-
பகைவருக்கா?? செய்!!
-------------------------------------------
ஒரு அரசால் செயல்படுத்தப்படும் திட்டம் பொது மக்கள் அனைவரையும் சென்றடைகிறதா என்றால்--
சந்தேகம் தான்!!
கட்சியின் பொறுப்பில் உள்ளவர்கள் செய்யும் திருவிளையாடல்கள் தான் காரணம்!!
சாமி வரம் கொடுத்தாலும்--பூசாரி வரம் கொடுக்க மாட்டார் என்பதே இந்த அரசியல்வாதிகளால் உண்டான பழமொழி தானோ என்னவோ??
அது 1983!
ஏழைகளுக்கு,,ஆளுக்கு பத்து மிதிவண்டிகள் வீதம் வழங்க ஆணையிடுகிறார் முதல்வர் எம்.ஜி.ஆர்!
தம் பகுதியில்,,கட்சி வித்தியாசம் இல்லாமல்,,உண்மையான வறுமையாளர்கள் பட்டியலைத் தயாரிக்கிறார் நம் ஓமப்பொடியார்!
அப்போதைய கனரா வங்கி மேலாளரும்,,அப்போதைய அமைச்சர் அருணாச்சலமும் மிதி வண்டிகளை வழங்குவதாக ஏற்பாடு செய்யப்படுகிறது!
அப்போது,,அவருக்கும்,,ஜேப்பியாருக்கும் இடையில் கொஞ்சம் கசமுசா!!
எம்.ஜி.ஆர் திடீர் என்று ஓமப்பொடியாரை அழைக்கிறார்?
ஏய்யா?? கஷ்டப்படறவங்களுக்கும்,,நம்மக் கட்சிக்காரங்களுக்கும் செய்யறதை விட்டுட்டு எல்லாக் கட்சிக்காரர்களுக்கும் சிபாரிசு பண்ணியிருக்கே??
எம்.ஜி.ஆரின் நேரிடைக் கேள்விக்கு ஓமப்பொடியாரின் நெளிவு இல்லாத பதில்--
ஆமாம் தலைவரே??
ஏறிட்டுப் பார்த்த எம்.ஜி.ஆரிடம் தொடர்கிறார் ஓமப்பொடியார்---
உங்களுக்கு ரசிகர்கள் எல்லாக் கட்சியிலேயும் இருக்காங்க!
முக்கியமாகத் தாய்க்குலம்!!
புருஷன் எந்தக் கட்சியில் இருந்தாலும்,,அவங்க மனைவிகள் மதிக்கறது உங்களைத் தான்!! காரணம் அவங்க அன்பு,,,அரசியலுக்கு அப்பாற்பட்டது!! அந்த விதத்துல--எதிர்க் கட்சியாக இருந்தாலும்,,நம்ம குடும்பத்துக்கு விளக்கேத்தி வச்சது எம்.ஜி.ஆர்ன்னு அவுங்க உங்களை வாழ்த்துவாங்க தலைவா!!
சாதாரணமாக,,ஒரு கட்சியின் தலைவர்--அதிலும் முதலமைச்சர்,,இது போன்று தொண்டர்கள் விளக்கம் அளிப்பதை ரசிக்க மாட்டார்கள்!!
இந்த இடத்தில் தான் பெருந்தன்மையிலும்--தொண்டரின் எண்ணங்களை அலசுவதிலும் இமயத்தை விட உயர்கிறார் எம்.ஜி.ஆர்!!!
அமைச்சர் அருணாச்சலத்தை அழைத்த எம்.ஜி.ஆர்---
ஓமப்பொடியின் எண்ணம் உயர்வாக இருக்கு!! மிதிவண்டிகளை நீங்கள் வழங்க வேண்டாம்?
ஓமப்பொடியே,,தன் கரங்களால் வழங்கட்டும்???
இப்படி ஒவ்வொரு புள்ளியிலும் தன் பிரம்மாண்டத்தை நமக்கு இருக்கும் சிறியதொரு இதயத்தில்,,தம் செய்கைகளால் நிரப்பப் பார்க்கும் எம்.ஜி.ஆர்??
என்னைப் பொறுத்தவரை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு அவர் பெயரை சூட்டியதே சிறிய விஷயமாகத் தான் படுகிறது?
அவருடைய தகைமைக்கு இன்னமும் உயர்ந்த--காலத்துக்கும் நிற்கக் கூடிய விஷயத்தை அரசு செய்ய வேண்டும் என்பதே!!
உங்கள் கருத்து???......... Thanks wa.,
-
திரு.மோடி அவர்கள் அடையாறில் உள்ள சத்யா ஸ்டூடியோ ஜானகி எம்.ஜி.ஆர் மகளிர் கலை கல்லூரியில் உள்ள தலைவர் எம்.ஜி.ஆர் சிலையை இன்று 6.3.19ல் திறந்து வைத்தார் மகிழ்ச்சி.
ஆனால் அதில் ஒரு வரலாற்று கசப்பும் உள்ளது:
தலைவர் மறைந்த தன்னுடைய உடமைகள் அனைத்தும் மக்களுக்கு அளித்து தெய்வமானார். சத்யா ஸ்டுடியோவை ஜானகி எம்.ஜி.ஆர் மகளிர் கலை கல்லூரி என பெயர் மாற்றம் செய்து செயல்பட அப்போதிருந்த அம்மையார் ஆட்சி நிர்வாகம்.இசையவில்லை.செய்யவில்லை.மாறாக கைமாறு எதிர்பார்த்தது.இந்த சூழலில் ஒருமுறை விஜயகாந்த் அவர்கள் ஜானகி அம்மையாரை சந்திக்க சென்ற சமயம் இந்த விஷயம் அறிந்து அவர் கேட்டு அறிந்தார்.அவரிடம் இந்த கோரிக்கை மனதில் இருந்தது.பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு கலைஞர் ஆட்சிப்பொறுப்பு. அந்த சூழலில் விஜயகாந்த் இந்த கோரிக்கையை கலைஞரிடம் நினைவூட்டி அதன் பிறகு ஜானகி எம்.ஜி.ஆர் மகளிர் கலைகல்லூரி என ஆணை பெறப்பட்டு செயல்படுகிறது.
அரசியல் சதுரங்கம் எப்படி என்று நமது பக்தர்கள் அறிந்துகொள்ளவேண்டும் என்று தான் இந்த பதிவை இந்த சூழலில் பதிவிடுகிறேன்.
நெல்லை.எஸ்.எஸ்.மணி..... Thanks wa.,
-
-
-
-
-
-
நமது கலையுலக சக்கரவர்த்தி புரட்சி நடிகர் அவர்களுடைய ஏராளமான காவிய படைப்புகளில் வில்லத்தனமான நடிப்பில் இலக்கணம் வகுத்த மறைந்த mn. நம்பியார் அவர்தம் 100 வது பிறந்த நாள்... இன்று...
-
-