-
அனைவருக்கும் வணக்கம்.
கடுமையான பணிகள், வெளியூர் பயணம் காரணமாக சில நாட்களாக திரிக்கு வரமுடியவில்லை. தலைவர் நடித்த ரிக்க்ஷாக்காரன் படத்தின் 45 வது ஆண்டு நாளை தொடக்கம். குமார் சார் கூறியுள்ளபடி சென்னை தேவி பாரடைஸ் திரையரங்கில் 142 நாட்களில் ரூ.9 லட்சம் வசூல் செய்த வசூல் சக்கரவர்த்தியின், இன்று பார்த்தாலும் புதுப்படம் போலவே இருக்கும் ரிக்க்ஷாக்காரன் படத்தைப் பற்றிய எனது கருத்துக்களை முடிந்தால் இன்றோ அல்லது நாளையோ பதிவிடுகிறேன்.
குமார் சார், உங்களது ரிக்க்ஷாக்காரன் மலரும் நினைவுகள் சூப்பர். உங்கள் எழுத்து எங்களை அந்தக் காலத்துக்கே கொண்டு சென்று விட்டது.
இணையத்தில் இருந்து எடுத்து எஸ்.வி.சார் பதிவிட்ட பதிவுகளும் அருமை.
தந்தையை இழந்த துயரத்தில் இருந்து மன உறுதியுடன் மீண்டு, தலைவருக்கு மீண்டும் புகழ் மாலை சூட்ட வந்திருக்கும் சகோதரர் திரு.வி.பி.சத்யா அவர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றியும்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
திரு ராகவேந்திரன்
அவர்களுக்கு
இனிய பிறந்த
நன்னாள் வாழ்த்துக்கள்
அன்புடன்
எஸ் ரவிச்சந்திரன்
-
I first watched Rickshawkaran in VHS way back in May 1990.
-
-
-
My father had watched the Rickshaw race shooting, I remember only that part as I was not a Puratchi Thalaivar fan those days.
http://i125.photobucket.com/albums/p...ps76ea74f5.jpg
-
Happy returns of the day Raghavendra Sir.
-
பிறந்தநாள் வாழ்த்துக்களில் தங்கள் அன்பைப் பொழிந்த அன்பு உள்ளங்கள்,
நெய்வேலி வாசுதேவன், பெங்களூர் பாலகிருஷ்ணன் சுந்தரபாண்டியன், சித்தூர் வாசுதேவன், சந்திரசேகர், முத்தையன் அம்மு, ரவிகிரண் சூர்யா,
பார்த்தசாரதி, கலைவேந்தன், வரதகுமார் சுந்தரம், ரவிச்சந்திரன், எம்ஜிஆர் ரூப் கண்ணன், உள்ளிட்ட அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றிகள். எல்லாம் வல்ல இறையருளால் தாங்கள் அனைவரும் எல்லா நலனும் வளமும் பெற்று வாழ்வாங்கு வாழ்ந்து சிறப்புற வாழ்த்துக்கள்.
-
இனிய நண்பர திரு குமார் சார்
தங்களின் மலரும் நினைவுகள் - புதுமையாக இருந்தது .நானும் முதல் நாள் சென்னை - தேவிபாரடைஸ் அரங்கில்
சிறப்பு காட்சியை கண்டு மகிழ்ந்தேன் .அப்போது சைதையில் இயங்கி வந்த நம்நாடு எம்ஜிஆர் மன்றம் மூலம் ரூ 10
சிறப்பு கட்டணத்தில் படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது .மக்கள் திலகத்துடன் ரசிகர்கள் பட்டாளத்துடன் ரிக்ஷாக்காரனை பார்த்தது என் வாழ்வில் கிடைத்த மிக பெரிய பாக்கியம் . மக்கள் திலகத்தின் இயற்கையான நடிப்பு, எழிலான தோற்றம் ,சாகச சண்டை காட்சிகள் , இனிய பிரமாண்ட பாடல்கள் ,ஆர்.கே சண்முகத்தின் துடிப்பான உரையாடல்கள் ,மெல்லிசை மன்னரின் ரீ ரெக்கார்டிங் , ராமமூர்த்தியின் ஒளிப்பதிவு, இயக்குனர் கிருஷ்ணன் அவர்களின் சிறந்த இயக்கம் . திரை உலகில் மாபெரும் மாற்றத்தை உருவாக்கியது .
மக்கள் திலகம் சிறந்த நடிகருக்கான பாரத் விருது
வசூலில் பிரமாண்டம்
காலத்தால் அழியாத வெற்றி காவியம் .
-