https://scontent.fybz1-1.fna.fbcdn.n...db&oe=5A36B73D
Printable View
balaji sethuraman
கலைக்கடவுளின் சிலையை
அகற்றியதைக் கண்டித்தும்
அதே கடற்கரைச்சாலையில்
மீண்டும் வைத்திட வலியுறுத்தியும்
ஒருநாள் அடையாள...
உண்ணாநிலை......
17.08.2017
கலைக்கடவுளி னுருவச்சிலையை
அகற்றியதைக் கண்டித்துமருத
மலையாண்டவ னாட்சிசெய்யும்
கொங்குதமிழி னாதாரமான
தென்னாட்டின் மான்செசுடர்
நகரத்தி லுண்ணாநிலை
மென்மையான முறையில்
அனுசரிக்கப்பட்டது.
அறவழியிலின் றருந்தலைவர்
காட்டியவழி நடந்தவனுக்கு
கறந்த பாலொத்தத்தூய
மனங்கொண்டவ ரிணைந்து
அவரதுருவச்சிலை யகற்றியதற்கு
பலமானக் கண்டனங்களைத்
தவறியுமடுத்தவர் மனங்கோனாது
தெரிவித்தனர்.
மட்டந்தட்டு மெண்ணத்தில்
கலைக்கடவுளி னுருவச்சிலையை
நட்டநடுநிசியி லெடுத்தெங்கோ
வைத்ததைக் கண்டித்துமதை
கடற்கரைச் சாலையிலேயே
அறப்போராட்டக் கல்விக்
கடவுளருக்கிடையில் வைத்திடவும்
வேண்டிக்கொண்டனர்.
தங்களருமைக் குடும்பத்தைக்
குலவிளக்கைக் குடும்ப
அங்கத்தினரைப் பிரிந்தொருநாள்
அடையாள வுண்ணாநிலை
அனுசரித்தனைத்துக் கலைக்
கடவுளின் செயல்வீரர்களை
மனுசவுருவிலான கடவுளென்றே
கைதொழுகிறேன்.
என்னாலந்த வுண்ணாநிலை
நாளில்பங்கெடுக் கியலவில்லை
என்னருமை மன்றமறவர்கள்
திடமனதோடு துய்த்தனர்
கோயிலுக்குச் செல்லாவிட்டாலும்
தரிசித்தவருடன் மானசீகமாக
போயிருந்ததா யெண்ணியுங்களை
வணங்குகிறேன்.
தேசப்பற்றையும் நாட்டுப்பற்றையும்
தன்னுடல் மொழிமூலமாகப்
பேசிநடித்தவனுக் கடையாள
உண்ணா நிலையிருந்த
நேசமுள்ள மன்றத்து
மறவர்க்கு மிந்தியாவின்
தேசிய காங்கிரசுக்கும்
நன்றிகள்பல.
கலைக்கடவுளின் சிலையை அகற்றியதைக் கண்டித்தும்
அதை மீண்டும் கடற்கரைச்
சாலையிலே அண்ணல் காந்தி சிலை மற்றும் கர்மவீரர் காமராஜர் சிலைக்கும் நடுவில் வைக்க வேண்டும் என
வலியுறுத்தி ஒருநாள்
அடையாள உண்ணாநிலை இருந்த
அனைத்து அன்னையில்ல மன்றத்து மறவர்களுக்கும் விழாவினை ஏற்பாடு செய்த கோவை மாவட்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கும் நன்றிகள்....
நன்றிகளுடன். .....
V.கஜேந்திரன். M.A.,B.lit.,
HM.
C.குப்புசாமி,M.சேகர். ,
M.பிரபுதுரை,M.ரிச்சர்டு, P.சுப்பிரமணி,V.ஜெகன்,
S.அதிசயநாதன்,M அமுல்,
E.மகாதேவன்.B.A.
அனைத்து அன்னையில்ல மன்றங்கள்.
சான்றோர்குப்பம். ஆம்பூர்.
வேலூர் மாவட்டம்.
நன்றிகள் திரு.கஜேந்திரன் & நண்பர்கள்.
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...ac&oe=5A32A185
jahir hussain
சிவாஜிதானே,,, யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் பேசிவிட்டுப் போகலாம்,,, ஏசிவிட்டுப் போகலாம் என்று சில மங்கூணிகள் நினைக்கிறார்கள்,,, சிவாஜி ரசிகன் "விறகுக்குள் நெருப்பாக" இருக்கிறான்,,, என்பதை மறந்து விட்டு பேசுகிறார்கள்,,, ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்,,, சிவாஜி அவர்கள் ரசிகர்கள் மட்டுமல்ல நாங்கள்... அவரது "மாணவர்களும்" ஆவோம்,, 40 வயதிற்கு மேற்பட்ட ஆண்களும் பெண்களும் குடும்பம் குடும்பமாக அவரை நேசித்து வாழ்கிறோம்,... இளம் வயது பிள்ளைகளுக்கு சிவாஜி எனும் பாடநூல்களை ப...யிற்றுவிக்கக் காத்திருக்கிறோம்,,, ஒப்பீடு செய்து சிவாஜி அவர்களை உணர்ந்து கொண்டவர்கள் இன்றைய நிலையில் நிறையபேர் உருவாகி விட்டார்கள்,,, ஆகவே சிவாஜியை நகையாடும் நாசகார வேலையை செய்யாதீர்கள்,,, அந்த சகாப்தத்தின் இன்றைய தேவையை புரிந்து கொள்ளுங்கள்,,,, "என் கடன் பணி செய்து கிடப்பதே" என்கிற முதுமொழிக்கு ஏற்ப ஆட்சி நடத்தியவர் காமராஜர்,,, "என் பணி அந்த மஹானை அடியொற்றி நடப்பதே" என்று தொழுதவர் சிவாஜி,,, ஆகவே நாட்டுக்கு நல்லது நிலைபெற நினைக்கும் குடிமக்கள் சிவாஜி என்ற மந்திரத்தை ஜெபிக்கத் தயங்க வேண்டாம்,,, அந்த மந்திரங்களே ஆண்டாள் தேவனுக்கு பூமாலை தொடுத்து போல ஆகும்,,, ஆகவே இன்றைய நாடு நலம் விழைய காமராஜர் போட்ட பாதையில் சிவாஜி என்கிற பழுதற்ற வாகனத்தில் ஏறிச் செல்வோம்,,
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...ef&oe=59EBAAEA
https://www.facebook.com/vee.yaar/vi...4931906557476/
காலங்களைக் கடந்து வாழ்வியல், பொதுவியல் என அனைத்து நிலைப்பாடுகளிலும் பொருந்தி வருவதோடு அவற்றிற்குத் தேவையான வழிகாட்டுதல் மற்றும் நெறிமுறைகளைச் சொல்வதும் நடிகர் த...ிலகத்தின் படங்களே. அவர் பேசிய வசனங்கள் அழகுக்காக மட்டும் கூறப்பட்டதில்லை. அர்த்தமுடனும் கூறப்பட்டவையாகும். அதில் பொதுநலன் மட்டுமே இருக்கும் சுயநலமிருக்காது. சுய விளம்பரமிருக்காது. தேவைப்படும் நேரத்தில் தவறைச் சுட்டிக்காட்டவும் தயங்காது. அந்தந்த பாத்திரங்களுக்காக பேசப்பட்ட வசனங்களெல்லாம் சமுதாயத்தோடு ஒத்துப் போவதற்குக் காரணம், மனிதர்கள் அதற்கேற்ப நடந்து கொள்வதே. இன்றும் அந்நிலை மாறவில்லை என்பதும் அந்த வசனங்கள் அன்றைய கால கட்டத்திற்கு மட்டுமின்றி இன்றைக்கும் பொருந்துவது என்பதும் அவருடைய மேன்மை, அவருடைய தூய்மையான உள்ளம், அவற்றிலிருந்து வெளிவரும் ஆழமான வேதனையின் வெளிப்பாடு, இவற்றின் தாக்கம் தலைமுறைகளைத் தாண்டித் தொடரும் என்பதும் யதார்த்தங்கள். இதோ அவன் ஒரு சரித்திரம் படத்தில் வரும் இக்காட்சி இதை சித்தரிப்பதைப் பாருங்கள்.<br>
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...55&oe=5A17789AJahir Hussain
அத்தி பூத்தார் போல் ஒரே ஒரு படம்,,,, நம்ம நடிகர் திலகத்திற்காக இசைமாமணி வி. குமார் இசைத்து வெளிவந்த படம் இது,,,, அந்தக் காலத்தில் கே வி எம் ஒரு பக்கம் எம் எஸ் வ...ி ஒரு பக்கம் என்று சிவாஜி அவர்களுக்கு பக்கபலமாக இருந்த சமயத்தில் "நிறைகுடம்" படத்தின் மூலம் நூழைந்தார்,,, பாடல்களும் மிக நன்றாக அமைந்திருந்தும் அடுத்தடுத்த வாய்ப்புகள் அமையாது போனது துரதிஷ்டமே,,, இன்னும் சில சிவாஜி சினிமாக்களில் இசையமைத்து இருந்து இருப்பாரே ஆனால் பல பெரிய படத் தயாரிப்பாளர்கள் இவரை அணுகி இருக்கக் கூடும்,,, கே பி அவர்கள்கூட ஒரு ஸ்டேஜில் முழுக்க முழுக்க எம் எஸ் வி பக்கம் சாய்ந்து விட்டார்,,, பிரபலமான கதாநாயகர்கள் பெரிய தயாரிப்பாளர்கள் ஆளுமை மிக்க இயக்குநர்கள் இவையன்றியே அவர் ஓரளவுக்கு தாக்குப் பிடித்தார் என்றால் அவரது திறமையே காரணம்,,, இதுபோக அன்னக்கிளி படம் மூலம் புயலாக திரையுலகில் நுழைந்த இளையராஜா மொத்த திரைத்துரையையும் புரட்டிப் போட்டு விட்டார்,,,இவையெல்லாம் வி குமார் அவர்களின் நியாயமான வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக அமைந்தது,,, புதிய தயாரிப்பாளர்கள் சிறிய நட்சத்திரங்களில் படங்கள் இவைகள்தான் கிடைத்தது,, திறமை உள்ளவர்க்கு சிறு துரும்பும் பக்கபலமே என்பது போல அந்தந்த வாய்ப்புகளையும் நன்றாக பயன்படுத்திக் கொண்டு மறக்க இயலாத பாடல்களை கொடுத்து இருக்கிறார்,,,
கண்ணதாசன் வரிகளில் டி எம் எஸ் - பி சுசீலா ஜோடிக் குரலில் நிறைகுடம் படத்திற்கான பாடல்,,, நடிகர் திலகமும் வாணிஸ்ரீ யும் ஜோடி போட்டு நடித்த பாடல் காட்சி இது,,, இருவருக்கும் உள்ள பொருத்தம் பத்து ஆண்டுகள் கழித்தும் நல்லதொரு குடும்பம் படம் வரை ஜொலித்தது,,, உயர்ந்த மனிதன் வசந்த மாளிகை, சிவகாமியின் செல்வன், ரோஜாவின் ராஜா போன்ற பல படங்கள் நினைவில் நின்றவை,, அனைத்து படங்களிலும் காதல் காட்சிகள் டூயட்ஸ் இவற்றில் இந்த ஜோடி இயல்பாக இருக்கும்,,, இந்தப் பாடல் காட்சியிலும் நன்றாக அமைந்திருக்கும்,,,, ----------------------------------------
கண்ணொரு பக்கம் நெஞ்சொரு பக்கம் பெண்ணோடு போராடுது,,,,
கள்ளொரு பக்கம் தேனொரு பக்கம் உள்ளூர நீராடுது,,,,,
ஆடும் பூவை சூடாமல் போனால் ஆசை தீராது
ஆசை வேகம் போகப் போக கேள்வி கேளாது,,
போகும் நேரம் பொல்லாத நெஞ்சில்
போதை மாறாது,,, பொழுதும் போகாது,,
காதல் தேவன் கல்யாண வீட்டில் கதவு மூடாது,,,,
கன்னி வாசல் காணக் காண கண்கள் போதாது,,,
சின்னத் தோட்டம் சில்லென்ற காற்றில்
சிறையும் போடாது,, போடக் கூடாது,,
கண்ணொரு பக்கம் நெஞ்சொரு பக்கம் பெண்ணோடு போராடுது
கள்ளொரு பக்கம் தேனொரு பக்கம் உள்ளூர நீராடுது,,,,
நடிகர் திலகத்தின் 56 வது வெற்றிக்காவியம்
மரகதம் வெளிவந்த நாள் இன்று
மரகதம் 21 ஆகஸ்ட் 1959
https://encrypted-tbn0.gstatic.com/i...5AilHjChv8H-tI
https://i.ytimg.com/vi/g7-iu_sQxEI/maxresdefault.jpg
https://i.ytimg.com/vi/exbUcIyowLU/maxresdefault.jpg
நடிகர் திலகத்தின் 172 வது வெற்றிக்காவியம்
என் மகன் வெளிவந்த நாள் இன்று
என் மகன் 21 ஆகஸ்ட் 1974
https://upload.wikimedia.org/wikiped...Magan_1974.jpg
https://i.ytimg.com/vi/DhOnjN2v264/maxresdefault.jpg
https://i.ytimg.com/vi/MT7vxSKbFd0/hqdefault.jpg
நடிகர் திலகத்தின் 217 வது வெற்றிக்காவியம்
மாடி வீட்டு ஏழை வெளிவந்த நாள் இன்று
மாடி வீட்டு ஏழை 22 ஆகஸ்ட் 1981
https://upload.wikimedia.org/wikiped...ettu_Ezhai.jpg
https://encrypted-tbn0.gstatic.com/i...p_LaEsSRzFNWK2
https://encrypted-tbn0.gstatic.com/i...S-Ep2F-a2Q-dnz
Shanmugaraj Madathur
அனைவரும் கலந்து கொள்வோம் அனைவரும் வாரீா் நமது கலைக்கடவுள் சிவாஜி சிலை அகற்றலை கண்டித்து சென்னை வள்ளுவா் கோட்டத்தில் நாளை மாலை 3 மணி அளவில் அண்ணன் திரு சீமான் அவா்கள் நமது தலைவருக்காக போராட்டம் நடத்த இருக்கிறார் நமது தலைவா் சிவாஜி அவா்களின் மேல் பற்றுகாெண்ட அத்துனை நல் உள்ளங்கள் அனைவரும் தவறாமல் கலந்து காெள்ள அனைத்து சிவாஜியின் பக்தா்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் அன்புடன் :அண்ணாச்சி A.R.சந்திரசேகா்
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...53&oe=5A36DE16
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...0b&oe=5A131587
Ramiah Narayanan
பாசமலர் !
இன்றும் பாசமுள்ள அண்ணன் தங்கை என்றால் என்ன பாசமலரா என்று கேட்கும் வழக்கம் மக்களிடே இருக்கிறது இன்றைக்கும் கை வீசம்மா கை வீசு என்று சிவாஜி உருகி கண்ணீர...் மல்கி பேசுவதை கண்டு கண்ணீர்விடுகின்றவர்கள் இருக்கிறார்கள்.
*படம் என்கிறார் சிலர் பாடம் என்கிறார் பலர் பாசத் தேன் குடம் அது.
* சேர்ந்தே பிறந்து சேர்ந்தே வளர்ந்து சேர்ந்தே மறைந்த செல்வங்களின் கதை பாசமலர்.
* முதல்நாள் படம் பார்த்த எவர் முகத்திலும் புன்னகையில்லையாம் எதையோ பறிகொடுத்தமாதிரி, சோகத்தில் ஆழ்ந்த நிலையில் வீடு திரும்பினார்களாம்.
* ராஜசேகரன் போன்ற அண்ணனுக்காக தங்கைகளும், ராதா மாதிரியான சகோதரிக்காக அண்ணன்களும் கோடிக்கணக்கில் ஏங்கினார்களாம்.
* முதலில் ஆண்குழந்தை பெற்றவர்களுக்கு இரெண்டாவது பெண் குழந்தை பிறந்தால் ராதா என்றே பெயர் சூட்டினார்களாம்.
* சிவாஜியுடன் ஜோடியாக நடிக்க கூடாது என்று சாவித்திரிக்கு பலர் கடிதம் எழுதினார்களாம்.
* அடுத்து சிவாஜியுடன் சாவித்திரி நடித்த எல்லாம் உனக்காக படம் முதலில் ஓடவில்லையாம். பின்னர் தான் பார்க்க ஆரம்பித்தார்களாம்.
கிளைமேக்ஸ் காட்சிதான் நம் நெஞ்சை பிழிந்துவிடும். அது குறித்து வசனகர்த்தா ஆருர்தாசும் சாவித்திரியும் கூறியது ............!
ஆரூர்தாஸ்!
சிற்றுண்டி, மதிய உணவு இரண்டையும் தவிர்த்து அன்றைக்குப் பட்டினி. வழக்கமான நட்சத்திர தடபுடல், ஆமாம் சாமிகள், ஜால்ரா கூட்டம் அருகில் வர அனுமதியில்லை. சிவாஜி பிலிம்ஸ் காசோலையில் கையெழுத்து என அலுவலகப் பணிக்கும் கூட 144. வான் மழை போல் சகோதர வேதனையைக் கொட்டித் தீர்க்க வேண்டும் என்கிற முடிவோடு சிவாஜியும் சாவித்ரியும் கிளிசரினை மறுத்தார்கள். ஒப்பற்ற நடிப்பின் பல்கலைக்கழகங்களுக்கு ஓத்திகையா?
ரெடி டேக் ஆக்ஷன். விட்டல்ராவின் காமிரா ஓடியது. அண்ணன் பார்வை இழந்து நிற்கும் பரிதாபத்தைக் கண்டு தங்கை கதறுகிறாள்.
‘நீங்கள் மவுனமா இருந்தாலும் ஆயிரமாயிரம் அன்புக் கதைகளை எனக்குச் சொல்லுமே- அந்தக் கண்கள் எங்கே அண்ணா? வைரம் போல் ஜொலிச்சி வைரிகளையும் வசீகரிக்கக் கூடிய உங்க அழகான கண்கள் எங்கே அண்ணா? என தேம்பி தேம்பி அழுகிறார். கைவீசம்மா கைவீசு என சிவாஜி அவர்கள் பாட விம்மி விம்மி அழுதார்கள். தியேட்டரில் கேட்க வேண்டும்மா ?
சாவித்திரி !
அண்ணன் சிவாஜி கணேசனின் மேக் அப்பும் இதில் ஸ்பெஷலாக இருந்தது. மீசை, தாடி, கோட் இவைகளுடன் அவர் குலைந்து போய் வரும் கடைசிக் காட்சியில் யாரும் மனம் நெகிழாமல் இருக்க முடியாது. படத்தின் இறுதிக் காட்சியை எப்படி எடுத்து முடிக்கப் போகிறோம் என்று எல்லாரும் ஒரு சஸ்பென்ஸூடன் காத்துக் கொண்டிருந்தோம்.
கடைசி நாள் படப்பிடிப்பு தயாராயிற்று. அதில் நான் இறந்து போவதாகவும் என் மீது மலர்களைத் தூவுவது போலவும் காட்சியை எடுக்க வேண்டும். செட்டில் அன்று யாருமே பேசவில்லை. ஊசி போட்டால் சத்தம் கேட்கும். அவ்வளவு அமைதி! லைட் பாய்ஸ் கூட வாய் திறக்காமல் நடந்து கொண்டனர். காபி தரும் வரும் பையன்கள் கண்ணைத் துடைத்துக் கொண்டே வந்தார்கள். மேலேயிருந்து என் மீது மலர்களைப் போடுபவர்கள் அழுதவாறே தூவினார்கள்!
நெஞ்சில் ஒரு களங்கமில்லை சொல்லில் ஒரு பொய்யுமில்லை ஆ…
வஞ்சமில்லா வாழ்க்கையிலே தோல்வியுமில்லை ஆ…
வஞ்சமில்லா வாழ்க்கையிலே தோல்வியுமில்லை ஆ…
தோல்வியுமில்லை ஆ…
எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும்,
வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே!
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...f2&oe=5A2EE0E9
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...71&oe=5A19BA37
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...b9&oe=5A3970FE
சிவாஜி யின் சிலையை அகற்றியவர்கள் அடையாளம் தெரியாமல் போகலாம் - ஆனால் எங்கள் சிவாஜியின் அடையாளம் இன்னும் எத்தனை ஜென்மம் ஆனாலும் உலகத்தமிழர்களிடமிருந்து அகற்ற முடியாது என வீர முழக்கம் செய்து அணைத்து சிவாஜி ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்த மாவீரன் சேரன் அவர்களுக்கும் இந்த போராட்டத்தை சிறப்புற ஏற்பாடு செய்து முடித்த தமிழ் இனப்போராளி எங்கள் சிவாஜி படையின் வீரத்தமிழர் சீமான் அவர்களுக்கும் கோடானு கோடி நன்றிகள் -கடல் வெள்ளம் தடுத்தாலும் சுனாமி காற்று துளைத்தாலும் ஒவ்வொரு சிவாஜி ரசிகனும் முரட்டு தமிழன் சீமான் - அடங்கா தமிழன் சேரன் பின்னால் அணிவகுப்போம் - சிவாஜியின் புகழ் காப்போம் - தமிழையும் சிவாஜியையும் போற்றுவோம்
Sivaji Dhasan Sivaji Dhasan shared Jahir Hussain's post.
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...07&oe=5A1FCE79
Jahir Hussainவிதவிதமான கதாபாத்திரங்களை சலிக்காமல் சிலுவை போல தோளில் சுமந்த ஒரு நடிகனின் சில கதாபாத்திரங்கள்,,,,,,, முதல் படமான 'பராசக்தி'யில் சீர்திருத்தம் பேசும் இளைஞராக நட...ித்த சிவாஜி,
'திரும்பிப்பார்' படத்தில் பெண்பித்து பிடித்தவராக வந்தார். 'மனோகரா'வில் சங்கிலியால் பிணைக்கப்பட்ட வீரனாக அனல் தெறிக்கும் வகையில் வசனம் பேசி அந்நாளில் ரசிகர்களை ஈர்த்தார். 'அந்த நாள்' படத்தில் தேசத் துரோகியாக துணிச்சலாக வேடமேற்று நடித்தார். 'சபாஷ்மீனா', 'கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி' படங்களில் முழுநீள காமெடி வேடங்களில் நடித்தார்.
'வணங்காமுடி' படத்தில் முரட்டுத்தனமான வேடத்தில் நடித்தார். 'துளிவிஷம்' படத்தில் வில்லன் வேடம் ஏற்று வீர்யமாக நடித்திருந்தார். 'கூண்டுக்கிளி' யில் எம்.ஜி.ஆருடன் இணைந்து வில்லன் போன்ற கதாபாத்திரத்தில் துணிச்சலுடன் நடித்தார்.
'முதல் தேதி' படத்தில் தற்கொலை செய்துக் கொள்ளும் கோழையாக, 'தெனாலிராமனில்' நகைச்சுவை கலந்த அறிவாளி வேடத்தில், 'ரங்கோன் ராதா' படத்தில் வில்லன் தன்மை கலந்த கதாபாத்திரமாக வாழ்ந்தார். 'மக்களைப் பெற்ற மகராசி'யில் முதன்முறையாக கொங்குநாட்டு தமிழ் பேசும் விவசாயியாக நடித்தார். 'தங்கமலை ரகசியம்' படத்தில் காட்டுவாசியாகவும் குரூரமான வேடத்திலும் நடித்தார். 'அம்பிகாபதி' படத்தில் அம்பிகாபாதியாக நடித்தார். 'சம்பூர்ண ராமாயணம்' படத்தில் பரதனாக நடித்து முதறிஞர் ராஜாஜியின் பாராட்டைப் பெற்றார்.
'காத்தவராயன்'' படத்தில் காவல்தெய்வமாக நடித்தார். 'வீரபாண்டிய கட்டபொம்மன்' படத்தில் கட்டபொம்மனாக ஆங்கிலேயரை மிரட்டிய வரலாற்று கதாபாத்திரத்தில் நடித்தார். 'பாகப் பிரிவினை' யில் ஊனமுற்ற இளைஞர்.'தெய்வப் பிறவி'யில் தெய்வப் பிறவியாகவே மாறியிருந்தார். 'படிக்காத மேதை'யில் மனித நேயமிக்க மகத்தான கதாபாத்திரம்.
'பாவை விளக்கு' படத்தில் எழுத்தாளராக நடித்தார். 'பாவமன்னிப்பு' படத்தில் இந்துவாக பிறந்து இஸ்லாமியரால் வளர்க்கப்பட்டு கிறிஸ்துவப் பெண்ணை மணக்கும் மதநல்லிணக்க கதாபாத்திரத்தில் நடித்தார். 'பாசமலர்' படத்தில் அன்பான அண்ணன் வேடத்தில் நடித்தார். 'பாலும் பழமும்' படத்தில் மருத்துவர் வேடத்தில் நடித்தார். 'கப்பலோட்டிய தமிழன்' படத்தில் இந்திய சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சியாக மாறி, இன்றுவரை வஉசி என்றால் சிவாஜியின் முகமே நினைவுக்கு வரும் அளவுக்கு சிறப்புச் சேர்த்தார்.
'ஆலயமணி' படத்தில் வில்லன் தன்மை கலந்த ஹீரோ பாத்திரம் அவருக்கு. 'இருவர் உள்ளம்' படத்தில் பிளேபாய் வேடம். 'பார்மகளே பார்' படத்தில் சுயகௌரவம் பார்க்கும் ஜமீந்தார் வேடத்தில் நடித்தார்.
'கர்ணன்' படத்தில் மகாபாரதத்தின் மாபெரும் கதாபாத்திரமான கர்ணனாகவே காட்சி தந்தார். 'புதிய பறவை' கணவனாக, காதலனாக, புதுவிதமானன கதாபாத்திரத்தில் தோன்றினார். 'ஆண்டவன் கட்டளை' கல்லூரிப் பேராசிரியராக நடித்தார். 'திருவிளையாடல்' புராணக் கதையில் சிவபெருமனாகவே மாறியிருந்தார். 'மோட்டார் சுந்தரம் பிள்ளை' படத்தில் வயது வந்த 3 பிள்ளைகளுக்கு தந்தையாக வாழ்ந்தார்.
'மகாகவி காளிதாஸ்' படத்தில் காளியின் அருள்பெற்ற கவி காளிதாஸாக நடித்தார். 'சரஸ்வதி சபதம்' கவிஞர் வித்யாபதி, நாரதர் என்று இருவிதமான கதாபாத்திரத்தில் நடித்து கவர்ந்தார்.
'கந்தன் கருணை'யில் முருகப்பெருமானின் தோழன் வீரபாகுவாகவும், 'திருவருட்செல்வர்' படத்தில் அப்பராக, சங்கரராக, திருமலை மன்னனாகவும், 'திருமால் பெருமை' திருமாலின் புகழைப் பரப்பும் தொண்டராகவும், 'தில்லானா மோகனாம்பாள்' படத்தில் நாதஸ்வர வித்வானாகவும், 'மிருதங்க சக்கரவர்த்தி' யில் மிருதங்க வித்வானாகவும், 'தங்கச் சுரங்கம்' படத்தில் ஜேம்ஸ்பாண்ட் வேடத்திலும், 'வியட்நாம்வீடு' படத்தில் பிரிஸ்டிஜ் பத்மநாபன் என்ற ஐயர் வேடத்திலும், 'ராமன் எத்தனை ராமனடி'யில் சாப்பாட்டு ராமன் - நடிகர் விஜயகுமார் என இரு வேடங்களில் கலக்கினார்.
'குலமா குணமா' படத்தில் நாட்டாமையாக, நல்ல அண்ணனாக வந்தவர், 'சவாலே சமாளி' படத்தில் சுயமரியாதை கலந்த விவசாய இளைஞராக நடித்து மனம் கவர்ந்தார். 'பாபு' படத்தில் கை ரிக்ஷா இழுப்பவராக நடித்திருப்பார்.
ராஜா படத்தில் கடத்தல்காரனாகவும், 'ஞானஒளி' படத்தில் சந்தர்ப்ப சூழ்நிலையில் தவறு செய்துவிட்டு தவிப்பராகவும், 'பட்டிக்காடா பட்டணமா' படத்தில் தமிழ்பண்பாட்டை போற்றும் மூக்கையாவாக, 'தவப்புதல்வன்' படத்தில் மாலைக் கண்நோயாளியாக, 'வசந்த மாளிகை'யில் ஜமீன்வாரிசாக, 'பாரதவிலாஸ்' படத்தில் ஜாதி மத, மொழி பேதமற்றவராக, 'ராஜாராஜசோழன்' படத்தில் ராஜராஜ சோழன் என்ற சரித்திர கதாபாத்திரத்தில் வாழ்ந்து காட்டி, அந்தப் பாத்திரங்களை இன்னும் மறக்க முடியாமல் செய்துள்ளார்.
'தங்கப்பதக்கம்' படத்தில் எஸ்.பி.சௌத்ரியாக கம்பீரமாக வந்த சிவாஜியைப் பார்த்து தாங்களும் அப்படி மாற நினைத்தவர்கள் பலர். 'அவன்தான் மனிதன்' படத்தில் அடுத்தவருக்கு அள்ளித்தருபவராக, 'டாக்டர் சிவா' படத்தில் தொழுநோயாளியை குணப்படுத்தும் டாக்டராக, 'நாம் பிறந்த மண்' படத்தில் சுதந்திர போராட்ட வீரராக, 'கல்தூண்' படத்தில் நடிப்பில் தூணாக வெளிப்பட்டார். 'முதல் மரியாதை' படத்தில் ஒரு சிக்கலான வேடத்தில் எளிதில் நடித்திருப்பார்,,,
'படிக்காதவன் படத்தில் படித்த மேதையாக,
தேவர் மகன் படத்தில் பெரிய தேவராக வாழ்ந்திருப்பார்,,,
'அன்புள்ள அப்பா', 'பசும்பொன்' படங்களில் மகள் மீது அழ்ந்த பாசம் கொண்ட ஒரு தந்தையாக வாழ்ந்திருப்பார் சிவாஜி. . 'என் ஆச ராசாவே' படத்தில் குதிரையாட்டம், ஒயிலாட்டம் கலைஞராகவும்,
நடித்திருப்பார்,, இன்னும் பல நூறு கதாபாத்திரங்களை கட்டுரைக்குள் அடைக்க முடியாது போனேன்,,, இதுபோன்ற வெரைட்டியான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க யாரால் முடியும்,,,, சிவாஜி என்கிற பெயரை நாவில் உச்சரிக்கும் போதே இந்த கதாபாத்திரங்கள் அனைத்தும் வந்து போகுமே! (நன்றி ,,, படம் உதவி திரு நாகி-நாகராஜன்)
Sivaji Dhasan Sivaji Dhasan
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...86&oe=5A241A26
Nagarajan Velliangiri to நடிகர் திலகம் சிவாஜி ரசிகர்களின் பெருந்திரள் கூட்டம்
இந்த வாரத் துக்ளக் பத்திரிக்கையில், நடிகர் திலகம் சிலை சம்பந்தமாக வந்துள்ள முழுப்பக்கச் செய்தி.
Sivaji Peravai is with தமிழ்நாடுகாங்கிரஸ் கலைப்பிரிவு.
நடிகர்திலகம் சிவாஜி சிலை அகற்றல்
நடிகர்திலகம் சிவாஜி சிலை அகற்றல் என்பது ஏதோ ஒரு சிலையை அகற்றி மணிமண்டபத்தில் வைத்துவிட்டோம் என்று தமிழக அரசு நிம்மதியடைந்திருக்கலாம்.
ஆனால், இது வெறும் சில அகற்றல் அல்ல, தமிழினத்திற்கு ஏற்பட்ட ஒரு அவமானம், கலைக்கு இழைக்கப்பட்ட அவமரியாதை.
ரசிகர்களின் வேதனையை வெளிப்படுத்தும் விதமாக, கடந்த 17 -08 - 2017 கோவை மாநகரில், ரசிகர்கள் மற்றும் காங்கிரஸ் கலைப்பிரிவின் சார்பில் ஒரு உண்ணாநிலை அறப்போராட்டத்தைத் தொடங்கினோம்.
... அதன் தொடர்ச்சியாக, 22 -08 -2017 அன்று மாலை, திரு. சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஒரு எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், திரளான அளவில் நம் ரசிகர்களும் கலந்துகொண்டது மகிழ்ச்சியளிக்கக்கூடியதாகும்.
அடுத்து, மதுரையில் ஒரு அறப்போராட்டத்தை நடத்தவேண்டும் என்று நண்பர்கள் ஆலோசித்துக்கொண்டிருக்கிறார்கள். இதுபோலவே, திருநெல்வேலி, கடலூர் போன்ற இடங்களிலிருந்தும் தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.
நம் உணர்வுகளை மதித்து, விரைவில் மீண்டும் மெரீனா கடற்கரையின், காந்தி மற்றும் காமராஜர் சிலைகளுக்கிடையே நடிகர்திலகத்தின் சிலை அமைக்க தமிழக அரசு ஆவண செய்யவேண்டும். அரசின் செவிகளில் நம் கோரிக்கை விழுந்து, நம் கோரிக்கை நிறைவேறும் வரை நம் அறப்போர் ஓயாது.
நன்றி.
K .சந்திரசேகரன்
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...c1&oe=5A29CE41
Sundar Rajan
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...d2&oe=5A5EC5DA
Sundar Rajan
மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே,
நேற்று 22.08.2017 அன்று சென்னையில் நாம்தமிழர் கட்சியின் சார்பில் சென்னை மெரினாவில் நடிகர்திலகத்தின் சிலையை அகற்றியதற்கு கண்டனம் ...தெரிவிக்கும் வகையிலும், மீண்டும் மெரினாவில் உடனே நடிகர்திலகத்தின் சிலையை நிறுவ வேண்டும் என வலியுறுத்தி செந்தமிழன் சீமான் தலைமையில் வள்ளுவர் கோட்டம் அருகே மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நடிகர்திலகத்தின் அன்பு இதயங்கள் பெருமளவில் கலந்து கொண்டது மிகவும் சந்தோசமாக இருந்தது. மன்றம், பேரவை, மக்கள் இயக்கம் என எந்த பாகுபாடும் இல்லாமல் இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் கலந்து கொண்டனர்.
இது போல் அனைத்து மாவட்ட தலைநகரிலும் சிவாஜி என்ற ஒற்றை சொல்லால் நாம் அனைவரும் இணைந்து ஆர்ப்பாட்டமோ அல்லது உண்ணாவிரதமோ ஏற்பாடு செய்யவேண்டும்.
இப்படி அனைவரையும் ஒன்றுசேர்த்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்திய அண்ணன் சீமான் அவர்களுக்கு முதலில் நாம் நன்றியைச் சொல்ல வேண்டும்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழன் சேரன் அவர்கள், உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான சிவாஜி ரசிகர்களின் மனதில் என்ன இருக்கிறதோ அதைத் தான் தனது உரையில் அவர் பேசினார். அருமையான அட்டகாசமான எதிரிகளின் முகத்திரையை அவர் கிழித்தெறிந்தார்.
சேரன் ஆற்றிய உரையில் சில...
சிவாஜி அவர்களைப் போல் நேர்மையான அரசியல்வாதியை யாராவது காண்பிக்க முடியுமா.
சிவாஜியை எதிர்த்தவர்கள் யாரும் தமிழன் இல்லை. சிவாஜி தமிழன் என்பதால் தான் அவரை எதிர்த்தனர்.
சிவாஜி சிலையை எடுத்தவர்கள் கட்சியும், ஆட்சியும் அழிந்து போகும்,
ஆனால் சிவாஜி அவர்களின் புகழில் ஒரு ம---ரைக் கூட எவரும் பிடுங்க முடியாது.
அண்ணன்மார்கள் சீமான் அவர்களுக்கும், சேரன் அவர்களுக்கும் கோடானு கோடி நன்றிகள்..
நடிகர் திலகத்தின் 72 வது வெற்றிக்காவியம்
மருதநாட்டு வீரன் வெளிவந்த நாள் இன்று
மருதநாட்டு வீரன் 24 ஆகஸ்ட் 1961
https://upload.wikimedia.org/wikiped...ttu_Veeran.jpg
https://i.ytimg.com/vi/_HzBrO0rLb4/hqdefault.jpg
இன்று காலை 11 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் " நவராத்திரி "
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...78&oe=5A5F3A96
நடிகர் திலகத்தின் 17 வது திரைப்படம்
கூண்டுக்கிளி வெளிவந்த நாள் இன்று
கூண்டுக்கிளி 26 ஆகஸ்ட் 1954
https://upload.wikimedia.org/wikiped...oondukkili.jpg
நடிகர் திலகத்தின் 18 வது திரைப்படம்
தூக்குத் தூக்கி வெளிவந்த நாள் இன்று
தூக்குத் தூக்கி 26 ஆகஸ்ட் 1954https://upload.wikimedia.org/wikiped...ku_thookki.jpg
நடிகர் திலகத்தின் 158 வது திரைப்படம்
தவப்புதல்வன் வெளிவந்த நாள் இன்று
தவப்புதல்வன் 26 ஆகஸ்ட் 1972
https://encrypted-tbn0.gstatic.com/i...GmicoIC0zXEh6D