http://i64.tinypic.com/2d1ad6q.jpg
Printable View
இரங்கல் செய்தி
--------------------------
சென்னை புறநகர் திருநின்றவூர் அருகில் உள்ள நத்தமேடு பகுதியில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். கோயில் நிர்வாகி திரு.கலைவாணன் அவர்களின் அன்பு மனைவி திருமதி சாந்தி கலைவாணன் அவர்கள் இன்று பிற்பகல் உடல்நல குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிர் நீத்தார் .
அன்னாரது பூத உடல் நாளை (21/06/17) காலை 11 மணியளவில் திருநின்றவூர்
மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது .
திருநின்றவூரில் உள்ள புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். ஆலயம் உருவாக்குவதில்
திருமதி சாந்தி , தனது கணவர் திரு. கலைவாணன் அவர்களுக்கு எல்லா வகையிலும் பேருதவி புரிந்தவர் என்பது நினைவு கொள்ள தக்கது .
அவரது ஆத்மா சாந்தி அடைய அவர் அன்றாடம் வழிபட்டு வந்த இறைவன் எம்.ஜி.ஆர். அருள் புரிவாராக
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு கோயில் உருவாக உறுதுணை புரிந்த
திருமதி சாந்தி அவர்களின் இறுதி ஊர்வலத்தில் அனைவரும் கலந்து கொண்டு
அஞ்சலி செலுத்துமாறு வேண்டுகோள் விடுக்கப்படுகிறது .
தனது மனைவியை இழந்து வாடும் திரு. கலைவாணன் மற்றும் அவரது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு சார்பாகவும், மற்றும் அனைத்து எம்.ஜி.ஆர். மன்றங்களின் கூட்டமைப்பு சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் .
ஆர். லோகநாதன் .
இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு .
சென்னை.
https://s29.postimg.org/geiy9x46v/IMG_4505.jpg
மக்கள் திலகம் எம்ஜிஆருக்கு
ஆலயம்
நிறுவிய
திரு.கலைவாணன்
அவர்களது
துணைவியார்
திருமதி சாந்திகலைவாணன்
அவர்கள்
இன்று காலை
இறைவ(எம்ஜிஆரின் திருவடி)னடி
சேர்ந்தார் என்பதை திரு கலைவாணன்
அலைபேசியில் எனக்கு தெரிவித்தார்.
அவரது ஆன்மா
சாந்தியடைய
எல்லாம் வல்ல
இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
நமது மக்கள் திலகம் திரியின்
சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலைத்
தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்புடன்
எஸ் ரவிச்சந்திரன்