http://i64.tinypic.com/ad007n.jpg
Printable View
சங்கரய்யா பெரியாரின் குடியரசு பத்திரிகையில் பணியாற்றிய மூத்த பத்திரிகையாளர். 74 வயதில் இருபதாண்டுகளுக்கும் மேலாக முரசொலி பத்திரிகையில் சீனியர் கட்டுரையாளராக வெறும் 300 ரூபாய் சம்பளத்துக்கு பணியாற்றி வந்தார்.
எம்ஜிஆர் முதல்வரான புதிது. ஒருநாள் மதியம் சங்கரய்யாவின் மனைவி ரத்தவாந்தி எடுத்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். உடனடியாக 10,000 தேவை. தன் தலைமையை தேடி ஓடுகிறார். சந்திக்கவே விடவில்லை. பணம் கட்டவில்லையென்றால், ஆபரேசன் செய்ய இயலாமல் மனைவி உயிர் போய்விடும். அழுது புலம்பும் சங்கரய்யாவை நண்பர்கள் அடுத்தநாள் காலை8மணிக்கு ராமாவரம் தோட்டத்தில் பொது மக்களிடம் மனுக்கள் பெறும் முதல்வரை சந்திக்க சொல்கிறார்கள். சங்கரய்யாவிற்கு உயிர் போகும் தேவையிருப்பினும், தன்மானமும், யாரை கடந்த ஆறு ஆண்டுகளாக கடுமையாக தாக்கி எழுதுகிறோமே அவரை சந்தித்து உதவி கேட்பதா எண்ணும் வெட்கமும் தடுக்கிறது.
அப்படியே சந்தித்தாலும், உறுதியாக எதிரிக்கு உதவ மாட்டார் என்று நண்பர்களிடம் சொல்கிறார். ஆபத்துக்கு பாவமில்லை என்று நண்பர்கள் அடுத்த நாள் காலை 7 மணிக்கே தோட்டத்திற்கு அழைத்துப்போகிறார்கள்.
காலை 8.30மணி. தோட்டம் பரபரப்பாகிறது. வெளி வந்த சொக்கத்தங்கம் மனுக்கள் வாங்குகிறது.(இந்த மனுக்கள் மீது 48 மணிநேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது முதல்வர் உத்தரவு) கூனிக்குறுகி சங்கரய்யா வரிசையை விட்டு தள்ளி பார்வையாளர்களோடு நின்று கொள்கிறார்.
மனுக்கள் பெற்று முடித்த முதல்வரின் கண்கள் பார்வையாளர்கள் பகுதிக்கு செல்கிறது. அழுக்கு ஜிப்பா அணிந்து, நான்கடி உயரமே இருந்த சங்கரய்யாவின் நல்லநேரம் தலைவர் கண்களில் பட்டு விடுகிறார்.
தலைவருக்கு ஆச்சரியம்...!
இவர் முரசாெலியில் வேலை செய்பவராயிற்றே, இங்கே எதற்கு வந்திருக்கிறார்? வினாவாவோடு"சங்கரய்யா, என்ன இங்கே?" அசந்து போகிறார் சங்கரய்யா. எத்தனை ஆண்டுகள் ஆகிறது? பெயர் ஞாபகம் வைத்து அழைக்கிறாரே! அதிர்ச்சியில் வார்த்தை வரவில்லை. நண்பர்கள்தான் தலைவரிடம் சங்கரய்யா நிலையை சொல்கிறார்கள்.
உடனே உதவியாளரை அழைத்த எம்ஜிஆர் ரூ50,000 யை சங்கரய்யாவிடம் தருகிறார், ஆஸ்பத்திரி செலவு போக மீதியை வங்கியில் டெபாசிட் செய்ய சொல்கிறார்.
மனைவி உயிர் பிழைத்து வந்ததும் சங்கரய்யா செய்த முதல் வேலை முரசொலியை விட்டு நின்றது, இரண்டாவது எம்ஜிஆரின் சிபாரிசால், கட்சி அலுவலகத்தில் தொலைபேசி பொறுப்பாளரானது.
300ரூபாய் சம்பளத்துக்கு முக்கிக்கொண்டிருந்த சங்கரய்யாவிற்கு தலைவர் தந்த மாதசம்பளம் எவ்வளவு தெரியுமா? ரூபாய்15,000.
நன்றி - திரு பாலசுப்பிரமணியம் - சென்னை
சென்னை புறநகர் திருநின்றவூர் அருகில் உள்ள நத்தமேடு கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு எம்.ஜி.ஆர். ஆலய நிர்வாகி திரு. கலைவாணன்
அவர்களின் அன்பு மனைவி திருமதி சாந்தி அவர்களின் பூத உடல் , கோயிலுக்கு
பின்புறம் உள்ள மயானத்தில் இன்று காலை 11.30 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது
நேற்று மாலையில் இருந்து ஏராளமான எம்.ஜி.ஆர். பக்தர்கள் ,அ.தி.மு.க தொண்டர்கள் தங்களுடைய இறுதி அஞ்சலியை செலுத்திய வண்ணம் இருந்தனர் .
இன்று காலையில் சென்னையில் இருந்து அனைத்து எம்.ஜி.ஆர் மன்ற . பக்தர்கள் தங்களது இறுதி மரியாதையை செலுத்தினர் . பத்திரிகை ஆசிரியர் திரு.சிரஞ்சீவி அனீஸ், பெங்களூரு திரு. கா .நா. பழனி , திருவண்ணாமலை திரு.கலீல் பாட்சா , கோவை திருமதி பெரிய நாயகி , திருவனந்தபுரம் திரு.வாமதேவன் மற்றும் சிலர்
இறுதி வரை இருந்து தங்களது இறுதி அஞ்சலியை செலுத்தினார்கள்
அனைத்து எம்.ஜி.ஆர். மன்ற பக்தர்களின் சார்பாக பேனரும் சுவரொட்டியும்
திருநின்றவூர் மற்றும் நத்தமேடு பகுதியில் ஒட்டப்பட்டிருந்தது .
http://i65.tinypic.com/29n8qjr.jpg
திரு. எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு இறுதியாக அனைத்து தினசரிகளிலும் , மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா
தமிழகம் முழுவதும் , அனைத்து முக்கிய நகரங்களில் கொண்டாடுவது குறித்து
வெளியிட்ட அரசு விளம்பரம் நண்பர்களின் பார்வைக்கு .
அ.இ .அ. தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆர். உருவத்தை முதன் முதலாக சற்று பெரியதாக தினசரிகளில் பிரசுரம் செய்து அரசு விளம்பரமாக வெளியிட்ட தமிழக
முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களுக்கு நன்றி . இது தொடருமா ?
http://i66.tinypic.com/2ujr2wx.jpg
தமிழ் இந்து -22/06/17
http://i1077.photobucket.com/albums/...ps4dz3fg0q.jpg
மதுரை நகருக்கு மேலும் ஒரு சிறப்பினை மக்கள் திலகம் எம்ஜிஆர் தருகிறார் .
மதுரை வீரன் - 1956
மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் - 1978
மதுரை மாநகராட்சி - 1978
மதுரை மேற்கு - 1980
மதுரை 5வது உலகத்தமிழ் மாநாடு - 1981
மதுரை மாவட்டம் திண்டுக்கல் இடைத்தேர்தல் - 1973
மதுரை - மீனாக்ஷி - உலகம் சுற்றும் வாலிபன் - 1973
மதுரை - சினிப்ரியா - உரிமைக்குரல் - 1974
மதுரை மாவட்டம் - ஆண்டிப்பட்டி - 1984
இன்னும் பல சாதனைகளை நிகழ்த்திய மக்கள் திலகத்தின் நூற்றாண்டு விழா
30.6.2017 அன்று மதுரை மண்னில் நடப்பது அறிந்து அவருடைய கோடிக்கணக்கான உலகமெங்கும் வாழ்ந்து கொண்டிருக்கும் எம்ஜிஆர் ரசிகர்களுக்கு பெருமைக்கு பெருமை என்பது நிதர்சனமான உண்மை .
40 ஆண்டுகளுக்கு முன்பு 30.6.1977 அன்று புரட்சித்தலைவர் எம்ஜிஆர் முதல் முறையாக தமிழக முதல்வராக பதவி ஏற்ற அந்த தினத்திலே எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடப்பது மேலும் ஒரு சிறப்பு .
மக்கள் திலகத்தின் நூற்றாண்டு விழா நேரத்தில் நாம் நினைவு கூற விரும்பும் மக்கள் திலகத்தின் மனித நேயம் அரசியல் , திரை உலகம் மூன்று துறையிலும் வெற்றி பெற உறுதுணையாக இருந்தவர்கள்
கந்தசாமி முதலியார்
எம்.கே ராதா
பேரறிஞர் அண்ணா
கலைவாணர்
டி .வி .நாராயணசாமி
நாவலர்
கலைஞர்
திருமதி வி .என் ஜானகி எம்ஜிஆர்
சின்னப்பா தேவர்
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
கண்ணதாசன்
வாலி
புலமைப்பித்தன்
இராம வீரப்பன்
வித்துவான் லக்ஷ்மணன்
மணியன்
கே.ஏ. கிருஷ்ணா சாமி
காளிமுத்து
வலம்புரி ஜான்
ஜெயலலிதா
முசிறி புத்தன்
ஆர். கே . சண்முகம்
சொர்ணம்
நீலகண்டன்
டி .எம். சவுந்தரராஜன்
மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி
கே.வி .மஹாதேவன்
சுப்பையா நாயுடு
தஞ்சை ராமதாஸ்
மோகனரங்கம்
பட்டியல் தொடரும் .......................