-
பொன்மனசெம்மலின் 13 வது திரைப்படமாகீய "மீரா" கதைச் சுருக்கம் :
---------------------------------------------------------------------------------------------------------------------
குழந்தை மீரா வளர்ந்த வீட்டுக்கு, கண்ணன் பிறந்த புனித தினத்தில் மகான் ரூபகோஸ்வாமி வருகிறார். அவர் கொண்டு வந்த கிருஷ்ண விக்ரகம் குழந்தையின் உள்ளத்தை கொள்ளை கொள்கிறது. பால மீரா (குழந்தை பருவத்து மீரா) நந்தவன னையே (பகவான் கிருஷ்ணனை) தன் மணாளனாக வரித்து (நினைத்து) மாலையிடுகிறாள்.
மீரா யௌவனப் பிராயத்தை அடைந்த போது பாட்டன் விருப்பத்துக்கு இணங்கி மேவார் ரானாவை மணந்து சித்தூர் செல்கி றாள். சித்தூர் அரண்மனையின் அழகிய நந்த வனங்களில் உலாவும் போது, மீராவின் உள்ளம், ஓர் மலர்ந்த இரவினில் தென்றல் உலாவிடும் நதியில் சிறு குழலூதிய "நீல நிறத்து பாலகனை" எண்ணி எண்ணி உருகுகிறது.
ஆரம்பத்தில், மேவார் ராணா தான் கைப்பிடித்த தர்ம பத்தினியின் கிருஷ்ண பக்தியையும், அவள் பாடிய கீதங்கள் குறித்தும் பெருமையும் மகிழ்ச்சியும் கொள்கிறான். போகப் போக அவனுக்கு சலிப்பு உண்டாகிறது. ராணாவின் சகோதரி உதாவும் சகோதரன் விக்ரமனும் மீராவின் போக்கு பற்றி அவனிடம் புகார் செய்து கோபமூட்டி வருகிறார்கள். சுப தசமியன்று நடக்கும் தர்பாருக்கு தான் வருவதாக மீரா வாக்களிக்கிறாள். ஆனால், தர்பாருக்கு புறப்படும்போது கண்ணன் வேய்ங்குழலின் நாதம் அவளைக் கவர்ந்திழுக்கவே மண்டபத்துக்கு பதிலாக கோயிலுக்கு போகிறாள். ராணா அளவு மீறிய கோபம் கொண்டு கோயிலுக்கு சென்று மீராவை நிந்தித்து விட்டு வேட்டைக்கு செல்கிறான்.
இதனிடையில், விக்கிரமனின் (ராணாவின் சகோதரன்) தூண்டுதலின் பேரில், உதா மீராவுக்கு விஷம் கொடுத்து விட்டு பிறகு வருந்துகிறாள். ஆனால், பகவானின் அருளால், மீராவிற்கு எந்த தீங்கும் நேராதிருப்பதை காண்கிறாள். உதாவின் மனமும் மாறுகிறது.
மற்றொரு சம்பவமாக, டில்லி பாதுஷாவின் சபையிலிருந்து, தான்ஸிங், மான்ஸிங் என்னும் இருவர் மீராவின் தெய்வீக கீதங்களை கேட்க ஆர்வம் கொண்டு, மாறுவேடம் பூண்டு வருகிறார்கள். இரவெல்லாம் கோயிலில் மெய் மறந்து இருந்த பின், பாதுஷா அளித்த முத்து மாலையை மீராவிடம் சமர்ப்பித்து விட்டு கிளம்புகிறார்கள்.
காட்டில் இருந்த ராணா திரும்பி வமட வந்ததும் விக்கிரமனும், தளபதி ஜயமல்லும் முத்து மாலையை காட்டி ராணாவுக்கு தூபம் போடுகிறார்கள்.
"அது இனி மேல் கோயில் அல்ல. பதிதர்களின் மண்டபம், பீரங்கி வைத்து இடித்து தள்ளுங்கள்" என்று ராணா உத்தரவிடுகிறான்.
ஆலயத்தை இடிக்க உத்தரவிட்டது ராணாதான் எனத் தெரிந்ததும் மீரா, "அரண்மனை வாழ்வும், அரச போகமும் தனக்கு உகந்தவை அல்ல" என்று தீர்மானித்தவளாய், தம்புராவையே துணையாகக் கொண்டு சித்தூரை விட்டு பிருந்தாவனம் செல்கிறாள். அங்கிருந்து, ரூபகோஸ்வமியுடன் துவாரகபுரிக்கு போகிறாள். வெகு காலமாய் திறக்காமல் கிடந்த துவாரகநாதனின் சந்நிதிக் கதவை திறந்து தரிசனம் அருள வேண்டும் என்று கதறுகிறாள்
ஆலயக் கதவு திறக்கிறது அடியாள் மீரா பகவானுடைய பாதக் கமலத்தில் ஐக்கியமாகிறாள்.
================================================== ================================================== =================================
அன்பன் : சௌ செல்வகுமார்
என்றும் எம்.ஜீ.ஆர்.
எங்கள் இறைவன்
-
மீரா" படத்தில் இடம் பெற்ற மொத்த 14 பாடல்களின் முதல் இரண்டு வரிகள் :
--------------------------------------------------------------------------------------------------------------------------------
.
1. குழந்தை பால மீரா : நந்த பாலா என் மணாளா - இங்கு வாராய் கிரி தாரி
2. கன்னிப் பருவ மீரா : முரளி மோகனா - கருணாலய ஸுந்தரா அபலை என்னையே
அறியாப் பருவந் தன்னில்
3. தனித்த ஆண் குரல் பாடல் : இந்தப் பாரிலில்லை எனக்கிணையே - மங்கை மீரா
வாழிவிலென் துணையே
4. தனித்த குரலில் பெண் பாடல் (மீரா) : காற்றினிலே வரும் கீதம் - கண்கள் பனித்திட பொங்கும் கீதம்
கல்லும் கனியும் கீதம்
5. தனித்த குரலில் பெண் பாடல் (மீரா) : எனது உள்ளமே - நிறைந்தின்ப வெள்ளமே - யது வீரனை
நந்தகுமாரனை நினைந்து மலரே இரு விழி பங்கஜ மலரே
6. ஜோடிப்பாடல் : விண்ணும் மண்ணும் நிறைந்த உன் கண்ணன் -
விக்கிரஹ மொன்றில் அடங்கினனோ
7. பஜனை கோஷ்டி - நீளமான பாடல் : நந்தன கோபாலா - பிருந்தாவன லோல - ஜய தீன வத்ஸலா
ஜய வேணு கான லோல
8. தனித்த குரலில் பெண் பாடல் (மீரா) : ஹே - ஹரே தயாளா - என்னுயிர்க்கினிய மணவாளா
9. தனித்த குரலில் பெண் பாடல் (மீரா) : மறவேனே - என் நாளிலுமே - கிரி தாரி உனதருளே
நஞ்சை நீ உண்டனையோ - இந்தப் பஞ்சையைக் காத்தனையோ !
10. தனித்த குரலில் பெண் பாடல் (மீரா) : சராசரம் உன்னை யாவும் தேடுமே - மறைகளும் மகிழ்ந்துன்னைப்
பாடுமே - ஹே பிரபோ
11. மீராவும், பக்த குழுவினரும் பாடியது: அரங்கா - உன் மகிமையை அறிந்தவர் யார்
அறிந்தவர் யார் எங்கும் நிறைந்தவனே
12. தனித்த குரலில் பெண் பாடல் (மீரா) : மறைந்த கூண்டிலிருந்து - விடுதலை பிறந்த பறவை
விரைந்தோடுதே - நிறைந்த வெளி நீல வானிலே
13. மீராவும், பக்த குழுவினரும் பாடியது : பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த அந்த நாளும் வந்திடாதோ
14. தனித்த குரலில் பெண் பாடல் (மீரா) : எங்கும் நிறைந்தாயே - இன்று எங்கு மறைந்தாயோ -
எங்கும் உனை நான் தேடி அலைந்தேனே - தயாளன் நீயே
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அன்பன் : சௌ செல்வகுமார்
என்றும் எம்.ஜீ.ஆர்.
எங்கள் இறைவன்
-
பொன்மனசெம்மலின் 13 வது திரைப்படமாகீய "மீரா" திரைப்படத்தின் சிறு தொகுப்பினை நான் பதிவு செய்யும் வரை காத்திருந்து, பின் இப்படத்தினை பற்றிய தங்களது பதிவுகளை மேற்கொண்ட திரு. ராகவேந்திரா உட்பட அனைத்து மக்கள் திலகத்தின் அபிமானி பதிவாளர்களுக்கும், என் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்பன் : சௌ செல்வகுமார்
என்றும் எம்.ஜீ.ஆர்.
எங்கள் இறைவன்
-
மீரா திரைப்படத்தில் -
ஜயமல் என்ற ஒரே கதா பாத்திரத்தில்தான், நம் மக்கள் திலகம் அவர்கள் நடித்துள்ளார். கதையில் இடம் பெறும் சம்பவத்தின் ஒரு பகுதியாய், விக்கிரமன் என்ற, ராணாவின் சகோதரன் பாத்திரத்தில் டி. எஸ். பாலையா அவர்களுடன் நம் புரட்சித் தலைவர் அவர்கள், மன்னன் ராணாவாக நடித்துள்ள சித்தூர் வி. நாகையாவை சந்திக்கும் சில காட்சிகள் மட்டுமே திரையில் இடம் பெற்றுள்ளது. .
அன்பன் : சௌ செல்வகுமார்
என்றும் எம்.ஜீ.ஆர்.
எங்கள் இறைவன்
================================================== ================================================== ====================
-
-
-
-
http://youtu.be/X8xclZ1Ckdw
மீரா படத்தில் மக்கள் திலகம் தோன்றும் காட்சிகளின் தொகுப்பு.
-
இந்தப் படம் பற்றிக் குறிப்பிடும் போது எம்.ஜி.ஆர். ஒன்றிற்கும் மேற்பட்ட சிறு சிறு வேடங்களில் நடத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் தளபதி ஜெய்மல் பாத்திரத்தைத் தவிர வேறு பாத்திரங்களைக் கண்டறிய முடியவில்லை. ஒருவேளை தற்போது எடிட் செய்யப்பட்ட திரைப்படத்தில் அந்தக் காட்சிகள் கட் செய்யப்பட்டிருக்கலாம் அல்லது கூட்டத்தில் கண்டறிய இயலாத நிலையில் இருக்கலாம். ஜெய்மல் பாத்திரம் கூட அடையாளம் தெரியாத நிலையில் தான் உள்ளது. மக்கள் திலகத்தின் குரல் தான் எளிதில் அடையாளம் காட்டுகிறது. மேலும் மாறுவேடமிட்டு மீராவைக் கண்காணிக்க டி.எஸ். பாலையா அவர்களுடன் செல்லும் காட்சியில் ஜெய்மல் பாத்திரத்தில் வேறு ஒருவர் நடித்திருப்பதாகத் தோன்றுகிறது. மேலும் இந்தத் திரைப்படம் பொதிகைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட போது மக்கள் திலகம் அவர்கள் நாகையா அவர்களுடன் உரையாடும் இன்றும் சில குளோசப் காட்சிகளைப் பார்த்ததாக ஞாபகம். விபரம் அறிந்தவர்கள் தங்களது நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளவும்.
-
மீரா படத்தில் மக்கள் திலகம் தோன்றும் காட்சிகளின் தொகுப்பு மிகவும் அருமை .
நன்றி ஜெய் சார் .