http://i61.tinypic.com/2cxb8lj.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Printable View
http://i61.tinypic.com/2cxb8lj.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
WHO IS NEXT TO GOD?
http://i59.tinypic.com/23hsh94.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
RETURN OF GOD WITH SAME SMILE AND STYLE
http://i58.tinypic.com/24cs7yc.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Already posted here ?
http://pzy.be/t/2/10487267_592593437...50973647_n.jpg
DREAM GIRL RECEIVING HONOUR FROM GLEAM GOD
http://i61.tinypic.com/bff96o.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i60.tinypic.com/2njlje0.jpg
GREAT...GREAT...GREAT...TRUE...TRUE...TRUTH IS IMMORTAL.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i62.tinypic.com/34figdz.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i57.tinypic.com/2aiq136.jpg
" என்னைப் பொறுத்தவரையில் ஜாதி கிடையாது; மதம் கிடையாது. ஒன்றே குலம். ஒருவனே தேவன் என்பதுதான் எனது கடவுட் கொள்கை. நாமே நம்மவர்களைப் பார்த்து, தொடக்கூடாது என்றால் என்ன அர்த்தம்? "
http://i58.tinypic.com/156qweq.jpg
திரைப்பட இயக்குநர் மகேந்திரன்
"முள்ளும் மலரும்', "உதிரிப்பூக்கள்', "நெஞ்சத்தைக் கிள்ளாதே', "ஜானி', "மெட்டி', "நண்டு', உட்பட பல படங்களை இயக்கியவர். தரமான இலக்கியப் படைப்புகளைத் திரைப்படமாக்கி தமிழ் சினிமாவுக்குப் புதிய பாதை அமைத்துக் கொடுத்தவர்.
பக்கம் பக்கமாக வசனம் பேசி திரைப்படத்தை நாடகம்போல் உருவாக்கிக் கொண்டிருந்த போக்கை மாற்றி, "திரைப்படம் விஷுவல் மீடியம்; இதில் உரையாடல்களைவிட காட்சி அமைப்புகள் மூலம்தான் கதை சொல்ல வேண்டும்' என்று நிரூபித்துக் காட்டியவர்.
எம்ஜிஆரை பற்றி இயக்குனர் மகேந்திரன்
----------------------------------------------------------
திரையுலகில் ஒரு இடம் பெற முயற்சித்துக் கொண்டிருந்த நாட்களில், எம்.ஜி.ஆர். தமக்கு மாதச் சம்பளம் அளித்து கல்கியின் பொன்னியின் செல்வன் கதைக்கு திரைக்கதை எழுதுமாறு பணித்ததாகவும், அதைத் தாம் பூர்த்தி செய்யவில்லை எனினும், எம்.ஜி.ஆர். அதைப் பற்றி ஏதும் கேட்காமலேயே தொடர்ந்து பண உதவி செய்து வந்ததாகவும் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டார். எனினும், எம்.ஜி.ஆரின் எந்தப் படத்திற்கும் இவர் வசனமோ திரைக்கதையோ எழுதியதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாளைக்கு ராமவரம் தோட்டத்துக்கு வாங்க. ஒரு முக்கியமான பொறுப்பை உங்க கிட்ட ஒப்படைக்கபோறேன் சொன்னார். பெரிய பொறுப்பை கொடுத்துருவாரோங்க்கிற பயத்துல நான் போகவே இல்லை.
ஒருவேளை நான் அன்னைக்கு எம்ஜிஆரை சந்திச்சிருந்தா என்ன நடந்திருக்கும். இப்ப நான் எங்க இருப்பேன்னு என்னால் யூகிக்க முடியல.
தமிழ் சினிமாவின் நாடகத் தனத்தை அடியோடு வெறுத்த மாணவனான நான் படித்த காரைக்குடி அழகப்பா கல்லூரிக்கு (1958-ல்) திரு. எம்.ஜி.ஆர். வந்தபொழுது, அவர் முன்னிலை யில், "தமிழ் சினிமாவில் யதார்த்தம் என்பது அறவே கிடையாது' என்று நான் பேசியதும், அவர் அதை வெகுவாகப் பாராட்டி மேடையிலேயே எனக்குக் கடிதம் எழுதிக் கொடுத்ததும், பிறகு சட்டம் பயில சென்னைக்கு வந்த நான், தொடர்ந்து படிக்க வழி யில்லாமல் ஒரு பத்திரிகையாள னாக மாறியதும், ஒரு பத்திரிகை யாளர் சந்திப்பில் அவர் என்னை அடையாளம் கண்டுகொண்டு, நான் முழுமையாக வெறுத்த தமிழ் சினிமாவிற்குள் மதிப்பிற்குரிய அந்த மாமனிதர் என்னை வலுக் கட்டாயமாக இழுத்து வந்ததையும் பல பத்திரிகைகளில் நான் எழுதி நீங்களும் ஏற்கெனவே அறிந்திருப் பீர்கள். இப்போது உங்களின் கேள்வியில் "ஃபார்முலா படங்களில் நடித்த எம்.ஜி.ஆர்.' எனக் குறிப்பிடு கிறீர்கள். அவர் அப்படிப்பட்ட நடிகர்தான் என்றாலும், சினிமா பற்றி முழுமையான அறிவாற்றல் கொண்டவர்! ஹாலிவுட் படங் களைப் பார்த்தவர் என்பதால் இருக்கலாம். ஆனால் எதையும் முன்னோக்கிப் பார்க்கும் திறன் படைத்தவர். தமிழ் சினிமாவின் நிகழ்காலம், வருங்காலம் பற்றி யெல்லாம் முற்றிலும் உணர்ந்தவர். எதிலும் அவருக்கு "தீர்க்க தரிசனம்' உண்டு என்று சொன்னால்கூட அது மிகையல்ல.
நான் அவரது லாயிட்ஸ் ரோடு வீட்டில் தங்கி, "பொன்னியின் செல்வன்' நாவலுக்கு திரைக்கதை எழுதிக் கொண்டிருந்த காலத்தில், நான் தொடர்ந்து எழுதிக் களைப் படையக் கூடாது என்று சொல்லி, நேரம் கிடைக்கும்போதெல்லாம் என் பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டு, நான் படித்த கதைகள், எழுதிய கதைகளைச் சொல்லச் சொல்லி கேட்பார். தனது இனிய நாடக அனுபவங்களையும் என்னு டன் பகிர்ந்து கொள்வார். அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் அவரிடம்-
"எங்கள் கல்லூரியில் உங்கள் முன்னாலேயே தமிழ் சினிமாவைக் கடுமையாக விமரிசனம் செய் தேனே... உண்மையிலே அது குறித்து நீங்கள் என்மீது கோபம் கொள்ளவில்லையா?' என்று கேட்டேன்.
அதற்கு அவர் சொன்னார்: "நீங்கள் உண்மையைச் சொன்னீர்கள். இன்றைய சினிமா பற்றி நீங்கள் சொன்னதெல்லாம் எனக்கும் உடன்பாடானது என்பதால்தான் தானே உங்களைப் பாராட்டி மேடையில் வைத்தே கடிதம் எழுதிக் கொடுத்தேன். பேசுவதற் காக உங்களுக்கு மூன்று நிமிடங் களே தரப்பட்டிருந்தும், நீங்கள் 45 நிமிடங்கள் பேசுகிற அளவிற்கு உங்கள் பிரின்சிபாலிடம் கேட்டுக் கொண்டதும் நான்தானே. ஆரம்பகால தமிழ் சினிமா வில் நாங்கள் எல்லாம் பாக வதர் கிராப் வைத்திருந் தோம். இன்று மாடர்னாக விக் வைத்துக் கொள்கிறோம். அன்றைய படங்களில் 50, 60 பாடல்கள் இருந் தன. இன்று 6, 7 பாடல்கள்தான். அந்தக் காலத்துப் படங்களில் நாங்கள் வசனம் பேசும் முறை முற்றிலுமாக மாறி, தற்போது வசனம் யதார்த்தமாகப் பேசும் நிலையை அடைந்திருக்கிறோம். அதுபோல எத்தனையோ மாற்றங்கள். நீங்கள் அன்று என் முன்னால், "சினிமாவில் மட்டுமே காதலிப்பவர்கள் டூயட் பாடுகிறார் கள். அது அபத்தம்' என்றீர்கள். அது உண்மைதானே. வெளி நாட்டுப் படங்களில் யார் டூயட் பாடுகிறார்கள்? எனக்கும் டூயட் பாடுவது கேலிக்குரியது என்று புரியும். இதுவும் ஒரு நாள் மாறியே தீரும். டூயட் இல்லாத படங்கள் தமிழில் வந்தே தீரும். இன்றைய ரசிகர்களை மனதில் வைத்து நாங்கள் இன்னமும் டூயட் பாடுகி றோம். இதே ரசிகர்கள் எதிர்காலத் தில் படத்தில் டூயட் வந்தால் வெளியே போய்விடுவார்கள். ஒரு படத்தின் வெற் றிக்கு கதை தான் மூலதனம்; டூயட்கள் அல்ல என்னும் காலம் வெளிநாடு களைப்போல இந்தியாவிலும் ஒரு நாள் வந்தே தீரும்.'
இப்படி அவர் சொல்லச் சொல்ல அவர்மீது எனக்கிருந்த மட்டற்ற மதிப்பும், அவரது வியக்கத்தக்க சினிமா பற்றிய கண்ணோட்டத் தின் மீதான பிரமிப்பும் உயர்ந்து உயர்ந்து உயர்ந்து கொண்டே போனது.
பின்னாளில் நான் இயக்கிய முதல் படமான "முள்ளும் மலரும்' படத்தை பிரத்தியேகக் காட்சியாக அவருக்குக் காட்டினேன். படம் முடிந்ததும் என்னைக் கட்டித் தழுவிக் கொண்டவர், "உண்மை யான சினிமா எப்படி இருக்க வேண்டும் என்று கல்லூரியில் நீங்கள் பேசியதை இன்று நடை முறைப்படுத்தி மிகப்பெரும் வெற்றி பெற்றுவிட்டீர்கள். நல்ல சினிமா பற்றிய உங்களின் கனவு மட்டும் அல்ல; எனது எதிர்பார்ப்பும் முழுமையாக நிறைவேறி விட்டது. நமது சினிமாவின் எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும் என்று நான் உங்களுக்குச் சொன்னது இன்று பலித்து விட்டது. இனி புதிய புதிய சோதனைகளைச் செய்து, மேலும் மேலும் சினிமா வில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்து, தமிழ் சினிமாவைப் பெருமைப்படுத்துவீர்கள் என்ற அழுத்தமான நம்பிக்கை எனக்கு உண்டு' என்றார் அந்தப் பண்பாளர்.
"நெஞ்சத்தைக் கிள்ளாதே' படத்திற்கு மூன்று தேசிய விருது கள் கிடைத்தன. அதற்காக டெல்லி சென்ற நான், முதல்வர் எம்.ஜி.ஆர். தமிழ்நாடு இல்லத்திற்கு வந்திருக் கிறார் என்று கேள்விப்பட்டதும், நானும் எனது டெக்னீஷியன்களும் அவரைச் சந்தித்தோம். எனது விருதை அவரது காலடியில் சமர்ப்பித்த நான், "காரைக்குடியில் இருந்த நான் டில்லிக்கு வந்து குடியரசுத் தலைவரிடம் விருதுகள் வாங்கியதற்கு நீங்கள்தான் காரணம்...' என்றேன்.
பெருமிதப்பட்டு ஒரு தாயின் மனநிலையில் எங்களை வாழ்த்திய அவர், "குடத்திலிருந்த விளக்கை எடுத்து வெளியே வைத்தேன். அதுமட்டுமே நான் செய்தது. மற்றதெல்லாம் உங்களின் திறமை யால் வந்தது. ஆனால் ஒன்று நிச்ச யம். கல்லூரிக் காலத்தில் நீங்கள் கனவு கண்ட தமிழ் சினிமாவும், நான் ஆசைப்பட்ட தமிழ் சினிமா வும் உங்களால் நிறைவேறி வருகி றது. இதற்கு மேலும் நீங்கள் சினிமா வில் செய்யப்போகும் மாற்றங்களை மற்றவர்களும் பின்பற்றுவார்கள்' என்று ஆசீர்வதித்தார்.
நீங்கள் குறிப்பிட்ட ஃபார்முலா பட நடிகரான அமரர் எம்ஜி.ஆருக் குள் உண்மையான சினிமா பற்றிய ஆழ்ந்த அறிவு எத்தகையது என்பதைப் புரிந்து கொண்டீர்களா? இனம் இனத்தை அடையாளம் கண்டுகொண்டது என்பதே உண்மை.''
இனிய நண்பர் பேராசிரியர் செல்வகுமார் சார்
மக்கள் திலகத்தின் ''மாட்டுக்கார வேலன் '' சென்னை நகரில் மறு வெளியீடு பற்றிய விரிவான தேதி - திரை அரங்கு பட்டியல் பதிவு மிகவும் அருமை . 1970ல் தமிழ் திரை உலகில் சாதனை படைத்த வெள்ளி விழா படம் .
மக்கள் திலகத்தின் பல நிழற்படங்கள் , கட்டுரைகள் பதிவுகள் வழங்கிய திரு கலிய பெருமாள் , திரு யுகேஷ் , திரு சைலேஷ் , திரு ரூப் . அவர்களுக்கு நன்றி .
மக்கள் திலகம் திரிக்கு புதிய வரவான திரு ஜெகன் அவர்களை அன்புடன் வரவேற்கிறோம் ..
மாட்டுக்காரவேலன்" சூப்பர்ஹிட் படம். ஜெயந்தி பிலிம்சார் தயாரித்த இந்தப்படத்தில், எம்.ஜி. ஆரும், ஜெயலலிதாவும் இணைந்து நடித்தனர். ப.நீலகண்டன் டைரக்ட் செய்தார். வசனம்: ஏ.எல்.நாராயணன். கண்ணதாசன் பாடல்களுக்கு இசை அமைத்தவர் கே.வி. மகாதேவன். இந்தப் படத்தில் எம்.ஜி.ஆருக்கு இரட்டை வேடம்.
மாட்டுக்காரவேலனும், வக்கீல் ரகுவும் ஒரே தோற்றம் கொண்டவர்கள். சட்டநாதன் குடும்பத்தினர், வக்கீல் ரகுவை வரவேற்கக் காத்திருக்க, அங்கே வேலன் வருகிறான். அவனுக்கு பெரிய விருந்து நடக்கிறது. வேலனை ரகு என்று எண்ணி, அவனை காதலிக்கிறாள், சட்டநாதன் மகள் லலிதா.
உண்மையைச் சொல்லிவிட வேலன் நினைக்கிறான். ஆனால் சூழ்நிலை, அவன் வாயைக் கட்டிப்போடுகிறது. அதே நேரத்தில் ரகு அங்கு வருகிறான். உண்மையை அறிகிறான். தப்பி ஓட நினைத்த வேலனை அங்கேயே தங்க வைத்து, வேலன் _ லலிதா காதல் வளர உதவுகிறான்.
ஆள் மாறாட்டங்களால் ஏற்படும் எதிர்பாராத திருப்பங்களுடன், படம் விறுவிறுப்பாக அமைந்தது. இரட்டை வேடத்தில், எம்.ஜி.ஆர். சிறப்பாக நடித்தார். குறிப்பாக, மாட்டுக்காரவேலன் வேடத்தில் அவர் நடிப்பு கொடிகட்டிப் பறந்தது.
ஜெயலலிதாவும், மற்ற நட்சத்திரங்களும், பாத்திரத்தை உணர்ந்து, இயல்பாக நடித்தனர். இந்தப் படத்தின் பெரிய வெற்றிக்குப் பாடல்கள் துணை நின்றன. "சத்தியம் நீயே, தர்மத்தாயே", "ஒரு பக்கம் பார்க்குறா", "பட்டிக்காடா பட்டணமா", "பூ வைத்த பூவைக்கு பூக்கள் சொந்தமா", "தொட்டுக்கொள்ள வா" ஆகிய கண்ணதாசன் பாடல்கள், திக்கெட்டும் எதிரொலித்தன.
1970 பொங்கல் அன்று வெளிவந்த இந்தப்படம், சென்னை பிராட்வே, மதுரை சிந்தாமணி ஆகிய தியேட்டர்களில் 25 வாரங்களுக்கு மேல் ஓடி, வெள்ளி விழா கொண்டாடியது. 14 தியேட்டர்களில் நூறு நாட்களுக்கு மேல் ஓடியது.
மதுரை நகரில் மக்கள் திலகத்தின் 5 வண்ணப் படங்கள் தொடர்ந்து சாதனை .
ஒளிவிளக்கு
அடிமைப்பெண்
நம்நாடு
மாட்டுக்கார வேலன்
என் அண்ணன்.
அடிமைப்பெண் - மாட்டுக்கார வேலன் இரண்டு படங்கள் வெள்ளிவிழாவும் ஒளிவிளக்கு மற்றும் நம்நாடு 20 வாரங்கள்
மேல் ஓடியது . என் அண்ணன் 100 நாட்கள் ஓடியது .
பின்னர் எங்கள் தங்கம் - குமரிகோட்டம் - ரிக்ஷாக்காரன் - 3 வண்ணப்படங்கள் தொடர்ந்து 100 நாட்கள் மேல் ஓடியது .
மாட்டுக்கார வேலனில் இடம் பெற்ற கிளைமாக்ஸ் சண்டை காட்சி - மக்கள் திலகத்தின் முழு திறமையை இந்த சண்டை காட்சியில் காணலாம் . என்ன ஒரு வேகம் - சுறுசுறுப்பு . எதிரிகளை பந்தாடும் அழகே அழகு . ஒரே நேரத்தில்
பலரை கட்டம் கட்டி சுழன்று சுழன்று அடிக்கும் காட்சி பரவசம் .
http://youtu.be/reXmZ1WhFao
நல்லவன் வாழ்வான் படத்தில் இடம் பெற்ற இந்த காட்சியில் மக்கள் திலகத்தின் இயல்பான நடிப்பும் நகைச்சுவை
காட்சியும் அருமை .
http://youtu.be/nXI4VBk2NCM
அழகப்பா கல்லூரி விழாவுக்கு வந்த எம்.ஜி.ஆர். முன் மகேந்திரன் பேசிய பேச்சு மிகப் பிரபலம். மேடையிலேயே எம்.ஜி.ஆர் எழுதிக் கொடுத்த பாராட்டு வரிகள், மகேந்திரன் வீட்டின்முகப்பை இன்னும் அலங்கரிக்கின்றன!
எம்.ஜி.ஆர் தந்த உற்சாகத்தினால்,'காஞ்சித் தலைவன்’ படத்தில் உதவி இயக்கு நராகப் பணிபுரிந்தார். எம்.ஜி.ஆருக்காக மகேந்திரன் எழுதிய 'அனாதைகள்’ என்ற நாடகம், பிற்பாடு 'வாழ்வே வா’ என எம்.ஜி.ஆர் - சாவித்திரி நடிக்க ஆரம்பிக்கப்பட்டு, பொருளாதார நெருக்கடியில் கைவிடப்பட்டது!
ஏறத்தாழ 25 படங்களுக்குக் கதை- வசனம் எழுதியிருக்கிறார். அவரின் நாடகம் 'தங்கப் பதக்கம்’ நிறையத் தடவைகள் மேடை ஏற்றப்பட்டு, வெற்றிகரமாகத் திரை வடிவத்திலும் வந்தது!
முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், பூட்டாத பூட்டுக்கள், நெஞ்சத்தைக் கிள்ளாதே, ஜானி, மெட்டி, கை கொடுக்கும் கை, நண்டு, அழகிய கண்ணே, ஊர்ப் பஞ்சாயத்து, கண்ணுக்கு மை எழுது, சாசனம் என்பவை மகேந்திரன் இதுவரை இயக்கிய 12 படங்கள்!
எம்.ஜி.ஆருக்காக கல்கியின் 'பொன்னியின் செல்வன்’ நாவலை எம்.ஜி.ஆரின் வீட்டிலேயே தங்கி திரைக்கதையாக எழுதினார். ஆனால், அந்த நாவல் படமாக்கப்படவில்லை என்பது அதன் பிறகான சோகம்!
'முள்ளும் மலரும்’ படத்தின் 'செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்’ பாடலின் ஆரம்பக் காட்சியை எடுக்கத் தயாரிப்பாளர் மறுத்துவிட்ட நிலையில், கமல்ஹாசன் அதைப் படமாக்கப் பணம் கொடுத்து உதவினார்!
அஸ்வினி, சுஹாசினி, சாருலதா, மோகன், சாருஹாசன் ஆகியோர் இவருடைய பெருமை மிகு அறிமுகங்கள்!
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபா கரனின் அழைப்பை ஏற்று, கிளிநொச்சியில் தமிழ் இளைஞர்களுக்கு மூன்று மாதங்கள்திரைப் படப் பயிற்சி அளித்தார். விடைபெறுகையில் பிரபாகரன் அளித்த விருந்தை, 'சில்லிடும் தருணம்’ எனக் குறிப்பிடுகிறார்!
மகேந்திரனின் எல்லாப் படங்களுமே அதிக பட்சம் 40 நாட்களில் எடுக்கப்பட்டவைதான். 'உதிரிப்பூக்கள்’ 35 ரோல் ஃபிலிம் சுருள்களில், 30 நாட்களில் படமாக்கப்பட்டது!
'நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படம் மூன்று தேசிய விருதுகள் வென்றன. விருது வாங்கப் போன மகேந்திரன், அங்கே வந்திருந்த எம்.ஜி.ஆரிடம் விருதுகளைச் சமர்ப்பித்து, 'எல்லாம் உங்களால் வந்தது’ என்றார்!
சினிமா வேண்டாம் என காரைக்குடிக்குத் திரும்பிய மூன்று தடவையும், மகேந்திரனை மீண்டும் அழைத்து வந்தது எம்.ஜி.ஆர்!
மகேந்திரன் இயக்கிய 12 படங்களில், முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், ஜானி, கை கொடுக்கும் கை என நான்கு படங்கள் மட்டுமே டி.வி.டி-யில் கிடைக்கின்றன. மற்றவை கிடைப்பது இல்லை. யாராவது அவற்றை அளித்தால், அவர்களை நண்பர்கள் ஆக்கிக்கொள்ளச் சம்மதிக்கிறார் மகேந்திரன்!
கடிகாரம் மற்றும் தங்க நகைகள் அணியும் வழக்கம் இல்லை. மிக எளிமை விரும்பி!
கதை-வசனம் எழுதி, இயக்கும் படங்களின் முக்கியமான கேரக்டருக்கு 'லட்சுமி’ என்று பெயர் சூட்டுவார். 'தங்கப்பதக்கம்’ சௌத்ரியின் மனைவி, 'உதிரிப்பூக்க’ளில் அஸ்வினி பெயர் லட்சுமிதான். கஷ்ட காலங்களில் மகேந்திரனுக்குச் சாப்பாடு போட்ட நடிகர் செந்தாமரையின் மனைவி பெயர் தான் லட்சுமி!
தனது வாழ்க்கையின் நன்றிக்கு உரியவர் களாக எம்.ஜி.ஆர், சிவாஜி, சின்னப்பா தேவர், சோ ஆகியவர்களைக் குறிப்பிடுவார். 'என்னை இது வரையில் நடத்தி வந்தது என் மனைவி ஜாஸ்மின்’ என நெகிழ்ச்சியோடு குறிப்பிடுவார்!
அவர் இயக்கிய 12 படங்களில் அவருக்கே பிடித்தது 'உதிரிப்பூக்கள்’. 'பிழைகள் குறைந்த படம்’ என்பார் சிரித்துக்கொண்டே!
நன்றி : கதிர்வேலன் , சினிமா விகடன் .
https://www.youtube.com/watch?v=ySyxfkaR4K8
The greatest undisputed Actor/leader the world will ever see; unanimous choice of all sections of the society throughtout the World.
மாட்டுக்கார வேலன் 101 வது நாள் வெற்றி விழாவின் போது, அப்போதைய ஆளுநர் உஜ்ஜல் சிங் அவர்கள் விருது வழங்கும் காட்சி
http://i61.tinypic.com/33mqypl.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர்.புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
ராணி லலிதாங்கி (பின்னாளில் சிவாஜி கணேசன் நடித்து வெளிவந்தது) படத் தொடக்க விழாவில் .....
http://i59.tinypic.com/10xr2ns.jpg
மக்கள் திலகத்துடன் (இடமிருந்து வலமாக ) பாடலாசிரியர் தஞ்சை ராமையா தாஸ், இசையமைப்பாளர் ஜி. ராமநாதன், தயாரிப்பாளர் கல்யாணராமன் ஆகியோர்.
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர்.புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
ராணி லலிதாங்கி (பின்னாளில் சிவாஜி கணேசன் நடித்து வெளிவந்தது) படத்தில் முதலில் நடித்த ராஜசுலோச்சனாவுடன், மக்கள் திலகம், காதாசிரியர் தஞ்சை ராமையாதாஸ், இயக்குனர் டி. ஆர். ரகுநாத் ஆகியோர்.
http://i61.tinypic.com/wjudn7.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர்.புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
எல்.ஆஸ்.ஈஸ்வரி தன் திரை உலக அனுபவங்கள் பற்றி கூறியதாவது:-
'கடந்த 40 ஆண்டுகளாக நான் பாடி வருகிறேன். தமிழக அரசு எனக்கு 'கலைமாமணி' விருது கொடுத்து கவுரவித்தது.
ஆந்திரா, கர்நாடகா, கேரளா அரசுகள், 'நந்தி விருது' உள்பட பல விருதுகளை எனக்கு வழங்கியுள்ளன.
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கதாநாயகியாக அறிமுகமான முதல் படம் 'வெண்ணிற ஆடை.' அதில் அவர் பாடும் முதல் பாடலான 'நீ என்பதென்ன... நான் என்பதென்ன...' என்ற பாடலை பாடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததை மிகப்பெரும் பெருமையாகக் கருதுகிறேன்.
கேவி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி, வேதா ஆகியோர் இசையமைப்பில் நான் பாடிய ஆயிரக்கணக்கான பாடல்கள் என்றும் சாகாவரம் பெற்றவை.
எப்படி 1961 எனக்கு திரை உலகில் ஒரு பெரிய உயர்வை கொடுத்ததோ, அதேபோல 1985-ம் ஆண்டையும் சொல்லலாம். இந்த ஆண்டில்தான் நான் அம்மன் மேல் பாடிய பாடல்கள் வரத்தொடங்கின. அதன் பிறகு தமிழ்நாட்டில் பெரும்பாலும் நான் சென்று பாடாத கோவில்களே இருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு ஏராளமான கோவில் கச்சேரிகள் வந்தன.
எம்.ஜி.ஆர். அவர்கள் உடல் நலம் குன்றி மருத்துவமனையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தபோது, தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் எல்லாம் அவர் பூரண குணம் அடைய வேண்டி விசேஷ பிரார்த்தனைகள் நடைபெற்றன. அந்த பிரார்த்தனைகளில் எல்லாம் நான் பாடிய அம்மன் பாடல்களின் கேசட்டுகள் போடப்பட்டன.
இது எனக்கு பெரிய ஆத்ம திருப்தியை கொடுத்தது.'
இவ்வாறு எல்.ஆர்.ஈஸ்வரி கூறினார்.
திரைக்கு வர முடியாமல் போன, " தேனாற்றங்கரை " படப்பிடிப்பின் போது
http://i57.tinypic.com/no7dbb.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர்.புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
மக்கள் திலகம் நடித்து வெற்றி பெற்ற படங்களில் விழாக்கள் நடந்த சில படங்கள் .
இன்று போல் என்றும் வாழ்க
இதயக்கனி
ரிக்ஷாக்காரன்
எங்கள் தங்கம்
மாட்டுக்கார வேலன்
நம்நாடு
அடிமைப்பெண்
காவல்காரன்
பெற்றால்தான் பிள்ளையா
அன்பே வா
எங்க வீட்டு பிள்ளை
படகோட்டி
பெரிய இடத்து பெண்
வேட்டைக்காரன்
தாய் சொல்லை தட்டாதே
திருடாதே
நாடோடி மன்னன்
காலத்தை வென்ற காவிய நாயகனின் " அடிமைப்பெண் ' காவியம், சென்னை நகரில், 1987-88 கால கட்டத்திலேயே படைத்த சாதனைகள் !
http://i60.tinypic.com/w9yw3l.jpg
1. 15-05-1987 அன்று, குளிர் சாதன " ஆல்பர்ட் " அரங்கில் தினசரி 4 காட்சிகளுடன், திரையிடப்பட்டு, வெற்றிகரமாக ஓடியது.
2. 22-05-1987 அன்று முதல் , குளிர் சாதன " ஸ்ரீ பிருந்தா " அரங்கில் தினசரி 3 காட்சிகளுடன் திரையிடப்பட்டது .
3. 29-05-1987 அன்று முதல் குளிர் சாதன " பைலட் " அரங்கில் தினசரி 3 காட்சிகளுடன் வெற்றிகரமாக வெளியிடப்பட்டது.
4 05-06-1987 அன்று முதல் " நடராஜ் " அரங்கில் தினசரி 4 காட்சிகளுடன் வெளியிடப்பட்டது.
5. 12-06-1987 அன்று முதல் " நூர்ஜகான் " அரங்கிற்கு தினசரி 4 காட்சிகளுடன் மாற்றப்பட்டது.
6. 19-06-1987 அன்று முதல் புறநகர் திருவொற்றியூர் " வெங்கடேஸ்வரா " அரங்கில் திரையிடப்பட்டது.(தினசரி 4 காட்சிகள்)
7. 10-07-1987 அன்று முதல் .குளிர் சாதன " கமலா " அரங்கில் தினசரி 4 காட்சிகளுடன் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடியது
8. 07-08-1987 அன்று முதல் குளிர் சாதன " சங்கம் " அரங்கில் தினசரி 4 காட்சிகளுடன் வெளியிடப்பட்டது.
9. 06-11-1987 அன்று முதல் பிளாசா அரங்கில் மாற்றப்பட்டு, தினசரி 3 காட்சிகளுடன் ஓடியது.
சிறிய இடைவெளியுடன், மீண்டும் ----
10. 12-02-1988 முதல் குளிர் சாதன " நாகேஷ் " அரங்கில் தினசரி 3 காட்சிகளுடன் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடியது.
11. 19-02-1988 முதல் குரோம்பேட்டை " வெற்றி " அரங்கில் தினசரி 4 காட்சிகளுடன் திரையிடப்பட்டது.
12. 04-03-1988 முதல் " ராம் " அரங்கில் தினசரி 3 காட்சிகளுடன் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடியது.
1989ம் வருடம் இதன் தொடர்ச்சியாக ...............
13. " பாரகன் " திரையரங்கில் 03-11-1989 முதல் தினசரி 3 காட்சிகளாக வெற்றிகரமாக திரையிடப்பட்டது.
சற்று இடைவெளிக்கு பின்பு, அதே ஆண்டில்,
14. "ஸ்ரீனிவாசா " அரங்கில் தினசரி 3 காட்சிகளாக வெளியிடப்பட்டது.
இது போன்ற கின்னஸ் சாதனைகளை உலகத்திலேயே நம் ஒப்பற்ற ஒரே நாயகனாம் மக்கள் திலகத்தால் மட்டுமே முடியும்..
அடுத்து தொடர்வது ........ 1982-83 கால கட்டத்தில், தமிழகத் தலைநகரில், பொன்மனசெம்மலின் பொற்காவியம் "எங்க வீட்டு பிள்ளை " நிகழ்த்திய அற்புத சாதனைகள் !
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர்.புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
16/01/1971 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த , கருணாநிதி குடும்பத்தின் தயாரிப்பில் வெளியாகி நூறு நாட்கள் ஓடிய எங்கள் தங்கம் திரைப் படத்தின் வெற்றி விழா கூட்டத்தில் . நீங்களும் உங்கள் மனசாட்சி என்று நீங்களே பல முறை ஒப்புக் கொண்டிருக்கும் முரசொலி மாறனும் கூறியது என்ன ?
" முரசொலி பத்திரிக்கை தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கியதாலும் , எங்கள் குடும்பம் தயாரித்த திரைப் படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்தாலும் , எங்கள் குடும்பமே கடனாளிக் குடும்பமானது ., வாங்கியக் கடனுக்கு வட்டி கட்ட முடியவில்லை , வீட்டில் இருக்கும் நகைகளை எல்லாம் விற்று வட்ட்டி கட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது .
குடும்பமே தற்கொலை செய்துக் கொள்ளலாம் என்கிற எண்ணம் கூட ஏற்பட்டது , இந்த நிலைமையை புரட்சி நடிகர் எம் ஜி ஆரிடம் சொன்னேன் , புரட்சி நடிகரும் , கலைச்செல்வி ஜெயலலிதா அவர்களும் இந்த " எங்கள் தங்கம் " படத்தை பணம் வாங்காமல் நடித்துக் கொடுத்தனர் . நடித்துக் கொடத்தது மட்டுமின்றி , இந்தப் படத்தை வெற்றிப் படமாக ஆக்கித் தந்தனர் . .
இந்தப் படத்தின் மூலம் வந்த லாபத்தால் , அடமானத்தில் இருந்த எங்கள் சொத்துக்களை மட்டுமின்றி , எங்களது மானத்தையும் மீட்டுத் தந்தவர்கள் , புரட்சி நடிகரும் , கலைச்செல்வியும் . அவர்களுக்கு எங்கள் குடும்பம் என்றென்றும் நன்றிக் கடன் பட்டுள்ளது . "
இப்படி முரசொலி மாறன் பேச ....
அடுத்து பேசினார் கருணாநிதி :
" மாறன் பேசும் பொழுது , புரட்சி நடிகர் மற்றும் கலைச்செல்வி ஆகியோர் செய்த உதவியை இங்கே குறிப்பிட்டார் . கொடுத்து கொடுத்துச் சிவந்தக் கரம் கரன் என்று சொல்வார்கள் . ஆனால் எங்கள் திராவிடக் கர்ணன் புரட்சி நடிகருக்கோ , கொடுத்து கொடுத்து மேனியே சிவந்து விட்டது . கொடுத்து கொடுத்து சிவந்த கரம் உள்ள புரட்சி நடிகர் வாழ்கின்ற காரணத்தினால் தான் . அவர் வாழும் மாவட்டத்திற்கு "செங்கை " மாவட்டம் என்று என பெயர் வந்தது .
நன்றி மறப்பது நன்றன்று என்று வள்ளுவனின் வாக்கிற்கேற்ப . மாறனின் நன்றியுணர்ச்சியை நானும் வழிமொழிகிறேன் "
இந்த நிகழ்வு 17/01/1971 முரசொலியில் தலைப்புச் செய்தியாக வெளியானது
http://i57.tinypic.com/34ds8lk.jpg
http://i58.tinypic.com/2db9cwl.jpg
http://i59.tinypic.com/fcog9g.jpg
மக்கள் திலகத்தின் ஒரே காவியம் சென்னை மாநகரின் பல்வேறு திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வரலாற்று சாதனை படைத்தது ஒரு புறம் என்றால் ஒரே வருடத்தில் பல்வேறு திரையரங்குகளில் பொன்மனச்செம்மலின் பல்வேறு காவியங்கள் திரையிடப்பட்டு இன்னொரு கின்னஸ் சாதனை படைத்தது மறு புறம்.
உலகத்தில், வேறு எந்த நடிகரின் படங்களும் இது போன்ற வரலாற்று சாதனகளை நிகழ்த்தியிருக்குமா ?
இப்பொழுது புரிந்திருக்கும் சாதனைகளின் சிகரம் யாரென்று ?
http://i59.tinypic.com/24bjiuv.jpg
குறிப்பு : ஒவ்வொரு வருடமும், நம் மக்கள் திலகத்தின் மகத்தான காவியங்கள், திரையரங்குகளை முற்றுகையிட்டு ஆக்கிரமித்த சாதனைகள் தொடர்ந்து பதிவிடப்படும்.
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர்.புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
http://i1170.photobucket.com/albums/...ps9cc7a5cf.jpg
கோதை ஜெயராமன், மீஞ்சூர்.
காமராஜரின் மதிய உணவுத் திட்டம், எம்.ஜி.ஆரின் சத்துணவுத் திட்டம், ஜெயலலிதாவின் அம்மா உணவகம்... இதில் பொதுமக்களை அதிகம் கவர்ந்த திட்டமாக எதனைச் சொல்லலாம்?
முதல் இரண்டும் பள்ளி மாணவ, மாணவியருக்கும், மூன்றாவது திட்டம் பொதுமக்களுக்கும் உதவி வருகிறது. மூன்று திட்டங்களுமே பொதுமக்களைக் கவரும் திட்டங்கள்தான்!
சத்துணவுத் திட்டத்திலும் அம்மா உணவகத்திலும் சுகாதாரமும் தரமும் பேணப்படுமானால், அதனுடைய பயன்பாடும் ஈர்ப்பும் இன்னும் அதிகமாகும்!
புரட்சித் தலைவரின் " சத்துணவு திட்டம் " எந்த ஒரு எதிர்பார்ப்பினையும் நம்பி தொடங்கப்பட்டது அல்ல.! மாணவ - மனைவியர் மற்றும் குழந்தைகள் நலனையும், சமுதாயத்தில் பின் தங்கிய மாணவர்கள் ஆவலுடன் பள்ளியில் சேர்ந்து நற் கல்வி பயில வேண்டும் என்ற பிரதான நோக்கத்தையும் கொண்டு, தொடங்கப்பட்டது.
பயன் பெறும் மாணவ - மாணவியர், வாக்காளர்கள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர்.புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
During 1987-89 [?] some more cinema halls screened Thalaivar Movies :
Padmam - Sirithu Vazha Vendum , Padagotti,
Sangam - Enga Veetu Pillai, Nam Naadu, Ninaithadhai Mudippavan
Ega - Idhayakkani,
Anu Ega - Rikshawkaran
Palaniappa - almost every week, including ( Admaipenn - 4 shows)
Further during Vaikunda Ekadasi [ mid-night show], it is a knows fact whose films were screened maximum. I remember seeing in the 1970's and 1980's some of the movies are- Arasakattalai @ Ega, Mannathi Mannan @ Abirami, Rikshawkaran @ Deviparadise, Ulagam Sutrum Valiban @ Alankar.
இந்த சம்பவம் 1972 ல் தலைவர் கட்சி ஆரம்பித்தவுடன் 1974 ல் அமெரிக்க பல்கலைக்கழங்கள் அழைப்பின் பேரில் சென்ற பொழுது நடைபெற்றது . தன் முன்னே சென்ற கார் விபத்தில் சிக்கியவுடன் தலைவர் தன் காரை நிறுத்தி உதவி செய்தபொழுது, உடன் இருந்தவர்கள் உடனே ஆம்புலன்ஸ் வந்துவிடும் நாம் கிளம்பலாம் என்றுதான் சொல்லி இருக்கின்றார்கள் .சொன்னதுபோல் காவல்துறையும் ஆம்புலன்ஸ்ம் வந்துள்ளது , ஆனால் மற்றவர்கள் விபத்தை ஒரு பொருட்டாக கருதாமல் சென்றதுதான் வேதனை நம் தலைவருக்கு . தவிர இந்த செய்தி திரு.m.s.உதயமூர்த்தி அவர்களின் " அமெரிக்காவில் அண்ணாவும் எம்ஜிஆரும் " என்ற புத்தகத்தில் படித்தது .
எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து மந்திர சக்தி இன்று உலகமெங்கும் உள்ள அவருடைய ரசிகர்களை
ஒன்று சேர்த்து இருப்பது மிகவும் பெருமைக்குரிய சாதனை. மொழி , இனம் , மதம் என்ற எல்லைகளை தாண்டி ''எம்ஜிஆர் '' என்ற தனி மனிதரின் புகழ் பாடும் மனித நேய மக்கள்
என்பதை காண முடிகிறது .
http://i61.tinypic.com/8wktjn.jpg
மக்கள் திலகம் எம்ஜிஆர் வாழ்ந்த காலத்தில் எல்லோரின் அன்பை பெற்றார் .புதிய தலை முறை
ரசிகர்களும் இன்று எம்ஜிஆரின் மாண்புகளை தெரிந்து கொண்டு அவரை புகழ்ந்து பாராட்டுகிறார்கள் .