Happy news Ravi sir about Pasamalar movie release that too in Royal theatre , hope it creates record of all sorts
Printable View
Happy news Ravi sir about Pasamalar movie release that too in Royal theatre , hope it creates record of all sorts
பிரபு ராம் பிறந்த நாளை (19/04/2014) முன்னிட்டு ,என்னை கவர்ந்த ,நடிகர்திலகத்தின் நடிப்பு சிறப்பின்,அவர் மற்றோர்களிடமிருந்து வேறு பட்டு நிற்பது எங்கே ,என்று விளக்கிய பதிவு.நடிகர்திலகத்தின் நடிப்பு ,அத்தனை படங்களிலும் சிறப்புதான் என்றாலும்,சில படங்களில் அவரை புரிந்த கதாசிரியர்கள்,இயக்குனர்களின் பங்களிப்பில் ,கூடுதலாக மிளிர்ந்ததின் காரணம் புரியும்.நடிகதிலகத்தை பற்றி,இன்றைய இளைய தலைமுறை அணுக வேண்டிய முறையே இதுதான்.(மற்ற படி இளைஞர்கள் அந்த கால முனுசாமி-மாணிக்கம் போல எழுதினால்... பெருமூச்சு விட்டு மௌனம் காப்பதை தவிர வேறு வழியில்லை)
P_R Old Post.
கிஞ்சித்தும் குறைவில்லாத என்று சொல்ல முடியுமா. நடிப்பைப் பத்தி சொல்கிறீர்களா, பாத்திரப்படைப்பையுமா?
பசும்பொன்னை எல்லா காட்சிகளும் நினைவில் இல்லை. ஆனால் அது பெரிய தேவர் அளவு பற்பல எண்ண ஓட்டங்கள், சூழ்நிலைகள் இருந்தனவா?
சிவாஜியின் சிறப்பம்சங்களில் ஒன்று - ஒரே நேரத்தில் பற்பல உணர்ச்சிகளை தெளிவாக வெளிப்படுத்துவது. கோவம்-அவமானம், கையாலாகாமை-வெறுமை, ஊர்த்தலைவனாக சோகம் - தந்தையாக பெருமிதம் - என்று மிக நுட்பமான தருணங்கள். அவை கமலுடைய எழுத்தின் ஆழத்தால் கைகூடியவை. இப்படிப்பட்டவருக்குத் தான் அப்படிப்பட்ட காட்சிகளை எழுத முடியும் என்பது needless to say.
பாரதிராஜாவின் signature ஒரு உணர்ச்சியை எடுத்துக்கொண்டு அதைத் தீவிரமாக வெளிப்படுத்துவது என்று சொல்ல நினைக்கிறேன். அத்தகைய ஒரு நடிப்பை சிவாஜியிடம் பெற்றுக்கொண்டார் என்று நினைக்கிறேன். நடிப்பளவில் ஒன்றுக்கொன்று குறை என்று சொல்வதற்கில்லை. அந்த கதை சொல்லும் முறை, காட்சி-படத்தின் அழகியலுக்குத் தகுந்தது. நீங்கள் குறிப்பிட்ட காட்சியில் அதைப் பார்க்கலாம்.
முதல்மரியாதை வேறு பிராணி - அதில் ஒரு sexual frustration undercurrent இருக்கும். அதை மிகக்கச்சிதமாகக் கையாண்டிருப்பார். அந்த flirtatiousness கொஞ்சம் பிசகினாலும் நன்றாக வந்திருக்காது. ஆனால் கதைக்கு அது மிக முக்கியம். என்றாலும் கூட ஒரு காட்சியில் அனேகமாக 'ஒரு உணர்ச்சி'யே மேலோங்கி நிற்கும். அதை சிறப்பாக வெளிக்கொணர்வதே அவர் பாணி என்பேன் (Let me know if any of you disagree, it would be interesting to hear).
ஆனால் கமல் - அவரது எழுத்துப் பொற்காலமான 89-95ல் எழுதிய கதைகளில் பல simultaneity of multiple emotions வந்துகொண்டே இருக்கும். சில நேரம் ஒரே காட்சியில் இருவேறு கதைமாந்தர்கள் இருவேறு விதமாக ரியாக்ட் செய்து கொண்டு இருப்பார்கள். ஒரு திரையெழுத்தாளராக தன்னைத் தானே challenge செய்துகொள்ளும் இடங்கள் அவை.
ஆனால் சிவாஜி கிடைத்ததும் ஒரே நபருக்கே ஒரே தருணத்தில் உருவாக்கி விளையாடியிருப்பார்கள். What fun he must have had writing those scenes with Sivaji in mind! He would have tried to up the challenge: let us make the emotions more and more complex, let us create more moments where the acting would shine through, where a crackle of the voice and demeanor would convey the emotion of the scene.
சிவா அவர்களுக்கு இலங்கை பம்மலார் என்ற பொருத்தமான பட்டத்தை வழங்கிய கோபாலுக்கு நன்றி. நடிகர் திலகத்தின் இலங்கை சாதனைகளையும் ஒப்பீடுகளையும் பார்க்கும் போது மகிழ்ச்சி. அதிலும் நடிகர் திலகத்தின் கருப்பு வெள்ளை படங்கள் மற்றவர்களின் கலர் படங்களையெல்லாம் பின் தள்ளி முன்னணியில் நின்று சாதனை படைத்ததை படிக்கும் போது பிரமிப்பு ஏற்படுகிறது. இது பற்றி கேள்விப்பட்டிருந்தாலும் இப்போது இலங்கையை சேர்ந்த ஒருவரே அந்த தகவல்களையெல்லாம் துல்லியமாக எழுதுவது சந்தோஷமான விஷயம். எதிரொலி எல்லாம் செம பிரமிப்பு.
ஜீவ் சார் பதிவிடும் தகவல்களும் சிவா சார் கொடுக்கும் தகவல்களும் ஒரே போலதான் இருக்கிறது. சிவாஜி ரசிகராக இருப்பினும் இலங்கை தகவல்களில் பிழை இருப்பின் அதை சுட்டிக் கட்ட ஜீவ்(சிவா) அவர்கள் தவறியதே இல்லை.
சிவா சார் 1972-லும் இப்போது 2013-லும் தவறான தகவல்கள் கொடுப்பதை(கொடுப்பதாக) சொல்கிறீர்களே
முரளி சார்
பம்மலார் எங்கே நான் எங்கே சார்
அவருடன் ஒப்பிடும் அளவிற்கு நான் துளியும் கிடையாது
இது என் பணிவான கருத்து
நீங்கள் எழுதியதில் தவறு இருப்பதாக நினைக்கின்றேன்
அதனை இங்கே குறிப்பிட்டுள்ளேன்
சரி பிழை உங்கள் பதிவில் திருத்தி எழுதிவிடுங்கள் நன்றி
அன்புள்ள ராகுல் , இந்த சின்ன வயதில் , தப்பு என்று சொல்வதை உடனே ஒப்புகொள்ளும் பரந்த மனது உங்களிடம் இருப்பதை நினைத்து பூரிப்பு அடைகிறேன் - நம்மிடம் வசிக்கும் ஈகோ , நம் தவறுகளை சரி என்றே நிரூபிக்க நம்மை தூண்டும் - அதனால் தான் வாழ்க்கையில் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன .
Kk வின் பாடல்களை அலசும் திறமை எனக்கில்லை - அருமையான பாடல் - காதல் என்றால் விரசமாக சித்தரிக்கும் இந்த நாளில் - ஒரு இல்லக்கிய நடையுடன் எழுதப்பட்ட வரிகள் - ck தான் சரியான நபர் - சில பாடல்களை அவரால் தான் அழகாக வர்ணிக்க முடியும் -
கேட்டவைகளில் பிடித்தது -13
பாடல் : சுதந்திர பூமியில்
படம் : தர்மம் எங்கே
Theme : You cannot reach for anything if your hands are still full of yesterday's junk
மனித குணத்தை மலர்களுடன் இவ்வளவு அழகாக ஒப்பிட்டு யாருமே பாடினதே இல்லை - எவ்வளவு ஆழமான சிந்தனைக்கு உரிய வரிகள் - அற்புதமான கருத்துக்கள் - it is difficult to be humane than being a human being
சுதந்திர பூமியில் பலவகை ஜனங்களும் தோட்டத்தில் மலர்ந்த
மலர்கள் - தோட்டத்து மலர்களின் ஆயிரம் நிறங்களும் ஜனங்களின் ஆயிரம் நிறங்கள்
சுதந்திர பூமியில் பலவகை ஜனங்களும் தோட்டத்தில் மலர்ந்த
மலர்கள் - தோட்டத்து மலர்களின் ஆயிரம் நிறங்களும் ஜனங்களின் ஆயிரம் நிறங்கள்
மங்கையின் கூந்தலில் மலர்கள் இருந்தால் மங்கல மங்கை என்போம் -
மனிதனின் வாழ்க்கையில் நாணயம் இருந்தால் மனிதருள் மாணிக்கம் என்போம்
பன்னிரண்டு ஆண்டில் ஒரு முறை மலரும் குறுஞ்சி மலர்களை போலே , தன்னலம் இல்லா மனிதர்கள் பிறப்பார்
ஆயிரத்தில் ஒரு நாளே
(சுதந்திர பூமியில்)
மனமுள்ள மலர்களில் தேனிகள் கூடும் , வண்டுகள் இன்னிசை பாடும் - திறமை உள்ளவன் எங்கிருந்தாலும் தேசம் அவனிடம் ஓடும்
எல்லா மலரும் இறைவன் படைத்த உலகம் அவனது தோட்டம் - தோட்டம் அனைத்தும் தனக்கே சொந்தம் என்பது சுயநல கூட்டம்
(சுதந்திர பூமியில்)
இலைகளை மறைக்கும் , மனத்தை பெருக்கும் பெருமை உடையது முல்லை - ஒருவன் புகழை ஒருவன் மறைத்து உயரும் வரலாறு இல்லை
சூரியன் போகும் திசையினில் எல்லாம் வளையும் சூரிய காந்தி , நேரிய வழியில் நிதமும் நடந்தால் நெஞ்சிற்கு கிடைப்பது சாந்தி
(சுதந்திர பூமியில்)
http://youtu.be/lfSZQns0zgE
தொடரும்