Quote:
‘நாடு ஒரு காடு, மனிதர்கள் விலங்குகள்’ – இதுதான் ஒரு வரி கதை. இழப்பதற்கு எதுவுமில்லை என்கிற நிலையில் இருப்பவன், எதை வேண்டுமானாலும் பெற முடியும் என்கிற எளிய சூத்திரம் இறுதியில் வலியுறுத்தப்படுகிறது.
சினிமா என்பது ஒரு கதைசொல்லி ஊடகம் என்று தமிழ் சினிமாவின் முன்னோடிகள் அவசர அவசரமாக முடிவெடுத்திருக்கிறார்கள். தமிழில் சினிமா வந்து எண்பதாண்டுகள் கழித்து, ‘இல்லை. சினிமா என்பது ரசிகனுக்கு அனுபவத்தை ஏற்படுத்தும் ஊடகம்’ என்று ஆரண்ய காண்டம் அழுத்தம் திருத்தமாக மறுத்திருக்கிறது.
இப்படம் எந்த கதையையும், கருத்தையும் வலியுறுத்தவில்லை. முதல் காட்சி தொடங்கி, இறுதிக்காட்சி வரை உங்களுக்கு பிரேம்-பை-பிரேமாக வழங்குவது காட்சியனுபவத்தை மட்டுமே. முதல் காட்சி, அடுத்தக் காட்சிக்கு சங்கிலிப் பிணைப்பாக இருக்க வேண்டும் என்பது அழுத்தமான விதி. அனாயசமாக இவ்விதியை உடைத்திருக்கிறார் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா. லீனியர் அல்லது நான்லீனியர் என்கிற இரண்டே சாத்தியங்கள் கொண்ட திரைக்கதை கட்டமைப்பை, அசால்ட்டாக odd வரிசையில் அடுக்கியிருக்கிறார் (வானம் படத்தில் மொக்கையான காட்சிகளால் சப்பையாகிவிட்ட மேட்டர் இது).
கமல்ஹாசனும், விக்ரமும் நடித்திருக்க வேண்டிய படம்.