-
பல ரசிகர்களின் நீண்ட நாள் விருப்பத்தினைப் பூர்த்தி செய்யும் வகையிலும், இது வரை பார்த்திராதவர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையிலும் வெளியாகி யுள்ளது நடிகர் திலகத்தின் மாடி வீட்டு ஏழை திரைக்காவிய நெடுந்தகடு. ஜி.எல்.வி. நிறுவனம் இப்படத்தின் நெடுந்தகட்டினை வெளியிட்டுள்ளது.
http://i1146.photobucket.com/albums/...pseeb10784.jpg
-
நடிகர்திலகம் பற்றிய தகவல்கள் இரும்பு என்றால் - நீங்கள் காந்தம் இராகவேந்திரர் அவர்களே..
திரட்டித் தரும் அரும்பணிக்குப் பாராட்டுகள்!
சென்னை பிராட்வேயில் முதல் நாள் முதல் காட்சி பார்த்தது நினைவாடலில்...
-
தங்கள் பாராட்டிற்கு நன்றி காவிரிக்கண்ணன் அவர்களே. எல்லாப் புகழும் அவருக்கே
-
மிக மிக அரிய பதிவு.
பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு நினைவு அஞ்சலி.
பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவுநாளை முன்னிட்டு, நடிகர் திலகத்திற்கு பெரியாரால் 'சிவாஜி' என்ற பட்டம் கிடைக்கக் காரணமாய் இருந்த அண்ணா அவர்களின் 'சிவாஜி கண்ட இந்து சாமராஜ்யம்' நாடகத்தில் வரும் சில காட்சிகளின் வசனங்கள் இதோ உங்களுக்காக. மராட்டிய சிவாஜியாக நம் நடிகர் திலகமும், காகப்பட்டராக பேரறிஞரும் நடித்துள்ள அருமையான தமிழ்நடை கொண்ட வசனங்கள்.
பக்கம் 1
http://i1087.photobucket.com/albums/...%20-2/1-19.jpg
பக்கம் 2
http://i1087.photobucket.com/albums/...%20-2/2-19.jpg
பக்கம் 3
http://i1087.photobucket.com/albums/...%20-2/3-10.jpg
பக்கம் 4
http://i1087.photobucket.com/albums/...t%20-2/4-6.jpg
பக்கம் 5
http://i1087.photobucket.com/albums/...t%20-2/5-6.jpg
பக்கம் 6
http://i1087.photobucket.com/albums/...t%20-2/5-6.jpg
பக்கம் 7
http://i1087.photobucket.com/albums/...t%20-2/7-3.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
-
பொருத்தமான நாளில் பொருத்தமான பதிவு..
அன்பு வாசுவிற்கு பாராட்டுகள்..
எங்கிருந்து அள்ளுகிறீர்கள் இப்பொக்கிஷங்களை?
முன்னோடி ஹப்பர்களை மலைத்தபடி பாராட்டிமகிழ்கிறேன்..
-
நன்றி ராகவேந்திரன் சார். வசந்த மாளிகை வரும் நாளை அறிவித்தமைக்கு நன்றி. முழு காணொளியில் மனோகரனைத் தந்து மகிழ்ச்சி பொங்கச் செய்து விட்டீர்கள். அண்ணாவுக்கு அஞ்சலி அருமை. இல்லறஜோதியின் இனிய பாடல்களின் தொகுப்புக்கு இனிய நன்றி! நீண்ட நாட்களாக ஏழையாய் இருந்த எங்களுக்கு மாடி வீட்டை பரிசாகத் தந்து மனம் குளிர செய்திருக்கிறீர்கள். அனைத்திற்கும் என் நன்றிகள்.
-
களிப்புற்றேன் கண்ணன் சார். அளப்பரிய அற்புதங்களை அள்ளித் தந்த அழியாப் புகழ் பெற்ற அருமை நடிக தெய்வத்தைப் படைத்தானே அந்த ஆண்டவன்... அவனுக்கு முக்காலமும் நன்றி! 'படைத்தானே' பாடலை பாங்காக கவிதை நடையில் இங்கு வழங்கிய தங்களுக்கும் என் அன்பு நன்றி!
-
தங்கை வனஜா,
உங்கள் விருப்பமாக கர்ணனின் நல்ல உள்ளத்தை இங்கு படம் பிடித்து எங்களை உறங்காமல் செய்து விட்டீர்கள். நன்றி!
-
என் விருப்பம் (2)
'வெள்ளிக்கிண்ண'த்தை அடுத்து எப்போதும் என் உதடுகளில் ஒட்டிக் கொண்டிருக்கும் பலாச்சுளைப் பாடல்.
அயல் நாட்டு மண்ணிலே என் ஆண்டவன் முதன் முதலாக அடியெடுத்து தொடங்கி வைத்த பாடல்.
ஈபில் டவரின் அழகை மிஞ்சும் ஈடு இணையற்ற தலைவரின் அழகு.
நிறைய எண்ணெய் தடவிய அடர்ந்த இருள் கேசத்தில், அளந்து தைத்த ஆடையில், அசகாய சூரனின் நடையழகில், காஞ்சனமாலையின் கைகோர்த்து... ஆண்டுகள் ஆயிரம் போனாலும் அ(ஜெ)கத்தை விட்டு அழியாத பாடல்.
http://www.kaathal.com/songs/lyrics/..._yuvaraani.gif
(விடுபட்ட மூன்றாவது சரணம்)
ஒருபக்கம் நான் பார்த்து மறுபக்கம் நான் பார்க்க ஒருநாளும் போதாதம்மா
மணிமுத்தம் வாய்சிந்த சிறுவெட்கம் முகம் சொல்லும் அதுமட்டும் போதாதம்மா
என் கேள்வி சுகமென்று உனைக் கேட்பது
நான் சொல்வேன் சொன்னாலும் புரியாதது
(பார்வை)
இப்பாடலைக் கேட்கும் போதெல்லாம் இனம் புரியா இன்பம் மனதை இன்பச் சித்ரவதை செய்வதை எப்படி சொல்ல!
http://www.youtube.com/watch?feature...&v=0jn0ZS5ePlU
-
தங்கையே! நிஜமாகவே உங்கள் விருப்பமா... அல்லது வம்பு விளையாட்டிற்காகவா? அது சரி! அறிஞர் அண்ணாவின் அற்புத தமிழை படித்து முடித்தீர்களா!