Naan paakkuRathukku munaleye NOV pannittar-nnu ninaikkuren ..So Your appreciation goes to NOV :)Quote:
Originally Posted by groucho070
Printable View
Naan paakkuRathukku munaleye NOV pannittar-nnu ninaikkuren ..So Your appreciation goes to NOV :)Quote:
Originally Posted by groucho070
நடிகர் திலகம் ஐயா ! உங்கள் பிறந்தநாளில் மட்டுமல்ல ,என்றுமே உம் மாறாத நினைவுகளோடு :notworthy:
வருஷம் போனால் என்ன; மெல்ல
வயசும் ஆனால் என்ன
ரசிகனின் பார்வையில் என்றும்;
நீ நிரந்தரமானவன் அன்றோ !
எத்தனை காலம் ஆனாலும்
எத்தனை பேர்கள் வந்தாலும்
நடிப்புலக சிம்மாசனம் என்றும்
நடிகர் திலகம் உன் ஒருவனுக்கே
மறக்க முடியாது உங்களை
மாற்ற முடியாது எங்களை
என்றென்றும் உங்கள் நினைவினில்
அன்புடன்
WISH YOU ALL A VERY VERY HAPPY SIVAJI JAYANTHI !!!
Ardent Devotee,
Pammalar.
[html:6fdcb003fc]
http://i18.photobucket.com/albums/b126/cdjm/NT2-1.jpg
[/html:6fdcb003fc]
நடிப்புலக சக்கரவர்த்தி 81-வது பிறந்த தினம்.
வாழ்க ஐயா நின் புகழ்!!
Let me guess the appearances in the above still.
1. Kai kodukkum ddeivam
2. VPK
3. Parasakthi
4. ?
5. Yaaradi nee mohini (UP)
6. actual later day still?
7. Gouravam
8. Gouravam
9. Deiva Magan
10. TM
11. ?
12. ?
13. Andha Naal
14. ?
15. Thiruvarutselvar
NOV,
4. Manohara?
6. During Devar Magan
11. Pachai Vilakku or Anbu Karanggal.
Not sure about others you left blank. Need help from experts.
4.மனோகரா
10. தில்லானா மோகனாம்பாள்
11. பச்சை விளக்கு
12. உத்தம புத்திரன்
Congrats Rakesh!
what are you doing here? and not at the registration office? :think:
Great date to mark your important day in life :D
Sorry, bro, actually tomorrow. :PQuote:
Originally Posted by NOV
Great Joe. 14?Quote:
Originally Posted by joe
:oops: your PM said today :confused2:Quote:
Originally Posted by groucho070
naa vera Hubbers Events thread la pOttuttEn :D
கல்யாணியின் கணவன்Quote:
Originally Posted by groucho070
:oops: Sorry birather, let's celebrate today as what it is, the birthday of one of the greatest film actors in the world!!!! :DQuote:
Originally Posted by NOV
உலகெங்கிலுமுள்ள் நடிகர்திலகத்தின் ரசிகப்பெருமக்கள் அனைவருக்கும் 'சிவாஜி ஜெயந்தி' நல்வாழ்த்துக்கள்.
எங்கள் உயிர் இருக்கும் வரை உன் நினைவிருக்கும்.
கலைதாயின் முதல்மகன் புகழ் வாழ்க
உலகெங்கும் உள்ள கோடிக்கணக்ககான சிவாஜி ரசிகர்களின் சார்பிலும் நம் இணைய தளம் சார்பிலும் நடிகர் திலகத்திற்கு நமது பிறந்த நாள் வணக்கங்ககள்.
ராகவேந்திரன்
'பராசக்தி' முதல் 'உயர்ந்த மனிதன்' வரை..! - பஞ்சு
பதினாறு ஆண்டுகளுக்கு முன், முதன்முதலாக 'பராசக்தி' படத்தில் நடித்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 125-வது படமாக 'உயர்ந்த மனிதன்' வெளிவருகிறது. 'பராசக்தி' பட மாக்கப்பட்ட ஏவி.எம். ஸ்டுடி யோவில்தான் 'உயர்ந்த மனித னும்' உருவாகி இருக்கிறது. பராசக்தியை டைரக்ட் செய்த இரட்டையர்கள் கிருஷ்ணன் - பஞ்சுதான் இந்தப் படத்தையும் டைரக்ட் செய்திருக்கிறார்கள். திரு.பஞ்சு, சிவாஜி கணேசனைப் பற்றி இங்கே சொல்கிறார்:
''முதன்முதலாக நாங்கள் சிவாஜி கணேசனைப் பார்த்தது 1948-ம் வருஷத்தில். அதற்கு முன்பே 'சிவாஜி'யாக நடித்து விட்டபோதிலும், அப்போது அவர் வெறும் வி.சி. கணேசன் தான். என்.எஸ்.கே. நாடக சபா வில் மனோகரா நாடகத்தில் 'விஜயாள்' வேஷம் போடுவார். அந்த நாடகத்தில்தான் அவரைப் பார்த்தோம். அவரது நடிப்பில் அப்போதே ஓர் அலாதித் தன்மை பளிச்சிட்டது. பிற்கா லத்தில் அவர் திரை உலகில் ஒரு சிறந்த நடிகராக வருவார் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதற்கான அறிகுறிகள் அவரது நடிப்பில் இருந்தன. அப்போதே அவரைச் சினிமா உலகுக்குக் கொண்டுவர விரும்பினோம். ஆனால், அதற்குச் சந்தர்ப்பம் சரியாக இல்லை. 1950-ல்தான் எங்களுக்கு அந்தச் சந்தர்ப்பம் கிடைத்தது - பராசக்தி படம் மூலமாக.
'பாவலர்' பாலசுந்தரம் எழுதி, நாடகமாக நடிக்கப்பட்டு வந்த பராசக்தியைத் திரைப் படமாக்க நினைத்தபோது, யாரைக் கதா நாயகனாகப் போடுவது என்ற பிரச்னை எழுந்தது. எங்களுக்கு கணேசனைப் போட வேண்டும் என்ற எண்ணம். தயாரிப்பாளர் களுக்கும் அப்படித்தான். ஆனால், ஒரு சிலர் வேறு நடிகர்களைப் பற்றிச் சொன்னார்கள். கே.ஆர்.ராமசாமியின் பெயரும் அடிபட்டது. கடைசியில் 'அண்ணா'விடம் போய், அவரு டைய யோசனையைக் கேட்டோம். 'உங்கள் எண்ணம்தான் சரி! கணேசனையே போடுங் கள். அவர் நன்றாக நடிப்பார். தமிழ் சினிமா உலகுக்கு ஒரு புதிய நடிகர் கிடைத்த மாதிரியும் இருக்கும்' என்றார் அண்ணா.
அப்போது கணேசன் பெரிய குளத்தில் 'சக்தி நாடக சபா' நாடகங்களில் நடித்துக்கொண்டு இருந்தார். தினசரி நாடகம். 'டெஸ்ட்'டுக்கு ரயிலில் வந்து போவதென்றால் நாடகங்கள் பாதிக்கப்படும். எனவே, பெரிய குளத்திலிருந்து திருச்சி வரை காரிலும், அங்கிருந்து சென் னைக்கு விமானத்திலும் அழைத்து வந்து, மறுபடியும் விமானத்திலேயே அனுப்பி வைத்தோம். உயரப் பறந்து வந்து, சினிமா உலகுக்குள் நுழைந்து, உயர்ந்த இடத்தைப் பிடித்துவிட்ட நடிகர் அவர்'' என்றார் பஞ்சு.
சிவாஜியின் நடிப்பு, கிருஷ் ணன்-பஞ்சுவின் டைரக்ஷன், கலைஞர் கருணாநிதியின் அரு மையான வசனங்கள் எல்லாம் சேர்ந்ததால், பராசக்தி படம் 'ஓஹோ'வென்று ஓடியது. சினிமாவில் வரும் பண்டரிபாய் வேஷம் நாடகத்தில் இல்லை. கருணாநிதியின் புதிய படைப்பு அது. நாடகத்தின் கதைப் போக்கில் இருந்த குறைகளைச் சரி செய்வதற்காக, மற்றவர்க ளின் சந்தேகங்களுக்கு விளக்கம் சொல்வதற்காக, கருணாநிதி அந்தப் பாத்திரத்தைச் சிருஷ் டித்தாராம்.
''இப்போது சிவாஜி நடிப்பில் அலாதியான மெருகு ஏற்பட் டிருக்கிறது. ஒன்றைக் கவனிக்க வேண்டும். பராசக்தியைப் போல் 'டயலாக்' படங்களுக்கு அப்பொழுதும் சரி, இப்பொழு தும் சரி, அப்படித்தான் நடிக்க வேண்டும். இப்போது 'டயலாக்' பாணிதான் மாறிவிட்டதே! ஆனால், இந்தப் பாணியில் கூட சிவாஜிக்குத்தான் வெற்றி. ஏனெனில் எந்தெந்த வசனத்தை எப்படியெப்படி பேசவேண்டும் என்று அவருக்கு நன்றாகத் தெரியும். உலகில் எந்த நடிகரை எடுத்துக்கொண்டாலும், சிவா ஜியைப் போல் யாரும் இவ்வ ளவு 'வெரைட்டி'கள் செய்த தில்லை. 'வெரைட்டி' மட்டு மல்ல, ஒரே வேஷத்தைப் பல கோணங்களில், பலவிதமாகச் செய்யக்கூடியவர் சிவாஜி. உயர்ந்த மனிதன் படத்தில் இளைஞராகவும், அப்பாவாக வும் வருகிறார் கணேசன். அப்பா வேஷம் அவருக்குப் புதிதல்ல. மோட்டார் சுந்தரம் பிள்ளை, எங்க ஊர் ராஜா ஆகிய படங்களிலும் அப்பா வேஷம் போட்டிருக்கிறார். ஆனால், இந்த மூன்று அப்பா வேஷங்களிலும் மூன்று வித மான 'அப்பா'க்களைக் காட்டி யிருக்கிறார். சிவாஜியைத் தவிர வேறு யாராலும் அதைச் செய் திருக்கமுடியாது.
உயர்ந்த மனிதனில் தீப் பிடித்து எரிகிற ஒரு வீட்டுக்குள் போக வேண்டும். தயங்காமல் போயே விட்டார். கை கால்களி லிருந்த ரோமங்கள் எல்லாம் அனலில் கருகிவிட்டன. 'இந்த இடத்தில் உங்கள் முகத்தில் கொஞ்சம் கரி இருக்கவேண் டும்' என்றால், 'அவ்வளவு தானே!' என்று, அணைந்தும் அணையாமலும் இருக்கும் ஒரு கொள்ளியிலிருந்து கரியை எடுத்துப் பூசிக் கொள்வார். வேஷத்தில் அவருக்கு அவ்வ ளவு ஈடுபாடு!'' என்றார் பஞ்சு.
நன்றி : விகடன்
Dear Joe Sir,
Your prompt repro of vikatan reminiscences really makes us feel great. Thank you Sir.
எல்லை தாண்டிய பயங்கரவாதம் ஒழிகிறதோ இல்லையோ, எல்லை தாண்டிய சிவாஜி வாதத்தை யாராலும் அழிக்க் முடியாது. தமிழ் தாண்டி தெலுங்கு தேசத்தில் நடிகர் திலகத்தின் திரைப்ப்டங்களைப் பற்றிய விவரங்களைக் கீழே கண்டுள்ள இணைப்பில் காண்க.
http://www.justtollywood.com/profiles.php?pid=00004996
A tribute by a web blog:
http://www.musicquencher.com/blog/
Raghavendran
:notworthy:
தமிழ்த்திரையுலகின் முடிசூடா மன்னனே நெஞ்சிருக்கும்வரை உன் நினைவிருக்கும்.
WISH YOU ALL A VERY HAPPY SIVAJI JAYANTHI
நடிப்புக்கு இலக்கணம் கண்ட நாயகனே, உங்களின் 81-வது பிறந்தநாளில், உங்கள் நினைவைப்போற்றுகிறோம்.
810-வது பிறந்தநாளிலும் உங்கள் நினைவு போற்றப்படும். உங்கள் படைப்புகள் அதைத்தாண்டியும் பாதுகாக்கப்படும்.
:clap: Naan Kadavul dialogue comes to mind.
Grouch bro's article in behindwoods. Congrats bro.
Bro ..Naan sollala :D :DQuote:
Originally Posted by Nerd
Bala,
Very Happy to see NT avatar from you :thumbsup:
But Behindwoods took the incomplete content from this thread instead of full post Groucho's Blog :oops:
Groucho,
Your article @ indiaglitz
http://www.indiaglitz.com/channels/t...cle/50444.html
The 81st birthday celebrations of NT was conducted in a grand manner. As mentioned earlier in the columns, Makeup man L.Muthhapa, P.Suseela, PBS and SPB were honoured. A special postal day cover on KV Mahadevan was released. The IAS and IPS training institution Focus Academy was given a grant by Sivaji- Prabhu charities.
[html:b9c97a7275]
http://i18.photobucket.com/albums/b1...Mahadevan2.jpg[/html:b9c97a7275]
The book "Vettaikku Vandha Singam" - reminiscences of the hunting expeditions that NT undertook as told by his friend Muthumanikam was released.
Detailed review of the function soon.
Regards
ஜோ,
11 -பச்சை விளக்கு அல்ல. கவனித்து பாருங்கள் - ஆலய மணி.
ராகேஷ்,
Congrats for both. Article tie up and Life tie up.
அன்புடன்
Coming Sunday, unveiling of NT's statue in Madurai :thumbsup:
Y'day, Mega TV gave a tremendous treat to all NT fans by playing NT songs continuously. Few songs which I happened to watch,
Neeyum Naanuma
Un Kannil Neer vazhindhal
Ullam rendum...(Sivagamiyin selvan)
Kaetadhum koduppavane
Ammama thambi endru nambi...
Nadaya idhu nadaya
Devane ennai parungal
Chinnanjiriya vannaparavai
A few thoughts came to my mind....
In Neeyum naanuma, from Gowravam - the famous chess board scene where NT would be the King & Prince - in the back ground, TMS would be singing for which NT will enact only thru his hand gestures, eyes & facial expressions, without opening his mouth. Was it because he is playing the role of a chess board coin ??? !!! (Many would have already noticed this, but I just wanted to share it). And, every time I watch Gowravam, I get a new thought - appadi nadichittu poitar andha padathula. :notworthy:
Next, Un kannil neer vazhindhal.....NT would be seated in a easy chair & Padmini will be sitting near his feet. In a low angle shot, NT would bend down & rest his chin on Padmini's head.
The famous bridge shot in Manhattan is hailed as an iconic shot and so is the shot where Dustin Hoffman is shown under the leg of Anne Bancroft in The Graduate. Adhu avanga padam, avanga kondaduranga and it's so happy to know that people really appreciate such great moments in Cinema.
Do we lack such film appreciation ?? Definitely not. The above mentioned shot from Vietnam Veedu is also an iconic shot IMO. And the sillhoutte scene from Andha Naal is great film noir. The list goes on & on.
Not just NT films, even the climax shot of Kalyana Parisu is iconic.
The very opening scene of Super Star in Apoorva Ragangal (where he opens the gate),
kathi, kadhari, kutti karanam poatu irudhiyil manam pirazhndu Viji Viji endru viralai madakki paridhabamaga parkum Seenu,
Vayil vetrilai paaku saaru vazhiya, parattaikku kai amukki vidum sappani...
All these are iconic shots IMO. Great writers in our hub should register such wonderful moments in famous websites. Popular magazines like Vikatan, Kumudham etc., should bring out special Cinema editions replete with such info's - probably, 2 pre 80 editions & 2 post 80 editions.
Coming Sunday, unveiling of NT's statue in Madurai :thumbsup:
Y'day, Mega TV gave a tremendous treat to all NT fans by playing NT songs continuously. Few songs which I happened to watch,
Neeyum Naanuma
Un Kannil Neer vazhindhal
Ullam rendum...(Sivagamiyin selvan)
Kaetadhum koduppavane
Ammama thambi endru nambi...
Nadaya idhu nadaya
Devane ennai parungal
Chinnanjiriya vannaparavai
A few thoughts came to my mind....
In Neeyum naanuma, from Gowravam - the famous chess board scene where NT would be the King & Prince - in the back ground, TMS would be singing for which NT will enact only thru his hand gestures, eyes & facial expressions, without opening his mouth. Was it because he is playing the role of a chess board coin ??? !!! (Many would have already noticed this, but I just wanted to share it). And, every time I watch Gowravam, I get a new thought - appadi nadichittu poitar andha padathula. :notworthy:
Next, Un kannil neer vazhindhal.....NT would be seated in a easy chair & Padmini will be sitting near his feet. In a low angle shot, NT would bend down & rest his chin on Padmini's head.
The famous bridge shot in Manhattan is hailed as an iconic shot and so is the shot where Dustin Hoffman is shown under the leg of Anne Bancroft in The Graduate. Adhu avanga padam, avanga kondaduranga and it's so happy to know that people really appreciate such great moments in Cinema.
Do we lack such film appreciation ?? Definitely not. The above mentioned shot from Vietnam Veedu is also an iconic shot IMO. And the sillhoutte scene from Andha Naal is great film noir. The list goes on & on.
Not just NT films, even the climax shot of Kalyana Parisu is iconic.
The very opening scene of Super Star in Apoorva Ragangal (where he opens the gate),
kathi, kadhari, kutti karanam poatu irudhiyil manam pirazhndu Viji Viji endru viralai madakki paridhabamaga parkum Seenu,
Vayil vetrilai paaku saaru vazhiya, parattaikku kai amukki vidum sappani...
All these are iconic shots IMO. Great writers in our hub should register such wonderful moments in famous websites. Popular magazines like Vikatan, Kumudham etc., should bring out special Cinema editions replete with such info's - probably, 2 pre 80 editions & 2 post 80 editions.
Last week saw " Sivagamiyin Selvan" for the first time, in TV. Irrespective of the box office results, I would say that it is one of the best re-makes ever made. The film had the same feel as that of the original and also succeeded in bringing out an authenticity.
Rajesh Khanna was a youth icon at that time and it was a big challenge for NT to step into that role (someone like Sivakumar could have also done that role). But then, for an actor like NT challenges are a way of life and he came out with flying colours as usual. For those who have not seen the original, they would definitely enjoy NT's performance.
Vanishree was amazing. Sharmila Tagore played the role effortlessly and VS was eqaully stunning & did a great job.
Now for the songs. Every one know that songs of Aradhana are evergreet hits. And, kudos to our Mellisai Mannar who created eqaully wonderful & soulful songs.
Meri sappunon ki rani - ullam rendum (it just got into my mind that i started continuously humming it)
chanda he tu meri sooraju hai too - en rajavin roja mugam....
great MSV ayya !!!
only Roopu there masthana was a dissapointment.
On the whole, it was a great re-make which seems to be very original.
எஸ்பிபி, சுசிலா உட்பட 4 பேருக்கு சிவாஜி விருது
பின்னணி பாடகர்கள் எஸ்பி பால்சுப்ரமணியம், பி.சுசிலா, பிபி சீனிவாஸ் உட்பட நான்கு பேருக்கு இந்த ஆண்டுக்கான சிவாஜி விருது வழங்கப்பட்டது.
நடிகர்திலகத்தின் 81வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று இரவு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த விழாவில் இந்த விருது வழங்கப்பட்டது.
இந்த விருதுகளை ஆண்டுதோறும் சிவாஜி கணேசன் பிறந்தநாள் அன்று சிவாஜி-பிரபு அறக்கட்டளை தமிழக திரையுலக சேர்ந்த 4 பேருக்கு வழங்கி வருகிறது.
நேற்று நடந்த தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தலைமை தாங்கினார். இயக்குனர்கள் பி.வாசு, எஸ்பி முத்துராமன், நடிகர்கள் சிவகுமார், விஜயகுமார், ராஜேஷ், தியாகு, சின்னிஜெயந்த் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.
சிவாஜி மூத்த மகன் ராம்குமார் வரவேற்று பேசினார். பிரபு நன்றி கூறினார்.
இந்த ஆண்டுக்கான விருதுகள் பின்னணி பாடகர் பிபி சீனிவாஸ், எஸ்பி பாலசுப்ரமணியம், பாடகி பி.சுசிலா மற்றும் சிவாஜின் மேக்கப் மேன் முத்தப்பா ஆகியோருக்கு வழங்கப்பட்டது. பரிசுகளை ராம்குமார், பிரபு வழங்கினர்.
மறைந்த இசையமைப்பாளர் கே.வி.மகாதேவனின் சிறப்பு தபால் உறையை தமிழ்நாடு அஞ்சல் துறை தலைவர் த.மூர்த்தி வெளியிட்டார். அதை கே.வி.மகாதேவனின் மகன் கண்ணன் பெற்றுக்கொண்டார்.
விழாவில் சிவாஜி குறித்து அவரது நெருங்கிய தோழரும், சம்பந்தியுமான முத்தமாணிக்கம் எழுதிய 'வேட்டைக்கு வந்த சிங்கம்' என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. அதை தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் ராமன் பெற்றுக்கொண்டார்.
http://thatstamil.oneindia.in/movies...n-chennai.html
....and Mellisai Mannar did not touch even a single tune from Aradhana, he done it all in his own style.Quote:
Originally Posted by rangan_08
I also like 'மேள தாளம் கேட்கும் காலம் விரைவில் வருக வருக என்று பெண்பார்க்க வந்தேனடி' which replaced 'kunku- nA-rahE'
'எதற்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திரு மகளே' was sung by Mellisai Mannar MSV, far better than S.D.Burman, who sung the Hindi version.
'எத்தனை அழகு கொட்டிக்கிடக்குது' which comes in the place of roopu-tErA-masthAnA' also sung nicely by SPB, eventhough not attained as Hindi number. That complete song in Sivakamiyin Selvan was shot in a single take, without any cut... Amazing CVR.
தூரதர்ஷன் 'பொதிகை' தொலைக்காட்சியில், நடிகர்திலகத்தின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்றிரவு 9.30 முதல் 10 வரை சிறப்புநிகழ்ச்சி ஒளிபரப்பானது. பல திரையுலகப்பிரமுகர்கள் கலந்துகொண்டு நடிகர்திலகத்துடனான தங்கள் அனுபவங்கள் சிலவற்றைப் பகிர்ந்துகொண்டனர்.
கதை வசனகர்த்தா ஆரூர்தாஸ் தான் பணியாற்றிய சிலபடங்களில் தனக்கு நடிகர்திலகத்துடன் ஏற்பட்ட அனுபவங்களைச்சொன்னார்.
இயக்குனர்திலகம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், தனது 'கைகொடுத்த தெய்வம்' படத்தின் ஒரு முக்கிய காட்சி பற்றி விவரித்தார். நடிகர்திலகத்துக்கும் கே.ஆர்.விஜயாவுக்குமிடையில் சிலர் அவதூறு பேசுவதையறிந்து, அவர் எஸ்.எஸ்.ஆர். வீட்டை விட்டு வெளியேற முடிவெடுக்கும் காட்சி. அதை தான் ஒரு வாரமாக யோசித்து, ஒரு இரவு முழுக்க உட்கார்ந்து எழுதி, நடிகர்திலகத்திடம் விவரிக்க, அவரோ 'நான் இந்தக்காட்சியில் எப்படி பெர்ஃபார்ம் பண்ணனும்னு யோசிக்க ஒரு இரவு அவகாசம் கொடு' என்று கேட்டாராம். அதேபோல, இரவுமுழுக்க அந்தக் காட்சியை ஸ்டெடி பண்ணியவர், மறுநாள் காலையில் வந்ததும் ஒரே மணி நேரத்தில் அக்காட்சியை பிரமாதமாக நடித்து 'ஓ.கே' பண்ணிட்டாராம். சொன்னதோடு அல்லாமல் கே.எஸ்.ஜி.அந்தக்காட்சியையும் ஒளிபரப்பினார். வாவ்.... என்ன ஒரு அற்புதமான பெர்ஃபாமென்ஸ். நடிகர்திலகம் மட்டுமல்ல, இலட்சிய நடிகரும், புன்னகை அரசியும்கூட அக்காட்சியில் பிரமாதப்படுத்தி விட்டனர்.
ஒளிப்பதிவு இயக்குனர் பி.என்.சுந்தரம் தன்பங்குக்கு, 'ஞான ஒளி' படத்தில் வரும் 'தேவனே என்னைப்பாருங்கள்' பாடலில் நடிகர்திலகத்தின் பங்களிப்பை சிலாகித்துப் பேசியதுடன் நடிகர்திலகத்துக்கும், மேஜருக்கும் இடையே நடக்கும் போட்டாபோட்டி விவாதத்துடன் துவங்கி அப்பாடலும் ஒளிபரப்பப்பட்டது. இதெல்லாம் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்குமா எனா?.
சகாப்த நடிகை மனோரமா, தான் 'ராஜா ராணி' படத்தில் கண்டு வியந்த சேரன் செங்குட்டுவன் நாடகக்காட்சியில் அறுபத்திரண்டு பக்க வசனத்தை ஒரே டேக்கில் நடிகர்திலகம் பேசி நடித்ததைச் சொல்லி ஆச்சரியப்பட்டதுடன், அக்காட்சியை ஒளிபரப்பி பார்த்தவர்களையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தனர்.
பொதிகைக்கு நன்றி.
அதுபோல, ஜெயா தொலைக்காட்சியின் 'திரும்பிப்பார்க்கிறேன்' நிகழ்ச்சியில் இவ்வாரம் தனது அனுபவங்களை அசைபோடும், இயக்குனர் திரு. ஏ.சி.திருலோகச்சந்தர் நேற்றைய நிகழ்ச்சி முழுக்க நடிகர்திலகத்துடன் பணியாற்றிய அனுபவங்களை அழகாக எடுத்துச்சொன்னார். அதிலும் 'தெய்வமகன்' படத்தில் மூன்று பேரும் பங்குபெறும் அந்த 'ப்ளாங்க் செக்' காட்சி அருமையோ அருமை.
மெகா தொலைக்காட்சியின் 'அமுதகானம்' பகுதியில் நடிகர்திலகத்தின் பிறந்தநாளை முன்னிட்டு, அப்பகுதியைத்தொகுத்து வழங்கும் ஆதவன், நடிகர்திலகம் பற்றிய சிறப்புச்செய்திகளுடன், முழுவதும் நடிகர்திலகத்தின் பாடல்களையே ஒளிபரப்பி சிறப்பு சேர்த்தார். (என்னென்ன பாடல்கள் என்பதை நண்பர் மோகன் ஏற்கெனவே பட்டியலிட்டுவிட்டார்).
ஆண்டுக்கொருமுறை நினவுகூர்ந்தால் போதாது, தொலைக்காட்சிகள் அவரை அணுதினமும் நினைவுகூற வேண்டும் என்ற கோரிக்கையை சமர்ப்பிக்கிறோம்.
வாழ்க நடிகர்திலகத்தின் அழியாப்புகழ்...!!.
மோகன்,
வியட்நாம் வீடு படத்தில் உன் கண்ணில் நீர் வழிந்தால் பாடலில் வரும் அந்த ஷாட்டைப் பற்றிய வர்ணனை அருமை. உங்கள் ஆதங்கம் உண்மையும் கூட.
சிவகாமியின் செல்வன் படத்தைப் பற்றி நீங்கள் சொல்லியிருந்ததும் உண்மையே. எம்.எஸ்.வி அவர்கள் மிக அற்புதமாக இசை அமைத்திருந்தார். நிச்சயமாக அந்த படம் கமர்ஷியலாக வெற்றி பெற்ற படம்தான். இன்னும் சொல்லப் போனால் இலங்கை போன்ற நாடுகளில் மிகப் பெரிய வெற்றி பெற்று பல போட்டி படங்களின் வசூலை எல்லாம் தூக்கி சாப்பிட்ட படம். கோரா காகஸ் வெகு இனிமையான் பாடல். ஆனால் இனியவளே என்று பாடி வந்தேன் அதற்கு சற்றும் சளைத்ததல்ல.[புலமை பித்தனின் வார்த்தை ஜாலங்கள் ரசிக்கும்படியாக இருக்கும்].சுருக்கமாக சொன்னால் பெரிய வெற்றி பெற்றிருக்க வேண்டிய படம்.
அன்புடன்
நடிகர் திலகத்தின் பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகள்
நடிகர் திலகத்தின் 81-வது பிறந்த நாள் விழா சிவாஜி பிரபு அறக்கட்டளை சார்பில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கில் [நேற்று] அக்டோபர் 1 அன்று நடைபெற்றது. அந்த விழா துளிகளில் சில.
நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய திரு. மோகன்ராம் முதலில் வந்து இறை வணக்கம் என்று சொன்னவுடன் எழுந்து நின்ற அனைவருக்கும் ஒரு இன்ப அதிர்ச்சியாக மேடையின் இருபுறம் வைக்கப்பட்டிருந்த பெரிய திரைகள் வெளிச்சம் பெற நடிகர் திலகம் திரையில் தோன்றி பித்தா பிறை சூடி என்ற பாடல் பாட [திருவருட்செல்வர் படத்தில் இடம் பெற்ற] விழா இனிதே துவங்கியது. தனது முன்னுரையில் மோகன்ராம் நடிகர் திலகத்தைப் பற்றிய ஒரு உரைநடை செய்யுளை வாசித்தார். முதல் பாதியில் நடிகர் திலகத்தின் குண நலன்களை சொன்ன அந்த படைப்பு ["அரசியல் கட்சி தந்த காசு அல்ல, அந்த கட்சி தந்த அதிகார காசு அல்ல, அதிகாரம் மூலம் செய்த ஊழல் காசு அல்ல உன் உழைப்பினால் வந்த காசை வலது கை கொடுப்பதை இடது கைக்கு தெரியாமல் கொடுத்தவன் நீ" என்ற வரிகளுக்கு அரங்கம் ஆர்ப்பரித்தது]. அதன் இரண்டாம் பாதி இதுவரை அறக்கட்டளை மூலம் கௌரவிக்கப்பட்டவர்களை அவரவர்களின் சிறப்புகளோடு [(உ.ம்) இறுதிவரை நிறம் மாறாமல் நிழல் போல் இருந்த வி.கே.ஆர்] பட்டியலிட்டது. இதை தயாராக்கியது நடிகர் திலகத்தின் தீவிர ரசிகரான திரு.கணேசன் [கட்டபொம்மன் விழாவிலும் இவர் கவிதை இடம் பெற்றது].
வரவேற்புரையாற்ற வந்தார் ராம்குமார். இந்த பிறந்த நாள் விழாவைப் பற்றியும் இந்த அறக்கட்டளை மூலம் செய்யப்படும் நலத்திட்டங்களை பற்றியும் சொல்ல ஆரம்பித்தவர் அதன் ஆரம்பம் என்னவென்பதை சொன்னார். கலையுலக முன்னோடிகளுக்கு நினைவு தபால்தலை, தபால் உறை வெளியிடுதல் என்பது நடிகர் திலகம் இருக்கும் போதே தொடங்கிவிட்ட போதிலும் அவர் இறந்த பிறகு அதை பெரிய அளவில் செய்ய சொன்னதே மங்கேஷ்கர் சகோதரிகள்தான் என்றார். லதா அவர்களும் ஆஷா அவர்களும் அவர்கள் தந்தையார் ஹிருதயநாத் மங்கேஷ்கர் மேல் மிகுந்த அன்பு உடையவர்கள். அவர் மறைந்து போன போது அவர் நினைவாக ஒரு அறக்கட்டளை ஏற்படுத்தி கலையுலகை சேர்ந்தவர்களுக்கும் மற்றவர்களுக்கும் உதவிகள் செய்வதை சொன்னதோடு மட்டுமல்லாமல் தங்களையும் அப்படி செய்ய சொன்னார்கள் என்பதை நினைவு கூர்ந்தார் ராம்குமார். அனைவரையும் அவர் வரவேற்று முடிக்க விருது வழங்கும் நிகழ்ச்சி ஆரம்பமானது.
முதலில் ஒப்பனைக் கலைஞர் முத்தப்பா அவர்கள் ஆதரிக்கப்பட்டார். பராசக்தி படத்திற்காக நடிகர் திலகத்திற்கு மேக்கப் டெஸ்ட் எடுத்தவர் இந்த முத்தப்பா. அன்று தொடங்கிய அந்த உறவு இன்றும் நீடிக்கிறது என்றார் மோகன்ராம். பராசக்தி படத்திலிருந்து நடிகர் திலகம் தன் தங்கையின் முன்னாள் நின்று நந்தவனத்தில் ஒரு ஆண்டி பாடுவதிலிருந்து கிறுக்கண்ணா என்று ஸ்ரீரஞ்சனி சொல்லுவது வரை அந்த கிளிப்பிங் நீண்டது. பிறகு அந்த நாள் படத்தில் நடிகர் திலகத்திடம் other woman பூங்காவில் வைத்து பேசும் காட்சியும் காண்பிக்கப்பட்டது. முத்தப்பா அவர்களுக்கு விருதை, விழா தலைமை விருந்தினரும் தமிழக தலைமை வழக்கறிஞருமான திரு. பி.எஸ்.ராமன் எனப்படும் பரத்ராம் [நடிகர், நமது ஹப்பர் மோகன்ராம் அவர்களின் இளைய சகோதரர்] வழங்கினார்.
அடுத்தவர் என சொல்லிவிட்டு விளக்குகள் அணையை திரை ஒளிபெற்றது. அங்கே அத்தான் என்னத்தான் என்று சாவித்திரி வாயசைப்பில் சுசீலாவின் தேன் குரல் ஒலித்தது. பல்லவி முடிந்தவுடன் மோகன்ராம் ஒரு அரிய தகவலை சொன்னார். பாவ மன்னிப்பு வெளி வந்து ஓடிக் கொண்டிருக்கும் போது லதாவும் ஆஷாவும் அன்னை இல்லத்திற்கு வந்திருக்கிறார்கள். இந்த பாடலை ஒலிக்க விட்ட நடிகர் திலகம் இது போல் உங்களால் பாட முடியுமா என்று சவால் விடுத்தாராம். இதை சொல்லி விட்டு அந்த பாடலை பற்றி ஆஷா அவர்களே புகழ்ந்து பேசி பாடிக் காண்பிக்கும் வீடியோ காட்சியும் திரையிடப்பட்டது. தொடர்ந்து சொல்ல சொல்ல இனிக்குதடா பாடல் திரையில் வந்தது. அதை தொடர்ந்து மலர்ந்தும் மலராத ஒளிப்பரப்பாக அரங்கமே கைதட்டல்களால் அதிர, இதை பார்த்துவிட்டு கண்ணீர் சிந்தாதவர்கள் உண்டோ என்று மோகன்ராம் கேள்வி எழுப்ப பலத்த குரலில் சபை அதை ஆமோதிக்க நீண்ட கைத்தட்டல்களுக்கிடையே சுசீலா விருது பெற்றார்.
அடுத்து சிவாஜி மன்றத்தின் சார்பில் விருது பெற்றவர்களுக்கும் மோகன்ராம் அவர்களுக்கும், கிளிப்பிங்க்ஸ் தொகுத்து வழங்கிய இயக்குனர் பரத் [ஆனந்தக் கண்ணீர் படத்தின் வசனகர்த்தா மட்டுமல்ல நடிகர் திலகம் நடித்த ஒரே தொலைக்காட்சி தொடரான மீண்டும் கெளரவம் தொடரை இயக்கியவர். இப்போது ஜெயா டி.வியில் திரும்பி பார்க்கிறேன் தொடரை இயக்கிக் கொண்டிருக்கிறார்] அவர்களுக்கும் கிரி ஷண்முகம் அவர்களுக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டன.
அடுத்து வந்தவர் பி.பி.ஸ்ரீநிவாஸ் அவர்கள். இவர் நடிகர் திலகம் படங்களில் நிறைய பாடியிருக்கிறார் ஆனால் நடிகர் திலகத்திற்காக பாடியது இரண்டு பாடல்கள் மட்டுமே. நான் சொல்லும் ரகசியம் படத்திலிருந்து கண்டேனே உன்னைக் கண்ணாலே பாடலும் புனர் ஜென்மம் படத்திலிருந்து என்றும் துன்பமில்லை பாடலும் திரையிடப்பட்டது. தொடர்ந்து பி.பி.எஸ் விருது பெற்றார்.
அடுத்து பாடும் நிலா. இவரைப் பற்றி நான் சொல்லுவதற்கு என்ன இருக்கிறது என்று சொன்ன மோகன்ராம் சங்கராபரணம் படத்தில் வரும் பாடல்களை தன்னால் பாட முடியாது என்று எஸ்.பி.பி., கே.வி.மகாதேவனிடம் சொன்னதையும், மகாதேவன் அவரை வற்புறுத்தி பாட வைத்ததையும் அதன் மூலமாக கே.வி.எம். அவர்களுக்கு இரண்டாவது முறையாக தேசிய விருது கிடைத்ததையும் சொன்னார். தொடர்ந்து நடிகர் திலகத்திற்காக எஸ்.பி.பி பாடிய பாடல் காட்சிகள் என்று அறிவிக்க அரங்கமே நிமிர்ந்து உட்கார்ந்தது, என்ன பாடல் காட்சி வரும் என்று எதிர்ப்பார்ப்பில். ஒரு சின்ன இடைவெளி முடிய, திரை உயிர் பெற, நீல கால் சராயும் கட்டம் போட்ட அரைக்கை சட்டையும் அணிந்து நடிகர் திலகம் இளமை பொங்க நின்று "மலை தோட்ட பூவில்" என்று தொடங்க, காதடைக்கும் ஆரவாரத்தோடு அரங்கம் அதை ரசித்தது. தொடர்ந்து "இரண்டில் ஒன்று" வர ஆரவாரம் அதிகமானது.[அண்ணா அறிவாலயத்தில் அண்ணா தி.மு.க. தலைவியின் பாடல் காட்சி ஒளிப்பரப்பிய சாதனையை செய்யவும் நடிகர் திலகத்தால் மட்டுமே முடியும்.] சந்திப்பு படத்திலிருந்து உன்னை தான் நம்பிட்டேன் பாடலும் சோலாப்பூர் ராஜா பாடல் காட்சியும் திரையிடப்பட்டன. பிறகு எஸ்,பி,பி. விருது பெற்றார்.
இதன் பிறகு வேட்டைக்காரன்புதூர் முத்துமாணிக்கம் நடிகர் திலகத்துடன் வேட்டைக்கு சென்ற அனுபவங்களை பற்றி எழுதியுள்ள "வேட்டைக்கு வந்த சிங்கம்" என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. அதை திரு.பரத்ராம் அவர்கள் பெற்றுக் கொண்டார். அதற்கு பின் முத்துமாணிக்கம் பேச அழைக்கப்பட மைக் முன் வந்தார் அவர். எளிய பேச்சு தமிழில் அமைந்திருந்த அவரது உரை சற்றே உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அமைந்தது. 1954 முதல் தொடங்கிய நட்பைப் பற்றி சொல்லும்போது அது வெளிப்பட்டது. வெளிநாடு சென்ற நம்மூர் இளைஞன் சொந்த ஊரை நினைத்து ஏங்குவது போல தன் அருமை நண்பரை அனுதினமும் நினைத்துக் கொண்டிருப்பதாக சொன்னார். Nostalgia என்று சொல்லிவிட்டு அந்த நட்பு தலைமுறை தலைமுறையாக தொடர வேண்டும் என்ற காரணத்தினாலேயே வேறு வேறு சமூகங்களை சேர்ந்த தங்களிருவரும் சம்பந்திகளானோம் என்றார். தனது தம்பி மகளை சிவாஜியின் தம்பி மகனுக்கு [கிரி ஷண்முகம்] கல்யாணம் செய்துக் கொடுத்திருப்பதை குறிப்பிட்ட அவர், எங்கள் நட்பை பற்றி எழுதுவதற்கு ஒரு புத்தகம் போதாது ஆனாலும் அவரது வேட்டை அனுபவங்களை இது வரை யாரும் ஒரு புத்தக வடிவில் வெளிக் கொண்டு வரவில்லை என்ற காரணத்தால் இதை எழுதியதாக சொல்லி தன் உரையை முடித்துக் கொண்டார்.
(தொடரும்)
அன்புடன்
"பாட்டுடைத் தலைவன் என்று உங்களை வைத்தோம் !
பாடித் தொழுவதற்கே எங்களை வைத்தோம்!"
அனைவருக்கும், இதயதெய்வம் நடிகர் திலகத்தின் அவதாரத் திருநாள் நல்வாழ்த்துக்கள் !
"நம் தாத்தா காந்தி, மாமா நேரு தேடிய செல்வங்கள்,
பள்ளிச் சாலைத் தந்தவன் , ஏழைத்தலைவனை தினமும் எண்ணுங்கள் !"
அனைவருக்கும், தேசத்தந்தை, காந்தி ஜெயந்தி நல்வாழ்த்துக்கள் !
கல்விக்கண் திறந்தவர், ஏழைகளின் தோழர், எளிமையின் உறைவிடம், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் நினைவு நாளான இன்று அவருக்கு இதய அஞ்சலி செலுத்துவோம் !
காந்தீய கொள்கையில், கர்மவீரர் பாதையில், கலைக்குரிசிலின் வழியில் பீடு நடை போடுவோம் !!
நமது வளமான பாரதத்தை வல்லரசு ஆக்குவோம் !!!
அன்புடன்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.
படு ஜோரான பல லிங்க்குகளை அளித்த ஜோ அவர்களுக்கு பற்பல நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.