http://i68.tinypic.com/2ypaz2b.jpg
Printable View
10.3.1972
மக்கள் திலகத்தின் ''நல்ல நேரம் '' இன்று 45 வது ஆண்டு துவக்க தினம் .
https://youtu.be/u_xUTTKbSCc
1956ல் தாய்க்கு பின் தாரம் படம் முதல் 1972 நல்ல நேரம் வரை தேவரின் 16 படங்களில் மக்கள் திலகம் நடித்தார்
மக்கள் திலகம் எம்ஜிஆர் - தேவர் வெற்றி . கூட்டணியில் 16 படங்களையும் இயக்கிய பெருமை திருமுகம் மற்றும் இசை அமைத்தவர் கே..வி . மகாதேவன் என்பது திரை உலகில் சாதனையாகும் .
கதாநாயகனாக எம்ஜி.ஆரின் முதல் படம் ராஜகுமாரி. அதில் ஒரு சண்டைக் காட்சியில் தன்னோடு மோதி நடிக்க சின்னப்பா தேவரை எம்ஜிஆர் சிபாரிசு செய்தார். தயாரிப்பாளர் சோமு, அதெல்லாம் வேண்டாம். நம்ம கம்பெனியிலேயே மாதச் சம்பளம் வாங்கும் எக்ஸ்ட்ரா அவன். வேறு பிரபலமானவரைப் போடலாம் என்றார்.
சின்னப்பா இருக்கிறாரே! என்ன வனப்பான உடல்! எவ்வளவு திறமையாகச் சண்டை போடக் கூடியவர்! சின்னப்பாவின் திறமை உங்களுக்குத் தெரியாது. எனக்கத் தெரியும். அவரையே நடிக்க வைப்போம். இல்லாவிட்டால் இந்த சண்டைக் காட்சியே வேண்டாம் என்று தனக்கு நிச்சயமில்லாத நிலையிலும் தேவரை எம்ஜிஆர் ஆதரித்தார்.
அன்று முதல் நெருக்கமானார்கள் எம்ஜிஆரும், தேவரும். அதிக படங்களை தயாரித்த தயாரிப்பாளர் தான் சின்னப்ப தேவர் 16 படங்கள்.
தாய்க்குப்பின்தாரம் என்ற படத்தை தேவர் முதன்முதலாக எம்ஜிஆரை வைத்துத் தயாரித்தார். இந்த படம் தான் தேவருக்கு அதிகமாக வசூலைத் குவித்த படம் மட்டுமல்ல மீண்டும் எந்த இடத்தில் திரையிட்டாலும் வசூலை தந்த படம். தேவர் தன் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தாக குறிப்பிடுவது முருகன் மற்றும் எம்ஜிஆர் ஆகிய இருவரைத்தான்.
courtesy - net
1936ல் தமிழ்த்திரையுலகத்தைத் தாக்க ஆரம்பித்த இந்தப் புயல்!
திரையில் ஓய்ந்தது 1977ல், சுந்தரபாண்டியனாக மதுரையை மீட்ட பின்பு!
தரையில் ஓய்ந்தது 1987ல் தமிழகத்தை 11 வருடங்கள் ஆண்டபின்பு!
அரசியல் எதிரிகள் மெதுவாக எட்டிப்பார்த்தனர் இவர் மாண்ட பின்பு!
எம்ஜிஆர் சினிமாவிலும் சரி , அரசியலிலும் சரி நிஜ ஹீரோவாக வாழ்ந்து காட்டினார்.எம்ஜிஆரின் 115 படங்களில் 75 படங்கள் இன்றும் திரை அரங்கில் பவனி வருகிறது.புது படங்களை விட அதிக வசூல் ஆகி வசூல் சக்ரவர்த்தியாக திகழ்கிறார். உலகில் எந்த ஒரு நடிகருக்கும் கிடைக்காத பெருமை. எம்ஜிஆரின் ஒட்டு வங்கி இன்னும் வாழ்கிறது.
எம்.ஜி.ஆர் என்னும் நடிகர் , தனி மனிதர், உண்மையாகவே மிக நல்ல மனிதாபிமானியாக , மனித நேயத்தை உண்மையாகவே வெளிப்படுதியவ ராகவே வாழ்ந்து மறைந்தார்.
நிஜமாகவே எம்.ஜி.ஆர் ஹீரோவாய் இருந்ததினால் மறைந்த பிறகும் கூட மக்கள் மத்தியில் பெரும் மரியாதைக்குரிய நீங்காத நினைவுகளாய் வாழ்ந்துகொண்டிருக்கிறார். புரட்சி தலைவர் புரட்சி தலைவர்தான். நேற்றல்ல இன்றல்ல நாளையும் ஏன் என்றென்றும் எம்.ஜி. ஆர் தான். அன்பு, பண்பு, ஒழுக்கம் இதுதான் புரட்சி தலைவர்.
ஒரு நடிகராகவும், முன்னணித் தமிழ்த் தேசியவாதியாகவும், அனைத்திந்திய திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவராகவும் , சமூகத் தொண்டனாகவும், ஏழைகள் தோழனாகவும், கொடையாளியாகவும், வீரனாகவும், விளங்கி தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் திகழ்ந்தவர். இவரது வசீகரமான தோற்றத்தாலும், நடிப்பாலும், கொடையுள்ளத்தாலும் மக்களை கவர்ந்த இவர்.
எம்.ஜி.ஆருக்கு ரசிகர்களும், தொண்டர்களும் ஏராளம், அவர் எதை செய்தாலும், அதை வேதவாக்காக ஏற்று செயல்பட்டார்கள். கையில் பச்சை குத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறியதும், அனைவரும் பச்சை குத்திக் கொண்டனர். வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு, பல சோதனைகளில் வெற்றி கண்டு, சாதரண நடிகராக இருந்து சூப்பர் ஸ்டாராக உயர்ந்து, அரசியலில் மும்முறை முதல்வரான எம்.ஜி.ஆர் மறைந்தாலும், மக்களின் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
ஆனாலும், திரையுலகைத் தாண்டி அரசியலிலும், மக்கள் மனங்களிலும், ஏழைகளின் இதயங்களிலும் இன்னும் இந்த வசீகரப் புயல் நிலைகொண்டுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. இந்தப் பெயர் இவ்வுலகுள்ளவரை நிலைத்திருக்கும் என்பதும் உண்மை. கண்ணை மூடிக்கொண்டு திரையரங்கு களுக்கு வரும் ரசிகர்கள் முதல், தேர்தல் அரங்குகளுக்கு வரும் தொண்டர்கள் வரை இன்னும் இந்தப் பெயர் கோலோச்சி வருவது நாம் அனைவரும் கண்கூடாகக் காணும் நிகழ்வுகள்!
நிஜ வாழ்வில் பற்றியிருந்ததோ ஏழைகளின் கரங்களை! போலியாக புகைப்படங்களுக்கு மட்டும் காட்சியாக இல்லாமல், செல்லும் இடமெல்லாம் கூடும் மக்கள் கூட்டங்களில், முதியோர், வறியோர், எளியோர் என்று இவரது அன்புக்கரங்களுக்குள் அடைக்கலமானவர்கள் எண்ணிலடங்காதோர்! எந்தவித சஞ்சலமுமின்றி, ஏழைக்குழந்தைகளை இவர் வாரியணைத்த வண்ணக் கோலங்கள் எத்தனை எத்தனையோ! மக்களோடு மக்களாக, குழந்தைகளோடு குழந்தையாக இவர் சத்துணவும் சமபந்தி போஜனமும் சாப்பிட்ட காட்சிகள் கண்களுக்கு நிறைவளிப்பவை. இப்படி ஒரு ஏழைப்பங்காளனாக!
பலரது பெயர்களுக்கிடையில் ஒரு பெயராய் வந்த எம்.ஜி.ராமச்சந்திரன் எனும் பெயர், விரைவிலேயே தனிப்பெயராய், தன்னிகரில்லா பெயராய், தரை டிக்கெட் முதல் பால்கனிவரை ரசிகர்களின் கைதட்டல்களைப் பெறும் பெயராய் உயர்ந்தது! சின்னச் சின்ன வேடங்களிலும் சிறப்பாய் நடித்து வந்தவரை, உச்சத்தில் கொண்டு சேர்த்தனர் மந்திரி குமாரியும், மலைக்கள்ளனும்! ரசிகர்களிடம் அப்போது துவங்கிய அந்தத் தாக்கம், இறுதிவரை இம்மியளவும் குறையவில்லை, இன்றளவும் அவரின்மீதுள்ள ஈர்ப்பு மறையவில்லை!
இவரது திரைப்படங்களை ரசிகர்கள் திரைப்படங்களாகப் பார்க்கவில்லை, தம்மையே திரையில் பார்க்கும் உணர்வுடன் ஒன்றிப்போய்ப் பார்த்தார்கள். எம்ஜிஆரின் உருவத்தில் இளைஞர்கள் தங்களை எண்ணிக்கொண்டு, இறுமாப்புடன் வலம் வந்தார்கள். அதனால்தான், எம்ஜிஆரது திரைப்படங்களில் பலவும் சாதனைகள் படைத்தன, சரித்திரங்களாய் மாறின. நகரங்கள், கிராமங்கள் என்று பட்டிதொட்டியெங்கும் எம்ஜிஆரின் திரைப்படங்கள் வெளியாகும் நாட்களாகக் கருதப்பட்டன.
courtesy -விஜயலட்சுமி
எம்ஜிஆர் பற்றி ஒரு பழைய தகவல் - புதிய பகிர்வு
நம் மேல் உண்மையான அக்கறையும் ,பிரியமும் உள்ளவர்கள் மட்டுமே நாம் மனச்சோர்வு அடையும் தருணங்களில் நமக்கு நம்பிக்கை சாமரம் வீசுவார்கள்.
இதற்கு எம்.ஜி.ஆரின் வாழ்வை ஓர் உதாரணமாகச் சொல்லலாம்.
எம்.ஜி.ஆர் ஆரம்பகாலத்தில் பெரிய வாய்ப்பு கிடைக்காமல் மிகுந்த மன உளைச்சலில் இருந்திருக்கிறார்.
அந்நேரம் நந்தலால் ஜெஸ் வந்தலால் என்றொரு வட இந்தியர் ஒரு தமிழ்ப் படத்தை இயக்குவதற்காக தமிழகம் வந்திருக்கிறார்.
கலைவாணர் அந்த டைரக்டரிடம் "இவர் ஒரு நடிகர்" என எம்.ஜி.ஆரைக் காட்டியிருக்கிறார்.
உடனே ,வந்தலால் எம்.ஜி.ஆரை நடித்துக் காட்டச் சொல்லியிருக்கிறார்.
எம்.ஜி.ஆரின் நடிப்பைக் கண்ட வந்தலால் " Well decorated Mythological Pillar " (அலங்கரிக்கப்பட்ட புராணகாலத்துத் தூண்)என்று பாராட்டியிருக்கிறார்.
அதைக் கேட்டதும் எம்.ஜி.ஆருக்கு ஆனந்தக் கண்ணீர் வழிந்திருக்கிறது. அப்பொழுது எம்.ஜி.ஆர் இருபது வயது இளைஞன் !
அருகிலிருந்த கலைவாணர் எம்.ஜி.ஆரிடம்
" உன்னைப் பற்றி அந்த டைரக்டருக்குத் தெரிவதை விட
உன்னைப் பற்றி எனக்குத் தெரிவதை விட
உன்னைப் பற்றி உனக்குத் தெரியவேண்டும்
அப்பொழுதுதான் நீ வெற்றி காணமுடியும் "
என்று உத்வேகம் அளித்திருக்கிறார்.
இதன் பின் பல்வேறு போராடங்களுக்குப் பின் சினிமாவில் ஸ்திரமான ஓர் இடத்தைப் பிடித்தார் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆருடன் ஆரம்பகாலத்திருந்தே கூடவே இருந்து உற்சாகப்படுத்தியவர்களுள் முக்கியமானவர்கள் இருவர் 1) கலைவாணர் 2) சின்னப்பா தேவர்
courtesy -சூழல்
எலிகண்டின் வெற்றி எப்படிப்பட்டது என்பதற்கு ஒரு சம்பவத்தை இங்கு கூறுகிறேன்.
எம்ஜிஆர் முதலமைச்சராக நாளை பதவி ஏற்கிறார். "நாளை அனைத்து பத்திரிகைகளிலும் முழு பக்கம் விளம்பரம் வரவேண்டும்" என்று எலிகண்ட் நிறுவனத்தை அழைத்து எம்ஜிஆர் கூறிவிட்டார். அவர் கூறும் போது மணி மாலை 4. இப்போது போல் அப்போது மோடம், இ மெயில் போன்ற வசதிகள் இல்லை. எந்த விளம்பர மெட்ரியல் அனுப்ப வேண்டும் என்றாலும், நேரிடையாக அல்லது ஆட்கள் மூலம்தான் அனுப்ப முடியும். அதுவும் தமிழ் நாடு முழுவதும் அனைத்து பதிப்பிலும் அனைத்து பத்திரிகைகளிலும் வரவேண்டும் என்றால் மந்திர சக்தி இருந்தால் மட்டுமே அது சாத்தியம்.
இன்றைய காலம் என்றால், தொலை தொடர்பு சாதனங்களை கொண்டு உலகம் முழுவதும் ஒரு நொடியில் அனுப்பிவிடலாம். அன்றைக்கு அதெல்லாம் சாத்தியம் இல்லாதது. திருச்சிக்கு விளம்பர மெட்ரியல் அனுப்ப வேண்டும் என்றால் ஒரு நாளுக்கு முன்பாகவே பேருந்து அல்லது ரயில் மூலம் பத்திரிகைகளின் பெயரை போட்டு அனுப்பிவிடுவார்கள். சம்பந்தப்பட்ட பத்திரிகைகள் அங்கு அதை சேகரித்துக் கொள்வார்கள்.
எம்ஜிஆர் சொல்லும் போது மணி மாலை 4 மணி. அதற்கு பிறகு விளம்பரத்தை எழுத்து பிளாக் மூலம் கம்போஸ் செய்து, அதை எம்ஜிஆரிடம் காண்பித்து அனுமதி வாங்கி தமிழகம் முழுவதும் அனுப்ப வேண்டும் என்றால் மிகவும் கடினமான ஒன்று. பத்திரிகைகள் இயங்குவேதே நேரத்தின் அடிப்படையில்தான் என்பது நாம் அறிந்த ஒன்று! . நிர்ணயக்கப்பட்ட நேரத்தில் அந்தந்த வேலை முடிந்தால்தான் உங்களுக்கு 6 மணிக்கு படிக்க பேப்பர் கிடைக்கும்.
எம்ஜிஆரிடம் அனுமதி பெற்ற விளம்பரத்தை விமானம் மூலம் மதுரை, கோயம்புத்தூர், திருச்சி என்று அனுப்பி அடுத்த நாள் தமிழகத்தின் அனைத்து பத்திரிகைளிலும், பதிப்புகளிலும் விளம்பரத்தை வர செய்தார்கள். இன்றைய காலகட்டத்தில் இது மிகவும் சாதாரண நிகழ்வுதான். அன்றைக்கு அது சாதனை.
courtesy - net