thanks harish. neengalum asathikittuthan irukeenga.Quote:
Originally Posted by HARISH2619
Printable View
thanks harish. neengalum asathikittuthan irukeenga.Quote:
Originally Posted by HARISH2619
Murali sir often use to say here that much before the famous “ meen kuzhambu “ scene from “ Mudhal Mariyadhai “ there is a wonderful scene in “ Uyarndha Manidhan “. Sivakumar serves spicy “ kuruma” to NT and NT’s performance in that scene is extra ordinary. None of NT fans can disagree with Murali sir on this. We all love that scene.
There’s another favourite scene of mine from the same film. Asokan, in an inebriate condition drops in at NT’s place to reveal the “ truth” to him. This is a scene where Asokan is supposed to score the maximum and he gives his best shot utilising all his gimmicks to the max and as usual making jarring noice. NT gives his absolute support by staying quiet. The moment Asokan accuses NT as a coward, the final take-off begins and NT, effortlessly emerges as the winner.
It is a close-up shot and NT, with all emotion in his face, recites a lengthy dialogue. All the while, tears will be dancing in his eyes waiting to get his permission to roll down. Whenever I watch it, this particular scene makes me dumbfound.
NT is a master in this act.
:notworthy:
மிக்க நன்றி ரங்கன் சார்.'Quote:
Originally Posted by rangan_08
உங்களின் வர்ணனை அந்த காட்சியை மீன்டும் ஒரு முறை பார்க்கவேன்டும் என்ற ஆவலை தூண்டுகிறது.
பம்மல் சார்,
thank you so much for the details of TP collections.Hope sivaji week will set a new record in old movie collections in chennai.
Harish, while acknowledging your kind words, I would also like to say that I really don't deserve the title. " Jambavan " is too big a word for me. I'm just an ordinary fan unlike the real jambavans, Raghavendra sir, Murali sir, Pammalar, Saradha mam & a hand full of others. They have all the statistics regarding NT right in their finger tips and I'm very poor in that subject. Besides they do a lot of service to spread the glory & fame of NT. All I know is just to watch thalaivar's films and share my views with other fans, that's it. :)
7.3.2010(ஞாயிறு) தேதியிட்ட தினமணி நாளிதழில், "வாழ்க ஊடக தர்மம் " என்கின்ற தலைப்பில் வெளியாகியுள்ள செய்திக் கட்டுரையிலிருந்து: (எழுதியவர் : துரும்பு)
"தொலைக்காட்சி சேனல்கள் அனைத்தும் போட்டி போட்டுக் கொண்டு, நேயர்களைத் தங்கள் பக்கம் இழுக்க அல்லது தக்க வைத்துக் கொள்ள முயன்றதால், கடந்த வாரம் பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லை.
கலைஞர் தொலைக்காட்சியில், சனிக்கிழமையின் (27.2.2010) தொடர்ச்சியாக பாசத்தலைவனுக்குப் பாராட்டு விழா, ஞாயிறன்றும் (28.2.2010) ஒளிபரப்பானது. ஞாயிறன்று கலைஞர் தொலைக்காட்சியில், பாசத்தலைவனுக்குப் பாராட்டு விழாவில் ஒளிபரப்பான, கலைஞரின் திரை வாழ்க்கைப் பயணத்தை விளக்கும் தொகுப்பு, நிகழ்ச்சியின் போக்கையே திசை திருப்பி விட்டது எனலாம். நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சேரன் செங்குட்டுவனாக, கலைஞரின் மிக நீண்ட வசனத்தைப் பேசி நடித்த காட்சி திரையில் தோன்றியதும், அரங்கமே அசைவற்றுப் போனது.
அரங்கில் கூடியிருந்த கூட்டம், சிம்மக்குரலில் சிவாஜி பேசிய வசனத்தில் மயங்கியதா, உடலின் ஒவ்வோர் அங்கமும் வசனத்திற்கேற்ப நடித்த நடிப்பில் மயங்கியதா என்பதைப் பிரித்தறிவது கடினம். காட்சி முடிந்ததும், கண்கள் கலங்க, நெஞ்சம் நெகிழ, அத்தனை பேரும் எழுந்து நின்று அரங்கம் அதிர எழுப்பிய கரவொலியில், கமல், ரஜினி, விஜய், சூர்யா, சர்ச்சையைக் கிளப்பிய அஜீத்தின் பேச்சு என அத்தனையும் மறந்து போனது மட்டுமல்ல, தமிழக மக்களின் நினைவுகளில் நிறைந்து, உணர்வுகளில் கலந்து, உயிர்களோடு ஒன்றிப் போன, சிவாஜி என்கிற சகாப்தம், சிறிய திரைத் துணுக்கு வடிவில் வந்து, பாசத்தலைவனின் பாராட்டு விழாவைத் தனதாக்கிக் கொண்டது."
தினமணியில் வெளியான இத்தகவலை, எமக்கு வழங்கிய ரசிக நல்லிதயம் திரு.கே.மகேஷ் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி!
அன்புடன்,
பம்மலார்.
சாதனைகளின் சக்கரவர்த்தி - 1
வெள்ளித்திரை வேந்தரின் வெள்ளிவிழாக் காவியங்கள்:
[காவியம்(வருடம்) - ஓடிய நாட்கள் என்கின்ற ஃபார்மெட்டில்]
1. பராசக்தி(1952) - 294 நாட்கள்
2. வீரபாண்டிய கட்டபொம்மன்(1959) - 181 நாட்கள்
3. பாகப்பிரிவினை(1959) - 216 நாட்கள்
4. பாவமன்னிப்பு(1961) - 177 நாட்கள்
5. பாசமலர்(1961) - 176 நாட்கள்
6. திருவிளையாடல்(1965) - 179 நாட்கள்
7. தர்த்தி[ஹிந்தி](1970) - 266 நாட்கள்
8. பட்டிக்காடா பட்டணமா(1972) - 182 நாட்கள்
9. வசந்த மாளிகை(1972) - 287 நாட்கள்
10. தங்கப்பதக்கம்(1974) - 181 நாட்கள்
11. உத்தமன்(1976) - 203 நாட்கள்
12. தியாகம்(1978) - 175 நாட்கள்
13. பைலட் பிரேம்நாத்(1978) - 222 நாட்கள் (ஷிஃப்டிங் முறையில் 1080 நாட்கள்)
14. திரிசூலம்(1979) - 200 நாட்கள்
15. தீர்ப்பு(1982) - 177 நாட்கள்
16. நீதிபதி(1983) - 175 நாட்கள்
17. சந்திப்பு(1983) - 175 நாட்கள்
18. முதல் மரியாதை(1985) - 200 நாட்கள்
19. படிக்காதவன்(1985) - 175 நாட்கள்
20. தேவர் மகன்(1992) - 180 நாட்கள்
21. படையப்பா(1999) - 210 நாட்கள்
22. ஸ்கூல் மாஸ்டர்[கன்னடம்](1958) - 188 நாட்கள் (கெளரவத் தோற்றம்)
மிகப் பெரிய திரையரங்குகளில், ரெகுலர் காட்சிகளாக, இத்தனை வெள்ளிவிழாப் படங்கள், தமிழ்த் திரைப்பட வரலாற்றிலேயே, நமது நடிகர் திலகம் ஒருவரைத் தவிர, வேறு எவருக்கும் இல்லை.
சாதனைகள் எனும் சாம்ராஜ்யத்திற்கு நிரந்தர சக்கரவர்த்தி சிங்கத்தமிழன் சிவாஜி ஒருவரே!
அன்புடன்,
பம்மலார்.
Fabulous achievement by the legend. I am surprised that Thillana Mohanammal and Vellai Roja are not in the list. It is great to know that he was involved in massive hits until the beginning of the new century. That is close to 50 years of pure achievement. I doubt very much if another actor will be able to match this.Quote:
Originally Posted by pammalar
மோகன்,
முன்பெல்லாம் தினசரி நமது திரியில் உங்கள் பங்களிப்பு இருக்கும். சில பல மாதங்களாக [உங்கள் அலுவலக பொறுப்பு காரணமாக] அவை குறைந்திருந்தன. அதற்கு வட்டியும் முதலுமாக இப்போது செலுத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். உயர்ந்த மனிதன் பற்றி நீங்கள் சொன்னது மிகச் சரி. ஏ.வி.எம்.சரவணன் சொன்னது நினைவுக்கு வருகிறது. அந்த காட்சியை எப்படி செய்ய வேண்டும் என்று அசோகனுக்கு நடித்துக் காட்டியதே நடிகர் திலகம்தான் என்ற அவர், நடிகர் திலகம் செய்ததில் ஒரு கால் பங்கு மட்டுமே அசோகன் செய்தார் எனச் சொன்னார்.
செந்தில்,
லிஸ்டில் உள்ள சில படங்கள் மன்னவன் வந்தானடி மற்றும் பாரத விலாஸ் பற்றி சொல்லியிருக்கிறீர்கள். மன்னவன் வந்தானடி வெகு பல காலமாக டி,வியில் கூட ஒளிப்பரப்படவில்லை என்று நினைக்கிறேன். ஆகவே ரசிகர்கள் அதை சேர்த்திருக்கிறார்கள். ஒரு நகைச்சுவை cum தேசிய நீரோட்டத்தில் இணைந்த படம் என்ற கோணத்தில் பாரத விலாஸ் தெரிவு செய்யப்பட்டிருக்கிறது. செந்தில், மேலும் ஒரு விஷயம். 28 -ந் ஞாயிறன்று எங்கள் தங்க ராஜா மாலைக்காட்சிக்கு பெங்களூரிலிருந்து ரசிகர்கள் வருவதாக செய்தி வந்திருக்கிறது என்று சுவாமி சொன்னார்.
ஒரு சுவாரஸ்யமான விஷயம். இப்படி ஒரு சிவாஜி வாரம் சென்னையில் நடைபெறப் போகிறது என்ற செய்தியை சுவாமி அவர்கள் மதுரை ரசிகர்களோடு பகிர்ந்துக் கொண்ட போது நன்றாக போகும் என்று நினைக்கிறோம் என்று சொன்னாராம். அதற்கு மதுரை ரசிகர்கள் உடனே பதில் சொன்னார்களாம் "உங்கள் ஊரில் நன்றாக போகும். இதையே எங்கள் ஊரில் திரையிட்டிருந்தால் வசூலில் ரிகார்ட் பிரேக்கே செய்திருக்கும்".
கரிகாலன் & செந்தில்,
உங்கள் பாராட்டுகளை எல்லாம் சுவாமியின் இந்த பட்டியல்களுக்கே [தங்கப்பதக்கம் வசூல் மற்றும் வெள்ளி விழாப் படங்களின்] கொடுத்து விடாதீர்கள். ஒரு சில டேட்டா -களை அவர் சேகரித்துக் கொண்டிருக்கிறார். அவை நமக்கு மிகுந்த சந்தோஷத்தைக் கொடுக்கப் போகிறது என்ற சுவையான முன்னோட்டத்தை மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.
அன்புடன்
சுவாமி,
தினமணி நாளிதழில் துரும்பு எழுதிய கரும்பு விஷயத்திற்கு நன்றி.
டியர் மோகன்..
முரளியண்ணா சொன்னது போல, தங்களின் தொடர்ந்த பங்களிப்பு மகிச்சியைத்தருகிறது. இது தொய்வில்லாமல் தொடரட்டும்.
டியர் செந்தில்...
உங்களின் பங்களிப்பும் அப்படியே. நீங்கள் குறிப்பிட்ட பாரத விலாஸ் மற்றும் மன்னவன் வந்தானடி ஆகியன வெளியான காலத்தில் 100 நாட்களுக்கு மேல் ஓடிய வெற்றிப்படங்களே. மேலும் 'மன்னவன் வந்தானடி' சமீப காலமாக ரசிகர்கள் பார்வைக்குக் கிடைக்கவில்லை. எனவே அவை திரையிடப்படுவது பொருத்தமே. இம்முயற்சி வெற்றிகரகமாக அமையும் பட்சத்தில், நடிகர்திலகத்தின் மற்ற காவியங்களும் சென்னை அரங்குகளில் வலம் வரும் என்பது திண்ணம். பம்மலார் அவர்கள் அளித்துள்ள 'தங்கப்பதக்கம்' (ஸ்டார்) வசூல் விவரம் அம்முயற்சிகளில் இறங்குவோருக்கு உரமிடும் வண்ணமாக அமைந்துள்ளது.
டியர் பம்மலார்...
நடிகர்திலகத்தின் 'வெள்ளிவிழாப்பட்டியல்' அபாரம். அவற்றில் முதல் 17 படங்களே நாம் பூரண உரிமையுடன் சொந்தம் கொண்டாட முடிந்தவை என்பது என் எண்ணம். (நீங்கள் இன்னும் ஏதோ ஒரு பெரிய முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக முரளியண்ணா இங்கே சொல்லி, எங்கள் ஆவலைக் கிளறிவிட்டுள்ளார். அது என்ன என்பதையறிய மிகுந்த ஆர்வமாயிருக்கிறோம்). கலைஞரின் பாராட்டுவிழாவில் சிங்கதமிழனின் சிம்ம கர்ஜனையில் அரங்கமே உறைந்துபோனது மட்டுமல்லாது, அவ்வப்போது உணர்ச்சிப்பெருக்கில் கைதட்டலும் ஆரவாரமும் வந்துகொண்டேயிருந்தது. (நடிகர் கார்த்திக் கண்களில் நீர் துளிர்த்ததை கவனித்தீர்களா?). இறுதியில் கர்ஜனை ஓய்ந்தபோது அரங்கம் முழுதும் எழுந்து நின்று கையொலி எழுப்பியது. இதை இங்கு நாமே எழுதுவதை விட, தினமணியில் பிரசுரமாகி மக்களிடம் சென்றடைந்தது மனதுக்கு மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அளிக்கிறது. 'நான் இன்னும் வாழ்கிறேன்' என்று அந்த பிரம்மாண்ட அரங்கில் நிரூபித்தார் நடிகர்திலகம்.
டியர் கரிகாலன்.....
உங்கள் பங்களிப்புக்கு நன்றி. உங்கள் ஆதங்கம் நியாயமானதே. மேலும் பல படங்கள் வெள்ளிவிழாவை நெருங்கும் வாய்ப்பைப்பெற்றும் இடையில் நிறுத்தப்பட்டன. அவற்றில் குறிப்பிடத்தக்கவை...
பாலும் பழமும் - 133 நாட்கள்
சரஸ்வதி சபதம் - 133 நாட்கள்
தில்லானா மோகனாம்பாள் 133 நாட்கள்
சிவந்த மண் - 145 நாட்கள்
(எனக்கு சட்டென்று தோன்றியவை இவை. இன்னும் பல இருக்கின்றன).
கண்ணதாசன் எழுத வேண்டும், டி.எம். சௌந்தரராஜன் பாட வேண்டும், சிவாஜி கணேசன் வாயசைக்க வேண்டும். அப்படிப்பட்ட பாடல் நூறாண்டுகள் நிலைத்து விடும்.
- கண்ணதாசன் விழாவில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்