Vanakkam ji
Printable View
Vanakkam ji
பேசும் படம் வருஷத்தைப் பார்த்த்தீரா?:)
வணக்கம்ஜி! நேத்து கரெக்ட்டா நைட் ஷிப்ட் கிளம்பும் போது வணக்கம்.:) இன்னைக்கும் அப்படியே. ஜாலியா விளையாட முடியலயே. சரி! நாளைக்கு வச்சுக்குவோம்.
உங்க பாட்டையெல்லாம் நாளைக்கு நிதானமா உட்கார்ந்து பார்க்கப் போறேன். இன்னைக்கு பாதி நாள் முழுக்க டயத்தை 'வீட்டுக்கு ஒரு பிள்ளை' இழுத்துட்டார்.:)
அதானே பார்த்தேன்.. என்னடா சைலண்ட் தாங்க்ஸ் வருதேன்னு..உதாரணத்துக்கு ரகுவம்சம்லாம் காளிதாசன் உவமைலாம் எடுத்து விடலாம்னு நினைச்சேனா.. விட்டுட்டேன்..
நீங்கள்யார் தமிழ் த் திரைப்பாடல் கள் எனும் சமுத்திரத்தைக் கரைத்துக் குடித்தவர்.. ஞான் அதில் சற்றே லயித்து விழுந்தே ஊசலாடும் காய்ந்த இலையை சரி காய்ந்த குண்டு இலையைப் போன்றவன் :)
ஆமாங்க.. இப்பத் தான் பாக்கேன்..வாவ்..1948.. எப்படி ஓய் இப்படி எல்லாம் வச்சுருக்கீர்..
வணக்கம் ராஜேஷ் ஜி..
vijaya bharathi nnu actress irukkaangalaa enna
வாசு சார்
நைட் ஷிஃப்ட் முடிஞ்சு காலைலே வந்திருப்பீங்க...
ஹப்பிற்கு வந்தவுடனே உங்களுக்கு ஒரு ப்ளெஸண்ட் சர்ப்ரைஸ்...
அன்னை சொன்ன சொல் படத்தின் ஸ்டில்... இணையத்திலேயே முதன் முறையாக... அதுவும் உங்களுக்காக...
அங்கே ஒருத்தர் சுனாமி ஊர்லேந்து பறந்து வரப்போறார் பாருங்க...
http://i1146.photobucket.com/albums/...psqelep89m.jpg
ஆஹா... என்னா ஸ்டில்..
ஓடம் பொன்னோடம்
அது உன்னோடும் என்னோடும் ஓடும்
ஓடட்டும் ஓடமென்ன இனி என்வாழ்வு உன்னோடு ஓடும்..
என்ற பாட்டு நினைவுக்கு வருகிறது
பொன்வண்ண நிலவதுவும் பூமியதைப் பார்த்தே
..பூஞ்சிட்டுக் கண்சிமிட்டும் கண்டதுண்டு நீரே
எண்ணமெலாம் பொங்கிவர அழகுதனை ஏந்தி
..எழில்நிலவும் வான்பார்க்கக் கண்டதுண்டா நீவிர்
கன்னமதில் கவிதைகளைப் படித்ததனால் காளை
..கண்முடிச் சொக்கித்தான் நிற்கின்றான் அன்றோ
வண்ணமிலா படமுந்தான் இருந்தாலும் என்ன
..வாகாக உளமதைனைக் கிளர்த்திடுது அன்றோ..
ம்ம் கொ. வை. ரவி நற நற.. :) ( ரொம்ப நேரம் தூங்காதடா..இளமேனி தாங்காது :) )
நன்றி ராகவேந்திரா சார்..
..
Don't be content with the cover page of pesum padam ! :lol:
Here is a bhaktthi song from vedhaLa ulagam.
aadhi parasakthi......
http://www.youtube.com/watch?v=9eIY80SRMXI
வாசுஜி...
நான் இன்னமும் வீராணம் குழாய்க்கு உள்ளேதான் இருக்கேன். அதனாலே காரைத் தள்ள வர மாட்டேன்.
madhunna
malayalathai kalakkiya "Vijayasree"
aprom Vijayalakshmi-1 (friends pugazh)
vijayalakshmi -2(chennai 28)
விஜய ஸ்ரீ, விஷால் விஜயலட்சுமி சொல்லிட்டேனே..பட் ஃப்ரெண்ட்ஸ் விஜயலட்சுமி சொல்லலை.. நல்ல நடிகை.. சான்ஸ் தானில்லை..
1986-ல் 'ஒக ராதா இடரு கிருஷ்ணலு' என்று தெலுங்கில் ஒரு படம் வெளியானது. முழுக்க முழுக்க வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் காமெடி. ஹீரோ யார் தெரியுமா. கமல். ஜோடி நம் எல்லோருக்கும் பிரியமான ஸ்ரீதேவிதான். இந்த நேரடி தெலுங்குப்படம் கமல், ஸ்ரீதேவி நடித்திருந்ததால் தமிழில் துட்டு பார்க்காமல் விடுவார்களா? தமிழில் 'டப்' செய்து வெளியிட்டு சுமாராக ஓடியது.
இப்படத்திற்கு மிகப் பெரிய பலம் இளையராஜாவின் இசை. மனிதர் அசத்தியிருப்பார். அப்போதெல்லாம் இப்படத்தின் பாடல்கள் மீது மிக பற்றுதல் ஏற்பட்டு TDK 90 ஆடியோ கேசட்டில் ரெகார்டிங் சென்டரில் பதிவு செய்த ஞாபகம் மட்டுமல்லா...இன்று வரை அப்பாடலின் தரம் அந்த கேசட்டில் மெருகு குலையாமல் அப்படியே உள்ளது.
இளையராஜா வரும் வரை தெலுங்கு டப்பிங் பாடல்களை ஈசியாக கண்டுபிடித்து விடலாம். ராஜா வந்து அப்படி கண்டுபிடிக்க இயலாத அளவில் ஓரளவிற்கு அந்தக் குறையை சரி செய்தார். வார்த்தை ஜாலங்களும் அதற்கேற்றார் போல் மாறின.
முன்னமெல்லாம் இல்லாது போனா,:-D பாருங்க... (ச்சூடுக்கு தமிழ்), அப்புறம் பிரேமம், பிரேமை, ஒ..பெண்ணே! இந்த மாதிரி நிறைய வார்த்தைகள் பிற்காலத்தில் மாறிப் போயின. சரி! அதை விடுவோம்.
இந்தப் படத்தின் கற்கண்டுப் பாடல்களைப் பற்றி கொஞ்சம் பார்க்கலாம்.
'பருவம் உருக இதயம் துடிக்க
இனிய குழலில் யமுனை முழுதும் பொங்க
அலை பொங்க
இன்று பிருந்தாவனம் தன்னில் ஒண்ணா'
ஜானகியும், பாலாவும் ஜோராப் பாடியிருப்பாங்க. கோபிகாஸ்திரி கோலத்தில் தாவணி அணிந்து ஸ்ரீதேவி அழகு இளமை. கமலும் சரியான இளமைத் துள்ளல். இதில் ஸ்ரீதேவி இடுப்பில் கயிற்றைச் சுற்றி அவரை பானை ஒன்றில் நிற்க வைத்து இந்த பூலோகக் கண்ணன் தயிர் கடைவது போல் கடைந்து வெண்ணெய் வேறு எடுத்துக் காட்டுவார்.:) (அந்த ஜாலி காமெடி கமல் இப்போது எங்கே! இப்போது அவர் நடிக்கும் படங்களில் காமெடி என்பது மருந்துக்குக் கூட இல்லையே! எப்படியெல்லாம் நம்மை சிரிக்க வைத்த நாயகன்! ம்... சிங்கீதம், கமல் இணைவுக் கலக்கல்கள், கமல், ரவிக்குமார் கலக்கல்கள் காலம் சரியான காமெடி காலம். பஞ்சதந்திரம், பம்மல் கே.சம்பந்தம், தெனாலி போன்று கமல் நடித்து காமெடிகள் வராதா என்று மனம் ஏங்குகிறது)
கோபிகாஸ்திரிகளுடன் கண்ணன் வேடத்தில் வி.ஜி.பி.கோல்டன் பீச்சில் கமல் புல்லாங்குழல் வாசித்து ஓடி வரும் போது வழியில் கிடக்கும் சாணத்தை காலணியில் மிதித்துவிட்டு அருகில் கிடக்கும் கல்லில் அதைத் தேய்த்து விடும்போது நமக்கு 'கிளுக்' கென்று சிரிப்பு வராமல் இருக்காது. அது போல கழுத்திலிருந்து இரு பக்கமும் தொங்கும் அங்கவஸ்திரத்தின் நுனியில் கலர்ப்பொடி வைத்து பறக்கவிட்டு தூசியில் தும்முவது செம வேடிக்கை.
பெரிய புல்லாங்குழல் செட்டில் அமர்ந்து ஆடியபடியே கமலும், ஸ்ரீதேவியும் குச்சி ஐஸ் தின்னுவதும் காமெடியே. காமெடியில் ஸ்ரீதேவி கமலுக்குத் தோதான இணை.
'முத்தம் வைத்தாலும் மடியில் விழுந்தாலும்
நித்தம் கள்ளூறும் ஸ்ரீதேவியே'
என்று பொருத்தமாக தேவியிடம் பாடுவது போல வார்த்தைகளை சாமர்த்தியமாக சேர்த்திருப்பார் பாடலாசிரியர். தமிழுக்கு தமிழுமாச்சு...கமல் ஸ்ரீதேவி ஜோடியை புகழ்ந்ததுமாச்சு.
ஸ்ரீதேவியிடம் கோலாட்டக் கழி வாங்கி கீழே வாட்டமாக வைத்து தன் கோலாட்டக் கழியால் அதை அடித்து கிட்டிப்புல் விளையாடுவார் கமல் செம ஜாலியாக.:) அடித்த புள் எங்கே போனது என்று தேடுவார் வேற. இந்த மாதிரி சின்ன சின்ன விஷுவல் காமெடி செய்வதில் அசகாய சூரர் கமல். (கமல் சார்! இந்த மாதிரி ஜாலியான ஒரு படம் கொடுங்கள் ப்ளீஸ்!)
பாடலில் அழகான தமிழ் வார்த்தைகள் தெலுங்கு என்று நம்ப முடியாத அளவிற்கு. கமல், ஸ்ரீதேவி என்பதால் பாடலின் நடனத்திற்கு சொல்லவும் வேண்டுமோ!
வெகு அழகான பாடல்.
https://youtu.be/OTfL7Sea1Ho
அதே பாடலை இப்போது ஒரிஜினல் தெலுங்கில் பாருங்கள்
'மதுர முரளி ஹ்ருதய ரவளி' (பருவம் உருக இதயம் துடிக்க) பாலாவும், ஜானகியும் தெலுகில்.
https://youtu.be/yrxYD24UUA8
அடுத்து கமலும், ஸ்ரீதேவியும் ஆடும் செம ஆட்டம்.
ராஜாவின் உற்சாக கொப்புளிக்கும் இசை. சும்மா தூள் பறக்கும். தெலுங்கு ரசிகர்களுக்கு ஏற்ப பாஸ்ட் பீட். அதே பாலாவும், ஜானகியும்.
எனக்கு ரொம்பப் பிடித்த பாட்டு. கேசெட்டே தேய்ந்து போய் விட்டது.
'ஜினுக்கு ஜினுக்கு ஜினுக்கு சிட்டான் ஜினுக்கு ஜினுக்கு' என்று பாலாவும், ஜானகியும் அதி வேகமாக பாட ஆரம்பிப்பார்கள். உடனே ராஜா தரும் அந்த உற்சாக இசை....வாவ்! சான்ஸ் நஹீ.
'பச்சை மணி பவழ மணி ஓம் மேனி
கட்டழகு வட்ட முக ராணி
குண்டுமல்லி பட்டுமல்லி ஒன் கண்ணு
கொஞ்ச வந்தா ஒட்டிக் கொள்ள எண்ணு
வாம்மா! கன்னிக் குயிலே! நான்தான் மாமா
ஏதோ காதல் ஜுரம் கண்டால் வரும்'
சும்மா பாலா பிய்த்து உதறுவார்.
ஜானிகியும் செம ஈடு.
'பட்டு மெத்த பஞ்சு மெத்த பூ மேனி' என்று.
ஸ்ரீதேவி என்ன அழகாகச் சிணுங்குவார் தெரியமா!
'தத்துகின்ற தத்தை இது மெத்தையிட்டு
ஒட்டி உறவாட நெஞ்சு வாட'
'அச்சடிச்ச சித்திரம் போல் இங்கொருத்தி
கண்ணோடு கண் பாட காதல் தேட'
என்ற சரண வரிகளுக்கு ராஜா அலை அலையாய் அவ்வளவு அழகாக டியூன் போட்டிருப்பார்!
அப்படியே கமல் பாலா குரலில்,
'நெஞ்சிரண்டு இஷ்டமானது
இதில் யாருக்கொரு கஷ்டமானது'
என்று கேட்டு வைக்க,
(கமல், ஸ்ரீதேவி காதலைக் காண சகியாமல் ஒளிந்து நின்று அவர்களின் காதல் களியாட்டத்தை வேடிக்கைப் பார்க்கும் ராவ் கோபால் ராவ். இது தெரிந்து வேண்டுமென்றே அவரைக் கலாய்க்க கமல் தேவி நெருக்கம்)
ஆஹா... ஜாலியோ ஜாலி!
குத்துன்னா செம குத்து. ஆனா டீசென்ட் குத்து.
ராஜா ராஜாதான்.
அப்புறம் ஸ்ரீதேவி வயிறு தள்ளி ஐந்தாறு குழந்தைகளுடன் வயதான மாதிரி இடுப்பு பிடித்து நடக்க, (அபாரம் ஸ்ரீதேவி! என்னமாய் பசங்களை மேய்த்துக் கொண்டு, அதே சமயம் டயர்டாக தள்ளு வண்டியில் ஒரு குழந்தையை வைத்து தள்ளிக் கொண்டு நடந்து வருகிறார்!) கமல் அதே இளமையுடன், குறும்புடன், கழுத்தில் தொங்கும் பிளாஸ்க்குடன் ஒளிந்திருந்து பார்க்கும் ராவைக் கலாய்க்க பேன்ட்டை லூஸ் செய்து உள்ளாடையில் ஏதோ காட்டி வெறுப்பேற்ற:) அய்யோ! மதுண்ணா! சிரிச்சி சிரிச்சி கண்ணுல ஜலம் வந்துடுச்சு. சின்னா! நல்லா என்ஜாய் பண்ணி பாருங்க.:)
https://youtu.be/kSTTbXM2vEk
ஹரே ராதா ஹரே கிருஷ்ணா படத்தில் இன்னொரு அட்டகாசமான பாட்டு ஒன்னு உண்டு.
பாலா, ஜானகி பாடும் இன்னொரு அமர்க்களம்.
யாரம்மா தொட்டதோ
ஏன் சும்மா துள்ளுதோ
சிறு இடை உன் கொடியிடை
ஓயாம எங்குதோ
உன்னைத்தான் தேடுதோ
துடிக்குதே ஹோய் கொதிக்குதே
கையேதும் கொய்யாத பழமோ ஹோய்
கொத்தாது கிளி என்றும் விடுமோ
கடிச்சே பார்க்கும் பொழுதோ
சும்மாதான் கும்மாளப் பாட்டோ ஹோய்
சிறு பூவில் தேனுண்ணும் வண்டோ
இது போல் இது போல் உண்டோ
இளையராஜாவின் மறக்க முடியாத இன்னொரு 'டப்' பாடல்.
http://shakthi.fm/ta/album/show/84b86888
தெலுங்கில் ஆடியோ மட்டும்.
https://youtu.be/in5fRTO31fk
தமிழில் பாலா குரலில் கமல் ஸ்ரீதேவியை கிண்டலடித்துப் பாடும் பாடல்.
'ராதா! என்னுடனே வா வா!
வை வை தகதிமி
தை தை கதகளி
டக்குமுக்கு தாளம் வை'
https://youtu.be/FNoGH4iCu8c
இதே பாடலை தெலுங்கில் கமல் பாடியிருப்பார் அமர்க்களமாக. இந்தப் பாடலின் ஸ்டீரியோ சும்மா தனித்தனியாக பிரித்து மேயும்.
'வெய் வெய் தகதிமி
செய் செய் கதகளி
டக்குமுக்கு தாளம் வெய்'
கமலே தமிழிலும் பாடியிருக்கலாமே! தெலுங்கில் நன்றாக இருக்கிறதே.
https://youtu.be/ed6iRBynp7E
ராகவேந்திரன் சார்,
நீங்க சொன்னது போலவே ஷிப்ட் முடிச்சி வந்து பார்த்தா இன்ப அதிர்ச்சி. அப்படியே அசந்து போய் நின்னுட்டேன். சொல்லி ரெண்டு நாள் கூட ஆகலை. அதுக்குள்ளே எப்படியோ 'அன்னை சொன்ன சொல்' பட ஸ்டில் தேடி கண்டு பிடிச்சி கொடுத்திட்டீங்களே! ஜோரா இருக்கு. அநேகமாக 'காதலுக்கு நாலுபக்கம்' பாடல் காட்சியா இருக்குமோ?
ரொம்ப ரொம்ப நன்றி ராகவேந்திரன் சார். அசத்திட்டீங்க.
ஆதிராம் சார்!
மிக்க நன்றி! தங்களுக்கே உரித்தான பாணியில் ராமண்ணாவின் டூயட்டுகளுக்கான லொக்கேஷன் லிஸ்ட்டைக் கொடுத்து சிரிக்க வச்சுட்டீங்க. அதே போல மன்னரோட தவில் வித்தையையும் அழகா விளக்கிட்டீங்க. சபாஷ்!
இதுக்கு முன்னாலேயே அவர் 'பணக்காரக் குடும்பம்' படத்திலே கொட்டும் மழையில் எம்.ஜி.ஆர் அவர்களையே:) சரோஜாதேவியுடன் உட்கார வைத்து ஒரு பாடல் முழுக்க கட்டை வண்டிக்குக் கீழேயே எடுத்திருப்பார். (மழை, ஷவர், பெயிண்ட் இதெல்லாம் இல்லாம ராமண்ணா ஏது?):)
குலேபகாவலி படத்தில் ஜி.வரலஷ்மி குளியல் (கண்ணாலே பேசும்)
பெரிய இடத்துப் பெண் படத்தில் ஜோதி, மணிமாலா குளியல் (கட்டோடு குழலாட)
பணம் படைத்தவன் படத்துல புன்னகை அரசி கிணற்றடி குளியல் (அந்த மாப்பிள்ள)
நான் படத்தில் மேடம், ரவி நீச்சல் குளியல் (குவாக் குவாக்)
மூன்றெழுத்து படத்துல மேடம் பாத் டப் குளியல் (காதலன் வந்தான்)
தங்கச் சுரங்கம் படத்திலே நடிகர் திலகம் புண்ணியத்தில் காட்டில் கார் ஷவர் பாரதி பாத்
வைரம் படத்துல மறுபடி மேடம் குளியல் (இரு மாங்கனி போல் இதழோரம்)
பாக்தாத் பேரழகியிலே சுபா குளியல்
படத்தின் பெயரே 'நீச்சல் குளம்'. நிறைய குளியல்கள், கொலைகள்.
என்று ராமண்ணா தன் படத்து நாயகிகளை அநியாயத்துக்கு நனைய விடுவாரே!
சின்னா பாடு ஜாலி.
https://fbcdn-sphotos-c-a.akamaihd.n...a383337c54c2fc
வாசு சார்
புகை மூட்டம் இதோ க்ளியர்...
வெளிவராத 'மெட்ராஸ் மைனர்' திரைப்படத்திலிருந்து ரவி.
http://i1087.photobucket.com/albums/...ccfd9eb1a2.jpg
சில நாட்களுக்கு முன் எப்படி இருக்குமோ என தலை சுற்ற வைத்த ராட்டினம்...
இதோ நம் பார்வைக்கு ரங்க ராட்டினம் திரைப்பட நிழற்படங்கள்
https://scontent-frt3-1.xx.fbcdn.net...af&oe=56CA88D2
https://fbcdn-sphotos-c-a.akamaihd.n...95999703eaabb7
Could anyone pls confirm whether Mr Madhu Anna has come out of the Veeranam Pipe.
'கருந்தேள் கண்ணாயிர'த்தை 'நீலகிரி எக்ஸ்பிரஸ் ஆக தவறாகப் போட்டு விட்டார்கள்.:)
http://d2na0fb6srbte6.cloudfront.net...1-2d11d765cf31
மதுண்ணா!
நாம ஊர்ஜிதப்படுத்திக்கிட்டது சரிதான்னு நினைக்கிறேன். ஜமுனாராணியோடு தாராபுரத்தார் 2 பாடல்களை பாடியிருப்பதாக தகவல் சொல்கிறது. அதில் ஒன்று உங்க 'பல்லாக்கு போல வண்டி'. சரியா?:)
படத்தில் 'தாராபுரம்' சுந்தரராஜன்.
http://d2na0fb6srbte6.cloudfront.net...a-83ef8f0f2994
http://d2na0fb6srbte6.cloudfront.net...c-fa326311b928
இது தேன் கிண்ணமா இல்லை ஹலோ பார்ட்னரா?
http://d2na0fb6srbte6.cloudfront.net...5-35d2b20b27f0
'அன்னையும் பிதாவும்' படத்தில் ராட்சஸி கலக்கல்
'பொன்னாலே வாழும் புதிய உலகம் இது
பெண்ணாலே வாழும் பெரிய உலகமது'
'வெண்ணிற ஆடை'க்கு காபரே ரேஞ்சில் ஒரு பாடல்.
https://youtu.be/6RZKWKDLXlc
வாசு.. வெ.ஆ. நி பாட் ராட்சஸி வாய்ஸ் நன்று (சம்பந்தமே இல்லாம ஆடறதா பட்டது..)
கண்கள் மாணிக்க க் கிண்ணம் என்
கன்னம் மரகத வண்ணம் .. (ம்ம் சிகப்புக் கண் பச்சைக் கன்னமா)
ஒன்பது மணிகளும் உன்னைக்கண்டு சிரிப்பது
தங்கமல்ல மங்கை தானே..
(ஏதோ மெட்டுக்கு வரிகளை ஃபில்லப் பண்ணிட்டாங்க போல.)
வாவா ஒரு இரவு ஒரு உறவு
வந்து ஆடிப்பார் வந்து தேடிப்பார் உனக்குப் புரியும்
கெட்டிக்காரனில் நாகேஷ்.. அப்புறம்..ஹ்ம்.. எனக்கு மறந்து போச் தெரியாதுன்னுல்லாம் சொல்ல மாட்டேன்..
நன்னா ஆடறாங்க நாகேஷும் அந்த அம்மணியும்..இதுலயும் எல்.ஆர். ஈஸ்வரியோட சிரிப்பு வருது!
https://youtu.be/RIbtVRei_AM
vaanga ji, cika