https://www.youtube.com/watch?v=QaVIlMS891g
Printable View
இனிய நண்பர் திரு யுகேஷ்
மக்கள் திலகத்தின் படமும் , பெயரும் இடம் பெற்ற மற்ற படங்களின் வீடியோ தொகுப்புகளை மிக அழகாக பதிவிட்டு இன்றைய திரை உலக தலை முறையினரும் எந்த அளவிற்கு மக்கள் திலகத்தை நேசிக்கிறார்கள் என்பதை உணர வைத்துள்ளீர்கள் . நன்றி .
yukesh
super document
http://i58.tinypic.com/2vbn1v9.jpg
சஞ்சய் காந்தி அவர்கள் விமான விபத்தில் இறந்தபோது அங்கு எம்ஜிஆர் கருணாநிதி ஆகிய இருவரும் சென்றிருந்தனர். உடல் மயானத்துக்கு எடுத்து செல்லப்பட்டபோது எல்லோரும் அவரவர் காரில் சென்றுவிட கருணாநிதி தனித்து விடப்பட்டார். அப்போது எம்.ஜி.ஆர். அவரைத் தன்னுடன் காரில் ஏற்றிச் சென்றார். இது நடந்தது ஜூன் 1980-ல்.
அதன் பிறகு வந்த சாவி இதழில் வந்த கேள்வி-பதில்:
கேள்வி: எம்ஜிஆர் கருணாநிதியை தன் காரில் அழைத்துச் சென்றதைப் பற்றி?
பதில்: அது எம்.ஜி.ஆரின் பெருந்தன்மையைக் குறிக்கிறது (நிஜமாகத்தான் கூறுகிறேன்)
சாவி அமெரிக்கா செல்லவிருந்தார். அப்போது கருணாநிதி சட்டசபை தேர்தலில் நின்றார் (அண்ணாநகர் தொகுதி என்று நினைவு. சாவி தனக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்வார் என எதிர்ப்பார்த்திருக்கிறார். ஆகவே அவர் அமெரிக்கா செல்லும் முன்னால் கருணாநிதி வீட்டிற்கு சென்ற போது அவர் சாவியுடன் சரியாக முகம் கொடுத்துப் பேசவில்லை. அது சாவிக்கு சுருக்கெனப் பட்டிருக்கிறது. ஆகவே எம்ஜிஆரின் பெருந்தன்மையைப் பற்றி அந்த பதில். அதற்குப் பிறகு எம்ஜிஆரைப் பற்றியக் கட்டுரையின் தலைப்பு: "கொடுத்துச் சிவந்தக் கரங்கள்".
courtesy - net
comments portion
வாஷிங்டனில் திருமணம் படித்திருக்கிறேன். அருமையான நகைச்சுவை எழுத்து.
எனக்குத் தனிப்பட்ட முறையில் திரு. எம்.ஜி.ஆரைப் பிடிக்கும். எந்த அறிமுகமும் இல்லாத எனக்குத் தெரிந்த நபருக்கு அவர் எழுதிய வேண்டுதல் கடிதத்திற்கு பதிலளிக்கும் வண்ணம், வேலை வாய்ப்பு அலுவலகத்திலிருந்து முறையாக பல நேர்முகத் தேர்வுகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு இறுதியாக நில அளவைத்துறையில் "ப்பிர்க்கா சர்வேயர் வேலை கிடைத்தது.
திரு. எம்.ஜி.ஆர் தொலைநோக்குடன் 1980க்ளில் நிறைய சுயநிதி பொறியியல் கல்லூரி, polytechnic-களுக்கு அனுமதி தந்து இட ஒதுக்கீடு B.E, B.Tech, 3year Engg diplomas படிப்பது இன்றுஅனைத்து சமூக மாணவர்களுக்கு சாத்தியம் ஆகியிருக்கிறது. (தரம் வேறு விஷயம்! தரத்திற்கன காரணிகள் வேறு!)
தமிழகத்தில் திரு. காமராஜருக்குப் பிறகு கல்வித் தொலைநோக்கு இருந்த அரசியல் தலைவை எம்.ஜி.ஆர் மட்டுமே!
அம்மாதிரியே ஏழைகட்கு கொடுத்துச் சிவந்த அரசியல்வதியின் கரங்கள் எம்.ஜி.ஆருடைய கரங்களே!
அன்புடன்,
குவைத்திலிருந்து-ஹரிஹரன்
எம்ஜிஆரின் தாக்கம், பாதிப்பு எல்லா இடத்திலும்...
1984 ஆம் ஆண்டு. கிராமங்கள் தோறும், எம்ஜிஆர் படம் வைக்கப்பட்டு மெழுகுவர்த்தி ஏற்றி வைக்கப்பட்டிருக்கும். சுற்றி தாய்மார்கள் சோகமாக அமர்ந்திருப்பார்கள். ஸ்பீக்கரில் “இறைவா, உன் கோவிலிலே எத்தனையோ மணி விளக்கு” பாடல் ஒலித்துக் கொண்டிருக்கும்.
எம்ஜிஆர் அப்போது அமெரிக்காவில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். சட்டமன்றத் தேர்தலும் வந்தது. இந்திராகாந்தியின் மரணமும், எம்ஜிஆரின் உடல் நலக்குறைவும் தேர்தலில் பிரதிபலித்தன.
பரவலாக திமுக வேட்பாளர்கள் வெற்றி வாய்ப்பை இழந்தார்கள். 1980 தேர்தலில், 600 வாக்கு வித்தியாசத்தில் எனது தந்தையார் தோல்வி அடைந்திருந்ததால், இந்த முறை வெற்றி உறுதி என நினைத்திருந்த நேரத்தில் தோல்வி.
இப்படி எம்ஜிஆரோடு அரசியல் பகை இருந்தாலும், கொள்கை மாறுபாடு இருந்தாலும், எம்ஜிஆர் படங்களை ரசித்தவன் தான். ஆனால் பள்ளியில் நண்பர்களோடு விவாதிக்கும் போது எம்.ஜி.ஆரை தீவிரமாக விமர்சித்தவன்.
1987. அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவன் நான். மூன்றாவது செமஸ்டர் முடிந்து விடுமுறை. நாட்டு நலப்பணித் திட்ட முகாமுக்கு செல்வதற்கு வீட்டிலிருந்து, ஹாஸ்டலுக்கு வந்து விட்டோம் நண்பர்கள். திடீரென ஊரே மயான அமைதி. எம்.ஜி.ஆர் மறைவுச் செய்தி.
நாடே ஸ்தம்பித்த்து. எங்கும் பயணிக்க முடியாத நிலை. உணவுப் பிரச்சினை. ரேடியோவை வைத்தால், டொய்ங், டொய்ங், சோக இசை. ஹாஸ்டலின் டீவி ரூமில் இருக்கும், டீவியை பார்த்து மரண நிகழ்வுகளை தெரிந்து கொண்டோம். தலைவர் கலைஞரின் இரங்கல் செய்தி வந்தது.
.......................................
அந்தப் பாட்டியை பார்த்தவுடன், இப்படியான எம்.ஜி.ஆர் குறித்த நினைவுகள்.
என்னோடு பயணித்த ஏழு வயது மகன் கேட்டார்,”அப்பா எம்ஜிஆர் படம் தானே ?” தொப்பி, கண்ணாடி இல்லாத ராஜா காலத்து உடையில் எம்ஜிஆர் படம். “எப்படி தெரியும்பா?” “என்னாப்பா எம்ஜிஆர தெரியாதா?”
ஆட்டோ சிறிது தூரம் சென்றது. பெரிய ஜெயல்லிதா வரவேற்பு டிஜிட்டல் பேனர். கீழே ஏழு,எட்டு நபர்கள். அதிமுக நிர்வாகிகளாக இருக்கலாம். இப்போதே லேசாக வளைந்து தயாராக இருந்தார்கள். கொடநாடு போக ஜெ கார் வரப் போகுது போல. எம்ஜிஆர் காலத்தில் இந்தக் கூன் விழவில்லை, அதிமுகவினருக்கு.
எம்ஜிஆரின் தாக்கம், பாதிப்பு எல்லா இடத்திலும்....
Posted by சிவசங்கர் எஸ்.எஸ்
“இருந்தாலும் மறைந்தாலும் பெயர் சொல்ல வேண்டும்
இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்”
“மாபெரும் சபைதனில் நீ நடந்தால் – உனக்கு
மாலைகள் விழவேண்டும்
ஒரு மாற்றுக்குறையாத மன்னவன் இவனென்று
போற்றிப் புகழ வேண்டும்”
இவை வெறும் பாடல் வரிகள் அல்ல. சாகாவரம் பெற்ற ஒரு சகாப்தத்தைப் பற்றிய ஆழமான பதிவுகள். அந்த சகாப்தம் தான் எம்.ஜி.ஆர்.
இருபதாம் நூற்றாண்டில் எம்.ஜி.ஆர் என்ற இந்த மூன்றெழுத்து மந்திரச் சொல், தமிழகத்தை, இந்தியாவை, ஏன் உலகின் ஒரு பகுதியை எவ்வாறு ஆட்டிப்படைத்தது. மக்களை எப்படி ஈர்த்திருந்தது என்பதை நம்மில் பலரும் அறிவோம்.
எழுபதுகளில், ஒரு ஆங்கிலப் பத்திரிகை, இந்தியாவில் மக்களின் பேரன்பைப் பெற்ற பெருமகன்களாக இருவரைச் சுட்டியது. ஒருவர் பண்டித ஜவஹர்லால் நேரு. மற்றொருவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
நாடக அரங்கிலும், திரையுலகத்திலும், அரசியல் பொதுவாழ்விலும் எவராலும் வெல்ல முடியாத சக்தியாக, மக்கள் மனம் கவர்ந்த முடிசூடா மன்னனாக வலம் வந்தவர் எம்.ஜி.ஆர்.
நின்றால் பொதுக்கூட்டம். நடந்தால் ஊர்வலம். அமர்ந்தால் மாநாடு…என்பார்களே…. அது முழுக்க முழுக்க எம்.ஜி.ஆருக்கு பொருந்தும்.mgr anniv 3
எம்.ஜி.ஆர் யார்? அவர் தமிழரா? மலையாளியா? இலங்கை பிரஜையா? என்ற விவாதம் பல ஆண்டுகளாகத் தமிழகத்தில் நிலவி வந்தது.
இந்த விவாதங்களுக்கு 1985ம் ஆண்டு முற்றுப்புள்ளி வைத்தவர் பிரபல கல்வெட்டு ஆராய்ச்சியாளரும், தொல்பொருள் ஆர்வலருமான புலவர்.செ. ராசு. இவர் வரலாற்று பூர்வ ஆதாரங்களோடும், சரியான சான்றுகளோடும் எழுதி வெளியிட்ட “செந்தமிழ் வேளிர் எம்.ஜி.ஆர் – ஓர் வரலாற்று ஆய்வு” எனும் நூல்தான், எம்.ஜி.ஆர் ஒரு தமிழரே என்பதை ஆணித்தரமாக நிறுவியது.
ஒருவர் எங்கு பிறந்து வளர்ந்தாலும், அவரது பூர்வீகத்தைக் கொண்டுதான் அவர் இன்னார் என அடையாளப்படுத்தப்படுவார்.
அந்த வகையில் எம்.ஜி.ஆர் பிறந்தது இலங்கையின் கண்டி நகர் என்றாலும், அவரது தாய், தந்தையர் கேரள மாநிலத்தின் பாலக்காடு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றாலும், அவர்களின் மூதாதையர் யார்? அவர் எந்த வழித்தோன்றல் என்பதையெல்லாம் வரலாற்று பூர்வமாக ஆய்வு செய்த புலவர் ராசு, எம்.ஜி.ஆர் தமிழர்தான் என்பதை உரிய சான்றுகளுடன் நிரூபித்தார்.mgr anniv 4
“எம்.ஜி.ஆரின் முன்னோர் தமிழ்நாட்டைச் சேர்ந்த கோவை மாவட்டம் காங்கேயம் பகுதியில் வாழ்ந்துவரும் மன்றாடியார் வகுப்பைச் சேர்ந்தவர்கள்தான் எனக் குறிப்பிடும் புலவர் ராசு, “கொங்கு வேளாளரில் தென்கரை நாட்டு சங்கராண்டாம்பாளையம் பெரிய குளத்து வேணாரு வழியிலும், வடவனூர் வேளாளர் மரபினரான தாய்வழியிலும் தோன்றி, வேளாளர் குலத்துச் செம்மலாக, வேளிர்குல வேந்தராக உள்ள எம்.ஜி.ஆர் கொங்கு நாட்டுக் குடும்பத்தில் பிறந்த தமிழரே என்பது விரிவான வரலாற்று ஆய்வு கூறும் உண்மையாகும்” என்று தமது நூலின் மூலம் புலவர் செ.ராசு தெளிவு படுத்தியுள்ளார்.
மதத்தால், இனத்தால், மொழியால் அவர் யார் என்பதை விட, மனத்தால், குணத்தால், எண்ணத்தால், செயலால் ஒரு மாபெரும் மனிதராக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்.
குழந்தைத் தொழிலாளராக நாடகத்துறையில் அடியெடுத்து வைத்த எம்.ஜி.ஆரின் அந்தப் பாலப் பருவத்திலேயே பட்ட துன்பங்களும், துயரங்களும் ஏராளம், ஏராளம்.
தமிழ்த்திரைப்படத்துறையில் கால்பதிப்பதற்காக அவர் பட்ட கஷ்டங்கள் எண்ணிலடங்காதவை. 1936ம் ஆண்டு தமிழ்த்திரையுலகில் அடியெடுத்து வைத்த எம்.ஜி.ஆர் சுமார் பத்தாண்டுகள் பெரும் போராட்டத்தைச் சந்தித்த பிறகே பிரபலமானார். நாற்பதுகளின் பிற்பகுதியில், ராஜகுமாரி, மந்திரி குமாரி, மருதநாட்டு இளவரசி என கதாநாயகன் பாத்திரப்படைப்பு தம்வசம் வந்தபிறகு எம்.ஜி.ஆர் அதை தம் ஆற்றல், உழைப்பு, தகுதி, திறமையின் மூலம் தக்கவைத்துக் கொண்டு, 1976ம் ஆண்டுவரை திரையுலகச் சக்கரவர்த்தியாக வலம் வந்தார்.
“உழைப்பவரே உயர்ந்தவர்” எனும் உன்னத லட்சியத்தை கொள்கையாகக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர் “ஓடி ஓடி உழைக்கணும், ஊருக்கெல்லாம் கொடுக்கணும்” எனும் பாடல்களுக்கு ஏற்ப வாழ்நாளெல்லாம் தாம் பாடுபட்டு உழைத்துச் சேர்த்த பணத்தை வாரிக்கொடுத்து வள்ளலானார். அந்த வள்ளலின் பொன்மனத்தைப் போற்றித்தான் திருமுருக கிருபானந்த வாரியார் எம்.ஜி.ஆருக்கு பொன்மனச் செம்மல் என்ற பட்டத்தை வழங்கினார்.
திரையுலகிலும், அரசியல் பொதுவாழ்விலும் எம்.ஜி.ஆர் சந்திக்காத சோதனைகள் இல்லை. அத்தனையையும் முறியடித்து சாதனைகள் பல படைத்து ஒரு சகாப்தமாக வாழ்ந்து மறைந்தார்.
1972ஆம் ஆண்டு அண்ணாதிமுக எனும் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கிய எம்.ஜி.ஆர்.,அடுத்த ஐந்தே ஆண்டுகளில் மக்களின் ஏகோபித்த ஆதரவோடு 1977ம் ஆண்டு ஆட்சியைப் பிடித்து தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.
தொடர்ந்து 1980-84 பொதுத்தேர்தல்களிலும் வெற்றி பெற்று சுமார் 11 ஆண்டுகள் முதலமைச்சர் பொறுப்பேற்று தமிழ் மாநிலத்தின், தமிழக மக்களின் நலன் ஒன்றையே கருத்தில் கொண்டு உழைத்தார். சத்துணவு திட்டம் போன்ற, ஏழைகளுக்கு நலன்பயக்கும் பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தினார்.
1984ம் ஆண்டு எம்.ஜி.ஆர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு அமெரிக்க நாட்டின் புரூக்ளின் டவுன்ஸ்டேட் மருத்துவ மனையில் சிகிச்சை மேற்கொண்ட நிலையில், சட்டமன்றப் பொதுத்தேர்தல் நடைபெற்றது.
எம்.ஜி.ஆர் இல்லாமலேயே அவரது அண்ணாதிமுக, அவர் கண்ட இரட்டை இலைச் சின்னத்தின் மூலம் மகத்தான வெற்றியைப் பெற்றது. மரணப்படுக்கையில் இருந்த எம்.ஜீ.ஆரும் ஆண்டிப்பட்டி தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, மாபெரும் வெற்றி பெற்றார்.
http://i57.tinypic.com/f2n0np.jpg
அந்தக் காலக்கட்டத்தில், திமுக தரப்பில் “எம்.ஜி.ஆர் உயிருடன் இல்லை. அமெரிக்காவில் ஐஸ் பெட்டிக்குள் எம்.ஜி.ஆர் உடலை வைத்திருக்கிறார்கள் தேர்தல் முடிந்ததும் அதைத் தமிழ்நாட்டுக்கு கொண்டு வருவார்கள். அவர் உயிருடன் இருப்பதாக இங்கு உள்ளவர்கள் சொல்வதை நம்பி ஏமாந்து விடாதீர்கள்” எனப் பிரச்சாரம் செய்யப்பட்டது.
உடனே அண்ணா திமுக தரப்பில், எம்ஜி.ஆர் அமெரிக்காவில் சிகிச்சை பெறும் மருத்துவ மனையில் அவர் அமர்ந்து இருக்கும் புகைப்படங்களை, வீடியோ காட்சிகளை தேர்தல் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தினர்.
அந்தக் காட்சியைக் கண்ட மக்கள் திமுகவை ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்து எம்.ஜி.ஆரின் அண்ணா திமுகவுக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்தனர்.
திராவிட இயக்க அரசியலில் இருந்தாலும், எம்.ஜி.ஆர் தேசிய சிந்தனையும், தெய்வ நம்பிக்கையும் கொண்டவராகவே வாழ்ந்தார்.
தமிழக அரசியலில் தலைவர்கள் அனைவரும் போற்றத்தக்க, ஏழை, எளிய, நலிந்த மக்கள் பாராட்டத்தக்க நல்லதொரு மனிதராக, நாடு போற்றும் தலைவராக வாழ்ந்தார்.
மிகச்சாதாரணக் குடும்பத்தில் பிறந்து, எந்த பின்னணியும் இல்லாமல், ஒரு மனிதன் தன்னந்தனியாக போராடி, தான் உழைப்பால் உயர்ந்து உச்சத்தை எட்ட முடியும் என்பதற்கு எம்.ஜி.ஆர் ஒரு எடுத்துக்காட்டு.mgr shoot
ஏழை, எளிய மக்களின் அன்பு ஒன்றையே மூலதனமாகக் கொண்டு திரையுலகில் கோலோச்சிய, தமிழக அரசியல் வரலாற்றில் தனக்கென, தனித்துவமிக்க முத்திரையைப் பதித்த எம்.ஜி.ஆர் 1987ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ம் தேதி இப்பூவுலகை விட்டு மறைந்தார்.
அவர் மறைந்து கால்நூற்றாண்டுகள் கடந்த பின்னரும், அவரது பெயரும், புகழும் இன்னும் நிலைத்துள்ளது. இன்றைய அரசியலிலும் எம்.ஜி.ஆர் எனும் மாபெரும் சக்தி ஆளமைத் தன்மையுடன் உள்ளது என்பதே யதார்த்தம்.
சாகாவரம் பெற்ற ஒர் சரித்திரம், சென்னை மெரீனா கடற்கரையின் மணல் வெளியில், சந்தனப் பேழையில் துயில் கொள்கிறது. இன்றளவும் அந்த மனிதரின் நினைவிடத்தில் மக்கள் கூட்டம் அன்றாடம் வருகை தந்து கற்பூரம் ஏற்றி வழிபட்டுச் செல்வதைக் காணலாம்.
எம்.ஜி.ஆர் புகழ் என்றும் நீடித்து நிலைத்திருக்கும் என்பதற்கு இதுவே சான்று.
courtesy - net
1977 தேர்தல் முடிவுகள்தான் முதன்முறையாக அவர்கள் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊத்தினாற் போலிருந்திருக்கிறது. ’ரேடியோ பெட்டி முதல் சுற்றில் பெரும்பாலான இடங்களில் எம்ஜிஆரின் அஇஅதிமுக தான் முன்னிலை’ என்றதை அவர்களால் கிஞ்சித்தும் நம்பவே முடியவில்லையாம். மறு நாள் செய்தித்தாள்களில் வெளியான முழு முடிவுகளில் அதிமுகவினர் வாங்கிய வாக்குக்களைப் பார்த்த பின்னர்தான் சலிப்போடு ஏற்றுக் கொண்டிருந்திருக்கிறார்கள்.
இவ்வளவு நேரம் பாட்டி சொன்ன கதைகளுக்கிடையே, இப்ப அம்மா உள்ள வந்துட்டாங்க.
1980 ல் அதெப்படியோ ஒரே நேரத்தில் சர்க்கரையையும், வேப்பஞ்சாறும் ருசித்தார்களாம். நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறுகிறதாம், அதே சட்டமன்றத் தேர்தலில் தலைகீழ். இரண்டாம் முறையாக எம்ஜிஆர் வெற்றி பெற்றிருந்திருக்கிறார். 1982 ல் வரவேண்டிய சட்டமன்றத் தேர்தல் அதெப்படி 1980 லியே வந்தது ? ஆமா, அப்பல்லாம் அப்படித்தான், நடுவண் அரசு நினச்சா போதும் மாநில ஆட்சிய கலைச்சிடலாம். நல்லவேளை உச்சநீதிமன்றம் தலையிட்டதால இப்பல்லாம் அந்த அட்டூழியம் ரொம்பக் கிடையாது.
1984 ல் பால்யத்திலேயே ஓரளவு தேர்தல் களேபரங்களை என்னால் யூகிக்க முடிந்துவிட்டது. எம்ஜிஆர் கிட்னி ஃபெய்லியராகி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்தும், பெரிய பலனில்லாமல் உடல் நலம் அடிக்கடி குன்றிப்போன சமயமது, எம்ஜிஆர் ஊரில் இல்லாமலயே நடந்த தேர்தல் அது.
ஒளியும் ஒலியும் பார்க்க, எதிர் வீட்டிற்கு போனால் சவுகார் ஜானகி வெள்ளைச் சேலையில் ‘இறைவா உன் மாளிகையில்.......’ என்று கதற, எதிர் வீட்டு அக்கா கண்களிலிருந்து கர கரவென கண்ணீர் வீழ்ச்சி.
எம் ஜி ஆர் களத்தில் இல்லாத சூழலில், இம்முறை திமுக வெற்றி பெற்று கருணாநிதி மீண்டும் முதல்வராவார் என எங்கள் குடும்பத்தின் பெரும்பாலோர் காத்திருக்க, ஆர். எம். வீரப்பன், பாக்யராஜை அமெரிக்க ப்ருக்ளீனுக்கு அனுப்பி, எம்ஜிஆர் ஃபோட்டோவுடன் வரச் செய்கிறார். சவுகார் ஜானகியும், பாக்யராஜூம் இணைந்து எம்ஜிஆர் மூன்றாம் முறையாகவும் முதல்வராக சிறு உதவி புரிந்திருக்கிறார்கள்
courtesy - net
THE FOLLOWING SONSGS TELECASTED IN TV THAT TIME
https://www.youtube.com/watch?v=iwh71IiRVLQ