கோபம்Quote:
Originally Posted by Shakthiprabha
கோபம் என்பது நாம் நினைப்பதை மற்றவர்கள் கடைப் பிடிக்கவில்லயே என்பதனால் வருவது.
தவறானா கண்ணோட்டம் தானே
வாழ்க்கையை ரசிக்கவும்
அப்படியே ஏற்றுக் கொள்ளவும்.
சொல்வது எளிது. :lol:
Printable View
கோபம்Quote:
Originally Posted by Shakthiprabha
கோபம் என்பது நாம் நினைப்பதை மற்றவர்கள் கடைப் பிடிக்கவில்லயே என்பதனால் வருவது.
தவறானா கண்ணோட்டம் தானே
வாழ்க்கையை ரசிக்கவும்
அப்படியே ஏற்றுக் கொள்ளவும்.
சொல்வது எளிது. :lol:
aana,
true. thanks :)
Bear with me pps, tommorrow I shall update till date and walk hand n hand.
anbukkthir,
Lovely website. I am truly thankful beyond words.
April 1st
_______
பூணூல் வைபவத்தால் அசோக் மற்றோரைப் போல் இயல்பான நிலைக்கு திரும்பிவிடக்கூடும் என்ற நம்பிக்கை நீலகண்டனுக்கு இல்லை. பாகவதரிடம் தம் விருப்பமின்மையை காட்டமாக தெரிவிக்கிறார். காயத்திரி மந்திரங்கள் சொல்வதாலும் இன்ன பிற சாஸ்த்ரோத்தமான வாழ்க்கை வாழ்வதாலும் பாகவதர் தம்மைப் போன்றோரக் காட்டிலும் எவ்வகையில் உயர்ந்து நிற்கிறார் என பதில் வினா விடுக்கிறார். அதற்கு பாகவதர், நான் உங்களைப் போன்றோரை விட மன அமைதியுடன் இருக்கிறேன் அதுவல்லவா உண்மையான பெறும் பேறு என எதிர்வாதம் செய்கிறார்.
சாஸ்திரங்களில் (சாஸ்திரம், சம்பிரதாயங்கள் மட்டுமின்றி பொதுவாக இக்கூற்று பல துறைகளுக்குப் பொருந்தும்) ஒட்டதலும் இன்றி, வெட்டுதலும் இன்றி அரை குறையாய் விஷயம் அறிந்தவனுக்கு உணரவைப்பது மிகக் கடினமான காரியம். அரை குறை விஷயங்கள் அறிந்த பலரும் சரவாதம்
செய்பவர்கள். அவர்கள் முழுமையாய் இலக்கை அடைவதில்லை.
பூணூல் வைபவங்களோ, அல்லது நித்திய கர்மாக்களோ, உயர்ந்த நிலையை அடைய ஒரு பாதை மட்டுமே, படிக்கட்டுகள் போன்றவையே. பறக்கும் தருணம் வரும் பொழுது அக்கர்மாக்களைக் விட்டுச் செல்லவதே இயல்பு. அஷோக்கின் மன நிலை முற்றிலும் சலனமில்லாததாக இருக்கிறது. பூணூல் போட்டால் அவன் பிராமணன் என்று சாஸ்திரங்கள் சொல்கிறதா என்று நறுக்கென வினா தொடுக்கிறான். எதைத் தேடுகிறேன் என்று தெரியாத ஒரு தேடலில் இருக்கிறான். கவலை கொள்வது என்பது மனித இயல்பு. தன் பெற்றோருக்கு தான் ஒரு காரணமாய் இல்லாவிட்டால், வேறொரு காரணம் கிடைத்து விடும். கவலையை ஒழிப்பதற்கு ஒரே வழி மனதை ஒழிப்பது மட்டுமே என உயர்ந்த தத்துவத்தை கூறுகிறான்.
கதோபநிஷத்தில், யமனிடம் நசிகேதஸ் பாடம் பெறுகிறார். உடம்பைத் தேராகவும் இந்த்ரியங்களை குதிரைகளாகவும், மனசையே கடிவாளமாகவும் கூறுகிறார் யமன். அந்த மனம் எனும் கடிவாளம் ஒழுங்காய் முறையாய் குதிரைகளை செலுத்த புத்தியாகிய ஆன்மாவை துணை கொண்டு சென்றால் உடம்புத் தேர் நேர் பாதையில் செல்கிறது என்கிறது உபநிஷதம்.
(வளரும்)
April 2nd
________
திருக்குறள் என்னும் அறநூல் ஹிந்து மதத்திற்கு (அல்லது பொதுவாக எந்தவொரு மதநம்பிக்கைக்கும்) புறம்பானதல்ல. அங்கு சொல்லப்பட்டுள்ளவையும் மதங்களுடன் ஒன்றி நிற்கும் கருத்துக்களே என எடுத்திரைக்குமாறு பல குறள்களும் அதற்கான விளங்கங்களும் காணலாம்.
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்
எல்லா உயிர்களிடத்தும் கருணை காட்டுபவன் உண்மையான அந்தணன் என்கிறது குறள். இவ்விடத்திலேயே நமக்கு எவன் உண்மையான அந்தணன் என்று தெரிந்துவிடுகிறது.
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்
இறைவனின் அடி சேர்ந்தால் பிறவிகள் தொலைக்கப்பட்டுவிடும். அடுத்த அடியாகிய 'இறைவன் பற்றிய சிந்தனை அற்று இருப்போர் மீண்டும் பிறந்து உழல நேரிடும்' எனபது நமக்கு தானாகவே புரிந்துவிடுகிறது.
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு
மழை பொய்த்துப்போனால் இவ்வுலகில் வானோர்க்கு நடை பெறும் வழிபாடுகள் நடைபெறாமல் போகும் எனும் குறளில் திருவள்ளுவர் 'வானோர்' என்று சிலரை குறிப்பிட்டிருக்கிறார். இதுவும் பல மதங்களில் ஒப்புக்கொள்ளப்படும் ஒன்று.
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும் புளார்கோமான்
இந்திரனே சாலும் கரி
ஐம்புலன்களை அடக்கமாட்டாதவனுக்கு இந்திரனின் கதியே சாபமே சிறந்த சான்று. இங்கு 'இந்திரன்'னும் அவனுக்கு நேர்ந்த கதியும் இக்குறள் சொல்லாமல் சொல்கிறது.
தவமும் தவமுடையார்க்கு ஆகும் அவம்அதனை
அஃதிலார் மேற்கொள் வது.
தவநெறிக்கு ஏற்ற மனவியல்பு கொண்டவர்க்கே தவமும் கைகூடும்: தவப்பயன் இல்லாதவர்கள் அதனைத் தாமும் மேற்கொள்வது வீணான முயற்சியே.
( நன்றி ( http://www.ikmahal.org/tirekural/27thavam.htm ) )
வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்
என்னவெல்லாம் ஒருவனுக்கு வேண்டுமோ வேண்டிய வற்றை வேண்டிய வண்ணம் அடையலாம். எப்பொழுது? ஒருவன் தவம் செய்து முயன்றால். (இங்கு தவம் என்பதற்கு தொடரும் சலிப்பற்ற முயற்சி என்று பொருள் கொள்ளலாம்)
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று.
சூழினுந் தான்முந் துறும்
ஊழ் எனும் விதியை விட வலிமை உள்ளது வேறென்ன இருக்கிறது? எல்லாவற்றையும் தாண்டி அது முன் வந்து நிற்கும் வலிமை உடையது' என்று கூறியிருக்கிறார். இதன் மூலம் 'விதி' என்னும் சொல் குறளில் அரங்கேறி இருக்கிறது. எனவே குறள் மத கோட்பாடுகளை அப்புறப்படுத்தும் விஷயமே அல்ல என்பதை தன் வாதமாக வைக்கிறார் கதாசிரியர்.
உபநயன விழா துவங்குகிறது. பல சம்பிரதாயங்களுக்கு சிரமேற்கொண்டு விளக்கம் அளித்திருக்கிறார்கள். பாராட்டப்பட வேண்டிய விஷயம் :bow: இதைப் படித்து, மனதில் வாங்கிய பின், ஒரு க்ஷண நேரமானும், அதன் உள்ளத்தர்த்தை உணர்ந்து நடைமுறை வாழ்வில் செயல்படுத்த முற்பட்டால் அதுவே இவர்களுக்கு கிடைக்கும் வெற்றி.
மான் தோல் பூணூலில் கட்டப்படுகிறது. மான் தோல் தூய்மையை குறிப்பதாகும். மூன்று நூல்கள் அணிந்திருப்பது மூன்று குணங்களை குறிப்பதாகும். சத்துவ, ராஜஸ, தாமஸ குணங்கள் என்பவை. ஒரு மனிதனிடம் பொதுவாக எல்லா குணங்களும் கலந்து அமையப்பெற்றிருக்கும். எனினும், ஒவ்வொருவனுள்ளும் சில நேரங்களில் ஒரு குணம் மேலோங்கி நிற்கும். எப்படிப்பட்ட குணங்கள் அதிகமாக மேலோங்கி நிற்கிறது என்பதை வைத்தே அவன் எப்பேற்பட்டவன் எனத் தீர்மானிக்கப்படுகிறான். முப்புரி நூல் மனிதர்களிடத்து விளங்கும் மூன்று கடன்களையும் குறிக்கிறது. ரிஷிகளுக்கு அவன் செலுத்த வேண்டிய கடன், தேவர்களுக்கு அவன் செலுத்த வேண்டிய கடன், பித்ருக்களுக்கான தர்பணம் முதலிய கடன் என்பனவற்றையும் குறிக்கும்.
கல்லாலான அம்மியை போல் உறுதி மனம் குணம் பூண்டவனாய் அவன் விளங்க வேண்டும் என மந்திரங்கள் உபதேசிக்கிறது. மித்ரன் எனும் தேவனைப் போல் எல்லோரிடத்தும் பாரபட்சமின்றி அன்பு செலுத்துவோனாக விளங்கவேண்டும். என மந்திரங்கள் அறிவுருத்துகிறது. பிரம்மச்சர்யத்தை மேற்கொள்பவன் அதன்படி நடக்கக் கடமைப்பட்டுள்ளான்.
தொட்டத்தில் பாகவதாராக வந்தது தெய்வச் செயலா அல்லது பிரமையா? திருவண்ணாமலையில் பேசிய சித்தர் தெய்வமா அல்லது பிரமையா? புயல் காற்று அவன் நாடி ஓலையை சூறையாடிச் சென்றது தற்செயலா அல்லது தெய்வச்செயலா என்றெல்லாம் குழம்புவோருக்கு, "எல்லாம் இறைவனின் ஆணைப்படி நானே செய்வித்தேன்" என்று நாரதர் விளக்குகிறார்.
(வளரும்)
April 3rd
_______
சம்பிரதாயமாக சொல்லப்படும் பல மந்திரங்களுக்கு விளங்கங்கள் அறிந்து சொல்வதாலேயே பயன் சிறந்து விளங்குகிறது. இல்லாவிடில் செய்யபடும் கடமை சரிவர செய்யாததாகிவிடுகிறது. இன்றைக்கு ஒரு வீட்டில் பூணூல் விழா எப்படி நடைபெறுகிறது? முறைப்படி பூணூல் போடப்படுவதற்கு "விழா" எனும் சொல்லே தவறு. ஒரு மாணவன் தன்னை பிரம்மச்சரியத்திற்கு தயார்படுத்திக்கொள்ளும் முதல் படி. அர்த்தம் புரியாமல் ஓதப்படும் மந்திரங்கள், செய்யும் செயலிலோ மந்திரங்களிலோ, வேதங்களிலோ சிறிதும் சிரத்தையற்று வருவோரை கவனித்து உபசரிக்கும் குதூகல விழாவாகி விட்டது. பட்டும் பளபளப்பும் அங்கு பேசப்படும் வம்பும் மட்டுமே இன்றைக்கு படாடோபமாக பூணூல் விழாவை முடித்து வைக்கிறது.
ஓம் பூர் புவஹ-சுவஹ
தத் சவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய
தீமஹி தீயோ யோன ப்ரசோதயாத்
என்பது காயத்ரி மந்திரம்.
முக்காலங்களையும் மூன்று லோகங்களையும், முக்குணங்களையும் கடந்து நிற்கும் அன்னையே, உன்னை நான் வணங்குகிறேன். இருளை நீக்கும் சூரியனின் கிரணங்களையொத்து என் மாயையை, அறிவீனங்களை அகற்றி, அறிவொளி வழங்குமாறு வேண்டி அன்னையே உன்னைப் பணிகிறேன்.
என்பது இதன் பொருள்
பூணூல் போட்ட பிறகு அம்மாணாக்கன் சூரியனை காண்பது என்பது வழக்கு. சூரியனைப் போல் கடமைத் தவறாதோன் பிரபஞ்சத்தில் இல்லை. அவனைப் போல் இனி நானும் திகழவேண்டும் என்று மாணாக்கன் மன உறுதி பூண்கிறான். இது போல் சடங்குகளில், சின்னங்களின் அவசியங்களை விளக்க வரும் போது, அலைபாய்ந்து ஓடிக்கொண்டிருக்கும் நம் மனத்திற்கு ஸ்திரமாய் உறைக்க, பதித்து வைக்க சின்னங்கள் தேவை, அதிலும் ஆன்மா, இறை ஞானம் போன்ற சூக்ஷ்ம வஸ்துக்களை விளக்க சின்னங்கள் அவசியமாகிறது. அதன் பயனாக ஆரம்ப நிலையில் இருக்கும் ஒரு மனிதனுக்கு சொல்லப்படுபவை எளிதில் சென்றடைகிறது.
தான் யார், எவ்வழி, எக்குலத்தின் தோன்றல் என்றெல்லாம் தன்னை பற்றி கூறிக்கொண்டு, இன்னான் இந்த பிரம்மச்சரியத்தை மேற்கொண்டிருக்கிறேன். எனக்கு இனி,
இகழத்தக்கதல்ல இகழ்ச்சி
போற்றத்தக்கதல்ல இகழ்ச்சியின்மை
மேலும்,
நல்லவற்றில் கவனம்
தீயவற்றில் அலக்ஷியமும்
அறியத் தக்கதை அறிவது
அறியத் தகாததை அறியாமலேயே இருப்பது
நல்லவற்றையே கேட்பது
தீயவற்றை கேளாமல் இருப்பது
உண்மையை பேசுவது
பொய்யை பேசமலே இருப்பது
இவை எல்லாம் என் விரதங்கள், என்று உறுதிமொழி எடுத்து விரதம் பூண்கிறான். பூணூல் போடப்பட்டவன், குருவிற்கேற்ற நல்ல அடக்கமான சீடனாக விளங்குவது அவன் தலையாயக் கடமை. அவன் பிக்ஷை எடுத்து உண்ணல் வேண்டும். பிக்ஷை எடுப்பதால், ஒரு மனிதனின் அஹம் அடக்கப்பட்டு, அங்கு தன்னடக்கம் தானாய் வந்தமர்கிறது.
இத்தனைப் படிகளைக் கடந்துகொண்டே அவன் பாடங்கள் பயின்று நித்திய கர்மாக்களை செய்தால் மட்டுமே அவனுக்கு போடப்பட்ட பூணூல் முழுமையான பயன் பெறுகிறது. மறுபடியும் அதே கேள்வி. பூணூல் போட்டவன் எல்லாம் பிராமணானா? போடப்பட்டதும் சரியாய் முறையாய் போடப்படுகிறதா?
பதில் விஸ்வாமித்ரர் கூறுகிறார்.
"இத்தனை சடங்குகள் நடந்தாலும் கூட, வசிஷ்டராய் அவதரித்திருக்கும் அம்மாணக்கனுக்கு போடப்பட்டது பூணலே அல்ல. அவன் பெற்றது பிரம்மோபதேசமே அல்ல"
(வளரும்)
//பூணூல் போட்டவன் எல்லாம் பிராமணானா? //
ஒவ்வொரு முறை இந்த வார்த்தை பேசப்படும் போதும், நாம் புரிந்து கொள்ள வேண்டியது ஒன்றுண்டு. பிராமணன் என்பவனை குலத்தின் தோன்றலால் பிறப்பால் பெயரிட முடியாது. எவன் பிரம்மத்தை அல்லது இறையை அல்லது இறைத் தத்துவத்தை நோக்கி தன்னை செலுத்துகிறானோ, அல்லது செல்லும் முயற்சியில் முழுமையாக முதல் படியில் தவழத்துவங்குகிறானோ, அவன் தன்னை மாணாக்கன் ஆக்கிக்கொள்கிறான்.
சோவின் எங்கே பிராமணன், திங்கள் முதல் வெள்ளி வரை நாள் தோறும் இரவு 8 மணிக்கு.
மறு ஒளிபரப்பு,
http://forumhub.mayyam.com/hub/viewt...er=asc&start=0
Seriously, i'm wondering how you are able to keep everything in memory and reproduce it here. :clap: :bow:
Basically if its abstract philsophy and philosophical musings, I remember the crux and never forget it.
Otherwise than philsophical happenings, I have a note specifically for this and I take notes of important points VR :oops:
Reg thirukkuraL I noted down the kuraL and found expl in net.
I am happy there are ppl reading it :) that gives me the enthu to pass on few good and messages and thoughts.
:ty: