிகள் அருமை யான தத்துவ பாடல்கள் ,கருத்தாழம் கொண்ட உரையாடல்கள் ,கண்கவரும் உடை அலங்காரம் , இளமையான தோற்றம் , சுறு சுறுப்பான நடிப்பு ,விறு விறுப்பான காட்சிகள் என்று ரசிகர்களுக்கு விருந்து படைத்தார் . மூன்று படங்களும் மாபெரும் வெற்றிகளை பெற்றது . குறிப்பாக இலங்கையில் ஒளிவிளக்கு , முதல் வெளியீட்டில் பெற்ற வெற்றியை தொடர்ந்து மறு வெளியீட்டிலும் 100 நாட்களை தாண்டி ஓடியது .
குடியிருந்த கோயில் , ஒளிவிளக்கு , ரகசிய போலீஸ் 115 மூன்று படங்களும் கடந்த 47 ஆண்டுகளில் பல ஆண்டுகள் , பல ஊர்களில் தொடர்ந்து ஓடிய வண்ணம் இருப்பது மூலம் திரை உலகில் மக்கள் திலகத்தின் செல்வாக்கும் , புகழும் இன்னமும் நிலைத்திருப்பது தெரிய வரும் .மேற்கண்ட படங்களை டிஜிடல் முறையில் மெருகேற்றி, திரையிட்டால் இன்னமும் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பது என் கருத்து .
திரு ரவிகிரண் பதிவிட்ட மக்கள் திலகத்தின் மதுரை வீரன் , நாடோடி , மீனவ நண்பன் புத்தம் புதிய பொலிவில்
வருவது அறிந்து மிக்க மகிழ்ச்சி . தகவலுக்கு நன்றி திரு ரவிகிரண்.
பெங்களூரில் மறு வெளியீடுகளில் மக்கள் திலகத்தின் எம்ஜிஆர் படங்கள் பற்றிய ஒரு சிறிய வீடியோ தொகுப்பு .
https://youtu.be/B1-LkmCJvCs
என்ன ஒரு தெளிவான பக்குவம் எம்.ஜி.ஆருக்கு ...?
===============================================
(நண்பர் ஜான் துரை ஆசிர் செல்லைய்யா அவர்களின் பதிவு)
சோவை சிலருக்குப் பிடிக்கும்...சிலருக்குப் பிடிக்காது...
ஆனால் எம்.ஜி.ஆருக்கு சோவை ரொம்பவே பிடிக்கும்...
எம்.ஜி.ஆர். நடித்த “என் அண்ணன்” படத்தை இயக்கிய ப.நீலகண்டன் , சோவிடம் ஒருமுறை பேசிக் கொண்டிருந்தாராம்...
பேச்சுவாக்கில் “உங்களுடைய “துக்ளக்” பத்திரிகை எப்படிப் போகிறது..?” என்று கேட்டாராம் நீலகண்டன்...
அதற்கு சோவும் , “நல்லாத்தான் போய்க்கிட்டிருக்கு...” என்றாராம்... நீலகண்டன் தொடர்ந்து கேட்டாராம்... “கலைமகள் பத்திரிகை எப்படிப் போகிறது..?”...
[ கலைமகள் ஒரு தரமான இதழ் ]
சோவும் “அது சுமாராகத்தான் போகிறது” என்று சொல்ல...நீலகண்டன் நீண்ட பெருமூச்சுடன் கேட்டாராம்...“துக்ளக்கைப் போன்ற பத்திரிகையெல்லாம் நல்லாப் போகுது...! ஆனால் தரமான கலைமகள் போன்ற பத்திரிகையெல்லாம் சுமாராகத்தான் போகுது... இது எப்படி..?”
பட்டென்று சோ சொன்னபதில் : “ பாருங்க சார்... எத்தனையோ நல்ல படங்கள் வந்து ஓடாமல் போகுது... ஆனா ‘ என் அண்ணன் ‘எப்படி நல்லா ஓடுது பாருங்க ... அதைப் போலத்தான்னு வச்சுக்குங்களேன்..”
அதிர்ந்து போனாராம் நீலகண்டன்...ஏனென்றால் , சோ இப்படிச் சொல்லும்போது அருகில் இருந்தவர் யார் தெரியுமா..?
எம்.ஜி.ஆர்....! சரி...பக்கத்தில் இருந்த எம்.ஜி.ஆர். என்ன செய்தார்..?
விலா நோக விழுந்து விழுந்து சிரித்தாராம்....
நீலகண்டனிடம் சிரித்துக் கொண்டே எம்.ஜி.ஆர். கேட்டாராம்..
“சோ கிட்ட ஏன் வாயைக் கொடுக்கறீங்க..?”
# என்ன ஒரு தைரியம் சோவுக்கு...?
அதை எளிதாக ஏற்றுக் கொள்ள என்ன ஒரு தெளிவான பக்குவம் எம்.ஜி.ஆருக்கு ...?
“என் அண்ணன்” படத்தில் கண்ணதாசன் எழுதிய பாடல் நினைவில் வருகிறது...
“ரெண்டில் ஒன்று பார்ப்பதற்கு தோளை நிமிர்த்து
அதில் நீதி உன்னை தேடி வரும் மாலை தொடுத்து”
நன்றி : நண்பர் ஜான் துரை ஆசிர் செல்லைய்யா அவர்களுக்கு John Durai Asir Chelliah
சைலேஷ் சார் இனிமேல் வீடியோ படங்கள் போடாமல் தலைவரின் புகழை பரப்புன்களேன்..எனது அன்பு வேண்டுகோள்..
நாங்கள் புரட்சித்தலைவரை "கடவுள்" என்று சொல்லுவதில்லை. அவர் பரம் பொருள் [SUPER COSMIC POWER], கடவுளுக்கு எல்லாம் கடவுள், அதைய தான் தாங்களும் இங்கு பதவு செய்துள்ளீர்கள். அடுத்தது நடிகர் திலகம் திரியல் "தேவையான விசயங்களை மட்டும் பதிவிடுகிறாள்கள்..சும்மா பேப்பரில் வந்த விசயங்களையும்..". நாங்கள் இங்கு பதிவு செய்வது "எல்லாமே தேவையான விஷயங்களே"!
எந்த ஒரு திரிக்கும் மிகவும் முக்கியம் அந்த திரி யாருடையது, அதை குறிந்து மற்றும் பதிவு செய்யவேண்டும். வேறு எந்த நபரையும் ஒப்பிட்டு பேசுவது, தெவிட்ட சொற்கள் உபயோகிப்பது, கிண்டல், நக்கல், மறைமுக தாக்குதல் எப்படி பலவிஷயங்களை தவிர்க்கவேண்டும்.
பக்தர்களில் பல ராகம் உண்டு, சனதான தருமியின் வழிபாடு வேறு, இஸ்லாமியர் வழி வேறு, கிறிஸ்துவர்கள் வழி வேறு. மேலும் சனதான தருமியின் வழிபாட்டில் பல பிருவுகள் உள்ளன. ஈசனை கும்பிடும் விதம், விஷுனுவை கும்பிடும் விதம், விநாயகனை கும்பிடும் விதம், முகுரனை கும்பிடும் விதம், சிலர் குனித்து கொண்டு கும்பிடுவார்கள் சிலர் மார்பில் அடித்துக்கொண்டு கும்பிடுவார்கள், சிலர் அங்க பிரதர்ஷனம் செய்வார்கள், சிலர் கால்அணி அணிதுகொண்டு என்று சொல்லி கொண்ட போகலாம். அதை போல தான் நான் கடவுல்ல்கு படிக்கும் நைவேத்யம்/பிரசாதம்/படைத்தல் வேறு படுகிறது.
நடிகர்களின் ஒவ் ஒரு பக்தரின் ரசனையும் வேறு. அதை நாம் தவறு என்று சொல்லமுடியாது.
மனிதனை மனிதன் ஒப்பிட்டு பேசுவதால் தான் “எது சரி” “எது தப்பு” என்று தெளிவான விளக்கம் அளிக்க இங்கு பத்திரிகையில் வந்த விசயங்களையும், youtubeஇல் உள்ள தலைவரின் பதிவுகளும் பதிவு ரதத்தின் ரத்தங்களால் பதிவு செய்ய படுகிறது. இது பக்தி/வழிபாடு போல வேறுபடும் அதை “என் வழியே சிறந்து” என்று சொல்லுவதற்கு இல்லை.
அப்படி ஒரு மதத்தின் பெயரில் தான் அணைத்து மக்களுக்கும் நம்பிக்கை இருந்தால்இந்த உலகத்தில் புரட்சி தலைவரை சொன்னது போல் "ஒன்றே குலமென்று பாடுவோம் ஒருவனே தேவனென்று போற்றுவோம் அன்னை இதயமாக அன்பு வடிவமாக வந்து வழிகாட்ட வேண்டும் என்று வணங்குவோம்" என்று அணைத்து மக்களும் ஒன்றாக இருப்பார்களே.
எனக்கு ஆன்மிகத்தில் நம்பிக்கை இல்லை. அதற்காக இங்கு எல்லோரும் அப்படி தான் இருக்கவேண்டும் என்ற நான் சொன்னால் அது மிக தவறு.
எனது தாழ்மையான அவிப்பிராயம், நமது பதிவுகள் பொய், மிகைபடுதுதல், யாருக்கும் மனகஷ்டம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதே. ஆகையால் இங்கு உள்ள பதிவுகளில் தவறு இல்லை என்பது எனது சொந்த கருத்து.
நன்றி.
இந்த பதிவின் மூலமாக நான் யாருடைய மனதையும் புண்படுத்தவில்லை என்று நம்பிகிறேன். தவறு இருந்தால் வயதில் பெரியோர்கள் மன்னியுங்கள், வயதில் சிறியவர்கள் எனது மனிப்பை ஏற்றுகொள்ளுங்கள்
அன்பு நண்பர் சைலேஷ் சார்.. உங்களது விளக்கம் எனக்கு திருப்தி..தலைவர் மறைந்ததிர்க்கு பிறகு எழுதப்படும் புத்தகங்களும்..செய்திகளும்..நம்பகத்தன்மை மிகவும் குறைவு..அதாரத்தோடு நிறைய சொல்லமுடியும்..நீங்கள் சொல்வதை போல் அது தேவையில்லை..எனக்கு ஆசை அதிகம்..மற்ற திரிகளில் உள்ள பதிவுகளைப்போல்..நமது திரியிலும் உண்மையான ஆவணங்கள் பதிவிசெயயபடவேண்டும்..என்னிடம் தலைவரின் அணைத்து படங்களின் வீடியோ பதிவுகள் உள்ளன..என்னால் அவற்றைத்தான் பதிவிட முடியும்..மற்ற நண்பர்களாவது உபயோகமான பதிவுகளை மற்ற திரியில் பதிவிடுவதைபோல் பதிவு செய்ய வேண்டும் என்ற ஆவலில்..மேற்கண்ட பதிவை செய்தேன்..தங்களது பதில் எனக்கு ஆறுதலை தந்தது என்பதை பதிவு செய்கிறேன்..
1954ல் மலைக்கள்ளன் பிரமாண்ட வெற்றி .
1956ல் மதுரைவீரன் வெள்ளிவிழா - அதிக அரங்கில் 100 நாட்கள் .
1958ல் நாடோடி மன்னன் 13 அரங்கில் 100 நாட்கள் - மதுரையில் வெற்றி விழா
1961ல் திருடாதே இமாலய வெற்றி விழா
1962ல் தாயை காத்த தனயன் மாபெரும் வெற்றி
1963ல் பெரிய இடத்து பெண் - வெற்றி .
1964ல் பணக்கார குடும்பம் மாபெரும் வெற்றி
1965- 1975 வரை 11 ஆண்டுகள் தொடர்ந்து பல சாதனைகள்.
இப்படி பல சாதனைகளை தன்னகத்தே கொண்டவர் நம் மக்கள் திலகம் .
திருச்சி காரர் பாவம் . அவருக்காக பரிதாபம் கொள்வோம் . என்ன ஒரு நம்பிக்கை .