https://i.postimg.cc/9MPrLJC2/IMG-3190.jpg
Printable View
M.G.R. உதவி செய்ய வேண்டும் என்று நினைத்துவிட்டால் நேரம், காலம் பார்க்க மாட்டார். தான் எவ்வளவுதான் கடினமான பணியில் இருந்தாலும் தேவைப்படும் நபருக்கு சரியான நேரத்தில் உதவி செய்யக் கூடியவர். அதிலும் வசதியுடன் வாழ்ந்து பின்னர் நொடித்துப் போனவர் என்றால் அவர்களுக்கு உதவும்வரை அவர் மனம் அமைதி அடையாது.,
அந்த உதவி இயக்குநரின் பெயர் கோபாலகிருஷ்ணன். பல படங் களில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். ‘நாடோடி மன்னன்’ படத்தில் எம்.ஜி.ஆருக்கு உதவியாக இருந்தவர். வேறு பல படங்களுக்கும் உதவி இயக்குநராக இருந்துள்ளார். நல்ல நிலையில் இருந்தவர், காலச் சூழலில் நொடித்துப் போனார். சென்னை நங்கநல்லூரில் வாடகை வீட்டில் தனது குடும்பத்துடன் சிரமப்பட்டு வந்தார்.
கிடைத்த சிறிய வேலைகளை செய்து குடும்பத்தினரின் பசியாற்றுவதே அவ ருக்கு பெரும்பாடாக இருந்தது. வீட்டு வாடகையைக்கூட அவரால் கொடுக்க முடியவில்லை. சில மாதங்கள் வாடகை பாக்கி இருந்த நிலையில், வீட்டின் உரிமையாளர் பொறுமை இழந்தார். ஒருநாள், வீட்டில் உள்ள தட்டுமுட்டு சாமான்களை எடுத்து வெளியே வீசி விட்டு வீட்டையும் உரிமையாளர் பூட்டி விட்டார். நிர்க்கதியாக நின்ற குடும்பத் தினரை நெருங்கிய நண்பர் வீட்டில் விட்டுவிட்டு தனது உறவினர்கள், நண் பர்களிடம் உதவி கேட்டார் கோபால கிருஷ்ணன். அவருக்கு கிடைத்தது ஏமாற்றம் மட்டுமே.
என்ன செய்வது என்று தெரியாத நிலையில், கோபாலகிருஷ்ணனுக்கு எம்.ஜி.ஆரின் நினைவு வந்தது. பல ஆண்டுகளாக எம்.ஜி.ஆரோடு அவ ருக்கு தொடர்பு இல்லை. தன்னை எம்.ஜி.ஆர். நினைவில் வைத்திருப்பாரா? நினைவில் இருந்தாலும் நெருக்கம் இல் லாத நிலையில் உதவி செய்வாரா? என்று அவருக்கு சந்தேகம். இருந்தாலும், கடைசி முயற்சியாக எம்.ஜி.ஆரை பார்த்துவிடலாம் என்று அவரைத் தேடிச் சென்றார்.
அப்போது, வாஹினி ஸ்டுடியோவில் ‘பட்டிக்காட்டு பொன்னையா’ படப்பிடிப் பில் எம்.ஜி.ஆர். இருந்தார். படப்பிடிப்பு முடியும்வரை காத்திருந்தார் கோபால கிருஷ்ணன். படப்பிடிப்பு முடிந்து வெளியே வந்த எம்.ஜி.ஆர்,, சோகத் துடன் நின்றிருந்த கோபாலகிருஷ்ணனை பார்த்ததும் அடையாளம் கண்டுகொண் டார். அகமும் முகமும் மலர அவரை அழைத்து நலம் விசாரித்தார்.
கோபாலகிருஷ்ணனின் முகத்தையும் உடையையும் பார்த்தே அவரது நிலை மையை எம்.ஜி.ஆர். தெரிந்துகொண் டார். அவர் அன்போடு விசாரித்ததைப் பார்த்து, கோபாலகிருஷ்ணனுக்கு அது வரை அடக்கி வைத்திருந்த அழுகை வெடித்தது. அவரை சமாதானப்படுத்தி எம்.ஜி.ஆர். ஆறுதல் கூறினார். ஆசு வாசப்படுத்திக் கொண்டு, தனது நிலை மையையும் குடும்பத்தினரை நண்பர் வீட்டில் விட்டுவிட்டு வந்திருப்பதையும் குமுறித் தீர்த்தார் கோபாலகிருஷ்ணன்.
அதைக் கேட்டு துடித்துப்போன எம்.ஜி.ஆர்., ‘‘உங்கள் நிலைமையை ஏன் முன்பே என்னிடம் தெரிவிக்கவில்லை?’’ என்று அவரை அன்போடு கடிந்து கொண் டார். ‘‘வாடகை பாக்கி எவ்வளவு?’’ என்று கேட்டார். ‘‘மூவாயிரம் ரூபாய்’’ என்று பதிலளித்தார் கோபாலகிருஷ்ணன். அவரை சாப்பிட வைத்து கைச்செலவுக்கு சிறிது பணம் கொடுத்ததுடன், தனது உதவியாளர்களிடம் அவரது வீட்டு முக வரியை கொடுத்துவிட்டு போகச்சொன் னார். எம்.ஜி.ஆரை கோபாலகிருஷ்ணன் பார்த்தது பிற்பகலில். அன்று மாலை முதல் பலத்த மழை பெய்தது.
‘எம்.ஜி.ஆரிடம் சொல்லிவிட்டோம். எப்படியும் உதவி கிடைக்கும்’ என்ற நம்பிக்கையில் கொட்டும் மழையிலும் பூட்டப்பட்டிருந்த தனது வாடகை வீடு முன்பு தாழ்வாரத்தில் ஒடுங்கியபடி அமர்ந்து, சாலையைப் பார்த்துக் கொண்டிருந்தார் கோபாலகிருஷ்ணன்.
அவரது நம்பிக்கை வீண்போக வில்லை. அவர் வீட்டுக்கு இரண்டு வீடுகள் தள்ளி ஒரு கார் வந்து நின்றது. அதில் இருந்தவர்கள் எம்.ஜி.ஆரின் உதவி யாளர்கள். தன்னைப் பற்றி அவர்கள் விசா ரிப்பதை அறிந்து, ஓடோடிச் சென்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் கோபாலகிருஷ்ணன். அவரிடம் எம்.ஜி.ஆர் கொடுக்கச் சொன்னதாக பேப்பரில் சுற்றப்பட்ட ஒரு பொட்டலத்தை உதவியாளர்கள் கொடுத்தனர்.
இதில் பத்தாயிரம் ரூபாய் இருக் கிறது. வாடகை பாக்கியான மூவாயிரம் ரூபாய் போக மீதிப் பணத்தை உங் களையே வைத்துக்கொள்ளச் சொன் னார்’’ என்று கோபாலகிருஷ்ணனிடம் எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் தெரி வித்தனர். நன்றிப் பெருக்கில் மழை யுடன் போட்டியிட்டபடி, கோபால கிருஷ்ணனின் கண்களில் இருந்து ஆனந் தக் கண்ணீர் கொட்டியது. பின்னர், அவ ருக்கு சில வாய்ப்புகளும் கிடைத்தன. இது எம்.ஜி.ஆரின் உதவிதான் என்று தெரிந்து கொண்டார் கோபாலகிருஷ்ணன்.
இதில் முக்கியமான விஷயம் என்ன வென்றால், அன்றிரவு வெகுநேரம் வரை எம்.ஜி.ஆர். சாப்பிடாமல் இருந்தார். தனது உதவியாளர்கள் திரும்பி வந்து, ‘‘கோபாலகிருஷ்ணனிடம் பணத்தை கொடுத்துவிட்டோம்” என்று தெரிவித்த பிறகுதான் சாப்பிடச் சென்றார்.......... Thanks...
வருகின்ற 09-08-2019 வெள்ளிக்கிழமை முதல் மகத்தான ஆரம்பம்... கோவை - ஷண்முகா dts தினசரி 4 காட்சிகள்... மிக குறைந்த இடைவெளியில் திரையிடப்படுகிறது...எப்பொழுதும் வசூல் சக்கரவர்த்தி மக்கள் திலகம் " குடியிருந்த கோயில்" காவியம்...
மக்கள்தில*கத்தின் நெருங்கிய நண்பரும், தலைவ*ரை வைத்து அதிக படங்களை இயக்கியவர் சாண்டோ சின்னப்பாதேவர். எம்ஜிஆரை ஆண்ட*வரே என்றும் முருகா என்றும்தான் பெரும்பாலும் அழைப்பார். முருகன் என் இஷ்ட தெய்வம். எம்ஜியார் என் கண் க*ண்ட* தெய்வம் என்றும் கூறுவார். இவ*ரால் ஏற்றம் பெற்ற ந*டிக*ர்க*ள் ஏராள*ம்! தேவ*ர் தன*து 64ஆம் வ*யதில் 1978 செப்டம்பரில் மார*டைப்பு கார*ண*மாக இறந்தார். கோவையில் அவரது இல்ல*த்திற்கு திரையுல*க*மே திர*ண்டுவ*ந்து க*ண்ணீர் அஞ்ச*லி செலுத்தினர்.
முதல்வர் எம்ஜிஆர் தனது பால்ய நண்ப*ருக்கு நேரில் வ*ந்து இறுதி அஞ்ச*லி செலுத்தினார். தேவரின் இல்லத்திலிருந்து ந*ஞ்சுண்டாபுரம் ம*யானம் வ*ரை 3 கிலோ மீட்ட*ர் ந*ட*ந்தே வ*ந்து தேவ*ரின் இறுதி ஊர்வ*ல*த்தில் க*ல*ந்துகொண்டார். அனைத்து திரை ந*ட்ச*த்திர*ங்க*ளும் ந*ட*ந்தே சென்ற*ன*ர். அந்த* காட்சியே இது!
பலருக்கும் எவ்வளவோ உதவிகள் செய்திருக்கிறார். ஆனால், அவருக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் குடும்பச் சொத்துக்களை விற்க முனைந்த தாய்மார்கள் உண்டு. எம்.ஜி.ஆரை தங்கள் மகனாகவே கருதிய மூதாட்டிகள், தங்கள் விவசாய நிலத்தில் அவர் காலடி பட்டால் மண்ணெல்லாம் பொன்னாய் விளையும் என்று நம்பினர்!
வரி பாக்கிகளுக்காக எம்.ஜி.ஆரின் சொத்துக்கள் ஜப்தி செய்யப்பட லாம் என்று வதந்திகள் பரவிய நேரம். திண்டிவனத்தில் ஆசிரியராக பணி யாற்றி வந்த இரா.ஷெரீப் என்பவர், எம்.ஜி.ஆருக்கு கடிதம் எழுதினார். ‘‘தங்கள் சொத்துக்கள் ஜப்தி செய்யப் படலாம் என்று வரும் செய்திகள் அறிந்து என்னைப் போலவே தங்களையும் தனது மகனாகக் கருதும் எனது தாய் மிகுந்த வருத்தமடைந்திருக்கிறார். குடும்பச் சொத்துக்களை விற்று தங்களுக்கு உதவச் சொன்னார். என் வீடு, மனை ரூ.40 ஆயிரம் விலைபோகும். அதை தங் களுக்கு அளிக்கிறேன். என் தாய் தங் களுக்காக உயிரைக்கூட தர சித்தமாக இருக்கிறார்’’ என்று கடிதத்தில் ஷெரீப் கூறியிருந்தார்.
எம்.ஜி.ஆர். தனது தாய் சத்யா அம்மையாரை தெய்வமாக மதிப்பவர். ராமாவரம் தோட்டத்து வீட்டில் தாய்க்கு சிறிய கோயிலே கட்டியிருந்தார். வெளியே புறப்படும் முன் தாயை வணங்கி விட்டுத்தான் புறப்படுவார். மற்ற தாய்மார் களையும் சொந்தத் தாய் போலவே கருதினார். ஷெரீப் எழுதிய கடித விவரங் களைப் பற்றியும் அந்தத் தாயைப் பற்றியும் ‘ஆனந்த விகடன்’ இதழில் வெளிவந்த தனது சுயசரிதையான ‘நான் ஏன் பிறந்தேன்’ தொடரில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
‘‘வயதான காலத்தில் அந்தத் தாய் தன் மக்களுடைய எதிர்காலத்துக்கு என் பதைப் பற்றி சிறிதேனும் கவலைப்படா மல் என்னுடைய கடனைத் தீர்க்க, தங் களின் சொத்துக்களை விற்க முடிவெடுத் தார்களே, அந்த மனித தெய்வத்தை நான் வணங்காதிருப்பது எப்படி? அந்தத் தாய் எனக்காக உயிரைத் தரவும் துணிந்து விட்ட நிலையில், நான் அவர்களுக்காக என் உயிரைத் தராவிடினும் உழைப்பை யாவது தரவேண்டாமா?’’ என்று எம்.ஜி.ஆர். எழுதியுள்ளார்.
தனக்காக அவர்கள் சொத்துக் களை விற்பதை ஏற்க எம்.ஜி.ஆர். மறுத்துவிட்டார். பின்னர், அந்தத் தாயார் உடல் நலம் பாதிக்கப் பட்டுள்ளார் என்பதை கடிதம் மூலம் அறிந்து, திண்டிவனம் சென்றார். ஷெரீப்பின் வீட்டுக்குச் செல்வதற்காக சிறிய சந்துகளின் வழியே எம்.ஜி.ஆர். நடந்து சென்றார். தங்கள் சந்தில் எம்.ஜி.ஆர். நடந்து வருவதை நம்பமுடி யாத மக்கள் மகிழ்ச்சியுடன் அவரை வரவேற்று, ஓட்டமும் நடையுமாய் கூடவே சென்றனர். ஷெரீப்பின் வீட்டை அடைந்த எம்.ஜி.ஆரை, மூத்த மகனை கண்ட மகிழ்ச்சியுடன் படுக்கையில் இருந்தவாறே கண்ணீருடன் வரவேற் றார் அந்தத் தாய். அவரது கரங்களை ஆதரவாகப் பிடித்தபடி நலம் விசாரித்தார் எம்.ஜி.ஆர்.!
தர்மம் தலை காக்கும்’ படத்தில் எம்.ஆர்.ராதாவின் மகள் சரோஜாதேவி. அவர்களது வீட்டுக்கு வரும் எம்.ஜி.ஆரின் தலைக்கு மேல் இருக்கும் அலங்கார விளக்கு விழும்போது அவரை சரோஜாதேவி காப்பாற்றுவார். அப்போது, எம்.ஜி.ஆரைப் பார்த்து எம்.ஆர். ராதா, ‘‘தர்மம் ஒருமுறைதான் தலை காக்கும்’’ என்று எச்சரிப்பார். புன்னகையை மட்டுமே பதிலாக அளித்து விட்டு, காரை ஓட்டியபடி எம்.ஜி.ஆர் திரும்பும்போது இந்தப் பாடல்…
‘தர்மம் தலை காக்கும்
தக்க சமயத்தில் உயிர் காக்கும்
கூட இருந்தே குழி பறித்தாலும்
கொடுத்தது காத்து நிற்கும்...’
திரையுலகில் வி.சாந்தாராமை தனது ஆசான்களுள் ஒருவராக எம்.ஜி.ஆர் கருதினார். இந்தியில் ‘தோ ஆங்க்கே பாரா(ஹ்) ஹாத்’ என்ற பெயரில் வி. சாந்தாராம் தயாரித்து இயக்கிய படம்தான் தமிழில் உதயம் புரொடக் ஷன்ஸ் சார்பில் எம்.ஜி.ஆர். நடித்த வெற்றிப் படமான ‘பல்லாண்டு வாழ்க’ ஆனது.
சந்தர்ப்பவசத்தால் குற்றம் செய்துவிட்டு தண்டனை அடைந்த கைதிகளும் மனிதர்கள்தான் என்பதை விளக்கும் வகையில், கொடும் குற்றங்கள் செய்த கைதிகள் 6 பேரை மனம் திருந்தியவர்களாக மாற்றும் ‘ஜெயிலர் ராஜன்’ பாத்திரத்தில் அப்படத்தில் எம்.ஜி.ஆர். சிறப்பாக நடித்திருந்தார்.......... Thanks.........
எம்.ஜி.ஆரின் உடல் அடக்கம்
*****************************************
முதல்வருக்குக் கீழே வரிசையாய்ப் படிக்கட்டில் உட்கார்ந்திருந்த ஆர்.எம்.வீ. உட்பட அமைச்சர்கள் அனைவரும் எழுந்தனர். படிக்கட்டுகளைத் தாண்டி, பிரதமர் ராஜீவ் கூட்டத்துக்குள் இருந்து வந்தார். மலர் வளையம் வைத்து வணங்கிவிட்டு, முதல்வரைப் பார்த்தபடியே சற்று நேரம் நின்றார். பிரதமர் புறப்பட்ட அடுத்த ஒரு மணி நேரத்துக்குள், கடற்படை வீரர்கள் மலர் வளையத்தோடு.. ஒரு தட்டு நிறையப் பூக்களுடனும் முன்வர, ஜனாதிபதி வெங்கட்ராமன் தன் துணைவியாருடன் வந்தார். அவரைத் தொடர்ந்து கவர்னர்... இப்படி ஒரே வி.ஐ.பி-க்கள் மயமாய் இருந்தது.
தன் புதல்வர்கள் ராம்குமார், பிரபுவுடன் வந்த சிவாஜி கணேசன், பண்ருட்டி ராமச்சந்திரனைத் தழுவிக் கொண்டு அழுதார். குழந்தைபோலத் தேம்பியபடி, ''இன்னிக்கா, நேத்திக்கா... நாப்பது வருஷமா அண்ணன் தம்பியா இருந்தோமே... 'எதுன்னாலும் நீ என்னை வந்து பார்... ஏன் நீ வர மாட்டேங்கறே?’ன்னாரே... இனி நான் யார்கிட்ட போவேன்?'' என்று சிவாஜி குமுறிக்கொண்டு இருந்தபோது, ஆந்திர முதல்வர் என்.டி.ராமராவ் மண்டபத்துக்குள் நுழைந்தார். அடுத்த சில நிமிடங்களில் கருப்பையா மூப்பனார், பழனியாண்டி உள்ளிட்ட காங்கிரஸ் பிரமுகர்கள் வந்து சேர்ந்தனர்.
ஓர் அ.தி.மு.க பிரமுகர் ஆர்.எம்.வீ-யிடம் வந்து, ''ரஷ்யாவில் லெனினின் உடலை ரசாயனத் திரவத்தில் வைத்திருக்கிற மாதிரி, தலைவர் உடலையும் வைக்கணும். சென்னையிலேயே ஒருவர், தான் அப்படிச் செய்து தருவதாகப் பல முறை கல்வி அமைச்சருக்கு பெட்டிஷன் கொடுத்து இருக்கிறார்...'' என்றார்.
சற்று யோசனையுடன் இருந்த ஆர்.எம்.வீ., ''அதெல்லாம் வேண்டாம்... தலைவர் அதை விரும்ப மாட்டார். அண்ணாவைப்போல, சந்தனப் பெட்டிக்குள் வைத்தே அடக்கம் செய்யலாம்!'' என்றார். அந்தப் பிரமுகர் விடாப்பிடியாக, ''சந்தனப் பெட்டி நாட்பட நாட்படக் கரைஞ்சு போகும். நாம் கண்ணாடிப் பெட்டியில் ரசாயனத் திரவத்துக்குள் தலைவரைவெச்சு, அதை சந்தனப் பெட்டிக்குள் வைத்துவிட்டால், உடல் அப்படியே இருக்கும்!'' என்றார்.
சற்று யோசித்த ஆர்.எம்.வீ., ''எக்ஸ்பெரிமென்டலா எதையும் செய்ய முடியாது. முறையல்ல... அதெல்லாம் வேண்டாம்!'' என்று மறுத்தார். பின்னர் நெடுஞ்செழியன், ஆர்.எம்.வீ., பண்ருட்டி ராமச்சந்திரன் அடங்கிய குழு ஒன்று, முதல்வர் அடக்கம் செய்யப்பட இருந்த இடத்தைப் பார்வையிடக் கிளம்பியது.
போலீஸ் உயர் அதிகாரி ஒருவர், ஜெயலலிதாவிடம் சென்று, ''காலையில இருந்து நின்னுட்டே இருக்கீங்க... கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துக்குங்க மேடம்...'' என்றார். ஜெயலலிதா அதைக் காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை. நின்ற இடத்திலேயே அசையாமல் இருந்தார்.
முதல்வரின் நெருங்கிய உறவினர்களை அழைத்தார் டி.ஜி.பி. ரவீந்திரன்! ''இறுதிச் சடங்குகள் குடும்ப வழக்கப்படிதானே...?'' என்றார். அவர்கள், ''ஆம்'' என்றதும், ''நீங்க இப்போ தோட்டத்துக்குப் புறப்படுங்க... நாளை மதியம் இரண்டு மணிக்கே அடக்கம் செய்யும் இடத்துக்கு வந்துடுங்க. நீங்க மறுபடியும் நாளைக்கு இங்க வந்து ஊர்வலத்தில் மாட்டிக்க வேண்டாம்!'' என்று, அவர்களை ராமாவரம் அனுப்பிவைத்தார்.
திரும்பிய திசையெல்லாம் ஆண்களும் பெண்களுமாக, முண்டியடித்துக்கொண்டு இருந்தனர். வழி நெடுக, பலர் கை கால்களில் போலீஸாரிடம் பெற்ற தடியடித் தழும்புகளும் ரத்தச் சிராய்ப்புகளும். மாலை 6 மணிக்கு அண்ணா சிலை அருகே வந்தபோது, வெளியூர்களில் இருந்து வந்து சேர்ந்தவர்கள் மூட்டை முடிச்சுகளுடன் முதல்வர் முகம் பார்க்க வரிசையாக, காத்துக் கிடந்தனர்.
ஒரு காவல் துறை அதிகாரியிடம், ''அவரை உயிரோட பார்க்கவுல வந்தேன்... என்னை அடிங்க, அடிச்சுக் கொல்லுங்க... என் சாமியைப் பாக்காம நான் ஊர் திரும்ப மாட்டேன்!'' என்று இரு கைகளாலும் மாறி மாறி அடித்துக்கொண்டு கதறினார் கிராமத்துப் பெரியவர் ஒருவர். இப்படி ஆயிரக்கணக்கானோர் மறுநாள் மதியம்வரை சாப்பாடு, தண்ணீர் எதுவும் இல்லாமல் நத்தையாய் நகரும் வரிசையில் காத்துக் கிடந்தனர். திருவல்லிக்கேணி பகுதியில் இருந்து எழிலகம்வரை வரிசை இருந்தது.
வெளியூரில் இருந்து வந்திருந்த பெண்மணி ஒருவர், ''நாங்க தவமிருந்து பெத்த தலைப் புள்ளை போயிடுச்சே... எங்க குல தெய்வத்தின் உசிரே கொள்ளை போயிடுச்சே... ஐயா, ஐயா...'' என்று கதறினார். கைக்குழந்தையுடன் வரிசையில் கண்ணீர் மல்க நின்ற ஓர் இளம்பெண், ''இனி எங்களுக்குன்னு யாரு இருக்கா, எங்களை அனாதையாத் தவிக்க விட்டுட்டுப் போயிட்டாரு புரட்சித் தலைவரு...'' என்று விசும்பினார்!
கோவையில் இருந்து மருத்துவப் பல்கலைக்கழக விழாவுக்கென்று பஸ் பிடித்து வந்திருந்த ஒரு குழுவிடம் எழிலகம் அருகே பேச்சுக் கொடுத்தோம். நா தழுதழுக்கச் சொன்னார்... ''அடிமட்டத் தொண்டனை மதிச்ச கடவுள்ங்க அவரு... நாங்க இன்னும் நம்ப மாட்டோமுங்க... பல தடவை ஆன மாதிரி இதுவும் வதந்தியாப் போயிடணுமுங்க... இதே செய்தி எங்க ஊர்ல இருந்து கேட்டிருந்தா, நம்ப மாட்டோமுங்க... இது இப்பவும் வதந்தியாப் போவணுமுங்க...'' என்று குமுறிக் குமுறி அழுதார் அந்த அ.தி.மு.க. தொண்டர்!
ராஜாஜி ஹாலில் முதல்வரின் உடல் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்ட அதே சமயம், நாவலர் மற்றும் உயர் அதிகாரிகள், சமாதிக்கான இடத்தைத் தேர்ந்தெடுக்க மெரினா பீச் வந்தார்கள். முதலில் ஐ.ஜி. ஆபீஸ் எதிரே போய்ப் பார்த்து, எந்த இடத்தில் எந்த அமைப்பில் சமாதி அமைய வேண்டும் என்பதை முடிவு செய்தார் நாவலர். ஆனால், உள்துறைச் செயலாளர் டி.வி. வெங்கட்ராமன் மற்றும் ஜேப்பியார் போன்றோர், ''அண்ணாவின் இதயக்கனி என்று பெயர் வாங்கியவர் தலைவர். அவரை அண்ணா சமாதிக்கு அருகில்தான் புதைக்க வேண்டும்...'' என்று வாதிட்டார்கள். பின்னர் நாவலரும் சம்மதித்து அண்ணா சமாதி அருகே வந்து இடம் தேர்ந்தெடுத்தார்.
இடம் தேர்ந்தெடுத்த அரை மணி நேரத்தில், பொதுப் பணித் துறையின் பணியாளர்கள் வெகுவேகமாகச் செயல்பட்டார்கள். ஆனால், வியாழன் மதியம் தொடங்கிய வேலை, வெள்ளிக்கிழமை பிற்பகல்தான் முடிந்தது. உள்துறைச் செயலாளரும், டி.ஜி.பி-யும் அடிக்கடி வந்து மேற்பார்வையிட்டு வேலையைத் துரிதப்படுத்தினர்.
முதல்வரின் உடல் மெரினா வரும் முன்பே லட்சக்கணக்கான மக்கள் கூட்டம்... ஆயிரக்கணக்கில் போலீஸ்...
டிரக்கில் இருந்து முதல்வரின் உடலைக் கீழே இறக்கும் சமயம், சுற்றியிருந்த கும்பல் நெருக்கியடித்துக் கொண்டு சமாதி அருகில் வரத் துடித்தது. சமாதியை நோக்கி லட்சக்கணக்கான மக்கள் ஓடி வர, போலீஸாரில் ஒரு பிரிவினரான குதிரைப் படை அவர்களை அடக்கப்படாதபாடுபட்டது. முடியவில்லை. எனவே, கண்ணீர்ப் புகைக் குண்டு வீசப்பட்டது. ''அடப் பாவிங்களா... தலைவரைப் பார்க்க வந்தவங்க கண்ணைக் குருடாக்கப் பார்க்கறீங்களா...'' என்று குரலெழுப்பியவாறு மண்ணையும் கற்களையும் எறிந்தனர். இந்தக் களேபரத்தில் சிலர் சமாதி அருகே வந்து, ''வாத்யாரே... தெய்வமே... அப்பா...'' என்றெல்லாம் கதறித் துடித்தார்கள். வேறு வழி இல்லாமல் போலீஸார் அவர்களைக் குண்டுக்கட்டாகத் தூக்கித் தூரமாய் எறிய வேண்டி வந்தது.
நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே, போலீஸ் துப்பாக்கியை எடுக்க வேண்டி வந்தது. ஆவேசமாக வந்த கூட்டம்... ''தலைவனை வெச்சிருக்கிற இடத்துலே உயிரைவிட்டா, அதுவே போதும்... சுடுங்க...!'' என்று அலற, போலீஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்ய வேண்டி வந்தது.
சுமார் 3.40-க்கு முதல்வரின் உடல் வந்து சேர்ந்தது. உடனே மத்திய அமைச்சர் சிதம்பரமும் அருகில் சென்றார். உள்துறைச் செயலாளர் டி.வி.வெங்கட்ராமன் தன் சட்டையில் இருந்து சென்ட் பாட்டிலை எடுத்து சந்தனப் பேழையில் தெளித்தார். தொடர்ந்து முதல்வரின் உடல் மீதும் மரியாதையுடன் தெளித்தார். ''சி.எம்.மோட ஃபேவரிட் பிராண்ட்...'' என்று முணுமுணுத்தார்.
அனைவரும் இறுதி அஞ்சலி செலுத்திய பின், முதல்வரின் உடலில் இருந்து தேசியக் கொடி அகற்றப்பட்டது. அவரின் உடை கொஞ்சமும் கசங்காமல் காணப்பட்டது. வலது கையில் ஒரு மோதிரமும் வாட்ச்சும் இருந்தது. ஓர் அமைச்சர், ''எதையும் கழட்ட வேண்டாம்னு சொல்லிடுங்க...'' என்றார். ''கழட்ட வேண்டாம்'' என்று பலரும் கோரஸாகக் கத்தினார்கள். அப்படியே உடல் பேழைக்குள் வைக்கப்பட்டது.
தொடர்ந்து உள்துறைச் செயலாளர் ''எல்லோரும் பார்த்தாகிவிட்டதா?'' என்று கேட்கும்போதே என்.டி.ஆர்., ''எம்.ஜி.ஆர்!'' என்று உணர்ச்சிகரமாகக் குரல் கொடுத்தபடியே பேழையை மூட, ''வாழ்க!'' என்ற கோஷம் எதிரொலிக்க, கூடியிருந்த அமைச்சர்கள் சிலர் கலங்கிப் போய் ''ஏன் மூடினீங்க... திறங்க... தலைவர் முகத்தைக் கடைசியா ஒரு தடவை பார்க்கணும்...'' என்று கதறினார்கள். குறிப்பாக ராஜாராமும் ஆர்.எம்.வீ.யும், ''திறங்க...'' என்றார்கள் உரக்க!
ஆனால், டி.வி.வெங்கட்ராமன், ''வேணாம் சார்... ஒரு முறை மூடிட்டா திரும்பத் திறக்கக் கூடாது... அது சம்பிரதாயம்...'' என்றார். இப்போது வீரப்பனுடன் சௌந்தரராஜனும் சேர்ந்து, ''ப்ளீஸ்... கடைசியா ஒரு தடவை பார்த்து விடுகிறோம்...'' என்று கெஞ்சினார்கள். உடனே உள்துறைச் செயலாளர் கையெடுத்துக் கும்பிட்டு, ''வேணாங்க... சம்பிரதாயப்படி மூடப்பட்ட பெட்டியைத் திரும்பத் திறக்கக் கூடாது... நான் நல்லதுக்குதான் சொல்றேன்...'' என்று சொன்னார். அத்துடன், ''உம்! சந்தனக் கட்டையை எடுங்கப்பா...'' என்று குரல் கொடுக்க, துண்டு துண்டாய் இருந்த சந்தனக் கட்டைகள் ஆளுக்கொன்றாய் கொடுக்கப்பட்டன.
பிறகு, ராணுவம் மற்றும் போலீஸ் மரியாதை... குண்டுகள் முழங்க, பேழைக் குழியினுள் இறக்கப்பட்டது. சௌந்தரராஜன் தன் மடியில் வைத்து இருந்த புனித கங்கை நீர்ச் செம்பை உடைத்துக் குழியில் தெளித்தார். மற்றவர்கள் அழுது கொண்டே சந்தனக் கட்டைகளைப் போட்டார்கள்.
டி.ஜி.பி. ரவீந்திரன், ''உப்பு...'' என்று குரல் கொடுத்தார். எல்லார் கைக்கும் உப்பு வந்தது. கடைசியாகப் பளிங்குக் கல் கொண்டு வரப்பட்டு, அந்த மாமனிதரின் கல்லறை மூடப்பட்டது.
உள்துறைச் செயலாளர் தன் பாக்கெட்டில் இருந்து சூடம் எடுத்து சௌந்தரராஜனிடம் கொடுக்க, அவர் அதைக் கொளுத்தினார். ஒவ்வொருவராய் சூடத்தைக் கண்களில் ஒற்றிக் கொண்டார்கள்....... Courtesy : wa.,
இந்தியாவின் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதம மந்திரி, முப்படைத் தளபதிகள், என அனைவரும் ஒன்றாய் நாட்டின் தலைநகரை விட்டுச் செல்லக் கூடாது என்பது மரபு ஆனால் ஒருங்கே அனைவரும் கலந்துகொண்டது நம் புரட்சி தலைவரின் இறுதி அஞ்சலியின் போது தான்...........இது உண்மையிலேயே மிக பெரும் பெருமை என கூறியது மிகையாகாது......... Thanks...
ஏன் எம்.ஜி.ஆர். தனது ரசிகர்களை ரத்தத்தின் ரத்தமே என்று அழைத்தார் .
எம்.ஜி.ஆர்.மக்கள் மன்றத்தில் உறுப்பினராக உள்ள மதுரை திரு.எஸ்.குமார் அவர்கள் கூறுவது :
எம்.ஜி.ஆர். திரைப்படங்கள் இன்னும் அரங்குகளில் வெளியாகி வெற்றி பெறுகின்றன .20 மற்றும் 30 வயதுக்குட்பட்டோர்,இளைஞர்கள் எம்.ஜி.ஆர். படங்கள் பார்த்து பரவசம் அடைகின்றனர் .எம்.ஜி.ஆர்.ஆதரவாளர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்பதற்கு இதைவிட வேறு என்ன சாட்சி வேண்டும் .மேலும் திரு.குமார் கூறியதாவது, நான் மது, சிகரெட் ஆகியவற்றை தொட்டதே இல்லை என் வாழ்நாளில்.உண்மையான எம்.ஜி.ஆர். ரசிகர்கள் அதை பயன்படுத்த யோசிக்கவோ ,சிந்திக்கவோ கூடாது. எம்.ஜி.ஆர் ஒரு முறை சங்கே முழங்கு படத்தில் வில்லனின் தந்திரத்தால் மது குடிக்கும் சூழ்நிலை ஏற்படும் என்பதை கண்ணீருடன் தெரிவித்தார்.எங்களை போன்ற பக்தர்களின் நினைவுகளில் நீடித்து நிலைத்த புகழுடன் உள்ள தலைவர் எம்.ஜி.ஆர்.என்றும் மறையாமல் வாழ்வார்
டைம்ஸ் ஆப் இந்தியா ...
05/08/2019,,சென்னை.......... Thanks...
TIMES OF INDIA -05/08/19
http://i64.tinypic.com/qskwmq.jpg
நேற்று வந்த (05-08-2019) whatsapp message: சென்னை அகஸ்தியா(2,வது முறை வெளியீடு ) 28/07/19 ஞாயிறு மாலை காட்சி - டிஜிட்டல் ஆயிரத்தில் ஒருவன் பார்த்தவர்கள் 530 பேர் .
கோவை டிலைட் (கோவையில் 7வது முறை வெளியீடு )04/08/19 ,ஞாயிறு மாலை காட்சி
டிஜிட்டல் நினைத்ததை முடிப்பவன் பார்த்தவர்கள் 290 பேர்கள்
மதுரை சென்ட்ரல் 28/07/19 ஞாயிறு மாலை காட்சி -என் அண்ணன்- பார்த்தவர்கள் 550 பேர்கள்
கோவை சண்முகாவில் டிஜிட்டல் கர்ணன் (கோவையில் 2வது முறை வெளியீடு )ஞாயிறு மாலை காட்சி 04/08/19
பார்த்தவர்கள்190 நபர்கள் .சண்முகாவில் படம் இன்றே கடைசி.
நாளை முதல் கரகாட்டக்காரன்
வெள்ளி முதல் 09/08/19
குடியிருந்த கோயில் (கோவையில் பலமுறை வெளியான படம் )தினசரி 4காட்சிகள்.......... Thanks...
http://i63.tinypic.com/2ahsbcp.jpg
துக்ளக் வார இதழ் -14/08/19
தினமலர் வாரமலர் 28/7/19
http://i67.tinypic.com/ayt4zd.jpg
அறுபடைவீடு பழனி நகரம் - சாமி தியேட்டர் DTS.,
மற்றும் திண்டுக்கல் என்.வி .ஜி.பி.தியேட்டர் களில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்."ஆயிரத்தில் ஒருவன் " டிஜிட்டல் திரைப்படம் கடந்த 02/08/2019 முதல் தினசரி 4காட்சிகளில் வெற்றி நடை போடுகிறது .
தகவல் உதவி :மதுரை நண்பர் திரு.எஸ்.குமார்........... Thanks...
எம்.ஜி.ஆர்., படங்களின் தலைப்புகளும் கதைகளும் அவரைச் சுற்றித்தான் இருக்கும். ‘மதுரை வீரன்’ முதல் ‘மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்’ வரை, ‘நாடோடி மன்னன்’ முதல் ‘மீனவ நண்பன்’ வரை எந்தத் திரைக்கதையின் வட்டமும் வட்டத்தின் மையப்புள்ளியும் எம்.ஜி.ஆராகத்தான் இருக்கமுடியும். சில சமயம் அவை மாறிவிட்டதுபோல் தோன்றலாம்– ‘அடிமைப்பெண்’, ‘கன்னித்தாய்’ என்பவை போல. ஆனால் அவையும் ‘காலத்தை வென்றவன் நீ’ என்ற செய்தியைத்தான் தரும், ‘என்றும் பதினாறு’ என்றுதான் ஒலிக்கும்.
ஆனால் ஐம்பதுகளின் சில படங்களில், தன்னை எப்படி வெளிக்காட்ட வேண்டும், எத்தகைய படச்சூழலில் தான் இடம்பெறவேண்டும் என்பதில் அவருக்கு பிரச்னைகள் ஏற்பட்டன.
‘ராணி லலிதாங்கி’ (1957) என்ற படத்தில் அவர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டு சில காட்சிகளில் நடித்தபின், லலிதாங்கி வலிதாங்கி ஆனதால் அவர் அதில் நடிப்பது பலிதாங்கி ஆகிவிட்டது! அதாவது அவர் படத்திலிருந்து விலக நேர்ந்தது. பிறகு, தலைமை வேடத்தில் சிவாஜி நடிக்க, படம் வெளிவந்தது.
‘சக்ரவர்த்தி திருமகள்’ (1957) படத்தில் அவ்வளவு பெரிய சேதாரம் இல்லை. அவருடைய வெற்றிப்படப் பட்டியலில் சேர்ந்த படமாகத்தான் அது அமைந்தது. ஆனால், அதன் பாத்திரப்படைப்புகளில் அவருக்குத்தோதாக இல்லாத சில அம்சங்களும் இருந்தன போலும். ‘வில்லி’யாகத் தோன்றிய எஸ்.வரலட்சுமியின் பாத்திரப்படைப்பு, சூழ்ச்சியில் பின்னப்பட்டாலும் இரண்டு பாடல்களுடன், திரைக்கதையையே நகர்த்திச்செல்லும் அச்சாணிப்பாத்திரமாக அமைந்தது.
‘ஏமாற்றம்தானா என் வாழ்விலே’ என்று வரலட்சுமி பாடிய பாடல் அருமையாக அமைந்தது. அந்தக் காட்சியில் எம்.ஜி.ஆரை நோக்கித்தான் அவர் அந்தப் பாடலைப் பாடவும் செய்தார். ஆனால், படம் முழுமை அடைந்ததும் அதைப் பார்த்த எம்.ஜி.ஆர்., பாடலைக் கத்தரிக்கச்செய்துவிட்டார்! கதாநாயகி நடிகையாக இருந்து ‘வில்லி’ வேடத்திற்கு வந்திருந்த வரலட்சுமி, இந்த கத்தரிப்பைக் கண்டு துவண்டுபோய்விட்டார். நன்றாகப் பாடக்கூடியவரின் மிக நேர்த்தியான பாடலாக அது அமைந்திருந்தது. அது பலியாகிவிட்டதே என்ற வருத்தத்தில் என்.எஸ்.கிருஷ்ணனிடம், ‘ஏமாற்றம்தானா என் வாழ்விலே’ என்று புலம்பினார் (வரலட்சுமியே என்னிடம் தெரிவித்த செய்தி இது). எம்.ஜி.ஆரிடம் முறையிட்ட கலைவாணர், பாடலை மீண்டும் படத்தில் இடம்பெறச்செய்தார்!
அது என்.எஸ்.கிருஷ்ணன் எம்.ஜி.ஆரிடம் செய்த கடைசி முறையீடாக அமைந்திருக்க வேண்டும். ஏனென்றால், ‘சக்ரவர்த்தி திருமகள்’ திரைப்படம் ஜனவரி 1957ல் வந்தது என்றால், என்.எஸ்.கிருஷ்ணன் காலமான செய்தி ஆகஸ்ட் 30ம் நாள் வெளிவந்தது.✍.......... Thanks...
கடந்த வாரம் முன்னாள் சென்னை - அகஸ்தியா 70MM வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகர் கோடியில் ஒருவர் அளிக்கும்... " ஆயிரத்தில் ஒருவன்" வெளியாகி மகத்தான வெற்றி வசூல் அள்ளி குவித்த தொகை எவ்வளவு தெரியுமா?! ஏறத்தாழ ரூபாய் ஒரு லட்சத்து ஆறாயிரம்...106000.00......... Thanks...
"குமுதம்" இதழில் மக்கள் திலகம் சம்பந்தப்பட்ட கட்டுரையில் தகவல்கள் வழ வழ, கொல கொல வென்றுதான் எழுதியுள்ளார்... முக்கியமான... உண்மையில் நடந்த நிகழ்வுகளை முறையாக விவரித்திருந்தால் பாராட்டலாம்...
ஒரு குற்றம் இல்லாத மனிதன் கோவில் இல்லாத இறைவன் - எம்.ஜி.ஆர் ரசிகரின் பதிவு https://tamil.filmibeat.com/news/m-g...in-061882.html For more updates Download Oneindia App. For Android click http://bit.ly/1indianewsapp . For iOS click http://bit.ly/iosoneindia........ Thanks...
நாளை முதல் (09/08/19) கோவை சண்முகாவில் புரட்சி நடிகர் /மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் கலக்கிய "குடியிருந்த கோயில் " தினசரி 4 காட்சிகள் தீரைக்கு வருகிறது
http://i67.tinypic.com/111mtdv.jpg
நாளை முதல் (09/08/19) சென்னை பாலாஜியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரை உலகின் "காவல்காரன் " தினசரி 2 காட்சிகள்
நடைபெறுகிறது .
http://i64.tinypic.com/2qkp1lx.jpg
இன்றுமுதல் ராஜபாளையம் செங்கோட்டை வழி சேத்தூர் வீ.பி.எஸ் திரையரங்கில் தினசரி 4 காட்சிகள் புரட்சித்தலைவரின் "எங்கவீட்டுப்பிள்ளை " வெற்றிப்பவனி மதுரை.எஸ் குமார்......... Thanks...
எங்கள் தங்கம் !
____________________
தங்கபதக்கத்தின் மேலே !
ஒரு முத்து பதித்தது போலே !
உந்தன் பட்டுக் கன்னங்களின் மேலே ஒன்று தொட்டுக் கொடுத்திடலாமோ ?
நீயும் விட்டு கொடுத்திடலாமோ ?
கவிஞர் வாலி !
இந்த பாடல் காட்சியை ஊன்றி பாருங்கள் பின் கண்களை மூடி இந்த பாடல் காட்சியை அசைபோடுங்கள் பிறகு கண்ணாடி முன் நின்று உங்களை கவனியுங்கள் உங்களுக்கு ஐந்து வயது குறைந்திருக்கும்
இது தான் எம் ஜி ஆர் !
ஹயாத் !......... Thanks...
மானங்கெட்ட மலையாளியே வெளியே போ...என்று தன்னை பார்த்து கூறிய கலைஞருக்கு எம்.ஜீ.ஆர் கூறிய பதில்.......
"நான் தமிழன் என்பதை நிரூபிக்கிறேன்-புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்"
"நான் தமிழன் என்பதை நிரூபிக்கிறேன். நீங்கள் தமிழர் என்று நிரூபிக்க முடியுமா?" என்று கருணாநிதிக்கு எம்.ஜி.ஆர். சவால் விடுத்தார். தமிழரசு கழகத்தின் 32வது ஆண்டு விழா மயிலாப்பூர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் நடந்தது. விழாவுக்கு தமிழரசு கழகத் தலைவர் ம.பொ.சி. தலைமை வகித்தார். ம.பொ.சி. எழுதிய சிலப்பதிகாரம் ஆய்வுரை என்ற நூலை எம்.ஜி.ஆர். வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:
"இப்போதெல்லாம் கருணாநிதி என்னை பற்றி குறிப்பிட்டு நான் தமிழனா என்று கேள்வி கேட்டு பேசி வருகிறார். கருணாநிதி தமிழரா? இல்லையா? என்ற கேள்விக்கு அவர் பதில் சொல்லியாக வேண்டும். கருணாநிதியே நீங்கள் தமிழர் தானா?
என் பாட்டனாரும், மூதாதையரும் தமிழர்கள்தான், மன்றாடியார் வகுப்பைச் சேர்ந்தவர்கள். தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு போய் குடியேறியவர்கள் என்று நான் கூறுகிறேன். கருணாநிதியின் மூதாதையர் ஆந்திராவிலிருந்து தஞ்சையில் குடியேறிய தெலுங்கர்கள் என்பதை அவர் ஒப்புக் கொள்கிறாரா? இல்லை என்றால் ஆதாரம் கொடுங்கள்.
நான் மன்றாடியார் பரம்பரை என்று கூறியதும், உடனே கருணாநிதி மன்றாடியாரை சந்தித்து எம்.ஜி.ஆர். மன்றாடியார் பரம்பரை அல்ல என்று அறிக்கை விடும்படி அவரை கேட்டுக்கொண்டார். அவர் எப்படி அறிக்கை விடுவார்?
ஏனென்றால் நாங்கள் மன்றாடியர் பரம்பரை என்று எனக்கு சொல்லியதே அந்த மன்றாடியர் தானே. இன்னும் சொல்லப்போனால் எங்களை கவுண்டர்கள் என்று சொல்லலாம். நான் தமிழனா? கருணாநிதி தமிழனா? என்பதை வரலாறு சொல்ல வேண்டும். அவர் தெலுங்கர் என்பதை மறுக்க அவருக்கு உரிமை உள்ளபோது நான் கேரளத்தான் என்பதை மறுக்க எனக்கு உரிமை இல்லையா? இந்த பிரச்னைக்கு ஒரு முடிவு கண்டாக வேண்டும். இதற்காகவே இப்போது நான் பல தமிழ் புத்தகங்களை சேகரித்து வருகிறேன்.
ஆந்திராவில் இருந்து வந்த கருணாநிதியின் மூதாதையர்கள் குச்சுப்பிடி நடனம் பயின்றவர்கள். தஞ்சைக்கு வந்தார்கள். தமிழரின் பரதநாட்டியம் கற்பது அவர்களுக்கு சுலபமாக இருந்தது. அதனை கற்றார்கள். ஒரு வகுப்பு தோன்றியது. இவ்வாறு வரலாறு கூறுகிறது. இதற்கு புத்தகம் இருக்கிறது. கருணாநிதி இதை மறுப்பதாக இருந்தால் ஆதாரம் இருக்கிறதா? நான் சொல்லுவது தான் சரி என்று கூறவில்லை. தவறாக இருந்தால் ஆதாரம் காட்டுங்கள். திருத்திக் கொள்கிறேன்.
ஆனால் இந்த பிரச்னையில் ஒரு முடிவுக்கு வரும் கட்டம் வந்துவிட்டது. கருணாநிதி தமிழனா? நான் தமிழனா? என்பதை இந்த தமிழகம் முடிவு செய்தாக வேண்டும்."
(ஆதாரம்: பிப்ரவரி 1978 மாலை முரசு நாளிதழிலிருந்து...)......... Thanks...
சரித்திர, சாதனை, சகாப்த சக்கரவர்த்தி புரட்சி நடிகர் அவர்களின் சில துளிகள் தங்க... வைர... நவரத்தின தடயங்கள்....................................1 931 முதல் 1958 வரை சென்னையில் 4 தியேட்டர்கள் 100 நாள் "மதுரைவீரன்" (1956) சித்ரா 126,பிரபாத் 105, சரஸ்வதி126,காமதேனு 105. மொத்தம் ஒடிய நாள் : 462 நாட்கள். அடுத்து மூன்று அரங்கில் சாதனை "நாடோடி மன்னன்".........
பாரகன் 133, அஸ்ரீ கிருஷ்ணா 147, உமா 112. பாரகன் ஒடி முடிந்த பின் சன் தியேட்டர் 70 நாள். ஆக மொத்தம் ஒடிய நாட்கள்: 462 நாட்கள்........... இரண்டு மக்கள் திலகத்தின் படங்களும் சராசரியாக 462 நாட்கள் ஒடிய சாதனையை அது வரை எந்த படமாவது இந்த இரண்டு திரைப் படங்களின் ஒடிய நாட்களை வென்று இருக்கிறதா.... 1965 ல் தான் மக்கள் திலகத்தின் திரைப்படமே வென்று புதிய சரித்திரம் படைத்துள்ளது.... ஆம் உண்மை தான். காஸினோ 211, பிராட்வே 176, மேகலா 176. காஸினோவில் இருந்து மாற்றப்பட்டு ஸ்ரீனிவாசா 50 நாள், மேகலாவிலிருந்து மாற்றப்பட்டு பெரம்பூர் வீனஸ் 71 நாள். முதலில் ஒடிய மூன்று அரங்குகள் மட்டும். ஒடிய மொத்த நாட்கள் : 563 ஆகும். இந்த நாளை 1977 வரை எந்த படமும் தாண்டியது கிடையாது..... தொடருவோம்....... நன்றி! ....... உரிமைக்குரல் ராஜு.......... Thanks...........
,
குமுதம் வார இதழ் 14.08.19ல் பெரு துளசி ஞானவேல் அவர்கள் மக்கள் திலகத்தின் வேட்டைக்காரன்.... கர்ணன் படத்தின் பின்னணி முதல் வசூல் வரை எழுதியுள்ளார். குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட வேட்டைக்காரன் அதிக வசூலை கொடுத்தது என்று எழுதியுள்ளார் 100%உண்மை, இதற்கு முன்னால் எழுதிய வார்த்தையை நன்றாக கவனிக்கவும், ரீலீஸான தியேட்டர்களில் இரும்பு கூண்டு வைத்து நிஜமான சிறுத்தையை அதில் அடைத்து வைத்தார்கள். சிறுத்தை யை வேடிக்கை பார்க்க வந்த கூட்டம் எம் ஜி ஆராயும் பார்க்க தியேட்டருக்குள் நுழைந்தது என்று எழுதி யுள்ளதை வன்மையாக மறுத்து கண்டிக்கிறோம். மக்கள் திலகம் எம்ஜிஆரையும் வேட்டைக்காரன் படத்தையும் பார்க்க வந்த கூட்டம் தான் வெளியே கூண்டில் இருந்த சிறுத்தையை வேடிக்கை பார்த்தது. இது தான் மறுக்க முடியாத உண்மை. உலகம் போற்றும் உத்தமத்தலைவனை பற்றி உண்மையை எழுதுங்கள், வயிற்றுப் பிழைப்புக்காக பொய்யை எழுத வேண்டாம்.வன்மையாக கண்டிப்போம்......... Thanks...
""என்றும் வாழும் எம்ஜிஆர்"""
சமீபத்தில் 'ஆனந்த விகடன்' பப்ளிகேஷன் சார்பில் வெளிவந்திருக்கும் ஓர் அற்புதமான நூல்""என்றும் வாழும் எம்ஜிஆர்"""
இந்நூலை எழுதியவர் மக்கள் திலகத்தின் மெய்க்காப்பாளர் திரு கே.பி.ராமகிருஷ்ணன்.40 ஆண்டுகளாக எம்.ஜி.ஆரின் தனிப் பாதுகாவலராக இருந்த நூலாசிரியர் கே.பி.ராமகிருஷ்ணன், எம்.ஜி.ஆருடனான தன் திரைப்படத் துறை அனுபவங்கள் பற்றியும் தனிப்பாதுகாவலராக இருந்த அனுபவங் களையும் இந்த நூலில் கூறியுள்ளார்.அபூர்வ தகவல்கள்..அபூர்வ புகைப்படங்களுடன்
கூடிய இந்த புத்தகத்தின் விலை ரூபாய்-150;
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மறைந்து ஏறத்தாழ 30 ஆண்டுகள் கடந்த பின்னரும் இன்னும் அவரை நெஞ்சில் வைத்து பூஜித்து வருகின்றனர் ஏழை எளிய மக்கள். தன் திரைப்படங்கள் மூலம் நல்ல கருத்துகளைச் சொன்ன எம்.ஜி.ஆர். நிஜத்திலும் அவ்வாறே வாழ்ந்து காட்டியவர். தான் இளம் வயதில் வறுமையில் வாடியதை மறக்காமல், அப்படி யாரும் ஏழ்மையில் வாடக்கூடாது என்பதால் தான் திரைத் துறையில் சம்பாதித்த வருமானத்தில் பெரும் பங்கை தன்னை நாடி வருவோருக்கு அள்ளி வழங்கி அகம் மகிழ்ந்தவர் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர். உயிருடன் இருந்தவரை அவரின் ராமாபுரம் தோட்ட இல்லம், பசியாற்றும் அட்சய பாத்திரமாகவே திகழ்ந்துகொண்டிருந்தது. இப்படி ஏழை மக்களின் மனங்களில் ஏந்தலாக இருந்ததால்தான் அ.தி.மு.க.வை தொடங்கிய ஐந்தே ஆண்டுகளில் எம்.ஜி.ஆரால் முதல்வராக முடிந்தது.
அன்புடன்..
மேஜர்தாசன்......... Thanks...
எம்.ஜி.ஆர் அவருக்காக யார் பாடிய பாடல் என்றாலும் அந்தப் பாடலில் அனுபவித்து நடித்தார் என்பதால் எந்த பின்னனி பாடகரின் பாடலும் அவருக்கு கனகச்சிதமாக பொருந்தியது.
சிதம்பரம் ஜெயராமன் பாடிய பிரபலமான எம்.ஜி.ஆர் பாடல்
’’உள்ளம் ரெண்டும் ஒன்று நம் உருவம் தானே ரெண்டு
உயிரோவியமே கண்ணே நீயும் நானும் ஒன்று” கல்யாணி ராகம்.
புதுமைப்பித்தன் படத்தில் பைத்தியம் பிடித்தவுடன் எம்.ஜி.ஆர் பாடுவதாக வரும் பாடல் சிதம்பரம் ஜெயராமன் பாடியது தான். “நீயும் கெட்டு நானும் கெட்டு பாதை விட்டு பாதை மாறிப் போவதோ? தந்தானத்தன தன்னானத்தன தன்னானத்தன தானா” அதற்கு ஆர்ப்பாட்டமாக சில ஸ்டெப் போடுவார்.
ஏ.எம் ராஜா மோகன ராகத்தில் பானுமதியுடன் பாடிய “ மாசிலா உண்மைக் காதலே, மாறுமோ செல்வம் வந்தபோதிலே” பாடல்
“மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ
இனிக்கும் இன்ப இரவே நீ வா,வா”
சீர்காழி கோவிந்தராஜன் பாடல்கள்
சபாஷ் மாப்பிள்ளையில் ’ஜிளு ஜிளு உடையிலே ஜிகுஜிகு நடையிலே ஜெகமே தன்னால் மயங்குதே
சிங்காரச்சிலையே நீ திரும்பிப் பார்த்தால் போதும் எல்லாம் வசமாகுமே’
நல்லவன் வாழ்வான் “ சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள் சிந்திய கண்ணீர் மாறியதாலே சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்”
கொடுத்து வைத்தவள் “ பாலாற்றில் சேளாடுது இடையில் நூலாடுது இரண்டு
வேலாடுது”
பி.பி.ஸ்ரீனிவாஸ் எம்.ஜி.ஆருக்காக பாடிய பாடல்கள்:
திருடாதே படத்தில் “என்னருகே நீயிருந்தால் இயற்கையெல்லாம் சுழலுவதேன்”
பாசம் -” பால்வண்ணம் பருவம் கண்டு வேல் வண்ணம் விழிகள் கண்டு மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்”
காதல் வாகனம் ‘ இங்கே வா இங்கே வா ஒரு ரகசியம்”
பாடல் காட்சிகளில் அவர் எப்போதும் கதாநாயகி பாடும்போது அல்லது ஆடும்போது ரசித்து தலையாட்டுவார்.
கதாநாயகியைப் பார்த்து சிரித்து தன் உதட்டைக் கடித்து தலையை ஆட்டி சைட் அடிப்பார்.
( மதுரையில் ரொம்ப காலம் சல்லிகள் சைட் அடிப்பது என்றால் இந்த எம்.ஜி.ஆர் மேனரிசம் தான். ’ஜாரி’ மிரண்டு ஓடும்!)
கதாநாயகியின் உதட்டை செல்லமாக கிள்ளி ஆட்டி விடுவார்.
கைககளை பின்னால் கட்டிக்கொண்டு தலையை அழகாக ஆட்டுவார்.
solo songs எல்லாமே காண கண் கோடி வேண்டும்.
’உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக’
அன்னை மடியை விரித்தாள் எனக்காக (கடைசியில் மாட்டுவண்டியில் ஏறி கைகளை விரித்துகாட்டுவார். )
‘நெல்லின் மணி போல்’ என்ற (போனாளே,போனாளே ஒரு பூவும் இல்லாமல் பொட்டுமில்லாமல்) வரிக்கு கை கட்டை விரலுடன் நடுவிரலை குவித்துக் காட்டுவார். கைகள் இரண்டும் பாடல் காட்சிகளில் இயங்கிக்கொண்டே தான் இருக்கும்.பாடல் வரிகளை விளக்கும் விதமாக எப்போதும் அவர் உடல் மொழி இருக்கும்.
அன்னை மடியை விரித்தாள் எனக்காக
உலகம் பிறந்ததும் எனக்காக பாடலில் நதி,மலர்கள், நிலவு, குயில்கள்என்றும் பெற்ற தாய் பற்றியும் கலந்தே எழுதப்பட்டது.கவித்துவமாக அன்னை மடியை விரித்தாள் என்பதில் அன்னையை ’இயற்கை’யின் படிமம் எனவும் கொள்ளலாம்.
”நான் ஒரு கை பார்க்கிறேன் நேரம் வரும் கேட்கிறேன் பூனையல்ல புலி தானென்று போகப் போகக் காட்டுகிறேன் போகப்போக காட்டுகிறேன்” பாடலின் ஒவ்வொருவரிக்கும் அவருடைய எக்ஸ்ப்ரசன்!முடிவில் ரௌத்திரம் தெரியும் முகம்.தலையை ஆக்ரோசமாக ஆட்டி நிறுத்துவார். அப்போது தியேட்டர் அதிரும் என்று சொன்னால் அது குறைவு தான்.
நான் ஏன் பிறந்தேன் பாட்டில் புலியூர் சரோஜா மகனிடம் “ பத்து திங்கள் சுமந்தாளே அவள் பெருமைப்பட வேண்டும்.உன்னை பெற்றதனால் அவள் மற்றவராலே போற்றிப்படவேண்டும்.கற்றவர் சபையில் உனக்காக தனி இடமும் வரவேண்டும், உன் கண்ணில் ஒரு துளி நீர் வழிந்தாலும் உலகம் அழவேண்டும்” வாத்தியார்! அப்போது அவர் முகம் காட்டும் உருக்கம்.
’இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்லவேண்டும்’
உருக்கம் என்ற உணர்வை எப்போதும் நேர்த்தியாக முகத்தில் வெளிப் படுத்துவார்.
”முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும் இது தான் எங்கள் வாழ்க்கை
இது தான் எங்கள் வாழ்க்கை
தரை மேல் பிறக்கவைத்தான் எங்களை தண்ணீரில் பிழைக்கவைத்தான்
கரை மேல் இருக்கவைத்தான் பெண்களை கண்ணீரில் குளிக்க வைத்தான்”
”ஆயிரம் தான் வாழ்வில் வரும் நிம்மதி வருவதில்லை... உள்ளம் என்றொரு கோயிலிலே தெய்வம் வேண்டும் அன்பே வா கண்கள் என்றொரு சோலையிலே தென்றல் வேண்டும் அன்பே வா”
“தூங்கும் மன்னவன் தூங்கட்டுமே தொடரும் கனவுகள் தொடரட்டுமே செல்லக்கிளியே மெல்லப்பேசு தென்றல் காற்றே மெல்ல வீசு”
அதே போல உற்சாகத்தையும்.
”எங்கிருந்தோ ஆசைகள் எண்ணத்திலே ஓசைகள்”
“முத்து முகம் முழு நிலவோ! முப்பது நாள் வரும் நிலவோ!சச்சா மம்மா பப்பா”
”எனக்கொரு மகன் பிறப்பான்!அவன் என்னைப்போலவே இருப்பான்” காலை தரையில் சந்தோசமாக உதைத்துக்கொள்வார்.
வாயில்லாப்பூச்சியான பண்டரிபாயிடம் “ இங்கு உண்மைகள் தூங்கவும் ஊமைகள் ஏங்கவும் நானா பார்த்திருப்பேன்.”
குதூகலம்!குஷி! - ”புதிய வானம் புதிய பூமி எங்கும் பனிமலை பொழிகிறது!
நான் வருகையிலே என்னை வரவேற்க வண்ணப்பூமழை பொழிகிறது!”
சண்டை போட்டுக்கொண்டே ஆடிப்பாடி நடிப்பார்.
’மயிலாட வான்கோழி தடை சொல்வதோ
மாங்குயில் பாட கோட்டான்கள் தடை சொல்வதோ
முயல்கூட்டம் சிங்கத்தின் எதிர்நிற்பதோ
அதன் முறையற்ற செயலை நாம் வரவேற்பதோ
ஆடப்பிறந்தவளே ஆடி வா!’
‘நான் செத்துப் பிழைச்சவண்டா
எமனை பாத்து சிரிச்சவன்டா’
சண்டைக் காட்சி பற்றி ஒருவிஷயம்
முதலில் வில்லனிடம் ’மிஸ்டெர் தயவு செய்து நான் சொல்றதெ கேளுங்க’என்று ரொம்ப கனிவாக சொல்வார். வில்லன் அலட்சியமாக ஒரு குத்து விடுவான்.’ தயவு செய்து வழிய விடுங்க ‘ என்று புன்னகையுடன் மீண்டும்சொல்லிப்பார்ப்பார். அதன் பின்பும் வில்லன் அதை சட்டையே செய்யாமல் முகத்தில் குத்துவான். எம்.ஜி.ஆர் உதட்டை தடவிப்பார்ப்பார். விரல்களில் ஆ.. ரத்தம்! அப்புறம் வில்லன் ஒருவனாக இருந்தாலும் சரி,கூட்டமாக இருந்தாலும் சரி அடி வெளுத்து விரியக் கட்டிவிடுவார்.
மற்றபடி பல சமயங்களில் சிரித்துக் கொண்டே தான் கத்தி சண்டையும் போடுவார்.
தங்கையுடன் தங்கைக்காக எம்ஜிஆர் பாடல்கள்:
“ஒருகொடியில் இருமலர்கள் பிறந்ததம்மா பிறந்ததம்மா
அண்ணன் தங்கை உறவு முறை வளர்ந்ததம்மா வளர்ந்ததம்மா” -காஞ்சித்தலைவன்
ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே”- பணக்காரக்குடும்பம்
”பூமலை தூவி வசந்தங்கள் வாழ்த்த ஊர்வலம் நடக்கின்றது”-நினைத்ததை முடிப்பவன்.
தாய் எம்.ஜி.ஆருக்கு தெய்வம்.தாயை வணங்கி பாடுவது
‘எல்லாம் எனக்கும் இருந்தாலும் அன்னை மனமே என் கோயில் \
அவளே என்றும் என் தெய்வம்’
’தாயின் மடியில் தலை வைத்திருந்தால் துயரம் தெரிவதில்லை.
தாயின் வடிவில் தெய்வத்தை கண்டால் வேறொரு தெய்வமில்லை’
’தாயில்லாமல் நான் இல்லை தானே எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தாய் இருக்கின்றாள் என்றும் என்னை காக்கின்றாள்’
காதலியிடம் கூட சவால் விட்டு வாளோடு பாடுவார்!
‘உன் விழியும் என் வாளும் சந்தித்தால்
உனை வெல்லும் மனம் துள்ளும் இன்பத்தால்’
ரொமான்ஸ்
‘காதல் ரோமியோ கண்ட நிலா
கன்னி ஜூலியட் சென்ற நிலா
பாவை லைலா பார்த்த நிலா
பாதி தேய்ந்தது வெள்ளை நிலா’
’நான் தண்ணீர் பந்தலில் நின்றிருந்தேன் அவள் தாகம் என்று சொன்னாள்
நான் தன்னந்தனியாய் நின்றிருந்தேன் அவள் மோகம் என்று சொன்னாள்’
‘நீயா இல்லை நானா ஒரு நிலையிலிருந்து வலையில் விழுந்தது நீயா இல்லை நானா
பசித்தவன் முன்னே பழமாய் வந்தது நீயா இல்லை நானா இளம் பருவத்தின் வாசலில் உருவத்தைப் பார்த்தது நானா இல்லை நீயா’
‘கரும்பினில் தேன் வைத்த கன்னம் மின்ன வா
கனி தரும் வாழையின் கால்கள் பின்ன வா
கண்ணே கனியே முத்தே மணியே அருகே வா
ஒரு நாள் இரவு நிலவையெடுத்து உன் முகம் படைத்தானோ
பல நாள் முயன்று வானவில் கொண்டு நல் வண்ணம் செய்தானோ
ஒரு கோடி முல்லைப்பூ விளையாடும் கலையென்ன
வாவென்பேன் வரவேண்டும் தாவென்பேன் தரவேண்டும்’
டி.எம்.எஸ் பாடல்கள் தான் எம்.ஜி.ஆருக்கு என்றிருந்த நிலையில் அதை உடைத்தார். புதுப்பாடகர் எஸ்.பி.பி பாட்டுக்கு தன்னம்பிக்கையோடு சந்தேகமேயில்லாமல் நடித்தார்.
“ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா”
”வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்
அதை வாங்கித்தந்த பெருமையெல்லாம் உன்னைச் சேரும்”
“நீராழி மண்டபத்தில் தென்றல் நீந்தி வரும் வெண்ணிலவில்
தலைவன் வாராது காத்திருந்தாள்”
ஜேசுதாஸ் பாடல்கள்
”விழியே கதையெழுது
கண்ணீரில் எழுதாதே’
”பிள்ளைத்தமிழ் பாடுகிறேன்
ஒரு பிள்ளைக்காக பாடுகிறேன்”
”அந்தப் பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திபூவினில் தொட்டிலைக் கட்டி வைத்தேன்”
செல்லங்கொஞ்சும் சிறு குழந்தை போல எஸ்.வரலட்சுமி பாடும்போது அவர் மடியில் தலை வைத்துப் படு்த்துக்கொள்வார்.
”அன்பிலார் எல்லாம் தமக்குரியர்
அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு
ஒன்றே குலம் என்று பாடுவோம்
ஒருவனே தேவன் என்று போற்றுவோம்”
எம்.ஜி.ஆர் இசை ஞானமிக்கவர். கர்நாடக சங்கீத ரசிகர். வாய் பாட்டு என்றில்லை.தனியாவர்த்தனமாக மிருதங்கம் மட்டுமே ரசிக்கக்கூடிய அளவுக்கு அபார இசை அறிவு. இதனால் சினிமாவுக்கு மெல்லிசைப் பாடல்களை தேர்ந்தெடுப்பதில் அசாத்திய திறமை பெற்றிருந்தார்............ Thanks........
மனிதநேயத்தின் உண்மை நேர்மை உயர்வு! இதயதெய்வம் எம்.ஜி.ஆர். அவர்களின் புகழ் பாடும் விழா! தலைநகர் சென்னையில் 2019 செப்டம்பர் 8 ம் தேதி நடைபெறும் .... காவியநாயகனின் நம்நாடு பொன்விழா. மலர் வெளியீடு, இன்னிசை, பட்டி மன்றம், கருத்தரங்கம் .... தலைவரின் புகழ்பாடும் " எம்.ஜி.ஆர். மனிதநேய இயக்கம் " துவக்கவிழா ஆகிய நிகழ்வுகள் நடைப்பெறுகிறது! வெளியூர்களில் இருந்து வரும் தலைவரின் அபிமானிகள் அரங்கிற்க்கு காலை 10.00 மணிக்குள் வரும் படி அன்புடன் அழைக்கின்றோம். இடம்: தி.நகர் ( கவிஞர் கண்ணதாசன் சிலை அருகில்) சர்.பிட்டி. தியாகராயர் அரங்கம். வருக! வருக! வருக! உரிமைக்குரல் ராஜு......... Thanks.......
கொள்கை தங்கம் எம்.ஜி.ஆர். அவர்களின் நல்லாசியுடன் 2020 ம் ஆண்டு ஜனவரியில் நடைப்பெறும் இனிய விழா! தங்கத் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் 103 வது மனிதநேயவிழா! வெள்ளிவிழா திலகத்தின் மாட்டுக்கார வேலன் திரைப்பட. பொன்விழா! கலையுலக நாயகன் எம்.ஜி.ஆர் வெள்ளித்திரையில் காலடி பதித்த 85 வது ஆண்டு விழா! நடைப்பெறும் நாள் : 26.01.2020. (இடம்; சென்னை ) இன்னும் பல செய்திகளுடன் செப்டம்பர் 8ம் தேதி நடைபெறும் விழாவில்.... அறிவிப்பு தொடரும். உரிமைக்குரல் ராஜு............ Thanks.........
போற்றுதற்குரிய பண்பாளர் புரட்சித்தலைவரின் அன்புத்தம்பி திரு சைதை துரைசாமி அவர்களைப்பற்றி ஒரு பத்திரிக்கை நிருபரின் இதயபூர்வ பாராட்டு.
https://i.postimg.cc/65PvZCbn/IMG-3243.jpg