:clap:Quote:
Originally Posted by Arthi
:clap:
:exactly:
Printable View
:clap:Quote:
Originally Posted by Arthi
:clap:
:exactly:
யார் பெத்த பிள்ளையோQuote:
Originally Posted by saradhaa_sn
கொடுத்துவைச்சவன்
நிறையவே பிஸ்ஸா சாப்பிடுகிறான்
:omg:
நன்றி ஆனா மற்றும் ஆர்த்தி…..
மகள்கள் கல்யாணத்துக்கு சம்மதித்ததும், கற்பகம் தன் வழக்கமான வேலையைத் துவக்கிவிட்டாள். ஆம், இப்போது கற்பகமும் சாரதாவும் ஒரு ஜோதிடரைப் பார்க்க ஆட்டோவில் போய்க்கொண்டிருக்கிறார்கள்.
‘அக்கா, அதான் அபி, ஆனந்தி ரெண்டு பேரும் கல்யாணத்துக்கு சம்மதிச்சுட்டாங்களே. இப்போ எதுக்கு மறுபடியும் ஜோசியரைபார்க்கணும்?. அவர் பாட்டுக்கு எதாவது தடங்கல் சொல்லிட்டாருன்னா, அதுவேறு மனதை உறுத்திக்கிட்டிருக்கும்’.
‘அப்படியில்லை சாரதா, ஜாதகத்தில் எதாவது குறையிருந்தால் கல்யாணத்துக்கு முன்பே அதற்கு பரிகாரம் செய்திடலாம் இல்லையா அதுக்குத்தான்’.
இந்த கற்பகத்தைத் திருத்தவே முடியாது என்ற எண்ணம் சாரதா மனதில் (இந்த சாரதா மனதிலும்தான்).
முதலில் ஆனந்தியின் ஜாதகத்தைப்பார்த்த ஜோதிடர் நல்லதாக நாலு வார்த்தை சொல்கிறார். ‘இந்த ஜாதககாரருக்கு கூடிய சீக்கிரமே குரு இடம் பெயருகிறான். அதுக்குப்பிறகு நல்ல யோகம்தான். இவங்க கல்யாணம் செஞ்சுகிட்டா நல்லா இருப்பாங்க’ என்று ஆரம்பித்து இன்னும் என்னென்னமொ ஜோதிட பாஷைகளில் அடிச்சு விடுகிறார். கற்பகத்துக்கு முகத்தில் நிம்மதி கலந்த சந்தோஷம். ஆனால் அது நிலைக்கவில்லை.
அடுத்து அபியின் ஜாதகத்தை எடுத்துப்பார்க்கும் ஜோதிடர் முகம் மாறுகிறது, அதைப்பார்த்த கற்பகத்தின் முகத்திலும் கலக்கத்தின் ரேகை படிகிறது. ‘என்ன ஜோசியரே என்ன ஆச்சு?’
‘அதாவது இந்த ஜாதகக்காரங்களுக்கு சில தோஷங்கள் இருக்கிறது’ என்று ஆரம்பித்து ஏதேதோ சொல்லத்துவங்குகிறார். ‘இது நீங்கனும்னா பரிகாரம் செய்யணும்னு சொல்லத்துவங்கும்போது ஆடியோ கட்பண்ணப்பட்டு வெறும் வாயசைவு மட்டும் காண்பிக்கப்படுகிறது, சொல்லி முடித்ததும் ‘நான் சொன்ன மாதிரி தவறாமல் செஞ்சீங்கன்னா தோஷம் நீங்கிடும்’ எனும்போது மீண்டும் ஆடியோ கேட்கிறது.
பில்டர்ஸ் அசோஸியேஷன் மீட்டிங் ஆதி தலைமையில் நடந்துகொண்டிருக்கிறது...
அபி, விஸ்வநாதன், வரதராஜன் உள்பட அனைத்து மெம்பர்கள் அனைவரும் வந்துள்ளனர். ஆதி பேசத்துவங்குகிறான்...
'ஜெண்டில்மென், கடந்த அஞ்சு வருஷமா இந்த தலைவர் பதவியில் ரொம்ப சின்ஸியரா, ரொம்ப டெடிகேட்டடா பணியாற்றிக்கிட்டு இருக்கேன். என்னுடைய இந்த அஞ்சு வருஷ சர்வீஸ்ல நம்ம அசோஸியேஷன் எவ்வளவோ நல்ல பலன்களை அடைஞ்சிருக்கு. இதுவரையிலும் நான் போட்டி இல்லாமல்தான் ஜெயிச்சு வந்திருக்கேன், ஆனால் இப்போ சிலபேர் சேர்ந்து வரப்போகும் எலெக்ஷன்லே எனக்குப் போட்டியா சில பேரை நிறுத்துறாங்க. அது பற்றி நம்ம அசோஸியேஷன் செக்ரட்டரி சொல்வார்'
என்றதும், செக்ரட்டரி எழுந்து எந்தெந்த பதவிகளுக்கு யார் யாரெல்லாம் போட்டியிடுகிறார்கள் என்று ஒரு சின்ன பட்டியலை வாசிக்கிறார். அதில், தலைவர் பதவிக்கு ஆதித்யாவும் அபிநயாவும் நிற்பதாக அறிவிக்கிறார். மீண்டும் இப்போது ஆதி பேசத்துவங்குகிறான்...
'வெல் ஜெண்டில்மென், இப்போ இது வரைக்கும் இந்த நிமிடம் வரைக்கும் நான்தான் தலைவரா இருந்துக்கிட்டிருக்கேன். ஸோ, என்னுடைய அதிகாரத்தின்படி நான் நம்ம அசோஸியேஷனுக்கு புதுசா ஒரு மெம்பரை சேர்த்திருக்கேன். அவங்க யாருன்னு இப்போ உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்' என்றதும், மேனகா காரில் இருந்து இறங்கி உள்ளே வருகிறாள்.
'ஷி இஸ் அவர் நியூ மெம்பர், என்னுடைய ஃப்ரெண்ட் அண்ட் பார்ட்னர் மிஸ் மேனகா' (சிலர் கைதட்டுகிறார்கள்).
'ஸாரி மிஸ்ட்டர் ஆதி' வரதராஜன் ஆட்சேபிக்கிறார்... 'கம்பெனியின் ரூல்ஸ்படி எலெக்ஷன் டைம்ல புது மெம்பர்ஸ் சேர்க்கக்கூடாது. எலெக்ஷன் முடிஞ்ச பிறகுதான் சேர்க்க முடியும்'
'வரதராஜன், அப்படி எதுவும் ரூல்ஸ் இல்லையே'
'இருக்கு மிஸ்ட்டர் ஆதி, ஆனா அஞ்சு வருஷமாக நீங்க அதையெல்லாம் ஃபாலோ பண்ணாததால் உங்களுக்கு நினைவில்லை'
'வரதராஜன், தலைவர்ங்கிற முறையில் எனக்குன்னு சில அதிகாரங்கள் இருக்கு. அதன்படிதான் இவங்களைச்சேர்த்தேன்'.
இப்போ கிரி குறுக்கிடுகிறான், 'குறுக்கே பேசுறதுக்கு மன்னிக்கனும். மேனகா மேடம் பத்துநாளைக்கு முன்னரே மெம்பராக சேர்ந்தாச்சு. எங்க பாஸும் பத்துநாளைக்கு முன்பே அவங்க அளிகேஷனை அப்ரூவ் பண்ணி கையெழுத்துப் போட்டிருக்கார். இதோ பாருங்க அதன் காப்பியை'.
விஸ்பநாதன், 'இங்க பாருங்க கிரி, நம்ம கையில் பேனா இருக்கும்போது, எந்த தேதியை வேணும்னா போட்டுக்கலாம். இவங்களை மெம்பரா சேர்க்கப்போவது பற்றி இதுவரை ஏன் மிஸ்ட்டர் ஆதி சொல்லைலை?'
இப்போ அபி தன் ஆட்சேபனையைத் தெரிவிக்கிறாள். 'மிஸ் மேனகா ஒரு என்.ஆர்.ஐ. அவங்களை மெம்பரா சேர்க்கணும்னா முதல்ல கமிட்டியை கூட்டி ஒப்புதல் வாங்கியிருக்கணும். ஆதி அதைச்செய்யவில்லை'.
'ஏன் மிஸ்ட்டர் ஆதி, நான் இந்த அசோஸியேஷன்ல மெம்பராகறதுல இவ்வளவு பிரச்சினை இருக்கா?' - மேனகா.
'அதெல்லாம் எந்த பிரச்ச்னையும் இல்லை மேம். என் கிட்டே சம்பளம் வாங்கிக்கிட்டிருந்த அபி, இந்த எலக்ஷனில் போட்டியிடும்போது, என்.ஆர்.ஐ. யாக இருக்கும் மேனகா மெம்பராவதில் என்ன தப்பு?'.
'Mind your words Adhi,. நான் உங்ககிட்டே சம்பளம் வாங்கியது உண்மைதான். அப்படிப்பட்டவ இன்னைக்கு உங்களை எதிர்த்து நிற்குமளவுக்கு வளர்ந்துட்டாளேன்னு உங்களுக்கு பொறாமை. இந்த தேர்தல்ல தோத்திடுவோம்ணு பயத்தினாலதானே புது மெம்பர்ஸையெல்லாம் சேர்க்கிறீங்க?'.
'தோல்வியா?. எனக்கா?. நான் இதுவரை எதிலும் தோத்ததே கிடையாது'.
'ஆனால் இப்போ முதல் முறையா என் கிட்டே தோற்கப்போறே ஆதி. Be ready to face it. எலெக்ஷன்ல பார்ப்போம்'. அபி கிளம்புகிறாள்.
அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
:ty:Quote:
Originally Posted by saradhaa_sn
இந்த திமிர்தான் :bangcomp:Quote:
Originally Posted by saradhaa_sn
புத்தாண்டு கொண்டாட்டங்களையொட்டி, நேற்றைய எபிஸோட் இருக்காது என்று நினைத்தோம். ஆனால் கோலங்கள் வரை ஒளிபரப்பாகியது. அரசியில் இருந்து கட் பண்னிட்டு திரைப்படம் போட்டுவிட்டார்கள். (அதை அரை மணி நேரம் முந்தி போட்டிருக்கலாம். காரணம் நேற்றைய கோலங்கள் முழு சொதப்பல்).
காரில் வந்துகொண்டிருக்கும் அலமேலு, வழியில் கலாவைப் பார்த்ததும் இறங்கி, (ஊரான் காசில் தனக்கு வாய்த்த) வளமான வாழ்க்கையைப்பற்றி (வழக்கம்போல) பெருமைப்பட்டுக்கொள்கிறாள்.
'என்னடி கலா, வீட்டுப்பக்கமே வரக்காணோம்?'
'அதான் உங்க பிள்ளை திடீர் யோக்கியனாகி, என்னைப்பார்த்து ஊதுபத்தியும், ஊறுகாயும் விற்கச்சொல்லிட்டாரே. அப்புறம் எப்படிக்கா வர்ரது?'
'அது கிடக்கட்டும்டி, அந்த அபி வீட்டு சமாச்சாரம் எதுவும் தெரியுமா?'
'அதான் கற்பகத்தோட ரெண்டு பொண்ணுங்களுக்கும் கல்யாணம் செஞ்சு வைக்கப் போறாங்களாமே'
'என்னடி சொல்றே?. அந்த கழுதைங்களுக்கு கல்யாணமா?'
'ஆமாக்கா, இதுவரை கல்யாணம் வேண்டாம், வேண்டாம்னு சொல்லிக்கிட்டிருந்த அந்த ஆனந்திகூட இப்போ கல்யாணத்துக்கு சம்மதிச்சுட்டாளாம்'.
'என்னடி இப்படி குண்டைத்தூக்கிப்போடுறே. அய்யோ... அய்யோ... அந்தக்கல்யாணம் ரெண்டும் எப்படியாவது நின்னு போகணும்டி. நடக்கவே கூடாது. அந்தக் குடும்பம் சந்தோஷமாவே இருந்திடக்கூடாது. கெட்டழிஞ்சு நடுத்தெருவுல நிக்கணும்'.
'ஏன்க்கா, எப்பவும் அந்தக்குடுமப்த்து மேலே இப்படி கர்வமாவே இருக்கீங்க?'.
'பின்னே என்னடி, அந்த அபி என்ன பண்ணினா தெரியுமா?. ஒருநாள் ஒரு பெரிய கல்லைத்தூக்கிக்கிட்டு என்னைக்கொல்ல துரத்திக்கிட்டு வந்தாள்'.
(இப்போ பழைய ஃப்ளாஷ்பேக் காட்சி, ஆனந்தியின் கல்யாணம் நின்று போன அதிர்ச்சியில் குடும்பமே துக்கத்தில் ஆழ்ந்திருக்கும்போது, ஐம்பதாயிரம் ரூபாய் செக் திரும்பி வந்துவிட்டதைக் காட்டி அலமேலு பணம் கேட்க, அபி கோபப்பட்டு அலமேலுவை விரட்டியடிக்கும் காட்சி காண்பிக்கப்படுகிறது).
'ஏண்டி கலா, உனக்கும்தானே அந்தக் குடும்பத்தைப் பிடிக்காது. அப்புறம் என்ன என்னை மட்டும் கேட்கிறே?. அய்யோ... எப்படியாவது பில்லி, சூனியம் வச்சாவது இந்தக் கல்யாணத்தை நிறுத்திடணூம்' என்று சொல்லிக்கொண்டே காரில் ஏறிப்போகப்போகும்போது....
'அக்கா, போற வழியிலே என்னையும் உங்க காரில் கொண்டு இறக்கி விட்டுடுங்களேன்'
'கலா, நீ வலது பக்கம்ல போகணும். ஆனா நான் இடது பக்கம்ல போறேன். வரட்டா'
இந்தப்புதுப்பணக்காரியிடம் கேட்டிருக்க வேணாமோ என்று தோன்றுகிறது கலாவுக்கு.
சிவசு, கவிதாவைப்பார்க்க வருகிறான். அவன் வந்ததைப்பார்த்து கவிதா பதறுகிறாள். காரணம், அது ராஜேஷ் அவளைத்தேடி வரும் நேரம். இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே, ராஜேஷ் வந்து விடுகிறான். வெளியே போக வழியின்றி, ராஜேஷின் கண்ணில் படாமல் இருக்க, சிவசு கட்டிலின் அடியில் ஒளிந்துகொள்ள, அதே கட்டிலின் மேலே ராஜேஷ் உட்கார்ந்து மதுவருந்துகிறான். போதையில் அவன் தடுமாறிக் கொண்டிருக்கும்போது அவனுக்கு தெரியாமல் சிவசு வெளியேறி வாசலுக்குப்போக, கவிதா அவனை சீக்கிரம் வெளியே போகச்சொல்கிறாள். அவர்களின் ஏற்பாட்டின்படி, படுக்கையறையில் ஒளித்து வைத்திருக்கும் கேமராவை மறக்காமல் 'ஆன்' செய்யும்படி சிவசு சொல்ல, அது ஏற்கெனவே 'ஆன்' செய்யப்பட்டு ரெடியாக இருப்பதாகச்சொல்லி அவனை அனுப்பி கதவைடைக்கிறாள். கட்டிலில் ராஜேஷ், கவிதாவை நெருங்கி வரும் நேரம், நம் கேமரா, ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் கேமராவை நோக்கிப்போய் அதில் நிலைக்கிறது.
ஒரு தொழிலதிபரைப்பார்த்து ஆதரவு திரட்ட அபியும், வரதராஜனும் சென்று அவரிடம் பேச, அவர் ஆதியின் அடாவடிச் செயல்களை எடுத்துச்சொல்லி அபிக்கு ஆதரவு தருவதாக வாக்களிக்கிறார். அவர்கள் புறப்படும் நேரம் அங்கு ஆதியும் மேனகாவும் வர, மீண்டும் மேனகா, அபி, ஆதியிடையே மோதல் முற்றுகிறது. வழக்கம்போல வார்த்தைதடிப்புகள், ஏளனப்பேச்சுக்கள், சவால்கள் (சவால்கள் எல்லாம் ஏற்கெனவே அரைத்து, அரைத்து புளித்துப்போன மாவு. அதனால் வேண்டாம்).
அபி போனதும் அந்த தொழிலதிபர் அப்படியே பல்டியடித்து, வரதராஜனுக்காக சும்மா பொய் சொன்னதாகவும், அவரது ஆதரவு எப்போதும் ஆதிக்குத்தான் என்றும் சொல்கிறார். (நிஜமாகவே ஆதிக்கு சப்போர்ட் செய்கிறாரா அல்லது அவனை நம்ப வைத்து கவிழ்க்க சதியா தெரியவில்லை).
மொத்தத்தில் நேற்றைய எபிஸோட் கதையோட்டத்துக்கு எந்த வகையிலும் உதவியாயில்லை. இன்றைக்கு கோலங்கள் ஒளிபரப்பாகுமா என்பது தெரியவில்லை.
:ty:Quote:
Originally Posted by saradhaa_sn
காரணம் நேற்றைய கோலங்கள் முழு சொதப்பல்) :exactly:
எபிஸோட் துவக்கத்தில் மீண்டும் அலமேலுவைக் காண்பித்ததும், ஐயய்யோ இன்னைக்கும் அவ்வளவுதானா என்று நினைத்தோம். நல்லவேளை அப்படியில்லை. துவக்கத்தில் இரன்டு பாத்திரங்களுக்கு ஆட்களை மாற்றிவிட்டார்கள். அவ்வளவு முக்கியத்துவம் இல்லாத அலமேலுவின் மகள் வித்யாவாக பிரியதர்ஷிணிக்கு பதில் இன்னொருவர், அவள் கணவர் ரோலுக்கு பிரபாகருக்கு பதிலாக இன்னொருவர்.
அலமேலு வீட்டுக்குள் வந்ததும், மகள் வித்யாவிடம் மீண்டும் அபி, ஆனந்தி கல்யாணம் பற்றி அலுத்துக்கொள்கிறாள். அந்த குடும்பம் விளங்காமல் போக வேண்டும், அபிக்கு கால் ஊனமாக வேண்டும், ஆனந்திக்கு கையிரண்டும் விளங்காமல் போக வேண்டும், கற்பகத்துக்கு வாய் கோணிக்கொள்ள வேண்டும் என்றும் அதற்காக ஒரு பவர்ஃபுல்லான மந்திரவாதியிடம் போய் பில்லி, சூனியம் வைக்கப்போவதாகவும் சொல்ல, அதை மாடிப்படியில் நின்றவாறு சங்கீதா கேட்டுக்கொண்டிருக்கிறாள். இப்படியும் ஒரு மனிதப்பிறவியா என்று அவள் மனதுக்குள் தோன்றுகிறது. (நாராயணன் இறந்தபோது கற்பகமும் அபியும் அலமேலு வீட்டில் மாங்கு மாங்கென்று வேலை செய்ததெல்லாம் எப்படி இவளுக்கு மறந்துபோனது?. சரி, அபி தன் மகனின் வாழ்க்கையில் இருந்து ஒதுங்கியதால்தானே, தன்னால் இப்படி ஒரு புதுப்பணக்காரியாக முடிந்தது என்பதெல்லாம் எப்படி அலமேலுவுக்கு மறந்துபோகிறது?. அது சரி, மனிதப்பிறவியாக இருந்தால்தானே).
இரவில் தெருவோரத்தில் காரை நிறுத்திவிட்டு ஆதித்யா காத்திருக்க, அங்கே ஒரு மோட்டார் சைக்கிள் வந்து நிற்கிறது. வந்தது தொல்காப்பியன்....
'மிஸ்ட்டர் ஆதி, எதுக்காக என்னை வரச்சொன்னீங்க?'
'என் தலையெழுத்து, என்னுடைய ஸ்டேட்டஸுக்கு உன் மாதிரி ஆளுங்களூக்காகவெல்லாம் காத்திருக்க வேண்டியிருக்கு'.
'ஸ்டேட்டஸ்னு எதைச்சொல்றீண்க்க ஆதி?. பெட்டி நிறைய பணமா?. என்னைப்பொறுத்தவரை ஸ்டேட்டஸ்ங்கிறது வெறும் பணம் இல்லை. நல்ல பண்புகள், அடுத்தவருக்கு நன்மை செய்யும் குணம், பிறருக்கு இடைஞ்சல் பண்ணாமல் இருப்பது இதுதான் ஸ்டேட்டஸ். அந்த வகையில் நான் உங்களைவிட ஸ்டேட்டஸில் உயர்ந்தவன்'.
'பார்த்தா பூனை மாதிரி இருப்பே, வாயைத்திறந்தால் ஒரே தத்துவம் இதானே உன் வேலை?'
'நீங்க எதுக்கு என்னை வரச்சொன்னீங்கன்னு இன்னும் சொல்லலை'.
'எனக்கும் உஷாவுக்கும் இடையில் நீதான் இப்போ பெரிய இடைஞ்சலா இருக்கே'.
'மிஸ்ட்டர் ஆதி, உஷாவுக்கும் உங்களுக்கும் இடையில் உள்ளது உங்க குடும்ப பிரச்சினை, உங்க சொந்த விவகாரம். அதுக்கும் எனக்கும் என்ன சம்மந்தம்?.'
'இப்போ நீதானே அவ கூட இருக்கே'
'வார்த்தையை அளந்து பேசுங்க ஆதி, இதெல்லாம் ரொம்ப அநாகரீக்ம'.
'நீ கூட இருக்கிற தைரியத்துலதான் அவ இப்படி ஆடுறா'
'மறுபடியும் சொல்றேன் ஆதி, இது உங்களுக்கும் உஷாவுக்கும் இடையேயான சொந்த விவகாரம். அதை நீங்க ரெண்டு பேரும்தான் பார்த்துக்கணும். இதில என்னை இழுக்காதீங்க. நான் உஷாவுடைய பெஸ்ட் ஃப்ரண்ட் அவ்வளவுதான்'.
'போதும்... இப்படி சொல்லி சொல்லி ஏமாத்தினதெல்லாம் போதும். இப்படித்தான் அபியின் ஃப்ரெண்ட்னு சொல்லி நுழைஞ்சு, அபியையும் பாஸ்கரையும் பிரிச்சே. இப்போ உஷாகூட சேர்ந்துகிட்டு சுத்துறே'.
'ஸ்டாப் மிஸ்ட்டர் ஆதி, இனிமேல் இது விஷயமா உங்க கிட்டே பேச விரும்பலை'.
ஆதியின் பதிலுக்குக் கூட காத்திராமல் தொல்ஸ் பைக்கில் ஏறிப்போக, ஆதி லோபத்தில் தனியே நின்று கத்துகிறான்.
அபியின் வீடு... ஆர்த்தி ரொம்ப நல்ல பிள்ளை மாதிரி நுழைகிறாள்...
'அக்கா... அக்கா..., அம்மா அக்கா இல்லையா?'
'வா ஆர்த்தி, அக்கா ஆஃபீஸுக்குப் போயிட்டாளே'.
'அக்கா போயிடுச்சா?. நாம ரெண்டு பேரும் சேர்ந்து பேரும் சேர்ந்து போகலாம், வான்னு சொல்லியிருந்துச்சே. அப்படீன்னா ஆஃபீஸ் போயிருக்காது. எலெக்ஷன் வேலையாத்தான் போயிருக்கும். ஏம்மா, அக்காவுக்கு கல்யாணம் ஆகப்போது, இந்த நேரத்தில ஏம்மா இந்த எலெக்ஷன், தலைவர் பதவியெல்லாம்?'
'எனக்கென்ன்ம்மா தெரியும், அபி யோசிச்சுத்தானே இறங்கியிருப்பா'.
இப்போது ஆனந்தி குறுக்கிட்டு, 'ஆர்த்தி, அக்கா எலெக்ஷனில் நிக்கிறதுலயும் தலைவர் ஆகிறதுலயும் என்ன பிரச்சினை?'
'பிரச்சினைக்காக சொல்லலைக்கா, ஏற்கெனவே கம்பெனி வேலைகளே தலைக்குமேலே இருக்குது, இதுல அடிஷனலா இந்த தலைவர் பதவியெல்லாம் ஏத்துக்கிட்டா அக்காவுக்குத்தானே கஷ்ட்டம்?. வரப்போற கணவரையும் கவனிக்கனும் இல்லையா?' (அக்கா மேல் ரொம்ப கரிசனம் போல பேசுகிறாள். ஆனால் இது ஆதி மந்திரம் செய்யும் வேலை என்று யாருக்கும் தெரியவில்லை).
அப்போது உள்ளே நுழையும் டாக்டர் மகேஷ், 'ஆர்த்தி, அபி தன் விருப்பப்படி என்ன வேணும்னாலும் செய்யட்டும், அதுக்கு நான் முழு சப்போர்ட் பண்ணுகிறேன். ஏன்னா, நான் அபியை நல்லா புரிஞ்சிக்கிட்ட்வன். அபி என்ன செஞ்சாலும் சரியாத்தான் இருக்கும்'.
என்னடா இது கிணறு வெட்டப்போக உள்ளிருந்து பூதம் கிளம்பியது போல, நாம் ஒண்ணு நினைத்து சொன்னால், அது அபியின் பக்கம் ஸ்ட்ராங்கான ச்ப்போர்ட்டாக அல்லவா முடிஞ்சுபோச்சு என்று ஆர்த்திக்கு படு ஏமாற்றம். எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு புறப்பட்டு வாசலுக்கு வரும்போது, 'ஆதியண்ணா' சொன்னவை நினைவுக்கு வர, அதை நிறைவேற்ற முடியவில்லையே என்ற வருத்தம் முகத்தில் தோன்றுகிறது. ஏனென்றால், இப்போது அவளுக்கு 'ஆதியண்ணா' தான் 'அறிஞர் அண்ணா'.
ஆதியின் கெஸ்ட் அவுஸ்...
தேவராஜ பாண்டியனுடன் ஆதி ஆலோசனையில் இருக்கிறான். என்ன உருப்படியான ஆலோசனயா, எல்லாம் சதியாலோசனைதான்.
'அஞ்சு வருஷமா அந்த அசோஸியேஷன் தலைவரா இருக்கேன் தேவராஜ். அதிலும் நாலு முறை போட்டியில்லாமல் தலைவராகியிருக்கிறேன். ஆனா இப்போ ஒரு கிழவன் எனக்கெதிரா போட்டியைக்கிளப்பியிருக்கிறான். அதுவும் அந்த அபியை எனக்கெதிரா நிறுத்தியிருக்கான்'.
'யாருன்னு சொல்லுங்க தம்பி. தூக்கிடுவோம்'
'இல்லை தேவராஜ், உங்க அடிதடியெல்லாம் இங்கே எடுபடாது. ரொம்ப கவனமா செயல்படணும்'.
'அப்படீன்னா லேசா அவனை மிரட்டி வைப்போம், அல்லது கொஞ்சம் பனத்தை வீசுவோம்'.
'தேவராஜ், அந்தக்கிழவன் மிரட்டலுக்கோ, பணத்துக்கோ மசிகிறவன் இல்லை. அதுவுமில்லாமல், இப்போ அவனுக்கும் எனக்கும் போட்டிங்கறதாலே, அவனுக்கு என்ன நேர்ந்தாலும் அந்த பழி என் மீதுதான் விழும். அது எலெக்ஷன்லே என் இமேஜை ரொம்ப பாதிக்கும். அதனால் நான் சொல்றபடி செய்யுங்க'..... சொல்லத்துவங்கியதும் வழக்கம்போல வெறும் வாயசைவு மட்டும், பின்னணியில் இசை... 'இதுல நீங்க நேரடியா ஈடுபட வேண்டாம் தேவராஜ். அதுபோல வழக்கமா அனுப்புற ஆளுங்களை அனுப்ப வேண்டாம். புது ஆளுங்களை அனுப்புங்க. அவங்க யாருன்னு யாருக்கும் தெரியக்கூடாது. ஏன், எனக்கே அவங்க யாருன்னு தெரியக்கூடாது'
'சொல்லிட்டீங்கல்ல?, முடிச்சிடுவோம் தம்பி....'
தேவராஜ் பாண்டியன் புறப்படுகிறான்.
:ty:Quote:
Originally Posted by saradhaa_sn
Thanks for the update.
Good updates with dialogues, enables us to know the story of one week, within ten minutes.
Whynot other 'serial lovers' adopt 'each one each serial' like Arasi, Kalasam, Anandham etc, and update them periodically?, sothat non-watchers (like me) may be benefited.
welcome back KarthikQuote:
Originally Posted by mr_karthik
Through the previous pages, I come to understand Thiruselvam, director of Kolangal, is going to direct a movie for big screen.
Can anybody pour more light on this, about name of the movie, starcast, tech crews etc...?
கார்த்தி, நீங்கள் கேட்ட விவரங்களைத்தரணும்னு எனக்கும் ஆசைதான். ஆனல் எனக்கும் அந்தத் திரைப்படம் விஷயமாக எதுவும் தெரியவில்லை.Quote:
Originally Posted by mr_karthik
இப்போதுதான் பிள்ளையார் சுழி போட்டிருப்பார்கள் போலும். மற்றவை இன்னும் முடிவாகாமல் இருக்கலாம். நாளாவட்டத்தில் தெரிய வரும்.
திரைப்படம் துவங்குவத்ற்குள் 'கோலங்கள்' தொடரை முடிப்பாரா, அல்லது ஆறு மாதத்தில் படத்தை முடித்து விடலாம் என்று அதுவரை அவருடைய உதவி இயக்குனரைக்கொண்டு கோலங்களைத் தொடரவிட்டு, பின்னர் படம் முடிந்ததும் மீண்டும் வந்து கோலங்களில் இணைவாரா? தெரியவில்லை.
எதுவும் நடக்கலாம்.
:rotfl:Quote:
Originally Posted by saradhaa_sn
http://www.adhikaalai.com/index.php?...d=65&Itemid=94Quote:
Originally Posted by mr_karthik
நேற்றும் எபிசோட் கொஞ்சம் 'டல்'லடித்தது.....
ஆளரவமில்லாத ஒரு இடத்தில் காரை நிறுத்திவிட்டு, ஆதி காத்திருக்க, கிரி இன்னொரு காரில் வந்திறங்குகிறான். (இப்போதெல்லாம் ஆதி தன் செக்ரட்டரியை சந்திக்கும் இடம் கூட ரோடாகத்தான் இருக்கிறது).
'கிரி, இப்போ 'பில்டர்ஸ் அசோஸியேஷனில்' இருந்துதானே வர்ரே, அங்கே நிலவரம் எப்படியிருக்கு?'
'நிலைமை ரொம்ப மோசம் பாஸ். அந்த வரதராஜனின் ஆதரவாளர்களெல்லாம் அந்த அபிக்கு ஃபுல் சப்போர்ட்டா நிற்கிறாங்க. எனக்கென்னமோ நம்ம நிலைமை கொஞ்சம் டேஞ்சராவே தெரியுது பாஸ். இதே நிலைமை நீடிச்சா நீங்க தோத்துடுவீங்க பாஸ்'.
'கிரி, இது இன்னைக்கு நிலைமைதானே, நாளைக்கே இந்த சிச்சுவேஷன் மாறும் பார்'.
'எப்படி பாஸ், அந்த வரதராஜனை நம்ம பக்கம் இழுக்கப்போறீங்களா?'
'இல்லை கிரி, வரதராஜனை இழுக்கப்போவதில்லை, இழுத்தாலும் அவன் வர மாட்டான். என்னை ஒழிக்கணும்னே முழுமூச்சாக இருக்கான்'.
'பின்னே எப்படி பாஸ், நிலைமை மாறூங்கறீங்க?. எதாவது மந்திரம் பண்ணி ஜெயிக்கப்போறீங்களா?'
'என்ன நடக்கப்போகுதுன்னு இப்போ சொல்றதைவிட ஸ்க்ரீன்லேயே பார்'.
'என்ன பாஸ், என்னை நம்பலையா?. இதுவரைக்கும் உங்களுடைய எந்த விஷயத்தையாவௌது வெளியே விட்டிருக்கேனா?. இதையும் எப்படின்னு சொன்னீங்கன்னா தெரிஞ்சுக்குவேனில்லையா?'
'அதான் சொன்னேனே, நீ இப்போ தெரிஞ்சுக்க வேணாம்னு. நடக்கும்போது பார். இப்போ போயிட்டு காலைல ஆஃபீஸுக்கு வா'.
'எவ்வளவு கேட்டும் சொல்ல மாட்டேங்கிறாரே' என்று முணுமுணுத்துக்கொண்டே கிரி தன் காரில் ஏறிப்போகிறான்.
திருவேங்கடம், தன் மாப்பிள்ளையோடு ஆலோசித்துக்கொண்டு இருக்கிறார். மேனகாவிடம் வாங்கிய பணத்துக்கு எப்படி வேலையை முடித்துக்கொடுப்பது என்பது பற்றியல்ல, தன்னுடைய எம்.எல்.ஏ.பதவியை ராஜினாமா பண்ணிட்டு வரப்போகும் பாராளுமன்ற தேர்தலில் நின்று எம்.பி.யாகி, மத்திய மந்திரியாவது பற்றி. அப்போது சாரதா வருகிறாள்......
'ஏண்டி வெளியிலேயே நிக்கிறே. உள்ளே வா. 'படிதாண்டா பத்தினி' என்பதெல்லாம் வீட்டை விட்டுப்போகும்போதுதான். வீட்டுக்குள் வரும்போது அதெல்லாம் பார்க்க வேண்டியதில்லை. என்ன ஆச்சு? அந்த அபி அடிச்சு விரட்டிட்டாளா?'.
'நான் ஒண்ணும் இங்கே தங்கறதுக்கு வரலை. ஒரு முக்கிய விஷயம் உங்ககிட்டே பேசணும்' என்று சொல்லிக்கொண்டே, 'மாப்பிள்ளை'யைப்பார்க்க....
'சரி, அத்தே நான் வேணும்னா உள்ளே போயிடுறேன். நீங்க மாமாவோடு தனியா பேசுங்க'.
உடனே திருவேங்கடம் எம்.எல்.ஏ...'வேணாம் மாப்பிள்ளே நீங்க இருங்க. என்ன விஷயம் சொல்லு சாரதா'.
'அங்கே அபிக்கும் ஆனந்திக்கும் கல்யாணம் பண்ண முடிவு பண்ணியிருக்காங்க'.
'அதுங்க ரெண்டுக்கும் இப்படி ஒரு மூக்கணாங்கயிறு தேவைதான். ஆனா என்ன, அநியாயமா ரெண்டு ஆம்பிளைங்க வாழ்க்கை பாழாகுதேண்ணுதான் வருத்தமாயிருக்கு. சரி, அதுக்கென்ன இப்போ?'
'அதுல நீங்களும் நானும்தான் அப்பா அம்மா ஸ்தானத்திலிருந்து அவங்களை தாரை வார்த்துக்கொடுக்கணும்'.
'என்னடி விளையாடுறீங்களா?. உங்களுக்கு வேணாம்னா உதறித்தள்ளிட்டுப் போவீங்க. எம்.எல்.ஏ.தயவு வேணும்னதும் தேடி வருவீங்க. அப்படித்தானே?'
'நான் ஒண்னும் உங்க பதவிக்காக உங்களைத்தேடி வரலைங்க. பாவம்ங்க அந்த கற்பகம் அக்கா. ஈஸ்வரன் மாமாவை தாரை வார்த்துக்கொடுக்க அழைச்சதுக்கு அந்த ராட்சஸி காஞ்சனா திட்டி விரட்டிட்டாங்க'.
'ஆக வேற வழியில்லாமல் இந்த எம்.எல்.ஏ.வைத்தேடி வந்திருக்கே. இங்கே ரெண்டு ஆம்பிளைங்க தனியா கஷ்டப்பட்டு சமைச்சு சாப்பிட்டுக்கிட்டு இருக்கோமே அதை நினைச்சியா. முதல்ல உன் மகளைக் கூட்டிக்கிட்டு வந்து குடும்ப நடத்தப்பாருங்கடி'.
'ஏங்க நம்ம பொண்ணுக்கு இவன் செஞ்ச அயோக்கியத்தனத்தையேல்லாம் மறந்திட்டுப் பேசிறீங்களா?'
'அதையே இன்னும் எவ்வளவு நாளைக்குப் பேசிக்கிட்டு இருக்கப்போறே. கெட்டவன் எப்போதும் கெட்டவனாகவேதான் இருப்பானா?. திருந்தி நல்லவனாகவே மாட்டானா?. இப்போ மாப்பிள்ளை எனக்கு எவ்வளவு உதவியாய் இருக்கார் தெரியுமா?. இதோ பார் சாரதா, நீயும் உன் பொண்ணும் முதல்ல நம்ம வீட்டுக்கு திரும்பி வாங்க. அப்புறமா உன்னுடைய கோரிக்கையைப் பரிசீலிக்கிறேன்'.
சாரதா திரும்பிச்செல்கிறாள்.
ரோட்டோரத்தில் நின்று வழிப்பறியில் ஈடுபட்டிருக்கும் மாரியின் கும்பல், மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரிடம் அடித்துப்பிடுங்க, அவ்வழியே காரில் வரும் தொல்காப்பியனைக் கண்டதும் ஓடத்துவங்குகின்றனர். அவர்களை விரட்டிப்பிடிக்கும் தொல்ஸ், அவ்ர்களுக்கு எம்.ஜி.ஆர்.பாணியில் அட்வைஸெல்லாம் பண்ண அவர்கள் உடனே திருந்தி(??????) செய்த தவறுக்கு வருந்துகின்றனர். தற்போது அவர்களின் உதவி தனக்குத்தேவையென்றும், ஆனால் கடைசி வரை விசுவாசமாக இருக்கவேண்டுமென்றும், முன்னர் இதுபோல த்ன்னுடன் இருந்துவிட்டு பின்னர் சமயம் பார்த்து ஆதியிடம் விலைபோனது போல் போகக்கூடாதென்றும் சொல்ல அவர்கள் ஒப்புக்கொள்கின்றனர். (அவர்களின் பழைய நடவடிக்கைகள் ஃப்ளாஷ்பேக்காகக் காட்டப்படுகிறது. அதில் செத்துப்போன அங்குசாமி, சாந்தி, தில்லா என பலபேர் வந்து போகின்றனர்). அவர்கள் திருந்தியதன் முதல் கட்டமாக, பைக்கில் வந்தவரிடம் பறித்ததை அவரிடனே ஒப்படைக்கும்படி கூறி, அந்தப் பர்ஸிலிருந்த கார்டில் உள்ள நம்பருக்கு ஃபோன் செய்ய, பர்ஸையும், செயினையும் பறிகொடுத்தவர் ரொம்ப சந்தோஷப்படுகிறார். நமப முடியாத செயல்கள் நடப்பதால், ஏதோ மாயாஜாலப்படம் பார்ப்பது போலிருக்கிறது.
I can't believe Karpagam. No matter how many times she gets insulted by Adhi and his family ,she keeps going back. Why would she even go back talk to them about Ananthi's marriage to them? These characters really get in my nerve. Will these people ever learn? Is the same thing over and over again. Getting insulted by Adhi and his mother times after times. And Mano. I hate him more than any other character. Compared to him Adhi is a saint.
The only character that I like in this serial is Ananthi.
:ty:Quote:
Originally Posted by saradhaa_sn
'என்ன நடக்கப்போகுதுன்னு இப்போ சொல்றதைவிட ஸ்க்ரீன்லேயே பார்'.(':D') இதையே எத்தனை நாளைக்கு தான்
ஆதி சொல்றதும் அது நடக்காமல் போனால் கத்துவதும், திட்டுவதும். இப்போது அபி ஜெயிக்க வேண்டும். ஆதி தோற்க வேண்டும். இது அபி சீஸன். சாரதா தினமும் கோலங்களை மறக்காமல் போஸ்ட் பண்ணுவதற்கு மிக்க நன்றி. என்னென்றும் தொடரட்டும்.(':D') உங்கள் பணி. தினமும் படித்து தெரிந்து கொள்கிறோம்.
நன்றி ஆனா, கீதா, லதா....
அபியின் வீடு....
அபி, ஆனந்தி, கற்பகம் ராஜேந்திரன், சாரதா எல்லோரும் பேசிக்கொண்டிருக்கும்போது, திருவேங்கடம் வருகிறார். எல்லோர் முகத்தில் குழப்பம் நிறைந்த ஆச்சரியம்...
'என்ன எல்லோரும் அப்படிப்பார்க்கிறீங்க. என்னடா இவன் வீடு தேடி வந்திருக்கான்னா?. சாரதா அன்னைக்கு நீ வீட்டுக்கு வந்தப்போ, நான் நாட்டு நிலைமையைப்பத்தி தீர்க்க மான சிந்தனையில் இருந்தேன், நாடு போய்க்கொண்டிருக்கும் நிலைபற்றி கவலையில் ஆழ்ந்திருந்ததால் உன்னை கோபமாக பேசி அனுப்பிட்டேன்'.
இவருக்கு வேறு வேலை கிடையாதா என்பது போன்ற சிந்தனை அபி மற்ரும் ஆனந்தி முகத்தில்.. திருவேங்கடமோ இதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. அரசியல்வாதியாயிற்றே.
'நீ போன பிறகுதான் யோசித்தேன். அபி மற்றும் ஆனந்தி கல்யாணத்தில் நானும் நீயும் நின்று தாரை வார்த்துக்கொடுப்போம் என்று முடிவு செஞ்சேன்'.
இப்போது அபி மற்றும் ஆனந்தி முகத்தில் லேசான அதிர்ச்சி....
'ஏன் சித்தி, நீங்க போய் அவர் கிட்டே கேட்டீங்களா?'.
'ஆமா அபி, உங்க அம்மா எல்லாம் சம்பிரதாயப்படி நடக்கணும்னு விரும்புறதாலே, நான்தான் அவரிடம் போய்க்கேட்டேன்'
'என்ன சித்தி இதெல்லாம்?. ஏன் அம்மாவும் நீங்களும் கொஞ்சம் கூட புரிஞ்சிக்க மாட்டேங்கறீங்க?'
திருவேங்கடம் 'ஏன் ஆனந்தி கோபப்படுறே. அண்ணி ஆசையை நிறைவேற்றி வைக்க வேண்டியது உங்க கடமை. அதுபோல், இந்த கல்யாணத்தில் நான் வந்து தாரை வார்த்துக்கொடுக்கணும்னா ஒரு சின்ன கண்டிஷன்'
அபி அவரைப்பார்த்து 'என்ன கண்டிஷன்?'
'அது பெரிசா ஒண்ணுமில்லே அபி. வரப்போற உங்க அசோசியேஷன் எலக்ஷன்ல நீ ஆதிக்கு எதிரா நிற்க்கக்கூடாது. அவ்வளவுதான்'.
அபிக்கு புரிந்துவிட்டது ... ஓ.. இது அவனுடைய வேலையா?
'அக்கா ஏன் எலக்ஷன்ல நிற்கக்கூடாதுன்னு சொல்றீங்க?' (யாருமே சித்தப்பான்னு கூப்பிடவில்லை)
'கல்யாணம் செஞ்சுகிட்டு குடும்பம் நடத்தப்போற நேரத்துல எதுக்கும்மா எலக்ஷனும் பதவியும்?. பேசாம கல்யாணம் பண்ணினோமா, குடும்பம் நடத்தினோமா, பிள்ளை குட்டிகளைபெத்தோமான்னு இருக்கிறதை விட்டுட்டு எதுக்கு அவளுக்கு இந்த தலைவலியெல்லாம்?. அண்ணி, நீங்களாவது சொல்லக்கூடாதா?'
கற்பகம் கூட இப்போது புத்திசாலித்தனமாக பேசுகிறாள், 'நீங்க குடும்ப விஷயம் பேசத்தான் வந்திருக்கீங்கன்னு நினைச்சேன். ஆனா வியாபாரம் பேசுறதுக்கில்ல வந்திருக்கீங்க'.
'ஓகோ. அப்படீன்னா உங்க பொண்ணுகளுக்கு தாரை வார்த்துக்கொடுக்க நான் தேவையில்லையா?'
இப்போது சாரதாவே முன்வந்து, 'தேவையில்லை, நீங்க தாரை வார்த்துக்கொடுக்காட்டாலும் அவங்க நல்லா இருப்பாங்க. நீங்க போங்க இங்கிருந்து'.
'அதாவது நான் என்ன சொல்றேன்னா....'
அபி, 'மரியாதைக்குறைவா எதுவும் சொல்றதுக்குள்ளே இங்கிருந்து போயிடுங்க ப்ளீஸ்'.
ராஜேந்திரன், 'அதான் சொல்லிட்டாங்கல்ல... இடத்தைக் காலி பண்றது...'
மேனகாவும் ஆதியும் எதிரெதிரே மர்ந்து பேசிக்கொண்டிருக்க...
'அசோஸியெஷன் சூழ்நிலையைக்கவனிச்சீங்களா ஆதி?. அந்த அபிக்குத்தான் சப்போர்ட் அதிகம் இருக்கு. நீங்க தோத்திடுவீங்கன்னு நினைக்கிறேன்' ரொம்பவே கூலாக பேசுகிறாள்.
'இல்லே மேம், நான் கண்டிப்பா ஜெயிக்கிறேன். பார்த்துக்கிட்டிருங்க'.
'இஸ் இட்.. எப்படி ஆதி?. அந்த அபிதான் சப்போர்ட்டர்ஸை சாலிடா வச்சிருக்காளே. அதை எப்படி உடைக்கப்போறீங்க?'
'எல்லாம் நிச்சயம் நடக்கும் மேம். இப்போ சொல்ல விரும்பலை. நான் ஜெயிச்ச பிறகு பாருங்க'
'அப்படியா... குட்'
அபியின் அலுவலகத்தில் தேர்தல் நிலவரம் குறித்து அபி, விஸ்வநாதன், வரதராஜன், ராஜாமணி ஆகியோர் பேசிக்கொண்டுள்ளனர். எப்படியும் வெற்றி கிடைத்துவிடும் என்பத்ற்காக அசட்டையாக இருந்துவிடக்கூடாது என்றும், ஆதி கடைசி நேர தகிடுதத்தங்கள் செய்வதில் மன்னன் என்றும், அதனால் எல்லா சப்போர்ட்டர்களையும் மீண்டும் சந்திப்பது என்றும், அதற்காக மறுநாள் காலை நால்வரும் வரதராஜன் இருப்பிடத்திலிருந்து புறப்பட்டு, அவர்களின் ஆதரவாளர்களை மட்டுமல்லாது, ஆதியின் சப்போர்ட்டர்களையும் சந்தித்து ஆதரவு திரட்டுவதென்றும் முடிவு செய்து, மறுநாள் சந்திப்பதாகக்கூறி புறப்படுகின்றனர்.
விஸ்வநாதனின் காரில் ராஜாமணி செல்ல, வரதராஜன் தனியே தன் காரை ஓட்டிச்செல்லும்போது, இன்னொரு காரில் வந்த குண்டர்கள் அவரது காரைத்தொடர்ந்து வந்து ஓரிடத்தில் அவரை வழிமறிக்க, அதிலிருந்து ஒருவன் வரதராஜனின் காரில் ஏறிக்கொண்டு, துப்பாக்கியைக்காட்டி மிரட்டுகிறான்...
'ஏய், யாருப்பா நீ?. எதுக்காக என் காரில் ஏறினே?'
'யோவ் பெரிசு, கேள்வியெல்லாம் கேட்டீன்னா சுட்டுத்தள்ளிவிடுவேன். பேசாம நான் சொல்ற ரூட்ல வண்டியை விடு'.
'என்ங்கேப்பா போகணும்?'
'பேசாம நான் சொல்ற பக்கம் போய்க்கிட்டே இரு. எதிர் கேள்வி கேட்காதே'
அபியின் வீடு.....
ஒரு புரோகிதர் வந்து பூஜைக்கான முஸ்தீபுகளைச் செய்துகொண்டிருக்கிறார். கூட அவருடைய உதவிக்கு ராஜேந்திரனும் ஆர்த்தியும். அப்போது கார்த்திக் வர கற்பகம் சாரதா எல்லோரும் அவனை வரவேற்கின்றனர். ஆனந்தியும் அவனைப் புன்முறுவலோடு நோக்குகிறாள் (ஆனந்தியை சிரித்த முகத்தோடு பார்ப்பது அபூர்வம். நேற்று தமிழ்நாட்டில் மீண்டும் மழை பெய்ததாக வானிலை நிலைய இயக்குனர் ரமணன் தொலைக்காட்சியில் சொன்னார்).
சற்று நேரத்தில் டாக்டர் மகேஷும் அங்கு வந்து சேர எல்லோரது முகத்திலும் மகிழ்ச்சி.
'ஆமா, என்ன விசேஷம்?' என்று மகேஷ் கேட்க அதற்கு ஆர்த்தி, 'என்ன எதுக்குன்னு கேட்காமலே, கூப்பிட்டதும் வந்துட்டீங்களா?' என்று கிண்டலடிக்கிறாள்.
'ஏதோ பூஜை பண்ணுவதாகவும், அதற்கு வரணும்னும் சொன்னாங்க. ஆனா என்ன பூஜை எதற்கு பூஜைன்னு தெரியாது. அதனாலதான் கேட்டேன் ஆர்த்தி'.
இப்போ ராஜேந்திரன், 'ஆர்த்தி இவ்வளவு பேசுறீயே, நீதான் எதுக்கு பூஜைன்னு சொல்லேன்'.
'ஐயய்யோ, உண்மையில் எனக்கும் தெரியாது, சும்மா டாக்டரை கலாய்ச்சேன், அவ்வளவுதான். என்னை ஆளை விடுங்க'
'நான் சொல்றேன்' சாரதா முன்வந்தாள் 'இது முன்னோர்களுக்கான படையல். நம் வீட்டில் நல்ல காரியம் நடப்பதற்கு முன் இதுபோல படையல் வச்சு நம் வீட்டின் முன்னோர்களுக்கு பூஜை செய்தால், நடக்கபோகும் விசேஷத்துக்கு அவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும் என்பது ஐதீகம்'.
'ஓ... அப்படியா?. இப்போ புரிஞ்சிக்கிட்டேன்'. சொல்லிக்கொண்டே டாக்டரின் கண்கள் வீட்டைச்சுற்றிவர, அதைக்கவனித்த ஆனந்தி, 'அக்காதானே, இன்னும் ஆஃபீஸிலிருந்து வரலை, இப்போ வந்திடும்'. (கார்த்திக்கும் மகேஷும் வந்திருக்காங்களே, ராஜேஷ் ஏன் வரலைண்ணு ஒருத்தர்கூட கேட்கவில்லை).
இன்னும் அபியைக்காணவில்லையே என்று கற்பகம் வாசலுக்கும் உள்ளுக்குமாக கண்களை அலைபாயவிட, அபி வந்துவிட்டாள். எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சி... 'அபி வந்தாச்சு, பூஜையை ஆரம்பிக்கலாம்'.
பூஜை முடிந்ததும் ஆர்த்தி, 'வாங்க எல்லோரும் சாப்பிடப்போவோம்' என்று கூற, சாரதா 'கொஞ்சம் பொறு ஆர்த்தி, இன்னொரு விஷயம் பாக்கியிருக்கு. கார்த்திக் தம்பி, ஆனந்தி ரெண்டு பேரும் அக்கா கிட்டே ஆசீர்வாதம் வாங்கிக்குங்க'
சாரதா சொன்னதும், இருவரும் கற்பகத்தின் காலைத்தொட்டு ஆசீர்வாதம் வாங்க, அவர்கள் நெற்றியில் விபூதியிடுகிறாள் கற்பகம். 'இப்போ நீங்க ரெண்டு பேரும் ஆசீர்வாதம் வாங்கிக்குங்க' என்று அபியையும் மகேஷையும் அழைக்க, மகேஷ் தயாராக, அபியோ ஒதுங்கிப்போகிறாள். எல்லோர் முகத்திலும் குழப்பம். பின்னர் மகேஷ் சுதாரித்துக்கொண்டு தான் மட்டும் தனியாக ஆசீர்வாதம் வாங்கிக்கொள்ள, பின்னர் அபி தனியாக கற்பகத்திடம் ஆசீர்வாதம் பெறுகிறாள். கற்பகத்துக்குக் கேட்கணுமா?. சற்று முன் இருந்த மகிழ்ச்சி மாறி, முகத்தில் குழப்பம் சூழ்கிறது. தன் மகள் தனக்கே புரியாத புதிராக இருக்கிறாளே என்று.
(எனக்கிருக்கும் மிகச்சின்ன மூளையைக் கசக்கிப்பார்த்ததில் ஒன்று மட்டும் தெளிவாகிறது. தன் உயிர் நண்பன் தொல்காப்பியனுக்கு ஒரு இல்லற வாழ்க்கை அமையும் வரை, அபி தனக்கென ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொள்ள விரும்பவில்லை. மேலும் தொல்ஸ் மீது சுமத்தப்பட்ட பழி நீங்கும் வரை, அவன் தன்னைச்சேர்ந்தவர்களால் மீண்டும் மீண்டும் அவமானப்படக்கூடாது என்பதாலேயே தொல்ஸை ஒதுக்கி வைத்திருக்கிறாள். இப்போது உஷா தொல்ஸுக்கு சப்போர்ட்டாக இருப்பது அபிக்கு ஆறுதலாக இருக்கிறது.... இதெல்லாம் என் அனுமானங்களே. முன்பு 'அண்ணாமலை (Radhika) க்கும் அன்வருக்கும் (Vijay Adhiraj) ' இருந்த நட்பைப்பார்த்து வியந்த நமக்கு, தொல்ஸ், அபி நட்பு மேலும் வியப்பைத்தருகிறது).
வழக்கம்போல, கடத்தி வருபவர்களை அடைத்து வைப்பதற்கென்றே வடிவமைக்கப்பட்ட மக்கள் நடமாட்டமில்லாத ஒரு கிடங்குக்கு வரதராஜன் அழைத்து வரப்படுகிறார். அவருடைய காரில் வந்தவன் மட்டுமல்லாது, பின்தொடர்ந்து வந்த காரில் இருந்த அடியாட்களும் வரதராஜனைச் சூழ்ந்து கொள்கின்றனர்.
'இதோ பார் பெரிசு. ஒரு மூணு நாளைக்கு நாங்க சொல்றபடி நடந்துக்கிட்டீன்னா உனக்கு எந்த டெமேஜும் இல்லாம பத்திரமா அனுப்பி வைக்கிறோம்'.
'நீங்கள்ளாம் யாரு?. எதுக்காக என்னை இங்கே கொண்டு வந்திருக்கீங்க?'
'யோவ் இப்போதானே சொன்னோம். எதிர் கேள்வி கேட்கக்கூடாது. நாங்க சொன்னதை மட்டும் செய்யணும்னு. இப்போ என்ன பண்றேன்னா, உன் செல்போனில் உன் வீட்டுக்கு போன் பண்ணி, 'நான் அவசரமா மும்பை போறேன். திரும்பி வர மூணு நாட்களாகும். அங்கே ரிமோட் ஏரியாவுக்குப்போறதாலே நீ போன் பண்ணினாலும் ரீச் ஆகாது, தேவைப்பட்டால் நானே போன் பண்ணுறேன்' அப்ப்டீன்னு உன் மனைவி கிட்டே சொல்லு. அப்படிச்சொல்லலைன்னா உன் பிணம்தான் உன் வீட்டுக்குப்போகும்'.
அவர்கள் சொன்னது போலவே மனைவிக்கு போன் செய்கிறார்.
'குட்... அடுத்து என்ன பண்றேன்னா, உன்னுடைய ஆதரவாளர்களுக்கெல்லாம் உன் செல்போனிலிருந்து மெஸேஜ் அனுப்பி, வர்ர எலக்ஷன்ல அவங்க எல்லாரும் ஆதிக்குத்தான் ஓட்டுப்போடணும்னு சொல்லு'.
'இப்போ தெரிஞ்சுபோச்சு, ஏண்டா நீங்கள்ளாம் அந்த ஆதியோட ஆளுங்களா?. நீங்க சொல்ற மாதிரி செய்ய முடியாது. என் உயிரைத்தானே எடுக்கப்போறீங்க? எடுத்துக்குங்கடா'.
'யோவ் பெரியவரே, உன் உயிரை எடுக்கிறது மட்டுமில்லேய்யா. இதோ இதைக்கேள்' யாருக்கோ போன் செய்து ஸ்பீக்கரில் போடுகிறான்... 'அலோ, யாரு சந்த்ருவா. எங்கே இருக்கே?'
'நான் அந்த வரதராஜனுடைய மகள் தங்கிப்படிக்கும் ஆஸ்டல் முன்னால நிற்கிறேன். உன் போனுக்காகத்தான் வெயிட் பண்றேன். சொல்லு, அந்த பொண்ணை போட்டுத்தள்ளிறவா?'
கேட்டுக்கொண்டிருக்கும் வரதராஜன் பதை பதைக்கிறார், 'அய்யோ என் பொண்ணை கொன்னுடாதீங்க'.
'சந்த்ரூ, என்னுடைய அடுத்த போன் வர்ர வரைக்கும் அந்தப்பொண்ணை ஒண்னும் செய்ய வேணாம்'
'இது மட்டுமில்லே பெரிசு, இதோ இதக்கேளு'. அடுத்து வேறு யாருக்கோ போன் செய்கிறான்... 'அலோ மணியா?. இப்போ எங்கே இருக்கே?'
'நீ சொன்னமாதிரி வரதராஜனுடைய பையன் படிக்கிற காலேஜ் லைப்ரரில இருக்கேன். பையன் வெளியே வந்தான்னா கதையை முடிச்சிடலாம்னு பார்த்தா வர மாட்டேங்கிறான்'
'அய்யோ என் பையனை ஒண்ணும் பண்ணிடாதீங்க'
'மணி என்னுடைய அடுத்த போன் வரைக்கும் வெய்ட் பண்ணு'
'பெரியவரே இப்போ என்ன சொல்றே?. இதுமட்டுமில்லே, நாங்க சொல்றதைக்கேட்கலைன்னா உன் மனைவியையும் தீர்த்துக்கட்ட உன் வீட்டு வாசலிலும் ரெண்டு பேரு ரெடியா இருக்காங்க. உன் குடும்பம் மொத்தமும் குளோஸ்'
'வேண்டாம், நீங்க சொறபடி மெஸேஜ் அனுப்புறேன்'.
'அதோடு உன் லட்டர் பேடுல, நீ அவசரமா மும்பை போறதாலே உன்னுடைய ஓட்டும் அந்த ஆதிக்குத்தான் போடுவதாக எழுதிக்கொடு'.
அவங்க சொன்னபடியே செய்கிறார்.
'வெரிகுட், இனிமே இந்த செல்போன் உன் கையில் இருக்கக்கூடாது அதைகொடு'.. வாங்கிக்கொண்டதும் 'யோவ் பெரியவரே, இன்னையிலிருந்து மூணு நாளைக்கு நீ எங்கள் மதிப்புக்குரிய விருந்தாளி. என்ன வேணும்னாலும் கேளூ. வாங்கித்தர்ரோம். ஆனா தப்பிக்கணும்னு மட்டும் நினைக்காதே. அப்போ உன் குடும்பத்தை நினைச்சுக்கோ'.
:ty:Quote:
Originally Posted by saradhaa_sn
தொல்ஸ்
கொலைகளையும் வன்முறைகளையும்தான் இங்கு காண்பிக்கின்றார்.
:hammer:
:bangcomp:
இப்படியேஏஏஏஏஏஏQuote:
Originally Posted by saradhaa_sn
இழுத்தூஊஊஊஊஊஊஊஊஊஉ
நன்றி சாரதா இரண்டு நாட்களாக தொடர் வரவில்லையே என்று நினைத்தேன். இரண்டு எபிசோடையும் ஒரே நாளில் அப்டேட் செய்து விட்டீர்கள். கம்ப்யூட்டரில் முதல் வேலை உங்கள் கோலங்கள் தொடரை படித்த பின்னரே மற்ற வேலையை தொடர்கிறேன். பொறுமையாக டைப் அடித்து, உங்கள் மனதில் தோன்றும் வார்த்தைகளையும் கோர்த்து எழுதுவது மிகவும் அருமையாக இருக்கிறது. மிக்க நன்றி.
தொல்காப்பியன் வரதராஜனை தற்செயலாக காப்பாற்றுவது போல் காப்பாற்றுவார். கடைசி நிமிடத்தில் உண்மை தெரிந்து அபி வென்று விட ஆதி கோபம் தலைக்கேற, மேம்(மேனகா) வேறு எனக்கு அப்பவே தெரியும் ஆதி நீங்க தோற்று விடுவீர்கள் என்று. நான் என்ன செய்கிறேன் பார் என்று குழம்புவார் மிஸ்டர் ஆதி.(':confused2:')மண்டையை குடைந்து ஆதி தேவராஜனை முதலில் கோபத்தில் சத்தம் போட்டு மேற் படி என்ன செய்வது என்று தீவிர ஆலோசனை செய்வார்.
நன்றி ஆனா மற்றும் லதா..
அபியின் வீட்டுக்கு பரபரப்புடன் வருகின்றனர் விஸ்வநாதன், ராஜாமணி, கிருஷ்ணன் ஆகியோர்....
'வாங்க சார்... வாங்க மேடம்...'
'அபி இன்னைக்கு வரதராஜனோடு போய் நம்ம சப்போர்ட்டர்ஸை மீட் பண்ணனும்னு இருந்தோமில்லையா?'
'ஆமா சார், வரதராஜன் சார் வீட்டுக்குப்போய், அங்கிருந்து அவரையும் அழைத்துப்போவதாகத்தான் முடிவு செய்திருந்தோம். அதுக்குத்தான் ரெடியாயிட்டிருக்கேன்'.
'என்ன சொல்றே அபி?. அப்படீன்னா உனக்கு விஷயம் எதுவும் தெரியாதா?'
இப்போது அபி, ஆனந்தி, கற்பகம், ஆர்த்தி ஆகியோர் முகத்தில் குழப்பம்...
'என்ன சார் என்ன ஆச்சு?'.
'நம்ம சப்போர்ட் அளுங்களுக்கெல்லாம் வரதராஜன் மெஸேஜ் அனுப்பி, அவங்க ஓட்டுக்களை அந்த ஆதிக்குப் போடும்படி சொல்லியிருக்காராம். பலபேர் போன் பண்ணி எங்களுக்கு சொன்னார்கள்'.
வீட்டிலிருந்த எல்லோருக்கும் அதிர்ச்சி...
'என்ன சார் சொல்றீங்க?. நான் பாட்டுக்கு நான் உண்டு என் வேலை உண்டுன்னு இருந்தவளை இந்த எலெக்ஷன்ல நிற்கச்சொல்லி தூண்டியவரே வரதராஜன்தான். அவர் எப்படி இந்த மாதிரி செய்வார்?'
'ஆனால் எல்லோருக்கும் மெஸேஜ் வந்திருக்கே அபி. அதுவும் அவருடைய செல்போனிலிருந்துதான் வந்திருக்கு'.
'இருந்தாலும் அவர் இப்படி செய்திருப்பார்னு நம்ப முடியலை சார். ஒருவேளை அவருடைய செல்போனிலிருந்து வேறு யாராவது அனுப்பியிருந்தாங்கன்னா?. அவருடைய ஆஃபீஸில் செக் பண்ணினீங்களா?'
'பண்ணினோம் அபி, ஆனா அவர் இன்னைக்கு ஆஃபீஸுக்கே வரலையாம். வீட்டுக்கு போன் பண்ணினால், அவர் ஊரில் இல்லைன்னு பதில் சொல்றாங்களாம். அது மட்டுமில்லே, அவருடைய ‘ஓட்’டையும் ஆதிக்கே அளிப்பதாக எழுதியனுப்பியிருக்காராம். என்ன செய்றதுன்னே தெரியலை அபி'.
'வாங்க சார், அவர் வீட்டுக்குப்போய் அவர் மனைவியிடம் விசாரிப்போம்'.
புறப்பட்டுப்போகிறார்கள். இப்போது ஆர்த்தியின் முகம் குளோஸப்பில். இது ஆதியண்ணாவின் வேலைதான் என்று அறிந்து முகம் முழுக்க திருப்தி...
வரதராஜன் வீடு....
'சொல்லுங்கம்மா, என்ன நடந்தது?'
'ஆஃபீஸ் போனவர் அங்கிருந்து போன் பண்ணினார். தான் உடனடியா மும்பை போவதாகவும், அவசரமாகப் போவதால் அங்கிருந்து நேரடியாகப்போவதாகவும் வீட்டுக்கு வந்து போக நேரமில்லைன்னும் சொன்னார். அவர் வழக்கமாக இப்படி போகிறவர் இல்லை. என்ன அவசரமானாலும் வீட்டுக்கு வந்துட்டுத்தான் போவார். அது மட்டுமில்லே, நான் போன் பண்ண வேண்டாமென்றும் தேவையானால் அவரே போன் பண்ணுவதாகவும் சொன்னார். எனக்கும் குழப்பமாக இருக்கிறது'.
'வேற் எதுவும் சொல்லலைங்கிறீங்க. அப்படீன்னா அவர் எல்லோருக்கும் மெஸேஜ் அனுப்பினது உங்களுக்கு எப்படி தெரியும்?'
'அவர் போன் பண்ணிய கொஞ்ச நேரத்துக்கெல்லாம், ஏகப்பட்ட பேரிடமிருந்து வீட்டுக்கு போன் வந்ததே. அவங்கதான் சொன்னாங்க'.
அபி குழப்பமாக ராஜாமணியையும் விஸ்வநாதனையும் பார்த்து...
'சார், இதுல ஏதோ சதி நடந்திருக்கு. இது அந்த ஆதியோட வேலையாகத்தான் இருக்கும். எதுவாக இருந்தாலும் வரதராஜன் வந்த பிறகுதான் விவரம் தெரியும்'.
'என்ன சொல்றே அபி, அவர் வருவதற்குள் எலக்ஷன் முடிஞ்சிடும்'
'வேறு என்ன செய்றது சார்?'.
அப்போது, வரதராஜனின் ஆதரவாளர்கள் இரண்டு பேர் அந்த வீட்டுக்கு வருகிறார்கள். அவர்களிடம் விஸ்வநாதன்....
'சார், அந்த மெஸேஜ் செய்தியை நம்பாதீர்கள். அது ஏதோ சூழ்ச்சி இருக்கு. நீங்க ஏற்கெனவே முடிவு செஞ்சபடி அபிக்கே ஓட்டுப்போடுங்க'.
'அது எப்படி சார்?. உங்களுக்கு போடச்சொன்ன வரதராஜனே இப்போ வேணாம்ங்கிறார். நாங்க அவர் சொல்றதைத்தானே கேட்க முடியும். மறுபடியும் அவர் சொன்னார்னா போடுறோம்' அவர்கள் போய்விடுகிறார்கள்.
அபிக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை 'இப்போ என்ன சார் பண்றது?'
'உடனடியா அசோஸியேஷன் போய், நம்முடைய ஆதரவாளர்களை அழைத்து மீட்டிங் போட்டு விஷயத்தைச்சொல்லி அவங்க ஆதரவை தக்க வைப்போம்'.
'ஆமா சார்... அதுதான் சரி. கிருஷ்ணன் நீங்க ஆஃபீஸ் போங்க. நாங்க மூணு பேரும் அங்கே போயிட்டு வர்ரோம்'.
மேனகாவும், ஆதியும் பில்லியர்ட்ஸ் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள்....
'எப்படி ஆதி, சொன்ன மாதிரி ஒரே நாளில் சிச்சுவேஷனையே திசை மாத்திட்டீங்க' (என்னவோ தெரியலை, இரண்டு நாளாக மேனகா படு கூல்).
'அதான் சொன்னேனே மேம், ஒரு ஐடியா வச்சிருக்கேன்னு'.
'இருந்தாலும் ஸ்ட்ராங்கா நின்ன அந்த வரதராஜன் எப்படி மாறினார்?. எதை வச்சு மயக்கினீங்க?. பணம் கொடுத்தா? நோ, அதுக்கு சான்ஸ் இல்லை. அவரது வேறெந்த வீக்னஸையாவது பயன்படுத்தி.... (முரட்டு மேனகாவுக்கும் கூட இந்த இடத்தில் நாணம்).. No, that is also not possible. வேறெப்படி?'
'மேம், நான் இன்னும் எலக்ஷன்ல ஜெயிச்சுடலை. அதுக்கான வழியை மட்டும்தான் பண்ணியிருக்கேன். முழு வெற்றி கிடைக்கட்டும். அப்புறம் எல்லாத்தையும் விவரமா சொல்றேன்'.
'என்ன ஆதி, இந்த மேனகாவுக்கே சஸ்பென்ஸா?. எப்படியோ நான் நினைச்சதை விட நீங்க ரொம்ப ஸ்மார்ட்டா இருக்கீங்க. Good'
மேனகாவின் பாராட்டுக்களும், அவளது (இதுவரை பார்த்திராத) சிரிப்பும் ஆதியைப் பறக்க வைக்கிறது. அப்போது அங்கு பிருத்வி வருகிறான்.... 'அலோ மேக்'
'பிருத்வி, ஐ ஆம் நாட் மேக், ஐ ஆம் மேனகா. ஒண்ணு மேனகான்னு கூப்பிடு அல்லது மேடம்னு கூப்பிடு. இந்த செல்லப்பெயர் எல்லாம் வேண்டாம். இதோ பார் நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கவும் விரும்பலை. வேலை கொடுக்கவும் விரும்பலை. ஏதோ அப்பா சொன்னதுக்காக பொறுத்துக்கிட்டு இருக்கேன். Now get out from here'.
'ஸாரி மிஸ்ட்டர் ஆதி, இந்த பிருத்வி என் மூடை ஸ்பாய்ல் பண்ணிட்டான். We will see later'.
பிருத்வியை மேனகா விரட்டுவது ஆதியை மேலும் உற்சாகமாக்குகிறது.
:ty:Quote:
Originally Posted by saradhaa_sn
ஆதிக்கு
உஷா
தம்பியின் மனைவி -ரேகா
இப்ப மேனகா
ம்ம்
அடங்கல
ஆதியை சந்திக்க வரும் தேவராஜ பாண்டியனை கிரி ஆதியிடம் அழைத்துப்போகிறான்...
'பாஸ், தேவராஜன் உங்க கிட்டே ஏதோ முக்கிய விஷயம் பேசணுமாம்'
'அப்படீன்னு நான் உன் கிட்டே சொன்னேனா?'
'இல்லே தேவராஜன், நீங்க வந்தா அது முக்கியமானதாகத்தான் இருக்கும்னு'.... (எப்படியாவது பாஸின் ரகசிய நடவடிக்கையைத் தெரிஞ்சுக்கணும்னு கிரிக்கு ஆவல்)
தேவராஜ் ஆதியைப்பார்க்க, அவன் கிரியை வெளியே அனூபுகிறான்.
'என்ன தேவராஜ், எல்லாம் எந்த லெவல்லே இருக்கு?. ஏன் கேட்கிறேன்னா இப்போ அனுப்பியிருக்கும் ஆளுங்க புதுசு. அதுக்குத்தான் கேட்டேன்'.
'தம்பி, அவங்க நமக்குத்தான் புது ஆளுங்க. ஆனா இந்த மாதிரி வேலைகளுக்கு பழைய ஆளுங்க'
மேற்கொண்டு பேசப்போன தேவராஜனைத்தடுத்து, கதவுப்பக்கம் காட்ட, கண்ணாடிக்கு வெளியே யாரோ நின்று ஒட்டுக்கேட்பது தெரிகிறது. ஆதி சடாரென கதவைத்திறக்க அங்கு நின்றது கோமாளி கிரிதான். ஆதி அவனை மீண்டும் எச்சரித்து விரட்டிவிடுகிறான்.
'சொல்லுங்க தேவராஜன். நான் எதுக்கு சொல்றேன்னா நாம அனுப்பின ஆளுங்க சொதப்பிடக்கூடாது. முக்கியமா அந்த வரதராஜன், எலக்ஷன் முடிகிற வரையில் அங்கிருந்து வெளியே போயிடக்கூடாது. மேலும் இதுக்குப்பின்னால் நாம் இருப்பது தெரியவே கூடாது' (வேடிக்கையாக இல்லை?. அவரை மிரட்டி ஆதிக்கு ஓட் பண்ணும்படி சொல்லச்சொன்னது யாராக இருக்கும்னு தெரியாதா என்ன?).
'கவலையை விடுங்க தம்பி. அதான் எல்லாம் நாம பிளான் பண்ணபடி நடக்குதில்ல'
'இல்லை தேவராஜன்... நான் ஜெயிச்சு மீண்டும் பிரஸிடெண்ட் சேர்ல உட்காரும் வரை எனக்கு டென்ஷன் குறையாது'.
காரை விட்டிறங்கிய தொல்காப்பியன் யாருக்காகவோ வெயிட் பண்ணிக்கொண்டிருக்கும்போது, சற்று தூரத்தில் ஒரு ஆட்டோவில் இருந்து கிருஷ்ணன் இறங்குவதைப்பார்த்ததும்....
'சார்.... கிருஷ்ணன் சார்'.
'அடடே தொல்காப்பியனா?. என்ன சார் இந்த இடத்துல நிக்கிறீங்க?'
'ஒரு ஆளுக்காக வெயிட் பண்ணிக்கிட்டிருக்கேன். நீங்க எங்கே இங்கே?'
'பக்கத்துலதான் நம்ம வீடு. வாங்க வீட்டுக்குப்போய் ஒரு வாய் காப்பி சாப்பிட்டுகிட்டே பேசலாம்'
'பரவாயில்லே கிருஷ்ணான். சரி கம்பெனி நிலவரம் எல்லாம் எப்படி இருக்கு?. அபி நல்லா இருக்காங்களா?'
'நல்லாத்தான் இருந்தாங்க... ஆனா இப்போ.....' கிருஷ்ணன் இழுப்பதைக்கண்ட தொல்ஸ், 'என்ன கிருஷ்ணன், என்ன ஆச்சு?'
'அதை ஏன் சார் கேட்கிறீங்க, அவங்க பாட்டுக்கு தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்தவங்களை, பில்டர்ஸ் அசோஸியேஷனைச்சேர்ந்த வரதராஜன், தேவையில்லாமல் பிரஸிடெண்ட் எலக்ஷன்ல நிக்க வச்சுட்டு, இப்போ திடீர்னு காலை வாரிட்டார். அபி இப்போ அந்த டென்ஷன்ல இருக்காங்க'.
'என்ன சொல்றீங்க கிருஷ்ணன்?. அந்த வரதராஜனை எனக்கு நல்லாவே தெரியும். அவர் ரொம்ப நல்லவ்ராச்சே'.
'இப்படி எல்லோர்கிட்டேயும் நல்ல பெயர் வாங்கி, அதை நல்ல விலைக்கு வித்துட்டார். அந்த ஆதிக்கு ஓட் போடசொல்லி எல்லா மெம்பர்ஸுக்கும் மெஸேஜ் அனுப்பிட்டு மும்பைக்கு தலைமறைவா போயிட்டார்'.
'என்னாலே நமப் முடியல கிருஷ்ணன். இப்பவும் சொல்றேன், அந்த வரதராஜன் ரொம்ப நல்லவர். இதுல அந்த ஆதியும் சம்மந்தப்பட்டிருப்பதால் ஏதோ நடந்திருக்குன்னு தெரியுது'.
'சரி, தொல்காப்பியன். நான் வர்ரேன்'.
அபியின் அலுவலக மீட்டிங் அறை. அபி, விஸ்வநாதன், ராஜாமணி மற்றும் வரதராஜனின் ஆதரவாளர்கள் சிலர். எல்லோரும் தங்களுக்குள் கசமுசவென்று பேசிக்கொண்டிருக்க, அபி அவர்களின் கவனத்தைத் திருப்ப....
'சைலன்ஸ்... இப்போ நாம எல்லோரும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வர வந்திருக்கோம். அப்படியிருக்க உங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தால் எப்படி?'
'எதைப்பத்தி முடிவு செய்யணும்?. அதான் அந்த ஆதிக்கு ஓட் போடச்சொல்லி வரதராஜன் சொல்லிட்டாரே. நாங்க அவர் தயவுல தொழில் பண்றவங்க. பேசாமல் அவர் சொல்றபடி செஞ்சுட்டுப் போக வேண்டியதுதான்'.
விஸ்வநாதன்: 'என்ன சொல்றீங்க?. அவரே நேர்ல வந்து சொன்னாரா?. வெறும் எஸ்.எம்.எஸ்.தானே. அதை வேறு யாரும் கூட அனுப்பியிருக்கலாமில்லையா?'
'அவர் அதோடு நின்னா நீங்க சொல்ற மாதிரி நடந்திருக்கலாம்.ஆனா அவர் மும்பை போறதா அவர் மனைவி கிட்டே சொல்லியிருக்கார். அதோ அவருடை 'ஓட்'ட்டைக்கூட ஆதிக்கே அளிப்பதாக தபால் மூலமா எலக்ஷன் கமிட்டிக்கு அனுப்பியிருக்காரே'.
'இருந்தாலும் அவர் நேர்ல வந்து சொல்ற அவரைக்கும் அவர் முன்பு சொன்ன மாதிரியே அபிக்கு நீங்க ஆதரவு அளிக்கலாமில்லையா?'
'என்ன சார் சொல்றீங்க நீங்க?. நாளைக்கே அவர் வந்து 'நான்தான் ஆதிக்கு போடச்சொன்னேனே, ஏன் அபிக்குப் போட்டீங்க'ன்னு கேட்டா அவருக்கு யார் பதில் சொல்றது?'
'ஏங்க உங்க எல்லோருக்குமே தெரியும், அவர் அந்த ஆதி பதவிக்கு வருவதை எவ்வளவு வெறுத்தார்னு. அப்படியிருக்க வெறும் ஒரு மெஸேஜை மட்டும் நீங்க நம்புவது முட்டாள்தனமா இருக்கு'. விஸ்வநாத்னின் இந்த பேச்சு அவர்களுக்கு கோபத்தை உண்டாக்க
'என்ன சார் இது, நீங்க கூப்பிட்டதுக்காக வந்தோம்னா நீங்க பாட்டுக்கு முட்டாள் அது இதுன்னு பேசுறீங்க?. இதோ பாருங்க சார், ஏற்கெனவே வந்த மெஸேஜ் மாதிரி இப்போது அபிக்கு ஓட்டு போடச்சொல்லி வரதராஜனிடமிருந்து மெஸேஜ் வரட்டும். பார்ப்போம். அது வராதவரையில் ஆதிக்குத்தான் எங்கள் ஆதரவு. எல்லோரும் வாங்க போகலாம்'.
இப்போது மூவர் மட்டும் த்யனியே...
'என்ன அபி, இப்படி ஆயிடுச்சு?'
'சார் இந்த எலக்ஷன்ல நாம ஜெயிக்கிறோம்'.
'எப்படி அபி, அந்த வரதராஜனின் ஆட்களுடைய சப்போர்ட்லதானே நாம் கான்ஃபிடெண்டா இருந்தோம்?. அது இல்லேன்னா ஆதிக்குத்தானே பலம் அதிகம். அதோடு இப்போ வரதராஜனின் சப்போர்ட் ஓட்டுக்களும் அவனுக்கு சேர அவனுடைய வெற்றி உறுதியாகி விட்டதே'.
அபியின் கண்களில் தீர்க்கமான வெறி.... 'இல்லே சார், நாம ஜெயிக்கணும். அதுக்கு முதல் வேலையா வரதராஜன் எங்கேன்னு கண்டு பிடிக்கணும்'.
'நாளைக்கு எலக்ஷனை வச்சிக்கிட்டு இதெல்லாம் நடக்கிற காரியமா அபி?. அவர் மும்பைக்குப்போரேன்னு சொல்லியிருக்கார். அவரை எப்படி நம்மால் தேட முடியும்'.
'நம்மால் முடியாது சார்.... ஆனா போலீஸால் முடியும். நாம் போலீஸில் புகார் செய்வோம்'.
என்ன விலை கொடுத்தாகிலும் அந்த ஆதியை இந்த தேர்தலில் ஒழிச்சுக்கட்ட வேண்டும் என்ற வைராக்கியம் இப்போது அபியின் கண்களில். (Wow.... what an expression Dhevayani....!!!!)
எனக்கென்னவோ, ஆதியைப்பார்த்தால் (ரஞ்சனைப்போல) பெண்கள் பின்னால் சுற்றுபவனாத் தோன்றவில்லை. ரேகாதான் அவனிடம் வழிகிறாளே தவிர, அவன் ரேகாவை தவறான எண்ணத்தில் அணுகவில்லை.Quote:
Originally Posted by aanaa
அவனுடைய குறிக்கோள் எல்லாம் ஆஸ்தி, பணம், தொழில், அந்தஸ்து மோகம், தான் என்ற அகம்பாவம், ஈகோ, ஆணாதிக்க வெறி இவைகள்தான். அவன் மனதுவைத்தால் எத்தனையோ அழகான பெண்களை தினம் தினம் அடைய முடியும். ஆனால் அது அவனது நோக்கமாக தெரியவில்லை. சமுதாயத்தில் தனது 'ஸ்டேட்டஸ்' உயரத்தில் இருக்க வேண்டும். அதற்காக எந்த ஒரு கிரிமினல் வேலையும் செய்யத் தயாராக இருப்பவன்.
இப்போது அவன் மேனகாவை அடைய விரும்புவது கூட அந்தஸ்து மோகத்தினாலேயேதான். 'இண்டர்நேஷனல் பிஸினஸ் உமன்' மேனகாவின் கணவன் என்ற இன்னொரு ஸ்டேட்டஸுக்காகத்தான்
:ty:Quote:
Originally Posted by saradhaa_sn
:exactly:
Thanks for the updates.
oru vara serial-la orE naaLla padichachu :D
:ty: saradha madam :)
thank u saradha madam. ('::')
While reading the dialogues, we can imagine the way & style of dialogue delivery of each charector.
tv munnAl utkArndhu pArkira mAthiriyE irukku.... :D :D
நன்றி ஆனா, கீதா, லதா, கார்த்திக் & ஆர்த்தி.....
டிடெக்டிவ் ஏஜென்ஸியைச்சேர்ந்த சித்ராவின் வீட்டுக்கு தொல்காப்பியன் வந்து பஸ்ஸரை அழுத்த, கதவைத்திறந்து பார்க்கும் சித்ராவுக்கு சந்தோஷ அதிர்ச்சி... என்னது, தொல்காப்பியனா?. அதுவும் நம்ம வீடு தேடி வந்து...?
'என்ன அப்படிபார்க்கிறீங்க சித்ரா?'
'இல்லே நீங்க என் வீடு தேடி வந்து..., ஆச்சரியமா இருக்கு சார். காப்பி, டீ எதாவது...., சரி வேண்டாம் டிஃபனே ரெடி பண்ணிடுறென். ரென்டு பேர்ம் சாப்பிட்டுக்கிட்டே பேசுவோம்.'
'வேண்டாம் சித்ரா. நாம போற வழியிலே டிஃபன் சாப்பிட்டுக்கலாம்'.
'போற வழியிலா?. அப்படீன்னா நாம ரென்டு பேரும் இப்போ வெளியிலே போறோமா?'
'ஆமா சித்ரா, இப்போ எனக்கு உங்க உதவி வேண்டும். அதுக்காகத்தான் வந்திருக்கேன்'.
'உதவியா?. என்ன உதவி?'
'அதை வண்டில போகும்போது சொல்றேன்'
'அப்படீன்னா இப்போ வெறும் காஃபி மட்டுமாவது சாப்பிட்டுட்டுப் போவோம், ஜஸ்ட் எ மினிட்'.
கிச்சனுக்குள் போகும் சித்ரா, அங்கிருந்து தன் பாஸுக்கு போன் செய்து விவரம் சொல்கிறாள்.
'அப்படியா?. கண்டிப்பா அவரோடு போ சித்ரா. அவருக்கு உதவி செய்யும் சாக்கில் அவரோடு நெருக்கமாகப்பழகும்போது, நமக்குத்தேவையான மேலும் பல தகவல்கள் கிடைக்க வாய்ப்புண்டு. முக்கியமா, அவர் ஏண் மேனகாவைக்கொல்ல (????) முயற்சிக்கிறார்னு நமக்குத்தெரியணும். கவனம்'
'சரி சார்' போனைக் கட் பண்ணிட்டு கூடத்துக்கு வருகிறாள்.
'போவோமா சார்?'
'என்னங்க காஃபி போட்டுக்கிட்டு வரேன்னு போனீங்க?'
'ஓ.. மறந்துட்டேன் சார். இப்போ போட்டுக்கிட்டு வந்திடுறேன்'
'அப்போ இவ்வளவு நேரம் உள்ளே என்ன பண்ணினீங்க?'
'ஸாரி, காஃபி பொடியில்லை. அதான்'
'அப்படீன்னா, இப்போ ஏன் காஃபி கொண்டாறேன்னு போறீங்க?. சரியா போச்சு போங்க. உங்களை ஒரு முக்கியமான வேலைக்கு அழைச்சிக்கிட்டுப்போகலாம்னா, நீங்க இப்படி தடுமாறுறீங்க?'
'அதெல்லாம் ஒண்ணுமில்லை சார், வாங்க போகலாம்'.
அபியின் வீடு.... ஆனந்தி, ஆர்த்தி, கற்பகம் ராஜேந்திரன் இருக்கின்றனர். அபி இல்லை.
ஆர்த்தி இதுதான் சமயமென்று குத்திக்காட்டுகிறாள்... 'நான் அப்பவே சொன்னேன். இந்த எலக்ஷன், பிரஸிடெண்ட் பதவியெல்லாம் வேண்டாம்னு. யார் கேட்டாங்க?. அதுல ஜெயிச்சு வர்ரதெல்லாம் நாம நினைக்கிற மாதிரி அவ்வளவு சுலபமில்லை'.
'இப்போ எதுக்கு அக்காவைக் குத்தம் சொல்றே. அக்கா செஞ்சது ஒண்ணும் தப்பில்லை'.
'அபியக்கா இப்படி இதுல இறங்கிறதுக்கு நீயும்தான் ஒரு காரணம் அக்கா. சும்மா தன்னம்பிக்கை அது இதுன்னு நீ பத்திரிகையில எழுதுறதை வச்சிக்கிட்டுதான் அக்கா இப்படியெல்லாம் துணியுது. இப்போ என்ன ஆச்சு பார்த்தீல்ல?'
'இப்போஎன்ன நடந்திடுச்சுன்னு இப்படி குதிக்கிற ஆர்த்தி?'
'இன்னும் என்ன நடக்கணும்?. அந்த வரதராஜனை நம்பியெல்லாம் இறங்க வேண்டாம்னு சொன்னேன். அக்கா கேட்டுச்சா?. இப்போ சமயம் பார்த்து அந்த ஆள் காலை வாரிட்டார். ஏம்மா, இதெல்லாம் நீயாவது எடுத்துச்சொல்லக்கூடாதா?'
'ஆர்த்தி, இப்போ எதுக்கு அம்மாவிடம் அதையும் இதையும் சொல்லி பயமுற்த்துறே?'
'ஆனந்தி, எனக்கென்னமோ ஆர்த்தி சொல்றதுதான் சரின்னு படுது'.
'அம்மா, நீ இவள் சொல்றதைக்கேட்டு பயப்படாதே. அக்கா நிச்சயம் இந்த தேர்தல்ல ஜெயிக்கத்தான் போகுது'.
'எப்படிக்கா ஜெயிக்க முடியும். அந்த வரதராஜன்தான் தன் ஆதரவை ஆதிக்கு கொடுத்திட்டாரே. இப்போ மட்டும் இதுல தோத்திட்டா அதைவிட அவமானம் இல்லை. அதைத்தான் அந்த ஆதி எதிர்பார்க்கிறான். அக்கா மட்டும் தோற்கட்டும். அப்புறம் ஒவ்வொருத்த்ராக வந்து அவமானப்படுத்திட்டுப்போவாங்க. அது நமக்குத்தேவையா?'
'ஆர்த்தி, நீ ஏன் அக்கா தோற்கும்னே நினைக்கிறே?. நிச்சயம் அக்கா ஜெயிக்கப்போகுது பாரு'.
இப்போ ராஜேந்திரன், 'ஆர்த்தி, அதான் அபி ஜெயிக்கும்ணு ஆனந்தி சொல்லிடுச்சில்ல, நீ கிளம்பு. இருந்தால் எதையாவது சொல்லிக்கிட்டே இருப்பே'.
'நான் என்ன சொல்றேன்னா, இப்போ கூட தேர்தல்லேருந்து வாபஸ் வாங்க வாய்ப்பு இருக்கு'.
'ஆர்த்தி, மாமா சொன்னதுதான் சரி... முதல்ல நீ இங்கிருந்து கிளம்பு'
சித்ராவை காரில் அழைத்துவரும் தொல்காப்பியன், ஓரிடத்தில் இறக்கி விடுகிறான்.
'சித்ரா, இதோ இந்த கடைசியில் போய் திரும்புனீங்கன்னா, அதுதான் தேவராஜன் வீடு. நீங்க பிரஸ் ரிப்போர்ட்டர் மாதிரி போய் பேசுங்க. நீங்க ஒரு பெண்ங்கிறதாலே கொஞ்சம் அசால்ட்டா பேசுவான். அவன் வாயிலிருந்து ஒரு சின்ன மேட்டர் கிடைச்சா கூட போதும். வரதராஜன் எங்கேன்னு கண்டுபிடிச்சிடலாம்'.
போகிறாள். வாசலில் நிற்கும் தடியன்கள், தேவராஜனிடம் அனுமதி கேட்டு உள்ளே அனுப்புகின்றனர். மொட்டை மாடியில் நிற்கும் தே.பா.வை சித்ரா சந்திக்கிறாள்.
'சார், நான் மும்பையிலிருந்து வெளியாகும் 'தி வீக்லி கண்டெயினர்' என்ற பத்திரிகையின் நிருபர். உங்களைப் பேட்டி எடுக்க வந்திருக்கேன்'.
'உங்க பத்திரிகை பெயரை நான் கேள்விப்பட்டதேயில்லையே. சரி எதுக்காக என்னை பேட்டியெடுக்கணும்'.
'சார், மும்பைலா மஸ்தான், வரது பாய் இவங்களைப்போல சென்னையில் நீங்க பெரிய தாதான்னு உங்க பெயர வடநாட்டிலெல்லாம் பரவியிருக்கு. அதனால்தான் உங்களது பேட்டி எங்கள் பத்திரிகையில் வரணும்னு விரும்புகிறோம்'.
சற்று தூரத்தில் நிற்கும் தன் அடியாட்களை பெருமையுடன் பார்த்துக்கொள்ள, சித்ரா டேப் ரிக்கார்டரை ஆன் செய்து அவன் அருகே நீட்டுகிறாள்.
'நீங்க ஏன் இன்னும் அரசியலில் இறங்கவில்லை?'
'இங்கே லோக்கல் வேலைகளே நமக்கு நிறைய இருக்கு'
'இல்லே சார் நீங்க அரசியலில் இறங்கினால் பெரிய ஆளா வருவீங்கன்னு எல்லோரும் கணிக்கிறார்கள்'.
அப்போது தேவராஜனுக்கு போன் வர, சற்று நகர்ந்து போய் பேசுகிறான்...
'எங்கே வச்சிருக்கே. அமரன்பேட்டை குடோனிலா?' என்றவன் சட்டென சித்ரா இருப்பதைஅய்றிந்து சுதாரித்து... 'அந்த இடம்தான் தேவலை சரக்குகள் பாதுகாப்பாக இருக்கும். சரக்குகளை அங்கேயே வை' போனை கட் பன்னிவிட்டு சித்ராவிடம் வருகிறான்...
'அதாவது, நான் அரசியல்ல இறங்கணும்னா அடுத்த ஆண்டுதான் இறங்கணும்'.
'ஏன் சார்?.'
'இப்போ எனக்கு கிரகம் சரியில்லை. அடுத்த வருடம்தான் குரு வந்து சேர்கிறான். அப்போ அரசியலில் ஈடுபட்டால், பிரதமாகக் கூட வர வாய்ப்பிருக்கிறது'
மேலும் சில கேள்விகளோடு பேட்டியை முடித்துக்கொண்டு தொல்காப்பியனின் காருக்கு வருகிறாள். அவளால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
'எதுக்காக இப்படி சிரிக்கிறீங்க?'
'இல்லே அடுத்த வருஷம் நமக்கு ஒரு அருமையான பிரதமர் கிடைக்கப்போகிறார்' என்று சொல்லி நடந்ததைச்சொல்ல, அதற்கு தொல்ஸ்...
'அதுக்காக ஏன் சிரிக்கிறீங்க சித்ரா. திருவேங்கடமெல்லாம் எம்.எல்.ஏ. ஆகும்போது, தேவராஜன் பிரதமரானால் ஆச்சரியமில்லை. சரி, நமக்கு தேவையான விவரம் எதுவும் கிடைச்சதா?'
'ஆம், நான் பேட்டியெடுக்கும்போது அவனுக்கு ஒரு போன்கால் வந்தது. அவன் பேசும்போது 'அமரன்பேட்டை குடோனிலா வச்சிருக்கே' என்று கேட்டவன், என் நினைவு வந்ததும் பேச்சை மாற்றினான்'.
'என்னது அமரன்பேட்டை குடோனா?. அப்போ அங்கேதான் வரதராஜனை அடைச்சு வச்சிருக்கணும்'.
thanks saratha
:ty:Quote:
Originally Posted by saradhaa_sn
தொல்ஸ்' க்குத் தெரியாததா ..ம்ம்ம்ம்ம்ம்
நன்றி லதா மற்றும் ஆனா....
துணை போலீஸ் கமிஷனர் அலுவலக்த்தில் அவர் முன் அபி, விஸ்வநாதன், ராஜாமணி ஆகியோர் அமர்ந்திருக்க.....
'சொல்லுங்க, என்ன விஷயமா கம்ப்ளைண்ட் கொடுக்கப்போறீங்க?'
'பில்டர்ஸ் அசோஸியேஷனைச்சேர்ந்த வரதராஜனைக் காணோம். அவரைக் கண்டுபிடிக்கணும்'
'அவர்தான் மும்பைக்குப்போறதா சொல்லிப்போயிருக்காரே?'
'இல்லே சார் எங்களுக்கு சந்தேகமா இருக்கு. அவர் கடத்தப்பட்டிருக்கக்கூடும்னு நினைக்கிறோம்'.
'சரி அப்படியென்றாலும் அவரது மனைவியோ, பிள்ளைகளோ, அல்லது உறவினர்களோ தான் கம்ப்ளைண்ட் கொடுக்க முடியும்'.
'அவர் மேலே எங்களுக்கும் அக்கறை இருக்கு சார்'.
'என்ன அக்கறை?. அவரைக்கொண்டு நீங்க இந்த தேர்தல்ல ஜெயிக்கணும். அந்த அக்கறைதானே'.
'சார் நீங்க ஆக்ஷன் எடுப்பீங்கன்னுதான் லோக்கல் போலீஸிடம் கூட கம்ப்ளைண்ட் பண்ணாமல் உங்க கிட்டே வந்திருக்கோம்'.
அப்போது ஒரு இன்ஸ்பெக்டர் வந்து ஏ.சி.க்கு சல்யூட் அடித்துவிட்டு, தொடர்கிறார்....
'சார், நான் இப்போ பில்டர்ஸ் அசோஸியேஷன்லேர்ந்துதான் வர்ரேன். வரதராஜன் என்பவர் மும்பைக்குப்போயிருக்கார். அவருடைய செல்போனிலிருந்து தன் ஆதரவாளர்கள் எல்லோருக்கும் மெஸேஜ் அனுப்பியிருக்கார். அதோடு தன்னுடைய ஓட்டையும் தபால் மூலமாக ஆதித்யாவுக்கு அளித்துள்ளார். அவர் மனைவியிடம் விசாரித்ததில் அவர் மும்பை போயிருப்பதாக சொல்றாங்க. அவங்க கம்ப்ளைண்ட் எதுவும் கொடுக்க விரும்பவில்லை'
'கேட்டுக்கிட்டீங்களா?. வேணும்னா நான் ஒண்ணு செய்யலாம்'
அஸிஸ்டண்ட் கமிஷனர் ஏதோ சொல்லத்துவங்க, அபி ஒரு முடிவோடு எழுந்திருக்கிறாள்
'வேணாம் சார். நீங்க ஒண்ணும் செய்ய வேண்டாம். நாங்க பார்த்துக்கிறோம். ஆனா ஒண்ணு எங்களுக்கெதிரா யார் என்ன செஞ்சாலும் இந்த தேர்தல்ல நான் ஜெயிக்கிறது நிச்சயம். வாங்க போகலாம்'. அபி வெளியே நடக்க, விஸ்வநாதனும் ராஜாமணியும் பின்தொடர்கின்றனர்.
அலமேலுவின் வீடு.... அலமேலுவின் சூழ்ச்சிப்படி அவளது உதவாக்கரை மருமகன் ஒரு சாமியாரை அழைத்து வர, அவனிடம் அலமேலு பில்லி சூனியம் வைக்குமாறு சொல்ல, அவன் பணத்தில் குறியாக முதலிலேயே ஐயாயிரம் ரூபாய் வாங்கிக்கொள்கிறான்.
'சாமி அந்த அபி இருக்காளே அவள் மொத்தக்க்குடும்பமும் நாசமா போகணும். அந்த அபிக்கு கை கால் விளங்காமல் போகணும், அவள் தங்கச்சி ஆனந்திக்கு மீண்டும் தலையில் அடிபட்டு படுத்த படுக்கையாகணும், அந்த ஆர்த்திக்கு வாய்பேசமுடியாமல், காதுகேட்காமல் போகணும். எல்லாத்துக்கும் மேலாக அவங்க அம்மா கற்பகத்துக்கு பைத்தியம் பிடிக்கணும். இதுக்கெல்லாம் நீங்கதான் சாமி ஏவல் செய்யணும்'.
'கவலைப்படாதீங்கம்மா. என் வசம் பத்து சாத்தான்களை வசப்படுத்தி வச்சிருக்கேன். நீங்க சொன்ன மாதிரி என்ன செய்றேன் பாருங்க'.
அலமேலுவுக்குத்தெரியாமல் மறைவில் நின்று கேட்டுக்கொண்டிருக்கும் சங்கீதாவுக்கு அதிர்ச்சி... 'இப்படியும் பொம்பிலை இருப்பாளா..??'
சாமியார் ஏதோ வாயில் நுழையாத வார்த்தைகளை மந்திரம் என்ற பெயரில் உச்சரித்துக்கொண்டே எதோ ஒரு பொடியைத்தூவ, புகை கிளம்புகிறது. அந்த சமயம், வாசலில் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு, பூஜை நடக்கும் இடத்தின் கதவை சாத்திக்கொண்டு, வாசல் கதவை அலமேலு திறக்க, வெளியே பாஸ்கர். அலமேலுவுக்கு அதிர்ச்சி...
'என்னடா பாஸ்கர் வந்துட்டே?'
'போன வேலை முடிஞ்சதும்மா. அதான் உடனே திரும்பிட்டேன்'. கூடத்துக்குள் நுழையப்போகும் பாஸ்கரை அலமேலு தடுத்து, மாடிக்குப்போகுமாறு சொல்ல, அம்மாவின் திடீர் குழைவில் அவனுக்கு சந்தேகம் வரும் நேரம், உள்ளே சாமியார் உரக்கச்சொல்லும் மந்திரம் அவன் காதில் விழ, அலமேலு தடுத்ததையும் மீறி அந்தக்கூடத்துக்குள் நுயைந்ததும் அவன் கண்ட காட்சி அவனுக்கு கோபத்தை அதிகமாக்குகிறது. சாமியாரை அடித்து விரட்டுகிறான்.
'என்னம்மா இதெல்லாம்?'
'எல்லாம் அந்த அபிக்கு எதிராகத்தாண்டா. அவளுக்கும் அந்த ஆனந்திக்கும் நடக்கப்போகும் கல்யாணம் நடக்கக்கூடாதுன்னுதான் இந்த சாமியாரைக்கொண்டு பில்லி சூனியம் வைக்கிறேன்'
'ஏம்மா, அறிவில்லை உனக்கு?. எத்தனை தடவை சொல்றது?. பாவம்மா அந்த அபி. நீ அவளுக்கு எவ்வளவோ கெடுதல் பண்ணியிருக்கியே பதிலுக்கு ஒரு தடவையாவது உனக்கு எதுவும் பண்ணியிருக்காளா?. அவளும் உன்னைப்போல ஒரு பெண்தானே. நான் ஆம்பிளை அவளுக்கு கெடுதல் செஞ்சாலும் அதைத் தடுக்க வேண்டிய நீயே என்னைத்தூண்டிவிட்டு பல கொடுமைகளைச் செய்ய வச்சுட்டே' (பக்கத்தில் நின்று கேட்டுக்கொண்டிருக்கும் சங்கீதாவுக்கு கணவனை நினைத்து முகமெல்லாம் பெருமை) 'பாவம்மா, இவ்வளவு கஷ்ட்டங்களை அனுபவிச்சுட்டு இப்போதான் கொஞ்சம் கொஞ்சமா முன்னேறிக்கிட்டு இருக்கா. அதுல மண்ணைப்போட நினைக்கிறியே. நீ நல்லா இருப்பியா?. ஏம்மா இப்படி புத்தி கெட்டு அலையிறே?'
இவ்வளவு மணல் தட்டுப்பாடான நேரத்திலும் தன் வாயில் லாரி, லாரியாக மண்ணைக் கொட்டிவிட்டுப்போகும் மகனை அதிர்ச்சியுடன் பார்க்கிறாள். 'அடப்பாவி, என்னடா இப்படி ஒரேயடியா மாறிட்டே'.
கிராமத்துப்பெண் லெட்டப்பில் சித்ராவை அழைத்துக்கொண்டு காரில் வரும் தொல்காப்பியன், குறிப்பிட்ட இடத்துக்கு வந்ததும் 'இந்த இடத்துக்குப்பெயர்தான் அமரன்பேடு. ஆனா, அந்த குடோன் எங்கேயிருக்குன்னு தெரியலையே. அதோ அந்த கட்டிடத்தைப்பாத்தால் குடோன் மாதிரியும் இருக்கு. ஃபேக்டரி மாதிரியும் இருக்கு. இருங்க யாரிடமாவது விசாரிக்கிறேன்'.
இறங்கி ஒரு ஓட்டுக்கட்டிடத்துக்குள் இருந்து ஒரு ஆளை அழைக்கும் தொல்ஸ், 'இங்கே அமரன்பேடு குடோன் எங்கேயிக்குங்க?'
'இதோ கொஞ்ச தூரத்துலதான் அமரன்பேரு. அங்கே நாளைஞ்சு குடோன் இருக்கு. யாருடைய குடோனைக் கேட்கிறீங்க?'
தொல்ஸ் சுதாரித்துக்கொண்டு, 'எனக்கு மாலிக் பாய் குடோனுக்குப்போகணும்'.
'மாலிக் பாய் குடோனா?. அது எதுன்னு தெரியலைங்களே'
'சரி, ரொம்ப நன்றிங்க. வரேன்'.
காருக்கு திரும்பி வரும் தொல்காப்பியன், 'சித்ரா, உங்களை கொஞ்ச தூரத்துல இறக்கி விடுறேன். நீங்க கோணிப்பையுடன் பழைய பேப்பர் பொறுக்குகிற மாதிரி அந்த கொடோன்களில் ஏதாவது ஆள் நடமாட்டம் தெரிகிறதான்னு பார்த்து எனக்கு தகவல் கொடுங்க. உங்களுக்கு ஆபத்து வருகிற மாதிரி தோன்றினால், உடனே என்னை செல்போனில் கூப்பிடுங்க'.
சித்ரா கையில் கோணிப்பையுடன், கிராமத்துப்பெண்ணாக இறங்கி நடக்கிறாள்...