டியர் பிரபுராம்,
அற்புதம், அருமை என்பதெல்லாம் உங்களின் ஆய்வுக்கு சாதாரண வார்த்தைகள். பெரிய தேவர் பற்றிய கருத்தாய்வு, களத்துக்கு புதிய பொலிவைத் தந்திருக்கிறது என்பது முற்றிலும் சரியான ஒன்று. பார்க்கும்போது தெரியாத பல்வேறு பரிமாணங்கள், உங்கள் ஆய்வைப்படிக்கும்போது தெளிவாகின்றன.
படத்தில் ஒவ்வொரு சின்ன அசைவுகளும் எவ்வளவு கவனமாகவும், பாத்திரப் படைப்புக்கு குந்தகம் வராமலும் கையாளப்பட்டுள்ளன என்பதற்கு பல்வேறு எடுத்துக்காட்டுக்களைச்சொல்லலாம்.
"நீங்க ஊரெல்லாம் சுத்திட்டு திரும்பி வரும்போது உங்க ஐயா இல்லேன்னா என்ன பண்ணுவீக?" எனும் இடத்தில் குரல் கம்முவதும், தன்னிடம் பேசிவிட்டுப்போகும் சக்தி, போகும்போது எதிலோ இடித்துக்கொள்ள, துடித்துப்போய் "பாத்து..!" என்று பதறுமிடத்திலும் ஒரு பாசமான தந்தைக்கே உரிய துடிப்பு. இப்படி ஒவ்வொரு அங்குலத்திலும் தன் கொடியை உயர பறக்க விட்டிருக்கும் பாங்கு... வேறென்ன சொல்ல...?.
நல்ல தீர்க்கமான ஆய்வு உங்களுடையது. அது இன்னும் பல்வேறு பாத்திரப்படைப்புகளையும் அலச வேண்டும் என்பது எங்களின் ஆவல் மற்றும் எதிர்பார்ப்பு.