Quote:
Originally Posted by P_R
Quote:
Originally Posted by jaiganes
பென்... பனிமழை
பாரினில் உண்டோ வள்ளல் வானைப்போல்
காரினில் நடமிடும் மயிலைப் புரந்தவன்
தேரினை துவண்ட கொடிக்குக் கொடுத்தவன்
உயிரின்பால் பாசம் மிகுந்தது - உயிரிலாவென்
காருக்குப் பனியுடை பொருத்தும்.
....................நாலாவது அடி மட்டும் வேறு எதுகை. bis_mala, இப்படி வரும் வகைகள் உண்டா?
"உயிரின்பால் பாசம் மிகுந்தது - உயிரிலாவென்"
இங்கு உயிரி(ன்) - உயிரி(லா) என எதுகை கிடைக்கிறது.
ஓரடி விட்டு எதுகை வருவதும் உண்டு; ஆகையால், OK.
இந்தப் பாடலைச் செப்பம் செய்து வெண்பாவாக்கிப் பாருங்கள்...
எப்படி உருக்கொள்கிறது என்று பார்ப்போம்.