-
ஊழல் இலா ....
ஊழல் இலா நாடெங்கே? -- வான்
உச்சியிலே பறந்தபடி,
ஆழ்கடல்ம லைகடந்து -- தேடி
அலுத்ததே மிச்சமாச்சு.
பற்றாத காரணத்தால் -- ஊட்டுப்
பெற்றாலும் வேறுசிலர்
வற்றாத வசதியரும் -- வாங்க
வழிகண்டார்; ஏன்? செல்வீர்!
செத்தாலும் வாய்க்கரிசி -- வந்து
சேர்பிணமே எரிசேரும்,
எக்காலும் தீர்வில்லா -- ஓர்
இழிநோய்க்குள் இவ்வுலகம்.
-
மலர்கள் குலுங்கினால்
---------------
மலர்கள் குலுங்கினால் -- இங்கு
மனமகிழ் வாக்கும் ஒருநிகழ்வாம்;
மலைகள் குலுங்கினால் -- அஃதிம்
மன்பதை மாய்க்கும் குலைநடுக்கம்.
(வேறு சந்தம்.)
அறிவெழு பூங்காவெனும் -- புகழ்
ஆர்ந்தெழும் யப்பான் நிலத்தினிலே;
செறிவுறு மண்பிளந்தே -- மக்கள்
செத்தனரே துன்பம் உறப்பலரே.
பூவெனத் தந்துவந்தான் -- இறை
பூமியைப் பொன்றாத மக்கள்குலம்,
மேவி மகிழ்வுறத்தான் -- பின்னும்
பூவெனவே எண்ணிக் குலுக்கினனோ?
commentary.
தந்துவந்தான் - தந்து உவந்தான்; தந்து
மகிழ்ந்தான்.
ஆர்ந்தெழும் - நிறைந்து எழும்;
செறிவுறு = solid
யப்பான் = ஜப்பான்.
பூமியைப் பூவாக மக்களிடம் தந்தான் இறைவன். அதனால்தானோ, அப்போதைக்கப்போது பூவைக் குலுக்குவதுபோல, பூமியையும் இறைவன் குலுக்கிவிடுகின்றான், ஏற்படும் சேதங்களை மறந்தானோ?
உலகத்தை "மலர்தலை உலகம்" என்பதுமுண்டு. தலை = இடம்.
-
பன்மலர்கள் அழகுத்தொடுப்பு.
வகைவகையாய்ப் பூக்கள்பல
படைத்தவனோ பல்சுவைஞன்!
வகைப்படுத்தித் தொகைப்படுத்தி
வைதிறத்தில் ஒப்பவர்யார்?
இவ்விதிக்கு மக்களினம்
எவ்வகையில் வேறுபடும்?
பழகிடும்பல் இனமாந்தர்
பன்மலர்கள் கவின் தொகுப்பே.
-
சாலை மேம்பாடு,
வீட்டுக்குப் பக்கத்தில் சாலைமேம் பாடு,
விழையாத பெருமக்கள் இவண்யாரும் இல்லை;
மேட்டுக்கும் காட்டுக்கும் திருத்தங்கள் செய்து
மிக்க அழ கானதொரு பலவழிகள் சாலை.
நாட்டுக்கும் பெருமிதமே நயந்திடுவ தாக
நல்லபடி அமைத்தார்கள் ஆனாலும் பாரீர்!
வீட்டுக்கே எதிருள்ள கடைக்குத்தான் போக
வேண்டுமிரு கல்தொலைவு பயணிக்க, ஐயோ!
-
பூதமே
என்முன்னே தோன்றிய பூதமே - நீ
இரு இரு உன் செந்நீர் குடிக்கிறேன்!
கண்முன்னே பேருருக் காட்டினால் -நான்
கானகத்துள் ஓடேன் துடிக்கிறேன்!
-
எதிருள்ள கடைக்குத்தான் போகும்நிலை இங்கே
எளிதாக நகைச்சுவையில் சொல்லிவைத்த பாங்கு
ச்திராடி மனதினிலே சிரிப்பினையே கொணர்ந்தே
தட்டாமல் சிந்தனையும் கொளவைத்த தின்றே..
சிவ மாலா.. பூதமும் நகைச்சுவையில் அழகு... எழுதுங்கள் இன்னும்..
-
பூதத்தினிடம் தொடர்ந்து பெசுவது:
பலமணி நேரம்நான் பட்டினி -- உனைப்
பார்த்ததும் அச்சத்தை விட்டினி,
நிலைதரும் ரத்தமு றிஞ்சுவேன் -- அது
நேர்ந்ததும் உள்ளுரம் மிஞ்சுவேன்,
நன்றாகவா இருக்கிறது?
II was in fear that someone may scold me for writing in this way......
-
-
All about mosquies
என்னிடம் பேசிய அதற்கு நான் சொன்ன பதில்:
(--எனைச்)
சுற்றிப் பறந்த சிறு கொசுவே-- இனிச்
சும்மா நீ போவாயோ மசகே -- இட்டுப்
பற்றிக் கடித்த இடம் அரிப்பே -- அடித்துப்
பட்டென்று கொன்றுனைச் சிரிப்பேன்.
(வேறு சந்தம் )
அமுதுபோல் என் ரத்தம் குடித்தாய் -- அமுதில்லை
அரும்பூதம் என்றென்னை அழைத்தாய் ;
உமிழ்ந்துண்ண உனதென்று நினைத்தாய் -- குடித்ததில்
உன்குஞ்சு தொண்டையும் நனைத்தாய்.
எல்லாம் கொசுக்கடி பற்றியது.
Two days ago, I went to the garden behind to tend the plants there and get some flowers. Badly bitten by mosquies there.....Whilst applying BALSEM AKTIV ointment, the lines found expression......I am glad this thing turned out to be something to read....
-
தவித்தபடி பேசியே தன்னுயிர் ஈந்து
கவிதையைத் தந்த கொசு..
லக்கி..இங்க அவ்வளவா கொசு கிடையாது...சென்னை போனாத் தான் கஷ்டம்..உடலெல்லாம் திட்டுத் திட்டாய் சிவப்பாய்ச் சில கண்கள் முளைத்திருக்கும்..