-
Dear All
Today is our NT BIRTHDAY
Raghavendra, , Murali, Pammalar, Vasudevan, Shekar, Joe,SIR, Sarda Mam
and to all our NT fans we all will be blessed by our NT, WE ARE ALL PROUD TO BE OUR NT FANS
Happy returns of the day Thailava
regards
kumareshan
-
நடிகர் திலகத்தின் மிக நெருங்கிய நண்பர், சிவாஜி நாடக மன்றத்தின் கல்தூண், நடிகர்-இயக்குனர் திரு.எஸ்.ஏ.கண்ணன் அவர்களின் மறைவிற்கு நமது ஆத்மார்த்தமான அஞ்சலி. அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை இறைஞ்சுவோம். அவரது பிரிவால் வாடும் அனைத்து உள்ளங்களுக்கும் நமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
பம்மல் ஆர். சுவாமிநாதன்.
-
நடிகர் திலகத்தின் படங்கள் எத்தனையோ இருந்தாலும் வசந்த மாளிகை திரைப்படத்திற்கு ஒரு தனி சிறப்பிடம் உண்டு. படம் வெளியான நாள் முதல் இன்று வரை எவர் கிரீன் காவியம் என்று சொன்னால் மிகையாகாது. அதனால்தான் இப்போதும் அந்தப் படம் திரையிடப்பட்டால் மக்கள் வெள்ளம் அலைமோதும் காரணம்.அந்த காவியத்தின் முதல் நாள் முதல் 250 நாட்கள் விளம்பரங்கள் வரை அள்ளித்தந்த சுவாமிக்கு நன்றி!
ஸ்டில்கள் மூலமாக முழுப் படத்தையும் காட்சிக்கு விருந்தாக்கிய வாசுதேவன் சாருக்கும் நன்றி.
அன்புடன்
-
இன்று பிறந்த நாள். நடிகர் திலகத்திற்கு இன்று பிறந்த நாள். அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் நமக்கு சந்தோஷமான நாள். அவரின் எத்தனையோ பிறந்த நாட்கள் கடந்து போயிருக்கின்றன. அவர் பூவுலகில் இருந்த போதும் அவர் இதை விட்டு பிரிந்து போன பிறகும் கூட நாம் மகிழ்வோடு கொண்டாடி கொண்டிருக்கும் நாள் இந்த அக்டோபர் 1.
இன்றும் ஏராளமானோர் தங்கள் வாழ்வின் ஒரு பாகமாக தங்கள் சந்தோஷத்தின் ஒரு காரணமாக அவரை நினைத்துக் கொண்டிருப்பதற்கு என்ன காரணம்? தமிழ் நாட்டிலே ஏன் எங்கெல்லாம் தமிழ் கூறும் நல்லுலகம் நிலைக் கொண்டிருக்கிறதோ அங்கெல்லாம் இன்றும் நடிகர் திலகம் வாஞ்சையுடன் நினைக்கப்படுகிறார் என்றால் அதன் பின்னணி என்ன?
அரசியலா - இல்லை இல்லவே இல்லை
பதவியா - இல்லை
காசு பணமா - இல்லை
லாப நோக்கா - இல்லை
ஐந்து ஆறு தசாங்ககளாய் தமிழனின் வாழ்விலே இரண்டற கலந்து விட்ட ஒரு கலாச்சார அடையாளம் அவர். இரண்டு தலைமுறை தமிழர்களின் நிரந்தர சந்தோஷமாக இருந்தவர் அவர். தமிழ் சினிமா பார்த்து வளர்ந்த அனைத்து குடும்பங்களிலும் நிச்சயமாக ஒருவராவது அவரின் ரசிகர்களாய் இருப்பார்கள். தமிழ் சினிமாவின் 80 வருட சரித்திரத்திலே வேறு எந்த மனிதர்க்கும் கிட்டாத பெரும் பேறு அது.
ஒவ்வொரு தமிழனின் வாழ்விலும் அவன் கடந்து வந்த பல்வேறு உணர்வுகளில் நடிகர் திலகம் என்ற கலைஞனின் பாதிப்பை நிச்சயமாக காணலாம்.
இனிமேலும் வரும் காலங்களிலும் நம்மை சந்தோஷப்படுத்தப் போகும் அந்த யுக கலைஞனின் பிறந்த நாளில் அந்த உணர்வை முன்னெடுத்து செல்லும் பணியை மேற்கொள்வோம்.
வாழ்க அவர் புகழ்!
அன்புடன்
-
30.9.2011 வெள்ளி முதல் மதுரை 'ஸ்ரீமீனாட்சி' திரையரங்கில் தினசரி 4 காட்சிகளாக "பார்த்தால் பசி தீரும்".
1.10.2011 சனிக்கிழமை முதல் நாகர்கோவில் 'பயோனீர்முத்து' திரையரங்கில் தினசரி 4 காட்சிகளாக "தங்கைக்காக".
தித்திக்கும் இத்தகவல்களை வழங்கிய அன்புள்ளம் திரு.எஸ்.ராமஜெயம் அவர்களுக்கு நன்றி முத்தாரங்கள் !
அன்புடன்,
பம்மலார்.
-
அனைவருக்கும் அண்ணலின் அவதாரத் திருநாள் நல்வாழ்த்துக்கள் !
WISH YOU ALL A VERY VERY HAPPY SIVAJI JAYANTHI !
http://i1094.photobucket.com/albums/...ar/NT100-1.jpg
-
அண்ணல் அவதரித்த அற்புதத்திருநாளான அக்டோபர் ஒன்று அன்று வெளியான [அவரது] ஒரே காவியம் என்கின்ற பெரும் பெருமைக்குரிய
துணை
[1.10.1982 - 1.10.2011] : 30வது உதயதினம்
பொக்கிஷப் புதையல்
முதல் வெளியீட்டு விளம்பரம் : தினத்தந்தி : 17.9.1982
http://i1094.photobucket.com/albums/...EDC4702a-1.jpg
பக்தியுடன்,
பம்மலார்.
-
முரளி சார் சொன்னது சத்தியமான வார்த்தைகள்.
பிறந்த நாளா - தெரியாது... நினைவு நாளா - தெரியாது... எந்த நாள் -யாருக்குத் தெரியும்...
எங்களுக்கு தெரிந்த தெல்லாம் நடிகர் திலகம் மட்டும் தான்...
எங்களுக்கு பிறந்த நாளுக்கு போலியாக மாலை போட்டு போஸ் கொடுத்து வேஷம் போட தெரியாது..
நினைவு நாளுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி போஸ் கொடுக்கும் வேஷம் போடவும் தெரியாது ...
மற்ற நாட்களில் மறந்து போகும் நன்றி கெட்ட தன்மையும் தெரியாது...
எங்களுக்குத் தெரிந்ததெல்லாம் ஒன்று தான் --
நினைதது நினைத்து கண்ணீர் விடுவோம் ....
அது எந்த நாள் என்று கவலையில்லை..
நினைத்தாலே உணர்ச்சி வசப்பட வைத்து எங்களை ஆட்கொள்ளும் ஒரே தலைவர்..
நிஜ வாழ்வில் நடிக்க
அவருக்கு மட்டுமல்ல-
எங்களுக்கும் தெரியாது...
உணர்ச்சி்ப் பிழம்பாய்...
-
dear Raghavendra Sir
Superb
regards
kumareshan prabhu
-
Ithaya vendan Sivaji raajavin pirantha pon nalai kondadum rasiga nenchangal vaazga
innaal nam vaz naalil pon naal