நன்றி - தினதந்திQuote:
சங்கப் பலகை
பெண்களுக்கு 33 விழுக்காடு தருவது எப்போது... அதற்கு தடையாக இருப்பது என்ன? சமச்சீர்கல்வி என்பது வெறும் பேச்சளவில் மட்டும்தானா... அல்லது நடைமுறைக்கு வருமா? சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பின் தேவை என்ன? நம் இனம் அழிக்கப்படும் போது நாம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன?
இப்படி நாட்டின் நடப்புகளை அரசியல் நோக்கர்களும், சமூக அக்கறையாளர்களும் விவாதித்து தெளிவுபடுத்தும் நிகழ்ச்சி ``சங்கப் பலகை''.
சமூகத்தில் அதிர்வை ஏற்படுத்தும் பிரச்சினைகளை, சமூக நீதிக்கு பங்கம் விளைவிக்கும் பிரச்சினைகளை எடுத்து ஆழமாக அலசி, அதற்கு எட்டப்பட வேண்டிய தீர்வையும் இந்த நிகழ்ச்சியில் தருகிறார்கள்.
மக்கள் தொலைக்காட்சியில் நாளை இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது இந்த நிகழ்ச்சி.