Picture Collages
http://i1065.photobucket.com/albums/...psodrvjwh8.jpg
Printable View
Picture Collages
http://i1065.photobucket.com/albums/...psodrvjwh8.jpg
சமீபத்தில் பாவமன்னிப்பு திரைப்படம் பார்த்தேன். படம் பார்க்கும் போது எனக்கு பழைய ஞாபகம் நினைவுக்கு வந்தது அப்பொழுது உறுதிமொழி படபிடிப்பு தேக்கடியில் நடைபெற்றது. மதுரையில் மாவட்ட பிரபு ரசிகர் மன்ற பொருளாளர் அழகர் அவர்களின் திருமணத்திற்கு வந்திருந்த இளையதிலகம் பிரபு அவர்கள் என்னையும், ரமேஷ்பாபு அவர்களையும் தேக்கடி வரும்படி சொன்னார். இருவரும் இரண்டு நாள் கழித்து தேக்கடி சென்றோம்.
அண்ணன் பிரபு அவர்களை சந்தித்து பேசிக்கொண்டிருந்தோம். அண்ணனுடைய ஷாட் வரவும் அவர் ஏரியின் நடுவில் படகுக்குள் படபிடிப்பு நடந்ததால் அருகில் இருந்த சிவகுமார் அவர்களிடம் பேசிக்கொண்டிருங்கள் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார். நங்கள் சிவகுமார் அவர்களிடம் எங்களை நாங்கள் சிவாஜி மற்றும் பிரபு அவர்களின் ரசிகர்கள் என்று அறிமுகம் செய்து கொண்டோம்.
உடனே அவருடைய முகத்தில் ஒரு பிரகாசம் காரணம் அவரே சொன்னார் நல்லவேளை நீங்கள் சிவாஜி ரசிகர், நான் சிவாஜி வெறியர் என்னை விட சிவாஜி வெறியர் யாரும் இருக்கமாட்டார்கள் என்று. நாங்கள் சிவாஜி அவர்கள் நடித்த படங்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த படம் எது என்று கேட்டோம். அவர் சொன்னார் சிவாஜி படங்களில் ஒரு படம் தேர்ந்தெடுக்க சொன்னால் எப்படி முடுயும் பாசமலரை சொன்னால் பாகபிரிவினை வந்து நிற்கும் படிக்காதமேதையை சொன்னால் பார் மகளே பார் வந்து நிற்கும் என்று சொல்லிக்கொண்டே போனாரே அன்றி ஒரு படத்தை மட்டும் அவரால் சொல்லமுடியவில்லை.
அப்பொழுது நாங்கள் கேட்டோம் நீங்கள் கருப்பு வெள்ளை படங்களையே சொல்லுகின்றீர்களே வசந்த மளிகை, சிவகாமியின் செல்வன், தீபம் போன்ற கலர் படங்கள் வரிசையில் ஏதும் சொல்லவில்லையே என்றோம், உடனே, அவருக்கே உண்டான ஸ்டைலில் அட போங்கப்பா... என்னால் 60க்குள் வந்த படங்களை விட்டே வரமுடியவில்லை என்றார். அப்பொழுது நடிப்பு என்றால் என்னவென்று தெரியுமா என்று கேட்டார். நாங்கள் இருவரும் நன்றாக தெரியும் என்று சொன்னோம். உடனே அவர் எங்களை திருப்பி உங்களுக்கு சிவாஜியின் எந்த நடிப்பு பிடிக்கும் என்று கேள்வி கேட்டார்,
நாங்கள் சிவாஜி அவர்கள் சிரித்துகொண்டே அழுவார் அந்த நடிப்பு பிடிக்கும் என்றோம்.
அவர் எங்களை கோயம்பதூர்காரர்களுக்கே சொந்தமான நையாண்டி பார்வையால் எங்களை பார்த்தார். பார்த்துவிட்டு அவரே தொடர்ந்தார் தம்பி நடிப்பு என்றால் என்ன என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக பாவமன்னிப்பு படத்தில் ஒரு காட்சியை சொல்லுகிறேன். அந்த படத்தில் தனது தந்தை ராதா அவர்கள் தாய் ராஜம்மா அவர்கள் என்பதை தெரிந்து கொள்வார். தனது தாயிடம் பேசும்போது கண்களில் தண்ணீர் தெப்பம் போல் தேங்கி நிற்கும் ஆனால் ஒரு துளி கண்ணீர் கூட வெளியே வராது. அந்த கண்ணீரே சிவாஜி அவர்கள் சொன்னால் தான் வெளிவரும். உலகத்தில் கண்ணீரையும் தன நடிப்பால் கட்டிபோட கூடிய ஒரு நடிகர் இருக்கிறார் என்றால் அது சிவாஜி ஒருவரை தவிர வேறு யர்ரும் கிடையாது என்று ஒரே போடு போட்டார் . இப்பொழுது பாவமன்னிப்பு படம் பார்த்தபோது சிவகுமார் அவர்கள் சொன்னது நினைவுக்கு வந்தது நண்பர்களே நீங்களும் பார்த்து மகிழ விரைவில் தமிழகமெங்கும்
https://fbcdn-sphotos-g-a.akamaihd.n...dd61fa1e80749d
https://scontent-sin.xx.fbcdn.net/hp...0e&oe=55A6D858
https://fbcdn-sphotos-b-a.akamaihd.n...1044fe5f32c259
https://fbcdn-sphotos-h-a.akamaihd.n...dd899a4201a739
https://fbcdn-sphotos-c-a.akamaihd.n...a44d32054b53bd
https://scontent-sin.xx.fbcdn.net/hp...bf&oe=55B01B1A
https://scontent-sin.xx.fbcdn.net/hp...b6&oe=55E49B1B
https://fbcdn-sphotos-b-a.akamaihd.n...162ccb8cc0389c
https://scontent-sin.xx.fbcdn.net/hp...43&oe=55B4EC27
உயிருள்ளவரை உத்தமன் சிவாஜி புகழ் காப்போம்.
புதியபார்வை இதழில் வெளிவந்த கட்டுரை
http://i1065.photobucket.com/albums/...psrnsydqdu.jpg
நண்பர்களே,
மாற்றுதிரி நண்பர்களாவது என் பதிவை படிக்கிறார்கள் ஆனால் அறையும் குறையுமாக. ஜெயகாந்தன் பல கட்சிகள் மாறினார் என்ற பதிவுக்கு போட்ட பதில். யாருமே ஒரே கட்சியில் ,ஒரே கொள்கையில் இருந்ததில்லை என்று அவர்களுக்கு தெரிந்த ஒரே உதாரணம் கொண்டு விளக்கினேன் அவ்வளவே.
நான் காங்கிரஸ் என்று எப்போது சொன்னேன்? எனக்கு பெரியார் பெண்ணுரிமை, சுயமரியாதை கருத்துக்கள் பிடிக்கும். காமராஜரின் நல்லெண்ண ஆட்சி பிடிக்கும்.அண்ணாவின் தலைமை குணம் பிடிக்கும்.ராஜாஜியின் தீர்க்க தரிசனம் பிடிக்கும்.கலைஞரின் போர்குணம் ,அனுபவ ஆற்றல்,எழுத்து திறன் பிடிக்கும்.இவையெல்லாம் மீறி உலகத்திலே ஒருவன் என உயர்ந்து நிற்கும் நடிப்பின் தெய்வத்தை மிக மிக மிக மிக மிக பிடிக்கும்.
கட்சி என்று எதுவுமே ரொம்ப பிடித்ததில்லை.சிவாஜிக்காக மாணவ பருவத்தில் இரண்டாண்டு காங்கிரஸ் .சில கம்யூனிஸ்ட் தலைவர்களின் அர்பணிப்பு சில காலம் இடது சாரியாக்கியது. ஓரிரு ஆண்டுகள் வீ.பீ.சிங் ஈர்த்தார். நரசிம்ம ராவ், வாஜ்பாய் கொஞ்சம் பிடிக்கும்.
உலக அளவில் என்னை ஈர்த்த நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள்.
1)கலீபா உமர்.
2)ஷேர் ஷா
3)அக்பர்.
4)ஹிட்லர் (முதல் பத்தாண்டு)
5)ஜார்ஜ் வாஷிங்டன்.
6)களப்பிரர் ஆட்சி(நில சீர்திருத்தம்).
7)மாசே துங்.
8)லீ க்வான் யூ
9)சுகார்த்தோ
10)சீசர்.
Gopal,
Let us concentrate on NT.
Regards
Murali
எந்த காலத்திற்கும் நேரத்திற்கும் ஏற்ற சிறந்த பாடல் !
பாடலுக்கு முன் வரும் வசனம் - வில்லன் நம்பியாருக்கு நடிகர் திலகம் கொடுக்கும் பதில் பிரமாதம் !
https://www.youtube.com/watch?v=RABmwdzsOYw
நாம் இருவருமே நடித்தோம்....பாவம் நீங்கள்.......!
https://www.youtube.com/watch?v=hu8matpsKk8
NAAN VAAZHA VAIPPEN - Nadigar Thilagam Film CELEBRATIONS !! - DISTRIBUTOR's INTERVIEW, PUBLIC VIEWS, FANS VIEW, THEATER OWNER COMMENTS and more..........Trailer courtesy : Neyveli Vasudevan sir
https://www.youtube.com/watch?v=KPGALWi4WeI
நடிகர் திலகத்தின் படங்களால் ஆன பிக்சர் கொலாஜ்
http://i1065.photobucket.com/albums/...psjxzpb93s.jpg
http://i1065.photobucket.com/albums/...psqpha4eyf.jpg
http://i1065.photobucket.com/albums/...ps2bvcqpc0.jpg
சகோதரர் செல்வகுமார் அவர்களுக்கு,
கோபாலின் ஒரு பதிவிற்கு எதிர்வினையாக இங்கே ஒரு பதிலும் எம்ஜிஆர் திரியில் ஒரு பதிலும் நீங்கள் பதிவிட்டிருப்பதைப் பார்த்தேன். அதன் தொடர்பாக என்னுள் எழுந்த ஒரு சில கேள்விகளை உங்கள் முன் வைக்க விரும்புகிறேன்.
தனி நபர் விமர்சனமும் தரக்குறைவான விமர்சனமும் நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டியவை என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதே நேரத்தில் விமர்சனமே செய்யக்கூடாது என்பது போன்ற கருத்துக்களை முன் வைப்பது சரியான ஒன்றல்லவே. எந்த நபரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் இல்லை என்பதுதானே ஜனநாயகத்தின் ஆணிவேர்! அதில் விதிவிலக்குகள் யாருமில்லை என்பதைத்தானே இன்றைய தினம் காந்திஜி மற்றும் நேருவின் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் காட்டுகிறது! அப்படியிருக்க எம்ஜிஆர் அவர்கள் மட்டும் விமர்சனத்திற்கு அப்பாற்ப்பட்டவர் என்ற உங்கள் நிலைப்பாடு ஏற்றுக் கொள்ளத்தக்கதாக அமையவில்லை என்பதை சொல்ல வேண்டும்.
ஒரு திரைப்பட கலைஞர் என்ற முறையில் அவரை விமர்சிக்க வேண்டாம் என்று சொன்னால்கூட என்னால் அதை ஒத்துக் கொள்ள முடியும். காரணம் திரைப்படங்களைப் பொறுத்தவரை நமக்கு பிடிக்கவில்லையென்றால் அதை பார்க்காமல் இருந்து விடலாம். ஆனால் ஒரு மாநிலத்தின் தலைமை பொறுப்பில் இருந்தவரை அவருக்கு வாக்களித்திருந்தாலும் இல்லாவிட்டாலும் அனைவருக்கும் அவரே முதல்வர் எனும்போது அந்த பொறுப்பில் இருந்த நேரத்தில் அவர் எடுத்த முடிவுகள் அது ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் பொருந்தும் எனும்போது அதை விமர்சனம் செய்யக்கூடாது என்று எப்படி சொல்ல முடியும்?
அப்படி ஒரு விமர்சனம் முன்வைக்கப்படும்போது அதில் தவறான தகவல்கள் இருந்தாலோ இல்லை சொல்லப்படுபவையில் மாற்றுக் கருத்து இருந்தாலோ நீங்கள் அதற்கு தாராளமாக மறுப்பு தெரிவிக்கலாம். உங்கள் கருத்தை பதிவு செய்யலாம். அதுதானே சரியான முறை! அதை விடுத்து விமர்சனமே கூடாது என்று சொல்ல மாட்டீர்கள் என நம்புகிறேன். இதை நான் உங்களிடமும் நண்பர் கலைவேந்தன் அவர்களிடமும் மட்டுமே குறிப்பிடுகிறேன். ஏன் என்றால் கலைவேந்தன் அவர்களும் எம்ஜிஆர் பற்றி ஏதாவது விமர்சனம் வந்தால் உடனே எதிர்வினையாற்றி விடுவார்.
இவ்வளவு விளக்கமாக நான் எழுதுவதால் உடனே இங்கே விமர்சனம் செய்யப் போகிறோம் என்று அர்த்தமில்லை. அரசியல் பற்றிய விவாதங்களுக்கு நமது மய்யம் இணையதளத்திலே Current Affairs என்ற section இருப்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.
என்னுள் எழுந்த மற்றொரு கேள்வி. எம்ஜிஆர் பற்றி எதாவது சொன்னால் கோவப்படும் நீங்கள், நீங்கள் பங்கு பெறும் எம்ஜிஆர் திரியில் திமுக தலைவர் திரு கருணாநிதியை மிக மோசமாக விமர்சித்து வரும் பதிவுகளை, அவரை ஒருமையில் விளித்து பிற சமூக வலைதளங்களில் மற்றும் அதிமுக பத்திரிக்கையில் எழுதப்படும் கட்டுரைகள் மற்றும் கார்டூன்களை இங்கே பதிவேற்றம் செய்யப்படுவதை ஏற்றுக் கொள்கிறீர்களா? அதை நீங்கள் கண்டித்த மாதிரி தெரியவில்லையே? நான் கருணாநிதி ஆதரவாளன் அல்ல. இன்னும் சொல்லப் போனால் அனைத்து திராவிட இயக்கங்களுக்கும் எதிரான கருத்து உடையவன்தான் என்பது இங்கே தொடர்ந்து வாசிப்பவர்கள் அனைவருக்கும் தெரியும். ஆனாலும் ஏன் இதை குறிப்பிடுகிறேன் என்றால் ஒருவருக்கு ஒரு நியாயம் மற்றவருக்கு வேறு நியாயம் என்று இருக்க முடியாதல்லவா?
இதை குறிப்பிடும்போது நீங்கள் நேற்று எழுதிய மற்றொரு பதிவு பற்றியும் சொல்ல விரும்புகிறேன். நேற்றைய தினம் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தின் போஸ்டரை போட்டு கோபால் எழுதியதற்கும் முடிச்சு போட்டு பதிவு செய்திருக்கிறீர்கள்
இன்றைக்கு இந்த திரியில் பதிவு செய்பவர்கள் எவரும் காங்கிரஸ் அனுதாபிகள் இல்லை. கோபால் ஆர்கேஎஸ் போன்றவர்கள் எந்தக் காலத்திலும் காங்கிரஸ் ஆதரவாளர்கள் இல்லை. காங்கிரஸ் பற்றி அவ்வப்போது எழுதும் நானும் 1975 அக்டோபர் 2 -ற்கு பிறகு இயங்கிய காங்கிரஸ் கட்சியை ஆதரித்தவன் இல்லை. ராகவேந்தர் சார் போன்றவர்களும் அன்னை இந்திராவின் காலத்திற்குப் பிறகு இயங்கிய காங்கிரஸ்-ஐ ஆதரித்தவர் இல்லை. உண்மை நிலை இப்படியிருக்க இதையெல்லாம் நன்கு தெரிந்த உங்களைப் போன்றவர்களே ஏதோ கோவத்தில் இன்றைய காங்கிரஸ்-ன் நிலையை மேற்கோள் காட்டி இங்கே இருப்பவர்கள் அனைவரும் காங்கிரஸ் அனுதாபிகள் என்ற கருத்து வரும் வகையில் எழுதுவதை தவிர்க்கலாமே!
நான் எழுதிய அனைத்து விஷயங்களையுமே நீங்கள் சரியான முறையில் புரிந்துக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில்
அன்புடன்
கலைஞர் குழுமத்தின் முரசு தொலைகாட்சியில் நடிகர் திலகம் இரண்டு வேடங்களில் நடித்து வெளிவந்து வெள்ளிவிழா கொண்டாடிய இமாலய வெற்றி சித்திரம் சந்திப்பு தற்போது ஒளிபரப்பாகிகொண்டிருக்கிறது.
http://i501.photobucket.com/albums/e...psxbjw8xtq.jpg
சந்திப்பு திரைப்படத்தை பற்றி கூறுகையில் ஒரு விஷயத்தை இங்கு பகிர்ந்துகொள்ள நினைக்கிறன். சந்திப்பு வெளியான நேரத்தில் ஒரு சிலர் சிவாஜிக்கு ஜோடி ஸ்ரீதேவியா ...அவர் மகள் வயது ..எதற்கு ஸ்ரீதேவியுடன் ஜோடி எல்லாம் என்று கிண்டல் செய்தனர்.
அதாவது...நடிகர் திலகத்திற்கு மட்டுமே சட்ட திட்டங்களை எப்போதும் போதிக்கும் கூட்டம் எல்லா காலத்திலும் உள்ளனர்.
இவர்கள் இதர நடிகர்கள் தொங்குவதற்கு ஒரு இடம் கூட பாக்கியில்லாமல் அத்தனை இடங்களிலும் அதுவும் ஒரு ரப்பர் பேண்ட் வைத்து சதை தொங்குவதை கட்டிவிடலாம்..அந்தளவிற்கு சதை தொங்கிய நடிகர்கள் கொள்ளுபேத்திகளுடன் ஜோடி போட்டு நடித்ததையும் பார்த்தவர்கள். ஆனால் அதை பற்றி மட்டும் எந்த விமர்சனமும் கூறமாட்டார்கள் !
முடிந்தால் வர்ணிப்பார்களே அல்லாமல் எந்த மாற்று விமர்சனம் கூற கூறமாட்டார்கள் மற்ற நடிகர்களை பொருத்தவரை. ஆனால் நடிகர் திலகம் ஸ்ரீதேவியுடன் நடித்தவுடன்..உடனே....ஞ்யாய தர்மம் பற்றி வாய் கிழிய பேசினார்கள்.
ஆனால் நடந்தேறியது மற்றொன்று...சந்திப்பு திரையிட்ட இடம் அனைத்தும் திருவிழா கோலம் கண்டு பிரம்மாண்ட வசூல் சாதனை புரிந்து வெள்ளிவிழா கொண்டாடியது !
இறக்கும் வரை ஒரு நடிகருக்கு மார்க்கெட் இருப்பது வினோதம். அப்படி ஒரு சிலரே இருந்தனர். அவர்களில் நடிகர் திலகம் முதன்மையானவர் என்றால் மிகையாகாது. உடல் நலம் சரி இல்லை என்றாலும் சரி...உடல் நிலை தெரிய நிலையிலும் சரி...நடிகர் திலகம் அவர்கள் இல்லத்து வாயிலில் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் கூட்டம் மொய்த்தபடி இருந்தார்கள் !
உடல் நிலை கருத்தில் கொண்டு அவராக நடிப்பதை வெகுவாக குறைத்துகொண்டார். திரை உலகின் பீஷ்மர் அல்லவா ....ஆகையால்தான் அவரது விருப்பம் போல திரை வாழ்க்கை அமைந்தது..!
கலைவாணியின் பிறப்பல்லவா...சொல்வாக்கும் செல்வாக்கும் இல்லாமலா இருக்கும் !
RKS
WATCH FROM 13:00 mins
https://www.youtube.com/watch?v=X97v...ature=youtu.be
WATCH from 00:35.......See how the Calm Face Changes to Red one - Heights of Anger
https://www.youtube.com/watch?v=aGo6fJM3WgY
திரு. முரளி சீனிவாஸ் அவர்களுக்கு :
திரு. கோபால் அவர்களின் ஒரு பதிவிற்கு நான் அளித்த 2 வேறு பதில்கள் குறித்து தங்களுக்குள் எந்த வித கேள்விகளும் எழுவதற்கு நியாயமில்லை.
அப்படியே அது குறித்து வினாக்கள் தோன்றினாலும், அதற்காக திரு. கோபால் அவர்களிடம்தான் விளக்கம் கேட்டிருக்க வேண்டும். ஏனென்றால், ஜெயகாந்தன் மறைவுக்கான இரங்கற் செய்தியில் சம்பந்தமே இல்லாமல் எங்கள் மக்கள் திலகத்தை பற்றி அவதூறாக விமர்சித்து இந்த சர்ச்சையை துவக்கி வைத்தவரே அவர்தான்.
பெருந்தலைவர் காமராஜர் அவர்களை “ஞானசூனியம்” என்றும், பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களை ‘பெண் பித்தன்’ என்றும், 1972க்கு பின் வெளியான படங்களில் தங்களின் அபிமான நடிகர் மறைதிரு. சிவாஜி கணேசன் அவர்களின் நடிப்பினை ரசிக்க முடியவில்லை என்றும், ஒரு தேர்தல் தோல்விக்காக கடையை (கட்சியை) மூடிக்கொண்டு சென்ற மறைதிரு. சிவாஜி கணேசன் அவர்களை ஆபிரகாம் லிங்கன் ரேஞ்சுக்கு பேசுவதா என்றும் நடிகர் திலகம் திரியில் தங்களின் மகத்தான பங்களிப்புகளையும், அவ்வப்போது மக்கள் திலகம் திரியில் வந்து பங்களித்து நற்கருத்துக்களை கூறி வரும் சகோதர அன்பர்கள் திருவாளர்கள் ராகவேந்திரா, ரவிகிரண் சூரியா, ஹைதராபாத் ரவி, சிவாஜி செந்தில் உள்ளிட்ட சிலரை சகட்டு மேனிக்கு, தரக்குறைவாக வசை பாடிய திரு. கோபால் அவர்களை, அந்த சமயத்தில் கண்டிக்காமல், தற்போது தாங்கள் வக்காலத்து வாங்கியிருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.
மகன் செத்தாலும் கவலை யில்லை, மருமகள் தாலி அறுக்க வேண்டும் என்ற ரீதியில். அதாவது நடிகர் திரு. சிவாஜி கணேசன் அவர்களை கேவலமாக விமர்சித்தாலும் பரவாயில்லை, எவருடனும் ஒப்பிட முடியாத எட்டாத உயரத்துக்கு சென்று விட்ட எட்டாவது அதிசயம் எங்கள் எட்டாவது வள்ளல் மக்கள் திலகத்தின் அழியாப் புகழை தாங்கி கொள்ள முடியாத எரிச்சல்தான் மேலோங்கி நிற்கிறது என்றுதான் நினைக்க தோன்றுகிறது. இல்லையென்றால் திரு. கோபால் அவர்கள் தேவையில்லாமல் எங்கள் புரட்சித்தலைவரை வம்புக்கிழுத்தமைக்காக இப்படி வரிந்து கட்டிக் கொண்டு வருவது ஏன் ?
சரி எதோ எழுதி விட்டீர்கள். இனி விஷயத்துக்கு வருவோம் :
விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் எவருமில்லை என்ற உண்மை எனக்கும் நன்கு புலப்பட்டிருந்தாலும், கிறுக்குத்தனமாக மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவதை எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. அதை ஜீரணித்துக் கொண்டிருக்கவும் முடியாது. வேடிக்கையும் பார்த்து கொண்டிருக்க முடியாது.
ஒரு திரைப்படகலைஞர் என்ற முறையில் அவரை விமர்சிக்க வேண்டாம் என்று சொன்னால் கூட தங்களால் ஏற்றுக் கொள்ள முடியும் என்று கூறியதற்கு நன்றி ! தங்களின் கருத்துப்படியே நானும் வருகிறேன். திருடாதே பாப்பா திருடாதே, தூங்காதே தம்பி தூங்காதே, ஏமாற்றாதே ஏமாற்றாதே என்று பாடியதும் திரைப்படங்களில் தானே ! அதை ஏன் அரசியலுடன் ஒப்பிட்டார் என்று முதலில் சகோதரர் திரு. கோபால் அவர்களை தாங்கள் கேட்டிருக்கலாமே.
அரசியல் பற்றிய விவாதங்களுக்கென்று CURRENT AFFAIRS என்கின்ற தனியான Section ஒன்று இருப்பதை நான் அறியாமல் இல்லை. ஆனால் அந்த பகுதியில், திரு. கோபால் அவர்கள் தனது விமர்சனத்தை முன் வைத்திருக்கலாம் அல்லவா ? அதனை ஏன் சுட்டிக் காட்ட வில்லை. அவருக்கு, தாங்கள் அறிவுரை வழங்க தவறி விட்டீர்கள் என்றுதான் நான் கூறுவேன்.
அரசியலில், எங்கள் பொன்மனசெம்மலின் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு நாங்கள் ஆதார பூர்வமான தகவல்களை அவ்வப்போது முன்வைத்து, மறுப்பு தெரிவித்து, அதனை தவிடு பொடியாக்கி வருவதும் தாங்கள் அறிந்ததே !
சகோதரர் கலைவேந்தன் அவர்க;ள் மட்டுமல்ல, மக்கள் திலகத்தின் அனைத்து பக்தர்களும், ரசிகர்களும், விமர்சனங்களுக்கு எதிர் வினையாற்றி வருபவர்களே ! எங்கள் எழில் வேந்தன் எம். ஜி. ஆர். அவர்கள், அவரைப்பற்றிய எதிர்மறையான விமர்சனங்களுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில்தான் எங்களை பெருமையுடன் உயர் நிலையில் வைத்துள்ளார். இதனை உறுதிப்படுத்தும் விதமாகத்தான், மக்கள், இனி எவராலும் தர முடியாத பொற்கால ஆட்சி வழங்கிய எங்கள் புரட்சித்தலைவர் மீது அபரிதமான நம்பிக்கை வைத்து, அவர் இறக்கும் வரை அவர்தான் முதலவர் என்று தீர்மானித்து வாக்களித்து மகிழ்ந்தனர். மேலும், எங்கள் பாரத ரத்னா டாக்டர் எம். ஜி. ஆர். அவர்கள் தனது சொந்த பலத்திலும், மக்களின் மகத்தான தொடர் ஆதரவினாலும் தான் ஆட்சியை பிடித்தாரே யன்றி, எதிரிகளின் பலவீனத்தால் அல்ல என்பதையும் தங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.
என்னைப் பொருத்தவரை, தமிழ் திரையுலகின் நிரந்தர வசூல் சக்கரவர்த்தி எம். ஜி. ஆர். அவர்களை வம்புக்கிழுத்தால் நான் பதிலடி கொடுத்துக்கொண்டேதான் இருப்பேன் என்பதையும் தாங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன்.
மக்கள் திலகம் திரியில், திரு. கருணாநிதி அவர்களை விமர்சனம் செய்து பதிவுகள் இடப்படுவதை தாங்கள் விரும்ப வில்லையாயின் அதற்கு தக்க ஆதாரத்துடன் பதிலை அளித்து விட்டு செல்லுங்களேன். நாங்கள் வேண்டாம் என்றா சொல்கிறோம். நாங்களும் எங்கள் புரட்சித்தலைவர் உயிருடன் இருந்தவரை அவர் தோற்றுவித்த பேரியக்கத்தை தீவிரமாக ஆதரித்தவர்கள் தான். தற்போது, எந்த ஒரு கட்சியையும் சர்ந்துள்ளவர்கள் அல்ல என்பதையும் இத்தருணத்தில் குறிப்பிட விறிம்புகிறேன்.
அது போன்று, காங்கிரஸ் கட்சியை கடந்த காலத்தில் ஆதரித்து வந்ததும், இனி ஆதரிப்பதோ அல்லது ஆதரிக்காமல் இருப்பதோ தங்களின் தனிப்பட்ட விருப்பம்.
தற்காலத்தில், தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றங்கள் நடுநிலை தவறும் பட்சத்தில், இந்த திரியும் நடுநிலையிலிருந்து விலகிச் செல்கின்றதோ என்று ஐயம் கொள்ள நேரிடுகிறது.
https://fbcdn-sphotos-d-a.akamaihd.n...c6fc816db99587
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்,
https://scontent-sin.xx.fbcdn.net/hp...ca&oe=55A767B9
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்,
https://fbcdn-sphotos-e-a.akamaihd.n...0c9e0dd75e88b5
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்,
https://fbcdn-sphotos-g-a.akamaihd.n...677478fe358a45
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்,
அவன் ஒரு சரித்திரம் 001:
பிறந்தது முதலே தான் ஒரு அநாதை என்று நம்பி வரும் ஒரு இளைஞனுக்கு தனக்கும் தாய் தந்தையர் இருக்கிறார்கள் என்பது தெரிந்ததும் என்ன உணர்ச்சிகள் தோன்றும்? அதிலும் தனது குடும்பத்தாரைக் கண்டவுடன் மனதில் பொங்கி வரும் உணர்ச்சி வெள்ளத்தை நடிகர் திலகம் வெளிப்படுத்தும் விதம் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது. அதிலும் தனது தம்பியைக் கண்டவுடன் பாசத்துடன் அவனை நெருங்க அவன் இவரை தாக்கியது குறித்து அவர் கூறும் வரிகள் அற்புதம். பிறந்தது முதலே தான் ஒரு அநாதை என்று நம்பி வரும் ஒரு இளைஞனுக்கு தனக்கும் தாய் தந்தையர் இருக்கிறார்கள் என்பது தெரிந்ததும் என்ன உணர்ச்சிகள் தோன்றும்? அதிலும் தனது குடும்பத்தாரைக் கண்டவுடன் மனதில் பொங்கி வரும் உணர்ச்சி வெள்ளத்தை நடிகர் திலகம் வெளிப்படுத்தும் விதம் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது. அதிலும் தனது தம்பியைக் கண்டவுடன் பாசத்துடன் அவனை நெருங்க அவன் இவரை தாக்கியது குறித்து அவர் கூறும் வரிகள் அற்புதம்.
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்,
அவன் ஒரு சரித்திரம் 002:
தங்கை மீது மட்டற்ற பாசத்தை வெளிப்படுத்தும் வேடம் என்றால் நடிகர் திலகத்தை மிஞ்ச வேறு எந்த நடிகரும் கிடையாது. அண்ணன் ஒரு கோயில், தங்கை, தங்கைக்காக போன்ற படங்களில் அவர் இத்தகைய வேடங்களை சிறப்பாக செய்திருந்தாலும் இவற்றிற்க்கெல்லாம் முத்தாய்ப்பு வைப்பது போல் அமைந்த படம் பாசமலர். சிறு வயது முதலே தங்கைக்கு தாயாகவும் தந்தையாகவும் இருந்து பாசத்துடன் வளர்த்து, தங்கையே தனது உலகம் என்று வாழ்ந்திருந்தவருக்கு, சூழ்நிலையின் காரணாமாக தங்கையை பார்க்க முடியாமல் போய்விடுகிறது. அப்போது இருவரும் ஒருவரை எண்ணி மற்றொருவர், அவர்கள் தன மீது தன மீது எவ்வளவு பாசத்துடன் இருந்தனர் என்பதை தனது குழந்தைகளிடம் கூறுமாறு அமைந்த பாடல். பார்ப்பவர்களின் கண்களில் நீரை வரவழைத்து விடும். அண்ணன் தங்கை பாசத்துக்கு இது வரை இந்தப் படத்தை மிஞ்ச வேறு படம் வரவே இல்லை என்பதே உண்மை.
https://fbcdn-sphotos-f-a.akamaihd.n...c39a36b759e249
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்,
அவன் ஒரு சரித்திரம் 003:
பிரஸ்டிஜ் பத்மநாபன் - எந்த நிலையிலும் ஒரு மனிதன் தனது கௌரவத்தை இழக்கக் கூடாது என்பதை கொள்கையாகக் கொண்டிருக்கும் ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த மனிதர். வேலையிலிருந்து ஒய்வு பெற்றதும் தனக்கு அந்த வீட்டில் மெல்ல மதிப்பு குறைவதை உணர்ந்து தனது ஒரே ஆறுதலான மனைவியிடம் மனம் வெதும்பி பாடும் பாடல். கவிஞரின்
"ஆலம் விழுதுகள் போல் உறவு ஆயிரம் இருந்துமென்ன,
வேரென நீயிருந்தாய், அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்"
என்ற வரிகளில் அவர் மனைவியின் மீது கொண்டிருக்கும் மட்டற்ற அன்பும், மற்ற சொந்தங்களின் நிலையும் நன்கு புலப்படுகிறது. 60தைக் கடந்த ஒவ்வொரு கணவனுக்கும் தனக்கு இது போல ஒரு மனைவி இல்லையே என்று ஏங்க வைக்கும் ஒரு பாடல்.
https://fbcdn-sphotos-e-a.akamaihd.n...fb53a6e825f730
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்,
இது ஒரு தன்னிலை விளக்கமே . முரளியின் பார்வையில்.
மிக நெருங்கிய நண்பர்கள் என்னிடம் கேட்கும் கேள்வி .உன்னை மாதிரி சிவாஜியை வாழ்வின் முக்கியமாய் ,தெய்வ ஸ்தானத்தில் கொண்டாடும் நபரையும் பார்த்ததில்லை, விமர்சிப்பவனையும் பார்த்ததில்லை என்று ஏன் இதை செய்கிறாய் என்று.இதை எதிர் அணியினர் மேற்கோள் பேச ஏதுவாகி விடுமே. பிடிக்கவில்லையென்றால் மூடி கொண்டு இரேன் என்று.என் விளக்கம்.
1)நாம் எப்போதுமே உன்னதம் என்று கொண்டாடி தொழும் ஒன்றின் நிலை தாழ்வில் சமநிலை குலைவோம். அதிர்ச்சி அடைவோம்.நம் கோபமும் பல மடங்கு உக்கிரம் பெறும் .இடித்து சொல்லும் உரிமை கொண்டாடுவோம்.
2)என்னை பொறுத்த வரை நடிப்பின் உன்னதம் ,கலையின் உன்னதம் சிவாஜியே. ஆனால் அவர் எந்த காரணங்களுக்காகவும் ,அந்நிலை பிறழ்ந்தால் ,அதனால் சமக்குலைவு அடைந்து மன உளைச்சல் அடைவது, அதை உக்கிரமாக வெளியிடுவது ஞாயமே. இதுதானே ஐய்யா உரிமை,ஈடுபாடு,பக்தி,உண்மையான காப்புணர்வு.
3)உலகிலேயே ஆண்மைக்கு,அழகிற்கு சிவாஜிக்கு நிகராய் இன்னொருவனை நான் கண்டதில்லை.அது கடவுள் அவருக்கு அளித்த முக்கிய வரம் .அதை போற்றி பாதுகாத்து ,இளமையை உடலை பேணி காக்க தவறியதால் , ஆஹா நாம் போற்றும் திராவிட மன்மதன் தன்னை பேணி ,போற்றி கொண்டிருக்கலாமே என்று ஆதங்கம் .
4)இந்த உணர்வு ,அவருக்கு எந்த விதத்திலும் சமமாகா மனிதர்களை பற்றி ,அவர்கள் எப்படி புகழ் அடைந்திருப்பினும் நமக்கு எழாது .எப்படி போனால் என்ன என்ற உதாசீனம் மட்டுமே மிஞ்சும்.(சிலசமயம் பரபரப்புக்காக உதவுலாம்)
5)மாற்றணியினர் மகிழ்ந்து என் எழுத்தை மேற்கோள் காட்டுவரே என ஒரு சிலர் வருந்துவார். விமர்சகர்களுக்கும், பஜனை கோஷ்டிக்கும் வித்யாசம் தெரியாத இவர்கள் தங்களுக்கு வசதியான பகுதிகளை மட்டுமே சம்பந்தமில்லாமல்,பொருட்படுத்தி மேற்கோள் காட்டுவதன் மூலம் ,என்னை மறைமுகமாக அங்கீகரித்து , நான் எழுதிய அனைத்தையுமே ஒப்பு கொள்கிறார்கள் என்ற ஒப்புதல் வாக்கு மூலமே ,நம் நோக்கத்தை நிறைவேற்றி விடுமே?
https://fbcdn-sphotos-c-a.akamaihd.n...9154bf67492d5e
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்,
https://scontent-sin.xx.fbcdn.net/hp...96&oe=5597E510
https://fbcdn-sphotos-h-a.akamaihd.n...0d36c37e6c832d
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்,
https://scontent-sin.xx.fbcdn.net/hp...4e&oe=559D9054
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்,