-
சேலம் மாநகரில்*...
வசூலுக்கே இலக்கணம், இலக்கியம், இதிகாசம் படைத்த திரையுலக ஏக சக்கரவர்த்தியாம்...மக்கள் திலகத்தின் வெற்றிக்காவியங்கள் வசூலில் நிலைத்து நின்றவைகள் சில....
1956 : மதுரை வீரன்
ஒரியண்டல் : 161 நாள்
வசூல் : 2,25,481.38
1958 : நாடோடி மன்னன்
நீயூ சினிமா* 147 நாள்
சித்தேஸ்வரா 33 நாள்
மொத்த வசூல் : 2,47,160.22
1965 : எங்கவீட்டுப்பிள்ளை
சாந்தி 113 நாள்
பிரபாத் 50 நாள்
சித்தேஸ்வரா 44 நாள்
மொத்தம் 207 நாள்*
வசூல் : 2,74,776.99
1965 : ஆயிரத்தில் ஒருவன்
ஒரியண்டல் 100 நாள் : 2,16,266.22
1966 : அன்பே வா
ராயல் 107 நாள் : 2,18,617.30
1967 : காவல்காரன்
ஒரியண்டல் 106 நாள் : 2,07,198.20
1968 : ரகசியபோலிஸ் 115
ஒரியண்டல் 105 நாள் : 2,01,486.50
1968 : குடியிருந்த கோயில்
சங்கம் 86 நாள் : 2,06,316.60
1968 : ஒளிவிளக்கு*
சங்கம் 91 நாள் : 2,03,181.30
1969 ல் அடிமைப்பெண்
நகரில் 3 லட்சத்தை பெற்ற முதல் படம் இது....
சாந்தி 133 நாள் : 3,00,474.13
1969 : நம்நாடு
பேலஸ் 107 நாள் : 2,43,342.20
1970 ல் மாட்டுக்கார வேலன்
ஜெயா 156 நாள் : 3,61,307.90
ஜங்ஷன்ராம் 40 நாள்* * * * * :* * * *வசூல்* :* 42,600.35
தொடர்ந்து 196 நாள் ஒடி
மொத்தம் வசூல் :* 4,03,908 .25
நகரில் 4 லட்சத்தை ஒடி முடிய பெற்ற முதல் படம்....
1970 : என் அண்ணன்
அலங்கார் 110 நாள் :2,49,494.00
1970 : தேடி வந்த மாப்பிள்ளை
அலங்கார் : 71 நாள் : 1,85,414.25
தொடர்ந்து பிரபாத் 35 நாள் ஒடிய
மொத்த வசூல் : 2,19,370.40
1970 : எங்கள் தங்கம்
பேலஸ் 105 நாள் : 2,17,177.63
1971 குமரிக்கோட்டம்
பேலஸ் 108 நாள் : 2,29,396.96
1971 : ரிக்க்ஷாக்காரன்
அலங்கார் 118 நாள் : 3,81,692.80
1972 : நல்லநேரம்
ஒரியண்டல் 126 நாள் : 2,76,659.40
மற்றும் பிரபாத் 42 நாள்...
ஜங்ஷன் ராம் 35 நாள் ஒடியது.
மொத்த வசூல் : 3,48,107.80 ஆகும்.
1973 : உலகம் சுற்றும் வாலிபன்
சங்கம் : 126 நாள் : 5,65,662.70
(ரத்னா 41நாள்...நடராசா.. 40)
மொத்தம் 207 நாள்*
வசூல் : 6,46,320.17....
நகரில் தனி அரங்கில் 5 லட்சத்தை
கடந்தும் முதல் வெளியீட்டில் ஒடி முடிய 6 லட்சத்தை கடந்தும் சாதனை ஏற்படுத்திய காவியம்.
1974 : உரிமைக்குரல்*
சங்கம் 127 நாள் : 5,03,288.15
நகரில் 2 வதாக 5 லட்சத்தை வசூலில் பெற்றக்காவியம்...
1975 : நினைத்ததை முடிப்பவன்
ஜெயா 84 நாள் : 4,12,716.17
நகரில் 100 நாட்களை நெருங்காமலேயே 4 லட்சத்தை பெற்று..
பட்டணம்மா படத்தின்*
146 நாள் வசூல் உட்பட முறியடித்து அந் நடிகரின் அத்தனை படத்தையும் மண்ணோடு புதைத்த
காவியம் .....
1975. :* இதயக்கனி*
அலங்கார் : 105 நாளில்
5 லட்சத்தை கடந்த 3 வது காவியம்.
வசூல் : 5,08,748. 20 ஆகும்...
1975 : பல்லாண்டு வாழ்க
அப்ஸரா 104 நாள் : 3,68,725.65
1976 : நீதிக்குத்தலை வணங்கு
சங்கம் 105 நாள் : 3,72,900.20
1977 : மீனவ நண்பன்
அப்ஸரா 103 நாள் : 3,03,642.70
(தொடர்ந்து நடராசா 40 நாள்
ஜங்ஷன் ராம் 35 நாள்....)
வசூல் : 4,06,922.46 ஆகும்.
+++++++++++++++++++++++++
மேலும் பல திரைப்படங்கள் வசூலில் சாதனை செய்துள்ளது...
++++++++++++++++++++++++++++++
தொடரும் கோவை மாநகர் சாதனையில் மக்கள்திலகத்தின் காவியங்கள்.......ur...
-
பாட்டாலே*புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர்.-வின் டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*30/09/20 அன்று அளித்த தகவல்கள்*
-------------------------------------------------------------------------------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.அவர்கள் 1974ல் அமெரிக்காவிற்கு ஒரு சிறப்பு அழைப்பின் பேரில் செல்கிறார் . அங்கு சென்னைவாசியான திரு.பழனி பெரியசாமி பால்ட்டிமோர் பல்கலை கழகத்தில் பொருளாதார துறை பேராசிரியராக* இருக்கிறார்* திரு.பழனி பெரியசாமி அவர்களுக்கு எம்.ஜி.ஆர்.மீது அவ்வளவாக ஈர்ப்பு எல்லாம் இல்லாத நேரம் ..எம்.ஜி.ஆர்.அங்கு வந்தபோது அவருக்கு துணையாக இருந்து சில உதவிகள் செய்கிறார் . எம்.ஜி.ஆர்.ஒருநாள் வழக்கம் போல அவரை அழைத்து கொண்டு** நான் இங்கு அருகில் உள்ள ரயில் நிலையத்திற்கு செல்ல வேண்டும் ..அங்கிருந்து ரயிலில் பயணம் மேற்கொண்டு வேறு ஒரு இடத்திற்கு செல்லவேண்டும் என்று கூறி ,மேலும்4 பேர்களுடன் ரயிலுக்காக காத்திருக்கிறார் .ரயில் வந்துவிட்டது .ரயிலில் கூட வந்த 4 பேர்களும் ,பழனி பெரியசாமியும் ஏறிவிட்டார்கள் .ஆனால் எம்.ஜி.ஆர். ரயிலில் ஏறாமல் தன் வலப்புறம் பார்த்து கொண்டு நிற்கிறார் .ரயிலில் ஏறிய அனைவரும் இறங்கிவிடுகிறார்கள் .இந்த ரயிலை விட்டால் அடுத்து அரைமணி நேரத்திற்கு பின்தான்* அடுத்த ரயில் வரும் என்று எம்.ஜி.ஆரிடம்* பழனி பெரியசாமி கூறுகிறார் .பரவாயில்லை வலப்புறம் பாருங்கள். ஒரு பெண் தன் 3 வயது குழந்தையுடன் வேகமாக ஓடிவந்து கொண்டிருக்கிறார் .அவரை பார்த்துதான் தான் நின்றுவிட்டதாக எம்.ஜி.ஆர். கூறுகிறார் .* அந்த பெண் அருகில் வந்ததும் நீங்கள் யார் ? ஏன் இப்படி குழந்தையுடன் ஓடிவர வேண்டும் என்று எம்.ஜி.ஆர். கேட்க ,நான் சுமார் 150கி.மீ.தூரத்தில் இருந்து குழந்தையுடன் காரை சொந்தமாக ஒட்டி கொண்டுவந்தேன் . நீங்கள் இந்த ரயில் நிலையத்தில் இருந்து குறிப்பிட்ட நேரத்தில்* புறப்படுவதாக தகவல் அறிந்து வந்தேன் என்கிறார் .எம்.ஜி.ஆர். உடனே அந்த பெண்ணை ஆசுவாசப்படுத்தி , நீங்கள் எங்கு தங்கி இருக்கிறீர்கள் என்று விசாரித்து ,அவளுடைய குழந்தையை வாஞ்சையாக வாங்கி கொஞ்சி மகிழ்ந்து பின்னர் திருப்பி அனுப்பினார் .
இந்த மாதிரி நாம் பயணத்திற்கு தாமதம் செய்தால் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் குறித்த நேரத்தில் சென்றடைய முடியாது .சில இடங்களுக்கு, நிகழ்ச்சிகளுக்கு அடுத்த நாளோ அல்லது வேறு ஒரு நாளோதான் செல்ல முடியும் என்கிறார் பழனி பெரியசாமி .இருக்கட்டும் பரவாயில்லை .நான் பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து இந்த நாட்டிற்கு வந்திருக்கிறேன் .என்னை காணவேண்டும் என்பதற்காக* ஒரு பெண் தன் குழந்தையுடன் ,தன்னந்தனியாக150 கி.மீ. அவர்* காரை வேகமாக ஒட்டிக்கொண்டு வந்து ,ரயில் நிலைய நடைமேடையில் நடையும் ஓட்டமுமாக வந்து கொண்டிருக்கிறார் .அவர் மட்டும் என்னை காண முடியாமல் போயிருந்தால் மிகவும் வருத்தப்பட்டிருப்பார்.ஏமாற்றம் அடைந்திருப்பார் . .நானும் வேதனை அடைந்திருப்பேன் .அந்த பெண்ணின் எதிர்பார்ப்பை நான் நிறைவேற்றியதில்தான் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் என்று தனது சந்தோசத்தை வெளிப்படுத்தினாராம்*
தமிழ் திரைப்பட கதாநாயகர்களில் மிக சிறந்த வாள் வீரர் என எம்.ஜி.ஆர். அந்த காலத்தில் பேசப்பட்டார் .அவரது வாள் வீச்சின்போது நடனமும் ஒளிர வேண்டும் .அதனால்தான் நீரும் நெருப்பும் படத்தில் கடவுள் வாழ்த்து பாடும் என்ற பாடலில்*வாள்வீச்சு பயிற்சியை சிறுவர்களுக்கு கற்று கொடுக்கும்போது சில நடனமும்*ஆடி அதை நடனக்காட்சியுடன் கூடிய வாள்* வீச்சாக படமாக்கி இருப்பார்கள் .அப்படி அந்த வாள் வீச்சிற்கு அப்படி ஒரு சிறப்பான பெயர் புகழ் வர காரணம்*கேரளாவில் குலதெய்வ வழிபாட்டில் முக்கியமானது வெளிச்சப்பாடு என்பது .வெளிச்சப்பாடுஎன்பது தங்கள்* குலதெய்வ கோயிலில் உள்ள சாமியின் முன்னால் நீண்ட ஒரு கத்தியை வைத்திருப்பார்கள் .அந்த கத்தி என்பது ஒரு குடும்பத்தின் குலத்தைசேர்ந்த**வாரிசு . அந்த கத்தியை எடுக்க கூடிய குழந்தை எத்தனை வயதிற்குள் இருக்கவேண்டும் என்பதற்கு வரம்பு இல்லை .எம்.ஜி.ஆர். அந்த வாளை* எடுத்து கொண்டு வந்து பூஜை செய்கிற அருளாளி,சாமியார் கைகளில் தரவேண்டும் அப்படி அந்த வாளை எம்.ஜி.ஆர். கொண்டுவந்து தருவார் .அதன்பின் அந்த பூசாரி தன்* கைவிரலில் வாளால்* கீறி வரும் ரத்தத்தை எம்.ஜி.ஆர். நெற்றியில் திலகமாக இடவேண்டும் .இதுதான் வெளிச்சப்பாடு என்பது .அந்த வெளிச்சப்பாட்டிலே அந்த வாளை* தூக்கி வந்து பூசாரியின் கைவிரல் ரத்தத்தால்*,நெற்றியில் திலகம் இட்டுக்கொண்ட அந்த எம்.ஜி.ஆர்.தான் பிற்காலத்தில் வாள் வீச்சில் மாவீரனாக திகழ்ந்தார் .
பல நடிகர்கள் சொந்த படம் எடுத்து எதற்கு கையை சுட்டு கொள்ள வேண்டும் என்பதற்காக சொந்தப்படம் எடுப்பதில்லை . ஆனால் ஒரு சில கருத்துக்களை சொல்வதற்காக ,[பரீட்சார்த்தமாக , தன் கையில் உள்ள அனைத்து சொத்து ,பணம் எல்லாவற்றையும் செலவழித்து சொந்த படம் தயாரிக்க எம்.ஜி.ஆர். அவர்கள் எடுத்த ரிஸ்க் இருக்கிறதே அதற்கு அசாத்தியமான மனதைரியம் ,துணிவு ,எதையும் தாங்கும் இதயம் இருக்க வேண்டும் .இவை எல்லாம் இருந்ததால் எம்.ஜி.ஆர். துணிந்து செயல்பட்டார் . அடிமைப்பெண் படம் வெளியானபின் அதை பார்த்த நடிகர் சிவாஜி கணேசன் ,எம்.ஜி.ஆர். அண்ணனின்**சொந்த பட தயாரிப்பில் உள்ள திறமை, துணிவு, தைரியம் ,சாமர்த்தியம்* வேறு யாருக்கும் இருக்க வாய்ப்பில்லை. இது ஒரு தனி மனித சாகசம்* என்று கருத்து வெளியிட்டார் .
திரு.கா.லியாகத் அலிகான்* : புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் தான் தயாரிக்கும் சொந்த படம் நல்லமுறையில் அமைய வேண்டும் ,காட்சிகள் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக தன் சொத்துக்கள் சிலவற்றை விற்று ,சிலவற்றை அடகு வைத்து ,கடன் வாங்கியும் படத்திற்காக செலவழித்திருக்கிறார் .எம்.ஜி.ஆரின் அண்ணன் கடன் வாங்கி சொந்த படம் தயாரிப்பது தவறில்லை .ஆனால் உடனடியாக ரூ.10,000/- கேட்கிறாயே .நான் என்ன செய்வது என்று கேட்கிறார் .ஆமாம் உடனடியாக தேவை. ஒரு காட்சிக்கு சரவிளக்கு மேலே* தொங்க விடுவதற்கு தேவை .ஏற்பாடு செய்யுங்கள் என்றார் எம்.ஜி.ஆர். அந்த சரவிளக்கு சுமார் ரூ.7,000 மதிப்பில் வாங்கி தரப்பட்டு காட்சிக்காக பொருத்தப்பட்டது .எம்.ஜி.சக்கரபாணி அவர்கள் காட்சி படமாக்கியதும் அதை திருப்பி கொடுத்து விடலாம் என்ற எண்ணத்தில் வாங்கி வந்துள்ளார் .காட்சி முடியும் பட்சத்தில் அதை எம்.ஜி.ஆர். உடைக்க சொன்னார் .எம்.ஜி.சக்கரபாணி அவர்கள் இதை கண்டு ஏன் உடைக்கிறீர்கள் ,பணத்தை விரயம் ஆக்குகிறீர்கள் என்று கேட்க,காட்சியின்படி இதை உடைக்க வேண்டும் என்று* எம்.ஜி.ஆர். கூறினாராம் .பொருள் விரயம், நஷ்டம் பற்றி கவலைப்படாமல் காட்சி சிறப்பாக அமைய வேண்டும் என்பதில் கண்ணும் கருத்தாக இருந்தார் எம்.ஜி.ஆர் .
திரு.துரை பாரதி : 1960களில் வெளியான* கிளியோபாட்ரா ஆங்கில படத்தில்*கதாநாயகி வருகைக்கான காட்சி மட்டும் மிகவும் நீண்டு சுமார் 8 நிமிடங்கள் இருக்குமாம்* *அதே சாயலில் எம்.ஜி.ஆர். அடிமை பெண் படத்தில் ராணி பவளவல்லி* வேடத்தில் ஜெயலலிதா தோன்றும்போது அந்த காட்சியை அமைத்திருப்பார் .தமிழ் திரையுலகிற்கு ,இது ஒரு புதுமையான ,பெருமையான விஷயமாக பேசப்பட்டது .
திரு.கா. லியாகத் அலிகான் : எம்.ஜி.ஆர். அவர்களை ,அவர் திறமையை ,ஆற்றலை எப்படி புகழ்வது என்றே தெரியவில்லை .தன்னுடைய சிந்தனைகளை அனைத்தையும் தேக்கி வைத்து பயன்படுத்தினார் .பேரறிஞர் அண்ணா மறைந்திருந்த நேரம் . புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களை மறைமுகமாக* தி.மு.க. வில் இருந்து ஒதுக்கி வைப்பதற்கான வேலைகள் நடந்து கொண்டிருந்தன .அதை பற்றியெல்லாம் அவர் கவலைப்படவில்லை .1971 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.விற்காக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு 184 சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்வு ஆவதற்கான பணிகளில் இவருடையஉழைப்பின்* பங்கும் மிக பெரியது .அந்த தேர்தலில்* தி.மு.க.வினர் அந்த வெற்றியில் எம்.ஜி.ஆரின் பங்கை*ஒத்து கொள்ளவில்லை என்றாலும் தொண்டர்களுக்கு தெரியும்*எம்.ஜி.ஆரின் வாக்கு வங்கி எந்த அளவிற்கு*மதிப்புள்ளது ,பயன்பட்டது*என்று .ஏனென்றால் எம்.ஜி.ஆர்.அவர்களும் கடுமையாக உழைத்து பிரச்சாரம் செய்திருக்கிறார் .அந்த உழைப்பின் பலன்தான் 184 என்கிற மிருகபலம் கொண்ட*மெஜாரிட்டி தி.மு,க.விற்கு கிடைத்தது*
திரு.துரை பாரதி*: எம்.ஜி.ஆர். அவர்களுக்கு அந்த சமயத்தில் அமைச்சர் பதவி தரவில்லை என்று ஒரு புகார் இருக்கிறது .அதற்காக அவருக்கும் மனவருத்தம் இருந்ததாக சொல்லப்பட்டதே .
திரு.கா. லியாகத் அலிகான் :* எம்.ஜி.ஆர். அவர்கள் அதற்கெல்லாம் அப்பாற்பட்டவர் .அப்போது அமைச்சர் பதவி கேட்டிருந்தாலும் சினிமாவை அவர் கைவிட வேண்டும் என்று சொன்னபோது ,சினிமாதான் எனக்கு வாழ்க்கையை கொடுத்தது .அதைவிட்டு* எப்படி வரமுடியும் .அமைச்சர் பதவி கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை என்ற முடிவில்தான் அவர் இருந்தார் .ஒருவேளை அவர் சினிமாவை புறக்கணித்து அமைச்சர் பதவியை*பெற்று இருக்கலாம் .ஆனால் சினிமா என்பது எத்தகைய*ஈர்ப்பு சக்தி கொண்டது .அதன் மூலம் தி.மு.க. கட்சி, சின்னம் , கொள்கைகள் ,திட்டங்கள் எல்லாம் மக்களிடம் பிரபலம் ஆகின .அதுமட்டுமல்லாமல் சினிமா மூலம் போதிய வருவாய் கிடைத்து*கணக்கில்லாமல் ,விளம்பரம் இல்லாமல் பலருக்கு*உதவிகள் செய்து வந்தார்*.அமைச்சர் பதவி கிடைத்தால் போலீஸ் சல்யூட், மரியாதைகள் கிடைக்குமே தவிர ,மற்றபடி சினிமா மூலம் ஒரு நடிகனுக்கு உள்ள* ஈர்ப்பு சக்தி*,அரசியலிலோ, அமைச்சர் பதவியிலோ*கிடைக்க*வாய்ப்பில்லை .இதை அப்போதே புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் உணர்ந்தே இருந்தார் .அவர்*அ .தி.மு.க. கட்சி , கொடியை*தேர்வு செய்யும்போது குறிப்பாக*எங்களை த்தான்* அழைத்து*கருத்து கேட்டார் .அப்போது நான், குழந்தைவேலு , கே.ஏ.கே. அண்ணன் ,அனகாபுத்தூர் ராமலிங்கம் போன்றோர்*அமைதியாகத்தான் இருந்தோம்.அண்ணே நீங்கள் பார்த்து முடிவு செய்யுங்கள் என்றோம் .*பிறகு எம்.ஜி.ஆர். அவர்கள்தான்*கொடியை*,கொடியில் அண்ணாவின் உருவத்தை தேர்வு செய்தார் .அப்போதே*அண்ணன் கே.ஏ.கே.முன்னிலையில் எம்.ஜி.ஆர். அவர்கள் தலைமையில் என்னை உடுமலை தொகுதிக்கு மாணவ அமைப்பாளராக நியமித்தார்கள் .இதுதான் எம்.ஜி.ஆர். அவர்கள் எனக்கு அளித்த*முதல் பதவி .* அதன் பிறகு உடுமலை*தொகுதியில் எம்.ஜி.ஆர். மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதையும் அங்கீகரித்தார் .அதன் பிறகு என்னுடைய செயல்பாட்டை கண்டு ,என்னை கலந்து ஆலோசிக்காமலேயே மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளராக எம்.ஜி.ஆர். அவர்கள்* நியமித்தார்கள் .எனது பணியின் வேகம், விவேகத்தை பார்த்து*.அப்படியே படிப்படியாக உயர்த்தி மாவட்ட மாணவ அமைப்பாளர்களில்* ஒருவராக நியமித்தார் .நானும், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகிய இருவரும் பணியாற்றி வந்தபோது ,என் செயல்பாட்டை கணித்து , அண்ணன் காளிமுத்துவை மாணவர் அணி செயலாளராகவும் ,என்னை துணை செயலாளராகவும் போட்டார்கள் .அப்போது இளைஞர் அணி செயலாளராக திருநாவுக்கரசையும் ,இளைஞர்* அணி துணை செயலாளராக ஜெ.சி .டி.பிரபாகரனையும் நியமித்தார்கள் .எங்களுடைய வேகமான பணிகள்,விமரிசையாக செய்வதை பார்த்துவிட்டு, ஏழெட்டு மாதங்களில்* என்னை மாணவர்* அணி செயலாளராகவும் , ஜெ.சி.டி.பிரபாகரனை இளைஞர்* அணி செயலாளராகவும் போட்டார்கள் .இப்படி படிப்படியாக என்னை உயர்த்திக்கொண்டே* வந்தார்கள்.எனக்கே ஆச்சர்யமாக இருந்தது . .அப்போது என்னை அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் சேர்மனாக நியமித்தார்கள் .எனக்கே நேரடியாக* சென்று ஏதாவது பதவி கொடுங்கள் என்று நான் கேட்பதற்கு* கொஞ்சம் பயமாக இருந்தது*
.ஆனால் உடுமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினராகிய அமைச்சர்* குழந்தைவேலு* என் உழைப்பை* பார்த்து நேரடியாக எம்.ஜி .ஆர். அவர்களிடம் அழைத்து சென்று*.இவருக்கு ஏதாவது பதவி வாங்கி கொடுத்தே ஆகவேண்டும் என்ற எண்ணத்தில் சந்தித்தார் .நான் வெளியில் இருந்தேன் .எம்.ஜி.ஆர்.அவர்களும் அமைச்சர் குழந்தைவேலுவும் உள்ளே பேசி கொண்டிருந்தார்கள் எம்.ஜி.ஆர்.அவர்களிடம் என் வெற்றிக்காக தொகுதியில் கடுமையாக பிரச்சாரம் செய்து உழைத்தார் . ஆகவே இவருக்கு*ஏதாவது பதவி கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று சிபாரிசு*செய்துள்ளார் .அமைச்சர் குழந்தைவேலு .பின்னர் இருவரும்*வெளியே வந்தார்கள் .அப்போது தலைவர் என் தோளின்மீது கைபோட்டபடி*மாடிப்படிகளில் நடந்து வந்தார் .அப்போது கோட்டையில் லிப்ட்*கிடையாது .நீ அரசு பதவி எதுவும் கேட்க கூடாது .கட்சியில் பதவி தருகிறேன் .நான் அளிக்கும் பதவியை கொண்டு நன்றாக செயல்படு என்று 1980 ஜூலை*மாதம் 10ந்தேதி சொன்னார் .உங்கள் கரங்களால் எந்த பதவி கொடுத்தாலும் வேலை செய்ய தயார் என்று சொன்னதும்*காரில்*சென்று அமர்ந்தார் .சில வினாடிகள்*கழித்து கார் கதவை திறந்து வெளியே வந்து* சில படிகள்*ஏறி மேலே வந்து என் கைகளை பற்றி குலுக்கினார் .சில*வினாடிகள்*என் கைகளை குலுக்கிவிட்டு காரில் சென்று*அமர்ந்தார் .உடனே அனைவரும் என்னை சூழ்ந்து கொண்டு*தலைவர் உனக்கு ஏதோ*பெரியதாக தருவார் போலிருக்கிறது என்றனர் .அதன் பிறகு நான் பெங்களூரு சட்ட கல்லூரியில் படிப்பதற்காக* சென்றுவிட்டேன் .ஒரு நாள் கழித்து ,உன்னை அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் கார்பரேஷனுக்கு சேர்மன் பதவிக்கு நியமித்துள்ளேன்* என்று பெங்களூருக்கு தந்தி* வந்தது .உடனே புறப்படவும் என தகவல் .1980 ஜூலை மாதம் 17ம் தேதி நான் அந்த பதவியை ஏற்றுக் கொண்டேன் .
கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை ஒரு திரைப்படமாக சொந்தமாக தயாரிக்க ஆசைப்பட்டார் எம்.ஜி.ஆர். அதற்காகவே இயக்குனர் மகேந்திரனை அவரது கல்லூரி நாட்களில் சந்தித்ததில்* இருந்து தொடர்பு கொண்டு, தன் வீட்டுக்கு வரவழைத்து வீட்டில் வைத்து திரைக்கதை**எழுதுவதற்காக மாத ஊதியம் கொடுத்து வந்தார் .அப்படி பொன்னியின் செல்வன் படத்தின் தயாரிப்பு* தாக்கம் என்பது பல்வேறு படங்களில் எதிரொலித்தது .மற்ற தகவல்கள் அடுத்த அத்தியாயத்தில் அறிந்து கொள்வோம்*
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம் .
----------------------------------------------------------------------------------
1.ஒரு தாய் வயிற்றில் வந்த உடன்பிறப்பில் -உரிமைக்குரல்*
2.நான் அளவோடு ரசிப்பவன் - எங்கள் தங்கம்*
3.சிரித்துவாழ வேண்டும் - உலகம் சுற்றும் வாலிபன்*
4.தம்பிக்கு ஒரு பாட்டு - நான் ஏன் பிறந்தேன்*
5.பம்பை உடுக்கை கொட்டி - ரிக்ஷாக்காரன்*
6.திரு.கா. லியாகத் அலிகான் பேட்டி*
7.பொன்னெழில் பூத்தது புதுவானில் - கலங்கரை விளக்கம்*
-
'உத்தம புத்திரன்' 1940 ல் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் t r சுந்தரம் இயக்கத்தில் கலைமாமணி p.u.சின்னப்பாவின் இரட்டை வேட நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம். மாடர்ன் தியேட்டர்ஸிக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்த படம். நீண்ட நாள் திரைபில் இருந்து வெற்றி முத்திரை பதித்த படம்.
இந்த படத்தை மீண்டும் தயாரிக்கலாம் என்று வீனஸ் பிக்சர்ஸ் முடிவு செய்து ஸ்ரீதரை கதை வசனம் எழுதச் சொல்ல ஸ்ரீதர் கதாநாயகனாக சிவாஜியை போடலாம் என்று முடிவு செய்து விளம்பரம் நாளிதழில் கொடுத்து விட்டார்கள். ஆனால் அதே தினத்தில் எம்ஜிஆர் நடிக்கும் 'உத்தம புத்திரன்' விளம்பரமும் அதே நாளிதழின் மற்றொரு பக்கத்தில் வெளியானது.
அதைக்கண்ட வீனஸ் நிறுவனம் கலைவாணரை அணுகி எம்ஜிஆரை விட்டுத்தர சொல்லுங்கள் என்று கெஞ்ச கலைவாணரும் தூது சென்று எம்ஜிஆரை சந்தித்து பேசினார். உடனே எம்ஜிஆர் அதனாலென்ன இருவருமே தயாரிப்போம் எது சிறந்த படம்? என்று மக்கள் முடிவு செய்வார்கள் என்றார். அன்றே நடிப்பு போட்டிக்கு தயாரானார் புரட்சி நடிகர். அந்த மனஉறுதி எதிர்தரப்பில் இல்லை என்ன செய்வது. சிவாஜி ஒரு பயந்த கோழை என்பதை நாடறியும்.
இருவரும் தயாரித்தால் நிச்சயம் எம்ஜிஆர் வெல்வார் என்பதை உணர்ந்த சிவாஜி தரப்பு கலைவாணர் மூலம் எம்ஜிஆரிடம் கெஞ்சி வாபஸ் வாங்க வைத்தனர். நடிகப்பேரரசரிடம் நாம் தோற்றுப்போவோம் என்று உணர்ந்து இந்த சரணாகதி முடிவு எடுத்தனர். கலைவாணரும் ராமச்சந்திரா! சிவாஜி ஒரு சம்பளம் வாங்கும் ஒரு நடிகர். ஏற்கனவே வந்து வெற்றி பெற்ற படங்களை காப்பியடித்து நடிப்பது என்றால் அவருக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி.
மேலும் பல வெளிநாட்டு படங்களை பார்த்து நடை உடை நடனம்
எல்லாம் செலக்ட் செய்து வைத்து விட்டான். பாவம் அவன் பிழைப்பில் மண்ணை அள்ளிப்போட வேண்டாம் நீ நினைத்தால் வேறு கதையை உருவாக்கி எளிதில் வெற்றி பெற முடியும் உன் திறமையை நான் மட்டுமல்ல நாடறியும்! என்று எடுத்துச் சொல்லி தடுத்து விட்டார். எம்ஜிஆரும் தம்பியின் கையறு நிலையை கருத்தில் கொண்டு தன் தயாரிப்பை கைவிட்டார்.
அதன்பின்பு எம்ஜிஆர் தயாரிப்பில் உருவான படம்தான் "நாடோடி மன்னன்". அதே மாதிரி இரட்டை வேடத்தை தேர்ந்தெடுத்து அவருடைய சொந்த மூளையை பயன்படுத்தி டைரக்ட் செய்து "உத்தம புத்திரன்" வெளியான அதே ஆண்டில் வெளியிட்டு மாபெரும் வெற்றியை பெற்றார். சிவாஜி நடித்த "உத்தம புத்திரன்" 2 தியேட்டர்களில் வடக்கயிறு போட்டு 100 நாட்கள் ஓட்டி அதற்கு விழாவும் எடுத்தார்கள். அந்த வெற்றிக்கும் நம்பியாரின் நயவஞ்சக நடிப்பே காரணம். எல்லாம் நடிகப் பேரரசரின் பாசறைமில் இருந்து வந்தவர் அல்லவா?. இவரை தவிர வேறு சிவாஜியின் ஆஸ்தான வில்லன் நடிகர்களை பயன்படுத்தினால் என்னவாகும் என்று தெரியுமா சிவாஜி கைபிள்ளைகளுக்கு.
ஆனால் "நாடோடி மன்னன்" எழுப்பிய புழுதி இன்று வரை அடங்கவே இல்லை. நடிகப் பேரரசருடன் மோதும் போது சற்று ஒரிஜினல் நடிப்பை வெளிப்படுத்தாமல் காப்பி நடிப்பை வெளிப்படுத்தி தோற்றுப் போனார்கள். அந்த கம்பெனி வீனஸ் பிக்சர்ஸ் கூட பின்னாளில் வெற்றியின் நாயகன் எம்ஜிஆரை
தஞ்சமடைந்து "என் அண்ணன்" "ஊருக்கு உழைப்பவன்" போன்ற மாபெரும் வெற்றிப் படங்களை எடுத்து தங்கள் நிலையை உயர்த்திக் கொண்டது நாடறிந்த விஷயம்தான்.
இந்த கையாலாகத்தனம்தான் புரட்சி நடிகர் மீது அவரது கைபுள்ளைங்களுக்கு தீராத கோபத்தை வரவழைத்தது,. என்ன செய்வது ஒருவரின் திறமை, உழைப்பு இதன் அடிப்படையில்தான் வெற்றி கிடைக்கும் என்பதை அறியாதவர்கள்தான் இந்த கைபுள்ளைங்க. காப்பி அடித்து கூட வெற்றி பெற முடியாதவர்தான் நம் கணேசன். பழைய "உத்தம புத்திரன்" பெற்ற வெற்றியில் கால்வாசி கூட வெற்றி பெறவில்லை என்று சொன்னார்கள் சின்னப்பாவின் சீடர்கள்.
இது மட்டுமா? இதே படத்தை சற்று உல்ட்டா பண்ணி "இம்சை அரசன் 23 ம் புலிகேசி" என்ற
பெயரில் எடுத்து மாபெரும் வெற்றி கண்டவர் சிம்புதேவன். வடிவேலுவின் இரட்டை வேட நடிப்பில் படம் அடைந்த வெற்றியின் அளவை விவரிக்க முடியாது. இவ்வளவு ஏன்? "தில்லானா"வை உல்ட்டா பண்ணி ராமராஜன் கனகா ஜோடி "கரகாட்டக்காரனி"ல் அடைந்த வெற்றி கைபிள்ளைகளுக்கு நினைவிருக்கும்தானே. சிவாஜியை விட இயல்பான நடிப்பில் கொடிகட்டி பறந்தார் ராமராஜன். படத்தின் வெற்றி பிரமிக்க வைக்கும் வெற்றி.
பாவம் "தில்லானா". இந்த வெற்றியும் ஒரு பெண்ணின் பரதநாட்டிய நடனம், முகபாவத்தை வைத்து கிடைத்த வெற்றி. இதையெல்லாம் வைத்து நமது பக்கத்தை பார்க்கும் கைபிள்ளைகளுக்கு சிவாஜியின் நிலையை எண்ணி சிப்பு சிப்பா வருதாம்.
எம்ஜிஆர் படங்கள் இதே போல் மாற்று மொழியில் இருந்து தமிழுக்கு மாற்றம் செய்யும் போது பல மாறுதல்கள் செய்துதான் கதையை தயார் செய்வார்கள். ஆனால் சிவாஜி படங்களோ ஜெராக்ஸ் காப்பி மாதிரி அப்படியே எடுப்பார்கள்.ஏனென்றால் அப்படியே காப்பி படத்தில் நடிப்பது சிவாஜிக்கு எளிதான வேலை அல்லவா. அதற்கென்று ஒரு ஜெராக்ஸ் டைரக்டரை கைவசம் வைத்திருந்தார். அவர் பெயர் c v ராஜேந்திரன்.
கொஞ்சநாள் ஸ்ரீதரின் பிரதி எடுக்கும் உதவியாளராக இருந்த அவரின் காப்பியடிக்கும் திறமையை அறிந்த சிவாஜி அவரை தன் அருகிலேய
வைத்துக் கொண்டது ஒரு கொசுறு தகவல். ஈ அடித்தான் காப்பி என்பது இவருக்குத்தான் பொருந்தும். படம் காப்பி பண்ணும் போது அந்த காட்சியில் இடம் பெற்ற பொருட்களை கூட அதே இடத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்வார்..........ks.,.........
-
தலைவர் பெயரில் மன்றம் கண்ட எங்களை போன்றவர்களின் அனுபவங்கள்..
1971 தேர்தலில் தலைவர் முழுவேகத்துடன் பிரச்சாரம் செய்து அவரை முதல்வர் ஆக்கினார் மீண்டும்..
தலைவருக்கு இருந்த அபார செல்வாக்கை கண்டு அஞ்சினார் நன்றி கெட்ட அவர்.
எம்ஜிஆர் மன்றங்களை ஒடுக்க நினைத்து மன்றங்கள் கட்சி கிளை கழக நிர்வாகிகள் அனுமதியுடன் மட்டுமே செயல்பட வேண்டும் என்ற உத்தரவை மாவாட்டும் செயலர்களுக்கு சொன்னார்.
பிள்ளையோ பிள்ளை என்ற ஒரு நாடகத்தை தயாரித்து அதில் முத்துவை நடிக்க வைத்து அந்த நாடகத்தை தலைவர் தலைமையில் அரங்கேற்றி முத்துவுக்கு விளம்பரம் தேடினார்.
பின்னர் அந்த நாடகத்தை தன் சொந்த செலவில் படம் ஆக எடுத்து படம் பெட்டிக்குள் முடங்க.
கோவத்தில் 1972 மதுரையில் நடைபெற்ற ஆகஸ்ட் 5 மற்றும் 6 தேதிகளில் நடைபெற்ற கட்சி மாநாட்டில் எப்போதும் மாநாட்டில் கட்சி கொடியுடன் வலம் வரும் நம் தலைவரை புறக்கணித்து மு.க.முத்துவை முதல் நாள் ஊர்வலத்தில் யானை மீது கட்சி கொடி தாங்கி வர வைத்தார்.
நிகழ்வை பார்த்த தலைவர் ரசிகர்கள் கோவம் கொப்பளிக்க வெறுப்புடன் ஊர்வலத்தில் இருந்து கலைந்து சென்றனர்.
மறுநாள் அவருக்கு முன் தலைவர் மாநாட்டில் பேச அவர் பேசிய பின் ஒட்டு மொத்த மைதானமும் காலி ஆக மேடையில் மயக்கம் போட்டார் அந்த மனிதர்.
ஆத்திரத்தில் அடுத்து அடுத்து அவர் எடுத்த நடவடிக்கைகள் அவருக்கே எதிராக திரும்பிய வரலாறு நாடு அறியும்..நாமும் அறிவோம்.
படத்தில் எம்ஜிஆர் மன்ற கூட்டத்தில் பேசும் தலைவர்....
ஆர்.எம். வீ...அவர்கள், ராயப்பேட்டை சிவராமன் , எழும்பூர் தெய்வசிகாமணி, சென்னை மாவட்ட எம்ஜியார் மன்ற மறைந்த கல்யாண சுந்தரம் மற்றும் இன்னொரு மைக் அருகில் வட்டத்தில் சைதையார் அவர்கள்.
நெருப்பாற்றில் நீந்தி வந்து தலைவர் எண்ணத்துடன் இன்றும் வாழும் உண்மை தலைவர் எண்ணங்களே என்றும் பலிக்கும்...நிலைக்கும்.
வாழ்க தலைவர் புகழ்.
உங்களில் ஒருவன்...நன்றி...
தொடரும்....
பதிவிற்கு பின் படம் கலரில் தலைவர் நெஞ்சம் சரவணன் பெரியசாமி தர படம் புதிதாக இணைக்க பட்டு உள்ளது நன்றி சகோ..........Mn...
-
எம்ஜிஆரின் வாத்தியார் காளி என்.ரத்தினம்!
சபாபதி படத்தில் வேலைக்காரன் சபாபதியின் நடிப்பை, இந்தத் தலைமுறை மக்கள் கூட இமை கொட்டாமல் ரசிக்கின்றனர். அந்த அளவுக்கு 1936 முதல் 1950 வரை தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த மூத்த நகைச்சுவை மற்றும் குணசித்திர நடிகர் காளி என்.ரத்தினம்.
சிறந்த நடிகர், பாடகர், சண்டை பயிற்சி வாத்தியார், நடிப்பு வாத்தியார், அரங்க நிர்வாகி, பி.யு.சின்னப்பா, எம்ஜிஆர் போன்ற சூப்பர் ஸ்டார்களுக்கு ஆசான் என பல்வேறு சிறப்புக்களைக் கொண்டவர் அவர்.
காளி என். ரத்தினத்தின் சொந்த ஊர் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகில் உள்ள மலையப்பநல்லூர். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவர், சிறு வயதிலேயே நாடகக் கம்பெனிகளில் சேர்ந்து நடிக்க ஆரம்பித்து விட்டார்.
மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனிகள் பலவற்றில் பணியாற்றிய இவர், கோவலன் என்ற ஒரு நாடகத்தில், முதன் முதலாக காளி வேடம் போட்டார். அதில் அவரது நடிப்பை பார்த்து பலரும் அசந்து போயினர். அன்று முதல் அவர் காளி என்.ரத்தினம் என்று அழைக்கப்படலானார்.
அவர், காளி வேடம் கட்டி ஆடினால், அவர் ஆடும் உக்கிரமான ஆட்டத்தைப் பார்த்து பல பேர் சாமி வந்து ஆட ஆரம்பித்து விடுவார்கள்.
பி.யு. சின்னப்பா, எம்.ஜி.ஆர் போன்றவர்களுக்கு உச்சரிப்பு, நுணுக்கமான நடிப்பு, உடல் மொழி, வாள் சண்டை, கத்தி சண்டை, சிலம்பப் பயிற்சி போன்றவற்றை எல்லாம் கற்றுக்கொடுத்தவர் காளி என். ரத்தினம்.
தமிழ் சினிமாவில் வாத்தியார் என்றால் அது எம்.ஜி.ஆரை மட்டுமே குறிக்கும். ஆனால் எம்.ஜி.ஆரே, தமது வாத்தியார் காளி என். ரத்தினம் என்று, 1970-ம் ஆண்டு “நான் ஏன் பிறந்தேன்” என்ற தலைப்பில் ஆனந்த விகடன் வார இதழில் எழுதிய தொடரில் குறிப்பிட்டுள்ளார்
1936-ல் வெளியான பதிபக்தி என்ற படமே காளி என். ரத்தினம் நடித்த முதல் படம். முதல் படத்திலேயே அவர் இரண்டு வேடங்களை ஏற்று அற்புதமாக நடித்திருந்தார்.
அதைதொடர்ந்து, 1950 வரை சந்திரலேகா, பஞ்சாப் கேசரி, உத்தம புத்திரன், சபாபதி, திவான் பகதூர், ஸ்ரீ முருகன், ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி, ஆண்டாள் உள்பட 5௦ படங்களுக்கும் மேல் பாடி நடித்துள்ளார்.
காளி என். ரத்தினம் போல ஒரே காட்சியில் எண்ணற்ற முக பாவனை காட்டக் கூடிய நடிகர் வேறு யாரும் இல்லை என்று மூத்த திரை விமர்சகர்கள் பலராலும் இன்றும் பாராட்டப் படுகிறார்.
என்,எஸ்.கிருஷ்ணன்-டி.ஏ.மதுரம் ஜோடியைபோல, அந்தக் காலத்தில், காளி என். ரத்தினம்- சி.டி.ராஜகாந்தம் ஜோடி மிகவும் பிரபலமான ஜோடியாகும்.
காளி என். ரத்தினம் போடாத வேடமும் இல்லை, பாடாத பாடலும் இல்லை என்ற அளவுக்கு அசத்தி இருக்கிறார். கடைசியாக அவர் பொய்க்கால் குதிரை ஆட்டம் போடத் தயாரானபோதுதான், அவரை மரணம் தழுவிக்கொண்டது.
தி இந்து நாளிதழ் கூட காளி என். ரத்தினம் பாணியைப் பற்றி பல நேரங்களில் சிறப்பாகப் பாராட்டி எழுதி உள்ளது. இளைய தலைமுறையினர் காளி என். ரத்தினம் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
காளி என். ரத்தினம் முதல் வரிசை நகைச்சுவை நடிகராக வலம் வந்த 1940 களில், அன்றைய சினிமா பத்திரிகை ஒன்று காளி என். ரத்தினம் பற்றி வெளியிட்ட செய்தியை நட்சத்திர தேடல்கள் என்ற கட்டுரையில், மறைந்த முன்னணி எழுத்தாளர் அறந்தை நாராயணன் பதிவு செய்துள்ளார்.
“ரத்தினம் பழங்கால கிராமிய பழக்க வழக்கங்களுக்கு நல்ல மெருகு கொடுத்து, சினிமா படங்களில் புகுத்தி, பட்டனப்புரங்களில் உள்ள புதுக்கால மனிதர்களும் அவற்றை தெரிந்து கொண்டு ரசிக்கும்படி செய்திருக்கிறார். கிராம மக்களோ தங்கள் சம்பந்தமான விஷயங்களை சினிமாவில் பார்க்கும்போது பிரமாதமான பூரிப்பு அடைகிறார்கள்.
இந்தக் காரணங்களினாலே அவர்கள் ரத்தினம் நடிக்கும் படங்களைப் பல தடவை பார்ப்பது வழக்கமாக இருக்கிறது. மாடர்ன் தியேட்டர்ஸ் படங்கள் நிறைய வசூலைப் பெற்று வந்ததற்கு ரத்தினத்தின் நடிப்பு ஒரு முக்கிய காரணமாகும்
படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை பாராட்டி மகிழும், மாபெரும் கலைஞன் காளி என். ரத்தினம், காலத்தால் மறைக்கப்பட்டு, இருந்த இடம் தெரியாமல் போனதை ஒரு சமூக அவலம் என்றே சொல்ல வேண்டும்........
-
சிவாஜி கணேசன் ரசிகர்கள் பொய்க்கு அளவே இல்லாமல் போய்விட்டது. உலகம் சுற்றும் வாலிபன் படத்தை தங்கப்பதக்கம் வசூலில் முந்தியதாம். இப்படி சொல்பவர்களை கவனித்து பார்த்தால் 40, 45 வயதுக்காரர்களாக இருப்பார்கள். விஷயம் தெரிந்த சிவாஜி கணேசன் ரசிகர்கள் இப்படி பேசமாட்டார்கள். அவர்களுக்கு உண்மை தெரியும். வாலிபன் வசூலுக்கு நம்மிடம் ஆதாரம் உள்ளது. ஆனால், நம்மிடம் ஆதாரம் கேட்பவர்கள் அவர்களது தங்கப்பதக்கம் வசூல் ஆதாரத்தை காட்டமாட்டார்கள். ‘தங்கப்ப............ தக்கம்’ என்று வடிவேல் காமெடி மாதிரி ஆகிவிட்டது.
1980-களில் கமல்ஹாசன், பாக்யராஜ், ரஜினிகாந்த் படங்களை சிவாஜி கணேசன் படங்கள் வசூலில் முறியடிக்க முடியாமல் திணறிய கதை இப்போதைய இளைஞர்கள் கூட அறிந்ததுதான். அதாவது பரவாயில்லை. அதைவிடவும் சிவாஜி கணேசனுக்கு மோசமான நிலை ஏற்பட்டது. மார்க்கெட் இழந்து அதே ரஜினிகாந்த், கமல்ஹாசன், பாக்யராஜ், விஜய்காந்த் போன்றோர் கதாநாயகனாக நடித்த படங்களில் அப்பா, அண்ணன், மிலிட்டரிக்காரன், அஜய் என்ற பிரபலமாகாத புதுமுக நடிகருக்கு (அஜய் என்பவர் ஒரு படத்தில்தான் நடித்தார் என்று நினைவு) தாத்தா என்று சிறிய வேடங்களில் துணை நடிகராக சிவாஜி கணேசன் நடித்தது எல்லாம் காலக் கொடுமை. கேட்டால் அவை எல்லாம் முக்கியமான வேடம் என்று சிவாஜி கணேசன் ரசிகர்கள் சொல்வார்கள். யார் வேண்டுமானாலும் அந்த வேடத்தை செய்யலாம்.தபால்காரர் கொடுத்த தபாலால் கதையில் முக்கிய திருப்பம் ஏற்படுகிறது என்றால் படத்தில் அந்த தபால்காரர்தான் முக்கிய கதாபாத்திரம் என்று புரிந்து கொள்ளும் மனநிலையில்தான் சிவாஜி கணேசன் ரசிகர்கள் இப்போதும் உள்ளனர்.
மக்கள் திலகமும் சிறிய வேடங்களில் நடித்து கதாநாயகரானார். ஆனால், ஒரு நிறுவனத்தின் பியூனாக வேலைக்கு சேர்ந்து உழைத்து அந்த நிறுவனத்துக்கு மேனேஜிங் டைரக்டர் ஆவது பெருமை. மக்கள் திலகம் அப்படித்தான் உயர்ந்தார். கடைசிவரை அவர் நிலை உயர்ந்து கொண்டே சென்றதே தவிர தாழவே இல்லை. சிவாஜி கணேசன் நிலைமை தலைகீழ். ஒரு நிறுவனத்தில் ஒருவர் மேனேஜிங் டைரக்டராக சேர்ந்து அதே நிறுவனத்தில் தனது தவறுகளால் பதவி இறக்கம் செய்யப்பட்டு பியூனாகியது போல, பராசக்தியில் கதாநாயகனாக அறிமுகமான சிவாஜி கணேசன், பணத்துக்காக கண்ட படங்களில் நடித்து தனது தவறுகளால் பதவி இறக்கம் செய்யப்பட்டு துணை நடிகராகி ஓய்ந்தார். அரசியலும் ‘திருவையாறு’ அவர்களை தூங்கவிடாமல் துரத்தும். இதை சிவாஜி கணேசன் ரசிகர்கள் புரிந்து கொண்டால் நல்லது.பின்குறிப்பு: சிவாஜி கணேசன் பிறந்த நாளுக்கு அவரது இளையமகன் பிரபுகூட சிலைக்கு மாலைபோட வரவில்லை. இதுதான் சிவாஜி கணேசனின் மரியாதை.......... Swamy...
-
நடிகப் பேரரசர் யாரது ராமச்சந்திரன் என்ற நபர் ? தரமில்லாமல் விமர்சிக்கிறார். சிவாஜி கணேசனின் ரசிகர்கள் நல்லவர்களாம். அன்பு, பண்பு உள்ளவர்களாம். அவர்களது உண்மையான முகம் என்ன என்பதற்கு இந்த ராமச்சந்திரன் ஒரு உதாரணம். ராமச்சந்திரன்.. உங்க பேரையாவது மாத்துங்க. எங்க தலைவர் பேரை வெச்சுக்கிட்டு இப்படி எழுதாதீங்க. நடிகப் பேரரசர், மாற்றுக்கருத்தை அனுமதிக்கலாம். நாகரிகம் இல்லாத கருத்துக்களை நீக்கலாமே.?...... Swamy...
-
கோவை மாநகரில்*
கொள்கை தங்கம் பொன்மனச்செம்மல்*
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் காவியங்கள் படைத்த அற்புத சாதனைகளும்......*
புரட்சி படைத்த வசூலில் முதலிடத்தை பெற்ற திரைக்காவியங்களின் வரலாறும்.....
++++++++++++++++++++++++++++++
நகரில் அதிக அளவில்*
100 நாட்களுக்கு மேல் ஓடிய திரைக்காவியங்கள் மக்கள் திலகத்தின் திரைப்படங்களே இன்று வரை சாதனையில் முன்னணி படைக்கிறது....
++++++++++++++++++++++++++++++
100 நாட்களை கடந்த காவியங்கள்
++++++++++++++++++++++++++++++
ராஜகுமாரி, மோகினி, மந்திரிகுமாரி, மர்மயோகி,*
என் தங்கை, மலைக்கள்ளன்
குலேபகாவலி,*
அலிபாபாவும் 40 திருடர்களும், மதுரை வீரன்,*
தாய்க்குப்பின் தாரம்,*
சக்கரவர்த்தி திருமகள்,*
நாடோடி மன்னன்,*
திருடாதே,*
தாய் சொல்லைத் தட்டாதே, தாயைக் காத்த தனயன்*
பணக்கார குடும்பம்,
எங்க வீட்டுப் பிள்ளை,*
ஆயிரத்தில் ஒருவன்*
குடியிருந்த கோயில் அடிமைப்பெண்
*நம்நாடு*
மாட்டுக்காரவேலன்*
ரிக்க்ஷாக்காரன்
நல்லநேரம்*
உலகம் சுற்றும் வாலிபன் உரிமைக்குரல்
இதயக்கனி*
+++++++++++++++++++++++
ஆகிய திரைப்படங்கள்*
ஒரே திரையரங்கில்*
100 நாட்களை கடந்து சாதனை படைத்துள்ளது....*
* நகரில் இரண்டு திரையரங்குகளில் திரையிடப்பட்டு 100 நாட்களை கடந்து வெற்றி காவியங்கள் பல.....
* நகரில் வெள்ளி விழாவை கடந்து* 190 நாட்கள் ஓடிய வெற்றிக் காவியம் : எங்க வீட்டுப் பிள்ளை
1965 : ராயல் 190 நாட்கள்*
* 2 திரையரங்கில் திரையிடப்பட்டு 150 நாட்கள் ஒடிய திரைக்காவியம் உலகம் சுற்றும் வாலிபன்*
1973 : ராஜா 152 நாட்கள்
1973 :.சண்முகா 14 நாட்கள்
மொத்தம் 164 நாட்கள்
* உரிமைக்குரல் திரைக்காவியம் வசூலில் வெற்றி கண்டு*
150 நாட்கள் ஓடி வெற்றி கண்டது
1974 : கீதாலயா 150 நாட்கள்
* மாட்டுக்கார வேலன் 144 நாட்கள் ஓடி வெற்றி சாதனை புரிந்தது.
1970 : இருதயா 144 நாட்கள்
* நகரில் அதிக வசூலை 1978ம் ஆண்டு வரை பெற்ற காவியங்கள் உரிமைகுரல்*
உலகம் சுற்றும் வாலிபன்
இதயக்கனி*
நகரில் தொடர்ந்து வெளியான மூன்று வண்ணப்படங்கள் சாதனையில் எவர் படமும் கிடையாது....
1969 அடிமைப்பெண்
ராஜா 120, சண்முகா 28
மொத்தநாள் : 148*
1969 நம் நாடு
ராஜா 105, ஜி.பி.21
மொத்தம் நாள் : 126
1970 மாட்டுக்கார வேலன்
இருதயா 144, ஜி.பி 40
மொத்த நாள் : 188*.........ur...
-
கோவை பெருநகரில்....
கலையுலக சக்கரவர்த்தி
எம்.ஜி.ஆர் அவர்களின்
வெற்றிகளை பதித்த*
வசூல் காவியங்கள்....
++++++++++++++++++++++
1956 மதுரை வீரன்
ராஜா 119 நாள் : 2,55 ,711.42
1958 நாடோடி மன்னன்
ராஜா 133 நாள் : 2,96,129.23
1961 திருடாதே
ராஜா 112 நாள் :* 2,40, 325.65
1964 பணக்கார குடும்பம்
சுவாமி 105 நாள் : 2,31, 943.35
1965 எங்க வீட்டுப்பிள்ளை
ராயல் 190 நாள் : 3,76,005.35
நகரில் 3 லட்சத்தை கடந்த முதல் காவியம்.
1965 ஆயிரத்தில் ஒருவன்
கர்னாடிக் 115 நாள் : 2,67,640.07
நகரில் ஒரே ஆண்டில் இரு வண்ணப்படங்கள் 100 நாளை கடந்து முதல் சாதனையாகும்.
1968 குடியிருந்த கோயில்
ராஜா 105 நாள் : 3,07,671.21
1969 அடிமைப்பெண்
ராஜா/சண்முகா 148 நாள்
வசூல் : 3,75,425. 37
1969 நம்நாடு
ராஜா 105 நாள் : 3,06,721.60
1970 மாட்டுக்கார வேலன்
இருதயா 144 நாள் : 3,41,875.04
1971 ரிக்க்ஷாக்காரன்*
ராஜா 120 நாள் : 3,72,216.16
1972 நல்லநேரம்
ராயல் 86 நாள்
சிவசக்தி* 40 நாள்
மொத்த நாள் : 126 நாள்
வசூல் : 3,86,192.60
நகரில் 1972 ல் அதிக வசூல்...
சரித்திரம் படைத்த வசூல் ஆகும்.
1972 நான் ஏன் பிறந்தேன்
தொடர் வெளியீடு...
இருதயா 77, அருள் 22
99 நாள் வசூல் : 2,88,930.43
1972 இதயவீணை
இருதயா 86, ஜி.பி. 30
மொத்த நாள் : 116
வசூல் : 3,15,942.50
1973 உலகம் சுற்றும் வாலிபன்
ராஜா /சண்முகா :164 நாள்
வசூல் : 7,01,693. 51
நகரில் 4,5,6,7 லட்சத்தை பெற்ற முதல்படம்.... தொடர்ந்து 172 காட்சிகள் அரங்கு நிறைந்து சாதனையாகும்.
1974 உரிமைக்குரல்
கீதாலயா 150 நாள் : 8,69,560.00
இவ்வசூலை 1978 வரை 4 ஆண்டுகள் எந்த படத்தாலும் வெல்ல முடியவில்லை..
1975 இதயக்கனி
சென்ட்ரல் 105 நாள் : 4,96,451.55
1975 பல்லாண்டு வாழ்க
சென்ட்ரல் /முருகன்* : 112 நாள்
வசூல் : 4,05.907.21
+++++++++++++++++++++
கோவை மாநகாரில்*
மக்கள் திலகமே எல்லா வகையிலும் முன்னனி ஆவார்...
மேலும் சாதனைகள் பல.....
Ur...
-
சென்னை தேவி திரை அரங்கில் 1970ல் ''மெக்கனாஸ் கோல்ட் '' நான் முதல் முதலாக பார்த்த படம் .47ஆண்டுகளுக்கு பிறகு தேவி அரங்கில் மக்கள் திலகத்தின் அடிமைப்பெண் திரைப்படம் காணும் வாய்ப்பு கிடைத்தது.
16.7.2017
சென்னை - தேவி திரை அரங்கம் .... இரவு 7.15 மணி காட்சி
மக்கள் திலகத்தின் ''அடிமைப்பெண் '' 2017 திரைப்படத்தை ரசிகர்களின் ஆரவாரத்துடன் அரங்கு நிறைந்த காட்சியில் நான் கண்டு களித்த அடிமைப்பெண் திரைப்படம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாகும்
படம் துவக்கத்தில் தாய் குலத்திற்கு பெருமை சேர்த்த அன்னை தெரசா, விண்வெளி பயணித்த கல்பனா ஆகியோருக்கும் சேவை செய்து வரும் தாய் குலத்திற்கும் இப்படம் சமர்ப்பணம் என்ற வாசகத்தோடு படம் துவங்குகிறது .
தேவி திரை அரங்கத்திற்கு மிக அருகில் இருக்கும் அறிஞர் அண்ணாவின் சிலை முன்பு மக்கள் திலகம் எம்ஜிஆர் 1977ல் பதவி ஏற்ற தினத்தன்று எடுக்கப்பட்ட மக்கள் வெள்ளத்தில் எம்ஜிஆரின் நிழற்படத்துடன் அவருடைய ''ரத்தத்தின் ரத்தமான என் உடன் பிறப்புகளே '' எம்ஜிஆரின் குரல் அகன்ற திரையில் தோன்றியதும் திரை அரங்கில் ரசிகர்களின் ஆரவாரமும் கைதட்டலும் அரங்கத்தையே அதிர வைத்தது .
அடிமைப்பெண் -2017 லோகோ மிக பிரமாண்டமாக கிராபிக்சில் திரையில் காட்டும் போது அரங்கமே விசில் சத்தத்தில் பிரமிக்க வைத்தது .அதற்கான நவீன தொழில் நுட்பத்தில் இசை அமைப்பும் 5.1 ஒலியில் மிரள வைத்தது .
அடிமைப்பெண் ஆரம்ப காட்சி முதல் இறுதி காட்சிகள் வரை துல்லியமாக புத்தம்புதிய படமாக ரசிகர்களுக்கு விருந்தாக இருந்தது . ஒவ்வொரு பிரேமிலும் எம்ஜிஆர் அவர்கள் மிக சிரத்தையுடன் எடுத்த காட்சிகள் நவீன தொழில் நுட்பத்தில் மேலும் மெருகூட்டப்பட்டுள்ளது . அத்தனை காட்சிகளும் கண்ணுக்கு விருந்தது .
அசோகனுடன் ஒத்தை காலில் எம்ஜிஆர் மோதும் சண்டை காட்சி
சிறையிலிருந்து தப்பித்து வரும்போது எம்ஜிஆரின் குனிந்த நடை
ஒகேனக்கல் நீர் அருவி காட்சிகள் - மிக பிரமாண்டம்
அம்மா என்றால் அன்பு - ஜெயாவின் இனிய குரல் பாடலில் எம்ஜிஆரின் அழகு தோற்றம் .
ஒகேனக்கல்லில் எம்ஜிஆர் சண்டை பயிலும் காட்சிகள்
தன்னுடைய தாயை காண பாசத்தோடு அருவியில் குதிக்கும் காட்சிகள்
தாயிடம் உரையாடும் உணர்ச்சிகரமான காட்சிகள்
அடிமை விலங்கை உடைத்தெறியும் காட்சிகள்
தாயில்லாமல் நானில்லை - எழுச்சியான பாடலில் எம்ஜிஆரின் நடிப்பு
காலத்தை வென்றவன் - மனதை கொள்ளை கொண்ட பாடல்
எம்ஜிஆர் - மனோகர் சந்திக்கும் காட்சியில் எம்ஜிஆரின் வசனங்கள்
எம்ஜிஆர் - ஜெயலலிதா பிரிந்து விடும் ஊட்டி வெளிப்புற காட்சிகள்
ராஜஸ்தான் பாலைவன காட்சிகள்-
ஏமாற்றாதே - பாடல் காட்சியில் எம்ஜிஆரின் நடிப்பு - ஜெயாவின் அருமையான நடனம்
ஜெய்ப்பூர் அரண்மனையில் எம்ஜிஆர் அவர்களின் வனப்பான தோற்றத்தில் கட்டு மஸ்தான உடல் வலிமையை காட்டும் காட்சி
எம்ஜிஆரின் பேரழகில் ஜெயா மயங்கி பாடும் ஆயிரம் நிலவே வா -பாடல்
மனோகரனுடன் மோதும் கத்தி சண்டை காட்சி
உன்னை பார்த்து இந்த உலகம் பாடல் ....
ஜஸ்டின் மோதும் ஆக்ரோஷமான கத்தி சண்டை கட்சி
இறுதியில் சிங்கத்துடன் போராடும் வீரமான காட்சி என்று அடிமைப்பெண் படம் 3 மணி நேரம் விறுவிறுப்பாக சென்றது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது .
தேவி திரை அரங்கின் அகன்ற திரையில் 5.1. ஒலியோடு புத்தம்புது படம் போல் காட்சிக்கு காட்சி ரசித்து பார்த்தேன் . எந்த குறையும் இல்லை . இன்றைய தொழில் நுட்பத்திற்கு ஏற்றார் போல் இசையில் சிறிது மாற்றம் செய்துள்ளார்கள் . மிகவும் அருமையாக இருந்தது .
மக்கள் திலகம் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நேரத்தில் அடிமைப்பெண் 2017
எம்ஜிஆர் ரசிகர்களுக்கு கிடைத்த மாபெரும் பரிசாகும் . இந்த பொன்னான வாய்ப்பை தந்த திரு திண்டுக்கல் நாகராஜனை மனமார பாராட்டுகிறோம் . வாழ்த்துகிறோம்......vds...
-
பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர். -வின்*டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*01/10/20 அன்று அளித்த*தகவல்கள்*
-------------------------------------------------------------------------------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கலைஞர்களுக்கும், கலைத்துறையை சார்ந்தவர்களுக்கும் எவ்வளவு மரியாதை கொடுப்பார் என்பதற்கு பல்வேறு உதாரணங்களில் மிக சிறந்தது கவிஞர் கண்ணதாசனுக்கு அளித்தது எம்.ஜி.ஆருக்கும் ,கண்ணதாசனுக்கும் நாடோடிமன்னன் காலத்திற்கு முன்பே தொடர்புகள்* இருந்தாலும் அரசியல் கருத்து வேறுபாடுகளால் பின்னி, பிரிந்து இருந்தபோதிலும் கூட அவரை அரசவை கவிஞராக அலங்கரித்து பார்த்தவர் எம்.ஜி.ஆர். அவர்கள் .
கவிஞர் கண்ணதாசன் எம்.ஜி.ஆரை புகழ்ந்து பல பாடல்கள்* மிக சிறப்பாக*எழுதியுள்ளார் .அவற்றில் ஒன்று நீதிக்கு பின் பாசம் படத்தில் மானல்லவோ கண்கள் தந்தது என்ற பாடலில் தேக்கு மரம் உடலை தந்தது ,சின்னையானை நடையை* தந்தது ,பூக்களெல்லாம் சிரிப்பை தந்தது பொன்னல்லவோ நிறத்தை தந்தது என்கிற வரிகள் முழுக்க முழுக்க எம்.ஜி.ஆரை வர்ணித்து எழுதிய* பாடல் .அதே போல பணத்தோட்டம் படத்தில் பேசுவது கிளியா இல்லை பெண்ணரசி மொழியா என்ற பாடலில் பாடுவது கவியா, இல்லை பாரிவள்ளல் மகனா ,சேரனுக்கு உறவா , செந்தமிழன் நிலவா என்கிற வரிகளும் எம்.ஜி.ஆரை வர்ணித்து பாடியதுதான் .கண்ணதாசனுக்கு அரசவை கவிஞர் பட்டம் அளித்தபோது ,நான் இதற்கு நன்றி சொல்வதற்கான வாய்ப்பு இருக்கிறதோ இல்லையோ ,இப்போதே அந்த நன்றியை முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு காணிக்கை ஆக்குகிறேன் என்றார் .அவர் அமெரிக்காவில் இறந்தபோது ,அவர் உடலை சென்னைக்கு கொண்டு வரச்செய்து , அரசவை கவிஞருக்கு உண்டான அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்தவரும் எம்.ஜி.ஆர்.தான்*
நாடோடி மன்னன் படத்தின் வெற்றி விழாவில் பல்வேறு தரப்பினரும் பலவகையான விஷயங்களை சொன்னாலும் , எம்.ஜி.ஆர்.சந்தித்த ஒவ்வொரு சோதனையும் அந்த கால கட்டத்தில் வளர்ந்து வரும் ஒரு நடிகர் தனக்கான வாய்ப்புகள் கொட்டி கிடக்கும்போது சொந்த படத்திற்காக இவ்வளவு ரிஸ்க் எடுக்கிறாரே* என்று**வருத்தப்பட்டவர்கள் பலருண்டு .* இத்துடன் அவர் மன்னனல்ல .நாடோடியாக போய்விடுவார் என்று விமர்சனங்கள் வந்த வண்ணம் இருந்தபோது ,அந்த சிரமமான நேரத்திலே ஒவ்வொரு நாளும் படத்தின் காட்சிகளை ,பாடல்களை,வசனங்களை,பல்வேறு விஷயங்களை* யோசித்து யோசித்து , வெற்றிகரமாக செய்தாரென்றால் அவர் தன் தொழிலமீது காட்டிய உண்மையான அக்கறை, பக்தி, பற்று ,திறமை, ஆற்றல் கவனம்தான் அவரை நாடோடி மன்னன் ஆக்கியது .* அந்த படத்திலே அவரே சொன்னதுபோல நாடோடி மன்னன் என்கிற படம் பேரை சொன்னால் ஊரை வாங்கலாம் என்பது போல நாடோடி மன்னன் படம் அவருக்கு பெயரை மட்டுமல்ல இந்த தமிழ்நாட்டையே*வாங்கி கரங்களில் ஒப்படைத்தது .
1936ல் ஜெமினி நிறுவனம் அதிபர் வாசனின் கதையில் முதல் படமாகிய* சதி லீலாவதி* படத்தில் எம்.ஜி.ஆர். அவர்கள் ஒருசில காட்சியில் மட்டும் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடத்தில்* வருவார் .*காலத்தின் கட்டாயம் என்பது போல அதே ஜெமினி நிறுவனத்தின் தயாரிப்பான எம்.ஜி.ஆரின் 100 வது* படமாகிய ஒளிவிளக்கு படத்தில் 1968ல் எம்.ஜி.ஆர். நடித்து வெளிவந்து மகத்தான வெற்றி பெற்றது .ஒளிவிளக்கு படத்தில் எம்.ஜி.ஆர். மது அருந்துவது போல ஒரு காட்சி .அதன்பின் 5 எம்.ஜி.ஆர்.கள் வந்து குடிப்பதால் வரும் தீமைகளை விளக்கும் தைரியமாக சொல் நீ மனிதன்தானா என்ற* அறிவுரை கூறும்**பாடல் உண்டு .அந்த காட்சியில் 5 எம்.ஜி.ஆர் கள் தோன்றும் காட்சியில் மாஸ்க் ரிஸ்க் உள்ளது*அந்த படப்பிடிப்பு காலையில் தொடங்கி நள்ளிரவு வரை நடைபெற்றது .ஆனாலும் அந்த காட்சியில் அந்த 5 எம்.ஜி.ஆர்.கள் தோன்றும் காட்சி நன்றாக எடுக்கப்பட்டுள்ளதா என்று பார்ப்பதற்கு வாசனும் ,அவர் மகன் பாலசுப்ரமணியனும் எதற்கும் சரிபார்த்து விடலாம் என்று நள்ளிரவில் முடிவு எடுக்கிறார்கள் எம்.ஜி.ஆர். மிகவும் களைத்து போனதால் புறப்படுகிறார் .ஜெமினி ஸ்டுடியோவில் நாம் ரஷ் போட்டு பார்த்துவிட்டு எம்.ஜி.ஆர். அவர்களுக்கு நாளை காலையில் தொலைபேசியில் சொல்லிவிடலாம் என்று பேசிவிட்டு பார்க்கிறார்கள் .நேரம் நள்ளிரவை கடந்துவிட்டது .இருவரும் பார்த்து திருப்த்தி* அடைந்து நாளைக்கு எம்.ஜி.ஆர். அவர்களுக்கு சொல்லிவிடலாம் என்று பேசி கொண்டிருந்தபோது வாசனின் மகன் பாலு தோளில் ஒரு கை தட்டுகிறது .திரும்பி பார்த்தால் எம்.ஜி.ஆர். நிற்கிறார் .தான் நடித்த காட்சி நன்றாக வந்திருக்க வேண்டும் ,அதை உடனே பார்க்க வேண்டும் என்ற ஆவலில் வீட்டுக்கு செல்லாமல் திரும்பி வந்தவர் ஜெமினிக்கு வந்து அந்த ரஷ் காட்சிகளை சத்தம் போடாமல்*அவர்களுக்கு தெரியாமல்* வந்து**பார்த்திருக்கிறார் .இதற்கு காரணம் தொழிலமீது அவருக்கு இருந்த அக்கறை, பக்தி, பாசம், நேசம், பற்று ,கூடுதல் கவனம்*,என்று சொல்லிக்கொண்டே போகலாம் .
திரு.கா.லியாகத் அலிகான் :காங்கிரஸ் ஆட்சியில் கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு என்கிற படத்திற்காக சுற்று பயணம் செய்து வர முடிவு செய்து பாஸ்போர்ட்டுக்கு மனு செய்தபோது அப்போது தர மறுத்துவிட்டார்கள் .அப்போது தமிழ்நாட்டில் பக்தவச்சலம் முதல்வராக இருந்தார் .காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் பக்தவச்சலத்திற்கு நெருங்கிய நண்பராக இருந்த காலம் அது .அவர் மூலமாக பக்த்வசலத்தை அணுகி* பாஸ்போர்ட் வாங்கிவிட்டு வெளியே வந்த பிறகு கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜீ படம் இப்போதைக்கு சரியாக அமையாது .எனவே அடிமைப்பெண் எடுக்கலாம் என்று மனதில் ஏற்றிக்கொண்டார்*காஞ்சிபுரம் எம்.எல்.ஏ .அமிர்தம் என்பவர்தான் எம்.ஜி.ஆருக்கு உதவியவர் .அப்போதே அவர் எம்.ஜி.ஆரிடம்* சொல்லியிருக்கிறார் .கவலைப்படாதீர்கள் .நீங்களும் ஒருநாள் இந்த இருக்கையை அலங்கரிக்கும் காலம் வரும் என்று .எம்.ஜி.ஆர். அமிர்தத்திடம் ,மாணவர்கள் எல்லாம் எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு கற்பனை எனக்கு இருக்கிறது அந்த கற்பனையை பற்றி யோசிக்கும்போது என் நினைவுக்கு வருகிறவன்,தெரிந்தவன்* இந்த லியாகத் அலிகான்தான் என்று சொல்லி இருக்கிறார்.அவன்தான் மாணவர் அணி எப்படி இருக்கவேண்டும் என்று நான் நினைக்கிறேனோ அதன்படி வெகு வேகமாக* செயல்படுகிறான் என்றாராம்* அப்படித்தான் நான் தலைவரிடம் நேரடியாகவோ, வேறு யார் மூலமாகவோ எனக்கு பதவி கொடுங்கள் என்று கேட்டதில்லை .எனக்கு கொஞ்சம் கூச்ச சுபாவம் இருந்தது .ஆனாலும் என் உழைப்பு,திறமை, ஆற்றல் இதையெல்லாம் கண்ட அமைச்சர் குழந்தைவேலு என் வெற்றிக்காக* பாடுபட்ட உனக்கு ஏதாவது ஒரு பதவி வாங்கி கொடுத்தே ஆகவேண்டும் என்று என்னை வற்புறுத்தி அழைத்து சென்றார் .என்னை கட்டாயப்படுத்தி அவர் அழைத்து சென்றதற்கு காரணம் ,அப்போது எனக்கு தேர்வு எழுத வேண்டி இருந்தது .6 தேர்வுகள் நான் எழுதவில்லை தேர்வுகள் எழுதாமல் அமைச்சர் குழந்தைவேலுவுக்காக சிறப்பு ஏஜெண்டாக தேர்தல் பணிமனையில் 1980ல் பணியாற்றினேன் .என் பணியின் வேகத்தை பார்த்து குழந்தைவேலு மெல்ட்* ஆகிவிட்டார் . அப்போது தமிழக ஆளுநராக பிரபுதாஸ் பட்வாரி இருந்தார் .
அமைச்சர் குழந்தைவேலுவின் அலுவலகத்தில் நாங்கள் தங்கியிருந்தபோது தி.மு.க.வினர் சிலர் உள்ளே புகுந்து ஐஸ் கடை ஆனந்தன் என்பவர் ஏதோ தவறு செய்தார் என்ற காரணத்திற்காக அடித்து காயப்படுத்தினார்கள் .அவர்களின் ஆட்கள் பலமானவர்கள் என்பதால் எங்களால் அவர்களை எதிர்க்க முடியவில்லை .அந்த நேரத்தில் அமைச்சர் குழந்தைவேலு அங்கு இல்லை .தலைவரோட தொலைபேசி எண் நல்லவேளையாக என்னிடம் இருந்ததால் அவருடன் தொடர்பு கொண்டு பேசினேன் .அப்போது தேர்தல் முடிந்த நேரம் அநேகமாக1980ல்* மே மாதம் கடைசியில் .ஆனால் ஒட்டு எண்ணிக்கை நடைபெறாத நேரம் .* தலைவருக்கு போன் செய்து மிகவும் படபடப்பாக அண்ணே ,நான் லியாகத் அலிகான் பேசுகிறேன் .இங்கு தி.மு.க.வினர் ரகளை செய்து எல்லோரையும் அடிக்கிறார்கள். வெளியே சுமார் 100 பேர் திரண்டு இருக்கிறார்கள் .வெளியே வந்தால் அடித்து நொறுக்கிவிடுவோம் என்கிறார்கள் என்றேன் .தொடர்ந்து 3 நிமிடம் பேசுகிறேன் .அனைத்தையும் கேட்டுக்கொண்டே உம் உம*சொல்லு என்று கேட்டு கொண்டார் .சரி,போனை வை .நான் கவனித்து கொளகிறேன் என்றார் சுமார் 15 நிமிடம்* கழித்து , 3 போலீஸ் வேன் வந்தது .தி.மு.க.வினருக்கு தாங்கள் எப்படியும் வெற்றி பெற்றுவிடுவோம் என்று நினைப்பு உடுமலை தொகுதியில் .எதிர்த்து நின்றவர் சாதிகபாட்சா .போலீஸ் வேனை பார்த்ததும் ,தி.மு.க.வினர் இருந்த இடம் தெரியாமல்* ஓடிவிட்டார்கள் .அவர்களை எல்லாம் விரட்டிவிட்டு , நாங்கள் வழக்கமான பணியில் ஈடுபட்டோம் .அடுத்த நாள் ஒட்டு எண்ணிக்கை முடிவில்மீண்டும் அதே தொகுதியில்* அ.தி.மு.க.வெற்றி பெற்றது .தி.மு.க.வுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்திருந்தது .1980 நாடாளுமன்ற தேர்தலில் அவர்களின் கூட்டணி 37 தொகுதிகளை கைப்பற்றியது . கோபிசெட்டிபாளையம் ,சிவகாசி இரண்டு தொகுதிகளில் மட்டுமே அ .தி.மு.க. வெற்றி பெற்றது .எம்.ஜி.ஆர். வழக்கமாக அவர் காட்டும் இரட்டை இல்லை சின்னத்திற்கு அடையாளமாக இரு விரலை* காட்டுவார் இல்லையா அதனால் அவருக்கு கிடைத்த பரிசு இரண்டுதான் என்று தி.மு.க.வினர் அப்போது பரிகாசம் செய்த நேரம் .தலைவர் இந்த விமர்சனங்களை எல்லாம் ரசிப்பார் . கருணாநிதியே ஏதாவது கிண்டலாக பேசினால் கூட ரசிக்கும் மன பக்குவம் கொண்டவர் தலைவர் எம்.ஜி.ஆர். மற்ற தகவல்கள் அடுத்த அத்தியாயத்தில் தொடருவோம்*
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
-------------------------------------------------------------------------------
1.வாங்கய்யா வாத்தியாரய்யா* - நம் நாடு*
2.பேசுவது கிளியா இல்லை பெண்ணரசி மொழியா -பணத்தோட்டம்*
3.மானல்லவோ கண்கள் தந்தது - நீதிக்கு பின் பாசம்*
4.உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் -வேட்டைக்காரன்*
5.காடு விளையாட்டும் பொன்னே - நாடோடி மன்னன்*
6.எம்.ஜி.ஆர். -மனோகர் உரையாடல் - ஒளி விளக்கு*
7.தைரியமாக சொல் நீ மனிதன்தானா - ஒளி விளக்கு*
8.திரு.கா.லியாகத் அலிகான் பேட்டி*
-
தினமணி*04/10/20
-----------------------------
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் மனித*நேயம்*
-----------------------------------------------------------------------
சத்யா ஸ்டுடியோவில் படப்பிடிப்பின்போது விலையுயர்ந்த எளிதில் கிடைக்காத காமிரா ஒன்றை தொழிலாளி ஒருவர் கீழே போட்டு விட்டார் .அது பழுதாகிவிட்டது .அங்கிருந்தவர்கள் எம்.ஜி.ஆர். என்ன சொல்ல போகிறாரோ என்று தயங்கி தயங்கி ஒப்பனை அறையில் இருந்தவரிடம் விவரத்தை சொன்னார்கள் .அவர் காமிரா பழுதானத்தைப்பற்றி கவலைப்படவில்லை .* அந்த தொழிலாளியை அழைத்து உனக்கு அடி எதுவும் படவில்லையே .பயப்படாதே. காமிரா பழுதை சரிசெய்துவிடலாம் என்று சொன்னதோடு ஸ்டூடியோ பொறுப்பாளரிடம் வயதான அந்த தொழிலாளியை இனிமேல் கனமான காமிராவை தூக்க சொல்லவேண்டாம் என்றார் .
1977ம் ஆண்டு எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது .செய்தித்துறை சார்பில் நலிந்த கலைஞர்களுக்கு கலைவாணர் அரங்கில் பொற்கிழி வழங்கும் விழா நடைபெற்றது .* ஒருவருக்கு பொற்கிழி வழங்கிய எம்.ஜி.ஆர். அவர் காலில் விழுந்து வணங்கினார் .* அங்கே இருந்தவர்கள், பார்த்தவர்கள் எல்லாம் ஆச்சரியப்பட்டனர் .அப்போது எம்.ஜி.ஆர்.ஒரு காலத்தில் நான் உணவிற்கு கஷ்டப்பட்டபோது எனக்கு உணவு வழங்கினார் என்று தன் நன்றி உணர்வை வெளிப்படுத்தினார் எம்.ஜி.ஆர்.*
கோட்டை செல்வம்*
-
மலரும் நினைவுகள்
தென்னிந்திய திரைப்பட வரலாற்றில் முதன் முதலில் வசூலில் சாதனைகள் புரிந்த சந்திரலேகா படத்தின் சாதனைகளை
முறியடித்த முதல் படம் மக்கள் திலகத்தின் ''மதுரை வீரன் '' 1956ல் நடந்தது .
மக்கள் திலகத்தின் ''நாடோடிமன்னன் '' 1958ல் வெளிவந்து அதற்கு முந்தய மதுரைவீரனின் வசூலை முறியடித்து ஒரு புதிய சாகப்தத்தை உருவாக்கினார் எம்ஜிஆர் .
1958 முதல் 1965 வரை நாடோடி மன்னன் வசூலை எந்த படமும் நெருங்க முடியவில்லை .
நாடோடிமன்னன் ரிக்கார்டை 1965ல் வந்த எங்க வீட்டு பிள்ளை முறியடித்தது மிகப்பெரிய சாதனை .
1965 முதல் 1969 வரை எங்க வீட்டு பிள்ளை - வசூலில் முதலிடத்தை தக்க வைத்து கொண்டார் .
1969ல் வந்த எம்ஜிஆரின் அடிமைப்பெண் முந்த சாதனைகளை முறியடித்து
முதலிடத்தில் மகுடம் சூட்டியது .
1970ல் மாட்டுக்கார வேலன்
1971ல் ரிக் ஷாக்காரன்
[
1972ல் நல்லநேரம்
வசூலில் சாதனைகள் தொடர்ந்தாலும்
1973ல் வெளிவந்த உலகம் சுற்றும் வாலிபன் - வசூல் வரலாற்றை உருவாக்கியது
1936-1973 வரை வெளிவந்த தமிழ் படங்களில் அதிக வசூல் மற்றும் சாதனைகள் புரிந்த காவியமாக உலகம் சுற்றும் வாலிபன் சரித்திரத்தில் இடம் பெற்று விட்டது .
1974ல் உரிமைக்குரல் 200 நாடகளுக்கு மேல் ஓடி பல இடங்களில் உலகம் சுற்றும் வாலிபன் வசூலை முறியடித்து விட்டது .
1975ல் இதயக்கனி மீண்டும் நிரந்தர வசூல் சக்கரவர்த்தி என்பதை நிரூபித்து காட்டிய படம் .
மக்கள் திலகம் எம்ஜிஆர் 1977ல் தமிழக முதல்வராக பதவி ஏற்று கோடிக்கணக்கான எம்ஜிஆர் ரசிகர்களின் கனவை நிறைவேற்றினார் .
1947- 1977
30 ஆண்டு காலம் இந்திய திரை உலகில் முடிசூடா மன்னன்
1977-1987
10 ஆண்டுகாலம் தமிழக முதல்வராக ஆட்சி நடத்திய புரட்சித்தலைவர் எம்ஜிஆர் .
1987 லிருந்து 2020 இன்று வரை 33 ஆண்டுகளாக எம்ஜிஆர் என்ற மாமனிதரின் திரை உலக ஆளுமைகள் , அரசியல் வெற்றிகள்
சமூக வலைத்தளங்கள் , ஊடகங்கள் , பத்திரிகைகள் தொடர்ந்து பயணித்து வருவது மூலம் உலகமெங்கும் வாழும் எம்ஜிஆரின் கோடிக்கணக்கான ரசிகர்கள் பெருமை கொள்கிறார்கள் . எங்கள் எம்ஜிஆர் வெற்றி பயணம் தொடரும்.........vds...
-
தாய் உள்ளம் எம் ஜி ஆர்
தமிழக சட்டமன்ற அலுவலக மேல்மட்ட அதிகாரி ஒருவரின் உதவியாளருக்கு ஒரு போன் வர ஹலோ என்று கூற இது தோட்டத்தில் இருந்து சி எம் ன் உதவியாளர் ஐய்யாவை மதியம் உணவு அருந்தும் முன் தோட்டத்திற்க்கு வர சொல்லுங்கள் சி எம் கூறினார் என கூற இதை அதிகாரியிடம் கூற நாம் ஏதுவும் தப்பு செய்துவிட்டமோ என எண்ணி பின் எதற்க்கு என்று எண்ணிவாறு மதியம் தோட்டம் செல்லுகிறார் அவரை சி எம் எம் ஜிஆர் வாங்க நலமா என விசாரித்து விட்டு வாங்க சாப்பிட போகலாம் என அழைக்க தயக்கத்தோடு எதற்க்கு அழைத்தீர்கள் என கூற அது ஒன்றும் இல்லை சில நாட்கள் முன் தோட்டத்தில் நடத்த ஒரு கூட்டத்தில் நீங்கள் நானும் உண்ணும் போது ஒரு கறியின் பெயரை சொல்லி அதை விரும்பி சாப்பிட்டீர்கள் அது இன்று இங்கு சமைக்க பட்டபோது உங்கள் ஞாபகம் வந்தது அது தான் சாப்பிட அழைத்தேன் எனகூற
என் கண்கள் குளமாகியது என் தாயை தவிர எவருமே உணவை இந்த அளவு அன்போடு நினைத்ததில்லை அப்போது எம் ஜி ஆர் வடிவில் என் தாயையே பார்த்தேன்
இது அந்த அதிகாரி எழுதிய நூலில் இருந்து
வாழ்க எம் ஜி ஆர் புகழ்.........Am...
-
"சிரித்து வாழ வேண்டும்" 1974 நவ 30 ம்தேதி வெளியான உதயம் புரடொக்ஷன்ஸாரின் வெற்றிக் காவியம். எம்ஜிஆர் இரட்டை வேடங்களில் கலக்கிய படம். அப்துல் ரஹ்மான் என்ற முஸ்லீமாகவும், இன்ஸ்பெக்டர் ராமுவாகவும் இரண்டு வேடங்களில் நடித்திருப்பார். ஜெமினி அதிபர், ஆனந்த விகடன் உரிமையாளர். S.S. வாசனின் மகன் S S பாலன் இயக்கிய ஒரே படம். உதயம் புரடொக்ஷன்ஸார் மொத்தம் 3 படங்கள் தலைவரை வைத்து எடுத்ததில் மூன்றுமே 100 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி பெற்றதில் இது இரண்டாவது படம்.
முதல் படம் "இதய வீணை" இரண்டாவது படம்தான் "சிரித்து வாழ வேண்டும்". ஒரு சிவாஜி ரசிகர் கமெண்ட்டில் எம்ஜிஆருக்கு இரண்டு படங்கள் ஒரே மாதத்தில் வெளிவந்திருக்கிறதா? என்று கேள்வி கேட்டிருந்தார். அவருக்கு "உரிமைக்குரல்" "சிரித்து வாழ வேண்டும்" இரண்டும் ஒரே மாதத்தில் வந்த படங்கள் என்று நினைவில் இல்லை என்று நினைக்கிறேன். இதற்கு முன்னாலும் இரண்டு படங்கள் ஒரே மாதத்தில் வெளிவந்து வெற்றி
பெற்றாலும் அதை சாதனையாக நாங்கள் எண்ணுவதில்லை. அதை தயாரிப்பாளர்களின் வேதனையாகத்தான் பார்க்கிறோம்.
இரண்டையும் ஒரே மாதத்தில் வெளியிடும் எண்ணம் இரண்டு தயாரிப்பாளர்களுக்கும் கிடையாது.
நெருக்கடியான காலகட்டத்தில் இரண்டு படங்களும் ஒரே மாதத்தில் வெளியாகின்ற சூழ்நிலை உருவாகி விட்டது. இரண்டு படங்களுமே 100
நாட்களை கடந்தாலும் "உரிமைக்குரல்"
200 நாட்கள் ஓடியது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி எனலாம்.
தமிழ்ப்பட உலகம் கண்டிராத மாபெரும் வெற்றி படமாக "உரிமைக்குரல்" அமைந்து விட்டது
நெல்லை சீமையிலே வெள்ளி விழா கொண்டாடி நகரிலேயே 182 நாட்கள் ஓடிய ஒரே படம் இன்று வரை "உரிமைக்குரல்"தான். இதே ஊரில் சிவாஜியின் எந்த படமும் 125 நாட்கள் கூட வடக்கயிறால் கட்டி இழுக்க முடியவில்லை என்பது மகாகேவலமான ஒரு சோக நிகழ்வுதான். எம்ஜிஆருக்கோ மதுரை வீரன் 132 நாட்களும், நாடோடி மன்னன் 127 நாட்களும், மாட்டுக்கார வேலன் 140 நாட்களும், எங்க வீட்டுப் பிள்ளை 149 நாட்களும் ஓடியது குறிப்பிடத்தக்கது.
"சிரித்து வாழ வேண்டும்" மதுரை நியூசினிமாவில் 104 நாட்கள் ஓடி நல்ல வசூலை பெற்றது. 24 சென்ட்டரில் 50 நாட்களை கடந்து சிறந்த வெற்றியை பதிவு செய்தது.
இருப்பினும் "உரிமைக்குரல்" படத்தின் வெற்றியின் வேகம் பின்னால் வந்த "சிரித்து வாழ வேண்டும்" படத்தின் வெற்றியை பாதித்தது என்றே சொல்ல வேண்டும்.
சென்னையை பொறுத்தவரை இரண்டு படங்களுமே 10 லட்சத்தை தாண்டி வசூல் செய்தது. தனியாக "சிரித்து வாழ வேண்டும்" வெளியாகி இருந்தால் மிகப் பெரிய வெற்றியை பெற்றிருக்கும் என்றே சொல்லலாம். பாடல்கள் எல்லாமே அருமையாக இருந்தாலும் 'பொன்மனச்செம்மலை' பாடல் மிக இனிமை. 'நீ என்னை விட்டு போகாதே' பாடல் மேலும் சிறப்பு. 'கொஞ்ச நேரம்' பாடல் கர்னாட்டிக் இசையில் சற்று மெதுவாக சென்றாலும் அனைவரும் ரசிக்கும்படி இருக்கும். தலைவர் பலவித உடைகளில் வந்து பரவசப்படுத்துவார். "மேரா நாம் அப்துல் ரஹ்மான்" பாடலில் பிரமிக்க தக்க செட்டிங்ஸை பார்க்கலாம். பாடலும் அருமை பாடலின் கருத்துகளும் அருமை. படத்தில் லதா பேசும் சேரி பாஷை அவ்வளவாக நன்றாக இல்லை.
'"ஆடுவது கடமையின் நினைவாக'" பாடல் நெடுநேரம் வந்தாலும் க்ளைமாக்ஸில் விறுவிறுப்பை உண்டாக்கி விடும். அதில் வரும் பாடல் வரிகள் ரசிகர்களை ஆனந்த கூத்தாட வைத்தது. படம் ஹிந்தியில்
அமிதாப் நடித்த "ஜஞ்ஜீர்" படத்தின் கதையாக இருந்தாலும் ஒரு சிலரைப்போல் ஜெராக்ஸ் காப்பி எடுக்காமல் தலைவர் தனக்கே உரிய பாணியில் கையாண்டிருப்பார். படம் சிறப்பாக இருந்தாலும் ஒரு தடவை பார்த்து விட்டு அடுத்த முறை பார்ப்பதற்கு "உரிமைக்குரலை"யே தேர்ந்தெடுத்தார்கள் ரசிகர்கள்.
அந்த வயதில் "சிரித்து வாழ வேண்டும்" சார்லஸில் இருமுறைதான் பார்த்தேன். ஆனால் "உரிமைக்குரலை" 17 முறை பார்த்தேன். நான் மட்டுமல்ல தலைவர் ரசிகர்கள் அனைவரும் "உரிமைக்குரலை"தான் அதிக தடவை பார்த்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். பார்க்க பார்க்க மீண்டும் அடுத்த முறை எப்போது பார்க்கலாம் என்ற எண்ணத்தை உண்டாக்கி விடும் படம்தான் "உரிமைக்குரல்".
சென்னையில் பிளாசா(83) கிருஷ்ணா(83) மகாலட்சுமி(62) கிருஷ்ணவேணி(62) ஆகிய திரையரங்குகளில் வெளியாகி
மொத்தம் 290 நாட்கள் ஓடி ரூ 10,55,974.05 வசூலாக பெற்று வெற்றி பெற்றது. மதுரை நியூசினிமாவில் 104 நாட்கள் ஓடி. ரூ 3,59,634.60 வசூலாக பெற்றது. திருச்சியில் 82 நாட்கள் ஓடி ரூ 3,12,875.00 வசூலாக பெற்றது.
மேலும் கோவையில் 81 நாட்களும் சேலத்தில் 90 நாட்களும் ஈரோட்டில் 77 நாட்களும் ஓடி வெற்றி பெற்றது.
மொத்தம் 24 திரையரங்குகளில் 50 நாட்களை கடந்து சாதனை செய்தது.
நெல்லையில் 62 நாட்கள் ஓடி ரூ. 1,41,732.55 வசூலாக பெற்று மகத்தான வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
நெல்லை கணேசன் ரசிகர்களுக்கு தொல்லையாகவும்
தலைவர் ரசிகர்களுக்கு வெற்றியின் எல்லையாகவும் இருந்தது எனலாம்.
"வசந்த மாளிகை"யை மதுரையில் 200 நாட்கள் வடக்கயிறு போட்டு இழுத்தவர்களால் நெல்லையில் 69
நாட்களுக்கு மேல் தேரை இழுக்க முடியாமல் பாதி வழியிலேயே நின்றது இழுவை ரசிகர்களுக்கு ஒரு சோகமான முடிவாகும்.......... Courtesy: KS.........
.
-
மிகச் சிறந்த கருத்துக்கள் மிக மிகச் சிறந்த கருத்துக்கள் புரட்சித் தலைவரை பற்றி நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள நடிகர் பேரரசர் எம்ஜிஆர் என்ற குழு உதவுகிறது மிகவும் பாராட்டுக்குரியது புரட்சித்தலைவரின் எந்த ஒரு திரைப்படமாக இருந்தாலும் 100 நாட்களுக்குக் குறையாமல் தான் ஓடியுள்ளது வசூலில் மிகப்பெரிய சாதனைகளை செய்துள்ளது உரிமைக்குரலை எடுத்துக்காட்டாகக் கூறலாம் ஸ்ரீதருக்கு வாழ்வு கொடுத்த படம் அதுவரை புரட்சித்தலைவரின் அருமை தெரியாமல் இருந்தவர் பின்னர் உணர்ந்துகொண்டார் அதை மனம்விட்டு பலமுறை கூறியுள்ளார் பொன்மனச் செம்மலின் வாழ்க்கை ஒரு காவியம் ஆகும் பரம்பொருளாகிய இறைவன் அவர் அளவுக்கு யாரும் இருக்க மாட்டார்கள் என்பதால் அவருக்கு மக்கட் செல்வம் வழங்க வில்லை அதனால் என்ன நாம் அனைவருமே புரட்சித்தலைவர் அவர்கள் பிள்ளைகள்தானே தயவுசெய்து புரட்சித் தலைவரைப் பற்றி நிறைய விஷயங்கள் வெளியிடுங்கள் சந்தோஷமாக உள்ளது படிப்பதற்கு பதிவிட்டமைக்கு நன்றி... Srinivasan Kannan...
-
தங்கள் பதிவு சூப்பர்!
"சிரித்து வாழ வேண்டும்" திரைப்படம் புரட்சித்தலைவர் இரட்டைவேட நடிப்பில் மாறுபட்ட படமாகவும், இந்து முஸ்லிம் ஒற்றுமையை விளக்கும் சிறப்பான படமாகவும் அமைந்தது அருமையான படம்.
புரட்சித்தலைவர் திரைப்படங்கள் அனைத்தும் ஆறு மாதங்களுக்கு ஒரு படம் என்று ரிலீஸ் ஆகி இருந்தாலும், சொந்த தியேட்டர் இருந்திருந்தாலும் எல்லா படங்களும் வெள்ளி விழா படங்களாக இருக்கும் ஆனால் புரட்சித்தலைவர் தன் ரசிகர்களுக்காக தொடர்ந்து தான் நடித்த படங்களை வெளியிட்டு மகிழ்ச்சி அடைந்தார். தலைவர் படங்களுக்கு தலைவர் படங்களே போட்டியாக வந்தது இருந்தும் அனைத்தும் வெற்றி பெற்றது வசூல் சாதனை புரிந்தது.
... Kumar Govindarajan
-
புரட்சித் தலைவரின் எந்த படமும் சொந்த தியேட்டரில் 100 நாள் ஓட்டவில்ல. அவருக்கு சொந்த தியேட்டரே இல்ல. சத்யா ஸ்டுடியோ தான் வாங்கினார். பெரியார், அண்ணா மாதிரி புரட்சித்தலைவருக்கும் பிள்ளைங்க இல்லை. பிள்ளைங்க இருந்து அதுங்க அவர் வாங்கின சத்யா ஸ்டுடியோவை இடிச்சு காம்ப்ளக்ஸ் கட்டி விட்டு, அங்கே ஓரத்தில் சூம்பிப்போன தேங்கா மட்டை மாதிரி சிலை வெச்சு அதுவும் வெளங்காம போனா என்ன பண்ணறது? அந்த மாதிரி தறுதல பிள்ளைங்க மக்கள் செல்வம் பிறக்கறதுக்குப் பிறக்காமயே இருக்கலாம். இன்னொரு விசயம். சில நடிகர்கள் தொழிலுக்காக வெளியூர் போயிடுவாங்க. கூட்டுக் குடும்பத்தில் அவங்க தம்பிதான் வீட்டுல இருந்து குடும்பத்தில் எல்லாரையும் பார்த்துப்பாங்க. புரட்சித் தலைவருக்கு அந்த மாதிரி உதவிக்கு யாரும் இல்லை. தானே எல்லாம் செய்தார். சிரித்து வாழ வேண்டும் உட்பட அவரின் எந்த படமும் சொந்த தியேட்டரில் பிறர் உதவியோடு ஓட்டப்படவில்லை.......... Rajarajan...
-
சிரித்துவாழ வேண்டும் படத்தில் அப்துல் ரஹ்மானாக வரும் மக்கள் திலகம் கொஞ்சம் கரகரப்பான குரலில் பேசி வித்தியாசம் காட்டியிருப்பார். என்னைவிட்டுப் போகாதே.. பாடலின்போது பிளாக் சூட்டில் வரும் மக்கள் திலகம் கொள்ளை அழகு. கூடவே சுற்றுப்புறத்தையும் ஆட்களையும் எடைபோடும் கூர்மையான நிதானப் பார்வை. எல். காஞ்சனா அவரது கையைப் பிடித்து இழுத்தபோதும் நகராமல் ‘நீ இழுத்த இழுப்புக்கு நான் வர முடியாது’ என்பதுபோல வலுவாக அதே இடத்தில் நிற்பார். பிறகு, ‘ப்ளீஸ்’ என்று கெஞ்சியபிறகுதான் நடந்து செல்வார். அந்த இடத்திலேயே தான் யார், தனது கேரக்டர் என்ன என்பதை அற்புதமாக வசனமே இல்லாமல் உடல்மொழியால் காட்டியிருப்பார்.
‘ஒரே இடத்தில் இரண்டு அறிவாளிகள் இருந்தால் அங்கு வேலை நடக்காது... விவாதம்தான் நடக்கும் .அதனால், என் முதலாளியை நான்தான் கொன்னேன்’’... நம்பியாரின் அதிர்வேட்டு வசனத்துக்கு சொந்தக்காரர் ஆர்.கே.சண்முகம். லதாவை அடியாள் கூட்டம் துரத்தும்போதும், ரயில் தண்டவாளத்தில் மக்கள் திலகம் அடித்துப் போடப்பட்டிருக்கும்போதும் க்ளைமாக்ஸிலும் இருட்டில் எடுக்கப்பட்ட காட்சிகளில் கூட ஒளிப்பதிவு துல்லியமாக இருக்கும். இனிமையான பாடல்கள் போனஸ். கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்.. பாடலில் 8 வண்ண உடைகளில் மக்கள் திலகம் சொக்கவைப்பார். பாடல் காட்சியில் அதிகபட்ச உடைகளில் அவர் தோன்றியது இந்தப் பாடலில்தான்.
உரிமைக்குரல் வெளியாகி 24 வது நாளில் சிரித்துவாழ வேண்டும் வெளியானது. உரிமைக்குரலின் பிரம்மாண்ட வெற்றியால் மதுரையோடு தனது 100 நாளை சுருக்கிக் கொண்டது. இன்னும் சில மாதங்கள் கழித்து வெளியாகியிருந்தால் மேலும் பல ஊர்களில் 100 நாள் ஓடியிருக்கும். உரிமைக்குரலும் இன்னும் சில தியேட்டர்களில் வெள்ளி விழா ஓடியிருக்கும். ஒரு தியேட்டரில் மட்டும் 100 நாள் ஓடினால் அதற்கே பெருமைப்பட்டு பத்திரிகையில் விளம்பரம் கொடுக்கும் வழக்கம் நமக்கு இல்லை. நினைத்ததை முடிப்பவன் மதுரையில் 100 நாள் ஓடியபோதும் ஒரு தியேட்டர் என்பதால் அதற்கும் விளம்பரம் கொடுக்கப்படவில்லை.
ஆனந்த விகடன் பத்திரிகையில் வேலைபார்த்து வந்த பத்திரிகையாளர் மணியனை இதய வீணை படம் மூலம் திரைப்படத் தயாரிப்பாளராக மக்கள் திலகம் உயர்த்திவிட்டார். உதயம் ப்ரொடக்க்ஷன்ஸ் என்று அவரது நிறுவனத்துக்கு தானே பெயர் சூட்டினார். உதயம் ப்ரொடக்க்ஷன்சின் இதயவீணை வெற்றியைத் தொடர்ந்து அந்நிறுவனம் தயாரித்த சிரித்து வாழ வேண்டும், அடுத்து தயாரித்த பல்லாண்டு வாழ்க என்று மக்கள் திலகத்தை வைத்து தயாரித்த மூன்று படங்களுமே 100 நாட்களைக் கடந்து ஓடி வெற்றிப் படமானது. புரட்சித் தலைவர் யானையைப் போன்றவர். அவர் காலைத் தொட்டால் தொட்டவரை தலைக்கு மேல் தூக்கி வைத்துக் கொண்டு, ராஜ சவாரி செய்ய வைத்துவிடுவார். அப்படி சவாரி செய்து உயர்ந்த நிலையை அடைந்தவர்களில் மணியனும் ஒருவர்...... Swamy...
-
பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர்.- வின்*டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*02/10/20 அன்று சொன்ன*தகவல்கள்*
-------------------------------------------------------------------------------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் அந்த காலத்திலேயே ஸ்டண்ட் கலைஞர்கள் மாடக்குளம் அழகிரிசாமி, தர்மலிங்கம் போன்றவர்கள் அவருடன் இருந்து*படங்களில் பணியாற்றியவர்கள் அவர்களிடம் இருந்து ஸ்டண்ட் பற்றிய பல்வேறு வித்தைகளை எம்.ஜி.ஆர். கற்றுக்கொண்டார் .எம்.ஜி.ஆர். முதல்வரான பின்பும் இவர்களுடன் தொடர்பில் இருந்தார் .தனக்கு பாதுகாப்பிற்கு அரசு சார்பில் காவல் துறை அதிகாரிகள் உடன் இருந்து பணியாற்றினாலும் ,இந்த ஸ்டண்ட் கலைஞர்களை தனி உதவியாளர்களாகவும் ,பாதுகாப்பிற்கும் வைத்து கொண்டார் .* காவல்துறை அதிகாரிகள் பதவியில் இருக்கும் வரையில் தான் பாதுகாப்பிற்காக துணை இருப்பார்கள் .5 ஆண்டுகள் முடிந்த பின்பு அவர்களது பாதுகாப்பு பணி இருக்காது என்பதனால் ஸ்டண்ட் கலைஞர்களிடம் எனக்கு எப்போதுமே நீங்கள்தான் நிரந்தரம் பாதுகாப்பிற்கும்,மற்ற உதவிகளுக்கும் என்று தனது இறுதி காலம் வரையில் வைத்து கொண்டு அவர்களுக்கு தேவையான தனி ,குடும்ப உதவிகள் எல்லாவற்றையும் செய்து வந்தார் .
தாய்க்கு பின் தாரம் தொடங்கி தனது இறுதி காலங்களில் வெளியான உழைக்கும் கரங்கள் படம் வரையில் பல்வேறு வகையான* சண்டைக்கலைகளை திரைப்படங்களில் புகுத்தினார் .தமிழர்களின் கலாச்சார , பாரம்பரிய சண்டை கலைகளான சிலம்பம், கம்பு சண்டை, வாள் சண்டை , சுருள்வாள் வீசுதல், மான் கொம்பு சண்டை ,பல்வேறு வகையான கத்தி, கோடாரி, ஈட்டி போன்ற ஆயுதங்கள் பயன்படுத்திய சண்டை காட்சிகள் ஆகியவற்றை பல திரைப்படங்களில் படமாக்கி பிரபல படுத்தினார் .சுருள்வாள் வீசுவது என்பது சாதாரண விஷயமல்ல .ரிக்ஷாக்காரன் படத்தில் சுருள்வாள் வைத்து சண்டை போடுவார் .அதை எக்கு தப்பாக பயன்படுத்தினால் வீசுபவர் உடலையே பதம் பார்த்துவிடும் .அப்படி ஒரு அபாயகரமான கலை .இது ஒரு தற்காப்பு கலை.அதே சமயத்தில் அதிக ரிஸ்க்கான கலை என்பது பலரும் அறியாத செய்தி .அதே போல உழைக்கும் கரங்கள் படத்தில் மான் கொம்பு சண்டை செய்வதற்கு முன்பு தனக்கு வாத்தியார், குரு , உஸ்தாதாக* நடிகர் திருப்பதிசாமியை எண்ணி* அவரிடம் ஆசி பெற்றபடி தலைவணங்கி பின்னர் சண்டை செய்வார் .
மதுரையை சார்ந்த திரு.ஷேக் உஸ்மான் என்பவர் கூறுகிறார் எம்.ஜி.ஆருக்கு தெரியாத சண்டை* கலை வித்தைகளே* கிடையாது .ஒவ்வொரு சண்டை கலைகளிலும் , சிலம்பத்திலும்* இத்தனை வீடு கட்ட வேண்டும் இத்தனை நடை இருக்கிறது .கருட வரிசை ,நாக வரிசை, புலி வரிசை என்று பல்வேறு வரிசைகள் உள்ளன .அந்த வரிசைகள் எல்லாவற்றையும் அறிந்தவர் எம்.ஜி.ஆர். அவர் முதல்வராக* இருந்து மதுரையில் உலக தமிழ் மாநாட்டை நடத்தும்போது பாரத பிரதமர் இந்திரா காந்தி தலைமையேற்று பார்வையிட வந்திருந்தார் .அந்த மாநாட்டில் சுமார் 100குழுக்களுக்கு சிலம்ப சண்டை கலையில் போட்டி வைத்தார் .சிறந்த பயிற்சியாளர்களுக்கு தங்க மோதிரம் பரிசளித்து பாராட்டினார் .அப்படி பரிசு பெற்றவர்களில் முக்கியமானவர் மதுரையை சேர்ந்த திரு.ஷேக் உஸ்மான் என்பவர் .* அப்படி தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை*வளர்ப்பதற்காகவே ,தமிழ் வளர்ச்சி துறையோடு*சேர்த்து* ,தமிழ் பண்பாட்டு வளர்ச்சி துறை ஒன்றை உருவாக்கி அந்த சிலம்ப கலைஞர்களெல்லாம் சோர்ந்து விடக்கூடாது*என்று கருதி*,அவர்களை ஊக்குவிக்கும் வண்ணம் ஸ்டண்ட் கலைஞர் மாடக்குளம் அழகிரிசாமி என்பவரின் வாரிசுதாரரை அந்த துறைக்கு தலைவராக* நியமித்தார் .
திரு.கா.லியாகத் அலிகான் :மதுரையில் இருந்து திருச்செந்தூருக்கு ,நீதி கேட்டு நெடிய பயணம் ஒன்றை கருணாநிதி மேற்கொண்டார் .அதாவது* சுப்ரமணிய பிள்ளை என்பவரின் மரணம் இயற்கையானது அல்ல அதற்கு காரணம் அப்போதைய அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன்தான் என்று குற்றம் சுமத்தியபோது தமிழக முதல்வராக* இருந்த எம்.ஜி..ஆர். பால் கமிஷன் என்று ஒரு குழுவை நீதி விசாரணை செய்ய அமைத்தார் .பால் கமிஷன் அறிக்கை தாயாராகி வெளியிட சில காலதாமதம் ஆகியது என்று சொல்லிவழக்கம் போலகருணாநிதி** தன் ஆட்கள் மூலம் செய்திகளை திரட்டி அறிக்கையை வெளியிட்டார் .நீதி விசாரணை குழுவின் அறிக்கை எப்படி கருணாநிதி கைகளுக்கு போய் சேர்ந்தது .நீதிபதியே கொடுத்தாரா அல்லது கருணாநிதியிடம் அறிக்கை ஒப்படைத்தது யார் என்று அரசு சார்பில் விசாரிக்கக்கூடாது என்று முரசொலி செல்வம் பத்திரிகையில் எழுதுகிறார் என்றால் எந்த வகையில் நியாயம் .காவல்துறையினர் முரசொலி அலுவலகத்தில் சென்று விசாரித்துள்ளனர் .இது தவறு என்று எம்.ஜி.ஆர்.அரசு அராஜக நடவடிக்கை என்று** குற்றம் சுமத்துகிறார் முரசொலி செல்வம் .இன்னொரு விஷயம் என்னவென்றால்,நீதி கேட்டு நெடிய பயணம் போவதாக சொல்லி மதுரைக்கு சென்றுவிட்டார் கருணாநிதி .அப்போது சென்னையில் இருந்து புரட்சி தலைவர் மதுரைக்கு போன் செய்து இந்த வயதில் இந்த பயணம் வேண்டாம். உங்கள் உடல்நலம் பாதிக்க கூடும் ,நீங்கள் கேட்டபடி விசாரணை கமிஷன் வைத்தாகிவிட்டது .அதன் அறிக்கையும் விரைவில் வெளியிடப்படும்*உங்கள் உடல்நலத்தை தயவுசெய்து கெடுத்து கொள்ளாதீர்கள் என்று பக்குவமான* ,கருணை மிக்க , நட்புக்கு இலக்கணம் வகுத்த மரியாதை கொடுத்த* ஒரு மாபெரும் தலைவன் அமரர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.பற்றி விமர்சிக்கும் என் உள்ளம் கொதிக்கிறது .கருணாநிதி நல்லவரோ, கெட்டவரோ .அவரும் அமரர்தான் .அவரைப்பற்றி நாங்கள் தவறாக பேசுவதில்லை .இ பி.எஸ்., ஓ பி.எஸ். கூட கருணாநிதி பற்றி எந்த விமர்சனமும் செய்வதில்லை .ஜெயலலிதா மறைந்துவிட்டார் .அவரும் அமரர்தான் .ஸ்டாலின் கூட ஜெயலலிதா அம்மையார் என்றுதான் பேசுகிறார் .எனவே அமரர் ஆனவரை பற்றி ,கடந்த கால*நிகழ்வுகளை சம்பந்தப்படுத்தி இன்றைய முரசொலியில் எழுதி வருவது சரியல்ல .உண்மை விசுவாசிகளான என்னை போன்ற எம்.ஜி.ஆர்.தொண்டர்களின் உள்ளங்கள் கொதிக்கின்றன அது மிகப்பெரிய தவறு.நியாயமும் இல்லை .
திரு.துரை பாரதி :தே.மு.தி.க.தலைவர் விஜயகாந்த் தன்னை கருப்பு எம்.ஜி.ஆர். என்று சொல்லி கொள்கிறார் .அது சரியா தப்பா என்று வாதிடவில்லை .எப்படியோ 29 சட்ட மன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்து அவருக்கு கிடைத்தது .அதே போல நடிகர் ரஜினிகாந்த் நான் ஆட்சிக்கு வந்தால் எம்.ஜி.ஆர்.*ஆட்சி அளிப்பேன் .ஆனால் நான் எம்.ஜி.ஆர். அல்ல .அப்படி நீங்கள் நினைத்தால்*நான் ஒன்றும் சொல்வதற்கில்லை .ஏனென்றால் எம்.ஜி.ஆர். ஒரு யுகபுருஷன் .மேலும் என்னால் எம்.ஜி.ஆர். அளித்த அந்த சாமான்ய ஆட்சி, ஏழை எளியோருக்கான ஆட்சி, மத்திய வர்க்கத்தினருக்கான* ஆட்சி தர முடியும்*என்கிற**இந்த வாதங்கள் எந்த அளவிற்கு எடுபடும்*
திரு.கா. லியாகத் அலிகான்*: இப்போது நான் அண்ணா தி.மு.க.வில் இருக்கிறேன் .அந்த கட்சிக்கு*உயிராக இருப்பது இரட்டை இலை சின்னம் .இப்போது தலைவர்களாக இருக்கும்*இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். ஆகிய இருவருக்குள்ளும் மனத்தாங்கல் வந்து ,அவர்கள் இருவருக்கும் இடையே சண்டை வந்துள்ளது என்று சொல்லி பிரயோஜனமில்லை .* இருவரும்*சண்டையிட்டு சமாதானமாகி இரட்டை இலை சின்னத்தை*மீண்டும்* கொண்டு வந்துள்ளனர் .தினகரன் அவர்களுக்கு இரட்டை இலை சின்னம் தரக்கூடாது*என்று வாதாடியபோதும்*எப்படியோ சாமர்த்தியமாக இருவரும்*இணைந்து போராடி இரட்டை இலையை***.தக்க வைத்துக் கொண்டதை பாராட்டியே ஆகவேண்டும் . அந்த இரட்டை இலை சின்னம் வருங்காலத்திலும் தோற்க கூடாது .அப்படி தோற்றால் எம்.ஜி.ஆர். தோற்றதாகத்தான் அர்த்தம் .ஜெயலலிதா தோற்றதாக அர்த்தம் அதனால்தான் நாங்கள் இரட்டை இலையின்*வெற்றிக்காக எந்த நேரத்திலும், எதற்காகவும் தயாராக இருக்கிறோம்*ரஜினிகாந்த் எம்.ஜி.ஆர்.ஆட்சி பற்றி பேசுகிறார் .அவர் அப்படி பேசினால் கூட தமிழருவி மணியன் அவரை விடமாட்டார் போலிருக்கிறது .நீங்கள் ஏன் எம்.ஜி.ஆர் ஆட்சி பற்றி பேசுகிறீர்கள் .வேறொரு ஆட்சி பற்றி பேசுங்கள் என்பார் .எப்படி சொன்னாலும் பரவாயில்லை.அப்படியெல்லாம் பேசுவதால் இங்குள்ள அ .தி.மு.க. தொண்டர்கள், எம்.ஜி .ஆர்.ரசிகர்கள் ஆகியோரின்* எம்.ஜி.ஆர். வாக்குவங்கி*மாறாது .ஜெயலலிதாவின் வாக்கு வங்கி மாறிவிடாது*.இரட்டை* இலைக்குத்தான்* அவர்களெல்லாம் வாக்களிப்பார்கள் .அதில் ஓரிரண்டு வாக்குகள்*மாறலாம் . சிதறலாம் .ஆனால் கணக்கில் வராது .தினகரன் கட்சியை பற்றி ஆரம்பத்தில் பெரிதாக பேசினார்கள் .நானும் சென்று பார்த்தேன் .நான் சொன்ன*ஆலோசனைகளை அவர்கள் ஏற்பதாக தெரியவில்லை .மதுசூதனன் அவைத்தலைவராக உள்ளார்*.அவர் அ.தி.மு.க.விற்காக போட்டியிடும்போது அவரை நீங்கள் ஆதரிக்க வேண்டும் என்று பிறர் மூலம் கோரிக்கைகள் வைத்தேன் .ஆனால் அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளாமல் பின்னர் பணத்தினாலோ, சொந்த செல்வாக்கிலோ,வேறு ஏதாவது ஒரு பலத்தினாலோ வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்* என்றால் கூட இன்றைக்கு மதுசூதனன்தான் அவை தலைவராக*உள்ளார் .தினகரன் நிலைமை இன்றைக்கு என்ன என்று அனைவருக்கும் தெரியும் .என்று லியாகத் அலிகான் பேசினார் .
திரைப்படத்துறையை விட்டு வெளியே வந்து முதல்வராகிய பின்பும், ஸ்டண்ட்*கலைஞர்களை, ஸ்டண்ட் இயக்குனர்களை எல்லாம் அவர் காப்பாற்றி வந்தார் .நடிகன் குரல் பத்திரிகை ஆசிரியராக இருந்தபோது ஸ்டண்ட் நடிகர்களில் சிறந்தவர் யார் என்று கேட்டதற்கு ஜஸ்டின் என்று சொன்னார்*.தன்னிடம் உதவியாளர்கள், பயிற்சியாளர்கள் பலர் இருந்தாலும்கூட ஜஸ்டின் என்கிற ஸ்டண்ட் கலைஞனை உயர்த்தி*சொல்லும்*மனோபாவம் எம்.ஜி.ஆரிடம் இருந்தது .வில்லன் நடிகர் எம்.என்.நம்பியார் ,எம்.ஜி.ஆருக்கு துணையாக படங்களில் நடித்தபோதும் ,ஆர்.என்.நம்பியார் என்கிற ஸ்டன்ட் இயக்குனர்தான் எம்.ஜி.ஆருக்கு வாள்**சண்டை பயிற்சி அளித்தவர் அந்த ஆர்.என்.நம்பியார் என்கிற*ஸ்டண்ட்* இயக்குனரின்* குழுவின்*பங்களிப்பு* எம்.ஜி.ஆரின் நிறைய படங்களில் இருக்கும் .
சென்னை கீழ்ப்பாக்கம் நீரேற்று நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி மைதானத்தில்*உள்ள ஜிம்மில் இருந்து ஒருவர் வெளியே* வருகிறார் .அவரது கைகளில் இரட்டை இலை சின்னமும் , எம்.ஜி.ஆரின் உருவமும் வரைந்து இருக்கிறார் .அவரிடம்வணக்கம் சொல்லி , எம்.ஜி.ஆரை பற்றி உங்களின் அனுபவங்கள் இருந்தால் சொல்லுங்கள் என்று கேட்டதற்கு எங்கள் குடும்பத்திற்கு அவர்தான் குலதெய்வம் என்று சொன்னார் எப்படி என்று கேட்டால் அவருடைய அப்பாவிற்கு அப்பாவுக்கு வி.வி.சாமி என்பவர் சன்டை பயிற்சியாளராக இருந்தாராம் வி.வி.சாமியின் தம்பியும் சண்டை பயிற்சியாளராம் ..குடியிருந்த கோயில் படத்தில் கூட சண்டை காட்சியில் நடித்து இருக்கிறார்களாம் .* எங்கள் குடும்பத்தில் கிட்டத்தட்ட 3 தலைமுறை அளவிற்கு இல்ல திருமணங்களை நடத்தி வைத்தவர் எம்.ஜி.ஆர்.தான் .திரையுலகத்திற்கு வெளியே ,தொழில் ரீதியான நண்பர்களோடு நல்ல உறவு ,அந்த நண்பர்களுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு அடியிலும் தனது முத்திரையை பதித்திருக்கிறார் .தனது அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார் .அக்கறையை காட்டி இருக்கிறார் எம்.ஜி.ஆர்.என்பதில்தான் அவரது வாழ்க்கை சகாப்தமாக இருக்கிறது .
இந்த நிகழ்ச்சியில் திரு.லியாகத் அலிகான் அவர்கள் எம்.ஜி.ஆர் அவர்களுடன் தன்* நிழல் அனுபவங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார் .அதன் தொடர்ச்சி ,ஆற்று நீராக, அன்பு பெருவெள்ளமாக தொடர்ந்து வந்து உங்களை நனைக்கும் .அந்த அன்பு பெருவெள்ளத்திலே தொடர்ந்து நாம் நனைவோம் .மற்ற தகவல்கள் அடுத்த அத்தியாயத்தில் தொடரும் .
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
----------------------------------------------------------------------------------
1.பிறந்த இடம் தேடி நடந்த தென்றலே - நான் ஆணையிட்டால்*
2.அன்புக்கு நான் அடிமை - இன்று போல் என்றும் வாழ்க*
3.சண்டை காட்சியில் எம்.ஜி.ஆர். - காவல்காரன்*
4.சண்டை காட்சியில் எம்.ஜி.ஆர்.-பெரிய இடத்து பெண்*
5.சைக்கிள் ரிக் ஷா சண்டை காட்சி - ரிக்ஷாக்காரன்*
6.மான் கொம்பு சண்டை காட்சி - உழைக்கும் கரங்கள்*
7.சண்டை காட்சியில் எம்.ஜி.ஆர்.- அடிமைப்பெண்*
8.கடவுள் வாழ்த்து பாடும்* - நீரும் நெருப்பும்*
9.சண்டை காட்சியில் எம்.ஜி.ஆர்.-நினைத்ததை முடிப்பவன்*
10.திரு.கா. லியாகத் அலிகான் பேட்டி*
-
தனியார் தொலைக்காட்சிகளில் கலைச்சுடர் எம்.ஜி.ஆரின் திரைக்காவியங்கள் ஒளிபரப்பான*விவரம் (01/10/20 முதல் 05/10/20 வரை )
------------------------------------------------------------------------------------------------------------------------------
01/10/20 - மெகா டிவி - அதிகாலை 1 மணி -கலங்கரை விளக்கம்*
* * * * * * * * * * * * மெகா 24 -* அதிகாலை 2மணி _ முகராசி*
* * * * * * * * * சன்* லைப்* - காலை 11 மணி - ரிக்ஷாக்காரன்*
* * * * * * * * *மெகா டிவி - மதியம் 12 மணி - விவசாயி*
* * * * * * * * *எம்.எம்.டிவி - பிற்பகல் 2மணி - குமரிக்கோட்டம்*
* * * * * * * * *பெப்பெர்ஸ்* டிவி -பிற்பகல் 2.30மணி - நல்ல நேரம்*
* * * * * * * * * புதுயுகம் டிவி -இரவு 7மணி - நீதிக்கு தலை வணங்கு*
02/10/20* * சன் லைப் -காலை 11 மணி - நீரும் நெருப்பும்*
* * * * * * * * *வெளிச்சம் டிவி-பிற்பகல் 2 மணி - தாயை காத்த தனயன்*
* * * * * * * * ஜெயா மூவிஸ் - இரவு 10 மணி - குடும்ப தலைவன்*
03/10/20 - முரசு டிவி -மதியம் 12 மணி /இரவு 7 மணி -ஆனந்த ஜோதி*
* * * * * * * * *ராஜ் டிவி - பிற்பகல் 1.30 மணி - அடிமைப்பெண்*
04/10/20* *மெகா 24 - பிற்பகல் 2..30 மணி - திருடாதே*
* * * * * * * * *பூட்டோ டிவி - இரவு 8.30 மணி - அன்பே வா*
05/10/20 -சன் லைப் - காலை 11 மணி* - உரிமைக்குரல்*
* * * * * * * * முரசு டிவி -மதியம் 12மணி/இரவு* 7மணி - தொழிலாளி*
* * * * * * * * வெளிச்சம் டிவி - பிற்பகல் 2 மணி - தனிப்பிறவி*
* * * * * * * *மெகா 24 - பிற்பகல் 2.30 மணி -நல்ல நேரம்*
* * * * * * * * புதுயுகம் டிவி -இரவு* 7மணி - அரச கட்டளை*
* * * * * * * *பாலிமர் டிவி - இரவு 11 மணி - நீரும் நெருப்பும்*
* * * * * * * **
-
1972 இல் சினிமா இதழ் பொம்மை குலுக்கல் முறையில் ஒரு வாசகரை தேர்ந்து எடுத்து அவர் நம் தலைவர் அவர்களை நினைத்ததை முடிப்பவன் படத்தின் காட்சிகள் எடுக்க பட்ட நேரத்தில் தலைவர் பேட்டி கொடுத்த அபூர்வ படம்...
பேட்டியின் போது அவர் பல கேள்விகளை கேட்க அதில் ஒன்று நம் குழுவினர் பார்வைக்கு.
கேள்வி...
நீங்கள் ஆங்கில படத்தில் நடித்தால் என்ன?
தலைவர் பதில்.
ஆங்கிலம் சரளமாக வராது....அடிமைபெண் படப்பிடிப்பின் போது ஹிந்தி படங்கள் தயாரிப்பாளர் ராஜஸ்ரீ பிக்சர்ஸ் நிறுவனர் நண்பர் தாராசந்த் ஒரு விருந்து கொடுத்தார் எங்களுக்கு..
அப்போது அவர் சொன்னார் நீங்க ஹிந்தி படங்களில் நடிக்க வேண்டும்...படம் எடுக்க நான் தயார் என்றார்..
எனக்கும் நானே தயாரித்து நானே நடிக்க ஹிந்தி மற்றும் ஆங்கில படத்தில் நடிக்க ஆசை..
ஆனால் அதை தாங்கி கொள்ளும் பக்குவம் சக்தி இருக்கும் என்றால் நான் தயார் என்கிறார் தலைவர்.
மிஸ் ஆகி விட்டதே தலைவர் நெஞ்சங்களே.
வாழ்க தலைவர் புகழ்.
தொடரும்...உங்களில் ஒருவன்..நன்றி...
தனிக்கட்சி தோன்றாவிட்டால் அதுவும் இனிதே நடந்து இருக்கும் போல.........Mn...
-
தஞ்சாவூரில் 1983இல் பெரிய கோயிலில் நடைபெற்ற ஒரு விஷேஷத்தின் பொழுது எடுக்கப்பட்ட படம் .
ஒரு நல்ல காரியம் நடக்கவேண்டும் என்றால் கோயிலுக்குப் போய் சாமி கும்பிட்டால் போதும் என்பது பலரது நம்பிக்கை.
ஆனால், தஞ்சை பெரிய கோயிலுக்கு மட்டும் பிரபலங்கள் போனால் எசகுபிசகாக ஏதாவது நடந்துவிடும் என்பது இன்னொரு நம்பிக்கை. காரணம், கடந்த 50 வருடங்களாக தஞ்சை பெரிய கோயிலின் கிழக்கு வாசல் தொடர்பாக நிலவும் மர்மம். அக்டோபர் முதல் வாரம், 1984.
அப்போதைய பிரதமர் இந்திராவும், முதல்வர் எம்ஜிஆரும் கிழக்கு கோபுர வாயில் வழியாகத் தான் தஞ்சை கோவிலினுள் நுழைந்து மேடையில் ஏறினார்கள். ராஜராஜன் சிலைக்கு இந்திராவால் அணிவிக்கப்பட இருந்த வைர கிரீடம், தயாராக மேடையில் வைக்கப்பட்டிருந்தது. கோயில் வளாகத்தினுள் கூட்டமே இல்லை. இந்திரா காரணம் கேட்க, பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக மக்களை உள்ளே விடவில்லை என்றார் எம்ஜிஆர்.
உண்மையில், தஞ்சை கோயிலுக்குள் இருவரும் நுழைய வேண்டாம் என்று பல எச்சரிக்கைகள் விடப்பட்டிருந்ததால், பிரச்னைகள் வேண்டாம் என்று எம்ஜிஆர் மக்களை ஆலயத்தினுள் விடவில்லை. இந்திராகாந்தி திருச்சி விமான நிலையத்திற்கு வந்தபோதே அவருக்கு மூட் சரியில்லை. தில்லியில் ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் தொடர்பாக பல பாதுகாப்பு பிரச்னைகளைச் சந்திக்கவேண்டி இருந்தது. மேலும், தஞ்சாவூர் இடைத்தேர்தலில் ஆதரவு அளித்துவிட்டு, பிறகு விலக்கிக்கொண்ட எம்ஜிஆரின் மீது இருந்த கோபம் அவருக்கு தீரவில்லை.
‘‘நான் வைர கிரீடம் வைக்க, நீங்கள் மட்டும் பார்க்க, நமது இரண்டு பேருக்காகவா விழா? மக்களை உள்ளே அனுமதியுங்கள்...’’ என்று இந்திரா கூற, உடனே உத்தரவுகள் பிறப்பிக்கப்பட, மக்கள் உள்ளே வந்தார்கள். இந்திரா கடுமையாகப் பேசியதால், அப்போதே எம்ஜிஆருக்கு உடல் நலக்குறை ஏற்பட்டது. வைர கிரீடம் வைக்கப்பட்டு விழா முடிந்ததுமே, மயக்க நிலையை அடைந்தார். அப்போலோ மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார்.
அக்டோபர் 16, 1984.
அப்போலோவில் இருந்த எம்ஜிஆரை காண்பதற்காக தில்லி யில் இருந்து பறந்து வந்தார் இந்திரா காந்தி. பத்திரிகையாளர்களிடம் பின்னர் பேசிய அவர், எம்ஜிஆர் தன்னைப் பார்த்து சிரித்ததாகக் கூறினார். அதுவே இந்திராவின் கடைசி சென்னை விஜயம். அக்டோபர் 31ல், தனது சப்தர்ஜங் தெரு வீட்டிலேயே இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார்.
தஞ்சையில் ஒரே பரபரப்பு. ‘கிழக்கு கோபுர வாசல் வழியாக நுழைய வேண்டாம் என்று தலைப்பாடமாக அடித்துக் கொண்டோமே. அதிகாரிகள் கேட்கவில்லையே! இப்போது பாருங்கள்! ஒரு மாதத்திற்குள் இந்திரா இறந்து விட்டார்... எம்ஜிஆர் உடல்நலமின்றி கிடக்கிறார்...’ என்ற பேச்சு அடிபட்டது.எம்ஜிஆரும் அமெரிக்கா சென்று பெரும் போராட்டத்திற்குப் பிறகு மீண்டு வந்தார். ஆனால், மூன்று வருடங்கள்
மட்டுமே இருந்தார்.
ஜூன் 7, 1997. திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பிரகதீஸ்வரர் ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் யாகசாலையில் யாகம் துவக்கிய நேரம், திடீர் என்று கும்பாபிஷேகத்திற்காக போடப்பட்டிருந்த பந்தல் தீப்பற்றி எரிய... விபத்தில் 48 பேர் இறந்து போனார்கள். இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இந்த விபத்திற்கும் கிழக்கு கோபுரம்தான் பழியை ஏற்றுக்கொண்டது.
ஏன் தஞ்சை பெரிய கோயிலின் கிழக்கு கோபுரம் அபசகுனமாகக் கருதப்படுகிறது..? இந்தக் கேள்விக்கான விடையாக மற்றொரு வினாவைத் தொடுக்கிறார்கள் சிலர். தஞ்சை பெரிய கோயில் இருந்த இடத்தில முன்பு என்ன இருந்தது?
கி.பி.985ம் ஆண்டு அருண்மொழி, ராஜராஜனாக பதவி ஏற்றுக்கொண்டார். அவருடைய ஆட்சியின் கடைசி காலத்தில்தான் தஞ்சை பெரிய கோயிலை எழுப்பினார். அதாவது அந்தக் கோயிலைக் கட்டி மூன்றாண்டுகளில் அவர் இறந்து போனார்...
தஞ்சை பெரிய கோவிலின் ராஜ கோபுர கும்பமேளாவிற்கு வருகை தந்தது.இந்த நேரத்தில்தான் தலைவருக்கு கோவிலை சுற்றி வரும்பொழுது மயக்கம் அடைந்தார்
தஞ்சை பெரிய கோயில் கிழக்கு கோபுரத்தைக் கடந்து மன்னர்கள் உள்ளே நுழைந்து வந்தால் அவர்கள் பதவியையோ, உயிரையோ இழப்பார்கள்... இந்திராவின் மரணம், எம்ஜிஆரின் மரணம் ஆகியவை சமீபத்திய உதாரணம்... என்பது சிலரது வாதம்.
1984 தஞ்சாவூர் மீட்டிங் அடுத்த நாள் தலைவரின் முதல் நாள் இரவு திருச்சியில் தலைவர் மீட்டிங்
இந்த நிகழ்ச்சி தான் திருமதி.இந்திராகாந்திக்கு கடைசி தமிழக நிகழ்ச்சி.......... Devaraj...
-
ரஜினியை எம்ஜிஆர்., அடித்தாரா? : மெய்க்காப்பாளர் மறுப்பு.
நடிகர் ரஜினியை முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் (எம்ஜிஆர்) அடித்ததாக கூறப்படும் செய்திகளை எம்ஜிஆரின் மெய்க்காப்பாளராக இருந்த கே.பி.ராமகிருஷ்ணன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
கடந்த 1979ம் ஆண்டு, ரஜினிகாந்த், நடிகை லதாவை ஒருதலையாக காதலித்ததாகவும், அவரை கட்டாயப்படுத்தியதாகவும், இதை கேட்ட எம்ஜிஆர் கோபமடைந்து ராமாவாரம் தோட்டத்தில் வைத்து ரஜினியை அடித்ததாகவும் பேசப்படுவது உண்டு. நடிகை லதாவுடன் சேரமுடியாத காரணத்தால் தான் அதே பெயருடைய லதாவை, ரஜினி திருமணம் செய்ததாகவும் பேசப்பட்டு வந்தது.
இது குறித்து நடிகை லதா ஒரு தொலைக்காட்சியில் அளித்த பேட்டியில், ரஜினி பற்றி ஏதாவது சொல்ல வேண்டும் என்பதற்காக இப்படி சொல்கிறார்கள். அப்படி எதுவும் நடக்கவில்லை. அது பற்றி எல்லாம் நான் பேச விரும்பவில்லை, எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், எம்ஜிஆர் திரைப்படத்தில் நடித்ததில் இருந்து அரசியலில் ஈடுபட்டது வரை சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக அவருக்கு மெய்க்காப்பாளராக இருந்தவர் கே.பி.ராமகிருஷ்ணன். சண்டை பயிற்சி கலைஞராகன இவர், எம்ஜிஆர்.,க்கு பல படங்களின் சண்டை காட்சிகளில் டூப் போட்டு நடித்துள்ளார்.
இவர், தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியதாவது: கடந்த 1979ம் ஆண்டு ரஜினியை எம்.ஜி.ஆர் ராமாவரம் தோட்டத்திற்கு அழைத்து அடித்ததாக சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தகவல் தவறானது. ஒரு போதும் ரஜினியை எம்.ஜி.ஆர், அடிக்கவில்லை. உண்மையில் ரஜினி மீது எம்ஜிஆர் மதிப்பு வைத்திருந்தார். கோவையில் நடந்த கட்சிக் கூட்டத்தில் நெருக்கடியைப் பயன்படுத்தி பெண் தொண்டரிடம் சில்மிஷம் செய்த நபர் ஒருவரையே எம்.ஜி.ஆர் அடித்தார்.
இவ்வாறு அவர் கூறினார். Dr...
-
வள்ளல் புகழுக்கு புகழாரம் சூட்டியவர்கள் தொடர் 2, பாகம் 74 பேரரறிஞர் அண்ணா. .
அண்ணாவுக்கும்எம்ஜிஆருக்கும் உள்ள ஒற்றுமைகள் சில
1. அண்ணா எம்ஜிஆர் இருவரும் பிறப்பில் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர்கள். .
2, நோயின் காரணமாக இருவரும் அமெரிக்காவில் சிகிச்சை பெற்றவர்கள். .
3. அண்ணா இறக்கும் முன் என் எஸ் கிருஷ்ணன் சிலையை திறந்து வைத்தார். .எம்ஜிஆர் இறக்கும் முன் ஜவஹர்லால் நேரு சிலையைதிறந்து வைத்தார். 4, இருவரும் முதலமை*ச்ச*ராக இருக்கும் போதே மறைந்தவர்கள். .
5. இருவரது உடலையும் அருகருகே மெரினாவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
6. அண்ணா எம்ஜிஆரை எனது இதயக்கனி என்றார் .எம்ஜிஆர் அண்ணாவை எனது இதயதெய்வம் என்றார்.
7. இருவரும் மக்களை ஈர்ப்பதில் தனித்துவம் பெற்றனர். அதில் வெற்றியும் பெற்றனர். 8. இருவரும் நள்ளிரவிலே மறைந்தனர்...
9. அண்ணா என்பது மூன்று எழுத்து தமிழில் எம்ஜிஆர் என்பது மூன்று எழுத்து ஆங்கிலத்தில். அண்ணாவின் முமு பெயர் அண்ணாதுரை எம்ஜிஆர் முமு பெயர் எம் ஜி ராமச்சந்திரன்.
10. திமுகவை தோற்றுவித்தவர் அண்ணா அதிமுகவை தோற்றுவித்தவர் எம்ஜிஆர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில் பட்டிக்கு அறிஞர் அண்ணா என் வி நடராஜன் வுடன் பொதுக்கூட்டத்தற்காக செல்லும் போது கோவில்பட்டி அருகே அண்ணாவின் கார் ஒரு மரத்தடியில் அருகே நிறுத்தப்படுகிறது. வயல்வெளியில் தோட்டங்களில் வேலை பார்க்கும் விவசாயிகள் காரில் திமுக கொடி பறப்பதை கண்டு ஒடி வந்தனர். கார் அருகே வந்து நீங்கள் எல்லாம் எம்ஜிஆர் கட்சியா என்று அண்ணாவையும் நடராஜனையும் பார்த்து கேட்டனர். அதற்கு அண்ணாவும் ஆம் நாங்களெல்லாம் எம்ஜிஆர் கட்சித்தான் என்றவர் உங்களுக்கு எம்ஜிஆரை பிடிக்குமா? ? என்று கேட்டார்? ? .எம்ஜிஆர் எங்கள் உசுரு என்று சிலரும் அவர்தான் எங்கள் தலைவர் என்று சிலரும் எங்கள் வாத்தியார் அவர்தான் என்றும் அவரவர்க்கு தகுந்த பதில் கூறினார்கள். உடனே அங்குள்ள மக்கள் தாங்கள் வாங்கி வந்த பழங்கள் காய்கறிகள் டவல் துண்டுகள் யாவும் அண்ணாவிடம் கொடுத்து. இது எங்கள் தலைவர் எம்ஜிஆரிடம் கொடுங்கள் என்றார்கள். அவர்கள் அன்போடு கொடுத்ததை அண்ணா மறுக்காமல் வாங்கி கொண்டார். அதே நேரத்தில் அண்ணாவின் காரை துடைத்து தூய்மை படுத்தினார்கள். .எம்ஜிஆரிடம் நாங்கள் கேட்டதாக சொல்லுங்கள் என்றனர்..தான் ஒரு திமுகவின் தலைவராக இருந்தும் தன்னை யாருக்கும் தெரியவில்லை. .திமுக கொடி எங்கு பார்த்தாலும் பொதுமக்கள் எம்ஜிஆர் கட்சி கொடி என்றுதான் சொல்கிறார்கள் தவிர திமுக வில் உள்ள மற்ற தலைவர்கள் யாரும் அவர்கள் மனதிலும் இல்லை பார்வையிலும் இல்லை. என்று நினைத்து பெருமைப்பட்டு என் வி நடராஜனிடம் கூறினார். எம்ஜிஆர் செல்வாக்கு எப்படிப்பட்டது என்பதை அறிஞர் அண்ணா தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அத்தனை பேர்களுக்கும் முன்னால் கூறினார். அதனால்தான் எப்போதும் எந்த நிகழ்ச்சியிலும் எந்த பேச்சியிலும் செயலிலும் எம்ஜிஆரை விட்டு கொடுக்காமல் இருந்தார். .எம்ஜிஆரின் செல்வாக்கு எத்தகையது என்பதை விளக்கும் இச்சம்பவம் ஆகுக..குருவின் பெயரையும் மிஞ்சி குருவுக்கு புகழ் தேடி தந்த உண்மையான சீடனாக எம்ஜிஆர் இருந்தார். .......... Gunasekaran...
-
வள்ளல் புகழுக்கு புகழாரம் சூட்டியவர்கள் தொடர் 2, பாகம் 73 . பேரரறிஞர் அண்ணா
அண்ணா மீது அதிக பாசம் வைத்த எம்ஜிஆர் அண்ணா மரணம் அடைந்தபோது கதறி அழுதார். அழுதுக்கொண்டே இருந்தார். என் தந்தை இறந்த போது தெரியாது அப்போது நான் சிறுவன் தாயை இழந்த போது எனக்கு அதிகமாக துக்கம் இருந்தது. இருந்தாலும் என் கண்ணீரை அடக்கினேன். .அண்ணாவின் மரணம் என்னை கலங்க வைத்து விட்டது என் அழுகையை அடக்கமுடியல என்று தங்கதமிழ் மகனை வங்க கடலோரம் அடக்கிய பின் சொன்னார். என் பெரும் இழப்பு அண்ணாவின் இறப்பு என்று பலர் முன் புலம்பினார். .என்னை சந்திரன் என்றார்கள் அவர்களோ சூரியன். .சூரியன் இல்லாமல் சந்திரனுக்கு ஒளி ஏது? ? என்று வருந்தினார். ஒப்பாரியில் மிகவும் ரசிக்கத்தக்கதும் வருனை மிகுந்ததும் ராவணன் மனைவி காந்தாரி புலம்பியதும் கம்பன் வருனையில் களைக்கட்டி நிற்கும். .தமிழ் என்னை உன் இதயத்தில் வைத்திருப்பதாக சொன்னீர்களே ராமபாணம் அந்த இதயத்தை துளைத்த போது என்னையும் அல்லவா கொன்றிருக்க வேண்டும் என்று பொய் சொன்னீர்களா என கேட்டு அழுதாராம். அப்படி இந்த கோமகனும் தனக்குள் புலம்பினார். நடந்துக்கொண்டே வேட்டிக்கட்டும் அழகு எப்போ பார்ப்பேன். .மேடையிலே பிரசாங்கம் செய்யப்போறப்போ யாருக்கும் தெரியாமல் பொடி போடற பக்குவம் யாருக்கு வரும். என் உடன்பிறந்தவர்கள் கூட தம்பி என்று கூப்பிடறது இல்லை. நீங்கதானே கூப்பிடுவீங்க இனிமேல் யார் என்னை கூப்பிடற போறாங்க. என்றார். .
பேரரறிஞர் அண்ணா கேட்டுக் கொண்டதற்கு இணங்க எம்ஜிஆர் நாடகம் மன்றம் சார்பில் இன்பகனவு, .இடிந்தக்கோயில். ,மற்றும் அட்வகேட் அமரன். முதலிய நாடகங்கள் நடத்தி கட்சிக்கு நிதி சேர்த்துக்கொடுத்தார். நேரம் கிடைக்கும் போதல்லாம் கழகத்தின் முக்கிய தலைவர்களுடன் இனைந்து வெளியூர்களுக்கு சென்று சிறப்பு கூட்டங்களில் கலந்து கொண்டு கழகத்தின் கொள்கைகளை பிரசாரம் செய்தார். .எம்ஜிஆர் கலந்துக்கொண்ட சிறப்பு கூட்டங்களில் டிக்கெட் மூலம் கட்டணம் வசூலிக்கப்பட்டது. .மக்களும் காசு கொடுத்து கூட்டம் கூட்டமாக அவரைக் காணவும் அவரது பேச்சைக் கேட்கவும் திரண்டு வந்தனர். .அந்த நிதி முழுவதும் கட்சி வளர்ச்சிக்காக பயன்படுத்தப்பட்டது. திமுக கட்சிக்காக அதிகமாக உழைத்தவர்கள் பலர் இருந்தாலும் அவர்களின் முதன்மையானவர் புரட்சிநடிகர் எம்ஜிஆர் தான். முன்னப்போதும் கேள்வி படாத சரித்திர சாதனையாகும் இது? அதைப் பார்த்து அண்ணா பூரித்துப் போனார். அன்று நம்நாடு பத்திரிகைகளில் இப்படி எழுதினார். .
நண்பர் எம்ஜிஆருக்கும் எனக்கும் உள்ள உறவு எப்படிப்பட்டது என்பதை நாடு அறியும். எம்ஜிஆரை நான் பாராட்டுவது என்னை நானே பாராட்டி கொள்வது போன்றதாகும். ..
அவர் ஏற்றுக்கொண்டுள்ள கொள்கை எது என்பதை நாடறியும். முல்லைக்கு மணம் உண்டு என்பதை கூறவா வேண்டும். ? தி.மு.க கட்சியினால் எம்ஜிஆர். எம்ஜிஆரால் திமுக கட்சி. . இரவு பகல்.. உயர்வு தாழ்வு. ..கொடுப்பவன் வாங்குபவன். ..மேடு பள்ளம். .
இவையெல்லாம் எப்படி இயற்கையில் மாற்ற முடியாதோ. அதுபோல் தான் எம் ஜி ஆர் இல்லையென்றால் கட்சி இல்லை. கட்சியில்லையென்றால் எம்ஜிஆர் இல்லை. கட்சியும் எம்ஜிஆரையும் மாற்ற முடியாது. .என்று காந்தகம் போல் ஆகிவிட்டது. .என்று அருமையாக எழுதியிருக்கார் பேரரறிஞர் அண்ணா அவர்கள். அதைவைத்துதான்எம்ஜிஆரை அண்ணாவின் இதயக்கனி என்று எல்லோரும் சொல்கிறார்கள்...gs.........
-
எம்ஜிஆரின் வாத்தியார் காளி என்.ரத்தினம்!
சபாபதி படத்தில் வேலைக்காரன் சபாபதியின் நடிப்பை, இந்தத் தலைமுறை மக்கள் கூட இமை கொட்டாமல் ரசிக்கின்றனர். அந்த அளவுக்கு 1936 முதல் 1950 வரை தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த மூத்த நகைச்சுவை மற்றும் குணசித்திர நடிகர் காளி என்.ரத்தினம்.
சிறந்த நடிகர், பாடகர், சண்டை பயிற்சி வாத்தியார், நடிப்பு வாத்தியார், அரங்க நிர்வாகி, பி.யு.சின்னப்பா, எம்ஜிஆர் போன்ற சூப்பர் ஸ்டார்களுக்கு ஆசான் என பல்வேறு சிறப்புக்களைக் கொண்டவர் அவர்.
காளி என். ரத்தினத்தின் சொந்த ஊர் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகில் உள்ள மலையப்பநல்லூர். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவர், சிறு வயதிலேயே நாடகக் கம்பெனிகளில் சேர்ந்து நடிக்க ஆரம்பித்து விட்டார்.
மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனிகள் பலவற்றில் பணியாற்றிய இவர், கோவலன் என்ற ஒரு நாடகத்தில், முதன் முதலாக காளி வேடம் போட்டார். அதில் அவரது நடிப்பை பார்த்து பலரும் அசந்து போயினர். அன்று முதல் அவர் காளி என்.ரத்தினம் என்று அழைக்கப்படலானார்.
அவர், காளி வேடம் கட்டி ஆடினால், அவர் ஆடும் உக்கிரமான ஆட்டத்தைப் பார்த்து பல பேர் சாமி வந்து ஆட ஆரம்பித்து விடுவார்கள்.
பி.யு. சின்னப்பா, எம்.ஜி.ஆர் போன்றவர்களுக்கு உச்சரிப்பு, நுணுக்கமான நடிப்பு, உடல் மொழி, வாள் சண்டை, கத்தி சண்டை, சிலம்பப் பயிற்சி போன்றவற்றை எல்லாம் கற்றுக்கொடுத்தவர் காளி என். ரத்தினம்.
தமிழ் சினிமாவில் வாத்தியார் என்றால் அது எம்.ஜி.ஆரை மட்டுமே குறிக்கும். ஆனால் எம்.ஜி.ஆரே, தமது வாத்தியார் காளி என். ரத்தினம் என்று, 1970-ம் ஆண்டு “நான் ஏன் பிறந்தேன்” என்ற தலைப்பில் ஆனந்த விகடன் வார இதழில் எழுதிய தொடரில் குறிப்பிட்டுள்ளார்
1936-ல் வெளியான பதிபக்தி என்ற படமே காளி என். ரத்தினம் நடித்த முதல் படம். முதல் படத்திலேயே அவர் இரண்டு வேடங்களை ஏற்று அற்புதமாக நடித்திருந்தார்.
அதைதொடர்ந்து, 1950 வரை சந்திரலேகா, பஞ்சாப் கேசரி, உத்தம புத்திரன், சபாபதி, திவான் பகதூர், ஸ்ரீ முருகன், ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி, ஆண்டாள் உள்பட 5௦ படங்களுக்கும் மேல் பாடி நடித்துள்ளார்.
காளி என். ரத்தினம் போல ஒரே காட்சியில் எண்ணற்ற முக பாவனை காட்டக் கூடிய நடிகர் வேறு யாரும் இல்லை என்று மூத்த திரை விமர்சகர்கள் பலராலும் இன்றும் பாராட்டப் படுகிறார்.
என்,எஸ்.கிருஷ்ணன்-டி.ஏ.மதுரம் ஜோடியைபோல, அந்தக் காலத்தில், காளி என். ரத்தினம்- சி.டி.ராஜகாந்தம் ஜோடி மிகவும் பிரபலமான ஜோடியாகும்.
காளி என். ரத்தினம் போடாத வேடமும் இல்லை, பாடாத பாடலும் இல்லை என்ற அளவுக்கு அசத்தி இருக்கிறார். கடைசியாக அவர் பொய்க்கால் குதிரை ஆட்டம் போடத் தயாரானபோதுதான், அவரை மரணம் தழுவிக்கொண்டது.
தி இந்து நாளிதழ் கூட காளி என். ரத்தினம் பாணியைப் பற்றி பல நேரங்களில் சிறப்பாகப் பாராட்டி எழுதி உள்ளது. இளைய தலைமுறையினர் காளி என். ரத்தினம் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
காளி என். ரத்தினம் முதல் வரிசை நகைச்சுவை நடிகராக வலம் வந்த 1940 களில், அன்றைய சினிமா பத்திரிகை ஒன்று காளி என். ரத்தினம் பற்றி வெளியிட்ட செய்தியை நட்சத்திர தேடல்கள் என்ற கட்டுரையில், மறைந்த முன்னணி எழுத்தாளர் அறந்தை நாராயணன் பதிவு செய்துள்ளார்.
“ரத்தினம் பழங்கால கிராமிய பழக்க வழக்கங்களுக்கு நல்ல மெருகு கொடுத்து, சினிமா படங்களில் புகுத்தி, பட்டனப்புரங்களில் உள்ள புதுக்கால மனிதர்களும் அவற்றை தெரிந்து கொண்டு ரசிக்கும்படி செய்திருக்கிறார். கிராம மக்களோ தங்கள் சம்பந்தமான விஷயங்களை சினிமாவில் பார்க்கும்போது பிரமாதமான பூரிப்பு அடைகிறார்கள்.
இந்தக் காரணங்களினாலே அவர்கள் ரத்தினம் நடிக்கும் படங்களைப் பல தடவை பார்ப்பது வழக்கமாக இருக்கிறது. மாடர்ன் தியேட்டர்ஸ் படங்கள் நிறைய வசூலைப் பெற்று வந்ததற்கு ரத்தினத்தின் நடிப்பு ஒரு முக்கிய காரணமாகும்
படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை பாராட்டி மகிழும், மாபெரும் கலைஞன் காளி என். ரத்தினம், காலத்தால் மறைக்கப்பட்டு, இருந்த இடம் தெரியாமல் போனதை ஒரு சமூக அவலம் என்றே சொல்ல வேண்டும்......gr...
-
இலங்கைக்கு போவோம் வாரீயளா!
-----------------------------------------------------------
நம்ம கைபிள்ளைங்க, தமிழ்நாட்டில் சாதனை என்று எதை போட்டாலும் தலைவர் ரசிகர்கள் சீக்கிரத்திலே வெட்டவெளிச்சமாக்கி விடுகிறார்கள் என்ற எண்ணத்தில் அடுத்த புளுகுமூட்டையை எங்கே ஆரம்பிப்பது என்ற குழப்பத்தில் இருந்தவர்களுக்கு இராவணனின் கோட்டையான இலங்கை ஞாபகம் வந்து விட்டது. உடனே திரையிட்டு பல்லாண்டுகளான படுதோல்வி அடைந்த ஒரு படத்தை எடுத்து அதற்கு மாரீசன் போல பொய் வசூலை ஜோடித்து வெளியிட்ட படம்தான் 'உன்மத்தன்' சாரி 'உத்தமன்'.
தமிழ்நாட்டில் ஓடி ஒளிய இடமின்றி மதுரையம்பதியில் 100
நாட்கள் தலைமறைவாக திரிந்த "உத்தமனை" தேர்ந்தெடுத்தது இன்னும் விநோதம். மதுரை நியூசினிமாவில் போட்ட வடக்கயிறை இலங்கைக்கு எடுத்துச் சென்று இலங்கை கூட்டு ஸ்தாபன வர்த்தக சபை காலில் விழுந்து இலங்கையில் 200
நாட்கள் வரை இழுத்து சென்றதை அனைவரும் அறிவோம்.
சந்தடி சாக்கில் 'உன்மத்தன்' சாரி 'உத்தமன்' "உலகம் சுற்றும் வாலிபனை" வசூலில் தாண்டி விட்டதாக 'புதுக்கரடி' ஒன்றை
விட்டு ஏமாற்றி வருகிறார்கள். ஆனால் உண்மையில் பலமுறை வெளிவந்த "ஒளிவிளக்கு" மீண்டும் 100 நாட்கள் ஓடிய போது பெற்ற வசூலை கூட பெறமுடியாமல் தத்தளித்த கதை வெளியாகி இருக்கிறது.
ஒரு பழைய தலைவர் படத்துடனே தோல்வியடைந்த 'உத்தமனை' வைத்துக் கொண்டு "உலகம் சுற்றும் வாலிபனை" வெற்றி கொண்டது என்று சொல்லும் சிவாஜி ரசிகர்களின் மனதைரியத்தை பாராட்டி "நாடோடி மன்னனி"ல் அங்கமுத்து குளிக்க பயன்படுத்திய அண்டாவை பரிசாக அளிக்கிறாம்.. ஏனென்றால் முழு பூசணிக்காயை சோத்தில் மறைத்தால் சற்று சிரமமாக இருக்கும் என்பதால் அண்டாவை அனுப்பி வைத்தால் அவர்களுக்கு சற்று சிரமம் குறைபும் என்பதால்.
சிவாஜி ரசிகர்களை, m.சரோஜா(தங்கவேலு) பாணியில் கேட்பதானால், என்றைக்காவது ஒரு நாள் உண்மை பேசியிருக்கீங்களா? ஏன் இந்த பொய் பித்தலாட்டம்?. உன்னை விட பத்து மடங்கு சம்பளம் வாங்கும் தலைவரிடம் மோதலாமா? அரசியலுக்கு போயும் ஒண்ணுமில்லாம ஆன? 10 நாளைக்கு உப்பில்லாம கஞ்சி குடிச்சா எல்லாம் சரியாயிடும்.
போய் வேறு ஏதாவது உருப்படியான வேலையை பாருன்னு! சொன்ன மாதிரி இருக்கு.
இன்னும் எத்தனை அவதாரம் எடுத்தாலும் நாடக மிகை நடிப்பு இவரை விடாது,
நாளைய தலைமுறை இவரை பழிக்கும் என்றே சொல்கின்றேன். பல நாள் பொய்யன், ஒரு நாள் அகப்படுவான் பாவம் செய்தவன் தலைமுறை வரை தோற்பான், பார்க்கின்றேன், என சிவாஜி படத்தின் பாடல் வரிகளே அவருக்கு மிகவும் பொருத்தமாக அமைந்துவிட்டது.
அதற்காக மெனக்கெட்டு பழைய இலங்கை வசூல் விபரங்களை தேடிப்பிடித்து அவர்கள் பொய் முகத்திரையை அவிழ்த்து உண்மையான வசூலை வெளிப்படுத்தியிருக்கிறேன். "உலகம் சுற்றும் வாலிபன்" ஓடி முடிய இலங்கையில் பெற்ற வசூல் 25 லட்சத்துக்கும் மேலே. இதை பார்த்தால் சிவாஜி ரசிகர்களுக்கு வடிவேலு மாதிரி பேஸ்மென்ட் வீக்காகி கால்வழியாக துர்நாற்றம் கிளம்பி விடாமல் பார்த்துக் கொள்ளவும்.
இலங்கையில் புரட்சித்தலைவரின்
"உலகம் சுற்றும் வாலிபன்" படைத்த வசூல்கள்....யாரும் எளிதில் வெல்ல முடியாத ஒரு காவியமாக திகழ்ந்தது எனலாம்.....
கொழும்பு - கெப்பிட்டல்
203 நாள் : 9,84,588.75
கிங்ஸிலி 40 நாள்
வசூல் : 2,03,545.50
ட்ரியோ 35 நாள்
வசூல் : 1,69,185.75
கொழும்பில் மட்டும் முதல் ரவுண்டில் பெற்ற
278 நாள் ஒடி முடிய வசூல் :13,57,289.75
அடுத்து.....
யாழ் நகரில்
மனோகரா 80 நாள்
வசூல் : 3,01,351.75
ஸ்ரீதர் 48 நாள்
வசூல் : 1,56,281.70
யாழ் நகரில் பெற்ற
128 நாள் : 4,57,633.45
அடுத்து...
மட்டுநகர் விஜயா
116 நாள் ஒடி சாதனை.
திருமலை - சரஸ்வதி
72 நாட்கள் ஒடியது.
கட்டுகஸ்தோட்டா
நியூசிகீரி - 63 நாள்
வவுனியா
ராயல் - 57 நாள்
அக்கரைபற்று
சாரதா - 50 நாள்
கல்முனை
தாஜ்மகால் 43 நாள்
தெகிவளை
ரீயோ ...36 நாள்
மாணிப்பாய்
வெஸ்லி ....31
சங்காளை
சாந்தி....40 நாள்
சாவகச்சேரி
வேல்......23 நாள்
உலகம் சுற்றும் வாலிபன், இலங்கையில் முதல் ரவுண்டில் மட்டும் 25 லட்சத்தை
கடந்து வசூலில் ...... சாதனை செய்தது.
நன்றி : திரு டேவிட்
யாழ் - பிரான்ஸ்
திரு b.s.ராஜு
என்ன சிவாஜி ரசிகர்களே! இந்த சாதனை போதுமா? இதைவிட வேறு சாதனை வேண்டுமென்றால் சொர்க்கத்தின் புதிய தலைவராக வீற்றிருக்கும் எங்கள் சுந்தர பாண்டியரை மறுபடியும் கூட்டி வந்து "கிழக்காப்பிரிக்காவில் ராஜு" எடுக்கச் சொன்னால்தான் முடியும். அவர் சாதனையை அவரால்தான் முறியடிக்க முடியும். இதுதான் திரையுலக நியதி. சிங்கத்தை வெல்ல சிங்கத்தால்தான் முடியும். சிறு நரிகளால் என்ன செய்ய முடியும். அதை வேடிக்கை பார்க்கத்தான் முடியும்..........ksr...
-
"தவிதவிக்கிற ஏழைக்காக திட்டம் போடணும் - பொருளை
சரிசமமா பங்குவைக்க சட்டம் போடணும்
குவியக் குவிய விளைவதெல்லாம் கூறு போடணும் - ஏழைக்
குடிசைக்குள்ளே பாலும் தேனும் ஆறா ஓடணும்"
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்து 1965ல் வெளிவந்த "கன்னித்தாய்" என்ற படத்தில் இடம்பெற்ற "கேளம்மா சின்னப்பொண்ணு" என்ற பாடலின் வரிகள் தான் இவை. திராவிட இயக்கத்தின் பிரச்சார பீரங்கியாக எம்.ஜி.ஆர் இயங்கி கொண்டிருந்த காலத்தில் இப்படி அவரது படத்தில் சிவப்புச் சிந்தனை சிதறும் வரிகளை எழுதிய இவர் தான் இந்தப் படத்தின் அத்தனைப் பாடல்களையும் எழுதியவர். அவர் பெயர் "அருணன்". கண்ணதாசன் நடத்தி வந்த "தென்றல்" பத்திரிகையில் கவிதைகளும், கட்டுரைகளும் எழுதிக் கொண்டு பின்னாளில் அதன் உதவி ஆசிரியராக இருந்தவர்.
இதற்கு அடுத்த ஆண்டு (1965) எம்.ஜி.ஆருக்கும் அவரது படங்களில் தொடர்ந்து பாடல்கள் எழுதும் கவியரசு கண்ணதாசனுக்கும் பிணக்கு ஏற்பட்டு, இனி எனக்கு நீ வேண்டாம், உனக்கு நான் வேண்டாம் என்று பிரிந்த நேரத்தில் வெளிவந்த படம் "கலங்கரை விளக்கம்". அந்தப் படத்தில் இரண்டு சூழல்களுக்கான பாடல்களை கண்ணதாசன் எழுத வேண்டி இருந்ததால் அவசர உதவியாக இவரை எழுத வைத்திருக்கிறார் தயாரிப்பாளர் ஜி.என்.வேலுமணி. வழக்கம் போல பதிவான பாடல்களை எம்.ஜி.ஆருக்கு தோட்டத்தில் போட்டு காண்பித்திருக்கிறார் வேலுமணி.
பாடல்களைத் திரும்பத் திரும்பக் கேட்டுவிட்டு " என்ன நெனச்சிட்டு இருக்கீங்க?? நான் கண்ணதாசன் வேண்டாம்னு அவ்வளவு தூரம் சொல்லியும் கேக்காம அவரையே எழுத வச்சிருக்கீங்க... மொதல்ல இதெல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு வேற யாரையாவது வச்சு எழுதுங்க.." என்று சீறிச் சினந்திருக்கிறார் எம்.ஜி.ஆர்.
"ஐயையோ.. இது கண்ணதாசன் எழுதினது இல்லங்க.. எழுதியவர் இன்னார் தான்" என்று இவரது பெயரை எவ்வளவோ சொல்லி மன்றாடி இருக்கிறார் வேலுமணி...
"எனக்கு தெரியாதா??
"தென்னை வனத்தினில் உன்னை முகம்தொட்டு
எண்ணத்தைச் சொன்னவன் வாடுகிறேன்
உன்னிரு கண்பட்டு புண்பட்ட நெஞ்சத்தில்
உன் பட்டுக்கை தொடப் பாடுகிறேன்"...
இதெல்லாம் கண்ணதாசனால மட்டும் தான் எழுத முடியும். மொதல்ல சொன்னதை செய்யுங்க" என்று திருப்பி அனுப்பிவிட்டார்..
(இத்தனைக்கும், "சின்னஞ்சிறிய வண்ணப்பறவை எண்ணத்தை சொல்லுதம்மா, மணமகளே மருமகளே வா வா" போன்ற காலத்தால் அழியாத பாடல்களை ஏற்கனவே எழுதி இருந்தவர் தான் அவர்)
பிறகு மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வியே நேரில் சென்று உண்மையைச் சொல்லி விளக்கிய பிறகே நம்பிய எம்.ஜி.ஆர்.. "ரொம்ப நல்லா எழுதி இருக்காரு.. இனிமேல் என் படங்களுக்கு இவர் எழுதுவார் அப்படின்னு சொல்லிடுங்க" என்று பாராட்டி இருக்கிறார்.. அந்தப் பாடலாசிரியர் தான் பின்னாளில் தயாரிப்பாளர், இயக்குனர், கதாசிரியர், திரைக்கதை - வசனகர்த்தா, பத்திரிகையாளர், திரைப்பட விநியோகஸ்தர் என்று பல்வேறு துறைகளிலும் அளப்பரிய சாதனைகளை படைத்த
திரு. பஞ்சு அருணாச்சலம். (அருணன் என்பது அவரது புனைப்பெயர்)......
-
1969 ல் நம்நாடு முன் வசூலில் சிவந்த மண் தோல்வி அடைந்தது முந்தைய தலைமுறைக்கு தெரியும். அதேபோல் வேட்டைக்காரன் முன் போலிக் கர்ணன் வசூலில் தோற்றதும் தெரியும். சமீபத்தில் இந்த தலைமுறைக்கும் தெரியுமாறு சித்ரா லட்சுமணன் வேட்டைக்காரன் அளவுக்கு கர்ணன் வசூல் பெறவில்லை என்று உண்மையை யூடியூபில் போட்டு உடைத்துவிட்டார். அது இருக்கட்டும். சிவந்த மண் படம் காஞ்சிபுரத்தில் 85 பைசா டிக்கெட் 25 ரூபாய்க்கு பிளாக்கில் போனதாம். இப்படி ஒரு கற்பனைக் கதை. அதற்கு ஆதாரம் என்று ஒரு பொய்ச் செய்தி. இந்த செய்தியை பாருங்கள். தலைப்பில் ‘சாதனை’ என்ற எழுத்தை கவனியுங்கள். உள்ளேயும் ‘சாதனையை’ என்ற வார்த்தையை கவனியுங்கள். இந்த ‘னை’ என்ற எழுத்து பெரியார் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அப்போது முதல்வராக இருந்த புரட்சித் தலைவரால் பெரியாரின் எழுத்து சீர்திருத்தமாக அறிவிக்கப்பட்டது.
1979க்குப் பிறகுதான் இந்த புது எழுத்து அமலுக்கு வந்தது. இப்போது நடைமுறையில் உள்ளது. அதற்கு முன்பு ‘னை’ என்பது ‘ன’ என்ற எழுத்துக்கு மேல் கொம்பு முளைத்தது போலிருக்கும். இளைஞர்களுக்கு இது தெரியாது. மூத்தவர்களுக்கு தெரியும். யானை தன் துதிக்கையை தூக்கி ஆசிர்வதிப்பது போல அந்த ‘னை’ இருக்கும். இதேபோல ‘விலை’ என்ற வார்த்தையிலும் கொம்பு முளைத்த ‘லை’க்கு பதில் சீர்திருத்த எழுத்தான இப்போதைய ‘லை’ உள்ளது. 1979ல் கொண்டுவரப்பட்ட சீர்திருத்த எழுத்து எப்படி 10 ஆண்டுக்கு முன்பே அச்சில் இருக்க முடியும்?இந்த நவீன எழுத்து மூலம் இந்த செய்தி 1969-ம் ஆண்டு வெளியான செய்தியல்ல என்பதை இதை வைத்தே தெரிந்து கொள்ளலாம். இது இப்போது இவர்கள் தயாரித்துள்ள பொய்ச் செய்தி. எல்லாருக்கும் வாய் இருக்கும் இடத்தில் சிவாஜி கணேசன் ரசிகர்களுக்கு பொய் இருக்கிறது.......... Swamy............
-
இந்தியாவில் மட்டுமல்ல, இலங்கையிலும் மக்கள் திலகம் வசூல் சக்கரவர்த்தி என்பதை ஏற்கெனவே ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளோம். அவ்வளவு ஏன்? ஒரு உதாரணம் போதும். மக்கள் திலகத்தின் 100 வது படமான ஒளிவிளக்கு 1969ல் முதல் வெளியீட்டில் யாழ்ப்பாணம் ராஜாவில் 160 நாட்கள் கடந்து ஓடி மகத்தான வெற்றி பெற்றது. 1979-ம் ஆண்டு இலங்கையில் ஒளிவிளக்கு மறு வெளியீட்டில் தினசரி நான்கு காட்சிகளாக அதே யாழ்ப்பாணம் ராஜாவில் மீண்டும் 100 நாட்கள் ஓடி 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. ( அதிகாரபூர்வ விளம்பர ஆதாரம் இணைக்கப்பட்டுள்ளது)இதை சிவாஜி கணேசன் படம் மட்டுமல்ல, எந்த நடிகரின் படமும் இலங்கையில் இன்றுவரை மறுவெளியீட்டில் 100 நாள் என்ற இந்த சாதனையை முறியடிக்க முடியவில்லை.
இலங்கையில் பைலட் பிரேம்நாத் திரைப்படம் ஒரு வருடம் ஓடியது என்று வண்டி வண்டியாக பொய்யை அளந்து கொட்டுவார்கள். அப்படி அந்தப் படம் ஒரு வருடம் ஓடியதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. நம்மிடம் வசூல் விவரங்கள் கேட்பார்கள். 100 நாள் விளம்பரம் கேட்பார்கள். ஆனால், அவர்கள் வாயிலேயே வடை சுட்டு வசூலைக் குவித்து விடுவார்கள். நம்மிடமாவது சில படங்களுக்கு 100 நாட்கள், வெள்ளிவிழா கடந்து ஓடியதற்கு விநியோகஸ்தர் வெளியிட்ட வசூல் விவரம் உள்ளது. அவர்களிடம் அதுவும் கிடையாது. ஒன்றிரண்டு படங்கள் தவிர, முதல் வார வசூல், இரண்டு வார வசூலோடு அடக்கம் காப்பார்கள். அதை 100 நாட்கள், 25 வாரத்தோடு பெருக்கிக் கொள்ள வேண்டுமாம். நாட்டாமை படத்தில் ஒரு பெண்ணை மயக்க செந்தில், ‘ஊட்டியில டீ எஸ்டேட் இருக்கு’ என்பார். மறைந்து நிற்கும் கவுண்டமணி ‘ஊட்டியில இருக்குடா. உனக்கு இருக்கா?’ என்பார். அந்த மாதிரிதான் இவர்களின் வெற்றிகள், வசூல்கள் எல்லாம். அடுத்த பதிவில் இவர்களின் இன்னொரு பொய்யை சொல்கிறேன்..........ஸ்வாமி.........
-
ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டின் தொடக்க உரை - புரட்சித்தலைவர் [04-01-1981].
5 - வது உலகத் தமிழ் மாநாடு ஓராண்டுக்கு முன்பேயே நடத்தியிருக்கவேண்டும்; தவறிவிட்டது, இப்போதுகூட குறிப்பிடப்பட்ட நடத்துவார்களோ, மாட்டார்களோ பலர் சந்தேகப்பட்டனர். தள்ளி வைத்துவிடுவார்கள் என்று கூடச் சிலர் கருதினர்.
அறிஞர்கள், அதிகாரிகள் , இளைஞர்கள், பொறுப்பு மிகுந்த கட்சிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு முடிவு எடுத்தால், எதையும், எங்கேயும் நடத்திக்காட்ட முடியும் என்பதைத்தான் 5 - வது உலகத் தமிழ் மாநாட்டின் தொடக்க விழா எடுத்துக் காட்டுகின்றது.
உலகத் தமிழ் மாநாடு என்னும் அரிய மாநாட்டை தமிழகத்தில் தொடங்குவதற்கு வித்திட்ட, ஒப்புக்கொண்ட முன்னாள் முதல்வர் பக்தவத்சலம் அவர்களின் உழைப்பும், எனது தெய்வம், என் ஆசான் , பேரறிஞர் அமரர் அண்ணா அவர்கள் இரண்டாவது மாநாட்டில் ஏற்றிருந்த முழுமையான பொறுப்பும் என்னை ஆட்டிப் படைத்து இந்த மாநாட்டை நடத்துகின்ற வகையில் ஊக்கத்தைத் தருகின்றது. இன்று அமரர் அவர்கள் நம்மிடையே இல்லை; ஆனால், அவர் எனது இதயத்திலிருந்து எனக்கு ஊக்கத்தையும் நல்ல கருத்தையும் தந்து என்னை வழிநடத்திச் செல்கிறார் என்பதை நான் மறுக்க முடியாது; இது மூடநம்பிக்கை என சொல்லலாம். என்னைப் பொறுத்தவரை இது நியாயமான நம்பிக்கையாகும்.
பல பெரியவர்கள் இந்த மாநாடு கூடுவதற்கு ஆதரவு நல்கினார்கள் . இந்தி பேசும் மாநிலத்தவர்கள் , ஆந்திர மாநிலத்தவர்கள் , மராட்டிய மாநிலத்தவர்கள் , தொலைபேசியின் மூலம் அடிக்கடி தமிழ் மாநாடு எப்போது என்று என்னை வினவியவாறே இருந்தார்கள்.
இங்கே தமிழ் குறித்து பிரச்சினைகள் பேசப்பட்டன . அவற்றிற்கு வழிகாணும் முறைடற்றியும் சொல்ல முயன்றார்கள் . வெவ்வேறு கருத்துகளைச் சொன்னார்கள். அதற்காகத்தான் 5 - வது உலகத் தமிழ் மாநாடு கூட்டப்படுகிறது.
குழந்தையைப் பெற்றவர் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம் . ஆனால் மற்றவர்கள், உற்றவர்கள் , இந்தச் சட்டையைக் குழந்தைக்குப் போடு , அந்தப் பள்ளிக் கூடத்தில் சேர், இந்த ஆசானைத் தேர்ந்தெடு என்றெல்லாம் கருத்துகள் தெரிவிப்பதுபோல, தமிழைப் பாதுகாக்க , தமிழை வார்க்க யோசனை சொல்கிறார்கள் என்பதை நாம் உணரவேண்டும்.
ஆராய்ச்சிக் கருத்தரங்கில் மாறுபட்ட கருத்துகள் சொல்லப்படுகின்றன . எல்லோரும் ஒரே எண்ணத்தைத் திரும்பத் திரும்பச் சொல்வதற்காக அல்ல மாநாடு ! அவர்கள் தங்களது ஆற்றலை, வலிமையைப் பயன்படுத்தி தமிழைப் பாதுகாக்கும் வழியைச் சொல்கின்ற மாநாடு இது.
தமிழ் எழுத்தில் சீர்திருத்தம் தேவை என்று சிலர் குறிப்பிடுகின்றனர் . வரவேற்கிறேன். சீர்திருத்தம் என்று சொல்லிக்கொண்டு மேலும் மேலும் எழுத்துகளைச் சேர்த்துக்கொண்டு போகக்கூடாது . ஆங்கிலத்தில் 26 எழுத்துகள் தான் உள்ளன . அது உலக மொழியாகும் வாய்ப்பைப் பெற்றுள்ளது . எனவே, தமிழ் எழுத்துச் சீர்திருத்தம், எழுத்துகளைக் குறைப்பதாக அமையவேண்டும் ; அதிகமாக்கக் கூடாது.
தமிழ் ஒரே மாதிரியாக இருக்க வேண்டுமென்று சிலர் குறிப்பிட்டார்கள் . இராமநாதபுரத்தில் ஒரு வகையாக, மதுார் மாவட்டத்தில் ஒரு விதமாக , நெல்லையில் ஒரு விதமாக, கோவையில் ஒரு விதமாக தமிழ் பேசப்படுகிறது . இவற்றை ஒன்று படுத்தவேண்டும் என்றால் , மிகப்பெரும் பணி செய்ய வேண்டும். தமிழக அரசு இதனைத் தக்க வகையில் செய்யும்.
தமிழ் மக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து பேசக் கூடிய பொழி வேண்டும் என்றார்கள். ஏற்றுக் கொள்வோம்; ஆனால், இலக்கண ரீதியாக அந்த மொழி அமைய வேண்டும் என்பது மட்டுமல்ல, ஏழை மக்களின் உள்ளத்தைத் தொடும் மொழியாக, அது இருக்கவேண்டும். பேசும் மொழியும், எழுதும் மொழியும் ஒருங்கினையும் நிலையை உருவாக்க வேண்டும் என்பது சுமையானதோர் பொறுப்பு : அதனை உணர்ந்து ஏற்றுச் செயல்புரிய வேண்டும்.
உலகத் தமிழ்ச் சங்கம் ஒன்றை இங்கே தமிழக அமைக்கும். போறிஞர்களிடம் அது ஒப்படைக்கப்படும்; நிருவாகத்தை மட்டும் அரசு கவனித்துக்கொள்ளும். இந்த உலகத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ் மக்கள் அக்கறை கொள்ளவேண்டும். செப்டம்பர் திங்கள் 15 ஆம் நாளில் , பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில் உலகத் தமிழ்ச் சங்கம் தமிழ் வளர்ச்சிக்கு விழா எடுக்கும்.
தமிழ் ஆட்சி மொழியில் அரசு அக்கறை கொண்டுள்ளது என்பது எல்லாருக்கும் புரிந்திருக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. தமிழ் வழக்கு மொழியாக, வழக்கத்தில் உள்ள மொழியாக மட்டுமல்ல ; வழக்கு மன்றத்தில் நீதிமன்றத்தில் தீவிரமாக்கப்பட முயற்சி நடைபெறும்.
உலகத்தில் பய நாட்டுப் பிரதிநிதிகளும் , தமிழைப் பாராட்டி பேச வந்திருக்கும் இந்த நேரத்தில் ஒன்றை நினைவுகூர்தல் வேண்டும். நாம் ஒரு போராட்டத்திற்குத் தயாராக வேண்டும். அந்தப் போராட்டம் யாரையும் எதிர்த்தல்ல; எந்த மொழியையும் எதிர்த்தல்ல; யாரையும் சிறையில் தள்ளுவதல்ல அந்தப் போராட்டம்; யாரையும் அழிவுப் பாதைக்கு அனுப்புவதல்ல அந்தப் போராட்டம்; நாமே நமக்குள் நடத்திக்கொள்ள வேண்டிய போராட்டம் அது, தமிழில்தான் எழுதுவேன் , தமிழில்தான் பேசுவேன் என்று நமது உள்ளத்து உணர்வுடன் போராடவேண்டும். நாம் "தமிழன் என்றொரு இனம் உண்டு" என்பதை திரைப்படத்தில் பாடிக் காட்டுவதோடு நின்றுவிடாமல், தமிழ் எத்தனை ஆண்டுகளுக்கு முன்பே இங்கு இருந்தது, இப்போது எப்படி இருக்கிறது என்பதையெல்லாம் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
நான் முன்பு இலங்கை தி.மு.க. - வின் அழைப்புடன் இலங்கைக்குச் சென்றிருந்தபோது அங்கு என்ன பேசுவது என்பது குறித்து அமரர் அண்ணா அவர்களிடம் கேட்டேன். "இலங்கையில் உள்ள தமிழர்களுக்கும் நாக்கும் கலாச்சாரத் தொடர்பு உண்டே தவிர, அரசியல் தொடர்பு கிடையாது" என்று அண்ணா. அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள், அதை அங்கு சென்று நாள் தெரிவித்தேன்; இலங்கை தமிழர்கள் அதை ஏற்றுக் கொண்டார்கள்.
இலங்கைத் தமிழருக்கு எந்தெந்த வகையில் ஆதரவு தாமுடியுமோ அந்தந்த வகையில் எல்லாம் தருவோம். அந்த நாட்டின் ஆட்சி முறை குறித்து நாம் தலையிட முடியாது என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவிப்பது என் நீங்காத கடமை என உணர்கிறேன்.
அரசியல் சம்பந்தம் இன்றி முழுக்க முழுக்க தமிழுக்கு மட்டும் நடத்தப்படும் மாநாடு இது என்பதால், அரசியல் குறித்து நாம் கவலைப்படாமல், தமிழ் மொழி குறித்து, தமிழ் வளர்ச்சி குறித்து , இலக்கியம் குறித்து, கலாச்சாரம் குறித்து இம்மாநாடு கருத்துரை தெரிவிக்கிறது.
உலகத் தமிழர் அனைவரும் ஒன்றுபடுவோம் ! உலகத் தமிழர் அனைவரும் அறிவினால் ஒன்று படுவோம் . தமிழ் இனத்தவரிடம் ஒருமை உணர்ச்சி ஏற்பட, ஏற்றத்தாழ்வு அகன்றிட , மத பேதங்கள் நீங்கிட, ஜாதி வெறி மறைந்திட நாம் பாடுபடுவோம்.
தமிழைப் பயன்படுத்துவது குறித்து நாம் அக்கறை செலுத்தும்போது , சாதாரான உாழக்கும் மக்களுக்குத் தெரிந்த தமிழை நாம் உருவாக்குவோம். அப்படி உருவாக்கும் மொழியில் இலக்கியம் இருக்கவேண்டும்.
"கண்டிராஜன்" என்னும் நாடகத்தில் ஒரு பாடல் வரும். அந்தப் பாடலில் நயம் இருக்கும். யாருக்கும் அதன் பொருள் எளிதில் புரியாது . அப்படி இருந்தால் பயன் என்ன?
வாழ்க்கையில் அனைவரும் பேசும் ஒரே மாதிரி மொழியை அமைக்கவேண்டும். அதைச் செய்ய உலகத் தமிழ் ஆராய்ச்சிக் குழுவைத் தவிர வேறு ஒரு நிறுவனம் அந்தப் பணிக்கு நீங்கள் எல்லாரும் காட்டுகின்ற ஒத்துழைப்புக்கு அடையாளம்தாள் இந்த உலகத் தமிழ் மாநாடு.
அண்ணா நாமம் வாழ்க..........sb...
-
மக்கள் திலகம் என்று சினிமாவிலும் புரட்சித்தலைவர் என்று அரசியலிலும் சிறப்புப் பெயர்கள் அவருக்கு வழங்கப்பட்டாலும், ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களால் உண்மையான உள்ளன்புடன் சூட்டப்பட்ட 'வாத்தியார்' என்ற பெயர்தான் இன்றுவரை அழியாப் புகழுடன் நிலைத்தும் நீடித்துமிருக்கிறது.
'திருடாதே பாப்பா திருடாதே' என்று குழந்தைகளுக்குப் பாடம் எடுப்பார். 'நான் ஆணையிட்டால்..அது நடந்துவிட்டால்' என்று ஏழை மக்களுக்கு நம்பிக்கை டானிக் ஊற்றிக்கொண்டிருப்பார். 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' என்று இளைஞர்களுக்கு உற்சாக உரம் போடுவார். கிராமம் முழுக்க அன்றைக்கு எம்.ஜி.ஆரின் குரலாக டி.எம்.சௌந்தர்ராஜன் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும். விவரம் அறிந்தவர்களுக்குத்தான் அது டி.எம்.எஸ். குரல். ஆனால்,கோடிக்கணக்கான மக்களுக்கு இன்றைக்கும் அது எம்.ஜி.ஆரின் குரல்தான். சினிமா பாடல்கள்மூலம் வாழ்வியலை சாமானியர்களுக்குக் கற்றுத்தந்தவர் எம்ஜிஆர். அதனால்தான், அவரை தங்களது மூச்சுக்காற்றாகக் கருதிய பாமர மக்கள் அவருக்கு, 'வாத்தியார்' என்று செல்லப் பெயர் சூட்டினார்கள்.
[
](https://www.facebook.com/photo.php?f...WUtH3WBaiBJGtQ)
[
](https://www.facebook.com/photo.php?f...WUtH3WBaiBJGtQ)[
](https://www.facebook.com/photo.php?f...Q).........SBB...
-
"என் அம்மாவின் ஆசைக்காக சொந்த வீடு வாங்கினோம். தாயின் ஆசை நிறைவேற காரணமாயிருந்த இந்த வீட்டில் வாழ்ந்த காலத்தில் தான் எத்தனை எத்தனை நிகழ்வுகள்...
'பட வாய்ப்பு கிடைக்காதா...?' என்று, ஏங்கி தவித்ததும், 'நிறைய படங்களில் நடிக்க வேண்டியிருந்ததால், நேரம் போதவில்லையே' என்று கவலைப்பட்டதும் இவ்வீட்டில் தான்.
நண்பரிடம் கடன் வாங்கி, காலம் கழித்ததும், என்னை வைத்து படமெடுத்த பட முதலாளிக்கே, கடன் கொடுத்ததும் உண்டு. படத் தயாரிப்பாளர்கள் ஒப்பந்ததாளில் எப்படிப்பட்ட ஷரத்துக்களை குறிப்பிட்டிருந்தாலும், மறுப்பு கூறாமல் கையெழுத்திட்டதும், அதேபோன்று, என் இஷ்டத்துக்கு, 'ஷரத்து'க்கள் எழுதப்பட்டு, பட முதலாளிகள், என்னோடு ஒப்பந்தம் செய்து கொண்டதும் உண்டு.
திரைப்பட கம்பெனி ஒன்றில், நானும் ஒரு பங்குதாரராக ஆனதும், படம் வெளியிடப்பட்டதும், அதிலிருந்து வெளியேறி, சொந்தமாக ஒரு திரைப்பட நிறுவனத்தை துவங்கி, படம் எடுத்து வெற்றி பெற்றதும், இங்கு வசித்த காலத்தில் நிகழ்ந்தவைகளே!
ஒரே குடும்பமாக, நானும், என் அண்ணனும், பல ஆண்டுகள் வாழ்ந்த இவ்வீட்டில் தான், 'வாழ்வு அவ்வளவு தான்...' என, மருத்துவரால் கைவிடப்பட்ட என் மனைவி, பல ஆண்டுகள் உயிரோடு இருந்து, பின், இறந்து போனதும் இந்த வீட்டில்தான்.
தி.மு.கழகம் தேர்தலில் ஈடுபட்டு, தமிழக சட்டசபையில், கழக உறுப்பினர்கள் இடம் பெற்றது; முதன் முதலில் நான், தமிழக மேல் சபை உறுப்பினன் ஆக்கப்பட்டதும், பின், அப்பதவியை ராஜினாமா செய்தது போன்றவைகள் இங்கு வாழ்ந்த போது நடந்தவையே!
அதேபோன்று, தென்னிந்திய நடிகர் சங்கம் தோற்றுவிக்கப்பட்டு, அதற்கு, கலைவாணர் தலைவரானதை கண்டு களிப்புற்று மகிழ்ந்ததும், பின், கலைவாணரை இழந்து, கண்ணீர் சிந்தியதும் இங்கு தான்.
எம்.ஜி.ஆர்., நாடக மன்றம் துவக்கப்பட்டு, பின், அது நிறுத்தப்பட்ட நிகழ்வும், சண்டைக் காட்சிகளில் சிறப்பாக நடிக்கிறேன் என்று போற்றப்பட்டதும், விபத்தில் கால் முறிவு ஏற்பட்ட போது, 'கால் ஒடிந்து விட்டது; இனிமேல் நடக்கவே முடியாது...' என்று ஏளனங்களை கேட்டதும் இங்கு வாழ்ந்த போது தான்!
ஆர்.எம்.வீரப்பன், என்னுடைய நாடகம் மற்றும் திரைப்பட நிறுவனங்களின் நிர்வாகப் பொறுப்பை ஏற்று, என்னிடம் சம்பளம் வாங்கி வேலை செய்ததும், பின், அவரே பட முதலாளியாகி, சத்யா மூவீஸ் நிறுவனத்தை அமைத்து, அதன் மூலம் தயாரித்த படங்களில், நான், அவரிடம் சம்பளம் வாங்கி, வேலை செய்தது என, ஏகப்பட்ட சம்பவங்களை என்னுள் பதிவு செய்தது, இவ்வீட்டில் வசித்த காலகட்டத்தில் தான்!
'நல்லதையே நினைக்கிறேன்; நல்லதையே செய்கிறேன்...' என்ற நம்பிக்கையில் ஒருவருக்கு ஒரு யோசனையை, நிபந்தனையை விதித்தேன். ஆனால், அதுவே, பிற்சமயம் அவர்களால் எனக்கு விதிக்கப்பட, அதற்கு கீழ்ப்படிந்து நடக்க நேர்ந்த போது, நான் அடைந்த அனுபவம் இருக்கிறதே அப்பப்பா...
'பாக்கெட் மார்' என்ற இந்திப் படத்தை எனக்கு காட்டிய ஏ.எல்.சீனிவாசன், அப்படக்கதையை தழுவி, தமிழில் படமெடுக்க விரும்புவதாகவும், அதில் நான் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். எனக்கும் அப்படத்தில் நடிக்க விருப்பம் இருந்தது.
ஏற்கனவே, அவருடைய தயாரிப்பில், 'ரத்னாவளி' என்ற படத்தில், நடித்துக் கொண்டிருந்தேன்; இப்படத்தில் கதாநாயகி, பத்மினி. அத்துடன், அஞ்சலி தேவி மற்றும் பானுமதி போன்ற பெரிய நடிகையரோடு, வேறு சில படங்களிலும் நடித்துக் கொண்டிருந்தேன்.
மேலும், இப்போது உள்ளது போல், அப்போது, எனக்கு நிறைய படங்கள் இல்லை. அத்துடன், சம்பளமும் குறைவு.
ஆனாலும், நிறைய நாடகங்களில் நடித்து வந்ததுடன், பொதுப் பணிகளிலும் ஈடுபட்டு வந்தேன்.
அதனால், படப்பிடிப்புக்கு கால்ஷீட் கொடுப்பதில் கஷ்டம் இருந்தது.
இந்நிலையில் தான், 'திருடாதே' எனும் அப்படத்தில் நடிக்க அழைத்தார், ஏ.எல்.சீனிவாசன்.
எனது அருமை நண்பரான ஏ.எல்.எஸ்., எவ்வளவு கஷ்டம் என்றாலும், எப்போதும் சிரித்த முகத்துடன் பேசும் குணமுள்ளவர்.
எதிராளியை அவமானப்படுத்த வேண்டும் என்ற கெட்ட எண்ணம் இல்லாமல், கள்ளம் கபடமின்றி, மனதில் பட்டதை பட்டென்று கூறி விடும் இயல்பு கொண்டவர்.
இக்குணத்தால், அவரை விரோதியாக கருதுவோரைக் கூட வெறுக்க மாட்டார்.
'விளையாட்டாக பேசினோம்; அதிலென்ன விபரீதம் வந்து விடும்...' என்று எண்ணும் வெள்ளை மனம் கொண்டவர்.
இத்தகைய குண அம்சம் கொண்ட ஏ.எல்.எஸ்., என்னை, #திருடாதே படத்தில் நடிக்க அழைத்த போது, 'என்னை, கதாநாயகனாக போட நினைப்பதற்கு ரொம்ப மகிழ்ச்சி; கதாநாயகி வேடத்திற்கு பெரிய நடிகையரைப் போட்டால் கால்ஷீட் பிரச்னை வரும். என் கால்ஷீட்டுகளை, வீணாக்காமல் பயன்படுத்தினால் தான் படம் விரைவில் எடுக்க
முடியும்...' என்றேன்.
'அப்படியே செய்றேன்... கதாநாயகியாக யாரை போடலாம், நீங்களே சொல்லுங்க; புதுமுகம்ன்னாலும் பரவாயில்ல...' என்றார். ஏ.எல்.எஸ்., அருகில் இருந்த இயக்குனர் ப.நீலகண்டன், 'புதுமுகத்தையே போடலாம்...' என்றார்.
உடனே நான், 'அந்த புதுமுகம், நான் கொடுக்கிற கால்ஷீட்டுகளில் வந்து நடிக்க தயாராக இருக்கணும். சேர்ந்தாற் போல், பத்து நாட்கள் கால்ஷீட் தந்தாலும், நேரம் காலம் பாக்காமல் நடிக்க வரணும்; இந்த நிபந்தனையோட, அந்த புதுமுகத்தை ஒப்பந்தம் செய்யுங்கள்...' என்றேன்.
என் நிபந்தனைக்கு சம்மதித்தார், ஏ.எல்.எஸ்., உடனே இயக்குனர், ப.நீலகணடன், 'பத்மினி பிக்சர்ஸின் தங்கமலை ரகசியம் படத்துக்காக, குரூப் டான்ஸ் காட்சி ஒன்றை இயக்கினேன். அதில் ஆடின ஒரு பெண்ணுக்கு நல்ல முகவெட்டு இருந்தது...' என்று, என்னிடம் சிபாரிசு செய்தார்.
யார் என்று விவரம் கேட்ட போது, 'அப்பெண்ணின் பெயர், சரோஜாதேவி; ஒருபுறம் பார்த்தா, வைஜயந்தி மாலா போன்றும், இன்னொருபுறம் பத்மினி மாதிரியான முகச் சாயல் இருக்கு.
தாய்மொழி கன்னடம்; தமிழ் அவ்வளவாக தெரியாதுன்னாலும் நாளடைவிலே பேசிப் பேசி பழக்கிடலாம்...'என்றார்.
அப்போது, சரோஜாதேவியை முதன் முதலில் பார்த்த நினைவு வந்தது; 'நாடோடி மன்னன்' படப்பிடிப்பு துவக்கியிருந்த நேரம்...
- ' நான் ஏன் பிறந்தேன் ' தொடரில்
மக்கள்திலகம் .............
-
#வள்ளல்தன்மைக்கே #தெய்வீகத்தன்மை #ஏற்படுத்தியவர்
டாக்டர் முத்துலட்சுமி, நடிகர் ஜெமினிகணேசின் அத்தை...இவர் சென்னை அடையாறில் ஒரு மருத்துவமனை கட்டிவந்தார்... ஆனால் பணப் பற்றாக்குறை...!
யாரைக் கேட்பது?
யோசனையில் ஆழ்ந்தார்...
ஜெமினி கணேசன் மூலமாக விஷயம் எம்ஜிஆர் காதிற்கு வர, முத்துலட்சுமியைச் சந்தித்து ரூ.30000/- (1960 களில் ) தருவதாக வாக்களிக்கிறார்...
டாக்டருக்கோ ஒரே பிரமிப்பு...
இந்தக்காலத்திலும் இப்படியும் ஒருவரா? என்று...
வாக்களித்த வாத்தியாருக்கு வரவேண்டிய பணம் வந்து சேரவில்லை...என்ன செய்வது? வாக்களித்துவிட்டோமே என்ற உறுத்தல்...! சிறிது விநாடிகள் யோசித்த எம்ஜிஆர் தெரிந்தவரிடம் ரூ.30000/- பணத்தைக் கடனாக வாங்கி, டாக்டர் முத்துலட்சுமிக்கு அளித்தார்...
சிறிது காலத்தில் எம்ஜிஆர் கடன் வாங்கி கொடுத்த வாக்கைக் காத்ததையறிந்த நடிகர் ஜெமினி கணேசன் சிலாகித்தது...
"அண்ணன் எம்ஜிஆர் கொடைத்தன்மை நிறைந்தவர் என்பதை இந்த நாடறியும்... ஆனால் கடன் வாங்கியாவது கொடுத்த வாக்கைக் காக்கவேண்டும் என்பது எத்தகு உன்னதமான செயல்...! இதுபோன்ற ஒரு வள்ளல்தன்மையை அண்ணன் எம்ஜிஆரைத் தவிர வேறு யாராலும் நினைத்துக்கூடப் பார்க்க இயலாது..."
தன்னிடமுள்ளவற்றைப் பிறருக்குக் கொடுப்பது வள்ளல் தன்மை... ஆனால் கடன்வாங்கியாவது அடுத்தவருக்கு உதவ வேண்டும் என்று அந்த வள்ளல் தன்மைக்கே ஒரு தெய்வீகத்தை ஏற்படுத்தியவர் நம்ம வாத்தியார்...
ஆரம்பகாலங்களில் படங்களில் நடிக்கும்போது எம்ஜிஆரின் வருமானம் குறைவு. அந்தக்கால கட்டங்களிலும் தன்னிடமுள்ளவற்றைக் கொடுத்தோ, அல்லது தன் சம்பளப்பணத்தை அட்வான்ஸ் வாங்கியாவது மற்றவர்களுக்கு உதவுவார்...இது கொடைத்தன்மையை விட உன்னதநிலை...
கையில் இருப்பவற்றைக் கொடுப்பவர் கொடைவள்ளல் என்றால்...
கடன் வாங்கியாவது அடுத்தவர் கஷ்டத்தைத் துடைக்கும் வாத்தியாரை என்ன பெயர் சொல்லி அழைக்கலாம்...?????!!!!! Bsm...
-
ஆகா சூப்பர்!. ஒரு வழியாக "சிவந்த மண்ணி"ன் வசூலை வெளியிட்டு நம்மிடம் வசமாக சிக்கிக் கொண்டார்கள் சிவாஜியின் கைபுள்ளைங்க. இந்த வசூல் எந்த விளம்பரத்திலும் வரவில்லை. இருப்பினும் அவர்கள் தந்த வசூலை நாம் அப்படியே எடுத்துக்கொள்ளலாம்.. அது உண்மையா பொய்யா என்று நமக்குத் தெரியாது. ஏனென்றால் 72ம் ஆண்டு வெளியான வெள்ளி விழா ஓட்டிய "பட்டிக்காடா பட்டணமா"
6 வாரத்தில் பெற்ற வசூல் 30 லட்சம் தான். மொத்த வசூலே 40 லட்சத்துக்குள் அடக்கம். ஆனால் 69 ல் வெளியாகி வெள்ளிவிழா ஓட்டாத "சிவந்த மண்" பெற்ற வசூல் சுமார் 44 லட்சமாம். சரி ஏற்றுக்கொள்வோம்.
அதை வைத்துக் கொண்டு "சிவந்த மண்ணு"க்கு 6 மாதத்திற்கு முன்பு வந்த "அடிமைப்பெண்ணி"ன் வசூலை நாம் ஒப்பிட்டு பார்க்கலாம். "அடிமைப்பெண்" 100 நாட்கள் ஓடிய திரையரங்கின் வசூல் முன்னரே வெளிவந்த விபரங்கள் நம்மிடம் உள்ளன. இத்தனை ஆண்டுகளுக்கு பின்பு ஒரு சிறிய ஊரில் உள்ள தியேட்டர் முதற்கொண்டு வசூலை எந்த பேக்டரியில் போட்டு வருகிறார்களோ தெரியவில்லை.
நமக்கு அப்படிப்பட்ட பேக்டரி எதுவும் தெரியவில்லை. தெரிந்தால் பழைய தலைவர் படங்களுக்கு புது வசூல் போட்டு கொண்டு வரலாம். ஆனால் அவர்களுக்கு தெரிந்த வித்தையை
யாருக்கும் சொல்ல மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.
சரி இரண்டு வசூலையும் ஒரு தடவை நன்றாக பாருங்கள். அதில் ஏதாவது "சிவந்த மண்" "அடிமைப்பெண்ணை" முந்தியிருக்கிறதா என்றால், ஆம் ஒரே ஒரு ஊரில் மட்டும் முந்தியிருக்கிறது. அது தூத்துக்குடிதான். எங்க ஊர் கதையை உங்களுக்கு ஏற்கனவே தனியாக எழுதியிருக்கிறேன். சிவாஜி படங்கள் பொதுவாக திருநெல்வேலி வசூலுக்கு தூத்துக்குடி வசூல் 50 சதமானம்தான் வரும். இதை எந்த சிவாஜி படத்தை வேண்டுமானாலும் சோதனைக்கு எடுத்துக் கொள்ளலாம்.
அந்த அடிப்படையில் பார்த்தால் சிவந்த மண்ணின் ஒரிஜுனல் தூத்துக்குடி வசூல் சுமார் ரூ 68000 தான். மீதி உள்ள வசூல் தூத்துக்குடி சிவாஜி ரசிகர்கள் வீடு, காடுகரை வித்த பணம்தான். அதனால் தூத்துக்குடி வசூல் ரூ68000 என்று எடுத்துக் கொள்ளலாம். மற்ற எந்த ஒரு ஊரை உற்றுப் பார்த்தாலும் ஒரு ஊரில் கூட "அடிமைப்பெண்ணை" நெருங்க முடியவில்லை. "அடிமைப்பெண்ணி"ன் வசூல் விபரங்கள் தெரியாமல் "சிவந்த மண்ணு"க்கு வசூலை போட்டு கொண்டு வந்து விட்டார்கள் போலும்.
"புதியபூமி"யில் காங்கேயன் பேசும் வசனம் இது. அங்கே "வேடன் வலையை விரித்து விட்டான், இங்கே நீ வெண்புறாவை பறக்க விடாதே" என்று. அருமையான வசனம். அங்கே "அடிமைப்பெண் "வசூல் என்ற வலையை விரித்து வைத்தவுடன் "சிவந்த மண்" வசூல் என்ற சிவப்பு புறாவே வலையில் சிக்கிக் கொண்டது. புறாவை பிடித்து
இறக்கையை நீக்கி பார்த்தால் புறா எலும்பும் தோலுமாக இருக்கு என்ன செய்ய. அவர்கள் கொடுக்கும் பில்ட்அப் அப்படி.
"உரித்துப் பார்த்தால் வெங்காயத்தில் ஒன்றும் இருக்காது. உளறித் திரிபவன் வார்த்தையில் ஒரு உருப்படி தேறாது.". அவர்கள் ஐயன் உளறி வைத்த பாடல் ஒன்றே போதும் அவர்கள் நிலையை எடுத்தியம்ப. நாம் கொடுத்த வசூல் எல்லாம் 100 நாட்கள் ஓடிய தியேட்டர்களின் வசூல். அனைத்து b, c சென்ட்டர்களின் வசூலை எடுத்தோமானால் கைபிள்ளைகளுக்கு தீராத கலக்கம் உண்டாகி விடும். எதிரிகளின் பலமறிந்து மோத வேண்டும். இருப்பதையும் இழந்து நிற்காதீர்கள்
சக கைபிள்ளைகளிடம் எதையாவது பொய்யுரைத்து தேற்றுங்கள்.
ஒவ்வொரு ஊரிலும் ஏகப்பட்ட வசூல் வித்தியாசம். அதிலும் குறிப்பாக நாகர்கோவிலில் வெறும் ரூ76000 தான் வசூலாகி இருக்கிறது. "அடிமைப்பெண்" வசூல் ரு1,30,000 .
"குடியிருந்த கோயில்" 42 நாட்களிலேயே. ரூ 73000 பெற்று "சிவந்தமண்ணின்" வசூலை எட்டிப்பிடித்து விட்டது.
"அடிமைப்பெண்ணிடம்" வெட்கக்கேடாக தோற்ற "சிவந்தமண்ணி"ன் அவலம்
தற்போது கைபுள்ளைங்க மூலமாக வெளிச்சத்துக்கு வந்து விட்டது. இப்போது புரிகிறதா மக்கள் திலகத்துக்கு ஏன் உங்க ஆளைவிட அதிக சம்பளம் கொடுக்கிறார்கள் என்று.
அது மட்டுமா? "அடிமைப்பெண்"
சில ஆண்டுகள் கழித்து வெளியான போதும் "சிவந்த மண்ணை" சீரழித்து விட்டது. 18 நாளிலேயே ரூ1லட்சத்துக்கும் அதிகமான வசூலை நாகர்கோவிலில் பெற்றது உச்சக்கட்ட ஆச்சர்யமே..
இவ்வளவுக்கும் எந்த வெளிநாட்டிலும் "அடிமைப்பெண்ணை" படமாக்கவில்லை. "சிவந்த மண்ணை" சின்னாபின்னமாக்கி பெண்ணை பொன்னாக்கியவர் மக்கள் திலகம். அடிமைப்பெண்
மறுவெளியீடுகளில்
பொன் முட்டையிடும் வாத்தை போல்
செல்வத்தை வாரி வழங்கியது
அனைவரும் அறிந்ததே. 40 லட்சத்தில் எடுக்கப்பட்ட "அடிமைப்பெண்" வசூல் எங்கே? தமிழுக்கு மட்டுமே 80 லட்சத்துக்கும் மேலே செலவு செய்த "சிவந்த மண்" வசூல் எங்கே? வரி நீக்கி தியேட்டர் ஷேர் போக 20 லட்சம் ஸ்ரீதருக்கு தேறினாலே ஆச்சர்யம். மீதி 60 லட்சம். கணேசன் போட்ட கோவிந்தா!
அடுத்தது. "கர்ணன்"
"சிவந்த மண்" என்ற பிரமாண்டமான படத்தின் வசூல் விபரங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்,
100 நாட்களுக்கும் கூடுதல் ஓடிய அரங்குகள் 9
1)சென்னையில் 4 அரங்குகளில் ஒட்டுமொத்த வசூல். ரூ 12,32,970- 21.
அடிமைப்பெண் 13,60,256.82
"
5)மதுரை செண்ட்ரல்- ரூ.3,37,134-95. மதுரை சிந்தாமணி. ரூ. 4,34,643.75.
6)கோவை ராயல் - ரூ. 3,56,453-59. . அ. பெண். 3,75,635.85
7)சேலம். 2,28,740-60 ஓரியன்டல்ரூ.
அ.பெண்.. ... . சேலம் சாந்தி 2,63,258.89
8)திருச்சி
ராஜா - ரூ 2,42,268 10. அ.பெண் 2,75,575.40
9)தூத்துக்குடி
பாலகிருஷ்ணா- ரூ. 1,07,531-90 (வடக்கயிறு வசூல்) (68000)
அ.பெண். ... 1,05,816.13.
50 நாட்களை கடந்த அரங்குகள் 23
50 நாட்கள் வரையிலான வசூல் விபரங்கள்,
1)நெல்லை
செண்ட்ரல் 76 நாட்கள்- ரூ. 1,37,431- 25. ரூ 2,00,407.04
2) ஈரோடு. - ரூ 1,12,043- 15. ரூ. 1,44,612.25
3) வேலூர் - ரூ. 1,48,180- 85. ரூ.
4) தஞ்சை - ரூ. 1,05,194- 27. ரூ. 1,57,726.00
5) பாண்டிச்சேரி - ரூ 93,458- 70
6) தாம்பரம் - ரூ 87,697- 42
7) காஞ்சிபுரம் - ரூ. 82,050-50
8) பொள்ளாச்சி- ரூ. 81,628- 62
9) கும்பகோணம்- ரூ. 80,315- 52
10) நாகர்கோயில்- ரூ. 76,575- 60. 1,30,836.36
11) கடலூர் - ரூ 76,109- 20
12) திண்டுக்கல்- ரூ. 72,676- 49. 1,39,006.59
13) மாயவரம்- ரூ 62,698-00
14) ஊட்டி - ரூ 61,720-66
15) திருவண்ணாமலை- ரூ 61,454-10
16) விருதுநகர்- ரூ 56,355-52
17) ஆத்தூர் - ரூ. 51,834-46
18) பட்டுக்கோட்டை- ரூ. 47,230-59
19) காரைக்குடி- ரூ. 45,224-35
20) தர்மபுரி- ரூ 42,328-89
21) விழுப்புரம்- ரூ 78,358-43
பெங்களூர்
22) ஸ்டேட்ஸ்
பிக்ஸர் அவுஸ்- ரூ 1,24,698-80
23)அஜந்தா - ரூ. 96,437-00
24) சிவாஜி 42 நாட்கள்- ரூ. 75,225-00.
அ.பெண் ( 5,37,143.00 + 75,749.60 )
33 அரங்குகளில் 100+ நாட்கள் மற்றும் 50 நாட்கள் வரையிலான வசூல் விவரப்படி
மொத்தம் ரூ 44, 62,116- 72 ஆகும்,
மேலும் 20 அரங்குகளில் 50 நாட்கள் கடந்த சில நாட்களின் வசூல் விபரங்கள் சேர்க்கப்படவில்லை
ஒட்டுமொத்தமாக 50 இலட்சங்களை கடந்த வெற்றிப் படமாகும்,
பெரும்பாலான ஓடிய ஊர்கள் அரங்குகளில் வசூலான தொகை அதுவே முதலான வசூல் சாதனை எனப் பதிவாகியும் இருக்கிறது,
வசூல் சக்கரவர்த்தி என்றும் நடிகர் திலகமே!! இது கைபிள்ளைகளின் கூற்று.
ஆனால் மண் சிவந்தது புரட்சிக்காரன் சிந்திய ரத்தத்தால் அல்ல. ஸ்ரீதர் மிதமிஞ்சிய நஷ்டத்தால் வடித்த ரத்தக் கண்ணீரால் பூமி சிவந்து, சிவந்த மண் உருவானதோ என்று எண்ணத் தோன்றுகிறது. யோசித்து பாருங்கள் கைபிள்ளைகளே சாதாரண "ரிக்ஷாக்காரன்" 51 நாளிலே 50 லட்சம் வசூல் குவித்தது எங்கே? மிகுந்த செலவில் எடுக்கப்பட்ட "சிவந்த மண்" ஓடி முடிய பெற்றதாக சொல்லப்படும் 50 லட்சம் வசூல் எங்கே? உண்மையிலே படுதோல்வி படம் சிவந்த மண் , இதோ கண்முன்னே ஆதாரங்கள்.
நடிகப் பேரரசர், சினிமா உண்மை நிகழ்வுகளை ஆதாரத்துடன் கொடுப்பதால் அதை மாற்று தரப்பு ஆதாரத்துடன் மறுப்பதை விடுத்து கைபுள்ளைங்க தரக்குறைவாக
விமர்சிப்பதை பார்த்தால் உண்மையை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில். அவர்கள் இல்லை என்றே தெரிகிறது. அதனால் அசிங்கமான கமெண்ட்ஸ் போடுவதை பார்க்கும் போது "தாயைப் போல பிள்ளை நூலைப்போல சேலை" என்பார்கள்.அதைப்போல் கைபிள்ளைங்க ஆபாச வார்த்தைகளில் கதறும் போது அவர்கள் ஐயனோட வளர்ப்பின் மீது நமக்கு சந்தேகம் எழுவதில் வியப்பில்லை..........ksr...
-
சில ஆண்டுகளுக்கு முன் ஆதவன் என்ற தமிழ் படத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு சரோஜாதேவி அவர்கள் நடித்தார்கள்.
ஒரு நாள் படப்பிடிப்பின் நடுவில் பிரேக்கில் உணவு இடைவேளை போது அவர் கொண்டு வந்து இருந்த இரு பொருட்கள் உடன் இருந்த மற்ற அனைவரையும் கவர்ந்தன..
அவர்கள் என்ன இது வெள்ளி தட்டு அத்துடன் ஒரு டம்ளர் போல அமைப்பில் மூடியுடன் ஒரு straa இணைக்க பட்டது போல ஒரு பாத்திரம்...என்று கேட்க.
அவர் சொல்ல அனைத்து பட குழுவினரும் ஆர்வமுடன் கேட்க..
எங்க வீட்டு பிள்ளை படப்பிடிப்பு நடந்து கொண்டு இருந்த நேரம்...ஜமீன்தார் வீட்டு மணமகன் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் உடன் நானும் என் அப்பா வேடத்தில் நடித்த ரங்காராவ் அவர்களும் நடித்த ஒரு காட்சி.
ஒரு சூட்டிங் பார்க்க நாங்க போய் இருக்கும் போது குமரி பெண்ணின் உள்ளத்திலே என்ற பாடலில் அவர்கள் நடிக்க அதை பார்க்க போன நாங்கள் அந்த பாடலை தொடர்வதாக காட்சி அமைப்பு.
இதே போல இடைவேளையில் விலை உயர்ந்த புடவை அணிந்து கொண்டு தலைவர் பக்கத்தில் நான் அமர்ந்து இருக்கும் போது குடிக்க காபி கொடுக்க பட்டது.
நான் குடிக்க தலைவர் மறுக்க அப்போது ஒரு சொட்டு காபி என் புடவையில் சிந்தி விட பதறி நான் துடைக்க தலைவர் பார்த்து சிரிக்க.
அடுத்த சில நாட்களில் படப்பிடிப்பில் இது எனது பரிசு உங்களுக்கு இனி எந்த பானமும் உங்கள் உடையில் சிந்தாது என்று இந்த கிளாஸ் போன்ற இதையும் தட்டையும் இரண்டும் வெள்ளியால் செய்ய பட்டவை...எனக்கு பரிசாக கொடுத்தார்.
என்ன ஒரு மனது அவருக்கு....அன்று முதல் வெளிப்புற படப்பிடிப்பு எங்கு இருந்தாலும் இந்த இரண்டு பொருட்களும் என்னுடன் பயணிக்கின்றன இன்று வரை என்று சொல்லி முடிக்கிறார் அபிநய சரஸ்வதி சரோ அவர்கள்.
சுற்றி அதை கேட்டு கொண்டு இருந்தவர்கள் சாப்பிட்டு முடித்த பின் என்ன ஒரு அற்புத மனிதர் எம்ஜிஆர் அவர்கள் என்று மனதில் பேசி கொண்டது அரங்கம் முழுவதும் எதிர் ஒலித்தது சத்தியம்.
தலைவருக்கு பக்கத்தில் படத்தில் இரு பக்கமும் கை பிடி உடன் கூடிய அந்த வெள்ளி கிளாஸ்.
வாழ்க தலைவர் புகழ்.
தொடரும்...உங்களில் ஒருவன்.....நன்றி......Mn...
-
‘துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலன' என்பது இறைவனுக்கு மட்டுமல்ல எம்.ஜி.ஆருக்கும் பொருந்தும். இக்கருத்தை மெய்ப்பிக்கும் வகையில் அவர் வாழ்வில் பல நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. எம்.ஜி.ஆர் திரையுலகில் இருந்த போதும் முதல்வரான பிறகும் தன்னை வளர்த்துவிட்ட திரையுலகுக்கு ஒரு காவலனாக இருந்தார். யாருக்குக் கஷ்டம் என்றாலும் நஷ்டம் என்றாலும் அத்தகவல் இவர் கவனத்துக்கு வந்தால் உடனே அவர்களை அந்த சிரமத்திலிருந்து மீட்கும் ரட்சகராக இருந்திருக்கிறார் என்பது பலரது பேட்டி வாயிலாகத் தெரிகிறது.
புரட்சித் தலைவரை நம்பினோர் கைவிடப்படார்
சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் இருக்கும் பிரபல ஜுவல்லரி ஒன்றில் நகை வாங்கிக்கொண்டு காரில் வந்த சரோஜாதேவியிடம் இருந்து திருடர்கள் அந்த நகையைக் கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர். காவல் நிலையம் சென்று புகார் அளித்த சரோஜாதேவி ‘எம்.ஜி.ஆர் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா’ என்று கவலையுடன் தெரிவித்தார். எம்.ஜி.ஆர் இருப்பது தனக்கு ஒரு பாதுகாப்பு என்று அவர் நம்பியிருந்தார். இதுபோன்ற நம்பிக்கை பலருக்கும் இருந்திருக்கிறது.
நடிகை என்கிற ஒரே காரணத்தால் பெண்களுக்கு மற்றவர்கள் நெருக்கடி கொடுத்தபோது அவர்களை அந்தக் கயவர்களின் பிடியிலிருந்து எம்.ஜி.ஆர் விடுவித்த சம்பவங்கள் ஏராளம். இவரும் நடிகையரிடம் மிகவும் கண்ணியத்துடன் நடந்து கொண்டார் என்பதற்கும் சான்றுகள் உண்டு. அவர்களின் கண்ணியத்தைக் காக்க வேண்டிய சந்தர்ப்பங்களில் அவர் உறுதியுடன் இருந்தார். எனவே, அந்தக் காலத்தில் எம்.ஜி.ஆர் தங்களின் காவலராக இருக்கிறார் என்ற நிம்மதி நடிகையருக்கு இருந்தது.
உடம்பை பார்த்துக்கொள்
சாவித்திரி சிவாஜியை வைத்து சொந்தப்படம் எடுத்து தன் சொத்தை எல்லாம் இழந்தார். சென்னை ஹபிபுல்லா ரோட்டில் இருந்த பெரிய மாளிகையும் ஏலத்தில் போய்விட்டது. இந்நிலையில் ஒரு நாள் அவர் எம்.ஜி.ஆரின் மாம்பலம் ஆஃபிஸுக்கு வந்து அவரைச் சந்தித்தார். எம்.ஜி.ஆர் அவரிடம் ஒரு குட்டிச்சாக்கில் ஒரு லட்சம் ரூபாயைப் போட்டுக் கொடுத்தார். அத்துடன் அவர் வசிப்பதற்கு ஒரு வீடும் ஏற்பாடு செய்து கொடுத்தார். உடம்பை கவனித்துக் கொள்ளம்மா என்று கூறி அனுப்பிவைத்தார். இந்த ஒரு லட்சம் ரூபாயை வைத்து சாவித்திரி முன்னேறிவிடப் போவதில்லை. அவர் எப்படிச் செலவழிப்பார் என்பது எம்.ஜி.ஆருக்குத் தெரிந்திருக்கும் எனினும் ஒரு மாபெரும் நடிகை உதவி என்று கேட்கும்போது அவருக்கு உதவுவதே மனுஷத்தனம் என்பது எம்.ஜி.ஆரின் கொள்கை.
திருமணம் செய்துகொள்
ஒரு முறை லட்சுமி வந்து எம்.ஜி.ஆரை பார்த்தார். அவருக்குத் திருமண வாழ்வு தோல்வியில் முடிந்திருந்தது. குழந்தையை அவரது அம்மா வைத்துக்கொண்டார். தனிமையில் இருந்த லட்சுமிக்குத் தொல்லைகள் ஏராளம் சூழ்ந்தன. எம்.ஜி.ஆரிடம் வந்து தன் பிரச்னையைக் கூறினார். எம்.ஜி.ஆர், நீ பொது வாழ்க்கைக்கு வா அல்லது குடும்ப வாழ்க்கையை ஏற்படுத்திக்கொள். அதுதான் உனக்குப் பாதுகாப்பு என்று ஆலோசனை தெரிவித்தார். லட்சுமியிடம் அரசியலுக்கு வருகிறாயா என்று கேட்டார். ‘அது தன்னால் முடியாது’ என்றார் லட்சுமி. ‘எந்தச் சாமி எந்தப் பட்டணம் போனாலும் நான் பத்து மணிக்கு தூங்கப் போய்விடுவேன். எனவே பொதுக்கூட்டங்களில் பேசுவது இயலாத காரியம்’ என்றார் லட்சுமி. ‘அப்படியென்றால் திரும்பவும் திருமணம் செய்துகொள். ஒரு பிள்ளையைத் தத்தெடுத்து வளர்த்து வா. உனக்கு வாழ்வில் ஒரு பிடிப்பு இருக்கும். பாதுகாப்பாகவும் உணர்வாய்’ என்றார் எம்.ஜி.ஆர். அப்படியே செய்தார் லட்சுமி. இன்றைக்குக் கணவர் குழந்தை என லட்சுமி நிம்மதியாக வாழ்கிறார்...da.,
-
பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர். -வின்*டிவியில்*திரு.துரை பாரதி* 05/10/20 அன்று அளித்த*தகவல்கள்*
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
வெற்றி என்பது வானத்தில் இருந்து விழுகின்ற நட்சத்திரம் அல்ல . உழைப்பு ,,உண்மை, உறுதி, உயர்வு,ஆகியவற்றைத்தான் பாடமாக சொல்லி தந்துள்ளார்* புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். இந்த சமூகத்திற்கு .அந்த வெற்றி என்பது அவருக்கும் அவ்வளவு சுலபமாக கிட்டி விடவில்லை .இதே சென்னை மாநகரத்திலே அவர் நடக்காத வீதிகள் இல்லை .பயணிக்காத இடங்கள் இல்லை அப்படியெல்லாம் சந்தர்ப்பத்திற்காக அலைந்தவர்தான் அவர் .ஆனாலும் கூட மேடைகளில் அவர் அவமானப்பட்டார் .வார்த்தைகளால் அடிபட்டார் , குட்டுப்பட்டார் . .இத்தனை பிரச்னைகளை எல்லாம் கடந்துதான் அவர் வெற்றி என்ற சிகரத்தை அடைந்தார் .இந்த வெற்றி என்பது உங்களுக்கான பாடம், நமக்கான பாடம்* நமக்கான .வழிகாட்டி
பசிப்பிணியை போக்குவதற்காகத்தான் வள்ளலார் அவர்கள் அவ்வளவுபெரிய தியாகத்தை**நடத்தினார்கள் . .இன்றைக்கும் அதற்கு அடையாளமாக வள்ளலார் வாழ்ந்த மரத்தின் கீழே அன்னதானம் செய்து வருகிறார்கள் .பசிப்பிணி என்பது எல்லோரும் அறிந்ததுதான் .உலகத்திலுள்ள எவ்வளவோ பெரிய தலைவர்கள் மட்டுமல்ல , மனிதனாக பிறந்த எல்லோருக்கும் பசி என்றால் என்ன என்று தெரிந்திருக்கும் .ஆனால் அந்த பசியை ஆற்ற வேண்டும் . பசியை தீர்க்க வேண்டும் என்கிற எண்ணம் உள்ள மனிதர்கள்தான் மாபெரும் தலைவர்களாக உயர்ந்தவர்கள் .அந்த தலைவர்களின் வரிசையில் முக்கிய இடத்தில எம்.ஜி.ஆர். வருகிறார் .* **
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மட்டும் இந்தியாவில்,தமிழகத்தில்**பிறக்காமல்*பிரான்ஸ், ஜெர்மனி, அமேரிக்கா*போன்ற நாடுகளில்*ஏதாவது ஒரு நாட்டில்*பிறந்திருந்தால் உலகமே*அவருடைய நூலை, வாழ்க்கையை*பாடமாக*வைத்து பல பல்கலை*கழகங்களில் டாக்டர் பட்டம் அளித்து இருப்பார்கள் .* ஆனால் எம்.ஜி.ஆர். என்கிற*மனிதர் தமிழை*நேசித்தார் .தமிழை*வாசித்தார்*, தமிழை*உயிர் மூச்சாக*நினைத்தார்*, தமிழர்களோடு வாழ்ந்தார் . தமிழ் மண்ணிலேதான் மறைய வேண்டும் என்று ஆசைப்பட்டார்*அதனால்தான் அவ்வளவு பெரிய இலட்சியங்கள் எல்லாம் இருந்தாலும் கூட*தமிழ் மக்கள் மீது இருந்த*ஈடுபாட்டால்தான் அவருக்கு*கிடைத்த பல்வேறு விஷயங்களை*உதறி தள்ளிவிட்டு தமிழ் மக்களுக்காகவே வாழ்ந்தார் .இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பான காலத்தில் மாத வாடகை ரூ.15க்கு வாழ்ந்து வந்தவர் 11 ஆண்டுகாலம்*தமிழகத்தையே ஆண்டார் என்பது*சரித்திரம், சாதனை, சகாப்தம்*..உலக இலக்கியங்களில் எங்கெங்கோ தேடுகிற வேதாந்திகள் எல்லாம் சொல்வார்கள் நான் அவ்வளவு புத்தகம் படித்தேன் .இவ்வளவு புத்தகம் படித்தேன் என்று .எந்த தத்துவ வாதியும்*சொல்லாத எந்த மனிதனும், எந்த*மேதையும்*சொல்லாத ஒரு விஷயத்தை எம்.ஜி.ஆர். கண்டுபிடித்தார் .இங்குள்ள மக்களின் அடிப்படை பிரச்னை என்பது* பசி. அந்த பசியை*போக்க வேண்டும் என்பதற்காகத்தான் சத்துணவு திட்டத்தை கொண்டுவந்தார் .இன்றைக்கு கோடிக்கணக்கான குழந்தைகள் ஒருவேளையாவது பசியாறுகிறது என்றால்**அந்த மாமனிதர் எம்.ஜி.ஆரின்*கொடைதான்*அந்த சத்துணவு திட்டம்*
நீங்கள் எம்.ஜி.ஆர். அவர்களிடம் வியந்த ஒரு செய்தி என்ன*.
திரு.கா. லியாகத் அலிகான்*:* *புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.என்பவர் ஒரு வியப்புக்குரிய தலைவர் என்பதை*நான் மட்டுமல்ல தமிழகத்து பெரியோர்கள், தாய்மார்கள் அனைவரும்தான்*வியப்பாக பார்த்தார்கள் . ஏனென்றால் அவருடைய இளம் வயதிலேயே அவருடையான எடுப்பான*தோற்றம் , கட்டு மஸ்தான*உடற்கட்டு*அதை பாதுகாப்பது ,அவருடைய முகப்பொலிவு ,*அவருடைய தலைமுடியின் அளவு, அழகு ,அவற்றையெல்லாம் பார்க்கும்போது இளைஞர்களுக்கெல்லாம் ஒரு உந்துசக்தியாகவே திகழ்ந்தார் .வில்லன் நடிகர்*நம்பியார் சொல்லும்போது ஏன் சும்மா*லுங்கி அணிந்து கொண்டு வெளியே வரலாமே*.எதற்கு*வீணாக சிரமப்பட்டு உடைகள்*அணியவேண்டும் என்று எம்.ஜி.ஆரிடம் கூறியுள்ளார் .* அப்படியல்ல . என்னை*பார்ப்பவர்களுக்கு நான் தோற்ற பொலிவுடன் காட்சி*அளிக்க வேண்டும் .தோற்றப்பொலிவோடு இருந்தால்தான் அவர்களும்* அதை போல**சுறுசுறுப்பாக ,உற்சாகமாக*இளமை துள்ளலோடு*தங்களை*உருவாக்கி கொள்வார்கள் .* நான் எதற்குமே எடுத்துக்காட்டாக, ஒரு முன்னுதாரணமாக*இருக்க வேண்டும் என்பதிலேதான் மிகுந்த குறியோடு இருக்கிறேன் . .அதற்கு*காரணம் , இந்த பாமர*மக்கள், அல்லது படித்தவர்கள்* உட்பட**எல்லோரும்* என்னை பார்க்கிறபோது*சோம்பேறி தனத்தை*அறவே அகற்ற வேண்டும் .சுறுசுறுப்பை தனக்கு*தானே வரவழைத்து கொள்ள*வேண்டும் .தான் எடுத்த காரியத்தை நடத்தி முடிக்க கூடிய* தனது*தோற்ற பொலிவை* வரவேற்று கொள்ள வேண்டும் .அதைத்தான்* நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல தோற்ற பொலிவு என்பது பிறருக்காக செய்வது*உணவு அருந்துவது நமக்காக*உண்பது .நான் ஏதாவது உணவை சாப்பிட்டுவிட்டு* வெளியே சென்று ,நான் அறுசுவை உணவு அருந்தினேன் என்று கூட*சொல்லலாம் .பழைய சாதத்தை சாப்பிட்டுவிட்டு கூட*வெளியில் வந்து நான் அறுசுவை உணவு அருந்தினேன் என்று சொன்னால் கூட*மக்களுக்கு தெரியாது .ஆனால் நீ தோற்ற பொலிவு இன்றி**காட்சி அளிப்பா*யேயானால்*அந்த காட்சியே*உன்னை*குந்தக*படுத்துவதோடு ,உன்னை பார்க்க வந்தவருக்கு மனசோர்வை உண்டாக்கும் .ஆதலால் நம்மை பார்ப்பவர்கள், தங்களின்*தோற்ற பொலிவை அதிகப்படுத்துவதோடு சுறுசுறுப்பையும், விடாமுயற்சியையும் உருவாக்கி* கொள்வதற்கு எம்.ஜி.ஆர். ஒரு உதாரணம் என்று அவர்கள் நம்ப வேண்டும் அதைத்தான் இப்போது நான் கடைபிடித்து வருகிறேன் .அதைத்தான் நபிகள் நாயகம் அந்த காலத்திலேயே 1460வருடங்களுக்கு முன்பாகவே* என்ன சொல்லி*இருக்கிறார் என்றால் வெளியே வரும்போது*ஒருவர் வாசனை திரவியங்கள் கூட*போட்டுக் கொள்ளலாம்.தவறில்லை*ஏனென்றால் ,உனக்கு*எதிர் வரும் நண்பர்களுக்கு நல்ல தோற்ற பொலிவுடன் நீ இருந்தால்தான் அவர்களுக்கு நல்ல மனமகிழ்வு ஏற்படும் . அத்தகைய*உணர்வுகளை எல்லோரும் கடைபிடிப்பதற்கு இஸ்லாம் மதம் வழிகாட்ட வேண்டும் என்று அவர் தன்* வாழ்க்கை சரித்திரத்தில் குறிப்பிட்டதைத்தான் புரட்சி தலைவர* எம்.ஜி.ஆர். அவர்கள் தன்னுடைய*வாழ்க்கையில் கடைபிடித்து*அதை எம்.என்.நம்பியார் அவர்களுக்கு விவரமாக சொல்லி இருக்கிறார் .தோற்ற பொலிவு என்பது*மிக முக்கியமானது . சர்வாதிகாரி என்ற திரைப்படத்தில்*நடிப்பதற்காக செல்லும்போது**சேலத்தில்*ஒரு நதிக்கரையில் ஓரத்தில்*கதாநாயகி அஞ்சலிதேவி*நடிக்க தயாராகி நிற்கிறார் .. அவருக்காக ஒரு சாரட்*வண்டி தயாராக வந்து நிற்கிறது .நதியின் மறு கரையில்*அஞ்சலிதேவி*இருக்கிறார் .இந்த பக்கத்தில் இருந்து சாரட்*வண்டி உள்ளே போகிறது .இந்த பக்கம் தரையில்*எம்.ஜி.ஆர். அவர்கள் நின்று கொண்டு இருக்கிறார் .சாரட் வண்டி ஆற்றங்கரையில்* நடுவழியில்**நின்றுபோய் விடுகிறது .உடனே எல்லோரும் வந்து வண்டியை*தள்ள முயற்சிக்கிறார்கள் .ஆனால் முடியவில்லை .உடனே எம்.ஜி.ஆர்தானே . அங்கு வந்து ,அனைவரையும் விலகி போக சொல்லி ,மாட்டிக்கொண்டு இருக்கிற சாரட் வண்டியின் சக்கரத்தை ,தன் பலம் கொண்ட*மட்டும் இரு கரங்களால்* தூக்கி தள்ளி விடுகிறார் .அப்போது அவரது புஜங்கள்*மிகவும் பலமாக இருப்பதை பார்த்த இயக்குனர் பிரமித்து போய்விட்டார் .அந்த சக்கரத்தை அப்படியே தூக்கி,வண்டியை*தள்ளி**கொண்டுபோய் அப்படியே*மறுகரையில் அஞ்சலிதேவி நிற்கும் இடத்திற்கு கொண்டு*செல்கிறார் . .பின்னர் சாரட்* ஓட்டுனரை வண்டியில் அமரச்சொல்கிறார் .இந்த காட்சிகளை பார்த்து பிரமித்து போன இயக்குனருக்கு ஒரு காட்சி நினைவுக்கு வருகிறது . புரட்சி கலைவர்*எம்.ஜி.ஆர்.,அஞ்சலிதேவி இருவரும் சந்திக்கும் காட்சியை*வேறு விதமாக படமாக்க நினைத்த*இயக்குனர் ,இதையே*காதலின் தொடக்க காட்சியாக*வைத்து கொள்ள முடிவு செய்து , மறுபடியும் வண்டியை பள்ளத்தில் விழுவது*போல செய்து*,அதை தூக்கி விடக்கூடிய நாயகனாக*மக்கள் திலகம்* எம்.ஜி.ஆர். அவர்களை காட்டி ,அவரது*புஜ*பராக்கிரமத்தை காட்டி அவரது முக பொலிவையும் காட்டி ,அங்கே காதல் அரும்புவது போல காட்சியை*அடிப்படையாக* அமைத்து கொடுத்தது இயக்குனரின் சிந்தனையே என்றாலும் ,அங்கே எம்.ஜி.ஆர். அவர்கள் காட்டிய வீரம், அந்த சக்கரத்தை அவர் தூக்கிய விதம், அந்த அற்புதமான*செயல்*அந்த இயக்குனரையே ஈர்த்தது*என்றால் சாதாரண*மக்களாகிய நம்மை போன்றவர்களுக்கு அந்த ஈர்ப்பானது எப்படி இருக்கும் என்று நினைத்து பாருங்கள் .
ஆகவே, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களிடம் கற்று கொள்ள வேண்டியது*நம்முடைய உடம்பை கட்டு கோப்பாக வைத்து கொள்ள வேண்டும் .முக பொலிவைவெளியே வரும்போது**மிக சிறப்பாக காட்டி கொள்வதற்கு முயற்சி செய்ய வேண்டும் அதில் ஒன்றும் தவறில்லை .நகத்திற்கு பாலிஷ்*போடுவது*வேண்டுமானால் தேவையற்றதாக இருக்கலாம். ஆனால் முகத்திற்கு அழகுபடுத்துவது என்பது ஒரு அத்தியாவசியமான தேவை .அதற்காக*அனைவரையும் கவரும் விதத்தில்*சினிமா நடிகர்*,நடிகை* போல மேக்*அப்*செய்து கொள்ள வேண்டிய தேவையில்லை .தலை முடியை*நன்றாக சீவி, முகத்திற்கு தேவையான அளவு மட்டும் பொலிவை*ஏற்படுத்தி நல்ல செயல்கள் மட்டும் செய்து ,புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். எல்லோருக்கும் முன் உதாரணமாக இருந்திருக்கிறார் . இன்னொரு விஷயம் என்னவென்றால் அவர் நோய் வாய்ப்பட்டு*அப்போல்லோ மருத்துவமனையில் இருந்த நேரத்தில் கூட நீங்கள் அவரை*முகத்தில்*ஷேவ் செய்யாத*தாடியுடன்*பார்த்திருக்க முடியாது .வெளியில் கூட இரண்டுநாள்*முளைத்த தாடியுடன் கூட*பார்த்திருக்க முடியாது .அவரை மருத்துவமனையில் யாரும் சென்று பார்க்க முடியாதவகையில் கட்டுகாவல் கடுமையாக இருந்தது .மருத்துவமனையில் இருந்து நவம்பர் 5ந்தேதி 1984ல் சிகிச்சைக்காக அமேரிக்கா* புறப்படுகிறார் .* அந்த சமயம்*அவர் செல்லுகின்ற விமானம் ஒரு சிறிய* மருத்துவமனையாக மாற்றப்படுகிறது .அனைவரும் பயந்துகொண்டிருந்த நேரம் .நான் மட்டும் எப்படியோ* *கட்டு காவலை*மீறி ,தப்பி, வேறு ஒரு வழியாக சென்று*எம்.ஜி.ஆர். அவர்கள் தங்கியுள்ள அறைக்கு வெளியே நின்று கொண்டேன் .அப்போது ஒரு ஸ்ட்ரெச்சரில் எம்.ஜி.ஆர். அவர்கள் படுத்த நிலையில்*வெளியில் அழைத்து*வரப்படுகிறார் .அப்போது அவருக்கு*சுய*நினைவில்லை என்று சொல்கிறார்கள் .அவர்மீது*போர்வை போர்த்தப்பட்டுள்ளது . அப்போது அவரது*வலது தோள் .மற்றும் புஜங்கள் தெரிகின்றன .அந்த சூழ்நிலையில் கூட*வெளியில் வரும்போது*அந்த போர்வையை*தன்* இடது கையால் இழுத்து கழுத்து*வரையில் போர்த்தியபடி செல்வதை*நான் பார்த்தேன் .அதாவது அந்த நேரத்தில் கூட தன்னுடைய உடம்பு வெளிப்பார்வைக்கு தெரியக்கூடாது என்கிற எச்சரிக்கை உணர்வு இயல்பாகவே,அனிச்சை செயல் என்பார்களே அதுபோல* அவருக்கு இருந்துள்ளது .இவ்வாறு திரு.லியாகத் அலிகான் பேட்டி அளித்தார் .
எம்.ஜி.ஆர். அவர்கள் தன் வாழ்க்கையில் எத்தனையோ விஷயங்களை தான் நினைத்தது போல் நடத்தியவர் .நினைத்ததை எல்லாம் செய்தவர் . அவருக்கு தெரியாத தொழில்நுட்ப விஷயங்களே கிடையாது .எப்படி ஒரு மனிதனுக்கு ஜாதகத்தில் 12 ராசிகள், நட்சத்திரங்கள் இருக்கிறதோ அப்படி திரைப்பட துறையில் 12 தொழில் பிரிவுகள் இருந்தது .அத்தனை தொழில் பிரிவுகளையும் நேரடியாக அறிந்து தெரிந்து வைத்திருந்தார் .அன்னமிட்டகை படத்தில் பி.சுசீலா பாடிய பதினாறு வயதினிலே 17 பிள்ளையம்மா என்ற பாடல் உள்ளது .கவிஞர் வாலி முதலில் அந்த பாடலை 17 வயதிலே 18 பிள்ளையம்மா என்று எழுதி இருந்தார் .எண்* கணிதப்படி முதல் வரிசையில் 17 என்பதின் எண்ணிக்கை 8 வரக்கூடாது என்பதால் அதை மாற்றி 16 வயதினிலே என்று எழுத வைத்தார் எம்.ஜி.ஆர்.***
எம்.ஜி.ஆர். அவர்களுக்கு எண்* கணிதம் தெரியும் . புத்தகங்கள் மூலம் பல விஷயங்கள் தெரிந்து வைத்திருக்கிறார் இங்குள்ள மேதாவிகள் சிலர் சொல்கின்றனர் அவர் வெறும் நடிகர் என்று .அவர் நடிகர் மட்டுமல்ல .அவரது ராமாவரம் தோட்டத்து இல்லத்தில் உள்ள நூலகத்தில் அந்த காலத்திலேயே*15 லட்ச ரூபாய் அளவிற்கு புத்தகங்கள் இருந்தன உலகத்தில் உள்ள சிறந்த ,அரிய புத்தகங்களை எல்லாம் வாங்கி* குவித்து வைத்தவர் . அதில் சில முக்கிய புத்தகங்களை தன்* உதவியாளரான ரவீந்தரை படிக்க சொல்லி விஷயங்களை கற்று இருந்தார் .அந்த ரவீந்தர்தான் எம்.ஜி.ஆரை பற்றி ,கோடி மாலைகள் தாங்கிய தோள்கள் எம்.ஜி.ஆருடையது* என்ற* நூலை எழுதினார் எம்.ஜி.ஆர். ஒரு வேதநாயகம் என்ற நூலையும் எழுதியுள்ளார் . எம்.ஜி.ஆர் என்கிற மாமனிதர்*.இந்த மண்ணில்* வாழ்ந்ததனால் பல மேதாவிகளால் நினைவுபடுத்தப்படுகிறார் .* அதனால் அவர் ஒரு வாழ்க்கை, ஒரு தத்துவம் ,ஒரு பாடம் , ஒரு படிப்பினை , ஒரு பல்கலை கழகம் என்பதை புரிந்து கொண்டவர்கள் வெற்றிபெற்று வருகிறார்கள் .மற்ற தகவல்கள் அடுத்த அத்தியாயத்தில் தொடரும் .
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம் .
----------------------------------------------------------------------------------
1.உழைக்கும் கைகளே, உருவாக்கும் கைகளே - தனிப்பிறவி*
2.என்னதான் நடக்கும் நடக்கட்டுமே - பணத்தோட்டம்*
3.அன்னமிட்டகை ,நம்மை ஆக்கிவிட்ட கை - அன்னமிட்டகை*
4.எம்.ஜி.ஆர். - லதா உரையாடல் - சிரித்து* வாழ வேண்டும்*
5.திரு. கா. லியாகத் அலிகான் பேட்டி*
6.பதினாறு வயதினிலே _ அன்னமிட்டகை*
7.எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா உரையாடல் -குமரிக்கோட்டம்*
-
ஏற்றுக்கொண்ட பதவிக்கெல்லாம் பெருமையை தந்தவர் நம் இதயதெய்வம் ஆவார்..........
தலைவர் நடிகர் சங்க தலைவர் ஆக இருந்த போதே சங்கத்துக்கு என்று இடம் வாங்க பட்டு அதன் பின் அவர் ஆற்றிய நன்மைகள் அனைவரும் அறிவோம்.
இதை பற்றி தனி பதிவு ஆதாரங்கள் உடன் ஒருநாள்....கலை துறையினருக்கு வாரத்தில் 2 வது சண்டே விடுமுறை.
படப்பிடிப்புகள் அன்று நடக்காது...முழு ஓய்வு அன்று அந்த துறை சார்ந்த அனைவருக்கும்..
தலைவர் ஒருமுறை யோசித்து அந்த விடுமுறை நாள் அன்று அனைத்து நடிகர் நடிகையர் துறை சார்ந்தவர் அனைவரும் நடிகர் சங்க வளாகத்தில் கூட ஏற்பாடு செய்தார்.
தலைவர் ஏற்பாடு என்றால் சும்மாவா..ம்
காலை 7.30 மணியில் இருந்து இரவு 9.30 மணிவரை நிகழ்வுகள்.
விடுமுறை தினம் அன்று அவர்கள் வெளியே போய் அவர்கள் விரும்பும் பொருள்கள் வாங்குவது வழக்கம்.
ஆனால் அன்று சங்கம் வந்த போது சென்னையில் இருந்த அனைத்து முன்னணி நிறுவனங்களும் அங்கே ஸ்டால் அமைத்து இருந்தன.
துணிக்கடை நகைக்கடை விதம் விதம் ஆன சைவ அசைவ உணவே வகை அரங்கங்கள்....ஏதோ ஒரு மினி பொருள்காட்சி மைதானம் போல.
வந்து சேர்ந்த அத்துணை பேரும் இது என்ன மாயாஜாலம் எப்படி இப்படி என்று வியக்க.
அனைத்து வித விளையாட்டு போட்டிகள் ...ஆண்களுக்கு. ஜெமினி அவர்கள் தலைமையில் கிரிக்கெட் குழு, ஹாக்கி குழு...
கயிறு இழுக்கும் போட்டி சாக்குக்குள் கால்கள் நுழைத்து ஓடும் போட்டி
கோலம் போடுதல் போட்டி... விளக்கை கையில் கொண்டு அணையாமல் அடுத்த பக்கம் கொண்டு செல்லும் போட்டி.
பேச்சு போட்டி கவிதை போட்டி அனைத்தும் இருந்தன அன்று.
சிவாஜி ,எஸ்.எஸ்.ஆர்.மேஜர்...குணசித்திர நடிகர்கள் கோபால கிருஷ்ணன்....நாகேஷ்.
சந்திரபாபு...தங்கவேலு. ரங்காராவ்...சுப்பையா அவர்கள்...
சாவித்திரி ஜமுனா சரோ அஞ்சலிதேவி இன்னும் பல முன்னணி நடிகைகள்.
அனைவரும் கலந்து கொண்டு ஒரு குடும்பம் போல அன்று இணைந்து அனைவரும் அன்று இரவு வீடு திரும்பும் போது...
போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகளை சிவாஜி அவர்கள் கரங்கள் கொண்டு வழங்க வைத்து.
வந்த அனைத்து துறை சார்ந்த ஒருவர் விடாமல் பணம் நகை புடவை மற்ற பரிசுகள் அனைத்தையும் கொடுத்து அவர்களை தேடி தேடி வந்து உபசரித்து..
அவர்கள் அனைவரும் அன்று கலைந்து சென்ற பின் அனைத்து வகை செலவுகளுக்கும் பணத்தை அரங்க நிர்வாகிகளுக்கு கொடுத்து விட்டு..
இரவு 11 மணி அளவில் வீடு திரும்பி மறு நாள் காலை படப்பிடிப்புக்கு கிளம்புகிறார் நம் தலைவர்.
அடுத்த நிகழ்வுகளுக்கு கொடுக்க பணம் வேண்டுமே அதை சம்பாதிக்க அதிகாலை புறப்படுகிறார் நம் பொன்மன செம்மல்.
அது போன்ற ஒரு நிகழ்வு இன்று வரை நடிகர் சங்கத்தில் இன்று வரை நடக்கவில்லை..இனிமேலும் நடக்க வாய்ப்பு இல்லை.
ஏன் என்றால் அந்த தெய்வம் இன்று இங்கு இல்லை.
வாழ்க தலைவர் புகழ்.
நன்றி தொடரும்
உங்களில் ஒருவன்...
நடிகர்களில் நாம் பார்த்த முதல் மனிதர் தலைவர் மட்டுமே...
படத்தில் எங்கள் தங்கம் படத்தின் 100 வது நாள் கேடயம்...இதுவும் அடுத்தவருக்கு நடித்து கொடுத்ததே............Mn...