இந்த படத்தில் சிவாஜி சாரும் இருக்கிறார் , ஆனால் பல நடிகர்களும் கலக்கி உள்ளார்கள் , சரோஜா தேவி தன் கொஞ்சும் தமிழில் கொஞ்சி கொஞ்சி பேசுகிறார் , சில சமயம் நன்றாக இருக்கிறது , சில சமயம் எரிச்சல் , சரோஜா தேவி பல படங்களில் நடித்தாலும் நம்மவருடன் நடித்த புதிய பறவை , பாலும் பழமும் படத்தில் அவருக்கு நல்ல பெயர் , ஆற்றில் முழ்கி வரும் காட்சிகளில் , தொடர்ந்து வரும் சிவாஜி சாரின் குடிசையில் அவர் பேசும் வசனம் lively , தனக்கு வர போகும் கணவரை பற்றி மொட்டை கடிதாசி வர அவர் காட்டும் reaction அபாரம் , ஆனால் அவர் சிவாஜி சாரை விரட்டி விரட்டி , காதலிக்கும் காட்சிகள் நன்றாக ஆரம்பித்து , போக போக சலிப்பு ஏற்படுகிறது
SV ரங்கராவ் dignified பாத்திரங்களுக்கு எப்போதும் best சாய்ஸ் , அவர் நடிப்பில் மாயாபஜார் , படிக்காத மேதை என்னை மிகவும் கவர்ந்த படங்கள் , இந்த இரண்டிலும் அவர் லிடேரல்லி second ஹீரோ , இதிலும் அவர் gentleman பாத்திரம் தான் தன் பெண் ஒரு நபரை விரும்புவதை அறிந்த உடன் அவர் போடும் சத்தம் , சில நிமிடங்களுக்கு பிறகு கல்யாணத்துக்கு சம்மதிதுடன் சிவாஜி , சரோஜா கண்களில் மட்டும் அல்ல , நம்ம கண்களிலும் கண்ணீர் , அனந்த கண்ணீர்